வணக்கம் தோழர்களே மற்றும் மாணவர்களே,
எமது இந்திய பயனம் எதிர்வரும் 5ம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது எனபதை மகிழ்ச்சியோடு தெரிவிற்கிறேன்.
எம்மை சந்திக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ உதவியை எதிர்பார்க்கும் தோழர் தோழிகள் எம்மை மின்னஞ்சல்
மூலம் தொடர்பு கொண்டால், எமது தொலைபேசி இலக்கம் கிடைக்கும் அதன் மூலம்
எங்கு எப்படி நம்மை சந்திக்கலாம் என்ற தகவல் கிடைக்கும்.
நமது
ஆய்வுக்கான பயனம் இது என்பதால் குறிப்பிட்ட சில தினங்களே உங்களை சந்திக்க
முடியும் என்பதால் தேவை இருப்பின் குறிப்பிட்ட தினத்தில் நம்மை
சந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள், தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்து
எம்மையும் உங்களையும் சிறமத்துக்கு தல்லவேண்டாம்.
ஆகவே முன்கூட்டியே அனுமதி பெருபவர்களை மட்டுமே சந்திப்பதாக இருப்பதால் உண்மையான தேவை இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
muthaly@gmail.com
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Saturday, May 31, 2014
Friday, May 30, 2014
தாதுக்கள் கெடுதல்
வணக்கம் தோழர்களே,
இன்றும் ஓர் மிக இரகசியமான மருத்துவ முறையை செய்ய ஆரம்பித்த போது எடுத்த படங்கள் இது.
உடல் தாதுக்கள் கெட்டு பிண்டத்தில் அக்கினி அதிகரித்து அதன் காரணமாக முக்குற்றம் எனப்படும் வாத பித்த கபங்களின் செயற்பாடுகள் மாற்றமடைந்து உடலின் பலம் கெட்டு பல வித ரோககங்களை ஏற்படுத்தும். இதனால் உடல் சோர்வடைந்து அளவுக்கு மீறிய எடை குறைந்து தீர்வற்ற பல உடல் உருப்புக்களை செயலிலக்க வைக்கும். அதிலும் மேலாக குருதியின் வெண் சிறு துணிக்கைகள் மிக குறைவடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலமிலக்க செய்யும்.
இப்படி உடல் தாது வர்கத்தின் தாக்கம் என்ன என்று சரியாக புரியாமல் பல மருந்துகளையும் எடுப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கான சரியான காரணங்கள் கிடையாது தீர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மொத்தமாக 64 வகையான சரக்குகள் சேர்கின்றன. இங்கு குறிப்பிடத்தக்க முக்கியமான மூலிகைகள் மற்றும் பாஷானங்கள் படமாக தரப்படவில்லை.

மதன சுந்தரி இலேகியம்
வணக்கம் தோழர்களே,
தாது வலுவுக்கான மருந்துகள் பற்றிய காட்சிகள் முன்னர் தரப்பட்டது அதன் ஒரு பகுதியான மருந்துகளை பிரித்து “ மதன சுந்தரி” எனும் பாரம்பரிய இலேகியம் ஒன்றை தயாரித்த போது எடுத்த படம் இது.
(இது நாம் உண்பதற்காக என்று வைத்துக் கொள்ளுங்கள்)
அது என்ன “மதன சுந்தரி” மன்மதனின் மனைவியர் ஒருவரின் பெயர் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உடல் சூட்டை கட்டுப்படுத்தி நாபிக்கமலம் வழியே ஏற்படும் தாது உபாதைகளை தீர்க்கவல்லது. அத்துடன் முருகவேல் எனும் அழகுக் கடவுளின் தேகத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை (அனுபவ உண்மை) மேலும் இதை பெண்களுக்கு என சில மூலிகை சரக்குகளை மேன்படுத்தி மண்டலம் உண்டால் கிழவியும் குமரியே ( உடல் சதை தொகுதி இருகி மீண்டும் குமரியாவாள்) என்பதிலும் மாற்றம் இல்லை. அத்துடன் குழந்தை இன்மை என்ற பெண்களின் ஆறு உடல் பிரசினையில் குறிப்பிடும் படியான மூன்று வகையான பிரச்சினைகளுக்கு இது சரியான தீர்வாக நாம் கையாண்டு வந்திருக்கிறோம்.
காய கற்ப மருந்துகளின் வகையைச் சேர்ந்த இது பாரம்பரிய முறையாக கைகண்ட மருந்தாக உபோயாகப்படுகிறது.
சுமார் 64 வகைக்கு மேல் மூலிகை சரக்குகள், இரண்டு விதமான பற்பங்கள், அத்துடன் சிறு தேன், வென் பசுவின் நெய் என தேடி தேடி தேர்வு செய்யப்பட்ட முறைகளை கொண்டு மட்டுமே இதை செய்ய முடியும்.

Monday, May 26, 2014
கொலஸ்ட்ரால் மற்றும் இதயக் கோளாறு
வணக்கம் தோழர்களே,
காலையில் இதய நோயாளிக்கு தேவையான சூரணம் ஒன்றை தயார் செய்த படங்கள்.
இம் மருந்து கொலஸ்ட்ரால் பாதிப்பால் குருதி நாலங்க சுருங்கி மூர்சை ஏற்படுதலை சீர் செய்யும், அதாவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு படிமங்களை அகற்றி சுவாச நிலையை துரிதப்படுத்தும். அத்துடன் நுரையீரலையும் சுத்தி செய்யும்.
இதன் முக்கிய விளைவாக குருதி தனது நீரியல் தன்மையை துரிதப்படுத்தி வேகமாக இதய நாலங்கலிள் பயனிக்கும். மேலும் குருதி சிறு துணிக்கைகள் புத்துணர்வு பெற்று நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்கி செயற்படும்.
உங்கள் நோய்களை சொல்லி மருந்துகளை கேட்க வேண்டாம், முறையான பரிசீலனை செய்யாமல் மருந்துகள் ஆலோசனை செய்வது (குறிப்பிட்ட நோய்க்கான) மிக தவறானது. எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எமது சென்னை பயனத்தில் சந்திப்பதற்கு அனுமதிகளை பெற்றால், முடிந்த வரை உதவி செய்கிறேன்.
இதில் சில முக்கிய (இரகசிய) மூலிகைகள் படமாக்கப் படவில்லை. காரணம் படம் பார்த்து வியாபாரம் செய்யும் அன்பர்களும் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

Sunday, May 25, 2014
மதுமேகம், எழும்புருக்கி
வணக்கம் தோழர்களே,
இரண்டு நாட்களாக மருத்துவ வேலைகள் அதிகமாக இருந்தமையால் பதிவுகள் தரவில்லை.
இது மதுமேகத்துடன் கூடிய இரத்த நாலங்களில் இருக்கும் அடைப்புக்களை நீக்கி உடல் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி உடல் சீராக இருக்க பயன்படுத்தும் ஓர் பாரம்பரிய சூரணம்.
இதில் இரச பற்பம் 10 : 1 என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகிறது.
மதுமேகத்தின் விளைவாக ஏற்படும் இரத்த நாலங்களின் அடைப்புக்களுக்கு அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தில் சரியான தீர்வுகள் இல்லாத காரணங்களால் நோயாளர்களின் கால் கை போன்ற உருப்புக்கள் துண்டிக்கப்படுகின்றன.
ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கான பல தீர்வுகள் உண்டு, நோயாளியின் நாடி நிலையை சரியாக கணித்து, அவரின் சலம் மற்றும் குருதியை சித்த மருத்துவ முறையில் சோதித்து அதற்கேற்ப சரியான மருந்துகளை கொடுத்தால் நிச்சயமாக மதுமேகத்தை அதனுடன் கூடிய நீரழிவு, எழும்புருக்கி, குருதிஅனல், நேத்திர ரோகம் போன்றவை நீங்கும்.

Friday, May 23, 2014
சத்திசுர குடி நீர்
வணக்கம் தோழர்களே,
இன்னும் ஓர் மருத்துவ பகிர்வு.. இதில் எழுதி இருப்பதை கூறுங்கள் பார்க்களாம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
இன்னும் ஓர் மருத்துவ பகிர்வு.. இதில் எழுதி இருப்பதை கூறுங்கள் பார்க்களாம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
வயிற்றுக்கடுப்பு
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மருத்துவக் குறிப்பு உங்கள் குழந்தைகளுக்காக..
கண்டத்தையும் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக்கடுப்பு தீர மிக இலகுவான பாரம்பரிய கைகண்ட மருந்து (குடி நீர்) இது.
ஓமம். நாவல் மரத்துளிர் இரண்டையும் சரி எடையாக எடுத்து சிறு தீயில் வறுத்து, சுத்த சலம் விட்டு எட்டு ஒன்றாய் காய்ச்சி கொடுக்க சில நிமிடங்களில் வயிற்றுக் கடுப்பு பஞ்சாய் பறக்கும்.

சிகப்புடுத்தி காட்சி
வணக்கம் தோழர்களே,
கலையில் அம்பாலின் அபிஷேகத்தின் பின்னர் சிகப்புடுத்தி காட்சி..
” உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”
” நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே “

Monday, May 19, 2014
பிரமச்சரியம் .,,,
வணக்கம் தோழர்களே,
இந்த (இந்து) சமய மேதாவிகள் சாமியார்கள் என்ன சொல்றாங்க என்னே புரியமாட்டேங்குது. எனது புலம்பல், யாரையும் குறிப்பிடவில்லை.
முக நூலில் இணையத்தளத்தில் பரவலாக பேசப்படும் போதிக்கப்படும் விடயங்களில் இந்த சைவ அசைவ கோட்பாடு மிக கடுமையாக இருக்குது. அதிலும் பிரமச்சரியம் ஒருபக்கம்.
முக்திக்கு வழி என்ற பெயரில் நடப்பது என்ன என்ற தெளிவுகூட இல்லாமல் மக்கள் பணத்தை செலவு செய்து பாவத்தையே பாக்கியமாக பெருகிறார்கள் போல இருக்கு.
இந்த சைவம் அசைவம் இரண்டையும் பற்றி பேசி முக்திக்கு வழி காட்டும் வாதிகளிடம் ஒரு சிறு கேள்வி.
” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் “
இப்ப சிவபுராணத்தின் படி ஒரு ஆத்மா இத்தனை பிறவிகளை எடுக்கிறது என்று கூறப்படுகிறது அல்லவா..! இதன் படி மிருகமாக அசுரராக பாம்பாக பறவையாக பல பிறவிகளை எடுக்கும் போது இந்த அதே ஆத்மா எவற்றை எல்லாம் சாப்பிட்டிருக்கும். அப்படி கண்டதையும் சாப்பிட்ட அதே ஆத்மா தானே முக்தியையும் அடைய பாடுபடுகிறது. இப்படி இருக்க சைவ அசைவ விடயம் ஒன்று எப்படி முக்தியை தடுக்க முடியும். இதில் சைவ அசைவம் என்றாலே என்ன என்று இங்கு யாருக்கும் தெரியாது அது அப்படி இருக்க, இந்த சைவ அசைவ கேட்பாடுகளை கூறும், கூறியதாக கட்டப்படும் கதைகளின் அர்த்தம் என்ன.! (வியாபாரம்..!)
அப்படியே பிரம்மச்சரியம் காக்க வேண்டுமாம், விந்து கழிதமாகதவனே முக்தியை அடைவானாம், யோகம் கிட்டுமாம், ஞானம் கிடைக்குமாம், மந்திரம் சித்தியாகுமாம் இப்படி பல புரட்டுகள் வேறு. ஏங்க உங்க அம்மா அப்பா இணைந்ததால் தான் நீங்களே வந்தீங்க, இல்லேன்னா நீங்களே இல்ல, அப்படி இருக்க விந்து விடக்கூடாது பிரமச்சரியம் காக்கனும் என்றால் எப்படி சாத்தியம். சரி அதையும் விடுவோம்..... படைத்தலின் அடிப்படையே விந்தில் தானே இருக்கிறது, நீங்கள் விந்தை விடவில்லை என்றால் இறைவனின் தத்துவத்துக்கெ முறனானவராக மாறுகிறீர்கள், அப்புரம் எப்படி இறைவனை நோக்கி முத்தியை அடைவது.
பிறப்பு இல்லை என்றால் யாருங்க சமயத்தை வளர்ப்பது. பிறப்பு இல்லை என்றால் யாருங்க வரலாற்றில் உங்கள் பெயரை முக்தியடைந்தவர் இவர் என்று பதிவு செய்வது. பிறப்பில்லை என்றால் எப்படி பிரபஞ்சம் இயங்குவது, பிறப்பில்லை என்றால் யாருக்காக இறைவன் தேவைப்படுகிறான். பிறப்பில்லை என்றால் ஏனுங்க இந்த வரலாற்று சுவடுகள் நமக்கு..
விந்து என்ற சொலுக்கான பொருள் என்ன என்று தெரியாதவர் எல்லாம் சமய வாதிகள் சாமியார்கள், ஆதீனாதி பதிகள். தமிழ் அகராதியையும் நிகண்டையும் எடுத்து வைத்துக்கொண்டு பொருள் தேடும், பொருள் கூறுவதும் ஞானம் அல்ல. அதை குழந்தை கூட சொல்லும்.
ஏங்க காவி அல்லது வெள்ளை கட்டிக்கொண்டு உலக வாழ்கையை விட்டு வெளியேறினால் முக்தி கிடைக்கும் என்று யாருங்க கண்டுபிடிச்சது. அல்லது அவங்க சொன்னது சொல்றது எல்லாம் சரி என்று எந்த ஆய்வும் செய்யாமல் எப்படி இங்க நம்புகிறீங்க..!
உங்கள் வீடுகளில் இருக்கு சாமிப்படங்களில் எத்தனை சாமிகள் காவியும் வெள்ளையும் உடுத்து உலக வாழகைக்கு உட்படாமல் இருக்கு என்று பாக்க மாட்டீங்கலா..! அல்லது வெறும் படம் என்றால் ஏங்க வீட்டில் வைத்து பூசை செய்றீங்க..!
அன்றைய காலகட்டத்தில் முனிவர், சித்தர், ஞானியர், என அவர்கள் காடுகளில் இருந்தார்கள் என்றால் அதற்கான காரணத்தை சரியாக ஆய்வு செய்ய வேண்டும், அதை விட்டு அவர்கள் உலக வாழ்கையை வெறுத்து காடு சென்றனர் என்றும், பிரமச்சரியம் காத்தனர் என்றும், சன்னியாசம் பூண்டனர் என்றும் கூறுவது அறியாமையின் வெளிப்பாடே..!
இந்த ஆச்சி(ரமம்) என்ற பெயரில் பணம் சம்பாதிக்க சமயத்தையும் இறைவனையும் மக்களையும் ஏமாற்றாமல் இருந்தாலே முக்தி கிடைக்கும்.
இது எனது தனிக்கருத்து, தவறு என்று உணரும் அன்பு நெஞ்சங்கள் தடை இன்றி எனது முக நூலை விட்டு வெளியேறலாம், அதை விட்டு வாதம் செய்ய முட்பட்டு விதண்டாவாதம் செய்வதாக நம்மை பேசினால், தண்டனை உடன் கிடைக்கும் (அது தாங்க நண்பரில் இருந்து நீக்கம்) செய்யப்படுவீர்கள். உங்கள் கருத்தை உங்கள் முக நூலில் பதிவிடுங்கள். சாட்சிகளுடன் பேசுங்கள் ஆய்வு செய்வோம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோமுதலியார்

Friday, May 16, 2014
துவாலை மறிக்க பெண்களுக்கு
வணக்கம் தோழர்களே,
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓர் மாந்திரீகப் பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி, ஆனால் மற்றவர்கள் தங்கள் தளங்களில் போட்டு கூறி விற்காவிட்டால் போதும்.
இது பெண்களுக்கு மிக அவசியமான ஓர் பதிவாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.
துவாலை மறிக்க என்ற பெயரிடப்பட்ட மந்திரிக வரிசையில் இலகுவான முறை இது. அதாவது துவாலை என்பது பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் பெருக்கை குறிக்கும். தொடர்ச்சியான உதிரப் பெருக்கு ஏற்பட்டு பெண்கள் அதிக சோர்வடைவதால் பல உடல் மன உபாதைகள் ஏற்பட்டு மிகவும் வருந்தியவன்னம் இருப்பார்கள். அவர்கள் தாங்களே இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டு பயன்படுத்த முடியும்.
மந்திரம்
ஓம் பஞ்சமாயோகி பாதாளயோகி பரமசிவனே பாரச்சட்டி என்முகம் இறங்காதே, நில்லடி அம்மே திரிமுடி காளி திருவசம் பற்றாதே தறியடி தம்போதறி சுவாக..
கிரிகை.
ஒரு சிறு கலசத்தில் கை படாமல் சுத்த சலம் எடுத்து அதில் சற்று விபூதி தூவி இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அருந்தினால் துவாலை கட்டும்.
மந்திரத்தை சித்தி செய்ய..
தினம் 108 வீதம் 7 நாட்கள் உருச் செய்யவும். பின்னர் தேவையானவருக்கு சலம் உரு செய்து கொடுக்கலாம்.

கொல்லிமலையில் பூசை
வணக்கம் தோழர்களே,
கடந்த பவுர்ணமி தினத்தில் எமது பிரதான மாணவர்கள் கொல்லிமலையில் பூசை செய்த போது.
நாம் எங்கிருந்தாலும் எமது ஆசிகளும், இறைவனின் ஆசிகளும் எப்போதும் கிடைக்கும்.
” முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே “
நன்றி
சிவஸ்ரீ மா. கோ முதலியார்

Wednesday, May 14, 2014
முப்பூ பற்றிய சில விளக்கம்.
வணக்கம் தோழர்களே,
முப்பு பற்றிய இன்னும் ஓர் சித்தர் பாடல் வரிகளை கவனியுங்கள். ஞானம் வேண்டுமானால் வாதம் கிடைக்கவேண்டும், வாதம் செய்ய நாதம் விந்து வேண்டும், நாதம் விந்து கிடைக்க முப்பூ என்னும் அப்பு ஆகிய பூதம் வேண்டும்.
(ரச)வாதம் என்றால் தங்கம் செய்வது என்று மட்டும் அர்த்தம் கிடையாது என்பதை சரியாக உணராதவரை வேதியல் என கூறப்படும் ரசவாத தத்துவத்தை புரிவது கடினமாகவே இருக்கும்.
பாடல்.
முப்பூ வென்பதிதுகா ணுமிதை
முத்திய தாகவே சத்தியமாய்
அப்புவி நீரை யரிந்தாலேவாதம்
ஆகுமே பாரடி ஞானப்பெண்ணே
நாகமென்றதோர் சரக்கு உப்புநல்ல
நாதாந்த வீரமும் தானுமுப்பு
போகமான ரசமும் உப்புயிது
போக்கோடே இம்மூன்றும் சேர்ந்ததாலே
சத்தியமாகவே முப்பூக் குருவாகும்
சக்தி சரக்கெல்லாம் கட்டிவிடும்
முத்தியதாகவே வேதை யாகுமிது
முக்கிய மாகுமே ஞானப்பெண்ணே
---------------------------------------------------------------------
வாதம்செய்கிறேன் என்றுசொல்லி பணம்
வாகாகத் தானே செலவுசெய்து
பேதக மாகவே பித்தலாட்டம்பண்ணி
பிதற்றித் திரிவா ருலகுதன்னில்
நாதத்தில் வாதமிருக்குதென் றேசொல்லி
நாடியே பெண்ணை துடர்ந்துசென்று
போதமதாகவே நாதம் பிடித்துமே
பொல்லாத புத்தியாய் தானலைந்து
வாதைப்பட்டு அதைதான் முறிந்துகொண்டு
வாகாய் சரக்கில் சுருக்குமிட
போதைமயக்கத்தால் கெட்டலைந்து பின்பு
போக்கோடே செம்பில் கொடுத்தெடுத்து
கரியதாக எடுத்தெரிந்து கெட்டு
கள்ளரைப் போல முழிமுழித்து
துரியமாகவே ஞானம்வந்த் தால்வாதம்
தும்பரமாக வருகு மென்று
----------------------------------------------
நெல்லுப்பயிர்கள் விளையவே தாந்தண்ணீர்
நிச்சய மாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்ததைபோலவே
புத்தி யுமான ரசவாதம்
நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுயிது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக்கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தி யில்லாதோர் வாதிகளே
வாதிக ளென்றுமே பேர்படைத்து ரச
வாதத்தை சுட்டு கரியாக்கி
நீதியில்லாமலே பொய்கள் சொன்னால்கரு
நிலைக்கு மோசொல்லும் ஞானப்பெண்ணே.
என்ன அழகான வரிகள், படிக்கும் போதே மெய் சிலிர்த்து பரமனின் பிரபஞ்ச வித்தையை என்னி மனம் பிதற்றுகிறது.
இதை தான் மாணிக்கவாச நாயனார் சிவபுராணத்தில்
“ஊற்றான உண்ணர் அமுதே உடையானே”
என்றும்
“கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே”
என்றும்
சிவமாகிய அகாரத்தை, விந்தை, சாரத்தை, பழச்சாற்றை, கற்பத்தை, அமுர்தத்தை புகழ்ந்து பாடுகிறார்.
இதையே அபிராமிப்பட்டர் தமது அந்தாதியில் இவ்வாறு பாடுகிறார்
”அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை, செப்புஉரை செய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரிபாதம் என் சென்னியதே. ”
அதை மீண்டும் உணர்த்துகிறார் பாருங்கள்
“கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
மீண்டும் படுகிறார்
“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”
பாடல்களில் இருக்கும் பரிபாஷையை புரிவது சற்று கடினமாகவே இருக்கும், அதை புறக்கண்ணால் பார்த்தால் தோன்றாது உண்மை.
இதையே அவ்வை பாட்டி வினாயகர் அகவலில் பாடுகிறார் பாருங்கள்
” குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென “
மேலும்
” அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி “
எந்த பாடல்களையும் மேலோட்டமாக பார்த்தால் அதன் உண்மை புரியாது என்பதை உணர்ந்து ஆய்வு செய்யின், நாமும் பரம்பொருள் பற்றிய சரியான விளக்கத்தை உணரமுடியும்.

Sunday, May 11, 2014
ஆறாத புண்களுக்கு இது
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மருத்துவ பதிவு, ஆறாத புண்களுக்கு இது. எமது பிலாக்கில் ஒரு நண்பர் தனது தாய்க்கு தீக்காயம் வணந்து முதுகுப் பகுதியில் இருக்கும் சில புண்கள் ஆறாத நிலையில் இருக்கு என்ற கேட்டிறுந்தார், அவருக்கும், பலருக்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன்.
சரக்கு வகை சம அளவு எடுக்கவும்
நீர்ப் பூளா வேர்
நுணா இலை
கைப்பு
களிப்பாக்கு
வேம்பாடல்
செஞ்சந்தனம்
சாத்திரபேதி
பீணாறிக்கட்டை
கருஞ்சீரகம்
நல்லெண்ணெய் - சரக்கின் மொத்த எடைக்கு மூன்று பங்கு
முறை
சரக்குகளை இடித்து துவைத்து, எண்ணெய்யில் போட்டு சிறு தீயாக காய்ச்சி இரண்டு நாள் ஊரவிட்டு பின் வடித்து பத்திரப்படுத்தவும்.
தேவையான போது புண்களின் மேல் போட்டு தூய்மையான வெள்ளை துணியால் மூடவும்.
எந்தப்புண்ணும் மாறும்.

எமது குருகுல திட்டம் நன்றே ஆரம்பமானது
வணக்கம் தோழர்களே,
எமது தமிழக பயனத்தை நன்றே முடித்துவிட்டு நாடு திரும்பியாயிற்று. இந்த பயனத்தில் எம்முடன் இனைந்திருந்த நல் இதயங்களுக்கு நன்றி.
எமது குருகுல திட்டம் நன்றே ஆரம்பமானது, குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே இம்முறை தெரிவுசெய்திருந்தோம். இனி வரும் காலங்களில் உண்மையை தேடும் இதயங்களுக்கு ஓர் வழிகாட்டலாக இயன்றவரை எனது குருகுலம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குருகுலம் என்றால் தமிழகத்தில் தற்போது இருக்கும் வியாபாரம் அல்ல என்பது நம்மிடம் வந்த மாணவர்களுக்கு நன்றாக தெரியும்.
அதிக தகவல்கள் உங்களுடன் பகிர இருக்கிறேன் விரைவில்.
நன்றி
சிவஸ்ரீ மா.கோ. முதலியார்
சித்த வைத்தியர்

இந்த பயனம் நீண்ட பயனம்
வணக்கம் தோழர்களே,
“ பாரப்பா நால்வேதம் நாலுபாரு
பற்றாசை வைப்பதற்கோ பினையோகோடி
வீரப்பா ஒன்றொன்றுக் கொன்றைமாறி
வீணிலே யவர்பிழைக்க செய்தமார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார்காணார்
ஆரப்பா நிலைநிற்கப் போறாரையா
ஆச்சரியங் கோடியிலே ஒருவன்தானே”
பல இனையத்தளங்களில் சித்தர் பாடல் முதல் மருத்துவ குறிப்புக்களை பதிவிடும் பலரும் எதையும் செய்து காட்டுவதில்லை, காட்டவும் முடியாது ஏனனில் அது அவர்களுக்கு தெரியாது. யாதேனும் புத்தகத்தில் இருக்கும் விடயத்தை தங்களது என்று இனையத்தில் பதிவிடுவது மட்டுமே அவர்களால் முடிகிறது.
இவ்வாறான போலித்தன்மையை மாற்றி சரியான இறை அருள் இது தான் என்பதை சிலருக்காவது புரிய வைக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அதனால் தான் பேச்சில் மட்டும் இன்றி எமது செயலும் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆன்மீகம் என்பது மிகப் பெரிய விஞ்ஞானம் அதை நிரூபித்து காட்ட இயலாதவர்கள் விஞ்ஞானியாக இருக்க முடியாது ஆனால் இன்று இதுவே போலிகளுக்கு ஆதாரமாகி விட்டது. ஆன்மீகம் புரியாத விடயம் என்று கூறியே அதை வியாபாரமாக்கி விட்டார்கள்.
ஆன்மீகத்தை இறைவனை நிரூபிக்க முடியும் என்று மக்கள் உணர்ந்துவிட்டால் போலிகள் அழிந்துவிடும், அதுவே எமது நோக்கமும்.
இந்த பயனம் நீண்ட பயனம் இதில் பல தடைகள் சோதனைகள் இருக்கும் காரணம் சாதரன கல்விக்கே எத்தனை கஷ்டம் இருக்கும் போது மிகப்பெரிய விஞ்ஞானத்த கற்பது சாதாரனமாகுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்.
எமது மாணவர்கள் பலரும் இருந்த நிலை விட்டு உண்மையை உணர்ந்திருக்கிறார்கள், மாந்திரீகம் என்றால் என்ன என்பதை தாங்களே அனுபவித்தவர்கள், மனதில் அமைதியை பெற்றிருக்கிறார்கள், இறைவனை எங்கு காணமுடியும் என்பதை புரிந்தவர்கள், அதற்கான பயிற்சியில் இருக்கிறார்கள், விரைவில் விஞ்ஞானியாவார்கள்.
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அஷ்டகர்மத்தை கற்பிக்கும் திறமை நம்மிடம் இல்லை, ஏனனில் அது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் கூட இருந்ததில்லை.
விதையில் உற்பத்தியாகி, வளர்ந்து பூத்து காய்த்து பின்னர் கனியாகி மீண்டும் விதையாகுவது தான் இயற்கை, மாறாக விதையில் இருந்து கனி, காய், பூ என கிடைக்கும் மாறிலிகள் பற்றி எமக்கு தெரியாது.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்

சைவ, அசைவ உணவுகள் பற்றி
வணக்கம்தோழர்களே,
சைவ, அசைவ உணவுகள் பற்றி முன்னமே நாம் ஓர் சிறு விளக்கம் கொடுத்திருந்தோம் அல்லவா... அதன் மேலதிக விளக்கம் இங்கே தருகிறோம். சைவ உணவை உண்ன வேண்டாம் என்பது எமது கருத்து கிடையாது. மாறாக எது சைவ உணவு என்பதும் அப்படி கூறப்படும் உணவை உண்பவர்கள் மட்டுமே மேட்ஷத்தை அடைய முடியும் என்ற கருத்து மட்டுமே தவறானது என்பது தான் இங்கு கூறப்படுகிறது.
புராணங்கள் இதிகாசங்கள் இயற்றப்பட்ட ( நடந்த) காலத்தில் நாம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் அது சமயமும் கிடையாது.
இந்து நதிக்கரை மக்கள் (இந்துக்கள்) வழிபாடுகள் என்ற பெயரில் செய்த போலியானதும் தேவையற்றதுமான சடங்குகளை தவிர்ப்பதற்கும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு ஏற்ப பிரதான வழிபாட்டு முறைகளை வைத்து பிரிந்து கானப்பட்ட இந்து மக்களை ஒன்று சேர்க்கவும் இறைவனால் அருளப் பட்ட வேதங்களான “இருக்கு, யசூர், சாம, அதர்வ” வேதங்களை அடிப்படையாக வைத்து சமயங்களை (வழிபாடுகளை) ஆதி சங்கரர் ஆறாக (06) பிரித்து ” சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்” என அதன் வழிபாட்டு முறைகளை பாமரனும் அறியும் படி செய்தார். இது வேதங்களின் தொகுப்பு. ஆகவே சமயம் என்பது வேதத்தை அடிப்படையாக வைத்தது, மாறாக இதிகாசங்களும் புராணங்களும் சமயங்களாகாது.
இந்து மதம் என்றால் அனைவரும் புரிந்து கொள்வது பகவத் கீதையை தான் அத்துடன் அதில் இருந்து தான் உதாரணங்கள் கூறப்படுகிறது. சில நேரங்களில் இராமாயனமும் உதாரணமாக்கப் படுகிறது.
புராணங்கள் இதிகாசங்கள் இறைவனின் வரலாறுகள் அல்ல, அவை இறைவனின் சக்திகளின், விம்பங்களின் கதைகள்.
வரலாறு இருந்தால் அவன் இறைவனும் அல்ல.
ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதன் பொருள் அது தானே !
வரலாறு இருந்தால் அதற்கு ஆதியும் இருக்கும் அந்தமும் இருக்கும்.
பிறந்தவன் இறக்க வேண்டும் அது இறைவனாக இருந்தாலும் சரி என்ற கூற்றை விளக்கவும் வாழும் காலத்தில் சந்திக்க போகும் இன்னல்கள் உணக்கு மட்டும் அல்ல அது அனைவருக்கும் பொதுவானது என்பதையும், வாழ்கை வட்டத்தில் நீ நடக்கும் முறைக்கு ஏற்ப அதன் பலன்களை இங்கேயே நீ அனுபவித்திட முடியும் என்பதையும் காட்டவே இந்த இதிகாசங்கள் புராண அவதாரங்கள்.
பகவத் கீதையை ஒரே நொடியில் தவரானது என்று கூறிவிட முடியும்.. பார்கிறீர்களா..... சைவ அசைவ உணவு பற்றி கூறும் அன்பு நெஞ்சங்களே..
“ எது நடந்ததோ அது நன்றே நடந்தது”
“ நீ செய்யும் அனைத்தையும் நானே செய்விக்கிறேன்”
” அனைத்துன் நான்”
இதன் கூற்றுக்கு அமைய அசைவம் உண்டால் அது பரமாத்தமா உண்டதாக வேண்டுமே !.. பின்னர் ஏன் கவலை.
உயிரை கொன்றால் அதுவும் அவர் தான் செய்ய வேண்டும். காரணம் அதை அவர் தான் கீதையில் சொல்கிறார். அன்று அர்சுணண் கொன்ற உயிர்களுக்கு அவர் பொருப்பேற்பதாக இருந்தால் அதன் காரணம் சரியானதாக இருந்தால், இன்று நாம் வாழ வழி தரும் இதுவும் சரியானதாகிறது அல்லவா.
தனது குழந்தைகளுக்கு இன்று உணவு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஓர் விவசாயி தனது அருகில் இருக்கும் எதை கொன்றாவது குழந்தைகளுக்கு உணவு கொடுத்தே தீர வேண்டும், அப்படி செய்யாவிடில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காத பாவத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும் அல்லவா.
facebook ல் அரட்டை அடிக்கும் அளவுக்கு வசதி இருக்கும் நாம் சைவ அசைவ உணவை பற்றி கருத்து கூறுவதும் அதன் மூலம் மேட்ஷத்தை அடைய வழி தேடுவதும் வியப்பான விடயம் ஒன்றும் அல்ல.
கொல்லாமை பற்றி கூறும் facebook அன்பர்கள் எத்தனை பேர் கொசு வத்தி இன்றி இரவில் அரட்டை அடிக்கிறீர்கள்.. உயிர் என்று வந்து விட்டால் அனைத்தும் உயிர்தான் அல்லவா.
பச்சை தவரங்களை சைவ உணவு என்று யார் கூறுவது. அதற்கும் உயிர் உணர்வு இரத்தம் நரம்பு சதை குடும்பம் குழந்தை மகிழ்ச்சி துன்பம் அறிவு என்று அனைத்தும் உண்டு என்பது தெரியாதா.. ?
உங்களுக்கு பிடித்தது பச்சை தாவரங்களை கொலை செய்வது. அவ்வளவு தான்.
இன்னும் கொஞ்சம் கடுமையாக உங்களை காயப்படுத முடியும் பார்கிறீர்களா....
விலங்குகளை கொலை செய்ய வேண்டாம் என்கிறீர்கள் அல்லவா.. உங்களது வீட்டில் இருக்கும் தளபாடங்கள் பெரும் பாலானவை எதனால் ஆனது. மரங்கள் என்று இருந்தால் காடுகளை அழித்தன் மூலம் எத்தனை குருவிக்கூடுகள் அவற்றின் முட்டைகள் குஞ்சுகள் என கொலை செய்யப்பட்டிருக்கும். அதற்கு ஊக்கிவிற்பாக நீங்கள் கொடுத்து வாங்கிய விலை என்ன..
உங்களது காசுப்பைகள் இடுப்பு பட்டி பாதனிகளை விலை அதிகம் கொடுத்து விலங்குத்தோல் வியாபாரம் செய்வது யார்..
முத்து மணிகளை விலை கொடுத்து வாங்குவது யார்..
அதிலும் மேலாக உங்களை காயப்படுத்தவும் முடியும் பார்கிறீர்களா...
அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது அல்லவா..
வயது வந்த பெண் முட்டை போடும் (கரு உண்டாகும்) பெண் அல்லவா அது ஓர் உயிர் அல்லவா... ஆண் விந்து உண்டானால் அதுவும் உயிர் அல்லவா.. இறைவனின் படைப்பை தடை போதுவது யார்.. சற்று விளக்கமாக கூறினால்...
திருமணம் ஆகும் வரை தனியாக கொலை செய்கிறோம். திருமணத்தின் பின் ஆண் பெண் சேர்ந்து உற்பத்தியை மறுக்கிறோம். நீங்கள் உங்கள் உடலில் இருந்து வரும் உயிரையே காப்பது இல்லை அப்படி இருக்க பிற உயிரை காப்பது போல் கதை கூறுவது எப்படி நியாயமாகும்.
சன்னியாசத்தின் விளக்கம் சற்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எல்லாத்திலும் மேலாக ஓர் இரகசியத்தை மறந்தி விட்டு பேசக்கூடாது..
மனிதனே ஓர் விலங்கு அல்லவா... இயற்கை என்பது இறைவனின் சொரூபம் என்றால் ஓர் விலங்கு இன்னும் ஓர் விலங்கை கொன்று உண்னும் விதத்தில அல்லவா படைப்பே இருக்கிறது.. விலங்குகளை கொல்லக் கூடாது எனறால் நீங்கள் இறைவனையே தவறானவன் என்று கூறுவதாக அமைகிறது பார்தீர்களா..
இறைவன் தவறானவன் என்று கூறுபவர்கள் மேட்ஷத்துக்காண வழி தேடுவது எப்படி முறையாகும்...
கொல்லாமை பற்றியும் புலால் உண்பதை பற்றியும் திருக்குறல் மூலம் விளக்கும் சிலருக்கு...
”பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்”
என்று வள்ளுவர் கூறுகிறார் அப்படி என்றால் அவரே சில நன்மைகளை மக்கள் அடயவேண்டும் என்பதற்காக தனது பாடலில் பொய்மையை கூறியிருக்க முடியுமல்லவா.. 1330 பாடலில் எத்தனை உணமை என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
மற்றவர்கள் உலகுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக பொய் கூறலாம் என்றால் அதை ஏன் அவர் கையாண்டிருக்க கூடாது.
அதை அவரே உறுதிப்படுத்திவிடார்
அவரே கூறுகிறார்..
” எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதை விட அவர் உங்களுக்கு புரிய வைக்க முடியாது...
” மூலமதை யறிந்தாக்கால் யோகமாச்சு
முறைமையுடன் கண்டாக்கால் வாதமாச்சு
சாலமுடன் கண்டவர்முன் வசமாய்நிற்பார்
சாத்திரத்தை சுட்டெரிந்தா லவனேசித்தன் ”
18 குருவே சரணம்
தென் நாடுடைய சிவனே போற்றி..

சயம், அரோசகம்
வணக்கம் தோழர்களே,
நீண்ட நாட்களுக்கு பின்னர் மருந்தாக்கல் தொடர்பான ஓர் பதிவிடுவதில் மகிழ்சி.
சயம், அரோசகம், வாயு, மந்தம், இருமல், சுவாசகாசம், ஈலை, மருந்தீடு ஆகியவற்றுக்கான ஓர் பொதுவியல் சூரணம் ஒன்றை இன்று காலை தயார் செய்த போது எடுத்த சில புகைப்படங்கள் இவை.
பாரம்பரிய முறையாக கையாட்சி மருந்து வகைகளில் ஒன்றான இது மேற்குறிப்பிட்ட ரோகங்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
நீண்ட நாட்களுக்கு பின்னர் மருந்தாக்கல் தொடர்பான ஓர் பதிவிடுவதில் மகிழ்சி.
சயம், அரோசகம், வாயு, மந்தம், இருமல், சுவாசகாசம், ஈலை, மருந்தீடு ஆகியவற்றுக்கான ஓர் பொதுவியல் சூரணம் ஒன்றை இன்று காலை தயார் செய்த போது எடுத்த சில புகைப்படங்கள் இவை.
பாரம்பரிய முறையாக கையாட்சி மருந்து வகைகளில் ஒன்றான இது மேற்குறிப்பிட்ட ரோகங்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
தமிழர் புத்தாண்டு
வணக்கம் தோழர்களே,
தமிழர் புத்தாண்டு சில தினங்களில் வர இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இன்று ஏதாவது ஒர் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தங்களது தேவைகளை நிரைவேற்ற காத்திருக்கும் சிலர் தமிழர் புத்தாண்டு சித்திரை மாதத்தில் வருவதல்ல மாறாக தை திரு நாள் தான் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு பல பிரச்சாரங்களில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு.
முதலில் தமிழ் புத்தாண்டை பற்றி விவாதம் செய்யும் அன்பர்களுக்கு சில கேள்வி, அதன் பின்னர் சிறு விளக்கம்.
கேள்வி.
தமிழர்களின் புத்தாண்டை பற்றியும் தமிழ் பற்றியும் கவலைப்பட்டு அதை வளர்க்க வேண்டும் என்று பாடு படும் எத்தனை பெயர் தமிழ் துறையில் தொழில் செய்கிறீர்கள் ?, எத்தனை பெயர் உங்கள் குழந்தைகளை தமிழில் கற்பிக்கிறீர்கள் ?, எத்தனை பெயர் தமிழ் மொழியை மட்டும் பேசுகிறீர்கள் ?, எத்தனை பெயர் தமிழர்களின் தமிழ் மொழி பேசும் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்?
எத்தனை பெயர் தமிழர் உணவை மட்டும் உண்ணுகிறீர்கள் ?,
இப்படி இன்னும் எத்தனை, எத்தனை என பல கேள்வி உண்டு.
பணத்துக்காக வேறு மொழியாலர்களிடம் கூலியாக வேலை செய்வதை நிருத்திவிட்டு சொந்த நாட்டுக்கு வந்து தொழில் செய்யுங்கள். அதுவே தமிழனின் பண்பையும் தமிழையும் வளர்க்கும்.
அதற்கும் மேலாக எத்தனை பெயர் தமிழர்கள் ஈழத்தில் படும் பாடுகளுக்காக குரல் கொடுத்தீர்கள் ?, அடுக்கு மாளிகைக்குள் சொகுசாக இருந்து வீன் விவாதம் பேசிப் பேசியே தமிழை கொன்றது போதும்.
முதலில் தமிழர்களை வாழ வையுங்கள் தமிழ் தானாகவே வளரும். அதை விடுத்து புத்தாண்டு எப்போது வந்தால் என்ன அல்லது வராவிட்டால் என்ன !
புத்தாண்டு வந்தால் கிடைக்கப்போவது அரச விடுமுறை (சில நாடுகளில் மட்டும்) மற்றும் புதிய துணிகள், சில இனிப்பு பண்டங்கள், உற்றார் உறவுகளோடு வேடிக்கை கொண்டாட்டம், சற்று அதிகமாக ஆலய வழிபாடு.
இத்தனை விடயங்களும் புத்தாண்டு வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி செய்யக்கூடியது தானே ! ஆகவே புத்தாண்டில் என்ன விசேடமாக நடக்கப்போகிறது. அல்லது நீங்கள் வேண்டாம் என்றால் அது நின்று விடப்போவதும் இல்லை. அவசரமாக கூப்பிட்டால் வரப்போவதும் இல்லை.
உங்கள் வசதிகளுக்கு ஏற்ப அதை சரி செய்ய பார்கிறீர்கள். அன்று ஆரியர்கள் மாற்றியதாக கூறும் நீங்கள் இன்று அதே விடயத்தை தானே செய்ய முனைகிறீர்கள். பின்னர் ஏன் அவர்கள் செய்தது என்று நீங்கள் நினைக்கும் குற்றஞ்சாட்டும் விடயத்தை பற்றி பேசுகிறீர்கள்.
ஆரியர்கள், திராவிடர்கள் இருவரும் மனிதர்களே, என்ற உணர்வு மட்டும் நமக்கு ஏன் வருவதில்லை.
ஆரியர்கள் வேதங்கள் முதல் ஆகம உப நிடதங்கள் என இன்று இருக்கும் வழிபாடுகள் வரை தங்களது தேவைக்காக அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டார்கள் என்று பேசுகிறோம் அல்லவா, அதற்கான காரணத்தை சற்று உற்று நோக்கினால் போதும், உண்மை தெளிவாக புரிந்துவிடும்.
அவர்களுக்கு திராவிடர்கள் மீதும் திராவிடர்களின் இறைவழிபாடு பற்றியும் அதன் உண்மைத்தன்மையும் கண்டு தமிழர்கள் மீது பயம் ஏற்பட்டு, தமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்து இப்படி பல காரியங்களை செய்திருக்கலாம் அல்லவா !
எது எப்படி இருந்தாலும் இத்தனை யுகங்கள் கடந்தும் நாங்கள் (தமிழர்கள்) சிறப்பாகவே முடிந்த வரை வாழ்கிறோம். இது இறைவனின் ஆணை அல்லவா, எத்தனை படையெடுப்புக்கள் வந்தாலும் சரி நாங்கள் சலைக்கவில்லை அல்லவா, அப்படி இருக்க மற்றவர்கள் பற்றிய பேச்சு நமக்கு எதற்கு.
உலகில் எந்த மொழிக்கும், எந்த சமயத்துக்கும் இல்லாத பண்பு தமிழுக்கு மட்டும் உண்டு அது விரோதியாக இருந்தாலும் அவரை பண்போடு அழைத்து விருந்தோம்பல் செய்வது. விரோதி ஆரியராக இருந்தால் என்ன பூரியராக இருந்தால் என்ன, நமது பண்பு தான் முக்கியம் அல்லவா.
அதற்கும் மேலாக அவர்கள் நம் நாட்டிலேயே பிறந்தவர்கள் நமது சகோதரர்கள் அல்லவா, பிற மதத்தவரையே சகோதரனாக பார்க்கும் நமக்கு நம்முடம் கூடப்பிறந்த சகோதரரை ஏன் தப்பாக பார்க்க வேண்டும்.
இப்படி பேசுவதனால் அடியேன் ஆரியருக்கு பறிந்து பேசுகிறேன் என்று நினைத்தாலோ அல்லது தமிழில் பற்று இல்லாதவர் என்றோ நினைத்தால் அது உங்களின் விருப்பம்.
மேலும் தமிழ் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாடுகிறார்களென்றால் அதற்கான காரணம் தெரியவேண்டுமானால் காலத்தை பற்றி சிவன் பார்வதிக்கு என்ன சொல்கிறார் என்று தெரிய வேண்டும்.. அது பின் வருமாறு..
கேளும் பார்வதி:
காலமென்பது ஆகாயத்தைபோல் அகண்டமான ஓர் விடயம், அளவின்றி பெருகிவருகின்ற ஓர் பேராற்றிக்கு துறைகளில்லாவிடில் அது எப்படி பயன் படாதுபோகுமோ, இக்காலமும் இதேபோல்தான் அதன் பயன்பாட்டுக்காகவே அதற்கு வரைவுண்டாக்கப்பட்டது.
சூரியன் முதல் சனிவரை உள்ள கிரகங்கள் படைப்புக்காலம் போல மறுபடியும் மேடராசியில் சரியாய்சேருங்காலத்தை யுகமென்று வரைவிட்டனர். அதன் தொகை நாற்பத்துமூன்று லட்சத்து இருபதினாயிரம்.
இதனை பத்துபங்காக்கி முதல் யுகமாகிய கிருதயுகத்திற்கு நான்குபங்கும், இரண்டாவது திரேதயுகத்திற்கு மூன்று பங்கும், மூன்றாவது துவாபரயுகத்துக்கு இரண்டு பங்கும் கடைசியான கலியுகத்துக்கு ஒரு பங்கும் என பிரித்தனர், ஏன் இப்படி பிரித்தனர் என்றால் தருமமானது அந்தந்த காலத்தில் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என நடப்பதால்.
சனிக்கு காகோளமண்டலத்தை சுற்றிவர ஏறக்குறைய முப்பது வருடமும், குருவுக்கு 12 வருடமும், அங்காரகனுக்கு 18 மாதமும், சூரியனுக்கு ஒரு வருடமும், புதன் சுக்கிரன் இவர்களுக்கு முறையே 4, 3 மாதங்களும், சந்திரன் 27 1/2 நாளும் செல்கின்றமையாலும் இக்கிரங்களின் மத்திமகதியின் சிறுகுணனம் அறுபது வருடமாவதால், இந்த அறுபது வருடம் ஒரு சக்கரம் என்று ஏற்படுத்தினர்.
வருடமாவது சூரிய இயக்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது இது சௌரவருடம் என கூறப்பட்டது. இதனால் சூரியன் ஒரு ராசியிக் இருந்து மற்ற ராசிக்கு போகும் காலம் மாதம் என கணக்கெடுத்தனர்.
இப்படி மாதங்கள் முறைப்படி அந்தந்த ராசிக்கு சூரியன் வரும் நாட்கள் அமைக்கப்பட்டன. சித்திரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி எந்த மாதத்தில் வருகிறதோ அது “சைத்திரம்” சித்திரை என பெயர் பெற்றது.
பிரபஞ்ச செயற்பாடையும் காலக்கணக்கையும் ராசிகளை வைத்தே பிரிப்பதனாலும் ராசிச்சக்கரத்தில் முதலாவதாக குறிக்கப்படுவது மேச ராசி என்பதாலும், சௌரவருடம் (சூரிய வருடம்) சூரியனையே வைத்து கணிக்கப்படுவதலும், சூரியன் மேச ராசிக்கு வரும் நாள் இந்துக்களின் புத்தாண்டாக கருதப்பட்டு வழிபடலாயிட்டு.
------------------------------ ------------------------------ ----
இதில் நாம் கவலைப்படுவது வடமொழிப்பெயர் மாற்றம் பெற்றது என்றால் இன்று நமது குழந்தைகளுக்கு புதுசு புதுசாக பெயர்களை தேடுவது மட்டும் சரியானதாகுமா.. !
இதில் நாட்கள், வாரம், மாதம், வருடம் என பல விடயங்கள் சித்தர்களால் கூட கூறப்பட்டு வந்திருக்கிறது.
அதிலும் மேலாக தமிழுக்கு இலக்கணம் செய்த அகத்தியரே புத்தாண்டை பற்றி கவலைப்படவில்லை. நமக்கு மட்டும் என்ன கவலை. அப்படி கவலைப்படுவதாக இருந்தால் அது நிச்சயமாக உங்கள் சுய நல தேவைக்காக மட்டுமே என்பது தெட்ட தெளிவு.
தமிழ் வளர்த்த அவ்வை, வள்ளுவன், நாயன்மார்கள், சித்தர்கள் படாத கவலை, அவர்கள் வளர்க்காத தமிழா நீங்கள் வளர்க்க ஆசைப்படுவது.
அனைத்துக்கும் மேலாக பணத்துக்காக வேறு மொழிகளுடன் சிரித்து பேசும் நாம் தமிழைப்பற்றி பேசுவது வெட்கப்படவேண்டியது தான்.
ஒரு வேலை இதை விவேகானந்தர் பேசியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும், ஏனனில் அவர் தமிழர் என்பதை நிரூபித்தவர்.
தமிழை வளர்ப்பதை விட்டு, தமிழர்களை வாழ வழி செய்யுங்கள். தமிழ் தானாகவே வளரும்.
இது தொடர்பான கால வாய்ப்பாடு மேலும் விபரமாக பதிவில் வரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்றாலே அதன அர்த்தம் “ தமிழே போற்றி என்பது”
இந்த பரிபாசை கூட புரியாத தமிழ் நெஞ்சங்கள் தமிழர் புத்தாண்டை பற்றிய விவாதத்தை விரட்டி விட்டு வர இருக்கும் புத்தாண்டில் தமிழருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி சிந்தித்து அதன் படி நல்ல விடயங்களை நமது குழந்தைகளுக்கு புகட்டுங்கள்.
தமிழ் வளர்த்த விவேகானந்தரே கூறியது
“ மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”
அவர் தமிழ் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறவில்லை என்பதையும் சிந்தியுங்கள்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.
வாழ்க தமிழர்

------------------------------

சைவ அசைவ உணவு என்று பேசி மக்களை தன்வசப்படுத்தும் சாமியார்கள், குருமார்கள், பீடாதிபதிகள் அனைவருக்கும் இது ஓர் பாடமாக இருக்கட்டும்.
இந்த சாமியார்கள் குருமார்களை நம்பி ஏமாறும் சமுதாயத்துக்கும் இது ஓர் ஆதாரமாக இருக்கட்டும்.
சித்தர் பாடல்களில் இருந்து ஆதாரம் என்னிடம் கேட்ட அன்பும் பண்பும் உடைய நெஞ்சங்களுக்கு இது புத்தியை தெளிவடைய வைக்கட்டும்.
என்னை வழி நடத்தும் சித்தர் பெருமக்களுக்கு இது சமர்பனம்.
” நாயிட் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனை” வணங்கி, உங்கள் மாயை அறுபட எனது பிராத்தனைகளை இறைவனிடத்தில் கேட்கிறேன்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்,

