வணக்கம் தோழர்களே,
வெள்ளை விஷ்ணுகரந்தையின் புகைப்படம் பதிவிட்டதன் பின் எனது மின்னஞ்சலில் பலரும் அதன் மகிமையை கேட்டதன் படி, இங்கு அதன் மகிமையை சித்தர் போகரின் பாடல் மூலம் விளக்கியுள்ளேன்.
சித்தர் பாடல்
போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே.
கருத்து
வெள்ளை விஷ்ணுகரந்தை கொண்டுவந்து (சமூலமாக) சூரிய நிழலில் உலர்த்தி பின் சூரணம் செய்து மண்டலம் (48 நாள்) காலை மாலை சுத்தமான தேனில் திரிகடி அளவு சேர்த்து உண்ணவேண்டும். அப்படி உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறுகிறார்.
இதை விடவும் வேறு பயன் தேவையா என்று நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
நன்றி.
என் பெயர் அந்தோணி,வயது 21
ReplyDeleteஐயா பாதரசம் சுத்தி செய்வது எப்படி , ஊசி காந்தம் என்றால் என்ன அது எங்கே கிடைக்கும் இதை பற்றி சொல்லுங்கள்
வணக்கம் தோழர்
Deleteவாலைரசம் பதிவை பாருங்கள்.
நன்றி