வணக்கம் தோழர்களே,
இது ஓர் முக்கியமான வாதமாகவே நான் கருதுகிறேன், திரு தினகரன் அவர்களின் கேள்விகள் உண்மைகளை சொல்ல உதவியானவை..
வணக்கம் Dhina Karan, அவர்கள் உங்களுக்கு விலை சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் ஏன் பதிவிடவில்லை.! அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றால் ஏன் அதை நீங்கள் மற்றவருக்கு எடுத்துக் கூறவில்லை..!
உயர்வு என்பது நீங்கள் எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள், அது பணமாக
இருந்தால்... நீங்கள் பணக்கரரை போய் பார்ப்பதில்லையே ஏதோ ஓர் சாமியார்
அல்லது பூசாரியைத் தான் பாக்கிறீர்கள் அவர்கள் பணத்தால் உயர்ந்தவர்கள்
அல்லவே..
பணம் தான் சம்பாதிக்கவேனும் என்றால் ஆயிரம் வழிகள்
உண்டு,, அதில் என்ன நல்ல வழி கெட்ட வழி,, உங்களுக்கு நல்லதாக இருக்கும் வழி
மற்றவருக்கு கெட்டதாக இருக்க முடியும் அல்லவா..
ஜாதகம்
கணிக்கும் வேலை நாம் செய்வதாக கூறவில்லையே,,. காரணம் அது முழுப் பூசனியை
சோற்றில் மறைக்கும் செயல்... நாம் திடீர் என முளைத்த செடிகளைப் பற்றி
பேசுவதில்லை..அப்படி பேசினால் அதில் வேறு அர்த்தம்
இருக்கும்.
முகனூலில் பலரும் பலதையும் பதிவிடலாம், ஆனால் அது சரியானதாக இருக்க
வேண்டும் என்பது தான் முக்கியம். பலனற்ற வார்த்தை எதை செய்யும். உங்கள்
தேவை பலரதும் ஆலோசனைகள் கருத்துக்கள் என்றால் உங்கள் சுய சிந்தனை எங்கே
போனது,
மனிதன் ஆறு அறிவு கொண்ட பகுத்தறிவாளன் என்றால் என்ன அர்த்தம்..
நாம் இங்கு கூறுவது உங்கள் சிந்தனையை தெளிவுபடுத்த வேண்டியே..
ஒரு உதாரணம் மட்டும் போதும் உங்கள் முகனூல் தகவல் மற்றும் கருத்துக்களின் திறமையை சொல்ல....
திரிகடுகு சூரணம் அதாவது திப்பிலி மிளகு சுக்கு..
இதை செய்து சாப்பிட்டல் உடல் நலம் கிடைக்கும் என்கிறார்கள் பல முகனூல்களில் உங்கள் நண்பர்கள்...
நான் அதை கடுமையாக மறுக்கிறேன். காரணம் அவர்களின் அறிவு புத்தகம் மட்டுமே
செயலில் இல்லை.. இவை மூன்றும் முறையாக சுத்தி செய்யாவிட்டால் உங்கள் சிறு
நீரகங்கள் உட்பட பல உடல் உருப்புக்கள் பாதிப்படையும்... காரணம் அதில்
இருக்கும் நஞ்சு..
சுக்கு நல்லது என்று எவன் சொன்னது,,.ஏதாவது
சித்தர் பாடல் காட்டுவீர்கள் ஆனால் அதே சித்தர் அதற்கான சுத்திமுறையை வேறு
இடத்தில் சொல்லியிருந்தால் என்ன செய்வீர்கள்..
திருமந்திரத்தை
மட்டும் வைத்துக் கொண்டு மூலர் இதைத்தான் சொன்னர் என்று கூறக்கூடாது அவர்
பாடிய தொகுப்புக்கள் அனைத்தும் வேண்டும் அல்லாது போனால் அவர் குறிக்கும்
பாடல் தொகுதியாவது வேண்டும் உண்மையை புரிய..
இப்படி எங்காவது ஓர்
விடயத்தை பார்த்தால் அதை அப்படியே பதிவிடுவது.. நாம் கெட்டது பரவாயில்லை
இன்னும் சில சேர்ந்து கெடட்டும் என்ற நல்ல சிந்தனையாக இருக்குமோ..
பழமையான ஆலயங்கள் குறிப்பாக சிவ ஆலயங்கள் போங்கள் அங்கு மூலவர் என்று
லிங்கம் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கும், ஆனால் அதே போன்று பல லிங்கங்கள்
வெளியில் பல மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள் என பலராலும் பிரதிட்டை
செய்திருப்பார்கள்.. இங்கு மூலவராக இருப்பதும் அவரே, வெளியில் இருப்பவரும்
அவரே.. ஆனால் மூலவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவைக்கு
கொடுப்பதில்லை ஏன்!
அப்படியானால் நீங்கள் இறைவனை தரிசிக்க
போகவில்லை.. மூலவராக கருத்தப்படும் கல்லையே தரிசிக்க போகிறீர்கள் என்பது
தெளிவு.. கல்லை ஏன் அங்கு போய் தரிசிக்க வேண்டும்.. அதை வீதியில் வைத்தும்
தரிசிக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே மரத்தடிப் பிள்ளையார் மற்றும்
மற்ற தெய்வங்கள்.. மரத்தடியுல் இருக்கும் பிள்ளையார் செய்ய முடியாததையா
திருச்சி உச்சிப் பிள்ளையார் செய்யப் போகிறார். அப்படியானால் மரத்தடியில்
பிள்ளையார் ஏன்..!
இந்த கேள்வி உங்களுக்கு விதண்டாவாதம்..! காரணம் உண்மை இருக்கிறது அல்லவா..
நாம் பெரியவர் என்று சொன்னதில்லை ஆனால் உங்களைவிட கெட்டிக் காரன் என்பதில்
எமக்கு சந்தேகம் இல்லை.. காரணம் விதண்டாவாதத்துக்கும் நாம் பதில்
தருகிறோம் அல்லவா..
வீட்டில் குழந்தை நமக்கு புரியாத விடயத்தை கேட்டல் விதண்டாவாதம் என்பார்கள்.. அது போன்றுதான் இதுவும்..
உங்கள் நண்பர்கள் அவர்களின் முகனூலில் பதிவிடுவது போலவே, நாமும் இங்கு
பதிவிடுகிறோம் இது எமது சுதந்திரம், விருப்பம் இருந்தால் நீங்கள்
படியுங்கள் திருந்துங்கள்.. எம்மை பதிவிடச் சொல்வதும் விட்டுவிடச்
சொல்வதும் எப்படி சாத்தியம்..
நாம் மற்றவரை குறை கூறவில்லை, குறையைக் கூறுகிறோம். குறை தெரிந்தால் தானே நிறையைத் தேடமுடியும்.
” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
” அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே “
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment