Friday, August 8, 2014

சாமி ஆடுவதும் பேய் ஆடுவதும்...

வணக்கம் தோழர்களே,

வணக்கம் Nirmalaraj Jeyarajah, உங்கள் கேள்வி சரியானதே, இது ஆதிக் குடிகளின் வழிபாட்டு முறைகளில் ஒன்று, அவர்களின் பாரம்பரியத்தில் தான் நாமும் வந்திருக்கிறோம், அவர்கள் செய்யும் முறைகளைத் தான் நாமும் அப்படியே நம்பின காலமும் இருந்தது, ஆனால் பின்னர் பல மாற்றங்கள் பல வினோதங்கள் மூலம் நமது பாதை மாற்றியமைக்கப்பட்டது.

உண்மைகளை புரியும் போது எமக்கும் ஆச்சரியங்கள் தான் காத்திருந்தது, ஆனால் உண்மையை மறுக்க யாராலும் இயலாது அல்லவா. சரி இந்த பத்தாதி முறைகளில் எங்கேயேனும் சாமி மனிதனில் வந்து பேசும் என்று கூறப்படுவதாக கானவில்லை, மாறாக பேய்கள் தான் வரும் என கூறப்படுகிறது,

உதாரணமாக இந்த பாரம்பரிய முறைகளில் பேய் ஆட்ட, பேய் அழைக்க என்ற தலைப்புக்களில் தான் மனிதர்களில் பேய்களை அழைப்பித்து வாக்கு கேட்கும் மந்திரங்கள் கூறப்பட்டுள்ளது.

இன்னும் தெளிவாக கூறினால் சாமி ஆடுகிறது என்றால் எதற்கு சாமிக்கு கும்பம் வைத்து அதை அழங்கரிப்பது, பேசாமால் சாமி ஆடுபவரை இருத்தி அவருக்கு அழங்கரித்து அவருக்கு பூசைகள் செய்ய வேண்டியது தானே. மேலும் வாக்கெடுப்பது போன்ற விடயங்களை ஆழமாக பார்த்தால் பல உண்மைகள் தெளிவாக புரியும்.

நாம் இந்த வழிபாடுகள் தவறானது என்று கூறவில்லை, அங்கு சாமிகள் ஆடுவதில்லை, பேய்கள் தான் ஆடுகிறது அதற்கு சாட்சிகள் ஆயிரம் உண்டு. அதனால் தான் கும்பத்தில் இருக்கும் தேவதைகளை பார்த்து பேய்கள் பூசைகள் செய்கின்றன. அல்லாது போனால் எதற்கு சாமி (மாரி), சாமிக்கு (மாரிக்கு - கும்பத்துக்கு) பூசை செய்யவேண்டும்.

அங்கு ஆடுவதாக கூறப்படுவது குறிப்பிட்ட பேய்கள் குறித்த தேவதைகளின் பரிபாரங்கள் ( காவலாளிகள்) அவ்வளவு தான், அவை குறித்த தேவதைகளின் பிரதினிதியாக வருவதாக வேண்டுமானால் கூறலாம்.

உற்சவம் என்பது தமிழ் சொல் அல்லவே, ஆகவே தமிழில் சடங்கு என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இன்று எந்த பூசாரியும் தமிழை மட்டும் ( பத்தாதியை) வைத்து சடங்குகள் செய்வதாக நாம் காணவில்லை, காயத்திரி சுலோகங்கள், மற்றும் அர்ச்சனை முறைகள் என பத்ததியில் இல்லாத விடயங்கள் அதிகமாக சேர்ந்துவிட்டது, நாட்கணக்கு அதிகமாகிவிட்டது, என்ன செய்வது பூசாரிகளும் பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லவா..

சரி விடயத்துக்கு வருவோம், இந்த நீங்கள் குறிப்பிட்ட “ கெங் கெங் கணபதி கௌரி புத்திராய” என்ற மந்திரம் உண்மையில் அந்த பத்தாதியில் இல்லை. இது குறிப்பிட்ட ஒருவராள் புகுத்தப்பட்ட முறை, அவரும் கிழக்கில் தான் இருக்கிறார். முடியுமானால் பத்தாதி வைத்திருக்கும் யாரிடமாவது கேட்டு பாருங்கள், ஆனால் அது பழைய பிரதியாக இருக்க வேண்டும், தற்போது இருக்கும் யாருடைய எழுத்திலும் இருக்க கூடாது.

மேலும் கௌரி புத்திராய என்று அவர்கள் கூறுவது அல்ல “ கௌரி புத்திராயி” என்றூ தான் கூறுவது வழக்கம், அதுவும் தவறு கிடையாது.

கௌரியின் மகனை அவர்கள் பெண் தேவதைகளுடன் சேர்த்து அழைக்கும் போது வினாயகரையும் பெண்னாகவே கருதி அழைக்கிறார்கள். பிள்ளையாருக்கு யானை முகம் வைக்கும் போது ஆண் பெண் என்ற கருத்துக்களை அவர்கள் வைப்பதிலும் தவறில்லைதானே. காரணம் இது ஆதிக் குடிகளின் பூசை முறைகள் என்பதால் அவர்களுக்கு உடன்பாடான விடயத்தை செய்யும் அனுமதி இருக்கலாம் என தோனுகிறது.

ஆனால் நாம் கூறுவது வினாயகர் என்பது பஞ்ச பூதங்களின் செயற்பாடுகள் மட்டுமே. அதற்கு உருவ அமைப்பை கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டளையாள் ஏற்பட்டது அதனால் தான் அவருக்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காரணம் யார் இருந்தலும் இல்லாவிட்டாலும் பஞ்சபூதங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியாது என்பதே உண்மை. இதுவே மருந்தும்.

இங்கு அணைவரும் வருகிறார்கள் போகிறார்கள் (பிறப்பு - இறப்பு) அதிலனைத்து வித உயிர்களும் அடக்கம், இங்கு இறைவன் இருக்கிறான் என்பவனும் வாழ்கிறான், வேறு வித வழிபாட்டில் இருப்பவனும் வாழ்கிறான் ஆகவே இது தான் சரியான தெய்வம் என்ற கோட்பாட்டுக்குள் யாரும் அடங்க முடியாது. இருப்பினும் அனைத்தும் இயங்கிறது அல்லவா, அதற்கான காரணம் தான் பஞ்ச பூதங்கள்.

இதன் உண்மையை பகுத்தறிபவன் ஞானி என பெயர் பெருகிறான், அதனால் தான் இறைவணை ஆதியும் அந்தமும் இல்லாதவனை பஞ்சாட்சரத்தில் அடக்கி அதற்கு பஞ்சபூதங்களையும் சாட்சியாக்கி ஐம்புலன்களையும் அடக்கும் உபாயமாக பஞ்ச பூதங்களையும் அடக்கியாலும் வகைகளை அனைத்து ஞானிகளும் பரிபாசையாக பாடி வைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையை புரியும் போது அவன் முக்தியின் வாயிலை அடைகிறான்.

உங்களுக்கு தெரியுமா,, பஞ்சாட்சரத்தின் உண்மை எது என்று.. விரைவில் அதுவும் வரும்,... ஆய்வுகள் தொடரட்டும், இதுவே நெற்றிக் கண் திறப்பது என்பது,, அதை விடுத்து மண்டையின் நெற்றியில் கண்ணைத் தேடும் மதியிலீர்,, மீண்டும் மீண்டும் இங்கு பிறப்பது திண்ணம்.

” வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம் ”

திருமந்திரம்..

” உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே”

” அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே”

நன்றி..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..

No comments:

Post a Comment