வணக்கம்தோழர்களே,
சைவ, அசைவ உணவுகள்
பற்றி முன்னமே நாம் ஓர் சிறு விளக்கம் கொடுத்திருந்தோம் அல்லவா... அதன்
மேலதிக விளக்கம் இங்கே தருகிறோம். சைவ உணவை உண்ன வேண்டாம் என்பது எமது
கருத்து கிடையாது. மாறாக எது சைவ உணவு என்பதும் அப்படி கூறப்படும் உணவை உண்பவர்கள் மட்டுமே மேட்ஷத்தை அடைய முடியும் என்ற கருத்து மட்டுமே தவறானது என்பது தான் இங்கு கூறப்படுகிறது.
புராணங்கள் இதிகாசங்கள் இயற்றப்பட்ட ( நடந்த) காலத்தில் நாம் இல்லை என்பதை
முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் அது சமயமும் கிடையாது.
இந்து நதிக்கரை மக்கள் (இந்துக்கள்) வழிபாடுகள் என்ற பெயரில் செய்த
போலியானதும் தேவையற்றதுமான சடங்குகளை தவிர்ப்பதற்கும் அவரவர் இஷ்ட
தெய்வங்களுக்கு ஏற்ப பிரதான வழிபாட்டு முறைகளை வைத்து பிரிந்து கானப்பட்ட
இந்து மக்களை ஒன்று சேர்க்கவும் இறைவனால் அருளப் பட்ட வேதங்களான “இருக்கு,
யசூர், சாம, அதர்வ” வேதங்களை அடிப்படையாக வைத்து சமயங்களை (வழிபாடுகளை)
ஆதி சங்கரர் ஆறாக (06) பிரித்து ” சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம்,
கௌமாரம், சௌரம்” என அதன் வழிபாட்டு முறைகளை பாமரனும் அறியும் படி செய்தார்.
இது வேதங்களின் தொகுப்பு. ஆகவே சமயம் என்பது வேதத்தை அடிப்படையாக வைத்தது,
மாறாக இதிகாசங்களும் புராணங்களும் சமயங்களாகாது.
இந்து மதம்
என்றால் அனைவரும் புரிந்து கொள்வது பகவத் கீதையை தான் அத்துடன் அதில்
இருந்து தான் உதாரணங்கள் கூறப்படுகிறது. சில நேரங்களில் இராமாயனமும்
உதாரணமாக்கப் படுகிறது.
புராணங்கள் இதிகாசங்கள் இறைவனின் வரலாறுகள் அல்ல, அவை இறைவனின் சக்திகளின், விம்பங்களின் கதைகள்.
வரலாறு இருந்தால் அவன் இறைவனும் அல்ல.
ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதன் பொருள் அது தானே !
வரலாறு இருந்தால் அதற்கு ஆதியும் இருக்கும் அந்தமும் இருக்கும்.
பிறந்தவன் இறக்க வேண்டும் அது இறைவனாக இருந்தாலும் சரி என்ற கூற்றை
விளக்கவும் வாழும் காலத்தில் சந்திக்க போகும் இன்னல்கள் உணக்கு மட்டும்
அல்ல அது அனைவருக்கும் பொதுவானது என்பதையும், வாழ்கை வட்டத்தில் நீ
நடக்கும் முறைக்கு ஏற்ப அதன் பலன்களை இங்கேயே நீ அனுபவித்திட முடியும்
என்பதையும் காட்டவே இந்த இதிகாசங்கள் புராண அவதாரங்கள்.
பகவத் கீதையை ஒரே நொடியில் தவரானது என்று கூறிவிட முடியும்.. பார்கிறீர்களா..... சைவ அசைவ உணவு பற்றி கூறும் அன்பு நெஞ்சங்களே..
“ எது நடந்ததோ அது நன்றே நடந்தது”
“ நீ செய்யும் அனைத்தையும் நானே செய்விக்கிறேன்”
” அனைத்துன் நான்”
இதன் கூற்றுக்கு அமைய அசைவம் உண்டால் அது பரமாத்தமா உண்டதாக வேண்டுமே !.. பின்னர் ஏன் கவலை.
உயிரை கொன்றால் அதுவும் அவர் தான் செய்ய வேண்டும். காரணம் அதை அவர் தான்
கீதையில் சொல்கிறார். அன்று அர்சுணண் கொன்ற உயிர்களுக்கு அவர்
பொருப்பேற்பதாக இருந்தால் அதன் காரணம் சரியானதாக இருந்தால், இன்று நாம் வாழ
வழி தரும் இதுவும் சரியானதாகிறது அல்லவா.
தனது குழந்தைகளுக்கு
இன்று உணவு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஓர் விவசாயி தனது அருகில்
இருக்கும் எதை கொன்றாவது குழந்தைகளுக்கு உணவு கொடுத்தே தீர வேண்டும்,
அப்படி செய்யாவிடில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காத பாவத்துக்கு ஆளாக
வேண்டி இருக்கும் அல்லவா.
facebook ல் அரட்டை அடிக்கும் அளவுக்கு
வசதி இருக்கும் நாம் சைவ அசைவ உணவை பற்றி கருத்து கூறுவதும் அதன் மூலம்
மேட்ஷத்தை அடைய வழி தேடுவதும் வியப்பான விடயம் ஒன்றும் அல்ல.
கொல்லாமை பற்றி கூறும் facebook அன்பர்கள் எத்தனை பேர் கொசு வத்தி இன்றி
இரவில் அரட்டை அடிக்கிறீர்கள்.. உயிர் என்று வந்து விட்டால் அனைத்தும்
உயிர்தான் அல்லவா.
பச்சை தவரங்களை சைவ உணவு என்று யார் கூறுவது.
அதற்கும் உயிர் உணர்வு இரத்தம் நரம்பு சதை குடும்பம் குழந்தை மகிழ்ச்சி
துன்பம் அறிவு என்று அனைத்தும் உண்டு என்பது தெரியாதா.. ?
உங்களுக்கு பிடித்தது பச்சை தாவரங்களை கொலை செய்வது. அவ்வளவு தான்.
இன்னும் கொஞ்சம் கடுமையாக உங்களை காயப்படுத முடியும் பார்கிறீர்களா....
விலங்குகளை கொலை செய்ய வேண்டாம் என்கிறீர்கள் அல்லவா.. உங்களது வீட்டில்
இருக்கும் தளபாடங்கள் பெரும் பாலானவை எதனால் ஆனது. மரங்கள் என்று இருந்தால்
காடுகளை அழித்தன் மூலம் எத்தனை குருவிக்கூடுகள் அவற்றின் முட்டைகள்
குஞ்சுகள் என கொலை செய்யப்பட்டிருக்கும். அதற்கு ஊக்கிவிற்பாக நீங்கள்
கொடுத்து வாங்கிய விலை என்ன..
உங்களது காசுப்பைகள் இடுப்பு பட்டி பாதனிகளை விலை அதிகம் கொடுத்து விலங்குத்தோல் வியாபாரம் செய்வது யார்..
முத்து மணிகளை விலை கொடுத்து வாங்குவது யார்..
அதிலும் மேலாக உங்களை காயப்படுத்தவும் முடியும் பார்கிறீர்களா...
அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது அல்லவா..
வயது வந்த பெண் முட்டை போடும் (கரு உண்டாகும்) பெண் அல்லவா அது ஓர் உயிர்
அல்லவா... ஆண் விந்து உண்டானால் அதுவும் உயிர் அல்லவா.. இறைவனின் படைப்பை
தடை போதுவது யார்.. சற்று விளக்கமாக கூறினால்...
திருமணம் ஆகும்
வரை தனியாக கொலை செய்கிறோம். திருமணத்தின் பின் ஆண் பெண் சேர்ந்து
உற்பத்தியை மறுக்கிறோம். நீங்கள் உங்கள் உடலில் இருந்து வரும் உயிரையே
காப்பது இல்லை அப்படி இருக்க பிற உயிரை காப்பது போல் கதை கூறுவது எப்படி
நியாயமாகும்.
சன்னியாசத்தின் விளக்கம் சற்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எல்லாத்திலும் மேலாக ஓர் இரகசியத்தை மறந்தி விட்டு பேசக்கூடாது..
மனிதனே ஓர் விலங்கு அல்லவா... இயற்கை என்பது இறைவனின் சொரூபம் என்றால் ஓர்
விலங்கு இன்னும் ஓர் விலங்கை கொன்று உண்னும் விதத்தில அல்லவா படைப்பே
இருக்கிறது.. விலங்குகளை கொல்லக் கூடாது எனறால் நீங்கள் இறைவனையே தவறானவன்
என்று கூறுவதாக அமைகிறது பார்தீர்களா..
இறைவன் தவறானவன் என்று கூறுபவர்கள் மேட்ஷத்துக்காண வழி தேடுவது எப்படி முறையாகும்...
கொல்லாமை பற்றியும் புலால் உண்பதை பற்றியும் திருக்குறல் மூலம் விளக்கும் சிலருக்கு...
”பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்”
என்று வள்ளுவர் கூறுகிறார் அப்படி என்றால் அவரே சில நன்மைகளை மக்கள்
அடயவேண்டும் என்பதற்காக தனது பாடலில் பொய்மையை கூறியிருக்க முடியுமல்லவா..
1330 பாடலில் எத்தனை உணமை என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
மற்றவர்கள் உலகுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக பொய் கூறலாம் என்றால் அதை ஏன் அவர் கையாண்டிருக்க கூடாது.
அதை அவரே உறுதிப்படுத்திவிடார்
அவரே கூறுகிறார்..
” எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதை விட அவர் உங்களுக்கு புரிய வைக்க முடியாது...
” மூலமதை யறிந்தாக்கால் யோகமாச்சு
முறைமையுடன் கண்டாக்கால் வாதமாச்சு
சாலமுடன் கண்டவர்முன் வசமாய்நிற்பார்
சாத்திரத்தை சுட்டெரிந்தா லவனேசித்தன் ”
18 குருவே சரணம்
தென் நாடுடைய சிவனே போற்றி..
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
No comments:
Post a Comment