வணக்கம் அன்பான தோழர்களே,
மிக அருமையான பதிவொன்றை மிக மிக அருமையான முகனூலில் பார்க்க கிடைத்து இன்று.
எமது வாசகர்களில் பலர் குறிப்பிட்ட தளத்தில் நண்பராக இருப்பது பார்த்து
மிக மகிழ்ச்சியாக இருந்தது, எத்தனை முறை சொன்னாலும், எங்களை மாற்ற முடியாது என்பதற்கு பலரும்
சாட்சி.
குறித்த தளத்தில் இருக்கும் பதிவு இது..
------------------------------------------------------------------------------------------------------------
“ குடிசையில் இருப்பவனையும் குபேரனாக்கும் அதிசய சஞ்சீவி
லக்ஷ்மி நாராயண சஞ்சீவி மூலிகையின் மகிமைகள் :
இந்த மூலிகை எளிதில் கிடைப்பதில்லை அவ்வளவு அபூர்வமான மூலிகை எங்களிடம் தெய்வத்தின் அருளால் கிட்டியது .
இந்த மூலிகையானது எவருடைய கைகளில்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் சில உண்டு .
அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் தெய்வத்திடம் கேட்டு கொடுக்கிறோம்
இந்த அதிர்ஷ்டம் யாருக்கு என்றால் இந்த செய்தியானது எல்லோருடைய
கண்களுக்கும் தெரிவதில்லை இந்த செய்தியை படிக்கிற அபூர்வ சாலிகளுக்கு
மட்டுமே கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன
இந்த லக்ஷ்மி நாராயண
சஞ்சீவி காப்பிணை அணிந்து கொண்டால் நீங்கள் விசயத்தில் எல்லாம் தோல்வி
அடைந்தீர்களோ அனைத்திலும் வெற்றியை தேடித்தரும் சஞ்சீவி இது .
இதை அணிந்த பிறகு இழந்த சொத்துகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள்
நெடுநாட்களாக இழுத்துகொண்டிருந்த வழக்கு முடிந்து வெற்றி அடைந்திருகிறது வீட்டில் சந்தோசம் நிலவுகிறது .
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர்
நெடுநாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு திருமண தடை நீங்கி நல்ல வாழ்க்கை கிடைத்திருகிருக்கிறது”
-----------------------------------------------------------------------------------------------------
இதை எங்களுக்கு தருமாரும் குறித்த நபரின் தொடரிலக்கம் கேட்டும் பதிவிடும் வாசகர்கள் என்னிக்கை கணக்கில் இல்லை.
இவ்வளவு அபூர்வ மூலிகை கிடைத்த அவர் அதை ஏன் விற்கிரார் என்று தான்
புரியவில்லை, அவருக்கு அனைத்து குபேர சொத்துக்களும் கிடைத்திருக்க
வேண்டும், லட்சுமியின் கடாச்சம் கிடைத்த அவர் அதை மற்றவருக்கு கொடுக்க ஏன்
பணம் வாங்க வேண்டும்.
எமது மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்குவார்கள் என்று நன்றாக தெரியும் இவர்களைப் போன்றவர்களுக்கு.
அது இருக்கட்டும் இது யார் கையில் இருக்குதோ அவர் இழந்த அனைத்தும் அவரை
தேடி வரும் என்கிறார். அப்படியானால் கடந்த சட்டமன்ற தேர்தலில் துண்டைக்
காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் பலருக்கும் இது தேவைப்
படும்...
இதை வைத்திருந்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று
சொன்னாரோ அதில் ஒன்றாவது அவருக்கு நடந்திருக்கா என்று நேரில் போய்
பாருங்கள், குறைந்த பச்சம் ஓர் செகுசான கார், பங்களா, காணி, நிலம், அரச
மரியாதை, வியாபாரத்தில் பெரும் புள்ளி என ஏதாவது ஒன்றாவது இருக்குதா என்று
பாருங்கள்.
முட்டால் பசங்களே, யார் எதைச் சொன்னாலும் அப்படியே
நம்பாமல் சிந்தியுங்கள், பட்டப் படிப்பு படிச்சவனும் சரி, படிக்காதவனும்
சரி எப்படியாவது முன்னேறனும் என்ற ஆசையில் மந்திரத்தை மட்டும் நம்பாமல்
உங்கள் உழைப்பையும் கொஞ்சம் நம்புங்கள், எல்லாவற்றையும் தவறாக செய்து
வாழ்கையை தொழைப்பது பின்னர் மந்திரம். சாபம், குலதெய்வம், கிரகம், என்ற
பேரில் பூசாரியை போய் பார்ப்பது.
உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் யார் தடுத்தாலும் இறைவன் தருவான் ஆனால் நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டும்.
அடியும் புரியாமல் முடியும் புரியாமல் இருப்பதனால் தான் சாமியார்கள் என்ற
பெயரில் இன்று பல அவதார புருசர்கள் உருவாகி இருக்கிறார்கள், ஒரே நேரத்தில்
எத்தை அவதாரம் தான் வருமோ தெரியல.. அவதாரம் வந்தால் உலகம் அழியும் என்றாங்க
ஆனால் அவதாரங்கள் தான் அழிந்து சாம்பலாய் போகிறது.. இது கூட புரியாத
புத்தி ஜீவிகலே, உங்கள் பணத்தை உழைப்பை ஒரு சோம்பேரிக்கு கொடுத்து ஏமாராமல்
நிருத்திக் கொள்ளுங்கள்.
அவர்களின் பீடத்தில் இறைவனின் சக்தி
இருக்கிறதாம், அதனால் தான் இப்படி அதிசய மூலிகைகள் கிடைக்கிறதாம்,
அவர்களின் தளத்தில் இருக்கும் பல மந்திரப் பதிவுகள் எமது பிலாக்கில்
இருந்து பிரதி செய்து பதியப்பட்டிருக்கிறது. அதற்கான சாட்சிகள், மற்றும்
சித்தர் இராச்சியம் எனும் தளத்தில் இருந்தும் பிரதி செய்திருக்கிறார்.
இது எமது பதிவுதான் என்பதற்கு சாட்சிகள் நமது பதிவுகளின் திகதியை
பாருங்கள் நமது பிலாக்கில், அப்படியே, நாம் எப்படி எழுத்துப் பிழைகளுடன்
எழுதினோமோ அதே போன்று எந்த ஓர் இடைவெளியும் இல்லாமல் பிரதி செய்து
போட்டிருக்காறு கோடிஸ்வரன்.
மற்றவரின் பதிவை பிரதி செய்வதை முதலில் நிருத்தி சொந்தமாக கூலி வேலை செய்தாவது உழைத்து சாப்பிடுங்க பாவிகளே.
மந்திரங்கள் என்பது நீங்கள் நினைப்பவை போல விளையாட்டான விடயம் அல்ல, அவை
சரியானவையா சரியானவரிடம் இருந்து கிடைக்கிறதா என்ற விடயங்கள் மிக
முக்கியமானவை. கண்டதையும் சொல்லி உங்கள் சந்ததிக்கு சாபங்களை வாங்கி
கொடுக்காது இருப்பதே மேல்.
ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவுகளை
சாப்பிடுங்கள் அதன் மூலம் உங்கள் உழைப்பை அதிகரிக்க முயலுங்கள்.. மன
அமைத்திக்காகவும், சில தடங்கள்கள் விளகவும் உங்களுக்கு ஏற்ப சரியான மந்திர
உபாசனைகளை சமய தீட்சை மற்றும் குரு ஆசியுடன் மட்டும் செய்ய பாருங்கள்.
மாந்திரீகத்தை ஓர் அறிவாக பாருங்கள், அதிஷ்டமாக பார்க்க வேண்டாம்.
நீங்கள் வேலைசெய்தால் தான் சம்பாதிக்க முடியும், இந்த மாதிரி அதிசய
(அசிங்க) மூலிகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இப்படி ஒரு மூலிகை எங்கு
இருந்து வந்தது என்றாவது முதலில் ஆதாரம் உண்டா என பாருங்கள்.. மூலிகை
என்றால் அகராதியில் இருக்க வேண்டும் பரிபாசை திரட்டுக்களில் இருக்க
வேண்டும்.
சித்தர்களுக்கே தெரியாத மூலிகைகள் எல்லாம் இன்று சந்தைக்கு வருவது தான் அதிசயம்..
சித்தர் கூறாத விடயங்கள் எல்லாம் அவர்களின் பெயரால் விளம்பரம் செய்வது
இவர்களை எங்கே கூட்டிச் செல்லும் என்ற விளக்கம் இல்லாமல் நடக்கும்
விளையாட்டில் நீங்களும் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம்.
இவர்களை போல் போலியானவர்களிடம் சென்று ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவு..
“ மந்திர மாவது மாயம் பொருளது
தந்திர மாகச் சமைக்கி லுமதுமாம்”
சிந்தித்து செயலாற்றுங்கள் வாசகர்களே..
இங்கு அது தொடர்பான சாட்சிகள் படமாக....
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment