வணக்கம் தோழர்களே,
நாம் இங்கு எமது
கருத்து என்று எதையும் பதிடவில்லை, மாறாக சமயம் சார்ந்த வெளிப்படையான
உண்மைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். அதை சாட்சிகளோடும்,
ஆதாரங்களோடும் உங்கள் முன் பதிவிடுகிறோம், உண்மையை ஏற்க விரும்பும் மற்றும்
ஆராயும் தோழர்களுக்கு இது புரியும்.
எமது சமய நியமங்கள் தடம்மாறி சென்றதற்கான கரணங்களை கண்டறிந்தால் எமது
நாடுகளும், மக்களும் உண்மையான வாழ்கையை வாழ்வதற்கும், போலிகளிடம் இருந்து
வெளிவருவதற்கும் இலகுவாக இருக்கும்.
இன்றும் உங்களிடம் ஒரு பதிவை கேள்வியாகவும் விவாதமாகவும் வைக்கிறேன், முடிந்தால் ஆராயுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
திருமந்திரம் மூவாயிரம் பாடல்களை வைத்து வாசி யோகம், குண்டலினி பயிற்சி,
உடல் சக்கரம், ஞானக் கண், தாமரை இதழ், என பல பல பெயர் பேசி தன்னையும்
ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றும் இந்த சாமியார்கள், யோகிகள், யோகாசன
மேதவிகள், மற்றும் ஆராய்ச்சியாலர்கள், பேராசிரியர்கள் என நீண்ட பட்டியலில்
இருக்கும் அனைவருக்கும் ( ஒட்டு மொத்த உலகுக்கும்) இந்த பாடல்கள் எதை
கூறுகிறது என உங்களிடம் இருக்கும் சாதாரன கண்ணையும் அறிவையும் வைத்து
சிந்தித்து பதில் ( கருத்துக்களை) பதிவிடுங்கள்.
மூன்றாம் தந்திரம் - அமுரி தாரணை பகுதிக்கு விரையுங்கள்..
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே
.846..
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே
.847..
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே
.848..
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே
.849..
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகிடு மேனி இருளுங் கபாலமே.
.850..
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.
இதில் இருதிப் பாடல் மிக தெளிவாக பதித்திருக்கிறார் மூலர்,
“ சோதி மருந்திது சொல்லவொண்ணாதே”
உண்மையான மருந்தை கூறமுடியாது என்று தெளிவாக கூறியிருக்கிறார். இதைத் தான்
நாம் முந்தய பதிவில் வேறு சாட்சியுடன் கூறியிருந்தோம், அது கீழே...
----------------------------------------------------------------------------------------------------
“ முத்தியும் சித்தியும் முதல்கரு தீட்சையும்
சித்தியாய் பாடிய சிறந்த இருநூறை
வித்தியாச மாக விருதாவில் மூலர்
புத்தியில் லாமற் கிழித்தாரே நூலை “
மூலர் தமது உண்மையான நூலை கிழித்துவிட்டார்.
உணமையின் பயனின்மையினால் அதை புத்தியில்லாமற் கிழித்தார் என்கிறது பாடால். “விருதா - பயனின்மை, பிழை, வீண் “
அதாவது இந்த மனித குலத்தின் தன்மையை பார்த்து இது வேண்டாம் என அவர் கருதியதாக பொருள்.
அடுத்த பாடல் இதை உருதி செய்யும்.
“ கிழிபட்ட நூலின் கெடிபெற்ற சூத்திரம்
விழிபட யிருப்பதும் வாய்த்தவர் சித்தராம்
கழிபட்ட மூடர்க்குக் காணுமோ அமுதம்
வழிபடப் பாரார்க்கு வாயாது ஞானமே “
கிழிக்கப்பட்ட நூலைப் படித்தவன் சித்தன் என்றும் அவர் கிழியாது விட்ட,
கழிக்கப்பட்ட நூலில் அமுதம் இல்லை என்றும், அதை பார்ப்பவருக்கு ஞானம்
கிடையாது என்றும் கூறுகிறார்.
----------------------------------------------------------------------------------------------------
ஆகவே மூலரே தனது திருமந்திரம் மூவாயிரத்தில் உண்மையான மருந்தை கூற முடியாது என கூறியிருப்பது தெளிவு.
அதையும் மீறி வாதிட்டால் ஓர் கேள்வி,,,
வாசியாலும், குண்டலினியாலும், உடற்சக்கரம், நெற்றிக்கண் திறப்பது போன்ற
விடயத்தை கூறிய அவர் எதற்காக காய கற்பம் பற்றி பேச வேண்டும்...!
சித்தர் பாடல்கள் என்றால் பரிபாசை திரட்டு என்று தானே அர்த்தம், அப்படி
இருக்க அவர் கூறிய வாசி, குண்டலினி, யோகம் அனைத்துமே பரிபாசைக்கு உட்பட்டது
அல்லவா..
அப்படி இதன் பரிபாசை எங்களுக்கு புரிகிறது என்றால் ஏன் மருத்துவம் தொடர்பான காயகற்பம் தொடர்பான பரிபாசைகள் புரியவில்லை.
ஏன் எவனும் இருக்கும் காலம் வரை நோயற்று இருக்கவில்லை, மரணத்தை அதன் காலத்தை நீடிக்கவில்லை.
” கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மாண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே
.828..
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே
.829..
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே
இங்கு திருமூலர் என்ன ஆபாசப் பாடமா நடத்துகிறார், புணர்ச்சி விந்து தலைவன் தலைவி, உள்ளே விடாதே வெளியில் விடு என்று..
சிந்திப்பது மறந்த இனமா நாம், பகுத்தறிவின் வித்தே நாம் தானே, உலகுக்கு
முதல் குடியும் நாம் தானே, நமது படைப்பின் நோக்கம் மறந்தது ஏன்,
மறக்கடிக்கப்பட்டது யாரால்..!
திரு மந்திரம் பொய் என்பது அல்ல, அதன் புரிதல் தவறாக இங்கு கூறப்படுகிறது என்பது தான் எமது வாதம்.
இதன் தொடர்ச்சி மேலும் தொடரும்..
“ சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?”
” அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்?”
“ சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? ”
”என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?”
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment