Thursday, November 28, 2013

வீர பத்திரர் மாரணம் எனும் மகா மந்திரம்

வணக்கம் தோழர்களே,

சிவனின் நெற்றி வியர்வையில் இருந்து அகோரத்துடன் எழுந்த முதல் அவதாரம் வீர பத்திரர். தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக சிவன் அவதரித்த மறு வடிவம் என்றும் கூறலாம். மலையரசனையே சங்ஙரித்தர் என்றால் வேறு என்ன சொல்வது.

மந்திரம்

ஓம் வீர வீரா சக்தி வீரா ஸ்ரீங்ங நங்ங லங்ங வங்ங ஆதி அனுகார வீரபத்திரா உதிர வாயும் ஓங்கிய சூலமும் ஆதி அரன் முன்னே அதிரப்பாய்ந்தால் போலே என் முன்னே வா என் சொல் கேள் என்னோடு எதிர்த்த சத்துருவின் கண்ணில் பாய் பாயவே சிவாகா.


அட்ஷரம்




















கிரிகை
  
அட்ஷரத்தில் மடை வைத்து  தேங்காய் வைத்து வெட்டவும். உரு 21 செய்து வெட்டவும். முதலில் மந்திர சித்தி அவசியம்.

நன்றி 

வச்சிர பஞ்சாட்சர கவசம்

வணக்கம் தோழர்களே,

காவல் மந்திர வரிசையில் இதுவும் ஓர் இரகசிய முறையே. எப்பேர்பட்ட மருந்தீடு செய்யப்பட்டாலும் அல்லது உணவு முறை மூலம் சூனியம் செய்யப்பட்டாலும் இந்த மந்திரத்தை சித்தி செய்து வைத்திருந்தால் கவலை இல்லை.

மந்திரம் 

ஓம் அவ்வும் சவ்வும் சிவ பரம சிவயோகிக்கு ஸ்ரீகண்ட பரமேஸ்வரர் திருவிலம் பற்றி கொடுத்த வசிகர உச்சாடன வச்சிர பஞ்சாட்சர கவசம் இவர் / என் வாய் சர் வாங்கிசமாகவே சிவாகா. 

கிரிகை

முறைப்படி சித்தி செய்து பின்னர் தண்ணீர் ஓதும் முறைப்படி ஓதிக் கொடுக்க மருந்தீடுகள் முறியும் அத்துடன் வயிற்றில் இருக்கும் கட்டிகள் நீங்கும். 

மந்திரங்களை சித்தி செய்வது என்றால், குறிப்பிட்ட மந்திரத்தை தனிமையான ஓர் சுத்தமான இடத்தில் இருந்து ஓர் வெற்றிலையை வலது கையில் வைத்து மந்திரத்தை 108 முதல் 1008 வரை உரு செய்து குறிப்பிட்ட மந்திரம் மனதில் உருதியாக பதிந்த்ததை  உணர்ந்த பின் அந்த வெற்றிலையை மென்று தின்ன வேண்டியது தான் பின் சற்று குளிர்ந்த நீர் அருந்தலாம்.

இப்படி செய்வதனால் குறிப்பிட்ட மந்திரம் நமது முதுகெழும்பில் பதியப்பட்டு குண்டலினி சக்தியாக இருக்கும், தேவைப்படும் போது சுழிமுனையில் இருந்து உருச்செய்ய சித்தி கிடைக்கும்.

மந்திரங்களை கற்பவர்கள் சரியான குருவுடன் உபதேசங்களை பெற்று அவர் ஆலோசனையின் கீழ் செயல்பட்டால் தான் பலன் சரியானதாக இருக்கும். அதன் காரணத்தால் தான் இங்கு குறிப்பிட்ட சில மந்திரங்களை மட்டும் பதிவிடுகிறேன்.

இங்கு இருக்கும் மந்திரங்களை உபயோகம் செய்பவர்கள் சிவனை குருவாக மனதில் நினைத்து செயல் பட வேண்டும். 

நன்றி.

Tuesday, November 26, 2013

சொக்கட்டான் வெல்ல - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

இது ஓர் இரகசிய மந்திர முறைக்கான பதிவு. பலதரப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற பல பல மந்திர முறைகள் சித்தர்களால் பயன்படுத்த பட்டுள்ளது. அதன் விளைவாகவே மகா பாரதத்தில் சகுனியை யாரளும் வெல்ல முடியாது போனது. இது புராண கால உண்மை.

இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.

அது என்ன சொக்கட்டான் என்று கேட்பது புரிகிறது, அது வேறு ஒன்றும் இல்லை நாம் இன்று விளையாடும் தாயக்கட்டை அல்லது ஆடு புலியாட்டம் அல்லது பாம்பு ஏணி போன்ற விளையாட்டுகளில் பயன்படும் நாற்சதுரக்கட்டை. அதில் 1 முதல் 6 இலக்கங்கள் இடப்பட்டிருக்கும் அதை நாம் உருட்டி விட்டால் அதில் வரும் என்னை கொண்டு விளையாடுவது.

இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.

மந்திரம் 

ஓம் மாதங்கி வயிரவி மாகாளி உருளம்மா பிரளம்மா ஓம் ஆம் நாவிலே நிற்க நிற்கவே சுவாகா. 

கிரிகை

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து உருட்டிலிட்டால் நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை. 

நன்றி

தனிவழிக்கு திருநீறு பூசிப் போக

வணக்கம் தோழர்களே,

உடல் கட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் வகை கட்டு மந்திரமே, தம்பன பிரயோகம் என்றும் கூறலாம்.

பொதுவாக உடல் கட்டினால் அது நம்மைஅமானுச சக்திகளிடம் இருந்து காப்பது போல் இது கொடிய விலங்குகளிடம் இருந்து காக்கும்.

மந்திரம்

ஓம் அரி அரி நம சிவாயா ஆதி பரமேஸ்பரன் அனிந்த நீறு அண்ட ரெண்டங்களை படைத்த நீறு அந்த நீற்றை அடியேனும் ஓதி தியானித்து பூசிக்க்கொண்டேன் என்முகம் கண்ட சிங்கம் யானை புலி கரடி முதல் அனைத்தும் அங்கமும் வாயும் அடைக்கவே சிவாகா. 

கிரிகை

விபூதியை கையில் எடுத்து பிரணவம் சித்தி செய்து மந்திர உரு 108 செய்து பூசிக்கொண்டு சென்றால் எந்த விலங்கும் நம்மை அண்டாது. அனுபவ உண்மை. 

நன்றி

பாதரசம் - இரசம் - சூதம் - வாலைரசம்

வணக்கம் தோழர்களே,

பாதரசம் அல்லது இரசம் அல்லது சூதம் அல்லது வாலைரசம் இவை அனைத்தும் சிவன் விந்து என்று கூறப்படும் ஓர் திரவனிலையில் இருக்கும் உலோகமே.

இரசம் பற்றி பல தளங்களில் விரிவான தகவல்கள் இருக்கின்ற காரணத்தால் அதை தவிர்த்து அதன் இலகு சுத்தி முறை மட்டும் தருகிறேன்.

பாதரசம் அல்லது இரசம் 

இது நகை செய்யும் கடைகளில் அல்லது மூலிகை சரக்கு கடைகளில் கிடைக்கும். வென்மை கலந்த பளிங்கு போல் இருக்கும். 

சுத்தி முறை. 

இரசத்துக்கு நாலு பங்கு செங்கல் தூள், வீடுகளில் இருக்கும் ஒட்டறை, உப்பு, சக்கரை, மஞ்சல் தூள், திரிகடுகு இவைகளில் தனி தனியாக மூன்று மணி நேரம் அரைத்து எடுத்து பின் நங்கு தண்ணீரில் கழுவி உலர்த்தி எடுக்கவும்.

இப்படி எடுத்த இரசம் மட்டுமே சரியான சுத்தியாகும். இதுவே மருந்துகளுக்கோ அல்லது மணிசெய்யவோ பயன்படுத்தமுடியும். அல்லாது போனால் சிவ சொத்து குல நாசம் என்பது நிச்சயம்.  

















சிலர் முள்முருங்கை சாற்றில் போடுவர், சிலர் வெற்றிலை சாற்றில் அரைப்பர், சிலர் எருக்கம் பாலில் அரைப்பர் ஆனால் இது மூன்றும் முழுமையான சுத்தி கிடையாது. 

இது வாலை ரசத்துக்கான சுத்தியாகலாம் ஆனால் இன்று கடையில் கிடைக்கும் இரசத்துக்கு சித்த வைத்தியர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பது அவர்களின் அறியாமையே.

வாலைரசம், வீரரசம். பூரரசம் இவை பற்றி முந்தய பதிவை பார்க்கவும்.

நன்றி.

பகவதி அம்மன் - மந்திர வடிவினி

வணக்கம் தோழர்களே,

பகவதி அம்மன் மந்திரம் கோட்ட அன்பர்களுக்கு, நான் அறிந்த சில குறிப்புக்களை பகிர்கிறேன்.

பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.

பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.



















இது தவிர்த்து தனியாக பகவதி எனும் தெய்வத்துக்கு மந்திர பிரயோகம் இருப்பதாக (சித்தர் வழிபாட்டில்) அடியேன் அறியவில்லை. ஆனால் சில மந்திரங்கள் ஆடாத பேய்களை ஆட்டிவிற்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை இங்கு தருகிறேன்.

மந்திரம்

ஓம் பகவதி ஆம் பகவதி ஆதி பகவதி ஆடாத பேய்களை ஆட்டும் பகவதி ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா

அட்ஷரம்














கிரிகை

நிலத்தில் அட்ஷரம் விபூதியால் எழுதி அதின் மேல் தேவையானவரை நிருத்தி மந்திர உரு செய்ய அவரில் இருக்கும் பேய் ஆடும். 

ஆலயங்களில் பேய்யாடும் போது கட்டுப்பட்டாலும் இந்த முறையில் செய்யலாம்.

குறிப்பு.

மந்திரத்தை அவதானியுங்கள் இதில் மூன்று முறை பகவதி என்று கூறப்பட்டிருக்கும், அது மூன்று சக்திகளின் மந்திர வடிவையே குறிக்கிறது புரியும். 

நன்றி

Monday, November 25, 2013

வராகி எனும் சப்த கன்னி வாலாயம்

வணக்கம் தோழர்களே,

வாலாயம் செய்யும் வரிசையில் வராகி எனும் சப்த கன்னி ஒன்றினுடைய முறை இது. வராகி என்றதும் பயம் தேவையில்லை இவள் மகாலட்சுமியின் அம்சமாகவே இருக்கிறாள். ஆனால் கடும் கோபம் உடையவள் தனது அன்பர்களுக்கு வஞ்சனை செய்பவர்களை சங்ஙரிப்பதில் இவள் முதலிடம் பெருபவள்.

வராகி மாலை எனும் 32 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலும் இருக்கிறது, இவளின் தன்மையை புரிவதற்கு அது ஒன்ரே போதுமானது.

அப்படி சக்திவாய்ந்த தெய்வமாகவே இவள் திகழ்கிறாள். மந்திர பிரயோகம் செய்பவர்கள் கண்டிப்பாக இவளது வாலாயம் செய்திருப்பது மிக அவசியம். காரணம் பூசைகளில் தடங்கள் ஏற்பட்டாலும் சரி வேறு மாந்திரீகரின் இடையூரு ஏற்பட்டாலும் சரி இவளை வணங்கி நின்றால் அனைத்து தடையும் நீங்கி வெற்றியும் கிடைக்கும்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் கிலியும் அரி சிவ வராகி ஆனந்த ரூபி அகோர சக்தி வா வா அம் இம் அகோரம் கொண்டு எழும்பு ஸ்ரீயும் மிறீயும் கொண்டு சீக்கரம் எழும்பு அகார உகார சிகார மகார மண்டல பகவதி வாதகி வாடியம்ம என் வசமாகவே சுவாகா

அட்ஷரம் 





















 கிரிகை

சக்தி வாலாயம் பகுதியை பார்க்கவும். 

நன்றி

களவு எடுத்தவரை மாரணம் செய்ய

வணக்கம் தோழர்களே,

மந்திர வரிசையில் மீண்டும் ஓர் அரிய இரகசியத்தை உங்களுடன் பகிர்வதில் மிக மகிழ்ச்சி.

திருடர்களை கண்டுபிடிப்பது ஒரு புரம் இருக்க அவர்களை தண்டிப்பதே அவசியம். திருட்டு போய்விட்டதை காவல் நிலையத்தில் புகார்செய்வதுடன் நிருத்தாமல் அவர்களுக்கான தண்டனையை உடனுகுடன் செய்துவிட வேண்டும், அப்படி செய்வதனால் மீண்டும் திருடுவதை அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அப்படி திருடர்களை தண்டிப்பதற்கான முறையே இது.

மந்திரம்

ஓம் அக்கினி எரி அனல் எரி ஆனந்தி தான் எரி ஆதி நாராயண சுவாமி சரீரம் எரிந்தாற்போல் திருடியவன் எங்கு போனாலும் அவன் உடல்கள் எல்லாம் எரிய எரியவே சுவாகா

பிரணவம் 

ஓம் பிராணாயா தாக்கு இந்திர பிரணாயா தாக்கு நித்திய பிராணாயா தாக்கு உயிர் பிராணாயா தாக்கு என் சத்துருவானவன் பட்டு பிறளவே சுவாகா

கிரிகை

கோழி அவரை (பனி அவரை) கொட்டை 7 எடுத்து திருகு கள்ளி பால் ஒரு சிறு சட்டியில் எடுத்து, கொட்டைகளை தனி தனியாக 7 முறை பிரணவம் செய்து 7லும் சேர்த்து 7 முறை பிரணவம் செய்து கள்ளிபாலில் போட்டு மந்திரம் 108 உரு செய்து பிரணவம் 7 முறை செய்து காற்று புக முடியாதவாறு சட்டியை மூடி சுடலையில் புதைக்கவும். அல்லது பாழ் மனையில் புதைக்கவும். 

இது ஓர் அனுபவ கை கண்ட முறையாகும். திருடியவர் வந்து மன்னிப்பு கேட்டால் சட்டியை எடுத்து கடலில் போட சுகம்.

நன்றி.

Sunday, November 24, 2013

வெள்ளை விஷ்ணு கரந்தை கற்பம்

வணக்கம் தோழர்களே,

வெள்ளை விஷ்ணுகரந்தையின் புகைப்படம் பதிவிட்டதன் பின் எனது மின்னஞ்சலில் பலரும் அதன் மகிமையை கேட்டதன் படி, இங்கு அதன் மகிமையை சித்தர் போகரின் பாடல் மூலம் விளக்கியுள்ளேன்.

சித்தர் பாடல்

போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும் 
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே.


கருத்து

வெள்ளை விஷ்ணுகரந்தை கொண்டுவந்து (சமூலமாக) சூரிய நிழலில் உலர்த்தி பின் சூரணம் செய்து மண்டலம் (48 நாள்) காலை மாலை சுத்தமான தேனில் திரிகடி அளவு சேர்த்து உண்ணவேண்டும். அப்படி உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறுகிறார். 

இதை விடவும் வேறு பயன் தேவையா என்று நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

நன்றி.



Friday, November 22, 2013

வாலை ரசம் - சாதிலிங்க ரசம்

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் சித்தர் பாடலை பார்ப்போம்.

வாலைரசம் எடுக்கும் முறைகள் பலவாக இருக்கிறது அதில் இதுவும் ஓர் முறை. இப்படி எடுக்கும் இரசத்தில் நச்சுத்தன்மை குறைவாக இருக்கும் அத்துடன் சுத்தி செய்யும் போது சேதாரமும் குறைவாக இருக்கும்.

சித்தர் பாடல்

சித்தியா யின்னமொரு லிங்கமார்க்கம் 
செப்புகிறேன் கேளுங்கள் உலகத்தோரே
பத்தியாய் லிங்கமொரு சேருவாங்கி
பதியவே கல்லுபுச் சேருவாங்கி
நத்தியாய் வேப்பிலையும் சேருபோடு
நலமாக வில்லையா யரைத்துருட்டி
முத்திபெற சட்டிதனில் நடுவிலிட்டு
முக்கியமாய் மேல்சட்டி மலர்த்திமூடே


மூடியே சந்துக்கு ஏழுசீலை
முக்கியமாய் செய்துமேல் சட்டிதன்னில்
பாடியே தண்ணீரை விட்டுக்கேளு
பதிவாக அடுப்புதனில் எரித்திட்டாகால்
நாடியே அடித்தூறில் மேலேயேறி
நலமாக சிவந்துமே நரிபோல்தானும்
தேடியே சுறண்டிடவே வாலையாகும்
திறமாக சூதமெல்லாம் எடுத்துக்கொள்ளே


விளக்கம்

சாதிலிங்கம், கல்லுப்பு, வேப்பிலை இவை மூன்றும் சரி நிறையாக எடுத்து கல்வத்தில் அரைத்து வில்லையாக உருட்டி எடுத்து அதை புதுச்சட்டியில் சுத்தமான தண்ணீர் நிரம்ப ஊற்றி அதன் நடுவில் வில்லையை வைத்து மேல் புது சட்டி மூடி சீலை மண் ஏழு சுற்றி அதை அடுப்பில் வைத்து ஒரே அளவான தீயாக நீர் வற்ற காய்ச வேண்டும். சுமார் 12 மணி நேரம் எடுக்கும். பின்னர் அதை சூடு ஆரும் படி மல்லாக்க படுக்க வைத்து ஆரியபின் சட்டியை திறந்து பார்த்தால் பளிங்கு போல் இரசம் மேல் சட்டியில் படிந்திருக்கும். இதை அவதானமாக சீலையில் வடித்து எடுத்தால் சுத்தமான வாலைரசம் கிடைக்கும்.

இதற்கான சுத்தி 

நீர் வெற்றிலை சாற்றில் 2 மணி நேரமும், வெள்ளெருக்கம் பாலில் 2 மணி நேரம் அரைத்து எடுத்தால் போதுமானதாக இருக்கும். 

அல்லது

செங்கல் தூள், ஒட்டறை சேர்த்து 4 மணி நேரம் அரைத்தால் போதுமானது

இம்முறையில் செய்த இரசம் அல்லது சூதம் மிகவும் சக்தி உடையதாக இருகிறது, மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கிறது. மற்றும் ரசமணி செய்வதற்கு இதுவே உகந்தது என்பது எனது கருத்து.



வாலை ரசம் செய்வதற்கான செலவு மிகவும் அதிகமாகவே இலங்கயில் இருக்கிறது, 5 கிராம் ( 1 கழஞ்சு) சாதிலிங்கம் 350 ரூபாய் அத்துடன் கல்லுப்பு கிடைப்பது மிக கடினமாகவே இருகிறது. இதனால் ஒரு முறை மட்டுமே நான் அதை செய்து பார்திருக்கிறேன். தற்போது கடையில் கிடைக்கும் இரசம் தான் பயன்படுகிறது. 

நன்றி

மூலிகைகள் இனங்கானல்

வணக்கம் தோழர்களே,

மூலிகைகளை இனங்கானுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றே, காரணம் அவற்றின் பெயர் இடத்துக்கு இடம், மக்களுக்கு மக்கள், வாகடத்துக்கு வாகடம், மொழிக்கு மொழி, குருமாருக்கு குரு, ஆயுர் சித்தம் என வேருபட்டே இருக்கிறது.

இதன் விளைவாக பல அரிய வகை மூலிகைகள் இன்றும் வைத்தியர்களுக்கிடையில் வேருபட்டே இருக்கிறது. இதற்கு காரணம் பரிபாசையே ஆகும், சித்தர்கள் பரிபாஷையாக பெரு மருந்துகளை மறைத்தனர் காரணம் அதன் தன்மை புரியாதவர்கள் செய்தால் மருந்து விஷமாகிவிடும் என்பதற்கா, ஆனால் நம் முன்னோர் மூலிகைகளை மறைத்தார்கள் காரணம் அனைவருக்கும் தெரிந்தால் மருத்துவம் பலியாது போகும் என்று.

இப்படி பல காரணங்களால் மறைக்கப்பட்ட மூலிகைகளை இனங்கண்டு சரியானது இது தான் என்று பதிவிடுவது மிகவும் கடினம். சித்தர்களின் குணபாட வாகடங்களை வைத்தே அடியேன் பல மூலிகைகளை இனங்கான தொடங்கி தற்போதைக்கு சுமார் 1100 மூலிகைக்கு மேல் ஆய்வு செய்யும் பாக்கியம் கிடைத்தது. 

நான் ஆய்வு ஆரம்பித்த காலத்தில் இவற்றை பதிவாக்க வேண்டும் என்ற நினைவு இருக்காததால் அவற்றை சேமிக்க வேண்டும் என்ற தேவை இருக்க வில்லை, ஆனால் எனது நண்பர்கள் இதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுதல் விடுத்த பின்னரே இத் தளத்தை ஆரம்பித்து பதிவிட்டு வருகிறேன்.

எனது ஆய்வுகளில் நான் பட்ட பாடு எனக்கும் இறைவனுக்கும் தான் தெரியும், பல சித்த வைத்தியரிடம் இருந்து பெற்ற அரிவு ஒரு பக்கம் இருக்க அவர்களிடம் இருந்து உண்மையை கண்டரிவது மிகவும் கடினம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் மூலிககள் வேருபட்டே இருக்கிறது. ஆயுர் வேதத்தில் ஒரு பெயர் சித்தாவில் ஒரு பெயர் என பல குழப்பங்களுக்கு பின்னரே சரியான மூலிகையை பெற முடிகிறது.

பரிபாசை அகராதியும் பச்சிலை அகராதியும் மலை வாகடமும் இல்லாவிட்டால் மூலிகையை இனங்காம்பது மிகவும் கடினம். 

அப்படி தேடி எடுத்து வந்தால் குரு சொல்வார் அது இது இல்லை என்று. இப்படி பாடு பட்டு பெற்ற அரிவை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறது.

சித்த வைத்தியமும் சரி மாந்திரீகமும் சரி முறையான அரிவு இல்லாவிட்டால் அது பெரிய ஆபத்தை தான் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்கள் குறிப்பு 

இங்கு நான் பதிவிட்டிருக்கும் மருந்துகளையோ மந்திர முறைமையோ செய்ய முட்படும் முன்னர் சரியான மூலிகைதான் இதுவா என ஆய்வு செய்த பின்னரே முயற்சிக்க வேண்டும். 


நன்றி.

வென் குன்றி - வெள்ளை குண்டுமணி

வணக்கம் தோழரே,

வென் குன்றி மூலிகையின் படங்களை பதிவிட கேட்ட அன்பர்களுக்காக இந்த பதிவு.

குன்றி மணியில் பல வர்ணங்கள் இருக்கிறதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அதன் விளைவாக முன்னொருகாலத்தில் எடுத்த முயற்சியின் பலனாக
சிகப்பு 
வெள்ளை
கருமை
மஞ்சல்

இந்த நான்கு வகை மணிகளும் கிட்டியது அதில் சிகப்பும் வெள்ளையும் மட்டுமே கண்றாக உற்பத்தியானவை மற்ற இரண்டும் எத்தனை மணிகளை போட்டும் முளைக்கவே இல்லை.

தற்போது கையிருப்பாக வெள்ளை மணி மட்டுமே இருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்.

சிலர் வெள்ளை குன்றி தான் அதிமதுரம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அது தவறான கருத்து. வென் குன்றி இலையும் சரி வேரும் சரி மிகவும் இனிப்பு சுவை உடையவை அதனால் அப்படி நினைத்திருக்கலாம்.

இது கொடியினத்தை சேர்ந்தது அனைத்துவகையும் ஒரே மாதிரியானவையே ஆனால் அவற்றின் பூ மணி மட்டும் வேருபடும்.












நன்றி.

Thursday, November 21, 2013

மடை வைத்தல் - மந்திர கர்மம்

வணக்கம் தோழர்களே,

பலரும் கேட்டவாறு இருந்த மடை வைத்தல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில் இங்கு காட்சியாக தந்திருக்கின்றேன்.

நேற்று முந்தினம் நாம் செய்த வீடு காவல் ஒன்றின் போது அடியேன் வழிபட (தேவதைகளை அழைக்க) வைத்த மடை வகைகள் இங்கு கானலாம்.















இதன் பின்னர் நான் கூறியிருக்கும் மடை என்ற சொல்லின் விளக்கம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

ஓர் அரிய மூலிகை

வணக்கம் தோழர்களே,

சித்தர் பாடல்களில் வசிய கர்ம பிரயோகங்களுக்கு பயன்படும் மூலிகைகளில் முக்கியமானது விஷ்ணுகிராந்தி ஆகும். இதில் இரண்டு நிர பூக்கள் உண்டு நீலம் மற்றது வெள்ளை. வசிய கர்மத்துக்கு பயன்படுவது இந்த வெள்ளை பூவை கொண்ட செடியே. இது மிக அபூர்வமாகவே கிடைக்கிறது.

எங்களது மூலிகை ஆய்வின் போது இது வரையிலும் ஓர் செடியே கிடைத்திருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக.

வெள்ளை விஷ்ணுகிராந்தி













வசிய திலர்த்தம் செய்யும் போது இதன் வேர்தான் எடுக்க வேண்டும்.

நன்றி.

மூலிகை ஆய்வு சில

வணக்கம் தோழர்களே,

மூலிகை ஆய்வின் சில காட்சிகள்.

ஆணை வணங்கி அல்லது தேள் கொடுக்கு


காட்டில் மூலிகை ஆய்வின் போது












கிளா அல்லது கிளாத்தி அல்லது களா












 நாய் உண்ணி மரம்

























கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல்













ஓர் வகை சித்தா முட்டி 






















காட்டு மல்லிகை
முல்லை மலரும் இதுவும் ஒரே அமைப்பை உடையவையே ஆனால் இதில் வாசனை இராது.

 













புல்லுருவி அல்லது குருவிச்சை














நன்றி

Wednesday, November 20, 2013

முப்பூ - இது எந்த பூ

வணக்கம் தோழர்களே,

சித்தர் இலக்கியத்தில் இருக்கும் ஓர் பெரிய இரகசியம் முப்பூ.

அடியேன் இதுவரையில் முப்பூ தொடர்பாக எந்த ஆய்வும் செய்யவில்லை இருப்பினும் முப்பூ தொடர்பான எனது தெடலின் பலனாக அரிய பல சித்தர் இரகசியங்களில் தெளிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் சில மருந்துகளை முயற்சி செய்து பார்த்து வெற்றியும் கிட்டியது. இதுவே தற்போதைக்கு போதும் என்ற முடிவில் முப்பூவின் பக்கம் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.

உண்மையான முப்பூ ஆய்வாலர் யாரேனும் இலங்கையில் இருப்பின் தொடர்பு கொண்டால் முயற்சிக்கலாம் என்று விட்டு விட்டேன்.

இங்கு நான் படித்த பாடல் ஒன்றை தருகிறேன்

சித்தர் பாடல்

எளிதாக முப்பூவின் கருவைக்கேளு
இன்பமாய் கல்லுப்பு முப்புவாகும்
தளிதாகச் சூதமொடு முப்புவாச்சு
தடையற்ற விரும்பதுவு முப்புமாச்சு
நளிதாக விம்மூன்றும் சேர்ந்ததாலே
நலமாக முப்பூவெனப் பேருமாச்சு
கடிதாக வழலையென் றிதற்குப்பேராம்
கண்டபடி சொன்னதிந்த கருத்துதானே. 


இந்த பாடல் மூலம் எளிதாக விளக்கியிருக்கிறார் சித்தர்.

முப்பூ பற்றி நான் தேடிய பாடல்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்த பாடல் இதுதான்.

கல்லுப்பு, சூதம் (இரசம்), இரும்பு (கருப்பு அல்லது அயம் - பரிபாசை) இந்த மூன்றும் முறையாக சேர்ந்தால் அது முப்பூ எனவும் வழலை எனவும் பெயர் பெரும். இதை எப்படி சேர்ப்பது என்பது தான் இரகசியமாக இருக்கிறது. அடியேனின் மூன்று வருட தேடலின் பலனாக இதை சேர்க்கும் விதமும் சித்தர் ஆசியும் கிடைத்தது.
 
 சரியான நேரம் வரும்போது அதை கண்டிப்பாக பதிவிடுவேன்.

முப்பூ என்பது பஞ்சபூதங்கள் கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஆகவே பஞ்சபூதங்களை கட்டிவிட்டல் அட்டமாசித்தும் கைகூடும். அதனால் தான் அஷ்டகர்ம பிரயோக மருந்துகளில் முப்பூ முதலிடம் வகிக்கிறது.

பஞ்சபூதங்களை கட்டிவிட்டால் நாம்மால் என்ன எல்லாம் சேய்ய முடியும் என்பதை சிந்தியுங்கள், அதனால் தான் இதை இவ்வளவு இரகசியமாக வைத்திருக்கிறார்கள் சித்தர்கள்.

சத்தியும் சிவமும் சேர்ந்தால் அது பஞ்சபூதங்களையும் கட்டிவிடும். இங்கு கூறப்பட்டிருக்கும் மூன்றின் குணங்களையும் ஆய்வு செய்து பார்தீர்களானல் இது உங்களுக்கு புலப்படும். 
 

நன்றி

வெடியுப்பு திராவகம் - அண்ட நீர்

வணக்கம் தோழர்களே,

சித்த மருத்துவத்துக்கும் வாத வைத்தியத்துக்கும் அண்ட நீர், வாய் நீர், வாலை நீர், ஆகாச கங்கை, குமரி நீர் என பலவாக கூறப்படும் அந்த நீர் எது.

இந்த பாடலை கவனியுங்கள்.

சித்தர் பாடல்

 படியாக திராவகத்தை வைக்ககேளு
பதமாக வெடியுப்பு பத்துமாமே
பத்துமே பலம்பத்து நிறுத்துக்கொண்டு
பதிவாக சீனமது இருபத்தைந்து
உத்துமே இதுஇரண்டும் பொடித்துக்கொண்டு
உறுதியாய் கடத்திலரை வாசியிட்டு
நத்தியே வாலையென்ற சட்டிமூடி
நலமான முன்ணீரை வீசிப்போடு
சித்துமே சிவந்தசலம் வருகும்பாரு
சிறப்பாக அதைவாங்கி சொல்லக்கேளு

சொல்லவே யின்னீர்க்கு பேரேதென்னில்
சிறப்பாக அண்டநீர் வாலைநீராம்
நல்லிடவே வாய்நீராகும் குமரி நீராகும்
நலமான ஆகாச கங்கை நீராம்
வல்லிடவே யின்னீரை வாங்கிகொண்டு
.................
................


ஆகவே இங்கு பெரிய இரகசியம் என்று கருதுவது சிறியவிடயமாக தெரிகிறது அல்லவா. சரியான சித்தர் பாடல்கள் கிடைத்தால் ரசவாதம் என்பது இன்றும் சாத்தியமே.

இங்கு வெடியுப்பு திராவகம் வேரு எவ்வாராக அழக்கப்படுகிறது என்பது நன்கு புலனாகின்றது.

வெடியுப்பு திராவகம் செய்முறை பற்றி சற்று விளக்கமாக பதிவிடுகிறேன் நாளை. 

நன்றி. 

அமுரி - ஓர் ஆய்வு

வணக்கம் தோழர்களே.

தொடர்ச்சியாக மந்திரம் தொடர்பான பதிவுகளை மட்டும் பதிவிட்டும் சில மருந்துகளை பற்றியும் பதிவிட்டு வந்த அடியேன் சில பரிபாசை பற்றி எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

அதன் ஆரம்பமாக சித்தர் பாதங்களையும் என் குருமாரின் பாதங்களையும் என்னை ஈன்ற தாய் தந்தையின் பாதங்களையும் வணங்கி இன்று சித்தர் பாடல்களை ஆரம்பிக்கின்றேன்.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

அமுரி

இது தொடர்பாக பல கருத்துக்கள் பல தளங்களில் இருந்தாலும் எது சரி என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. பல ரசவாத ஆய்வாளர்களின் புத்தகங்களை படித்தாலும் அது சரியான திருப்தியை தருவதாக இல்லை.

அமுரி என்றால் நீர் என்பது தெளிவு ஆனால் எந்த நீர் என்பது தான் குழப்பம். பலரும் சிறு நீர் என்ற கருத்தையே ஒத்து இருப்பது சற்று சிந்திக்கவேண்டியதே. இருப்பினும் சித்த மருத்துவத்தை பொருத்தவரை அமுரி என்பது இடத்துக்கு இடம் வேருபட்டே வருகிறது.

சரக்குவகைகள் சுத்தி செய்வதற்கு அமுரி மிக அவசியமானதாக இருக்கிறது ஆகவே சரியான அமுரி என்பது இதுதான் என்று தெரியாவிடில் சுத்தி அசுத்தியாகிவிடுமல்லவா. இந்த பாடலை கவனியுங்கள்.

சித்தர் பாடல்.

தானேதான் அமுரியென்று மூத்திரத்தைவிட்டு
தாட்டிகமாய் சொன்னார்கள் பெரியோர்தாமும்
தானேதான் பொய்பேசு மாண்பர்தம்மை
கட்டியே அழித்தாக்கால் பாவமில்லை
வானேதான் மூத்திரந்தான் சமுத்திரநீராம்
வகையாக பார்த்தாக்கால் தோனும்தோனும்.

இங்கு மிக இலகுவான தலிழில் சித்தர் பாடியிருப்பதை கவனியுங்கள்.  அமுரி என்பது சமுத்திர நீர் என்பது இங்கு தெளிவாக பதிவாகி இருக்கிறது.

பொதுவாக சிந்திப்போமாகில் சிறு நீர் கூட ஓர் வகை உப்பு நீரே என்பது புரியும். ஆகவே அமுரி என்பது உப்பு வகை நீர் என்பது உறுதி.

குறிப்பிட்ட காலம் சில கட்டுப்பாட்டுடன் இருந்து எடுக்கும் சிறு நீர் தான் அமுரி என்பது தவரான கருத்து.

மனித உடலில் இருத்து வரும் கழிவு சிறு நீர் என்பதும் அது அவரவர் குருதி கலங்களுக்கு ஏற்பவும் உடல்னிலைக்கு ஏற்பவும் வேருபடும் என்பதும் உண்மை ஆகயால் பொதுவான ஒன்று மட்டுமே பொதுவியளில் அமுரியாக இருக்க முடியும்.

சித்தர் பாடல்களில் இதனுடைய அமுரி என்று குறிப்பிட்டு இருந்தாள் மட்டுமே அந்த குறிப்பிட்ட அமுரியை எடுக்க வேண்டும், அல்லாத போது எதை பயன்படுத்த வேண்டும் என்பது குழப்பமே.

சித்தர் பாடல் 

.........................
..............................
செவ்வாழைக் கன்றமுரி தன்னிலேதான்
சீராக வூறினபின்.......
..........

இங்கு குறிபிடப்படும் அமுரி செவ்வாழை கன்றின் கிழங்கை வெட்டி துவைத்து எடுக்கும் தண்ணீர் என்று அர்த்தம். இதுவும் உப்பு சுவை உடையதே.

ஆகவே சரியான அமுரி என்பது ஏதோ ஓர் உப்பு என்பது தெளிவு, அது சமுத்திர நீர் என்பது எனது கருத்து.

கவனிப்பு

கடல் நீர் வேரு சமுத்திர நீர் வேரு என்பது ஞாபகம் இருக்கட்டும். உங்கள் கடற்கரையில் எடுக்கும் நீர் அமுரியாகாது ஆனால் அதுவும் உப்பே. சமுத்திர நீர் என்பது சமுத்திரத்தில் எடுக்கும் நீர்.

நன்றி.





Tuesday, November 19, 2013

அலகு பாய்ச்ச - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

பதிவுகள் சற்று தாமதமாவதற்கு மன்னிக்க வேண்டும், வேலை பளு காரணமாக வெளியூர் செல்ல வேண்டி ஏற்படுகின்ற காரணத்தால் பதிவுகள் வர தாமதமாகிறது, இருப்பினும் நேரம் கிடைக்கும் போது பதிவிடுவேன்.

இன்று நாம் படிப்பது, கோயில்களில் நேத்தி வைத்தவர்கள் தங்களது உடலில் அலகு அல்லது காவடி எடுப்பது என்று வைத்த கடன்களை செய்ய உதவுவது பற்றி.

காவடி எடுப்பது அல்லது உடல், நாக்கு, வாய் போன்ற இடங்களில் அலகு பாய்ச்சுவதாக அவரவர் குலதெய்வங்களிடம் நேர்த்தி கடன் செய்திருப்பர் அப்படியானவர்களுக்கு உடலில் அலகு பாய்ச்சும் முறையே இது.


மந்திரம் - அலகு எடுக்க

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வா வா சிவாகா.

