வணக்கம் தோழர்களே,
இன்றில் இருந்து
எமது முகணூல் மூடப்பட்ட தளமாக இருக்கும், நண்பர்கள் மட்டுமே
பார்க்கமுடியும், காரணம் தேவையானவர்கள் கேட்டு உள் நுலையட்டும் என்றுதான்.
அது இருக்க, நவக்கிரகம் பற்றி கேட்ட கேள்விக்கு சரியான பதிலைக் கானவில்லை, சாத்திரம் சொல்லும் சாம்பவான்கள் பலர் முக நூலில் சுற்றித்திரிகிறார்கள் ஆனால் எவனும் பதில் சொல்வதாக இல்லை. முட்டால் பசங்க..
அடுத்த கேள்வி..
பழமையான கோவில் அல்லது ஆலயங்களுக்கு சென்றால் அங்கு வசந்த மண்டபத்தின்
கூறையில் தலைகீழாக இருக்கும் படி அதாவது நாம் மேல் நோக்கி பார்க்க
வேண்டும், அவை நம்மை கீழ் நோக்கி பாக்கவேண்டும் என்ற அமைப்பில் இராசி
சக்கரம் அல்லது இராசி மண்டலம் செதுக்கப் பட்டிருக்கும். இதை எத்தனை பேர்
பாத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொன்னால் இதுவரை நீங்கள் ஆலயங்கள்
கோவில்கள் போகவில்லை என்று அர்த்தம்.
இப்போது இந்த இராசி மண்டலம் ஏன் தலைகீழாக அமைக்கப்பட்டிருக்கிறது ?
மேதாவிகளே, சாதக நிபுணர்களே இதற்கு எங்காவது பாடல்களில் அல்லது புராணங்கள்
வேதங்கள் ஆகமங்கள் உப நிடத்துக்கள், இதிகாசங்கள், சித்தர் பாடல்கள் என
விளக்கம் உங்களால் தரமுடியுமா..!
சிந்தியுங்கள் மேதாவிகளே,...
சாதகம் பார்ப்பது ஏன் என்று முதலில் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள். பல
நிபுணர்களின் வீட்டில் போய் பாருங்கள் அவர்களின் நிலை என்ன என்று.
எவன் எப்ப பிறந்தான் என்று இங்கு எவனுக்கும் தெரியாது. நேரத்தை அல்லது
மணியை கண்டுபிடிச்சவன் யாரு.. உங்க அப்பன் மாரா முட்டாப் பசங்களா...
சிந்திக்க மாட்டிங்களா,
நேரம் காலம் இவை இரண்டுக்கும் ஆரம்பம் தெரியாது என்று கூடத் தெரியாத முட்டாப் பசங்க எல்லாம் சாதகம் கணிக்கும் நிபுணர்கள்...
கடிகாரம் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படிடா நீங்க பஞ்சாங்கம்
எழுதுவீங்க.. மேதாவிகளே, யாராவது 2000 வருடத்துக்கு முந்தய பஞ்சாங்கம்
காட்ட முடியுமா..!
சூரிய உதயம் இல்லாத நாட்டுக் காரனுக்கு எப்படி சாதகம் எழுதுவாங்களோ, இந்த மேதாவிகள்.
ராமர், கண்ணன், வினாயகர், என உங்களிடம் இருக்கும் சாதகங்களுக்கு கணக்கு
இல்லை, ஆனால் அதே சாதக அமைப்பில் பிறக்கும் எவனும் அப்படி இருப்பதில்லை
ஏனோ..!
முதல் தடவை வரும் 7 1/2 ஆண்டு சனி கூடாது, அதுவே நடுவில்
வந்தால் பொங்கும் சனி, மீண்டும் வந்தால் மங்கு சனி.. ஆகமொத்ததில்
ஒன்றுக்கும் நிரந்தரக் குணம் கிடையாது..
மனிதன் அப்படி இருந்தால் குறங்கு என்பது அதுவே நவக்கிரகம் என்றால் சாமி, கடவுள் என்பது, என்னடா உங்க நியாயம்..
சனீச்வரனுக்கு பிடித்த உலோகம் இரும்பு என்கிறீங்க, ஆனால் தங்கத்தால்
கவசம், காகம், ஆபரணங்கள் போட்டு சோடிச்சிறுக்கீங்க, என்னடா கொடுமை இது,
நீங்க சொல்றத நீங்களே கடைப்பிடிக்கிறது இல்லை, ஆனால் மற்றவனுக்கு ஆலோசனை
கொடுப்பது, முதலில் இந்த நிபுணர்கள் எல்லம் சேர்ந்து ஒரு விதிமுறையை
உருவாக்குங்கடா..
சனிக் கிரகம் இருப்பதால் நாசா சட்டலைட் வரும்
போது தடைப்படுகிறது என்கிறீங்க, ஏண்டா அதே சனியை தூக்கி 10 கிலோமீற்றர்
மாத்தி வைத்துபாருங்க என்ன நடக்குது பார்க்கலாம், உங்க நாட்டை வேவு
பாக்கும் சட்டலைட் எல்லாத்தையும் நிருத்திடலாம், முட்டால் பசங்க..குறித்த
ஆலயத்தில் இருக்கும் சனிக்கு இரும்புக் கவசம் போடுங்க முதல்ல...
உழைத்து சாப்பிட நினைங்க.. இல்ல பல சுனாமிகள் இன்னும் வரும். இப்படித் தான் கிருஸ்ணரின் நாடே அழிந்த்து.
” சூதும் வாதும் வேதனை செய்யும் “, அது கடவுளாக இருந்தாலும் சரி..
”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” திருந்துங்க முட்டாப் பசங்களா..
” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.”
” என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”.
எல்லாம் நல்லது என்றுகூறியிருக்கும் போது கூட சந்தேகம். இந்த தேவாரத்தை
சாந்தி பரிகாரம் என்று சொல்லி வியாபாரம் செய்யது எத்தனை பேர்..கணக்கில்
இல்லை.
கடைசிப் பாடலை பாருங்கள்
“ தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
இந்த பாடலை மாலையில் ஓதினால் வானில் அரசாள்வார் என்கிறார், இதற்கும் நாம் இங்கு கேட்ட கேள்விக்கும் தொடர்பு உண்டு மேதாவிகளே..
படிச்சவன் சொன்னாலும் கேட்கிறதில்லை, பழையவன் சொன்னாலும் கேட்கிறது இல்லை.
இனியாவது திருந்துங்க தம்பிமாரே....!
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment