Friday, May 30, 2014

மதன சுந்தரி இலேகியம்

வணக்கம் தோழர்களே,

தாது வலுவுக்கான மருந்துகள் பற்றிய காட்சிகள் முன்னர் தரப்பட்டது அதன் ஒரு பகுதியான மருந்துகளை பிரித்து “ மதன சுந்தரி” எனும் பாரம்பரிய இலேகியம் ஒன்றை தயாரித்த போது எடுத்த படம் இது.

(இது நாம் உண்பதற்காக என்று வைத்துக் கொள்ளுங்கள்)

அது என்ன “மதன சுந்தரி” மன்மதனின் மனைவியர் ஒருவரின் பெயர் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உடல் சூட்டை கட்டுப்படுத்தி நாபிக்கமலம் வழியே ஏற்படும் தாது உபாதைகளை தீர்க்கவல்லது. அத்துடன் முருகவேல் எனும் அழகுக் கடவுளின் தேகத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை (அனுபவ உண்மை) மேலும் இதை பெண்களுக்கு என சில மூலிகை சரக்குகளை மேன்படுத்தி மண்டலம் உண்டால் கிழவியும் குமரியே ( உடல் சதை தொகுதி இருகி மீண்டும் குமரியாவாள்) என்பதிலும் மாற்றம் இல்லை. அத்துடன் குழந்தை இன்மை என்ற பெண்களின் ஆறு உடல் பிரசினையில் குறிப்பிடும் படியான மூன்று வகையான பிரச்சினைகளுக்கு இது சரியான தீர்வாக நாம் கையாண்டு வந்திருக்கிறோம்.

காய கற்ப மருந்துகளின் வகையைச் சேர்ந்த இது பாரம்பரிய முறையாக கைகண்ட மருந்தாக உபோயாகப்படுகிறது.

சுமார் 64 வகைக்கு மேல் மூலிகை சரக்குகள், இரண்டு விதமான பற்பங்கள், அத்துடன் சிறு தேன், வென் பசுவின் நெய் என தேடி தேடி தேர்வு செய்யப்பட்ட முறைகளை கொண்டு மட்டுமே இதை செய்ய முடியும். 










 











நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment