Monday, August 4, 2014

எது வாசி யோகம்,...

வணக்கம் தோழர்களே,

வாசி செய்கிறோம், யோகம் செய்கிறோம், பிராணாயாமம் செய்கின்றோம் மூச்சை அடக்குகிறோம், என்று கூறும் பல அன்பர்களுக்கு அன்பாகவே கூறியிருக்கிறேன், அதை செய்ய வேண்டாம் என்று காரணம்... வாசிப் பயிற்சி உடலாரோக்கியத்தை கெடுக்கும், மார்பு வலியை உண்டுபன்னும், மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவும் நேரும்...

உண்மையைச் சொன்னால் யார் தான் கேட்கிறார்கள், பணம் சம்பாதிக்கும் கூட்டம் சொல்வதை நம்பி வாழ்க்கையை தொழைப்பது பின்னர் வைத்தியசாலையில் போய் பணத்தை செலவு செய்வது கேட்டால் பணக் கஷ்டம் என்பது...

” தானது வான தான பூமியில்
தானது வான தன்மை யறிந்திலர்
தானது தனக்குள் தானுண்டு வென்று
போனது காயம் புலனறி யாரே “

இந்த பூமியில் கிடைக்கும் மருந்தை (கற்பத்தை) அறியாமல், தனக்குள் இருக்கிறது (வாசி) என்று நினைத்து உடலை அழிப்பர்.

” அறியாது மூடர் ஆல வனத்தை
பரியாது சப்பரம் பாரிதை விட்டால்
தெரியாது சோதி திடமில்லா காயம்
குறியாது முத்தி கூடாது அற்பரே”

கற்பம் அறியாதவருக்கு இறைவனை பற்றி தெரியப்போவதில்லை (சோதி) உடல் திடமில்லாமல் இருந்தால் முத்தி எப்படி கிடைக்கும்.

“ அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பது பாரே “

யோகம் எது என்று தெரியாமல் கண்டதையும் செய்து (வாசி) செத்தது தான் மிச்சம், கற்பம் என்பதுவே ஞானத்தின் அடிப்படை, அது இன்றி இங்கு எதுவும் இல்லை,,, அற்பர்களே உங்களை அழிம்பு என கூறுகிறார்..

“ பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீடரைச் செய்து உபதேசம்
கூத்திது வாகும் கூடாது முத்தியே “

இதை விட தெளிவாக ஒரு பாடலை காட்ட வேண்டுமா என்ன...

சில நூல்களை படித்துவிட்டு காத்தடைக்கும் உபாயம் (வாசி) செய்வதாகவும் நாம் யோகி என்றும் கூறி சீடரை சேர்த்து உபதேசம் செய்து கூத்தாடுவது என்கிறார், இது முக்தி கிடையாது...

மிக முக்கியமான பதிவு இது... திரு மூலரையும், திரு மந்திரத்தையும் ஆதாரமாக கொண்டு பேசும் அன்பர்களுக்கு இது இதய அடைப்பு வந்தால் நாம் காரணம் அல்ல...

“ முத்தியும் சித்தியும் முதல்கரு தீட்சையும்
சித்தியாய் பாடிய சிறந்த இருநூறை
வித்தியாச மாக விருதாவில் மூலர்
புத்தியில் லாமற் கிழித்தாரே நூலை “

மூலர் தமது உண்மையான நூலை கிழித்துவிட்டார்.
உணமையின் பயனின்மையினால் அதை புத்தியில்லாமற் கிழித்தார் என்கிறது பாடால். “விருதா - பயனின்மை, பிழை, வீண் “
அதாவது இந்த மனித குலத்தின் தன்மையை பார்த்து இது வேண்டாம் என அவர் கருதியதாக பொருள்.
அடுத்த பாடல் இதை உருதி செய்யும்.

“ கிழிபட்ட நூலின் கெடிபெற்ற சூத்திரம்
விழிபட யிருப்பதும் வாய்த்தவர் சித்தராம்
கழிபட்ட மூடர்க்குக் காணுமோ அமுதம்
வழிபடப் பாரார்க்கு வாயாது ஞானமே “

கிழிக்கப்பட்ட நூலைப் படித்தவன் சித்தன் என்றும் அவர் கிழியாது விட்ட, கழிக்கப்பட்ட நூலில் அமுதம் இல்லை என்றும், அதை பார்ப்பவருக்கு ஞானம் கிடையாது என்றும் கூறுகிறார்.

“ ஞானமும் யோகமும் நலமான வாதமும்
பானமும் உண்டாம் பரமான உப்பினால்
ஞானமுஞ் சித்தி நவிலாதே சுந்தரா
மீனமே மேசமா யிருபது முற்றே “

இதில் தெளிவாக இருக்கிறது எதை சொல்லக்கூடாது என்று, அப்படி இருக்க அதை மூலரும் சொல்லியிருப்பாரா,,, அப்படியே, இதில் “ மீனம், மேசம் “ என இரு புதிய விடயம் வருகிறது அல்லவா.. அது பற்றி அடுத்த பதிவில் படிக்கலாம்.

இப்போது வாசி செய்தால் என்ன கிடைக்கும் என பார்க்கலாம்..

“ வாச்சப்பா நாவையும் தான்மேலே யூணி
வடிவான வாய்வுகளை கட்டும் போது
பேச்சப்பா கண் தெரிக்கும் வாய்வுதானும்
பிரியமுடன் சய ரோக மாகுந்தானே “

வாசியை (வாயுவை) அடக்கி கிடைப்பது என்ன என்று ஓர் சிறிய உதாரணமே இது.. சய ரோகம் வரும்.. கவனம் தோழர்களே..

“ தானென்ற வாசியென்றும் சொல்லக் கேளு
தந்தையுட விந்து வல்லோ வாசியாச்சு “

இங்கு வாசி என்பது தந்தையின் விந்து என்று கூறப்படுகிறது அதற்காக தந்தையிடம் விந்த தரும் படி கேட்டு அடி வாங்காதீர்கள்..

தந்தை என்பது சிவம் எனவும் விந்து என்பது நாதத்தில் இருந்து பிரிக்கப் படுவது. இது காயகற்ப முறை.

” ஆடுமே யுப்பா லழியாது காயம்
ஆடுமே வாசி யசையாமல் நிற்கும்
ஆடுமே யோகம் ஆதியுப் பாலே
ஆடுமே யோகம் அப்போது சித்தியே “

” கற்பத்தை யுண்டாற் காயம் அழியாது
கற்பத்தி னாலே காணலாம் கைலையை
கற்பத்தி னாலே காணலாஞ் சோதியை
கற்பத்தி னாலே காலனை கட்டிடே “

இங்கு தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதைப் போன்றே குண்டலினியை எழுப்புவதாக கூறி சிலர் மூலம் பௌத்திரம் போன்ற ரோகங்களை வரவளைக்க முயற்சிக்கிறார்கள்.. அவதானமாக இருங்கள். உடலைக் காக்க மருந்துகளால் மட்டுமே முடியும். வேறு எந்த பயிற்சியும் உதவாது.

திரு மூலரின் திருமந்திரம் மூவாயிரம் ஓர் பரிபாசை திரட்டு, அதனுல் இருப்பது நீங்கள் நினைப்பது போன்று வாசி எனும் மூச்சுப் பயிற்சியும் இல்லை, குண்டலினி எனும் பிரானாயாமமுமில்லை, வாசிக்கும் குண்டலினிக்கும் எதற்கு அமுரி தாரனையும், அட்டகர்ம பிரயோகமும்..

திரு மந்திரதிரத்துக்கு விளக்க உரை எழுதி ஆசிரியர்களாலும், அதை ஆய்வு செய்து முதுமாணி பட்டம் பெற்ற பேராசிரியர்களாலும் கூட அதில் கூறியது போல் வாழ முடியாது இறந்து போயினர்.. ஆகவே அவர்கள் எழுதிய விளக்க உரைகள் தவரானது என்பதற்கு அவர்கள் மரணமே சாட்சி.

அப்படி இருக்க அதை எடுத்து படித்து நீங்கள் எப்படி முக்தி அடையப் போகிறீர்கள், சிந்திக்க மறந்த இனம் மனிதம் ஆனதால் தான், வெளிப்படையான நூல்கள் கிழிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன, பிற மொழிகள் சைவத்துக்குள் உள் நுளைந்தது.

அல்லாது போனால் தென்னாடுடைய சிவனுக்கு எதற்கு வட மொழி பிரயோகம். சிந்திக்க மாட்டீர்களா..

சிந்தியுங்கள்.. ஆழ்ந்து ஆராயுங்கள். 








 






நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
மனிதன்.
சித்த மருத்துவன்..

2 comments:

  1. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாசியென்று மூச்சதனை வயிறுப்பவேயூதிக்
    கூசி முகங் கோணிக் குருடாவார் - நாசி நுனி
    தன்னை அறிந்து தவத்தில் இருக்காதார்
    என்ன இருந்தும் இனி.
    - ஞான வழி வெண்பா

    ReplyDelete