வணக்கம் தோழர்களே,
மருத்துவத்துக்கும் வேதியலுக்கும் மிக அவசியம் என கருதும் முப்பு பற்றி சட்டைமுனி குரு நாதர் என்ன சொல்கிறார் என்று பார்கலாம்.
பாடல்களை ஆழமாக கவனியுங்கள்.
“ அப்பான உப்பு ஆதி கணபதி
தப்பாமற் பாதந் தானது காப்பு
செப்பாத ரகசியம் செப்பினேன் சுந்தரா
முப்பான உப்பு மூலமும் காப்பே
முப்பூவி னாலே முடிக்கலாம் வாதம்
முப்பூவி னாலே முடிக்கலாம் யோகம்
முப்பூவி னாலே முடிக்கலாம் ஞானம்
முப்பூவை விட்டால் முடியாது பாரே
பாரு நீ சமுத்திர நீரதுதன்னை
பாரு நீ மேகம் பதரியினாத்து
பாரு நீ ககன மார்க்கத்திலேகி
பாரு நீ வாய்வால் ககுத்திடவுப்பே
உப்பு வெடித்து ஒடிந்து இடியது
அப்புவின் ரூபம் அதுதானே யக்கினி
செப்பிய பூமியில் சேர நுழைந்து
அப்பது விந்து அண்டம தாச்சே
அண்டம தான அக்கினி யுப்பை
கண்டரி யார்கள் காசினி மூடர்
பிண்ட மதனிற் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாஸ்திரம் பார்த்தே
சாஸ்திரம் பார்த்தே சாரச்செய் வழலையை
சூத்திரம் பார்த்தால் சுளிவாய் முடிந்திடும்
தோத்திரஞ் செய்து தொடுத்த அண்டத்தை
சூத்திரம் போல சொல்லாது நூலே.”
மேற் பாடல் அண்டம் எனும் முப்பூகுரு எப்படி உருவாகுது என்பது பற்றியது..
” அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பது பாரே “
“ பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீஷரைச் செய்துப தேசம்
கூத்திது வாகுங் கூடாது முத்தியே “
இப் பாடல் நமது கலியுக சாமியார்களை பற்றி கூறும் உண்மை.
வாசியோகம், தியானம், பிராணாயாமம், என்ற பெயரில் இருக்கும் உண்மையை சரியாக
அறியாமல் நாங்கள் முக்தியை அடைகிறோம் என்று கருதி மணிக்கனக்காக
அமர்ந்திருக்கும் அன்பர்கள் சிந்திக்கவேண்டியது இது.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.
சற்று ஆராய்து பார்க்கலாம் வாருங்கள்.
சித்தர்கள் ஞானிகள் என்று நாம் கூறும் எத்தனை பேர் ஆயுளை கடந்து வாழ்திருக்கிறார்கள்.
கற்பம் உண்ணாத எவரும் எதை செய்தும் பலனில்லை, ஸ்ரீ ராமகிருஷ்ணரை
எடுப்போம், அவரை விடவும் இங்கு நாம் யாரும் சிறப்பாக யோகப் பயிற்சி செய்யப்
போவதில்லை, பிராணாயாமம் செய்யப் போவதில்லை, வாசியை அடக்கப்போவதில்லை. அவர்
எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்று பாருங்கள்.
வல்லளார் அவர்களை எடுத்து பாருங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்.
ரமணமகரிஷி அவர்களை எடுத்து பாருங்கள்..
இன்று சைவ ஆதிணங்களில் இருப்பவர்களை பாருங்கள்.
சீரடி சாய், சாய்பாவா, ஓஷோ, இப்படி பட்டியல் தொடரும்.. விரைவாக இறந்தவர்கள்.
நமது கிராம விவசாயிகள் இவர்களை விட அதிகமாக வாழ்ந்து இறக்கிறார்கள்
அவர்கள் எந்த வாசியும் செய்வதில்லை, யோகமும் செய்வதில்லை, உடலுக்கு தேவையான
உணவை அளவாக உற்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு
இருக்கும் தேக ஆரோக்கியமும் மன அமைதியும் நாம் கூறும் சாமியார்களுக்கு கூட
இருப்பதில்லை. தனது கடமைகளை குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சரியாக
செய்துவிட்டுச் செல்லும் அவன் யோகியாக சித்தனாக ஏன் இறைவனாக கூட இருக்க
முடியும்.
நாம் நவீன யுகம் என்ற பெயரில் அவசர அவசரமாக பயனித்து
வேலைப் பளு காரணமாக மற்றவரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை, எனது வீடு எனது
குடும்பம் என்ற சிறுபுத்தியை விட்டு வெளிவந்தாலே உடலும் மனமும்
ஆரோக்கியமாக இருக்கும்.
நவீன காலம் என்றாலும் வாயால் உண்டு, மூலத்தால் தான் கழிவகற்றுகிறோம் என்ற உண்மை இங்கு பலருக்கு புரிவதில்லை.
KFC, Mcdonalds, Pizza என்று எந்த நவீன உணவாக இருந்தாலும் சரி. கூல்
குடித்தாலும் செமிக்கும், கஞ்சு குடித்தாலும் சீரணிக்கும். இதில் எது
அமிர்தம், எது விஷம் என்று நீங்கள் தான் ஆராய வேண்டும்.
பீச்சில்
நடப்பது, பாக்கில் சிரிப்பது, இது மருத்துவமும் இல்லை, அதன்
சொந்தக்காரனும் இல்லை. இன்றைய விஞ்ஞானிகள் என்ற ஆய்வாளர்கள் தந்த
இறப்புக்கான பயிற்சி. கண்டுபிடித்தவனே வாழ்வதில்லை பின்னர் நாம் எப்படி
வாழ்ந்திட முடியும்.
இறைவன் எங்கும் இருக்கிறான் என்றும் அவன்
அனைவருக்கும் பொதுவானவன் என்றும் பேசும் நாம், அவன் சீவன் (உயிர்) என்று
நமக்குள் இருப்பதை உணர்ந்து இருக்கிறோம் அல்லவா, அப்படியே அவன் செயலைப்
போல் நாமும் அனைவருக்கும் சொந்தக்காரன், அனைவரும் பொதுவானவர்கள் என்ற
சிந்தனை என்று உங்கள் மனத்தில் வருகிறதோ, அன்றே நீங்கள் பிறப்பின் பலனை
அடைவீர்கள். முக்திக்கான வாசல் திறக்கப்படும். பிரபஞ்ச ரகசியமும் அதன்
உண்மையும் தெளிவு பெரும்.
” அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே “
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த மருந்துவர்.
No comments:
Post a Comment