வணக்கம் தோழர்களே,
காயத்திரி மந்திரம் எனும் பொய் ஓர் பார்வை...
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
அடி முடி தெரியாமல் செய்யும் விடயங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது இன்று..
அதிலும் மிகக் கவலை “ காயத்திரி சித்தர்” என்ற ஒருவரின் படத்தை வைத்து அதை
தீட்சை மூலமாக பெற்றது என்று பாராயனம் செய்வது..
அதுவும் ஐந்து முகங்களுடன் ஒரு பெண் உறுவம் அதற்கு தாமரை ஆசனம், பல ஆயுதங்கள், பல வர்ணங்கள் என பல சோடிப்புக்கள்..
முதலில் சித்தர் என்று ஒருவரை கூறுவதானால் அவர் சித்துக்கள்
செய்யவேண்டும், அதிலும் அட்ட கர்ம பிரயோகம் சித்தி பெற்றவராக
இருக்கவேண்டும்.. குறைந்த பட்சம் மூலிகைகள் மருந்துகள் நாடிப்பரீட்சை என
சில சித்தர் பாரம்பரிய விடயம் தெரிய வேண்டும்.. எதை வைத்து இங்கு பலரும்
ஒருவரை சித்தர் என்று கருதுகிறார்கள் என்று புரியவில்லை..
இருக்கு வேதத்தின் பின் பகுதியில் வரும் ஓர் துதிப்பாடல் இது... இருக்கு
வேதம் என்றாலே பாடல்கள் என்று தானே அர்த்தம். அப்படி இருக்க இந்த காயத்திரி
எப்படி மந்திரமானது.. சிந்திக்க மறந்த விலங்கா மனிதன்...
” எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்,
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு “
அறிவு என்பதே ஞானம் ஆனால் ஞானத்தை தேடி ஓடும் பலரும் அறிவற்றிருந்தால் எப்படி சாத்தியம்...
காயத்திரி என்பது விஸ்வாமித்திரர் எனும் கௌசிக மன்னன் தனது தவ வலிமையை
காட்டி சிவனை தரிசித்த போது சிவனுக்காக பாடிய துதியாக அல்லவா வேதம்
குறிப்பிடுகிறது.. அப்படி இருக்க அது எப்படி ஓர் காயத்திரி எனும் பெண்
தெய்வத்தை குறிப்பதாக கருத்தப் பட முடியும். அப்படியே ஆயினும் இருக்கு வேத
காலத்தில் எந்த எப்படி தெய்வ வழிபாடுகள் இருந்தது என்று இருக்கு வேதத்தில்
இருக்க வேண்டுமே, அதை யாரும் உற்று நோக்குவதில்லையா..
சக்தி
வழிபாடுகள் சைவம் கிடையாதே,,, அது சாக்தம் எனும் பிற சமயமாயிற்றே... அப்படி
இருக்க எப்படி அதை சைவம் என்று கருதுவது.. அதாவது வேதங்களை ஆதாரமாக
கொண்டவர்களுக்கு... எது எப்படி என்ற விளக்கம் இல்லாமல் அதை எப்படி செய்து
முக்தி அடைய முடியும் என நினைக்கிறீர்கள்..
” கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்ற வாக்கின் அர்த்தம் என்னவோ... ஆலயங்களில் அந்தணர்கள் ஓர்துவது
அனைத்தும் மந்திரம் என்ற நினைப்பில் இருக்கும் தோழர்களுக்கு முதலில்
அவர்களில் மொழி புரிய வேண்டும் அப்பொது தான் என்ன சொல்கிறார்கள் என்ற
தெளிவு கிடைக்கும்.. அர்ச்சணை என்றால் என்ன, அபிசேகம் என்றால் என்ன என்ற
பிரிவு புரியும்.
வெறுமனே ஒன்றும் புரியாமல் ஒன்றை சொல்வது
எவ்விதத்தில் பலன் தரும் என நினைக்கிறீர்கள், அப்படி அது எங்கள் நம்பிக்கை
என்றால் அதற்கு இதைத்தான் கூறவேண்டும் என்ற தெவை அல்ல புரியாத எதுவும்,
அதுவாக இருக்க முடியுமே.
வேதங்கள் இறைவனால் அருளப்பட்டதாக கூறும்
பலரும் முட்டால்கள் என்பதற்கு அவர்களே சாட்சி.. காரணம் வேதத்தில்
இருக்கும் பாடல்கள் முதல் மந்திரங்கள் வரை இதை யார் தந்தார் என்ற விளக்கம்
இருக்கிறது... அப்படி என்றால் அதை எப்படி இறைவன் தரமுடியும், தரவேண்டும்.
தென்னாடுடைய சிவன் எதற்கு வடமொழியில் கூற வேண்டும்.. சிந்திக்க
மாட்டீர்களா...! பகுத்தறிவே மனிதனின் ஆயுதமாக தரப்பட்டிருக்கிறது அப்படி
இருக்க அதை விடுத்து எப்படி நீங்கள் ஞான மார்கம் செல்ல இந்த போலிகளை
நம்புகிறீர்கள்..
” கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே ”
இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிகிறதா...
” மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே “
இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிகிறதா...
அறிவே நீ எனும் வாக்கு ஏன் வந்தது,,
” பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே”
பொய் என்பது என்ன என்பதை புரியாதவனை எப்படி ஞானி என்பது...
வேத உபாசணைகள் செய்தால் அவர்கள் சித்தர் மரபில் இருக்க முடியாது என்பது
முதல் நோக்கு.. அப்படி இருக்க வேதம் என்பதே என்ன என்று தெரியாதவன் எப்படி
சித்தனாக இருக்க முடியும். அதுவும் காயத்திரி சித்தன் என்றால் அது சித்தர்
வம்சத்தை இழிவு படுத்தும் சொல் அல்லவா...
ஆதியும் அந்தமும்
இல்லாத ஒரு சக்தியை உணர்ந்தவன் எப்படி எல்லைகளுக்குள் உட்பட்ட சக்தியை
வணங்கியிருப்பான் என்ற சிந்தனை வேண்டாமா.. அப்படி அவன் வணங்குவதானால்
அதற்கு ஏற்ற காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டாமா..
காயத்திரி
என்று உபாசனை செய்து நீங்கள் காண்பது என்ன என்ற விளக்கம் உங்களுக்கு இந்த
அறிய மந்திரத்தை தந்தவர்கள் கூறியதுண்டா... அல்லது அவர்களிடம் நீங்கள்
கேட்டதுண்டா..!
அது இருக்கட்டும் அது ஏன் இந்த பெண் உருவுக்கு ஐந்து தலைகள் என்ற கேள்வியாவது எழுப்பியதுண்டா, அல்லது அவர்கள் கூறியதுண்டா...
திரு மந்திர முதல் பாடலுக்கே அர்த்தம் புரியவில்லை,, பின்னர் குண்டலினி
என்பதும் வாசி என்பது சக்கரம் என்பது எப்படி புரிந்தது பலருக்கும். பரிபாசை
என்பது உண்டு என்று கூறும் வாயினாலேயே இதை மருக்கிறீர்கள் என்றால் எப்படி
அது சாத்தியம்.
” மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.”
இந்த பாடலில் இருப்பது இதை செய்ய வேண்டாம் என்று மட்டுமல்ல, இதில் ஒன்றை
மறைத்தே பாடியிருக்கிறார் அகத்தியர். இங்கு மனது என்பது பொய் என்ற அர்த்தம்
உள்ளது காரணம் அப்படி ஒன்று உடலில் இல்லவே இல்லை என்பது அனைவருக்கும்
தெரியும். அப்படி என்றால் இல்லாத ஒன்றை எப்படி செம்மை செய்வது என்ற கேள்வி
வரவேண்டும் அல்லவா... ஏன் வரவில்லை.. நமக்கு பகுத்தறிவு இருப்பதாக நாம்
கூறுவதே பணம் சம்பாதிக்க மட்டும் தானே...
இந்த ஆய்வை உங்களிடம் விடுகிறேன்.. விடயத்துக்கு வருவோம்..
காயத்திரி என்பது என்ன என்ற ஓர் புரிதல் வந்திருக்கும் என நினைக்கிறேன்.
சித்தர் என்ற சொல்லை சரியாக பயன்படுத்த தெரியாதவன் எப்படி சித்தர்களை பற்றி
பேச முடியும் என சிந்தித்து உங்கள் ஆன்மீக குருமாரை சேருங்கள்.
பட்டங்களும் பதக்கங்களும் ஞானம் அல்ல. எது உண்மை என்பதே ஞானம்.
கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்க முடியும் என்பதுவே
இறைவன் தந்திருக்கும் சாட்சி.. அதனால் தான் நாவை நடுவில்
வைத்திருக்கிறான்,.
” ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே”
காட்டுவது இரண்டாக இருக்கலாம் ஆனால் காண்பது ஒன்றாகவே இருக்க முடியும்.
ஐந்து நிறங்களுடைய பெண் யார் என்று பார்க்கலாம்... காயத்திரி என்ற பொய் எது என்று பார்க்கலாம்,,
” நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
” மறைந்திருந்தாய் ” எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய ” மாய இருளை” “
இங்கு நிறங்கள் என்பது எது என்று சிந்திப்பதே அறிவு அதுவே ஞானம்.. அது இல்லாதவன் எப்படி ஞானி எனப்படுவது..
சிந்தியுங்கள் பகுத்தறிவை உபயோகியுங்கள்...
திரு வாசகத்தை மட்டும் ஆதாரமாக எடுத்தே இவ்வளவு ஆதாரங்களை காட்ட முடிகிறது
என்றால் சித்தர் பாடல்கள் தொல்காப்பியம், என உங்களுக்கு சாட்சிகள்
காட்டினால் உங்கள் நிலை உங்கள் நம்பிக்கை எங்கு செல்லும் என்று
நினையுங்கள்..
” சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. “
காயத்திரி என்பது பாட்டு இனியாவது அது தீட்சை என்று உபதேசம் என்றும் நம்பி
ஏமாறாமல் எது சரியானது என்பதை ஆய்வு செய்து ஞானத்தை பெருங்கள்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment