Friday, November 22, 2013

வாலை ரசம் - சாதிலிங்க ரசம்

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் சித்தர் பாடலை பார்ப்போம்.

வாலைரசம் எடுக்கும் முறைகள் பலவாக இருக்கிறது அதில் இதுவும் ஓர் முறை. இப்படி எடுக்கும் இரசத்தில் நச்சுத்தன்மை குறைவாக இருக்கும் அத்துடன் சுத்தி செய்யும் போது சேதாரமும் குறைவாக இருக்கும்.

சித்தர் பாடல்

சித்தியா யின்னமொரு லிங்கமார்க்கம் 
செப்புகிறேன் கேளுங்கள் உலகத்தோரே
பத்தியாய் லிங்கமொரு சேருவாங்கி
பதியவே கல்லுபுச் சேருவாங்கி
நத்தியாய் வேப்பிலையும் சேருபோடு
நலமாக வில்லையா யரைத்துருட்டி
முத்திபெற சட்டிதனில் நடுவிலிட்டு
முக்கியமாய் மேல்சட்டி மலர்த்திமூடே


மூடியே சந்துக்கு ஏழுசீலை
முக்கியமாய் செய்துமேல் சட்டிதன்னில்
பாடியே தண்ணீரை விட்டுக்கேளு
பதிவாக அடுப்புதனில் எரித்திட்டாகால்
நாடியே அடித்தூறில் மேலேயேறி
நலமாக சிவந்துமே நரிபோல்தானும்
தேடியே சுறண்டிடவே வாலையாகும்
திறமாக சூதமெல்லாம் எடுத்துக்கொள்ளே


விளக்கம்

சாதிலிங்கம், கல்லுப்பு, வேப்பிலை இவை மூன்றும் சரி நிறையாக எடுத்து கல்வத்தில் அரைத்து வில்லையாக உருட்டி எடுத்து அதை புதுச்சட்டியில் சுத்தமான தண்ணீர் நிரம்ப ஊற்றி அதன் நடுவில் வில்லையை வைத்து மேல் புது சட்டி மூடி சீலை மண் ஏழு சுற்றி அதை அடுப்பில் வைத்து ஒரே அளவான தீயாக நீர் வற்ற காய்ச வேண்டும். சுமார் 12 மணி நேரம் எடுக்கும். பின்னர் அதை சூடு ஆரும் படி மல்லாக்க படுக்க வைத்து ஆரியபின் சட்டியை திறந்து பார்த்தால் பளிங்கு போல் இரசம் மேல் சட்டியில் படிந்திருக்கும். இதை அவதானமாக சீலையில் வடித்து எடுத்தால் சுத்தமான வாலைரசம் கிடைக்கும்.

இதற்கான சுத்தி 

நீர் வெற்றிலை சாற்றில் 2 மணி நேரமும், வெள்ளெருக்கம் பாலில் 2 மணி நேரம் அரைத்து எடுத்தால் போதுமானதாக இருக்கும். 

அல்லது

செங்கல் தூள், ஒட்டறை சேர்த்து 4 மணி நேரம் அரைத்தால் போதுமானது

இம்முறையில் செய்த இரசம் அல்லது சூதம் மிகவும் சக்தி உடையதாக இருகிறது, மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கிறது. மற்றும் ரசமணி செய்வதற்கு இதுவே உகந்தது என்பது எனது கருத்து.



வாலை ரசம் செய்வதற்கான செலவு மிகவும் அதிகமாகவே இலங்கயில் இருக்கிறது, 5 கிராம் ( 1 கழஞ்சு) சாதிலிங்கம் 350 ரூபாய் அத்துடன் கல்லுப்பு கிடைப்பது மிக கடினமாகவே இருகிறது. இதனால் ஒரு முறை மட்டுமே நான் அதை செய்து பார்திருக்கிறேன். தற்போது கடையில் கிடைக்கும் இரசம் தான் பயன்படுகிறது. 

நன்றி

1 comment:

  1. குருவே வணக்கம்
    தங்களின் ஆசி கிடைக்க அருள் புரியனும்

    மாந்திரிகத்தை பட்றி தேறியாத ஒரு சீடன் தங்கலின் தளத்தை பார்த்து கற்கும்படியாக
    ஒரே கட்டுரையிள் ஆறம்பம் முதல் தனக்கு பாதுகாப்பு எந்திரம், பின் பேய் ஓட்டை அச்சாரம் (அச்சாரம் மாவிள் போடுவதா எத்தனை நீல அகலத்தில் போடுவது), அவருக்கு பாதுகாப்பு எந்திரம , எந்திரத்தை உருவேற்றும்பேது ஒரு எந்திரம் வைப்பதா அல்லது கும்பத்துக்கே (5,6)வைத்து உருவேற்றுவதா.
    தயவு கூர்ந்து ஒரே கட்டுரையில்எழுதவும்
    தங்கலின் சீடனுக்கு பதில் கூருவது தங்களின் கடம்மை
    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete