Sunday, May 11, 2014

இந்த பயனம் நீண்ட பயனம்

வணக்கம் தோழர்களே,

“ பாரப்பா நால்வேதம் நாலுபாரு
பற்றாசை வைப்பதற்கோ பினையோகோடி
வீரப்பா ஒன்றொன்றுக் கொன்றைமாறி
வீணிலே யவர்பிழைக்க செய்தமார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார்காணார்
ஆரப்பா நிலைநிற்கப் போறாரையா
ஆச்சரியங் கோடியிலே ஒருவன்தானே”

பல இனையத்தளங்களில் சித்தர் பாடல் முதல் மருத்துவ குறிப்புக்களை பதிவிடும் பலரும் எதையும் செய்து காட்டுவதில்லை, காட்டவும் முடியாது ஏனனில் அது அவர்களுக்கு தெரியாது. யாதேனும் புத்தகத்தில் இருக்கும் விடயத்தை தங்களது என்று இனையத்தில் பதிவிடுவது மட்டுமே அவர்களால் முடிகிறது.

இவ்வாறான போலித்தன்மையை மாற்றி சரியான இறை அருள் இது தான் என்பதை சிலருக்காவது புரிய வைக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அதனால் தான் பேச்சில் மட்டும் இன்றி எமது செயலும் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆன்மீகம் என்பது மிகப் பெரிய விஞ்ஞானம் அதை நிரூபித்து காட்ட இயலாதவர்கள் விஞ்ஞானியாக இருக்க முடியாது ஆனால் இன்று இதுவே போலிகளுக்கு ஆதாரமாகி விட்டது. ஆன்மீகம் புரியாத விடயம் என்று கூறியே அதை வியாபாரமாக்கி விட்டார்கள்.

ஆன்மீகத்தை இறைவனை நிரூபிக்க முடியும் என்று மக்கள் உணர்ந்துவிட்டால் போலிகள் அழிந்துவிடும், அதுவே எமது நோக்கமும்.

இந்த பயனம் நீண்ட பயனம் இதில் பல தடைகள் சோதனைகள் இருக்கும் காரணம் சாதரன கல்விக்கே எத்தனை கஷ்டம் இருக்கும் போது மிகப்பெரிய விஞ்ஞானத்த கற்பது சாதாரனமாகுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்.

எமது மாணவர்கள் பலரும் இருந்த நிலை விட்டு உண்மையை உணர்ந்திருக்கிறார்கள், மாந்திரீகம் என்றால் என்ன என்பதை தாங்களே அனுபவித்தவர்கள், மனதில் அமைதியை பெற்றிருக்கிறார்கள், இறைவனை எங்கு காணமுடியும் என்பதை புரிந்தவர்கள், அதற்கான பயிற்சியில் இருக்கிறார்கள், விரைவில் விஞ்ஞானியாவார்கள்.

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அஷ்டகர்மத்தை கற்பிக்கும் திறமை நம்மிடம் இல்லை, ஏனனில் அது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் கூட இருந்ததில்லை.








 











விதையில் உற்பத்தியாகி, வளர்ந்து பூத்து காய்த்து பின்னர் கனியாகி மீண்டும் விதையாகுவது தான் இயற்கை, மாறாக விதையில் இருந்து கனி, காய், பூ என கிடைக்கும் மாறிலிகள் பற்றி எமக்கு தெரியாது.

என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்

No comments:

Post a Comment