வணக்கம் தோழர்களே,
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
தீட்சை என்பது சுத்தமாக்குவது என்று பொருட்படுவது. எதை சுத்தமாக்குவது ஆத்மாவையா !, இல்லவே இல்லை.... உடலை சுத்தமாக்குவது...
ஒரு விடயத்தை ஆராயும் போது அது எங்கிருந்து வந்தது என்ற தெளிவான பார்வை
வேண்டும், அதாவது கால அளவு தென்படவேண்டும். மனித சமூகத்தின் ஆரம்பம் வரை
சிந்திக்க வேண்டும், குறிப்பிட்ட விடயம் எந்த சமூகத்தின் அடையாளம் என்பது
மிக அவசியம். இந்த கண்ணோட்டத்தை விட்டு தற்போதைய உலக வாழ்க்கையை வைத்து
சிந்திப்பதால் தான் உண்மை மறுக்கப்படுகிறது. காலத்தால் முந்திய விடயத்தை
ஆய்வு செய்வது இலகுவானது அல்ல என்ற தெளிவு வேண்டும்.
ஆதி மனிதன்
தனது நம்பிக்கையை இறைவன் மீது செலுத்த ஆரம்பித்த காலம் எது என்ற ஆய்வு
வேண்டும் அப்போது தான் இந்த தீட்சையின் காரணம் சரியாக புரியும்.
வேதங்கள் ஆகமங்கள் தோன்றிய கால அட்டவணையை சரியாக ஆராய வேண்டும்.
மனிதனின் அன்றாட வாழ்கையை மாற்றியமைக்கும் விடயமாக சமயம் ஆரம்பித்த போது
தீட்சை என்பது உறுவானது. அப்போது அவனுக்கு தேவையானது எதுவாக இருக்க
முடியும் என்ற ஆய்வை தொடங்கினால் இதன் உண்மை புரிய ஆரம்பிக்கும்.
இன்று நாம் கூறும் தீட்சை என்பது நிச்சயமாக அன்று கூறப்பட்ட விடயம் அல்ல என்ற தெளிவு கிடைக்கும்.
பசியாகா இருக்கும் ஒருவனுக்கு எந்த மந்திரமும் திருப்தி
கொடுக்கப்போவதில்லை என்ற உண்மை புரியவேண்டும். ஒரு வேலையாவது பசிக்கு
உணவுகிடைக்க அவன் படும் பாட்டில் அவனுக்கு என்ன தீட்சை கொடுப்பது,,
உணவைத்தவிர எந்த ஒரு விடயமும் அவனுக்கு இறைவன் மேல் நம்பிக்கையை
கொடுக்கப்போவதில்லை. அவனின் ஆத்மா எதில் திருப்தியடைகிறது என்ற தெளிவான
சிந்தனை வேண்டும் நமக்கு.
அப்படி இருக்கும் இருவன் முக்தி அடைய முடியாதா என்ற தெளிவும் வேண்டும் நமக்கு.
ஆகவே தீட்சை என்பது முக்திக்கு நிச்சயம் வழி இல்லை என்பது புரியும்.
அப்படி என்றால் எதற்கு தீட்சை என்ற கேள்வி எழுகிறது அல்லவா... அதை வைத்து
சிந்திக்க வேண்டும்.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்ற வாக்கை பாருங்கள்... தீட்சை எதற்கு தேவை என்ற தெளிவு ஓரளவுக்கு புரியும்.
“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து
முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”
இதை ஆழமாக பாருங்கள்.... தீட்சை எதற்கென்ற தெளிவு புரியும்.
நாம் இன்று எடுக்கும் தீட்சைகள்,,, தீட்சைகள் அல்ல... அவை சமய சடங்குகள்...
விபூதி திரிபுண்டரமாக அனிதல் வர்மத்தின் புள்ளிகளை நாம் இயக்குவதற்கு கொடுக்கப்படும் மருத்துவ குறிப்புகள்...
பொட்டு அல்லது திலர்த்தம் ஏன் நெற்றியில் வைக்க வேண்டும்,, மூக்கில் வைத்தால் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டானா என்ன...!
ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலே தீட்சை என்ற பெயர் பெற்றது..
காட்டுமிராண்டியாக திரிந்த சமூகத்தை ஆரோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல
தேவைப்பட்டது மருத்துவம், அதை செயற்படுத்த கண்டிப்புக்கள் அதிகமாக தேவை
காரணம், காட்டுமிராண்டி என்றால் பயம் அற்றவன் என்று தானே அர்த்தம்...
அவனுக்கு இருந்த பயம் எதுவோ,,, அதுவே சமயமாக்கப்பட்டது (கடவுள்) பெயர்
சூட்டப்பட்டது.
அதிகாலையில் எழுந்து காலை கடன்கள் எனும் மல சலம்
போக்கி, உடலை தூய்மையாக்கி குறிப்பிட்ட உடல் அசைவுகளை செய்யும் போது
ஏற்படும் உடல் மாற்றங்கள் தான் இங்கு முக்கியத்துவம் பெருகிறது. இதை
இப்படியே சொல்ல முடியாத காரணத்தால் அவனுக்கு எதில் பயம் இருந்ததோ, அதையே
காரணமாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது...
சித்த மருத்துவத்தில்
எந்த ஒரு மூலிகைச் சரக்குகளை மருந்தாக பயன்படுத்தும் முன்னர் அதை தீட்சை
செய்வது என்ற சுத்திமுறை கையாலப்படுவது இதை இந்த தீட்சை என்ற சொல்லுக்கு
சான்றாக எடுக்கமுடியும்.
இறைவனை இந்த தீட்சைகள் அனுட்டானங்கள்
செய்வதன் மூலமே கான இயலுமாயின், இந்த ஆத்மா புன்னியம் பெருமாயின், இவ்வாறு
பின்பற்றாதவர்கள் நிலை என்ன... அவர்கள் இறைவனின் அன்புக்கு
பாத்திரமாவதில்லையா... அல்லது தண்டிக்கப்படுகிறார்களா...! அப்படி எந்த ஒரு
உதாரணங்களும் இங்கு இல்லையே... மாறாக தீட்சை அணுட்டானங்கள் செய்து இறைவழி
நடப்பதாக கூறும் அனைவரும் பிரச்சினைகளை சந்தித்து தானே வாழ்கிறார்கள்..
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற வாக்கு குறிப்பதை அவதானிக்கலாம்.
இறைவனிடம் அனைவரும் கேட்பது இதை தானே.. இதை வைத்தே தேவைகள் ஆரம்பிக்கிறது,
இதை வைத்தே தேவைகளும் முடிகிறது.
கோடியில் சம்பாதிக்கும் நபர்கள்
கூட சக்கரை வியாதியால் விரும்பிய இனிப்பை சாப்பிட முடியாத போது,, இறைவனின்
அருள் பணத்தில் இருந்து என்ன,, இல்லாவிடால என்ன,,,,..!
பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது உலக நியதி.. அது இறைவனாக இருந்தாலும்
சரி, இறைவனின் அம்சமாக இருந்தாலும் சரி.. இதற்கிடையில் ஆத்மா என்பது எப்படி
புனிதம் அசுத்தம் அடைகிறது.
எல்லா குருவுக்கும் மாணவர்கள் இருப்பதில்லை.. அது தெரியுமா இங்கு பலருக்கு...
”பரைக்குமே குருமார்கள் பணமுங்கேட்பார்
பதிவாக பொருள்பிடுங்கி யுண்பார்பாரு
திரைக்குள்ளே உள்ளிருத்தி மனிதருக்கு
தீட்சைதா னஞ்செழுத்தை சொல்வாரப்பா
மரைத்துமே நம்பவே வேண்டாமப்பா”
கண்ணைத் திறப்பது காதை திறப்பது இதெல்லாம் வியாபார உத்திகள்.... இதில் எந்த பலனும் இல்லை.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. அதைத்தான் தீட்சை என்றார்கள் சான்றோர்கள்..
அதில் மந்திர தீட்சை என்ற விடயம் எல்லாம் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது..
இந்த சாமியார்கள் ஆன்மீக சொற்பொலிவாளர்கள் எப்படி செவிடனுக்கும்
குருடனுக்கும் ஊமைக்கும் தீட்சை கொடுப்பார்கள் என்று தான்
சிந்திக்கிறேன்...
குடுமி கட்டினால் காவி உடுத்தால் சாமியார்
என்ற பார்வை நமது மக்களிடையே வந்துவிட்டது... ஆனால் அவன் ஏன் முடி வெட்ட
வில்லை என்ற சிந்தனை வருவதில்லை..
இறைவனை நோக்கிய பயனத்துக்கு
எதற்கு பணம் என்ற விளக்கமும் நமது மக்களுக்கு இல்லை... ஓ பல நாடுகளும்
சுற்றி கடவுளை தரிசிப்பதற்கு தேவியல்லவா... அப்படியானால் அவன் இன்னும்
கடவுளை காணவில்லை என்பதை அவனே சொல்லுகிறான், அப்படி இருக்க அவனிடம் நமக்கு
என்ன வேலை என்ற சிந்தனையும் இல்லை.
” மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.”
இந்த சாமியார்கள் அனைவரும் இதை செய்யச் சொல்லுகிறார்களே.. அவர்களும்
உங்களுடன் சேர்ந்து செய்கிறார்களே.. இதற்கு மேல் என்ன ஆதாரம் நாம்
தறுவது...
"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப "
இப்போது தீட்சை என்பது எதற்கு என்பது ஓரளவுக்கு புரிந்திருக்கும் என
நினைக்கிறேன்.. மந்திர உபதேசம் என்ற ஒரு விடயமும் இல்லை என்று
புரிந்திருக்கும்.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
இதுவே பட்டினத்தாருக்கு இறைவன் கொடுத்த உபதேசம், தீட்சை, மந்திரம்,, காரணம்
"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப "
இதன் தொடர்சியாக... தோழர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் மூலம் ஆராயலாம்..
குறிப்பு...
நாமும் தீட்சை கொடுப்பதாக பல இடங்களில் தெரியப்படுத்தியிருக்கிறோம்,
அதற்கான படங்கள் பதிவிட்டிருக்கிறோம்.. அதை வைத்து பேச ஆரம்பிக்கும்
முன்னர்.. சமய சடங்குகள் என்ற வார்த்தை இங்கு பதிவாக்கப்பட்டிருக்கிறது
என்பதையும்,, எமது மானவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் என்ன
என்ற தெளிவில்லாமல் பேசி இங்கு வாங்கிக் கட்டிக்கொண்டு போகவேண்டாம் என மிக
தாழ்மையுடம் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்.
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment