வணக்கம் தோழர்களே,
பல நாட்களுக்கு பிறகு ஓர் மருத்துவ பதிவு செய்வதில் மகிழ்சி. எமது முன்னோர்களால் கையாலப்பட்ட ஓர் மருத்துவக் குறிப்பு இது.
கடுமையான இருமல் தொண்டை வலி சிறு நாக்கு வளர்ததல் போன்ற சிலேற்பன (கபம்) தொடர்பான பிரச்சினைகளுக்கு ஓர்
சிறந்த மருந்தாக அமைகிறது. சிறுவர் முதல் அனைவரும் உபயோகிக்க கூடியது இது,
எனது அனுபவத்தில் மிக சிறப்பான மருந்து என்று பெயர் பெற்ற சூரணங்களில்
இதுவும் ஒன்று.
சரக்கு வகை,
அதிமதுரம்
மாசாக்காய்
செஞ்சந்தனம்
திப்பிலி
இரு சீரகம்
ஓமம்
கடுக்காய்
ஏலரிசி (ஏலம் விதை)
இவற்றை சரி நிறை எடுத்து நன்கு சுத்தமான தண்ணீரில் அலம்பி சூரியனில் ஒரு
நாள் காய வைத்து, இடித்து வஸ்திரகாயம் (துணியில் அரித்து) சூரணத்தை
எடுக்கவும்.
பின்னர் இந்த சூரணத்துக்கு உடன் கறந்த பசுவின் பால் விட்டு பிசைந்து மீண்டும் சூரியனில் காயவைத்து சூரணம் செய்யவேண்டும்.
இப்போது இதை புதிதாக எடுத்த மண் சட்டியில் சிறு தீயாக இட்டு வறுத்து
ஆறவிடவும், பின் மீண்டும் வறுக்கவும் இப்படி ஐந்து முறை வறுத்து எடுக்க
சூரணம் வீரியம் பெறும்.
இதை மூன்று நாள் காலை மாலை
பணங்கற்கண்டுடன், தேன், அல்லது பசு நெய் கலந்து திரிகடி பிரமானம் சாப்பிட
இருமல் தொடர்பான வியாதிகள் தீரும்.
நன்றி
No comments:
Post a Comment