வணக்கம் தோழர்களே..,
இங்கு நாம்
யாரையும் வற்புருத்தி இதை இப்படி செய்யுக்கள் என்று கூறவில்லை.. என்பதை
முதலில் உணருங்கள்.. அத்துடன் நமது கருத்து சற்று கடிணமானதாகவே இருக்கும்
ஏனனில் இது உண்மை என்பதால் இலகுவில் ஜீரனிக்க முடியாது தான். ஆனால் பொருமையாக ஆய்வு செய்தால் மட்டுமே அதன் தத்துவம் புரியும்,..
அறியாமையில் இருக்கும், அத்துடன் ஒரு விடயத்தை கூறினால் அதை அப்படியே
நம்பிக்கொண்டு பின்பற்றும் அனைவருக்குமாக பதிவிட்டது, ஆனால் திரு
சோதிலிங்கம் அவர்கள் தான் கூறுவது தான் சரி என ஆரம்பித்ததாலும், பிற மதத்தை
சுட்டிக்காட்டி பேசியதாலும் அவரின் பெயரில் தொடரப்பட்டது.. தொடர்கிறது..
முதலில் இந்து தர்மத்தை நாம்
காப்பாற்றுவதாக இருந்தால் காக்கும் கடவுள் என நீங்கள் குறிப்பிடும் தெய்வம்
எதற்காக இருக்கவேண்டும்?
நாம் எந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம் என்றும் எந்த நிலைக்கு ஆளாகுவோம் என்ற கவலையும் உங்களுக்கு தேவையில்லை.
மற்றவரை பொய் சொல்ல வைக்காதே என்று கூறுகிறீர்கள் மகாபாரதம் எனும் நூலில்
கிருஸ்னர் என்பவர் செய்திருப்பது என்ன என்பதும் அவருக்கு சூழ்சியின் நாயகன்
என்ற பெயர் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா..
இங்கு மகாபாரதம் கற்காதவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அது நம்மிடம் பலிக்காது..
வள்ளுவர் சொன்னது என்ன பொய்மையை பற்றி, ஏன் நீங்கள் சொல்வது தான் என்ன....,
அடி முடி தேடியதில் இருந்து நீங்கள் கற்றது இறைவன் எங்கு பரந்திருக்கிறான்
என்று... அது உங்கள் புத்திக்கு எட்டியது அப்படியே.., ஆனால் அவர் சொன்னது
சொல்ல முட்பட்டது நான் வெளியில் இருந்தால் தானே நீ தேடமுடியும் என்பதை.
புராண இதிகாசங்கள் எமக்கும் கற்பிக்க பட்டிருக்கிறது.. அதன் உண்மை என்ன என்ற விளக்கத்துடன்.
மகாபாரதத்தில் அற்புதமான வாழ்கையை மட்டும் பார்ப்பது அது போல் வாழவேண்டும்
என்ற ஆசையின் நிமித்தம் ஆனால் அப்படி வாழ நினைத்து அவர்களுக்கு கிடைத்தது
என்ன என்பதை பார்க்க நீங்கள் மறந்தது உங்கள் அறியாமை.
அன்பை போதிக்கும் கீதையில் இரத்த வாடை எதற்காக...
உரிமைக்காக போர் செய் என்ற கூற்றை வைத்தே இன்று உலகம் முழுவதும் போர்
நடக்கிறது அப்படி என்றால் அதை ஊக்கிவித்த பெருமையும் கீதைக்கு தான்
உண்டு....
அன்புக்கு அடிமையாகப்போ என்றால் ஏன் குரு(தி)சேத்திரம்
நிகழ்ந்தது.. உண்மை எது பொய் எது என்பதை பகுத்து அறியவே இறைவன் மனிதனை
பகுத்தறிவுடம் படைத்திருக்கும் போது... அப்படி செய்யாதே சொன்னதை சொன்னபடி
நம்பு என்கிறீர்களா...?
அப்படி என்றால் இறைவனுக்கும் மனிதனுக்கும் தொடர்பே அற்று போகிறதே... பின்னர் ஏன் இந்த வாத விவாதங்கள்...
அவ்வையாரின் பாடலில் இருக்கும் இடைச்செருகளை பேசுகிறீர்கள் அது எனக்காகவே
இருக்கட்டும் கவலைப்படுபவன் நாம் கிடையாது. ஆனால் “கான மயில் ஆட கண்டிருந்த
வான்கோழி” ஏன் வான் கோழி ஆடக்கூடாதா.. ஆடினால் பூகம்பம் வந்துவிடுமா..
அல்லது ஆடல் மயிலுக்கு மட்டுமே சொந்தமானதா, உங்கள் கருத்துப்படி பார்த்தால்
பிரபுதேவா ஆடினால் அதை பார்த்து நாம் ஆடக்கூடாது என்பீர்கள் போல்
இருக்கே... இது எப்படி நியாயம். இயற்கையை இறைவன் சமச்சீராகவே
படைத்திருக்கிறான் இங்கு,, அதற்கு இரவும் பகலும் கூட சாட்சி... அப்படி
இருக்க குறிப்பிட்ட ஓர் விடயம் அவருக்கு மட்டுமே உரியது என்பது எப்படி
நியாயம்.. ஐன்ஸ்டன் அணு பிரிவை கண்டுபிடித்தால் அப்துல் கலாம் கண்டுபிடிக்க
வில்லையா.. நிங்கள் முயற்சி செய்வதில்லை என்பதற்கா முயற்சி செய்பவரை ஏன்
அவமதிக்கிறீர்கள்...
சித்தர்களை பற்றி கதைக்க நமக்கு தகுதி இல்லை
என்றால் எப்படி அவரிலும் மேலான இறைவனை பற்றி கதைக்க முடியும்,,.. யாருக்கு
கதை சொல்கிறீர்கள்.
இறைவனே கூறியிருக்கிறான் “ அடியாருக்கு யான்
அடியேன்” என்று இதுகூட தெரியவில்லையா... அப்படியே நீங்கள் கேட்ட
கேள்விக்கு பதில்,, நாயன்மார்களை பற்றி சேக்கிழார் பாட முடியுமாயின் ஏன்
அடியேன் சித்தர்களை பற்றி பேச இயலாது... அல்லது இறைவனைப் பற்றியே உங்களால்
பேச முடியுமாயின்... இறைவனின் அடியார்கள் பற்றி நாம் ஏன் பேச இயலாது....
பாடல்களை தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை, இறைவன்
உள்ளிருப்பவன் என்பதையே உணர்ந்து உணர்த்தியவர்களின் மாணவர்கள் நாம்,
அவனின்றி அணுவும் அசையாது என்பதை பேசுவதில்லை காட்டுபவர்களின் மாணவர்கள்
நாம்.. எமக்கு தேடல் ஒன்றே அது நமது மரணம் (சமாதி) எப்போது என்பது பற்றி
மட்டும்.. அதுவும் அவனிடத்தில் என்று காத்திருப்பவர்கள் நாங்கள்.
இந்து மதம் என்று பேசிய விவேகானந்தரை பின்பற்றியவர்களே யாரும் இன்று இல்லை
தெரியுமா உங்களுக்கு... ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளானாலும் சித்த்ர்களை மட்டும்
பின்பற்றுபவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள் காரணம், இறைவன் ஒன்றே என்ற
பின்பு மதம் என்பது எதற்காக.. அதனால் தான் சித்தர்கள் அனைத்து நாடுகளிலும்
அனைத்து மொழிகளிலும், அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.. உண்மையை
புரிவது பட்டம் பெற்றவர்களுக்கு கடினமாகவே இருக்கும்...
மதங்களை
கொச்சைப்படுத்த இங்கு நாம்மால் அல்ல எவறாலும் இயலாது.. அப்படி
நடந்திருந்தால் இன்று நமது மதங்களின் சுவடுகள் கூட இருந்திருக்காது... நாம்
அனைத்து மதங்களுக்கும் சொந்தக்காரர்கள்...
அத்துடன் கடைசியாக
குறிப்பிட்ட வாசகரின் கேள்விக்கு பதில் தருவது எமது விருப்பம்... முட்டை
பற்றியும் மாமிசம் பற்றியும் நாம் முன்னமே பதிவுகளில் தந்திருக்கிறோம்,
மேலும் விரும்பியதை உண்னுங்கள் அதற்கு இறைவனை காரணம் காட்டவேண்டாம் என்றும்
கூறிவிட்டோம் ஆகவே அதன் அர்தம் புரியும் படி தனியான பதிவு போடப்படும்..
ஆனால் அவருக்கு மறைத்து பேசுவது விரித்துபேசுவதும் எமது விருப்பம்...
தனியாக பதிவிட்டோம் என்று நாம் கூறவில்லையே...
கண்ணப்பர் போல்
செய்தால் தான் என்ன,, அதில் என்ன தவரு என்று கேட்கிறேன்.. பெண்னுடன்
எச்சிலை பறிமாற்றி பிறந்தவர்கள் தான் அனைவரும்.. படைத்தலையே எச்சிலுடனும்
தீட்டுடனும் தான் இறைவன் அருளிச்செய்திருக்கும் போது அதில் என்ன தவரு என்று
கேட்கிறேன்...
பேசுவதானால் பகுத்தாய்வு செய்து பேசுங்கள் அதற்காகவே இறைவன்
அறிவை அதிகமாக தந்திருக்கிறான்... புராண இதிகாசங்கள் மூலம் கூறப்பட்ட
விடயத்துக்கு அர்த்தம் நிச்சயம் உண்டு... அதன் இரு பக்கங்களையும் பகுத்து
ஆய்வு செய்தால் மட்டுமே அதன் அர்த்தம் புரியும்... நாம் சித்தாந்த கருத்து
பேசுவதில்லை... அது அனைவருக்கும் புரியும்,, மாறாக வேதாந்த கருத்தையே
பேசுகிறோம்... “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு” இது கீதைக்கும் சரி சித்தரியலுக்கும் சரி ஏன்
திருக்குறலுக்கும் சரி பொதுவானதே...
சிந்தியுங்கள்... அனைவரும்..
நன்றி
No comments:
Post a Comment