வணக்கம் தோழர்களே,
எமது வாசகி ஒருவர் இந்த கடித்தம் எழுதியிருக்கிறார் மின்னஞ்சலுக்கு...
“ தங்களின் சாதகம் பார்ப்பது என்ற தலைப்பில் எழுதிய கருத்துக்கள் மிக
அருமை. பலரின் வாழ்க்கையோடு விளையாடி பணம் சேர்க்கும் பலருக்கு சாட்டையடி.
ஆனால் எனக்கோ குழப்பத்தின் மேல் குழப்பம். சாதகம் பார்ப்பதென்பது பொய்யா,
தமிழ்நாட்டில் சனிகொரு கோவில், குரு, சுக்கிரன், ராகு, கேது என்று
அனைத்திற்கும் தனிதனி கோவில்கள் கட்டி உள்ளார்களே தோழரே, அணைத்து
கிரகத்திற்கும் கோவில்கள் உண்டென்றால் அந்தந்த கிரகத்திற்கான ரகு கேது குரு
சனி சுக்கிரன் போன்றோரும் உண்டு என்றுதானே அர்த்தம். அது உண்மையென்றால்
இந்த கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுகிறது
என்றுதானே அர்த்தம். தங்களின் நிலைப்பாடு இதுபற்றி என்னவென்ற தெளிவை
எங்களுக்கு அளிக்க முடியுமா தோழரே. தங்களின் அறிவு பகர்வு மிகவும்
இன்றியமையாதது.
பொதுவாக அனைவராலும் கெட்டவன் என்று பெயர் பெற்ற
கிரகம் சனி கிரகம் தானே. என்னை பொருத்தமட்டில் சாதகம் பற்றி பலர்
கூறக்கேட்டிருக்கிறேன். ராகு மற்றும் கேதுவும் சனி கிரகத்திற்கு நிகரான
கெடுதல்களை செய்யகூடியவர்கள் என அறிகிறேன். தெளிவு தங்களிடமிருந்துதான்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ”
இது முறையான கேள்வியும் சரியான சந்தேகமும் தான்..
தெளிவாக படிக்கவேண்டும் என்பது இதைத்தான்.. நாம் இந்த கிரகங்கள் இல்லை என்றும் கூறவில்லை, இராசி மண்டலம் இல்லை என்றும் கூறவில்லை.
ஆலயங்கள் என்பது ஆகம நெறிக்கு உட்பட்டவை,, ஆனால் இன்று ஆலயம் என்ற பெயரில் இருக்கும் கட்டிடங்களை ஆலயம் என்று கூறமுடியாது.
” ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புல கதவு அடைப்பதுவும் காட்டி”
”மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை”
நவக்கிரகம் என்பது ஒன்பது வாயில்கள், அதனால் தான் நமக்கும் ஒன்பது
வயில்கள் தரப்பட்டிருக்கிறது. அது எம்முடனேயே இருப்பது.. ஞானம் என்ற கடவுளை
தரிசிக்க இந்த ஒன்பது வாயில்களையும் சரியாக திறக்கவும் அடைக்கவும்
தெரியவேண்டும் என்பதே அறிவு.
ஐம்புலன்கள் என்பது ஐம்பூதங்கள் ஆன
சிவசக்தி சொரூபம்.. இந்த சிவசக்தியை நாம் அடைய முடியாத வகையில் காவலாக
இருக்கும் வாயில்கள் தான் இந்த நவ துவாரங்கள் அல்லது நவ கிரகங்கள்.
ஆதியில் அறிவினால் கண்டறிந்த உண்மைகளை திறம்பட கூறியிருக்கிறார்கள் ஆனால்
அவை காலத்தின் போக்கிலும் மாற்று மத ஆதிக்கத்திலும் வேறு உருவம்
எடுத்துவிட்டது.
நவக்கிரகங்கள் இவைதான் என்பது கூட நம்மை சுற்றி
இருக்கும் அடையாளங்களை வைத்தே ஆதியில் கணித்தனர். அதாவது கோலங்கள்
என்றார்கள் அவற்றுக்கு பேர் வைத்தார்கள்.
எந்த ஒரு உருவத்தையும்
நாம் சுற்றிவிடும் போது அது கோலமாக (வட்டமாக) தோனும், ஆனால் வட்டமான அல்லது
கோலமான உருவத்தை சுற்றிவிட்டால் அது சுற்றுவது தெரியாது,, இதை ஆதியில்
அவர்கள் அறிவினால் கண்டிருந்தனர் அதனால் தான் கோலங்கள் என்றனர்.
அவர்கள் இதற்கு சாட்சியாக எடுத்த விடயம் உங்கள் கண்கள், உடலுருப்பில்
முழுமையான 360 பாகை வட்டமாக கோலமாக இருப்பது கண்கள் (மணிகள்) மட்டுமே
என்றார்கள், அவை நீள்வட்டமான இமைகளின் நடுவே இருக்கிறதும் அவர்களுக்கு
அறிவை தூண்டியது.. இந்த பிரபஞ்சம் என்பது வெளியில் இல்லை என்பதை அவர்கள்
இதை வைத்தே ஆய்வுகள் செய்ய தொடங்கினர்.. அவர்களிடன் தொலைகாட்டிகள் இல்லை,
அதையும் தாண்டிய பகுத்தறிவு எனும் இறைவன் தந்த கருவி இருந்தது. பார்க்கும்
காட்சிகள் எந்தளவு உறுதியற்றவை என்பதற்கு கண்களுக்கு மிக அருகாமையில்
இருக்கும் மூக்கை பார்த்தார்கள்,, உங்கள் கண்களால் மூக்கை நேரடியாக
பார்த்தால் தெரியும் ஏன் என்று. தெளிவற்ற நிலையில் என்ன என்று கூறமுடியாத
ஒன்றாக இது தோன்றும்.. இன்னும் சற்று ஆராய்ந்தால் ஒரு கண்ணை மூடிக் கொண்டு
பார்த்தால் முக்கின் இடம் மாறித் தெரியும்.. மாறி மாறித் தெரியும்,. ஒரு
விடயம் இரண்டு இடங்களில் இருப்பது போன்று தோன்றும்.. இதையே அவர்கள் மாயை
என்றார்கள்..
பார்வைக்கு மிக அருகாமையில் இருந்தால் அதன் உண்மை
புலப்படாது என்பது அவர்களின் அறிவாக இருந்தது.. அதனால் தான் இறைவன் என்ற
ஐம்பூதங்கள் மிக அருகாமையில் இருப்பதால் அதன் உண்மையை புரிய முடியாத
நிலையில் இருக்கிறோம் என்றார்கள். அவற்றை நம்மை விட சற்று விலக்கி வைத்தால்
தான் அவற்றை சரியாக பார்க்க முடியும் என்றார்கள்.. அதனால் தான் கோவில்கள்
வந்தன.. கோவில் என்பது ஆராய்சியின் கூடம் அவர்களுக்கு.. பகுத்துப்
பார்க்கும் தன்மை அவர்களின் அறிவு,, இதை உண்டால் இது நடக்கும் என்பது
ஆய்வியல் மூலமே சாத்தியம் இல்லாது போனால் அறு சுவை என்பது இல்லாத விடயமாக
இருந்திருக்கும்.
அருகாமையில் இருப்பவனை அறியாமல் இருக்கிறாய்
என்றார்கள் அதனால் தான்.. பிரபஞ்சம் எப்படி செயலாற்றுகிறது என்பதை அவர்கள்
மனித உடலை வைத்தே ஆய்வு செய்தனர், அதன் வெளிப்பாடாக பல உண்மைகளை அவர்களால்
கூற முடிந்தது. மனிதனின் உடல் செயற்பாட்டு விளக்க எப்படியோ அப்படியே
பிரபஞ்சம் செயலாற்றுகிறது என்றார்கள்..
திருமந்திரம் கூறுவது இதை
தான்.. உனக்குள் இருப்பதை அறிவது என்பது இறிவனை அறிய வேண்டிய விடயம் அல்ல
உன்னை நீ அறிய வேண்டிய விளக்கம், இந்த பிரபஞ்சம் எப்படி மாயையாக இருக்கிறது
என்ற விடயம், இந்த அடிப்படை விளக்கங்களை மக்களுக்கு தெளிவு படுத்த
ஏற்படுத்திய இடமே ஆலயம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள்
காரணம் அங்கு சென்றால் இந்த உலக அமைப்பு உனக்கு புலனாகும் அதைக் கொண்டு நீ
உனது வாழ்க்கையின் பிறவியின் நோக்கத்தை அடைவாய் என்றார்கள்.. பிறவியின்
நோக்கம் கடவுளை அடைவது தானே என்கிறீர்களா..! நல்லது.. எப்படி அடைவது என்ற
விடயம் மறந்து போனது அல்லவா..
படித்தால் தான் பரீட்சை எழுத முடியும்.. பரீட்சை எழுதித் தானே முடிவுகளை அறிய முடியும்.
இங்கு பரீட்சை ஆரம்பிக்கும் இடம் தான் ஆலயம்.. காரணம் அது தானே ஆய்வு
கூடம்.. அங்கேயே அனைத்து மாயைகளையும், உண்மைகளையும் வைத்தார்கள். சரியானதை
தேர்ந்தெடுத்து படித்தால் அவன் பரீட்சையில் சித்தி அடைகிறான்.. அவனே
சித்தன் என்றார்கள்.. அதனால் தான் சித்தர்கள் ஆலயங்களில் இருப்பதில்லை.
அவர்கள் இருக்கும் இடத்தை ஆலயமாக அமைத்தார்கள் அது ஓர் ஆராய்சி மையம்
(ஆச்சிரமம்) என்றார்கள். இப்படி பல உண்மைகளை அறிவின் மூலம் பகுத்தாய்வு
செய்த அவர்கள் கடவுள் என்பது மிக பெரிய அறிவு என்றார்கள் அதுவே ஞானம்
என்றார்கள். ஒன்றும் ஆய்வு செய்யாமலா 3000 பாடல்களை ஒருவரால் எழுத
முடியும்.
இவ்வாறு பல மாயைகளையும் ஆராய்ந்த அவர்கள் இந்த
பிரப்ஞ்சத்தை பத்திரப்படுத்துவதே இந்தப் பிறவியின் நோக்கம் என்ற தெளிவான
அறிவை பெற்றார்கள், அதன் மூலம் இந்த உடல் தான் பிரபஞ்சமாக
காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த அறிந்த அவர்கள் நாம் எப்படி நம்மை
பாதுகாப்பது என்ற தேடலின் வெளிப்பாடுகளாகவே மருத்துவம் என்ற ஒன்று
ஆரம்பமானது.
அதனால் தான் உடலை அழியாமல் இருக்கும் முறைகளை
கண்டாராய வேண்டி அவர்களின் தேடல் காய கற்பம் வரை தொடர்ந்தது, சாகவரம்
இல்லாதது இருப்பது எது என ஆராய்ந்து நீண்ட காலம் வாழக்கூடிய மருந்துகளை
தயாரித்தார்கள் அப்படி வாழ்வதன் மூலமே இந்த பிரபஞ்சம் எங்கு பயனிக்கிறது
என்ற ஆய்வின் முடிவுக்கு வர நினைத்தனர். பிரபஞ்ச சக்திய அறிந்தால் தானே
நமது பிறவியின் நோக்கத்தை தெரியமுடியும் என்றதில் மிக தெளிவாக
இருந்தார்கள்.
கடவுள் என்பது பலவாக இருந்தால் அதன் உண்மை
பொயாகிவிடும் அல்லவா.. உண்மை என்றைக்கும் ஒன்றாகத் தான் இருக்க முடியும்.
பலவாக இருப்பது பொய்யாகவே இருக்கும் என்பது அவர்களின் தெளிந்த அறிவு.
அதனால் தான் கடவுள் என்ற பால் குறிக்காத சொல்லை வைத்தார்கள்.
இப்படி அவர்கள் ஆய்வுகள் செய்த விடயங்கள் பல தொகுதியாக எழுதி வைத்தனர்,
இதற்கிடையில் இன்று இருக்கும் வியாபாரிகள் போல அன்றும் வியாபாரிகள் செய்த
உத்திகள் மக்களின் பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று வேறு திசைக்கே
அழைத்துச் சென்றுவிட்டது.
இதற்கிடையின் எங்கோ ஆரம்பித்து எங்கோ
வந்திருகிறோம் என்று நினைக்கவேண்டாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்ன என்ற
ஓர் கேள்வியும் இங்கு வந்ததால் இது பதிவாகியது.
இராசி மண்டலங்களை
ஏன் ஆலயங்களில் கூரையில் வைத்தார்கள் என்றால் ... அவற்றை நம்முள் இருந்து
விலக்கினால் தான் தெளிவாக பார்க்க முடியும் என்பதற்காக.. வெளியில் இருந்து
பார்த்தால் தான் அதன் உண்மை புரியும் என்பதனாலும் அவை எமக்கு தேவை அற்றவை
ஆகவே அதை தள்ளி வைத்தார்கள்.. அவற்றைப் பற்றிய ஆய்வுகள் செய்தார்கள் அவை
எம்மை பிரபஞ்சத்தோடு சேர்கும் அறிவை மயக்குகிறது என்பதை அறிந்தார்கள் அதை
தள்ளினார்கள்.. அதற்கு துணையாக இருக்கும் வாசல்களான கிரகங்களை விகாரமாக
அமைத்தார்கள் அவர்களுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லை என்றார்கள்.. வாய் சொல்வதை
காது கேட்கும் ஆனால் மூக்கு நுகராது.. கண்கள் பார்ப்பதை மூக்குகள் நுகரும்
ஆனால் செவிகள் சொல்லாது ஆகவே அவை தொடர்பற்றவை என்றார்கள்.. அதனால் தான்
அவற்றை அடக்குங்கள் என்றார்கள் அதாவது அதை கட்டி வைத்துவிடுங்கள்
என்றார்கள்.. ஆனால் நாம் இன்று அவற்றிடம் பிச்சை எடுக்கிறோம்..
ஆலயங்கள் அனைத்தும் ஆலயங்கள் அல்ல என்பதை புரிய வேண்டும். எல்லா ஆய்வு
கூடங்களும் கல்வியை தராது... சில வியாபாரம் கருதி ஆரம்பிக்கப் படும்..
நீங்கள் வாங்கிய அனைத்து பட்டங்களுக்கும் ஒரே மதிப்பு இல்லை தானே.. அனைத்து
கல்லூரிகளும் சிறந்தவை அல்லவே...
ஓர் உயிர் எப்போது
உற்பத்தியாகிறது என்பது யாரும் கூறமுடியாத உண்மை அல்லவா.. அந்த நிமிடத்தில்
இருந்தே இந்த வாசல்கல் இங்கே தான் வரப்போகுது என்பது முடிவாகிவிடும்..
அதாவது நீங்கள் வீட்டை கட்டிய பின்னரா வாசல் வைக்கிறீர்கள்,, திட்டம்
போட்டபோதே வாசல் முடிவாகிறது அல்லவா..
குழந்தை பிறப்பது கட்டிய
வீடு அல்லவா, அதற்கு வாசல்கள் வைக்கப்பட்ட இடம் கட்டியவனை தவிர எவனுக்கும்
தெரிய வாய்ப்பில்லை என்பது அவர்களின் ஆராய்சி முடியுகள்..
எது
எப்படி இருந்தாலும் உயிர் வாழ தேவையானது உணவு அதற்கு மேல் உடலை பாது காக்க
வேண்டியது மருந்துகள் என்ற உண்மையின் நிமித்தம் அவர்கள் பயனம் ஆரம்பமானது..
இப்படி பல விடயங்கள் காலத்தால் வியாபாரம் நோக்கத்துடன் மாற்றியமைக்கப் பட்டிருப்பது தான் உண்மை.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றார்கள் காரணம் நாதன் என்ற
சிவசக்தி உடம்பில் அதாவது மனித உடலில் இல்லை நடப் பட்ட கல்லினுல்
இருக்கிறது என்றார்கள்.. ஆதியில் அவர்கள் சிவலிங்கமாக பிரதிட்டை செய்தவை
எதுவும் கற்கள் இல்லை மருந்துகள் செய்யும் மூலப்பொருள் அது.
ஆலயம் என்றால் ஆய்வு கூடம் என்று சொன்னால் அங்கு இருப்பவை ஆய்வுக்கு
தேவையான மருந்துகளும் அல்லவா.. பாதுகாப்பாக இருக்கும் இடமாக அதை வைத்தே
அமைத்தனர்.
மாயையை வெளியிலும் உண்மையான ஒன்றை மூலத்திலும்
வைத்தார்கள். அதனால் தான், நாம் கூறியிருந்தோம் வெளியில் இருக்கும் லிங்க
செய்ய முடியாததையா உள்லிருக்கும் லிங்க செய்யப் போகுது என்று. அப்போதாவது
நீங்கள் சிந்திப்பீர்கள் என நினைத்தோம்.
தர வேண்டியவை எல்லாம்
தந்து தான் உங்களை இங்கு அனுப்பியிருக்காங்க... அது என்ன என்ற தெளிவு
இருந்தால் மனிதப் பிறவியின் நோக்கம் பிச்சை எடுப்பது இல்லை என்ற அறிவு
வளரும். கடவுளிடமும் பிச்சைதான் எடுக்கிறோம் ஆனால் வசதியாக வந்து பிச்சை
எடுக்கிறோம்..
பிச்சை எடுக்கும் இடம் இன்று ஆலயம் கோவில்
தேவஸ்தானம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும்
வழிமுறைகள் கற்பிக்கும் இடம் ஆச்சிரமம், சோதிட நிலையம் என பல பெயர்களால்
அழைக்கப் படுகிறது.
பிச்சை எடுக்கும் முறையை சொல்லுபவன் பணம் சம்பாதிக்கிறான் ஆனால் பிச்சை எடுப்பவன் எடுத்த வன்னம் இருக்கிறான்.
இதை நாம் சொன்னால்... நம்மை அறிவாழியா நீ பெரிய என்று பிச்சைக் காரன் கேட்கிறான்.
நவக் கிரகம் என்பது வாசல்கள் அவற்றை அடைப்பதற்கு வழி தேடவேண்டும் அதை விடுத்து அதனை நம்முடன் கூட்டிக் கொண்டு திரியக்கூடாது..
இந்த ஒன்பது வாசல்களும் ஒன்றை ஒன்று பார்க்காத படி படைக்கப்பட்டிருக்கும்
மனிதன் அதை பார்க வைக்கும் முறையை செய்து விட்டு அதனிடம் இருந்து பாது
காப்பு கேட்பது மிக தெளிவான அறிவுதான்..
படைத்தவனுக்கு தெரியாதா
அதை பார்க்கும் படி செய்வதற்கு அவனே அது பார்க்ககூடாது என்று
அமைத்திருக்கும் போது நாம் அதை பார்க முட்பட்டால் அவனின் படைப்பை
குறைகூருவதாக அமையாதா... அப்படி அவனை குறை கூறுவதற்கு அவன் இருக்கும் இடம்
என்ற பெயரில் ஆலயத்துக்கு போய் அவனுக்கு திட்டிவிட்டு வருவதற்கு பெயர்
வழிபாடு...
உங்க வீட்டுக்கு வந்து உங்களை திட்டிட்டு போனால் அவனுக்கு நீங்க உதவி செய்வீங்களா அல்லது கட்டிப் பிடிச்சி கொஞ்சுவீங்களா...
இதன் விளக்கம் மீண்டும் ஓர் பதிவா வரும் ...
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment