தமிழர் புத்தாண்டு சில தினங்களில் வர இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இன்று ஏதாவது ஒர் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தங்களது தேவைகளை நிரைவேற்ற காத்திருக்கும் சிலர் தமிழர் புத்தாண்டு சித்திரை மாதத்தில் வருவதல்ல மாறாக தை திரு நாள் தான் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு பல பிரச்சாரங்களில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு.
முதலில் தமிழ் புத்தாண்டை பற்றி விவாதம் செய்யும் அன்பர்களுக்கு சில கேள்வி, அதன் பின்னர் சிறு விளக்கம்.
கேள்வி.
தமிழர்களின் புத்தாண்டை பற்றியும் தமிழ் பற்றியும் கவலைப்பட்டு அதை வளர்க்க வேண்டும் என்று பாடு படும் எத்தனை பெயர் தமிழ் துறையில் தொழில் செய்கிறீர்கள் ?, எத்தனை பெயர் உங்கள் குழந்தைகளை தமிழில் கற்பிக்கிறீர்கள் ?, எத்தனை பெயர் தமிழ் மொழியை மட்டும் பேசுகிறீர்கள் ?, எத்தனை பெயர் தமிழர்களின் தமிழ் மொழி பேசும் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்?
எத்தனை பெயர் தமிழர் உணவை மட்டும் உண்ணுகிறீர்கள் ?,
இப்படி இன்னும் எத்தனை, எத்தனை என பல கேள்வி உண்டு.
பணத்துக்காக வேறு மொழியாலர்களிடம் கூலியாக வேலை செய்வதை நிருத்திவிட்டு சொந்த நாட்டுக்கு வந்து தொழில் செய்யுங்கள். அதுவே தமிழனின் பண்பையும் தமிழையும் வளர்க்கும்.
அதற்கும் மேலாக எத்தனை பெயர் தமிழர்கள் ஈழத்தில் படும் பாடுகளுக்காக குரல் கொடுத்தீர்கள் ?, அடுக்கு மாளிகைக்குள் சொகுசாக இருந்து வீன் விவாதம் பேசிப் பேசியே தமிழை கொன்றது போதும்.
முதலில் தமிழர்களை வாழ வையுங்கள் தமிழ் தானாகவே வளரும். அதை விடுத்து புத்தாண்டு எப்போது வந்தால் என்ன அல்லது வராவிட்டால் என்ன !
புத்தாண்டு வந்தால் கிடைக்கப்போவது அரச விடுமுறை (சில நாடுகளில் மட்டும்) மற்றும் புதிய துணிகள், சில இனிப்பு பண்டங்கள், உற்றார் உறவுகளோடு வேடிக்கை கொண்டாட்டம், சற்று அதிகமாக ஆலய வழிபாடு.
இத்தனை விடயங்களும் புத்தாண்டு வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி செய்யக்கூடியது தானே ! ஆகவே புத்தாண்டில் என்ன விசேடமாக நடக்கப்போகிறது. அல்லது நீங்கள் வேண்டாம் என்றால் அது நின்று விடப்போவதும் இல்லை. அவசரமாக கூப்பிட்டால் வரப்போவதும் இல்லை.
உங்கள் வசதிகளுக்கு ஏற்ப அதை சரி செய்ய பார்கிறீர்கள். அன்று ஆரியர்கள் மாற்றியதாக கூறும் நீங்கள் இன்று அதே விடயத்தை தானே செய்ய முனைகிறீர்கள். பின்னர் ஏன் அவர்கள் செய்தது என்று நீங்கள் நினைக்கும் குற்றஞ்சாட்டும் விடயத்தை பற்றி பேசுகிறீர்கள்.
ஆரியர்கள், திராவிடர்கள் இருவரும் மனிதர்களே, என்ற உணர்வு மட்டும் நமக்கு ஏன் வருவதில்லை.
ஆரியர்கள் வேதங்கள் முதல் ஆகம உப நிடதங்கள் என இன்று இருக்கும் வழிபாடுகள் வரை தங்களது தேவைக்காக அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டார்கள் என்று பேசுகிறோம் அல்லவா, அதற்கான காரணத்தை சற்று உற்று நோக்கினால் போதும், உண்மை தெளிவாக புரிந்துவிடும்.
அவர்களுக்கு திராவிடர்கள் மீதும் திராவிடர்களின் இறைவழிபாடு பற்றியும் அதன் உண்மைத்தன்மையும் கண்டு தமிழர்கள் மீது பயம் ஏற்பட்டு, தமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்து இப்படி பல காரியங்களை செய்திருக்கலாம் அல்லவா !
எது எப்படி இருந்தாலும் இத்தனை யுகங்கள் கடந்தும் நாங்கள் (தமிழர்கள்) சிறப்பாகவே முடிந்த வரை வாழ்கிறோம். இது இறைவனின் ஆணை அல்லவா, எத்தனை படையெடுப்புக்கள் வந்தாலும் சரி நாங்கள் சலைக்கவில்லை அல்லவா, அப்படி இருக்க மற்றவர்கள் பற்றிய பேச்சு நமக்கு எதற்கு.
உலகில் எந்த மொழிக்கும், எந்த சமயத்துக்கும் இல்லாத பண்பு தமிழுக்கு மட்டும் உண்டு அது விரோதியாக இருந்தாலும் அவரை பண்போடு அழைத்து விருந்தோம்பல் செய்வது. விரோதி ஆரியராக இருந்தால் என்ன பூரியராக இருந்தால் என்ன, நமது பண்பு தான் முக்கியம் அல்லவா.
அதற்கும் மேலாக அவர்கள் நம் நாட்டிலேயே பிறந்தவர்கள் நமது சகோதரர்கள் அல்லவா, பிற மதத்தவரையே சகோதரனாக பார்க்கும் நமக்கு நம்முடம் கூடப்பிறந்த சகோதரரை ஏன் தப்பாக பார்க்க வேண்டும்.
இப்படி பேசுவதனால் அடியேன் ஆரியருக்கு பறிந்து பேசுகிறேன் என்று நினைத்தாலோ அல்லது தமிழில் பற்று இல்லாதவர் என்றோ நினைத்தால் அது உங்களின் விருப்பம்.
மேலும் தமிழ் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாடுகிறார்களென்றால் அதற்கான காரணம் தெரியவேண்டுமானால் காலத்தை பற்றி சிவன் பார்வதிக்கு என்ன சொல்கிறார் என்று தெரிய வேண்டும்.. அது பின் வருமாறு..
கேளும் பார்வதி:
காலமென்பது ஆகாயத்தைபோல் அகண்டமான ஓர் விடயம், அளவின்றி பெருகிவருகின்ற ஓர் பேராற்றிக்கு துறைகளில்லாவிடில் அது எப்படி பயன் படாதுபோகுமோ, இக்காலமும் இதேபோல்தான் அதன் பயன்பாட்டுக்காகவே அதற்கு வரைவுண்டாக்கப்பட்டது.
சூரியன் முதல் சனிவரை உள்ள கிரகங்கள் படைப்புக்காலம் போல மறுபடியும் மேடராசியில் சரியாய்சேருங்காலத்தை யுகமென்று வரைவிட்டனர். அதன் தொகை நாற்பத்துமூன்று லட்சத்து இருபதினாயிரம்.
இதனை பத்துபங்காக்கி முதல் யுகமாகிய கிருதயுகத்திற்கு நான்குபங்கும், இரண்டாவது திரேதயுகத்திற்கு மூன்று பங்கும், மூன்றாவது துவாபரயுகத்துக்கு இரண்டு பங்கும் கடைசியான கலியுகத்துக்கு ஒரு பங்கும் என பிரித்தனர், ஏன் இப்படி பிரித்தனர் என்றால் தருமமானது அந்தந்த காலத்தில் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என நடப்பதால்.
சனிக்கு காகோளமண்டலத்தை சுற்றிவர ஏறக்குறைய முப்பது வருடமும், குருவுக்கு 12 வருடமும், அங்காரகனுக்கு 18 மாதமும், சூரியனுக்கு ஒரு வருடமும், புதன் சுக்கிரன் இவர்களுக்கு முறையே 4, 3 மாதங்களும், சந்திரன் 27 1/2 நாளும் செல்கின்றமையாலும் இக்கிரங்களின் மத்திமகதியின் சிறுகுணனம் அறுபது வருடமாவதால், இந்த அறுபது வருடம் ஒரு சக்கரம் என்று ஏற்படுத்தினர்.
வருடமாவது சூரிய இயக்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது இது சௌரவருடம் என கூறப்பட்டது. இதனால் சூரியன் ஒரு ராசியிக் இருந்து மற்ற ராசிக்கு போகும் காலம் மாதம் என கணக்கெடுத்தனர்.
இப்படி மாதங்கள் முறைப்படி அந்தந்த ராசிக்கு சூரியன் வரும் நாட்கள் அமைக்கப்பட்டன. சித்திரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி எந்த மாதத்தில் வருகிறதோ அது “சைத்திரம்” சித்திரை என பெயர் பெற்றது.
பிரபஞ்ச செயற்பாடையும் காலக்கணக்கையும் ராசிகளை வைத்தே பிரிப்பதனாலும் ராசிச்சக்கரத்தில் முதலாவதாக குறிக்கப்படுவது மேச ராசி என்பதாலும், சௌரவருடம் (சூரிய வருடம்) சூரியனையே வைத்து கணிக்கப்படுவதலும், சூரியன் மேச ராசிக்கு வரும் நாள் இந்துக்களின் புத்தாண்டாக கருதப்பட்டு வழிபடலாயிட்டு.
------------------------------
இதில் நாம் கவலைப்படுவது வடமொழிப்பெயர் மாற்றம் பெற்றது என்றால் இன்று நமது குழந்தைகளுக்கு புதுசு புதுசாக பெயர்களை தேடுவது மட்டும் சரியானதாகுமா.. !
இதில் நாட்கள், வாரம், மாதம், வருடம் என பல விடயங்கள் சித்தர்களால் கூட கூறப்பட்டு வந்திருக்கிறது.
அதிலும் மேலாக தமிழுக்கு இலக்கணம் செய்த அகத்தியரே புத்தாண்டை பற்றி கவலைப்படவில்லை. நமக்கு மட்டும் என்ன கவலை. அப்படி கவலைப்படுவதாக இருந்தால் அது நிச்சயமாக உங்கள் சுய நல தேவைக்காக மட்டுமே என்பது தெட்ட தெளிவு.
தமிழ் வளர்த்த அவ்வை, வள்ளுவன், நாயன்மார்கள், சித்தர்கள் படாத கவலை, அவர்கள் வளர்க்காத தமிழா நீங்கள் வளர்க்க ஆசைப்படுவது.
அனைத்துக்கும் மேலாக பணத்துக்காக வேறு மொழிகளுடன் சிரித்து பேசும் நாம் தமிழைப்பற்றி பேசுவது வெட்கப்படவேண்டியது தான்.
ஒரு வேலை இதை விவேகானந்தர் பேசியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும், ஏனனில் அவர் தமிழர் என்பதை நிரூபித்தவர்.
தமிழை வளர்ப்பதை விட்டு, தமிழர்களை வாழ வழி செய்யுங்கள். தமிழ் தானாகவே வளரும்.
இது தொடர்பான கால வாய்ப்பாடு மேலும் விபரமாக பதிவில் வரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்றாலே அதன அர்த்தம் “ தமிழே போற்றி என்பது”
இந்த பரிபாசை கூட புரியாத தமிழ் நெஞ்சங்கள் தமிழர் புத்தாண்டை பற்றிய விவாதத்தை விரட்டி விட்டு வர இருக்கும் புத்தாண்டில் தமிழருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி சிந்தித்து அதன் படி நல்ல விடயங்களை நமது குழந்தைகளுக்கு புகட்டுங்கள்.
தமிழ் வளர்த்த விவேகானந்தரே கூறியது
“ மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”
அவர் தமிழ் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறவில்லை என்பதையும் சிந்தியுங்கள்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.
வாழ்க தமிழர்
No comments:
Post a Comment