அலகு பாய்ச்ச

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் வாக்கு வாகினி வால பரமேஸ்வரி வா வா வந்து இவர் நாவில் குடிகொள்ளம்மா நில்லம்மா நில்லு ஓம் சக்தி சிவ சக்தி வாங்கு ஸ்ரீயும் மிறீயும் வாங்கு சுவகா

அலகு பிடுங்கி விபூதி போட

ஓம் ஆம் அகோர பரமேஸ்வரி தம்பனகாளி வா வா வருத்தப்படாமல் இவர் நாவில் தம்பே தம்பே சுவாகா.

கிரிகை

அலகு என்பது இங்கு உலோகத்தால் செய்த வேல் அல்லது சூலம் எதுவாகவும் இருக்கலாம், அத்துடன் காவடி எடுக்கும் போது பாய்ச்சும் முள்ளுக்கும் இது பொருந்தும்.  

தெய்வத்தின் திருப்பாதங்களில் அலகு வைத்து பூசை செய்து அதை பின்னர் இந்த மந்திரங்களை கொண்டு செய்யின் உடலில் எந்த தாக்கமும் காட்டாது.

நன்றி.




Saturday, November 16, 2013

துவாலை மறிக்க - மருந்து

வணக்கம்,

துவாலை மறிக்க மந்திரம் பதிவிட்டோம் அத்துடன் மருந்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

துவாலை மறிக்க சித்தர் மருந்து

மடந்தைக்குத் துவாலை மிஞ்சி
வருந்தவே இறைக்கு மாகில்
பொடிசெய்து சுக்கை குப்பை 
மேனிச்சா ரதனில் போட்டே
எடுகரண்டி யில்நல் லெண்ணயும்
காச்சியே வெல்லம் சேர்த்து
கடுக்கமாய் கிளறி திண்ண
கட்டும் அத்துவாலை தானே.


விளக்கம்

சுக்கு சூரணம் கொஞ்சம் எடுத்து அதை குப்பைமேனி சாரால் கலக்கி அதே அளவு நல்லெண்ணை சீனி சேர்த்து சூடாக்கி திண்ணவும். 

நன்றி.

துவாலை மறிக்க - மந்திரம்

வணக்கம்,

துவாலை என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த வீட்டு தடையாகும். இது யாதேனும் காரணத்தால் அதிகமாக அல்லது தொடர்ச்சியாக ஏற்பட்டால் பெண்கள் உடல் சோர்ந்து பலம் இலந்து விடுவர். அப்படியான ஓர் சந்தர்ப்பத்தில் அவர்களை காக்க வேண்டியே இந்த பதிவு.

பெரும்பாலான பெண்களுக்கு இது செய்வினை சூனியம் என்பவற்றின் தாக்கமாகவே இது இருக்கிறது அதற்கு இது ஓர் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

மந்திரம்.

ஓம் பஞ்சமா யோகி பாதாள யோகி பரமசிவனே பாரச்சிட்டி என்முகம் இறங்காதே நில்லடி அம்மே திரி முடி காளி திருவசம் பற்றாதே தறியடி காளி தம்போதறி தனி சுவாகா. 

கிரிகை

வடக்கு பக்கம் சாய்ந்து இருக்கும் எலுமிச்சம் கொத்தை முறித்து அதனால் தண்ணீர் ஓதி கொடுக்கவும்,. தண்ணீர் மூன்று முறடு குடித்து மீதியை உடல் முகம் கழுவவும். உரு 108 செய்ய சுபம்.

நன்றி.

வாசகர் கருத்து..

வணக்கம் தோழர்களே,

நீங்கள் மின்னஞ்சல் மூலம் கேட்கும் அனைத்து வகையான மந்திர விடயங்களையும் பதிவிடமுடியாது, அத்துடன் பெண் வசியம் சூனியம் போன்ற விடயங்களை கேட்கவும் வேண்டாம்.
 
சில புல்லுறுவிகள் எமது தளத்தில் கருத்து வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் கேட்ட விடயங்கள் கிடைக்கவில்லை என்ற கோபத்தால் பலவிதமான தவரான மற்றும் சகிக்க முடியாத கருத்துக்களை பதிவிடுகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் கருத்துக்கள் அனைத்தும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே வரும் என்பதுடன் அது தேவையான கருத்தாக இருந்தால் அது வெளியிடப்படும்.

நீங்கள் உண்மையான கருத்துக்களை பதிவிடுவதாக இருந்தாள் உங்களது உரிய உண்மையான அடையாளத்துடன் பதிவுகளை அனுப்புங்கள், எதற்காக மறைந்திருந்து பதிவிடுகிறீர்கள்.  

தவறு செய்வது நான் என்றால் உங்களுக்கு ஏன் பயம்.

உண்மையை தேடும் நல்ல நெஞ்சங்களுக்காக ஆரம்பிக்கபட்ட தளம் இது, யார் என்ன கூறினாலும் இது தொடர்ந்து செல்லும் என்பதை மறக்க வேண்டாம். 

விரைவில் தனியான தளத்தில் சந்திப்பேன்.

நன்றி.

Friday, November 15, 2013

சகல வாய்வுகளுக்கும் - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

கடந்த வாரம் அடியேன் வெளி ஊர் சென்றதனால் புதிய பதிவுகள் எதுவும் பதிவிடமுடியாது போனது.

இருப்பினும் எமது சேவைவையை எதிர்பார்து காதிருந்த நண்பர்களுக்கும் நலம் விசாரித்த அனைத்து நல்லோருக்கும் எனது பனிவான நன்றிகள். 

வாய்வு தொல்லைகள் நீங்க ஓர் மந்திரம். உடல் வாய்வுகளை நீக்க பல மருந்துகள் இருந்த போதும் சித்தர்கள் இப்படியான பல மந்திரங்களையும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தியெ மக்கள் இன்னல்களை தீர்த்திருக்கிறார்கள் என்பது சித்த மருத்துவத்துக்கு மட்டுமே இருக்கும் தனி சிறப்பாகும்.

மந்திரம்.

ஓம் பிற பிற மயிலெ ஓங்ஙார வாய்வாசு உள்வாசு பிறவாசு உள்வீச்சென பிறவீச்சென நின்ற நிலை விட்டு நிலை குலைந்து பூமியில் குதித்து போகவே சிவாகா. 

கிரிகை

விபூதி எடுத்து உரு 41 செய்து வயிற்றிலும் பூசி வாயிலும் சற்று தின்ன கொடுக்கவும். சகல வாய்வுகளும் நீங்கும்.

நன்றி.

Saturday, November 9, 2013

ஆண்மை வீரியம் உண்டாக

வணக்கம் தோழர்களே,

தாது வலு தொடர்பாக பதிவிட்டால் வீரிய விர்த்தி கேட்கிறீர்கள்.

தாது வலுப்பெற்றால் வீரிய விர்த்தி தானே கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம். மேலும் அப்படி என்ன செய்து உங்கள் ஆண்மையை ஆருக்கு நிரூபிக்க விரும்புகிறீர்கள். சரி சரி நீங்கள் திட்டுவது கேட்கிறது.. இருப்பினும் உங்கள் ஆசையை நான் ஏன் கெடுப்பானே.



மருந்து. 

சிகப்பு பசு மாட்டின் பாலில் 60 வெள்ளருக்கு பூக்களையும் ஓரிதல் தாமரை சமூலமாக எடுத்து செய்த சூரணமும் போட்டு சுண்டக் காய்ச்சி குடியுங்கள். நல்ல பலம் கிடைக்கும். 

ஒரு லீட்டர் பால்
60 பூக்கள்
15 கிராம் சூரணம்

இது போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

திக்கு வாய் - இது ஓர் நோய் அல்ல

வணக்கம் தோழர்களே,

திக்கு வாய் என்பது ஓர் நோய் அல்ல மாறாக இது ஓர் உடல் குறைபாடு. இருப்பினும் இது பரம்பரை முறையாகவே அதிகமாக வருகிறது. இதற்கு என்று சரியான ஓர் முறை இல்லை இருப்பினும் சில மூலிகைகள் இதனை தீர்த்து பலன் தந்த அனுபவம் உண்டு. ஆனால் அனைவரும் பலன் பெறவில்லை அதற்கான காரணம் எனக்கு சரியாக தெரியாது. ஒரு வேலை அவர்கள் அதை சரியாக செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா.

நம்பிக்கை இல்லாத எந்த விடயமும் வெற்றி தராது என்பது எனது கருத்து. விருப்பம் இருப்பின் இந்த முறைகளை முறையாக செய்து பாருங்கள்.

மருந்து.

நாவில் ஏற்படும் அனேக ரோகங்களுக்கு வசம்பு ஓர் சரியான மருந்து. பேசமுடியாது பறவைகளே பேசுகிறது தானே. நீங்கள் ஏன் பேச முடியாது.

வசம்பு வெந்தாமரை பூ இது இரண்டையும் சூரணம் செய்து தினம் இரு வேலை நாவில் தடவியும் திரிகடி பிரமானம் தேனுடன் கலந்து சாப்பிட்டு பாருங்கள். 

நாவிற்கு அதிபதி கலைவாணி குடியிருக்கும் வென் தாமரையும் உங்களுக்கு உதவி செய்யும்.

நன்றி. 

பெண்களின் மார்பகம் பெரிதாக சில குறிப்பு

வணக்கம் தோழர்களே,

சில தோழிகளின் வேண்டுதலுக்கு அமைய இந்த பதிவு. மார்பகம் சிறிதாக இருப்பதால் திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கிறது என்று வேதனை பேசும் பெண்களுக்கு இது.

மருந்து.

எழுத்தானி செடியின் வேர் எடுத்து சிகப்பு பசுமாட்டின் பாலில் அரைத்து காலை மாலை என இரு நேரம் பருகிவரவும். அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சுத்தமானதாக வங்கி மார்பகங்களை நன்கு வருடி விடவும், அத்துடன் நன்கு சிவந்த மாதுளம் கனிகள் தினமும் இரவு நேரங்களில் சாப்பிடவும்.

நெய் கலந்த சாதம் சாப்பிடலாம். அல்லது உடல் பருமன் தொடர்பான ஓர் கட்டுரை பதிவி இருக்கிறது அதை படியுங்கள்.


நன்றி.


Friday, November 8, 2013

தடை வெட்ட

வணக்கம் தோழர்களே,

இனி வரும் சில பதிவுகள் தொடர்ச்சியாக தடைகளை வெட்ட உதவும் மந்திரங்களாக இருக்கும்.

தடை வெட்ட என்றால்

நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதில் யாதேனும் தடை ஏற்பட்டால் அதை விளக்கி வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும். இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி.  மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி.

தடை வெட்டு மந்திரம் தேவைக்கேட்ப வேறுபடும் ஆகயால் குறிப்பிட்ட தேவை இருப்பின் தயக்கமின்றி கேட்கலாம்.

முதலில் வினாயகர் தடை வெட்டு மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய தடை வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.



வினாயகர் தடை வெட்டு மந்திரம்.

ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.

மூல மந்திரம்

ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம. 

கிரிகை

தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுண்டாலும் அல்லது இரண்டும் கவுண்டாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும். 

நன்றி.

பூசனிக்காய் வெட்ட

வணக்கம் தோழர்களே,


இது ஓர் இரகசிய மாந்திரீக முறை இருப்பினும் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.


எப்படிப்பட்ட மாந்திரீக பிரயோகம் செய்யப்பட்டு ஒருவர் பாதிக்கபட்டாலும் அவரை அப்பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பது நமது கடமை அல்லவா. அதற்கான முறையே இது.

காய் வெட்டி அட்சரம் கட்டி பின்னரும் அவரின் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இதை முறையாக செய்து அவரி மேல் ஏவப்பட்ட எப்படிப்பட்ட மந்திர சக்தியையும் முறியடிக்க முடியும், அத்துடன் இது எதிரியின் மேல் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

முறைப்படி எலுமிச்சம் காய் வெட்டி பின்னர் அட்சரம் கட்டி அதற்கும் அடங்காவிடில் இதை செய்யவும். இந்த முறையை மாந்திரீகர் செய்ய முற்படும் போது அவரின் மாந்திரீக சக்தியின் பாதி பலம் அவரை விட்டு போய்விடும், பின்னர் 9 நாள் தனது வாலாய சக்தியை பிரணவம் செய்து சக்தியை எடுக்கவேண்டும்.


மந்திரம் ஒழுங்கு முறை

1. காய் எடுக்க 

ஓம் ஸ்ரீயும் சிவ காயத்திரியே நம

2. அட்சரத்தில் காய் வைக்க

ஓம் மாரணாயா நம

3. தண்ணீர் தெளிக்க

ஓம் அஸ்திராயா நம

4. மஞ்சல் குங்குமம் பூச

ஓம் நிமாயி நம

5. காய் மீது திரி கொளுத்தி வைக்க

ஓம் அஸ்திராயா நம

6. காய் வெட்ட மந்திரம்

ஓம் ஏழு கடலுக்கப்பால் எழுந்த பேரொளி, பேரொளியின் கீழே குரு முனி தவசிருக்குறார் சிதரிடு சிதரிடு ஓங்கி பாங்கி பற்றிடு பற்றிடு இவர் மேல் வரப்பட்ட பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியம் அங் அறு இங் அறு எடுத்தெறி எடுத்தெறி தகன மாரணாயா நம. 

அட்சரம் காய் வைக்க

















கிரிகை

முறைப்படி காய் வெட்டும் முறைக்கு அனைத்தும் செய்து குறிப்பிட்டவரை முன் நிருத்தி காய் மீது 3 திரிகளை கொளுத்தி மந்திரம் சொல்லி அவரை கடக்க விட்டு வெட்டவும். பின்னர் தண்ணீர் ஓதி அவருக்கு தெளித்து அட்சரம் கட்டவும். மந்திர உரு 21 தடவை க்கு மேல்.


நன்றி.
  

சக்தி (அம்மன்) காய் வெட்டு

வணக்கம் தோழர்களே,


காய் வெட்டு மந்திர வரிசையில் இதுவும் மிக பலம் வாய்ந்த மந்திரமே.


மந்திரம்

ஓம் ஆதிமூல சங்ஙரி பிரணாய சங்ஙரி அரி அரி சங்ஙரி கைலாய வல்லி திரிபுர சுந்தரி திகழொளி சுந்தரி பரிபுர சங்ஙரி பவணொளி சங்ஙரி அம்மை வந்தால் அத்திமுகணை கொண்டு வந்தால் இந்திரனை இடது தோளில் கொண்டு வந்தால் வயிரவனை வலது தோளில் கொண்டு வந்தால் கல்லும் புதைத்த கடுங்கொடி தானும் வில்லும் வினையும் விடுத்த சூனியமும் தடை விடு நம விடு சுவாகா. 


கிரிகை

காய் வெட்டும் பதிவுகளை பார்க்க.

நன்றி.

தீராத இருமலுக்கு சில மருந்து

வணக்கம் தோழர்களே,

தொடர்ச்சியான இருமல் இருப்பவர்களுக்கு சில இலகு சிகிச்சை முறைகள்.

மருந்து

மிளகும் திப்பிலியும் சேர்த்து சூரணம் செய்து பசுப்பாலில் குடிக்க தீரும்

முருங்கை பட்டை ஒதிய மரபட்டை இரண்டும் அரைத்து மோரில் குடிக்க தீரும்.

நெல்லி திப்பிலி நெற்பொறி சக்கரை தேன் பால் சேர்த்து குடிக்க எப்படிப்பட்ட இருமலும் தீரும். 

நன்றி

Thursday, November 7, 2013

நூல் கட்டுதல் சிறு விளக்கம்

வணக்கம் தோழர்களே,

நூல் கட்டுதல் என்றால் என்ன என்ற சந்தேகமும் அதற்கான விளக்கமும் இங்கு குறிப்பாக பதிவிடுகிறேன்.

நூல் என்பது கடைகளில் கிடைக்கும் அட்ஷரம் கட்ட பயன்படும் நூல் தான். இதில் பல தனி வர்ணமும், பல வர்ணங்கள் சேர்ந்தாற்போலும் கிடைக்கும். பொதுவாக காவல் விடயமாக நூல் கட்டுவதானால் கருப்பு சிறந்தது. வசிய கர்மமாக இருந்தால் பஞ்சவர்ண நூல் சிறந்தது.

இதில் யாதேனும் விஷேடமாக இந்த நூல் தான் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அதை எடுக்க வேண்டும்.

நூல் மந்திரிக்கும் போது இத்தனை முடிச்சுக்கள் இட வேண்டும் என்று கூறப்பட்டால் அதை தவறாது இடவேண்டும். இல்லை என்றால் 9 பது முடிச்சுகள் இட்டு மந்திரிக்க வேண்டும்.

நூலை நன்றாக பன்னீரில் அலம்பி பின்னர் சந்தனம் குங்குமம் பூசி எடுத்து ஊதுபத்தி புகை படும்படியாக இருந்து மந்திரிக்க வேண்டும்.

இப்படி செய்து நூல் கட்டினால் அது நிச்சயம் பலன் தரும்.

நன்றி.

ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு

வணக்கம் தோழர்களே,

தாது நஷ்டம் மற்றும் வீரியம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வாக சில மருந்துகள் இங்கு தருகிறேன் அளவோடு பயன் படுத்தி உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பானதாக்கி மகிழ்ச்சியுடன் வாழுங்கள். 

மருந்து சரக்கு வகை

தண்ணீர் விட்டான் கிழங்கு 
அமுக்கிரா கிழங்கு
நீர் முள்ளி வித்து
மதனகாமிய பூ
கசகசா - அபினி வித்து
அதிமதுரம்
பேரீச்சம் பழம் 

சிகப்பு பசுவின் பால்
பசு நெய்
தேன்

முறை

சரக்குகளை நன்கு பொடித்து தூள் செய்து புது மண் சட்டியில் பால் விட்டு 4 ஒன்றாய் வற்ற காய்ச்சி அதில் சரக்குகளை தூவி நன்றாக கிலரி அதில் தேவையான அளவு நெய் தேன் கலந்து லேகியமாக கிண்டி எடுக்கவும். 

இதில் தேக்கரண்டி வீதம் இரு வேலை கனவன் மனைவி மண்டலம் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். 

நன்றி.

Monday, November 4, 2013

வாலிபம் செய்த விபரீதம் - தாது நஷ்டம்

வணக்கம் தோழர்களே,

பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்ட விடயம் இது. ஆனால் பலரும் எதிர்பாக்கும் விடயமும் இது. ஆண் பெண் என இருவரும் பாதிப்படையும் விடயமும் இது.

”இளமையில் கல்” என்றது மாறி ”இளமையில் கை” என்று ஆகிவிட்டது உலகம் இன்று.

பருவம் வந்ததும் சுரப்பிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதில் அடங்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இதற்கு கிடையாது, ஆனால் ஆண்கள் தங்களையே குறையாக நினைப்பது தான் கொடுமை. பெண்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்பது தான் உண்மை. அது சரி எதைப்பற்றி கூறிக்கொண்டு செல்கிறார் இவர் என்று சிலர் நினைப்பது எனக்கு கேட்கிறது அது “சுய இன்பம்” கான்பவர்களை பற்றித்தான்.

திருமணமான பின்னரே சுய இன்பம் கண்டதன் விளைவு என்ன வென்று ஆண்களுக்கு தெரியும் ஆனால் பெண்களுக்கு அது தெரியாது அதனால் தான் பெண்கள் அதை பற்றி கூருவதில்லை.

சற்று விளக்கமாக பார்த்தால் புரியும். சுய இன்பம் செய்து பழக்கமான பெண்கள் திருமணமான பின்னர் அவர்களின் சுரப்பிகளின் மூலம் இன்பம் கான்பது சற்று தாமதமாகவே இருக்கும். அதற்கு காரணமாவது அவர்களின் நினைவாற்றலாகவே இருக்கும். தாம்பத்தியம் என்பது இரு மனமும் உடலும் ஒன்றாக கலப்பது அல்லவா, அப்படி இருக்க முதலில் வேறு விதமான நினைவில் சுய இன்பம் அடைந்த ஒருவர் அதே நினைவு வருமாயின் விரைவில் இன்பத்தை அடைந்துவிடிகிறார், அதுவே செயல் வேறுபடின் சற்று தாமதமாகே இன்பம் கிடைக்கும். இது ஆண்கள் தங்களது சிறுவயது தவறுகளை மறைப்பதற்காக முற்பட்டு ஏமாந்து போகின்றனர்.  பெண்களோ இதை காட்டிக்கொள்வதே இல்லை.

நமது நினைவாற்றலை மாற்றி அமைத்தால் அதுவே தாம்பத்திய வெற்றியை  தரும் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும் சுய இன்பதின் விளைவாக சுரப்பிகள் தங்களது செயல் திறனை மாற்றியிருந்தால் அது கடினமானதாகவே இருக்கும். பெண்களுக்கும் இது பொருந்த்தும். அப்படி ஆண் பெண் இருவரும் குறிப்பிட்ட மருந்துகளை சரியாக பயன்படுத்தினால் தவிர வெற்றி கிடைப்பது கடினமே.

ஆணும் சரி பெண்ணும் சரி சரியான நேரத்தில் இன்பம் அடையாவிட்டால் அது தாம்பத்திய இன்பம் என்று கூற இயலாது. பெண் சீக்கரத்தில் இன்பம் அடைந்துவிட்டால் ஆண் தொடர்ந்து தனது இன்பத்தை அடைய முயற்சித்தாலும் இல்லை என்றால் பெண் முயன்றாலும் அது கசப்பாகவே இருக்கும். ஆகவே இருவரின் இயல்பும் சரியானதாக இருந்தால் அது மிகவும் வெற்றியான வாழ்வைத்தரும்.

தாம்பத்திய வாழ்கை சரியாக இருக்க இருவரும் மனம் திறந்து பேசிப்பழகவேண்டும் முதலில், இது எனக்கு பிடித்திருக்கிறது அது உனக்கு இஷ்டமா போன்று இருவரும் நன்றாக புரிந்து செயல்பட்டால் வாயாக்ராவோ அல்லது சித்த மருந்துகளோ தேவப்படாது என்பதில் ஐயம் இல்லை.

இயற்கையாகவே குறை இருப்பவருக்கு கண்டிப்பாக மருந்துகள் மூலமே குணப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து உங்கள் ஆண்மைபலத்தை மனைவியிடம் காட்டி பரிசு பெர நினைக்க வேண்டாம். இது போட்டி அல்ல, வாழ்கை என்று நினைத்து செயற்படுங்கள்.

சித்த மருத்துவத்தில் இதற்கு சரியான மருந்துகள் இருக்கின்றன அவற்றை நோயின் தன்மையை வைத்தே சாப்பிட வேண்டும், அதை விடுத்து பல வலைதளத்திலும் இருக்கிறது மாதிரி செய்து பின்னர் ஏற்படும் பக்க விளைவிற்கு காரணமாகவேண்டாம்.

சித்த மருத்துவத்தில் பக்க விளைவா? இது என்ன புதுக்கதை என்று கேட்கும் வாசகர்களே,

பக்க விளைவு ஒன்று இல்லாத செயற்பாடு இது வரையிலும் இல்லை.  அது சித்த மருந்துக்கும் பொதுவானது தான் இதை ஓர் தனி பதிவாகவே தருகிறேன். தற்போது விடயத்துக்கு வருவோம்.

வீரிய விருத்தி என்று ஓர் தனி வாகடத்தொகுதியே இதற்காக எனது முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் அதில் சித்தர் முறையில் செய்யும் மருந்துகளும் எனது முன்னோர் ஆய்வு செய்து கண்டரிந்த மருந்துகளும் என ஏராளமாகவே இருக்கிறது. அதிலிருந்து சில பொதுப்பிரயோக துணுக்குகளை வரும் பதிவுகளில் தருகிறான் செய்து பாருங்கள்.


கருத்துக்களை தயக்கமின்றி வெளியிடவும்.

நன்றி.

மருந்தீட்டுக்கு சிகிச்சை

வணக்கம் தோழர்களே,

இன்று பெரும்பாலான பெண்கள் இந்த மாந்திரீக வித்தைகளாலும் ஈடு மருந்துகளாலும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி பல தொல்லைகளையும் சமாலிக்க முடியாமல் படும் பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு ஓர் சரியான தீர்வாக இது நிச்சயம் இருக்கும்.

அது என்ன பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எனக்கு புரிகிறது நான் கூறியது பெரும்பான்மை பற்றி. இருப்பினும் இது ஆண்களுக்கும் உதவும்.

 மருந்தீட்டு இலகுவான சிகிச்சை முறை 

வாரம் இரு முறை சாம்பல் பூசனி காய் சமைத்து சாப்பிடுங்கள் இது வயிற்றில் இருக்கும் எவ்வித மருந்தீடாக இருந்தாளும் மலம் கழிக்கும் போது வெளியேற்றி விடும். 

வாரம் ஒரு முறை அகத்தி இலை உப்பு சேர்க்காமல் ரசம் வைத்து குடியுங்கள்.

வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் என்னும் ஆமனக்கெணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுல் சீனி சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்துவிட்டு உறங்கினால் மறு நாள் காலையில் நன்கு மலம் கழியும், இது உடல் அலுக்குகளை அகற்றுவதுடன் ஈடு மருந்துகளை அகற்றும். 

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலை முலுகவும். 

இப்படி தெடர்ச்சியாக செய்து வந்தால் எந்த மருந்தீட்டுக்கும் அஞ்ச வேண்டாம்.

மந்திர பிரயோகம் செய்தால் சரியானா காவல் அட்ஷரம் அணிந்துகொண்டால் அது உங்களை பாதுகாக்கும்.

நன்றி.

சர்வ வசிய மை

வணக்கம் தோழர்களே,

இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணத்தால் பல பதிவுகள் உங்களுக்காக.

சர்வ வசிய மை. உலகமெல்லம் வசியமாகும் இந்த மைக்கு என்பதில் சந்தேகம் இல்லை. எனது சிறு வயதில் ஒருமுறை செய்து பலன் அடைந்தேன் ஆனால் மீண்டும் செய்ய பல தடவை முற்பட்டும் கைகூடவில்லை. ஒருவேலை இது இவனுக்கு தேவையல்ல என்று இறைவன் நினைத்தாரோ தெரியாது.

இது சற்று கடினமான வேலைதான் இருப்பினும் செய்து முடித்தால் பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சரக்கு வகை

சூரிய காந்தி பூ
செங்களுனீர் பூ
முல்லை பூ
சிகப்பு கோழிஅவரை பூ
கரிசாலங்கன்னி பூ (மஞ்சல் பூ)
கொப்பான் தேன் (மரக்கொப்பில் இருக்கும் தேன்)
கோரோசணை
பச்சை பூரம்
பச்சை புனுகு

முறை

மூலிகைகளின் சார் எடுத்து அவற்றின் எடைக்கு சரியாக மற்ற சரக்குகள் ஒவ்வொன்றும் சேர்த்து 3 சாமம் மைபோல் அரத்து (9மணி) மான் கொம்பு சிலிழில் அடைத்து மூன்று நாள் சுடலையில் புதைத்து எடுக்கவும். பின்னர் பூசை செய்து மந்திர உரு 108 செய்து பொட்டு வைக்க சகலரும் அடங்குவர்.

மந்திரம்

ஓம் றீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா.


நன்றி.

சத்துரு சினேகமாக மந்திர யந்திரம்

வணக்கம் தோழர்களே,

அட்ஷரம் தொடர்பான பதிவின் தன்மையை பரிசீலிக்க விருப்பம் உடையவர்கள் இந்த அட்ஷரத்தையும் மந்திரத்தையும் முறைப்படி செய்தால் அதன் பலனை குறிப்பிட்ட சில தினங்களுக்குல் அடையலாம்.

எதிரி இல்லாத மனிதன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் கடினமே அப்படி உங்களுக்கு குறிப்பிட்ட நபரால் தொல்லை அதிகமாக இருந்தால் இது நிச்சயம் வெற்றிதரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது எனது அனுபவ உண்மை.

மந்திரம் 

அரி ஓம் அங் உங் றீம் ஐயும் கிலியும் சவ்வும் நமசிவய சிவாகா. 

அட்ஷரம்















 கிரிகை


செப்பு தகடு 5 க்கு 5 அளவு எடுத்து மேல் கூறிய முறை தவறாது கீரவும், பால் அபிஷேகம் செய்து மஞ்சல் பட்டு மேல் தகட்டை வைத்து தூப தீபம் காட்டி வெள்ளை பூவினால் 1008 மந்திரத்தால் அர்ச்சனை செய்து எதிரியின் பேரை சொல்லி சினேகமாகவேண்டும் என்று வணங்கி தகட்டை உங்களுடன் வைத்துகொள்ளவும். 

அட்ஷரம் பிரணவம் பற்றி முன்னரே பதிவில் இருப்பதால் அவற்றை முறைப்படி செய்து பலன் பெருங்கள்.

நன்றி

அட்ஷரம் (இயந்திரம் ஓர் விளக்கம்)

வணக்கம் தோழர்களே,

அட்ஷரம் அல்லது இயந்திரம் வரையும் முறையை பற்றி பலரும் என்னிடல் கேட்கிறார்கள். அவர்களின் ஐயத்தை நீக்கவே இந்த பதிவு.

முதலில் குருமூலமாக மாந்திரீக முறைகளை கற்க வேண்டும் என்ற நியதி இதனால் தான் ஏற்பட்டது, சில இரகசியங்களை பலரும் அறியும் வகையில் கூறினால் அதன் விளைவு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றே சித்தர்கள் முதல் ஞானிகள் அனைவரும் இந்த கலையை பரிபாஷையாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறார்கள்.

அஷ்ட கர்ம பிரயோகங்களில் யாதேனும் ஓர் தேவைக்காக இயந்திரம் ஒன்றை கீர வேண்டி ஏற்படின் அவற்றுக்குறிய முறையை சரியாக பயன்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டல் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.

சில குறிப்பிட்ட மந்திரப்பிரயோகத்துக்கான இயந்திரங்கள் இன்றும் இரகசியமாகவே இருக்கிறது அது சரியான குருமூலம் அன்பான பன்பான மாணவனுக்கு மட்டும் குருவின் சமாதி காலங்களில் கிடைக்கும்.

பெரும்பாலான இயந்திரங்கள் வரைவதற்கான சரியான முறைகள் குறிப்பிட்ட மந்திரப்பாடலில் விளக்கமாகவே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி அல்லவா.

இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்களாம்.

அட்ஷரம் கீரும் முறை - பொது முறை

1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்

2. குறைந்த பட்ச்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும். 


3. இருப்பு ஆனியினால் கீர வேண்டும்

4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது

5. கீரும் போது சிறு தவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீரவும்.

6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்

7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும். 

8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்

9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்

10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்

11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்

12. ஓங்காரம் சுற்றும் போது சரியாகா அட்ஷரம் அதனுல் அமையவேண்டும்.

இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியானா பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

தகடுக்கு பதிலாக மரப்பலகையோ அல்லது வேறு எதுவாயினும் குறிப்பிடப்படலாம் அவற்றை குறிப்பிடப்படும் அளவு மாறாமல் இந்த விதிமுறைக்கு ஏற்ப செய்யின் பலன் கிடைக்கும்.

வேரு சந்தேகம் எதுவாயினும் பதிவில் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

நன்றி.


 

Sunday, November 3, 2013

வீரபத்திரர் காய் வெட்டு

வணக்கம் தோழர்களே,

காய் வெட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் அரிய வகையே. இதற்கான கிரிகை முறையும் முந்தயே பதிவுகளை பார்க்கவும்.

மந்திரம்

ஓம் காளி தெட்ஷணாமூர்த்தி அகோர வீரபத்திராயா அறு அறு நாசய நாசய சிங்ங வங்ங ஸ்ரீயும் நம சத்துரு படு படு கிரி கிரி கேர கேர சிவாகா. 

கிரிகை

உரியவரை இருத்தி காய் வெட்டவும்.

நன்றி.

தாது வலுவுக்கு - இன்பமான உடலுரவு

வணக்கம் தோழர்களே,

இது திருமணமான நாண்பர்களுக்கான பதிவு.

தாம்பத்திய வாழ்கை சரியாக இல்லாவிட்டல் கனவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் சிறு பிரச்சினைகூட விவாகரத்துக்கு சென்றுவிடும்.

கனவன் சரியில்லை என்று மனைவியும் மனைவி தப்பானவல் என்று கனவனும் கூற இதுவே காரணமாக இருக்கிறது.

சரியான தாம்பத்திய வாழ்க்கை இருந்தாள் எப்படிப்பட்ட பிரச்சினை குடும்பத்தில் ஏற்பட்டாலும் அது சில நிமிடங்களில் தீர்வுக்கு வந்துவிடும். அப்படி சந்தோஷமாக இருக்க கனவன் மனைவி தாம்பத்தியம் சரியாக இருக்கவே இப்பதிவு.

பல தரப்பட்ட தளங்களில் இருக்கும் தாது வலு தொடர்பான தகவல்களில் இதுவும் ஒன்று என்று நினைக்காமல் இம்மருந்தை செய்து பலன் பெருங்கள்.


மருந்து

முருங்கை பிஞ்சு 250 கிராம்
பால் 1லீட்டர்
நெய் 50 மி.லீ
சக்கரை 50 கிராம்
நெற்பொறி 50 கிராம்

முறை

முருங்கை பிஞ்சை கசக்கி துண்டுகளாக முறித்து சுத்தமான பசுப்பாலில் சுண்டக்காய்ச்சி, நெய், சக்கரை (சீனி) நெற்பொறி இவற்றை தூவி காய்ச்சி குடிக்கவும்.

வாரம் ஒரு மறை செய்துவர நல்ல பலம் கிடைக்கும்.

அனுபவரீதியான உன்மை.

நன்றி.

தொடர்ச்சியான தும்மல் - சளி ரோகங்களுக்கு

வணக்கம் தோழர்களே,

வாசகர் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்கு தொடர்ச்சியான தும்மல் இருப்பதகவும் அதற்கு தீர்வும் கேட்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நோய்க்கான பொதுப்பிரயோக மருந்துகளையே இங்கு பதிவிடமுடியும் அதற்கு காரணம் அவரின் சரியானா நோய்க்கான காரணத்தை நாடி நடைகளை வைத்தே கண்டரிய முடியும். சில நோய்க்கான பக்க விளைவாகவோ அல்லது ஆரம்ப குண அடையாலமாகவோ எதுவும் இருக்கலாம் அல்லவா ஆகையால் பொதுவான மருந்துகளை மட்டும் எப்போதும் நம்பி இருக்காமல் தகுந்த மருத்துவரை பரிசீலிப்பது சிறந்தது.


நீர்க்கோவை
ஜலதோஷம்
பீனிசம்
தும்மல்

போன்ற சகல சளி ரோகங்களுக்குமான ஓர் சிறந்த குடிணீரக இது இருக்கிறது.

மருந்து

வட்டு வேர்  20 கிராம்
சீந்தல் வேர் பட்டை 20 கிராம்
இஞ்சி 20 கிராம்
பனங்கற்கண்டு 20 கிராம்
சந்தன மர தூள் 5 கிராம்

முறை

இவை எடுத்து எட்டொன்றாய் காய்ச்சி ஐந்து நாள் தினமும் காலையில் குடிக்கவும். 

குறிப்பு
 
தினமும் இது புதிதாக செய்து குடிக்கவேண்டும். 

நன்றி.

 

நீரிழிவு நோய்க்கு மருந்தாக்கள் முறை

வணக்கம் தோழர்களே,

நீரிழிவு நோய்க்கான மருந்தாக்கள் காட்சிகள் சில.


















சிறு நீர் அடைப்பு நோயாளி ஒருவருக்கு கசாயம் கொடுக்கும் காட்சி.













நன்றி.

மூலிகை ஆய்வு பாகம் 3

வணக்கம் தோழர்களே,

தீப வாழ்த்துக்கள் தளத்தில் இல்லை என்று நினைக்க வேண்டாம். சற்று வேலைப்பளு காரணமாக வெளியூர் சென்றதனால் பதிவிட முடியாது போனது. இருப்பினும் அன்பும் இறைவனின் ஆசியும் எனது வாசகர்களுக்கு எப்போதும் உண்டு.

கல் தாமரை ஆய்வுக்காக இலங்கையின் கிழக்கில் இருக்கும் பெரும் காடு ஒன்றுக்கு எனது நண்பர்களுடன் சென்று எடுத்த சில மூலிகைகள் இங்கு..


































































மூலைகைகளின் பெயர் அவற்றின் கோப்பு பெயராக தரப்பட்டுள்ளது.

இன்னும் பல மூலிகைகள் உண்டு அவற்றை அடுத்த பதிவுகளில் கானலாம்.

நன்றி