வணக்கம் தோழர்களே,
புத்தாண்டில் ஓர் சிறப்பான இலகுவாக நடமுறை படுத்தக்கூடிய சித்தர்களின்
கற்பங்களிலும் ரசவாத கொள்கையிலும் பயன்படுத்தப்பட்ட ஓர் அற்புத மூலிகையை
பற்றி பார்ப்போம்..
பாடல்
“ செம்பான கருந்துளசி யிலையரைத்து
சிறப்பான பாக்களவு தேனிலுண்ணு
கம்பான காயம்தான் கல்தூணாகும்
கனமான மூச்சாடும் உள்ளுக்குள்ளே
வம்பான சுக்கிலந்தான் கீழோடாது
மதியென்ற சந்திரனில் வாசியூது
அம்பான அருவிபோல் அமுர்தந்தானும்
அண்ணாக்கில் விழுந்ததை அருந்துவாயே.”
விளக்கம் - எனது சிறு மூலைக்கு எட்டிய வரை...
செம்பின் தாது சக்தி கொண்ட கருந்துளசியை சிறப்பான இலைகளை கொண்டு வந்து
கல்வத்தில் அரைத்துருட்டி அதை கொட்டைப் பாக்கு அளவு (பாக்களவு தெரியாவிடில்
அரு நெல்லியின் அளவு எடுக்கலாம்) எடுத்து அதை தூய தேனில் குழைத்து
காலையில் மண்டலம் (கால அளவு) சாப்பிட்டு வர உடல் கல்தூண் போல் உருதியாகி
சுக்கிலம் கழிதமாகாது இருக்கும் அத்துடன் இந்த மருந்துண்ணும் காலத்தில்
வாசி யோகம் எனும் பிராணாயாம பயிற்சியை சந்திர கலையில் செய்யும் போது ஞானம்
என்ற அமுர்தம் கிடைக்கும் என்றும் அதை பேசும் போது நீ உணர்வாய் என்கிறார்
சித்தர் போகர்..
இதில் பாட்டில் இருக்கும் பரிபாசைகளை சற்று
விளக்கமாக கூறியதனால் பாட்டில் இல்லதவற்றை கூறுகிறார் என்று நினைக்க
வேண்டாம். ஒரு சொல் பல பொருள் என்ற அடிப்படை அதிகமாக இருப்பது சித்தர்
பாடல்களில் தான். இதை விட வேறு கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் உங்கள்
தளங்களில் பதிவிடுங்கள்...
எமது கருத்தை தான் எம்மால் இங்கு
பதிவிட முடியும்.. விருப்பம் உள்ளவர்களும், கருத்தின் உண்மையை ஆராய்ந்து
பார்க்ககூடியவருக்கும் புரிந்தால் போதும்.. விருப்பம் அற்றவர்கள்
தயக்கமின்றி வெளி நடப்பு செய்யலாம்..
நன்றி
நிங்க சரியாதநையே சொல்லுறிங்க. ஜயா. நால்பட்ட தீகாயத்திற்கு என்ன மருந்து பலதடவை கேட்டும் நிங்கள் ஏண் பதில் தரவில்லை நான் மிகவும் அவதிபடுகின்றன்
ReplyDelete