சித்தர்கள் தோன்றுவதில்லை
வணக்கம் தோழர்களே,
இது விவாதம் கிடையாது, ஓர் பகிர்வு..
சைவ, அசைவ உணவு பற்றி எந்த கருத்தும் எனக்கு இல்லை, மாறாக மோட்சம் அடைவதற்கும், ஆன்மீக சிந்தனைக்கும், சைவ அசைவ உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் நமது கருத்து.
நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள் அதற்கு இறைவனை காரணம் காட்ட வேண்டாம் என்று மட்டும் கூறுவேன்.
சித்தர்கள் தோன்றுவதில்லை கடுமையான பயிற்சிகள் மூலம் சித்தத்தை (சிவத்தை) உணருபவர்கள் அவர்கள்.
வள்ளலார் (இராமலிங்கம் )ஓரு சித்தர் கிடையாது, சித்தர்களின் பக்கத்து வீட்டு நபர் கூடக் கிடையாது. அவர் ஓர் சமய சொற்பொழிவாளர், போதகாசிரியர். உரையாசிரியர். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. தந்தையை சிறு வயதில் இலந்த அவர்களின் குடும்பம் சென்னை வந்து அங்கு அவரின் குடும்ப நிலைக்காக அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து பணம் சம்பாதித்தார் என்பது தான் உண்மை. இவ்வாறு அண்ணனுடன் சொற்பொழிவுகளுக்கு போகும் போது ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து அதன் பின் பல ஆதினங்களிடம் சென்று படித்து அதன் வழி மக்களுக்கு ஆன்மீகத்தையும் தருமத்தையும் செய்யலானார். வள்ளலார் ஓர் தூய்மையான மனிதர். இது தான் அவரின் வரலாறு.
சித்தர்கள் யோகிகள் வழியில் இப்படி சாந்தலிங்க ராமசாமி போன்றவர்களை சேர்காவேண்டாம், ஒப்பிட்டு பார்ப்பதற்கு ஓர் தகுதி உண்டு அல்லவா.. ! சொற்பொழிவு யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இங்கு நாம் பேசுவதும் எடுத்துச் செல்வதும் சித்தர்கள் என்ற சிவ தொண்டர்களை, அவர்கள் ஆராய்ந்து சொன்ன உண்மைகளை. இவற்றுக்கு மத்தியில் வியாபாரம் செய்யும் மத வாதிகளை அல்ல.
சைவ அசைவ உணவு பற்றிய விழிப்புணர்வு என்ற ரீதியில் கடந்த நூற்றாண்டில் சமய ஆதீணங்கள் என்ற பேரில் இருந்த ஆசாமிகளே காரணம். அவர்கள் ஆதீணத்துக்குள் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது ஆனால் மற்றவர்களை வழினடத்துவதாக மட்டும் பேசுவார்கள்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களிடையே ஏற்பட்ட மாற்றம் இதனாலேயே வந்தது.
இறைவனை பற்றி தேவாரம் , திருவாசம், திரு இசைப்பா, பல்லாண்டு, என ஏன் இன்று எந்த ஆதீணத்தாலும் இயற்ற முடியவில்லை.
பண் பாடி தமிழ் வளர்த்த ஆதீணங்கள் இன்று ஆங்கிலத்தில் கருத்தரங்கு செய்வது ஏன், வெளி நாட்டவருக்கு புரிவதற்காகவா, முதலில் உலகெங்கும் இருக்கும் கோடான் கோடி தமிழருக்கு கருத்தரங்கு வைத்து ஆன்மீக பற்றி பேசுங்கள், பின்னர் வெளி நாட்டவருக்கும் வேறும் மதத்தாருக்கும் சமயம் கற்பிற்கலாம். வெளி நாட்டான் முன்னால் பண் பாடினால் பணம் கிடைக்கும், தமிழன் முன்னால் பண் பாடினால் பரோட்டா கூட கிடைக்காது என்பதற்காவா..!
தங்களின் வசதிக்கு ஏற்ப இறைவன், ஆன்மீகம் என்ற சொற்களை பயன்படுத்தும் மத வாதிகள் யாராக இருந்தாலும் சரி, இறைவன் கல்லாக இருப்பதால் பேசவும் மாட்டாம் கேட்டவும் மாட்டான் என்ற நம்பிக்கையில் உங்களை போன்ற அப்பாவி மக்களை ஏமாற்றுவதை நீங்கள் உணரும் வரை, உண்மை புரியப்போவதில்லை.

எது உண்மை.. சிந்தனைக்கு..
வணக்கம் தோழர்களே..,
இங்கு நாம் யாரையும் வற்புருத்தி இதை இப்படி செய்யுக்கள் என்று கூறவில்லை.. என்பதை முதலில் உணருங்கள்.. அத்துடன் நமது கருத்து சற்று கடிணமானதாகவே இருக்கும் ஏனனில் இது உண்மை என்பதால் இலகுவில் ஜீரனிக்க முடியாது தான். ஆனால் பொருமையாக ஆய்வு செய்தால் மட்டுமே அதன் தத்துவம் புரியும்,..
அறியாமையில் இருக்கும், அத்துடன் ஒரு விடயத்தை கூறினால் அதை அப்படியே நம்பிக்கொண்டு பின்பற்றும் அனைவருக்குமாக பதிவிட்டது, ஆனால் திரு சோதிலிங்கம் அவர்கள் தான் கூறுவது தான் சரி என ஆரம்பித்ததாலும், பிற மதத்தை சுட்டிக்காட்டி பேசியதாலும் அவரின் பெயரில் தொடரப்பட்டது.. தொடர்கிறது..
முதலில் இந்து தர்மத்தை நாம் காப்பாற்றுவதாக இருந்தால் காக்கும் கடவுள் என நீங்கள் குறிப்பிடும் தெய்வம் எதற்காக இருக்கவேண்டும்?
நாம் எந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம் என்றும் எந்த நிலைக்கு ஆளாகுவோம் என்ற கவலையும் உங்களுக்கு தேவையில்லை.
மற்றவரை பொய் சொல்ல வைக்காதே என்று கூறுகிறீர்கள் மகாபாரதம் எனும் நூலில் கிருஸ்னர் என்பவர் செய்திருப்பது என்ன என்பதும் அவருக்கு சூழ்சியின் நாயகன் என்ற பெயர் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா..
இங்கு மகாபாரதம் கற்காதவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அது நம்மிடம் பலிக்காது..
வள்ளுவர் சொன்னது என்ன பொய்மையை பற்றி, ஏன் நீங்கள் சொல்வது தான் என்ன....,
அடி முடி தேடியதில் இருந்து நீங்கள் கற்றது இறைவன் எங்கு பரந்திருக்கிறான் என்று... அது உங்கள் புத்திக்கு எட்டியது அப்படியே.., ஆனால் அவர் சொன்னது சொல்ல முட்பட்டது நான் வெளியில் இருந்தால் தானே நீ தேடமுடியும் என்பதை.
புராண இதிகாசங்கள் எமக்கும் கற்பிக்க பட்டிருக்கிறது.. அதன் உண்மை என்ன என்ற விளக்கத்துடன்.
மகாபாரதத்தில் அற்புதமான வாழ்கையை மட்டும் பார்ப்பது அது போல் வாழவேண்டும் என்ற ஆசையின் நிமித்தம் ஆனால் அப்படி வாழ நினைத்து அவர்களுக்கு கிடைத்தது என்ன என்பதை பார்க்க நீங்கள் மறந்தது உங்கள் அறியாமை.
அன்பை போதிக்கும் கீதையில் இரத்த வாடை எதற்காக...
உரிமைக்காக போர் செய் என்ற கூற்றை வைத்தே இன்று உலகம் முழுவதும் போர் நடக்கிறது அப்படி என்றால் அதை ஊக்கிவித்த பெருமையும் கீதைக்கு தான் உண்டு....
அன்புக்கு அடிமையாகப்போ என்றால் ஏன் குரு(தி)சேத்திரம் நிகழ்ந்தது.. உண்மை எது பொய் எது என்பதை பகுத்து அறியவே இறைவன் மனிதனை பகுத்தறிவுடம் படைத்திருக்கும் போது... அப்படி செய்யாதே சொன்னதை சொன்னபடி நம்பு என்கிறீர்களா...?
அப்படி என்றால் இறைவனுக்கும் மனிதனுக்கும் தொடர்பே அற்று போகிறதே... பின்னர் ஏன் இந்த வாத விவாதங்கள்...
அவ்வையாரின் பாடலில் இருக்கும் இடைச்செருகளை பேசுகிறீர்கள் அது எனக்காகவே இருக்கட்டும் கவலைப்படுபவன் நாம் கிடையாது. ஆனால் “கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி” ஏன் வான் கோழி ஆடக்கூடாதா.. ஆடினால் பூகம்பம் வந்துவிடுமா.. அல்லது ஆடல் மயிலுக்கு மட்டுமே சொந்தமானதா, உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிரபுதேவா ஆடினால் அதை பார்த்து நாம் ஆடக்கூடாது என்பீர்கள் போல் இருக்கே... இது எப்படி நியாயம். இயற்கையை இறைவன் சமச்சீராகவே படைத்திருக்கிறான் இங்கு,, அதற்கு இரவும் பகலும் கூட சாட்சி... அப்படி இருக்க குறிப்பிட்ட ஓர் விடயம் அவருக்கு மட்டுமே உரியது என்பது எப்படி நியாயம்.. ஐன்ஸ்டன் அணு பிரிவை கண்டுபிடித்தால் அப்துல் கலாம் கண்டுபிடிக்க வில்லையா.. நிங்கள் முயற்சி செய்வதில்லை என்பதற்கா முயற்சி செய்பவரை ஏன் அவமதிக்கிறீர்கள்...
சித்தர்களை பற்றி கதைக்க நமக்கு தகுதி இல்லை என்றால் எப்படி அவரிலும் மேலான இறைவனை பற்றி கதைக்க முடியும்,,.. யாருக்கு கதை சொல்கிறீர்கள்.
இறைவனே கூறியிருக்கிறான் “ அடியாருக்கு யான் அடியேன்” என்று இதுகூட தெரியவில்லையா... அப்படியே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்,, நாயன்மார்களை பற்றி சேக்கிழார் பாட முடியுமாயின் ஏன் அடியேன் சித்தர்களை பற்றி பேச இயலாது... அல்லது இறைவனைப் பற்றியே உங்களால் பேச முடியுமாயின்... இறைவனின் அடியார்கள் பற்றி நாம் ஏன் பேச இயலாது....
பாடல்களை தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை, இறைவன் உள்ளிருப்பவன் என்பதையே உணர்ந்து உணர்த்தியவர்களின் மாணவர்கள் நாம், அவனின்றி அணுவும் அசையாது என்பதை பேசுவதில்லை காட்டுபவர்களின் மாணவர்கள் நாம்.. எமக்கு தேடல் ஒன்றே அது நமது மரணம் (சமாதி) எப்போது என்பது பற்றி மட்டும்.. அதுவும் அவனிடத்தில் என்று காத்திருப்பவர்கள் நாங்கள்.
இந்து மதம் என்று பேசிய விவேகானந்தரை பின்பற்றியவர்களே யாரும் இன்று இல்லை தெரியுமா உங்களுக்கு... ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளானாலும் சித்த்ர்களை மட்டும் பின்பற்றுபவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள் காரணம், இறைவன் ஒன்றே என்ற பின்பு மதம் என்பது எதற்காக.. அதனால் தான் சித்தர்கள் அனைத்து நாடுகளிலும் அனைத்து மொழிகளிலும், அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.. உண்மையை புரிவது பட்டம் பெற்றவர்களுக்கு கடினமாகவே இருக்கும்...
மதங்களை கொச்சைப்படுத்த இங்கு நாம்மால் அல்ல எவறாலும் இயலாது.. அப்படி நடந்திருந்தால் இன்று நமது மதங்களின் சுவடுகள் கூட இருந்திருக்காது... நாம் அனைத்து மதங்களுக்கும் சொந்தக்காரர்கள்...
அத்துடன் கடைசியாக குறிப்பிட்ட வாசகரின் கேள்விக்கு பதில் தருவது எமது விருப்பம்... முட்டை பற்றியும் மாமிசம் பற்றியும் நாம் முன்னமே பதிவுகளில் தந்திருக்கிறோம், மேலும் விரும்பியதை உண்னுங்கள் அதற்கு இறைவனை காரணம் காட்டவேண்டாம் என்றும் கூறிவிட்டோம் ஆகவே அதன் அர்தம் புரியும் படி தனியான பதிவு போடப்படும்.. ஆனால் அவருக்கு மறைத்து பேசுவது விரித்துபேசுவதும் எமது விருப்பம்... தனியாக பதிவிட்டோம் என்று நாம் கூறவில்லையே...
கண்ணப்பர் போல் செய்தால் தான் என்ன,, அதில் என்ன தவரு என்று கேட்கிறேன்.. பெண்னுடன் எச்சிலை பறிமாற்றி பிறந்தவர்கள் தான் அனைவரும்.. படைத்தலையே எச்சிலுடனும் தீட்டுடனும் தான் இறைவன் அருளிச்செய்திருக்கும் போது அதில் என்ன தவரு என்று கேட்கிறேன்...
பேசுவதானால் பகுத்தாய்வு செய்து பேசுங்கள் அதற்காகவே இறைவன்
அறிவை அதிகமாக தந்திருக்கிறான்... புராண இதிகாசங்கள் மூலம் கூறப்பட்ட விடயத்துக்கு அர்த்தம் நிச்சயம் உண்டு... அதன் இரு பக்கங்களையும் பகுத்து ஆய்வு செய்தால் மட்டுமே அதன் அர்த்தம் புரியும்... நாம் சித்தாந்த கருத்து பேசுவதில்லை... அது அனைவருக்கும் புரியும்,, மாறாக வேதாந்த கருத்தையே பேசுகிறோம்... “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” இது கீதைக்கும் சரி சித்தரியலுக்கும் சரி ஏன் திருக்குறலுக்கும் சரி பொதுவானதே...
சிந்தியுங்கள்... அனைவரும்..

ஆத்திரட்டீஸ் எனும் கீழ் வாயு
வணக்கம் தோழர்களே,
இன்றும் ஓர் மருத்துவ வேலையை முடித்து விட்டு உங்களுடன் பகிர்வதில் மகிழ்சி..
ஆத்திரட்டீஸ் எனும் கீழ் வாயு பாதிப்புக்கு நிவாரனமாக தயாரான சூரணம் இது. நாடி நிலையை சரியாக பரீட்சிக்க முடிந்தால் சித்த மருத்துவத்தின் தன்மையை புரிய முடியும்...
பல வலைத்தளங்களில் கூருவது போல் இதற்கு இதை சாப்பிடுங்கள் என்றும் அது தீர்வாகவும் இருந்துவிட்டால் மருத்துவத் துறை தேவையில்லை.. வாசகர்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்..
சரியான மருத்துவ ஆலோசனை இன்றி எந்த மருத்துவ முறையையும் கையால வேண்டாம்...

ஓர் அற்புத மூலிகை
வணக்கம் தோழர்களே,
புத்தாண்டில் ஓர் சிறப்பான இலகுவாக நடமுறை படுத்தக்கூடிய சித்தர்களின் கற்பங்களிலும் ரசவாத கொள்கையிலும் பயன்படுத்தப்பட்ட ஓர் அற்புத மூலிகையை பற்றி பார்ப்போம்..
பாடல்
“ செம்பான கருந்துளசி யிலையரைத்து
சிறப்பான பாக்களவு தேனிலுண்ணு
கம்பான காயம்தான் கல்தூணாகும்
கனமான மூச்சாடும் உள்ளுக்குள்ளே
வம்பான சுக்கிலந்தான் கீழோடாது
மதியென்ற சந்திரனில் வாசியூது
அம்பான அருவிபோல் அமுர்தந்தானும்
அண்ணாக்கில் விழுந்ததை அருந்துவாயே.”
விளக்கம் - எனது சிறு மூலைக்கு எட்டிய வரை...
செம்பின் தாது சக்தி கொண்ட கருந்துளசியை சிறப்பான இலைகளை கொண்டு வந்து கல்வத்தில் அரைத்துருட்டி அதை கொட்டைப் பாக்கு அளவு (பாக்களவு தெரியாவிடில் அரு நெல்லியின் அளவு எடுக்கலாம்) எடுத்து அதை தூய தேனில் குழைத்து காலையில் மண்டலம் (கால அளவு) சாப்பிட்டு வர உடல் கல்தூண் போல் உருதியாகி சுக்கிலம் கழிதமாகாது இருக்கும் அத்துடன் இந்த மருந்துண்ணும் காலத்தில் வாசி யோகம் எனும் பிராணாயாம பயிற்சியை சந்திர கலையில் செய்யும் போது ஞானம் என்ற அமுர்தம் கிடைக்கும் என்றும் அதை பேசும் போது நீ உணர்வாய் என்கிறார் சித்தர் போகர்..
இதில் பாட்டில் இருக்கும் பரிபாசைகளை சற்று விளக்கமாக கூறியதனால் பாட்டில் இல்லதவற்றை கூறுகிறார் என்று நினைக்க வேண்டாம். ஒரு சொல் பல பொருள் என்ற அடிப்படை அதிகமாக இருப்பது சித்தர் பாடல்களில் தான். இதை விட வேறு கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் உங்கள் தளங்களில் பதிவிடுங்கள்...
எமது கருத்தை தான் எம்மால் இங்கு பதிவிட முடியும்.. விருப்பம் உள்ளவர்களும், கருத்தின் உண்மையை ஆராய்ந்து பார்க்ககூடியவருக்கும் புரிந்தால் போதும்.. விருப்பம் அற்றவர்கள் தயக்கமின்றி வெளி நடப்பு செய்யலாம்..

சாதிலிங்க வாலை
வணக்கம் தோழர்களே,
” சாதிலிங்க வாலை ” இதன் அர்த்தம் எத்தனை பெயருக்கு முதலில் புரிகிறது. ம் ம் ம்...
சித்தர்பாடல்கள் பலவிடயங்களையும் உள்ளடக்கிய ஓர் திரட்டாக இருக்கிறது, அதாவது ஞானம், யோகம், மருந்து, மந்திரம், இறைமை, புலமை, என பட்டியல் தொடர்கிறது. இதில் ஒவ்வொன்றும் தனித்துவமானது போல் இருப்பினும் அனைத்தும் நம்மை அழைத்துச்செல்வது பரம்பொருளின் பாதங்களை பற்றுவதற்காகவே.
சித்தர் பாடல்கள் பரிபாஷையாக இருப்பதற்கும் காரணம் இருக்கிறது அது தவறான முறையில் கையாலப்பட்டால் அது அணு ஆயுதத்தை விட ஆபத்தாகும் என்பதற்காகவே இருக்கிறது, மேலும் இலகுவாக ஓர் விடயம் நமக்கு கிடைத்துவிட்டால் அதன் மகிமையும் சக்தியும் நமக்கு புரிவதில்லை என்பதும் உண்மைதானே.
சித்தர் பாடலுக்கான விளக்கம் தருவதில் இருக்கும் குழப்பம் என்னவென்றால் ஒவ்வெறு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது அதை புரியவேண்டுமானால் முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் தான் புரியும்.
அதை தெளிவுபடுத்த இந்த ”சாதிலிங்க வாலை “ அல்லது “ சாதிலிங்க வாலை ரசம்” என்பதை பற்றி பார்க்கலாம். மருத்துவத்திலும் இரசவாதத்திலும் பயன்படும் சுத்த இரசம் எனப்படும் பாதரசம் எப்படி தயாரிக்கவேண்டும் என்பது பற்றி கூறும் பாடல் இது. மேலும் சாதிலிங்கத்தில் இருந்து பாதரசம் பிரிக்கும் முறை அனேகமாக கூறப்பட்டாலும், அதிக மருத்துவர்களும் இரசவாத ஆய்வாலர்களும் சாதிங்கத்தில் இருந்து இரசத்தை பிரிக்க அடுப்பேற்றி பல மணி நேரம் எரித்து அதில் இருந்து பாதிக்கும் குறைவான இரசத்தை பிரிப்பார்கள்.
நாமும் அப்படியான ஓர் முறையையே பல ஆண்டுகள் கையாண்டிருக்கிறோம், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது தேடல் மற்றும் ஆய்வுகளின் பலனாக மிக எளிமையாக அதிக அளவில் பாதரசத்தை சாதிலிங்கத்தில் இருந்து எடுக்கும் உத்தியை கண்டறிந்தோம். அதற்கான பாடல் இது.
பொதுவாக இப்படியான் அறிய விடயங்களை பகிரங்கபடுத்தக்கூடாது என்பது சித்தர்கள் வாக்கும் ஆணையுமாக இருக்கிறது, இருப்பினும் சித்தரியல் பற்றியும் பரிபாஷை பற்றியும் அதற்கான விளக்கத்தை கேட்கும் வாசகர்கள் ஓர் விடயத்தை சரியாக புரியவேண்டும் என்பதற்காக இப்பதிவு.
பாடல்
” பண்ணப்பா வின்னமொரு கருவைக்கேளு
பராபரத்தா யெந்தனுக்குப் பகர்ந்தவித்தை
நண்ணப்பா சாதிலிங்க வாலைதன்னை
நன்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாமைந்தா
விண்ணப்பா தானோக்கிக் குருவைப்போற்றி
விபரமுடன் சாதிலிங்க கட்டிவாங்கி
தண்ணப்பா லிங்கமரை வீரம்வாங்கி
சமர்த்தாக ரெண்டையுமே பொடியாய்செய்யே
செய்தபொடி பீங்கானி லிட்டுக்கொண்டு
” செய்யாத வைங்கோலத் தைலமிட்டு ”
உய்தமுடன் பிசைந்துருட்டிப் பீங்கான்பக்க
முறுதியுட னப்பிரவி முகத்தில்வைப்பாய்
தொய்தமுடன் ரவிகாங்கை யதனிற்சென்று
சுழன்றுரசம் வடியுமடா செம்மையாக
வைதமுடன் ரசமான வாலைதன்னை
வாஞ்சனையாங் குப்பிதனிற் பதனம்பண்ணே “
“ பண்ணப்பா விக்கருவை வெளிவிடாதே
பரமான வாலையடா வாலைப்பெண்தான்”
* குருவே மன்னிக்கவேண்டும் இக் கருவை வெளியிட்டமைக்கு, காரணம் உலக மாந்தர் உங்கள் அறிவை சிரம் தாழ்ந்து வணங்கவே சிறிய விளக்கம் கொடுக்கிறேன்.*
பாடலை ஆராய்வோம் (குறிப்பான விடயத்தை மட்டும் கூறுகிறேன் கவனியுங்கள்)
” ஒரு அறிய விடயத்தை கேளு, என்னுடைய தாய் (பூசிக்கும் இறைவி) கற்பித்த இரகசியம் இது, அதாவது சாதிலிங்கத்தில் இருந்து பாதரசத்தை பிரிக்கும் முறை, மனதில் உனது குருவை ( எங்கு நிறைந்த சக்தி) வணங்கி இதை செய், சிறப்பான சாதிலிங்கம் கட்டியாக வாங்கு.. இதில் விபரமுடன் என்றால் சாதிலிங்கத்தை மிக தெளிவாக ஆராயும் திறமை வேண்டும், அப்போது தான் அதில் இருந்து அதிக இரசத்தை பிரிக்க முடியும், சாதிலிங்கம் இருக்கும் பிறகாசத்துக்கு ஏற்ப ரசம் பிரியும் தன்மை இருக்கும். இதுவே விபரமுடன் என்றால்..
இப்போது வாங்கிய சாதிலிங்க எடைக்கு பாதி அளவு வீரம் வாங்க வேண்டும் (குறிப்பு சாதிலிங்கம், வீரம் என்றால் என்ன என்ற கேள்வியை கேட்பவருக்கு இந்த பாடலின் அர்த்தம் தெரிந்தும் பலனில்லை என்பதால் ஆய்வை நிறுந்துங்கள்)
தற்போது வாங்கிய இரண்டு சரக்குகளையும் சமர்த்தாக பொடியாய் செய்யவேண்டும். அதாவது சாதிலிங்கத்தை பொடியாக பன்னும் போது அதன் பளிங்குத் துகள்கள் வீணாகத படி பொடிக்க வேண்டும்.
பொடி இரண்டையும் ஓர் சுத்த வெள்ளை பீங்கானில் போட்டு அதில் ..... இப்போது தான் இந்த பாடலில் பரிபாஷை வருகிறது பாருங்கள்.
செய்யாத வங்கோலத் தைலமிட்டு...
ஐய்கோலத் தைலம் என்றால் ஒருவகை தைலம் என்று புரிகிறது ஆனால அதை செய்யக்கூடாது அதுவாகவே தைலமாக இருக்க வேண்டும். என்ற பொருள் இங்கு..
ஐங்கோலம் என்ற பரிபாஷை புரிந்தால் தான் சாதிலிங்கத்தில் இருந்து இலகுவாக ரசம் பிரிக்க முடியும்.
இப்போது பீங்கானில் இருக்கும் பொடியுடன் ஐங்கோல தைலம் விட்டு பிசைந்து கலக்கி அல்ல, அதாவது வில்லைகள் போல் செய்ய வேண்டும், இதை அப்படியே சூரிய வெப்பத்தில் வைத்தால் அதிலிருந்து பாதரசம் எனும் வாலைப் பெண் வருவாள்.
இங்கு நாம் உபயோகிக்கும் சாதிலிங்கம் மற்றும் வீரம் அதில் இருந்து கிடைத்த வாலைப் பெண் மூன்றும் படமாக காட்டியிருக்கிறேன். செய்யாத ஐங்கோலம் மட்டும் குரு ரகசியமாக இருப்பதால் நமது மாணவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இப் பதிவு பரிபாஷை என்பது என்ன என்ற விளக்கத்தை உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.
-----------------------------------------------------
ஆகவே சித்தர் பாடல்களை படிக்கும் போது நாம் தான் முதலில் தெளிவாக இருக்கவேண்டும், எதை தேடுகிறோம் எனற சரியான தெளிவு நம்மிடம் இல்லையெனில் எதையும் புரியமுடியாது. அத்துடன் மருத்துவக் குறிப்பை தேடுவதானால் முதலில் அது தொடர்பான அடிப்படை விளக்கம் தெரியவேண்டும்.
தளங்களில் இருக்கும் திரிகடுகு திரிபலாதி போன்ற சூரணங்களையும் கற்ப மருந்துகளையும் ஓர் அறிவுக்காக வேண்டுமானால் படிக்கலாம், ஆனால் அதை நாம் மருந்தாக உட்கொள்ளமுடியுமா என்ற அறிவு நம்மிடம் வேண்டும்.
சித்தர் பாடல்களை வியாபாரத்துக்காக ஆய்வு செய்யின் அதன் உண்மையை உணரவே முடியாது. முதலில் அவர்களின் ஆசியை பெறவேண்டும் பின்னரே அவர்களின் பாடல்களின் அர்த்தம் தெரிவிக்கப்படும். குரு வம்சம் என்பதும் இது தான்.
சித்தர்கள் சிவன் என்றது இறைவனில்லை சகதி என்றதும் இறைவி இல்லை. மாறாக பரம்பொருள் என்றது கூட இறைவன் இல்லை. இது தேடலின் போது நாமாக உணரவே முடியும். சரியான குருவாக இருந்தால் அதற்கான வழிகளை அவர் திடப்படுத்தி தருவார்.
“ நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்”
” தேடித் தேடொனா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் ”
“ உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற”
உண்மையைச் சொன்னால் யார் தான் நம்புகிறார்கள். நம்மைத்தான் பைத்தியம் என்கிறார்க்ள்... அதுவும் சித்தர் பைத்தியம் என்கிறார்கள்.
”போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானேன்”.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
முப்பு பற்றிய தெளிவு..
வணக்கம் தோழர்களே,
மருத்துவத்துக்கும் வேதியலுக்கும் மிக அவசியம் என கருதும் முப்பு பற்றி சட்டைமுனி குரு நாதர் என்ன சொல்கிறார் என்று பார்கலாம்.
பாடல்களை ஆழமாக கவனியுங்கள்.
“ அப்பான உப்பு ஆதி கணபதி
தப்பாமற் பாதந் தானது காப்பு
செப்பாத ரகசியம் செப்பினேன் சுந்தரா
முப்பான உப்பு மூலமும் காப்பே
முப்பூவி னாலே முடிக்கலாம் வாதம்
முப்பூவி னாலே முடிக்கலாம் யோகம்
முப்பூவி னாலே முடிக்கலாம் ஞானம்
முப்பூவை விட்டால் முடியாது பாரே
பாரு நீ சமுத்திர நீரதுதன்னை
பாரு நீ மேகம் பதரியினாத்து
பாரு நீ ககன மார்க்கத்திலேகி
பாரு நீ வாய்வால் ககுத்திடவுப்பே
உப்பு வெடித்து ஒடிந்து இடியது
அப்புவின் ரூபம் அதுதானே யக்கினி
செப்பிய பூமியில் சேர நுழைந்து
அப்பது விந்து அண்டம தாச்சே
அண்டம தான அக்கினி யுப்பை
கண்டரி யார்கள் காசினி மூடர்
பிண்ட மதனிற் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாஸ்திரம் பார்த்தே
சாஸ்திரம் பார்த்தே சாரச்செய் வழலையை
சூத்திரம் பார்த்தால் சுளிவாய் முடிந்திடும்
தோத்திரஞ் செய்து தொடுத்த அண்டத்தை
சூத்திரம் போல சொல்லாது நூலே.”
மேற் பாடல் அண்டம் எனும் முப்பூகுரு எப்படி உருவாகுது என்பது பற்றியது..
” அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பது பாரே “
“ பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீஷரைச் செய்துப தேசம்
கூத்திது வாகுங் கூடாது முத்தியே “
இப் பாடல் நமது கலியுக சாமியார்களை பற்றி கூறும் உண்மை.
வாசியோகம், தியானம், பிராணாயாமம், என்ற பெயரில் இருக்கும் உண்மையை சரியாக அறியாமல் நாங்கள் முக்தியை அடைகிறோம் என்று கருதி மணிக்கனக்காக அமர்ந்திருக்கும் அன்பர்கள் சிந்திக்கவேண்டியது இது.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.
சற்று ஆராய்து பார்க்கலாம் வாருங்கள்.
சித்தர்கள் ஞானிகள் என்று நாம் கூறும் எத்தனை பேர் ஆயுளை கடந்து வாழ்திருக்கிறார்கள்.
கற்பம் உண்ணாத எவரும் எதை செய்தும் பலனில்லை, ஸ்ரீ ராமகிருஷ்ணரை எடுப்போம், அவரை விடவும் இங்கு நாம் யாரும் சிறப்பாக யோகப் பயிற்சி செய்யப் போவதில்லை, பிராணாயாமம் செய்யப் போவதில்லை, வாசியை அடக்கப்போவதில்லை. அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்று பாருங்கள்.
வல்லளார் அவர்களை எடுத்து பாருங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்.
ரமணமகரிஷி அவர்களை எடுத்து பாருங்கள்..
இன்று சைவ ஆதிணங்களில் இருப்பவர்களை பாருங்கள்.
சீரடி சாய், சாய்பாவா, ஓஷோ, இப்படி பட்டியல் தொடரும்.. விரைவாக இறந்தவர்கள்.
நமது கிராம விவசாயிகள் இவர்களை விட அதிகமாக வாழ்ந்து இறக்கிறார்கள் அவர்கள் எந்த வாசியும் செய்வதில்லை, யோகமும் செய்வதில்லை, உடலுக்கு தேவையான உணவை அளவாக உற்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் தேக ஆரோக்கியமும் மன அமைதியும் நாம் கூறும் சாமியார்களுக்கு கூட இருப்பதில்லை. தனது கடமைகளை குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சரியாக செய்துவிட்டுச் செல்லும் அவன் யோகியாக சித்தனாக ஏன் இறைவனாக கூட இருக்க முடியும்.
நாம் நவீன யுகம் என்ற பெயரில் அவசர அவசரமாக பயனித்து வேலைப் பளு காரணமாக மற்றவரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை, எனது வீடு எனது குடும்பம் என்ற சிறுபுத்தியை விட்டு வெளிவந்தாலே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நவீன காலம் என்றாலும் வாயால் உண்டு, மூலத்தால் தான் கழிவகற்றுகிறோம் என்ற உண்மை இங்கு பலருக்கு புரிவதில்லை.
KFC, Mcdonalds, Pizza என்று எந்த நவீன உணவாக இருந்தாலும் சரி. கூல் குடித்தாலும் செமிக்கும், கஞ்சு குடித்தாலும் சீரணிக்கும். இதில் எது அமிர்தம், எது விஷம் என்று நீங்கள் தான் ஆராய வேண்டும்.
பீச்சில் நடப்பது, பாக்கில் சிரிப்பது, இது மருத்துவமும் இல்லை, அதன் சொந்தக்காரனும் இல்லை. இன்றைய விஞ்ஞானிகள் என்ற ஆய்வாளர்கள் தந்த இறப்புக்கான பயிற்சி. கண்டுபிடித்தவனே வாழ்வதில்லை பின்னர் நாம் எப்படி வாழ்ந்திட முடியும்.
இறைவன் எங்கும் இருக்கிறான் என்றும் அவன் அனைவருக்கும் பொதுவானவன் என்றும் பேசும் நாம், அவன் சீவன் (உயிர்) என்று நமக்குள் இருப்பதை உணர்ந்து இருக்கிறோம் அல்லவா, அப்படியே அவன் செயலைப் போல் நாமும் அனைவருக்கும் சொந்தக்காரன், அனைவரும் பொதுவானவர்கள் என்ற சிந்தனை என்று உங்கள் மனத்தில் வருகிறதோ, அன்றே நீங்கள் பிறப்பின் பலனை அடைவீர்கள். முக்திக்கான வாசல் திறக்கப்படும். பிரபஞ்ச ரகசியமும் அதன் உண்மையும் தெளிவு பெரும்.
” அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே “
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த மருந்துவர்.

Subscribe to:
Posts (Atom)