Saturday, August 30, 2014

நாதம் விந்து..

வணக்கம் தோழர்களே,

திரு விஜயகுமார் சு, எனும் வாசகர் ஒருவர் எம்மிடம் கேட்டிருக்கும் கேள்வி இது.

பரிபாசை புரியாதவர் இந்த பாடலை படித்திருக்க வாய்ப்புக்கள் இல்லை, அல்லாது போனால் அவரின் புரிதல் வேறாக இருக்கும், அல்லது நாம் இவ்வளவு பேசுகிறோம் என்றதால் இவரை சோதித்துப் பார்க்கலாம் என இருக்கும். இதில் எது என்பது நகக்கு புரியவில்லை.. இருப்பினும் அது எதுவாக இருந்தாலும் கவலையும் இல்லை..

” தாக்குவது ருதுவான யேழாநாளில்
தனபானம் பற்றி நீ தருணம் பார்த்து
பாக்கிலையும் அருந்தியது படுத்துப்பாரு
படுக்குமுன்னே வாழையிலை விரித்துக்கொள்ளு
முக்கிலையுஞ் செவி வெளியில் நாக்கு நாபி
மோகனப் பெண்குறி குடைந்து விரலைநீவி
நாக்கைவிட்டு மணிவருடி நடத்தும்போது
நாரி மின்னாள் காம ப்பால் வடியும் பாரே....”

இந்த பரிபாசை பாடலன் அர்த்தம் யாது ஐயா?”

இதற்கு மாற்றாக நாம் ஒரு பாடலை போடவில்லை என்றால் அது சரியாக இருக்காது அல்லவா..

“ ................................
பண்பான ஆண் பட்சி கொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதம் தான்
மகத்தான ஆத்மசலம் கூடக் கூட்டே”

இங்கு இருக்கும் இரு பாடல்களும் கூறுவது ஒன்றேதான் விஜயகுமார்..

ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் பார்த்து அதற்கான பரிபாசையை விளக்கக் கூடாது இருப்பினும் நீங்கள் பதிவிட்டது நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பாடல் என்பதால் விளக்கம் குழப்பம் இல்லை.

இது ஓர் மருந்து செய்முறையை மிக தெளிவாக விளக்கமாக கூறியிருக்கும் பாடல். இதில் எந்த காம சேட்டையும் இல்லை.

நாதம், விந்து அல்லது சக்தி, சிவம், அல்லது உகரம், அகரம் அல்லது எட்டு, ஒன்று அல்லது வாசி, யோகம் அல்லது இடகலை, பிங்கலை அல்லது குண்டலினி, சக்கரம் என பல பெயர்கலாள் கூறப்படும் கடவுள் இதுதான்,..

”நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” இதுவும் அது தான்..

பார்பான் தேகத்தில் பார் பசு ஐந்துண்டு இதுவும் அது தான்..

நீராய் உருகி என் ஆருயிராய் என்றானே இதுவும் அது தான்..

ஊற்றான உண்ணர் அமுதே உடையானே இதுவும் அது தான்..

கள்ளப் புலக்குறம்பை கட்டழிக்க வல்லானே இதுவும் அது தான்...

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி இதுவும் அது தான்...

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து இதுவும் அது தான்..

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி இதுவும் அது தான்..

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து இதுவும் அது தான்...

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே

இதுவும் அது தான்..

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இதுவும் அது தான்..

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே

இதுவும் அது தான்..

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே

இதுவும் அது தான்..

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே

இதுவும் அது தான்..

” கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”

இதுவும் அது தான்..
---------------------------------------------------------------

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே

இது அது என புரியாத மடையருக்கு...

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

இதுவும் அது தான்...

இப்படி ஒன்று பத்து ஆயிரன் இலட்சம் என பல பல கூறிக் கொண்டு போகலாம்...

பரிபாசை எதை கூறுகிறது என்றதன் விளகம் ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன், ஆனால் இந்த நாதம் விந்து பற்றி கேட்டால் அதற்கும் பதில் உண்டு..

பதில்

சித்தர்கள் வாழ்வியலை கற்கவும் சித்த மருத்துவம் கற்கவும் எமது ஆய்வியல் மையத்தில் சேர்வதற்கு தயாராக இருங்கள், விரைவில் அனைத்தும் இணையத்தளம் மூலம் சாத்தியமாக்கப் படும்..

அதற்கான செயற்திட்டங்கள் தொடங்கிவிட்டது, விரைவில் உண்மையை கற்க வேண்டும் என்பவர்களும், தமிழனின் பாரம்பரியத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் எமது சேவையில் இணைய வாய்ப்புக்கள் தரப்படும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர்..

No comments:

Post a Comment