வணக்கம் தோழர்களே,
இது விவாதம் கிடையாது, ஓர் பகிர்வு..
சைவ, அசைவ உணவு பற்றி எந்த கருத்தும் எனக்கு இல்லை, மாறாக மோட்சம்
அடைவதற்கும், ஆன்மீக சிந்தனைக்கும், சைவ அசைவ உணவுக்கும் எந்த தொடர்பும்
இல்லை என்பது தான் நமது கருத்து.
நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள் அதற்கு இறைவனை காரணம் காட்ட வேண்டாம் என்று மட்டும் கூறுவேன்.
சித்தர்கள் தோன்றுவதில்லை கடுமையான பயிற்சிகள் மூலம் சித்தத்தை (சிவத்தை) உணருபவர்கள் அவர்கள்.
வள்ளலார் (இராமலிங்கம் )ஓரு சித்தர் கிடையாது, சித்தர்களின் பக்கத்து
வீட்டு நபர் கூடக் கிடையாது. அவர் ஓர் சமய சொற்பொழிவாளர், போதகாசிரியர்.
உரையாசிரியர். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. தந்தையை சிறு வயதில் இலந்த
அவர்களின் குடும்பம் சென்னை வந்து அங்கு அவரின் குடும்ப நிலைக்காக அண்ணன்
சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து பணம் சம்பாதித்தார் என்பது தான் உண்மை.
இவ்வாறு அண்ணனுடன் சொற்பொழிவுகளுக்கு போகும் போது ஆன்மீகத்தில் நாட்டம்
அதிகரித்து அதன் பின் பல ஆதினங்களிடம் சென்று படித்து அதன் வழி மக்களுக்கு
ஆன்மீகத்தையும் தருமத்தையும் செய்யலானார். வள்ளலார் ஓர் தூய்மையான மனிதர்.
இது தான் அவரின் வரலாறு.
சித்தர்கள் யோகிகள் வழியில் இப்படி
சாந்தலிங்க ராமசாமி போன்றவர்களை சேர்காவேண்டாம், ஒப்பிட்டு பார்ப்பதற்கு
ஓர் தகுதி உண்டு அல்லவா.. ! சொற்பொழிவு யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இங்கு நாம் பேசுவதும் எடுத்துச் செல்வதும் சித்தர்கள் என்ற சிவ
தொண்டர்களை, அவர்கள் ஆராய்ந்து சொன்ன உண்மைகளை. இவற்றுக்கு மத்தியில்
வியாபாரம் செய்யும் மத வாதிகளை அல்ல.
சைவ அசைவ உணவு பற்றிய
விழிப்புணர்வு என்ற ரீதியில் கடந்த நூற்றாண்டில் சமய ஆதீணங்கள் என்ற பேரில்
இருந்த ஆசாமிகளே காரணம். அவர்கள் ஆதீணத்துக்குள் என்ன செய்கிறார்கள் என்று
யாருக்கும் தெரியாது ஆனால் மற்றவர்களை வழினடத்துவதாக மட்டும் பேசுவார்கள்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களிடையே ஏற்பட்ட மாற்றம் இதனாலேயே வந்தது.
இறைவனை பற்றி தேவாரம் , திருவாசம், திரு இசைப்பா, பல்லாண்டு, என ஏன் இன்று எந்த ஆதீணத்தாலும் இயற்ற முடியவில்லை.
பண் பாடி தமிழ் வளர்த்த ஆதீணங்கள் இன்று ஆங்கிலத்தில் கருத்தரங்கு செய்வது
ஏன், வெளி நாட்டவருக்கு புரிவதற்காகவா, முதலில் உலகெங்கும் இருக்கும்
கோடான் கோடி தமிழருக்கு கருத்தரங்கு வைத்து ஆன்மீக பற்றி பேசுங்கள்,
பின்னர் வெளி நாட்டவருக்கும் வேறும் மதத்தாருக்கும் சமயம் கற்பிற்கலாம்.
வெளி நாட்டான் முன்னால் பண் பாடினால் பணம் கிடைக்கும், தமிழன் முன்னால் பண்
பாடினால் பரோட்டா கூட கிடைக்காது என்பதற்காவா..!
தங்களின்
வசதிக்கு ஏற்ப இறைவன், ஆன்மீகம் என்ற சொற்களை பயன்படுத்தும் மத வாதிகள்
யாராக இருந்தாலும் சரி, இறைவன் கல்லாக இருப்பதால் பேசவும் மாட்டாம்
கேட்டவும் மாட்டான் என்ற நம்பிக்கையில் உங்களை போன்ற அப்பாவி மக்களை
ஏமாற்றுவதை நீங்கள் உணரும் வரை, உண்மை புரியப்போவதில்லை.
நன்றி
வள்ளலார் (இராமலிங்கம் )ஓரு சித்தர் கிடையாது, சித்தர்களின் பக்கத்து வீட்டு நபர் கூடக் கிடையாது. அவர் ஓர் சமய சொற்பொழிவாளர், போதகாசிரியர். உரையாசிரியர். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.
ReplyDeleteமன்னிக்கவும் வல்லலை பற்றி பெசும் தகுதியே நமக்கு இல்லை.
வணக்கம் திரு. அறிவுஜீவி,
ReplyDeleteஒருவேலை வள்ளலார் பற்றி பேசும் தகுதி உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமக்கு நிச்சயம் உண்டு. நாம் இறைவனைப் பற்றியே பேசுகிறோம் அப்படி இருக்க இராமலிங்கம் அடிகளை பற்றி பேச என்ன தகுதி வேண்டும் என்று கூறுகிறீர்களா !.. மனித இயல்பு என்பது நமக்கு பற்றுதல் ஏற்பட்ட ஒருவரை பற்றிய உண்மைகளை எப்போதும் ஏற்க மனம் தயாராவதில்லை. இதனால் தான் போலிகளின் ஆதிக்கம் அதிகரித்து நமது சமயம் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறது.
நன்றி