வணக்கம் தோழர்களே,
பாதரசம் அல்லது இரசம் அல்லது சூதம் அல்லது வாலைரசம் இவை அனைத்தும் சிவன் விந்து என்று கூறப்படும் ஓர் திரவனிலையில் இருக்கும் உலோகமே.
இரசம் பற்றி பல தளங்களில் விரிவான தகவல்கள் இருக்கின்ற காரணத்தால் அதை தவிர்த்து அதன் இலகு சுத்தி முறை மட்டும் தருகிறேன்.
பாதரசம் அல்லது இரசம்
இது நகை செய்யும் கடைகளில் அல்லது மூலிகை சரக்கு கடைகளில் கிடைக்கும். வென்மை கலந்த பளிங்கு போல் இருக்கும்.
சுத்தி முறை.
இரசத்துக்கு நாலு பங்கு செங்கல் தூள், வீடுகளில் இருக்கும் ஒட்டறை, உப்பு, சக்கரை, மஞ்சல் தூள், திரிகடுகு இவைகளில் தனி தனியாக மூன்று மணி நேரம் அரைத்து எடுத்து பின் நங்கு தண்ணீரில் கழுவி உலர்த்தி எடுக்கவும்.
இப்படி எடுத்த இரசம் மட்டுமே சரியான சுத்தியாகும். இதுவே மருந்துகளுக்கோ அல்லது மணிசெய்யவோ பயன்படுத்தமுடியும். அல்லாது போனால் சிவ சொத்து குல நாசம் என்பது நிச்சயம்.
சிலர் முள்முருங்கை சாற்றில் போடுவர், சிலர் வெற்றிலை சாற்றில் அரைப்பர், சிலர் எருக்கம் பாலில் அரைப்பர் ஆனால் இது மூன்றும் முழுமையான சுத்தி கிடையாது.
இது வாலை ரசத்துக்கான சுத்தியாகலாம் ஆனால் இன்று கடையில் கிடைக்கும் இரசத்துக்கு சித்த வைத்தியர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பது அவர்களின் அறியாமையே.
வாலைரசம், வீரரசம். பூரரசம் இவை பற்றி முந்தய பதிவை பார்க்கவும்.
நன்றி.
ஐயா வீடுகளில் இருக்கும் ஒட்டறை என்றால் புரியவில்லை சிலந்தி வலையை குறிப்பிடுகிறீர்கிளா நன்றி
ReplyDeleteவணக்கம்
Deleteஆம்.
நன்றி