Sunday, May 11, 2014

சாதிலிங்க வாலை

வணக்கம் தோழர்களே,

” சாதிலிங்க வாலை ” இதன் அர்த்தம் எத்தனை பெயருக்கு முதலில் புரிகிறது. ம் ம் ம்...

சித்தர்பாடல்கள் பலவிடயங்களையும் உள்ளடக்கிய ஓர் திரட்டாக இருக்கிறது, அதாவது ஞானம், யோகம், மருந்து, மந்திரம், இறைமை, புலமை, என பட்டியல் தொடர்கிறது. இதில் ஒவ்வொன்றும் தனித்துவமானது போல் இருப்பினும் அனைத்தும் நம்மை அழைத்துச்செல்வது பரம்பொருளின் பாதங்களை பற்றுவதற்காகவே.

சித்தர் பாடல்கள் பரிபாஷையாக இருப்பதற்கும் காரணம் இருக்கிறது அது தவறான முறையில் கையாலப்பட்டால் அது அணு ஆயுதத்தை விட ஆபத்தாகும் என்பதற்காகவே இருக்கிறது, மேலும் இலகுவாக ஓர் விடயம் நமக்கு கிடைத்துவிட்டால் அதன் மகிமையும் சக்தியும் நமக்கு புரிவதில்லை என்பதும் உண்மைதானே.

சித்தர் பாடலுக்கான விளக்கம் தருவதில் இருக்கும் குழப்பம் என்னவென்றால் ஒவ்வெறு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது அதை புரியவேண்டுமானால் முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் தான் புரியும்.

அதை தெளிவுபடுத்த இந்த ”சாதிலிங்க வாலை “ அல்லது “ சாதிலிங்க வாலை ரசம்” என்பதை பற்றி பார்க்கலாம். மருத்துவத்திலும் இரசவாதத்திலும் பயன்படும் சுத்த இரசம் எனப்படும் பாதரசம் எப்படி தயாரிக்கவேண்டும் என்பது பற்றி கூறும் பாடல் இது. மேலும் சாதிலிங்கத்தில் இருந்து பாதரசம் பிரிக்கும் முறை அனேகமாக கூறப்பட்டாலும், அதிக மருத்துவர்களும் இரசவாத ஆய்வாலர்களும் சாதிங்கத்தில் இருந்து இரசத்தை பிரிக்க அடுப்பேற்றி பல மணி நேரம் எரித்து அதில் இருந்து பாதிக்கும் குறைவான இரசத்தை பிரிப்பார்கள்.

நாமும் அப்படியான ஓர் முறையையே பல ஆண்டுகள் கையாண்டிருக்கிறோம், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது தேடல் மற்றும் ஆய்வுகளின் பலனாக மிக எளிமையாக அதிக அளவில் பாதரசத்தை சாதிலிங்கத்தில் இருந்து எடுக்கும் உத்தியை கண்டறிந்தோம். அதற்கான பாடல் இது.

பொதுவாக இப்படியான் அறிய விடயங்களை பகிரங்கபடுத்தக்கூடாது என்பது சித்தர்கள் வாக்கும் ஆணையுமாக இருக்கிறது, இருப்பினும் சித்தரியல் பற்றியும் பரிபாஷை பற்றியும் அதற்கான விளக்கத்தை கேட்கும் வாசகர்கள் ஓர் விடயத்தை சரியாக புரியவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

பாடல்

” பண்ணப்பா வின்னமொரு கருவைக்கேளு
பராபரத்தா யெந்தனுக்குப் பகர்ந்தவித்தை
நண்ணப்பா சாதிலிங்க வாலைதன்னை
நன்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாமைந்தா
விண்ணப்பா தானோக்கிக் குருவைப்போற்றி
விபரமுடன் சாதிலிங்க கட்டிவாங்கி
தண்ணப்பா லிங்கமரை வீரம்வாங்கி
சமர்த்தாக ரெண்டையுமே பொடியாய்செய்யே

செய்தபொடி பீங்கானி லிட்டுக்கொண்டு
” செய்யாத வைங்கோலத் தைலமிட்டு ”
உய்தமுடன் பிசைந்துருட்டிப் பீங்கான்பக்க
முறுதியுட னப்பிரவி முகத்தில்வைப்பாய்
தொய்தமுடன் ரவிகாங்கை யதனிற்சென்று
சுழன்றுரசம் வடியுமடா செம்மையாக
வைதமுடன் ரசமான வாலைதன்னை
வாஞ்சனையாங் குப்பிதனிற் பதனம்பண்ணே “

“ பண்ணப்பா விக்கருவை வெளிவிடாதே
பரமான வாலையடா வாலைப்பெண்தான்”

* குருவே மன்னிக்கவேண்டும் இக் கருவை வெளியிட்டமைக்கு, காரணம் உலக மாந்தர் உங்கள் அறிவை சிரம் தாழ்ந்து வணங்கவே சிறிய விளக்கம் கொடுக்கிறேன்.*

பாடலை ஆராய்வோம் (குறிப்பான விடயத்தை மட்டும் கூறுகிறேன் கவனியுங்கள்)

” ஒரு அறிய விடயத்தை கேளு, என்னுடைய தாய் (பூசிக்கும் இறைவி) கற்பித்த இரகசியம் இது, அதாவது சாதிலிங்கத்தில் இருந்து பாதரசத்தை பிரிக்கும் முறை, மனதில் உனது குருவை ( எங்கு நிறைந்த சக்தி) வணங்கி இதை செய், சிறப்பான சாதிலிங்கம் கட்டியாக வாங்கு.. இதில் விபரமுடன் என்றால் சாதிலிங்கத்தை மிக தெளிவாக ஆராயும் திறமை வேண்டும், அப்போது தான் அதில் இருந்து அதிக இரசத்தை பிரிக்க முடியும், சாதிலிங்கம் இருக்கும் பிறகாசத்துக்கு ஏற்ப ரசம் பிரியும் தன்மை இருக்கும். இதுவே விபரமுடன் என்றால்..

இப்போது வாங்கிய சாதிலிங்க எடைக்கு பாதி அளவு வீரம் வாங்க வேண்டும் (குறிப்பு சாதிலிங்கம், வீரம் என்றால் என்ன என்ற கேள்வியை கேட்பவருக்கு இந்த பாடலின் அர்த்தம் தெரிந்தும் பலனில்லை என்பதால் ஆய்வை நிறுந்துங்கள்)

தற்போது வாங்கிய இரண்டு சரக்குகளையும் சமர்த்தாக பொடியாய் செய்யவேண்டும். அதாவது சாதிலிங்கத்தை பொடியாக பன்னும் போது அதன் பளிங்குத் துகள்கள் வீணாகத படி பொடிக்க வேண்டும்.

பொடி இரண்டையும் ஓர் சுத்த வெள்ளை பீங்கானில் போட்டு அதில் ..... இப்போது தான் இந்த பாடலில் பரிபாஷை வருகிறது பாருங்கள்.

செய்யாத வங்கோலத் தைலமிட்டு...

ஐய்கோலத் தைலம் என்றால் ஒருவகை தைலம் என்று புரிகிறது ஆனால அதை செய்யக்கூடாது அதுவாகவே தைலமாக இருக்க வேண்டும். என்ற பொருள் இங்கு..

ஐங்கோலம் என்ற பரிபாஷை புரிந்தால் தான் சாதிலிங்கத்தில் இருந்து இலகுவாக ரசம் பிரிக்க முடியும்.

இப்போது பீங்கானில் இருக்கும் பொடியுடன் ஐங்கோல தைலம் விட்டு பிசைந்து கலக்கி அல்ல, அதாவது வில்லைகள் போல் செய்ய வேண்டும், இதை அப்படியே சூரிய வெப்பத்தில் வைத்தால் அதிலிருந்து பாதரசம் எனும் வாலைப் பெண் வருவாள்.

இங்கு நாம் உபயோகிக்கும் சாதிலிங்கம் மற்றும் வீரம் அதில் இருந்து கிடைத்த வாலைப் பெண் மூன்றும் படமாக காட்டியிருக்கிறேன். செய்யாத ஐங்கோலம் மட்டும் குரு ரகசியமாக இருப்பதால் நமது மாணவர்களுக்கு மட்டுமே தெரியும்.
 
 


இப் பதிவு பரிபாஷை என்பது என்ன என்ற விளக்கத்தை உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.
-----------------------------------------------------

ஆகவே சித்தர் பாடல்களை படிக்கும் போது நாம் தான் முதலில் தெளிவாக இருக்கவேண்டும், எதை தேடுகிறோம் எனற சரியான தெளிவு நம்மிடம் இல்லையெனில் எதையும் புரியமுடியாது. அத்துடன் மருத்துவக் குறிப்பை தேடுவதானால் முதலில் அது தொடர்பான அடிப்படை விளக்கம் தெரியவேண்டும்.

தளங்களில் இருக்கும் திரிகடுகு திரிபலாதி போன்ற சூரணங்களையும் கற்ப மருந்துகளையும் ஓர் அறிவுக்காக வேண்டுமானால் படிக்கலாம், ஆனால் அதை நாம் மருந்தாக உட்கொள்ளமுடியுமா என்ற அறிவு நம்மிடம் வேண்டும்.

சித்தர் பாடல்களை வியாபாரத்துக்காக ஆய்வு செய்யின் அதன் உண்மையை உணரவே முடியாது. முதலில் அவர்களின் ஆசியை பெறவேண்டும் பின்னரே அவர்களின் பாடல்களின் அர்த்தம் தெரிவிக்கப்படும். குரு வம்சம் என்பதும் இது தான்.

சித்தர்கள் சிவன் என்றது இறைவனில்லை சகதி என்றதும் இறைவி இல்லை. மாறாக பரம்பொருள் என்றது கூட இறைவன் இல்லை. இது தேடலின் போது நாமாக உணரவே முடியும். சரியான குருவாக இருந்தால் அதற்கான வழிகளை அவர் திடப்படுத்தி தருவார்.

“ நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்”

” தேடித் தேடொனா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் ”

“ உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற”

உண்மையைச் சொன்னால் யார் தான் நம்புகிறார்கள். நம்மைத்தான் பைத்தியம் என்கிறார்க்ள்... அதுவும் சித்தர் பைத்தியம் என்கிறார்கள்.

”போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானேன்”.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

1 comment:

  1. nantri nan kadaikalil kidaikum patharasathai kondu rasamani seithullen piragu enaku neram kidaikathathal athai seivathai niruthi vitten anal sila natkalaga lingathil irunthu seiya vendum endra asai athikamaga irunthathu athan karanamaga thedalin pothu indru ungalin pathivai kandu magilchi adainthen. muyarchi seithu parka vendum endru aval athigamaga ullathu thayavu seithu thangalin asivathathai alikumaru kettukolkiren nandri

    ReplyDelete