Monday, August 11, 2014

ஓர் காய கற்பம் செய்முறை விளக்கம்

வணக்கம் தோழர்களே,

சித்த மருத்துவத்தின் பல பரிணாமங்களில் இது மிக முக்கியத்துவம் பெருகிறது. வாலையில் வடிக்கும் திராவகம் ஒன்று இங்கு செய்து காட்டப்படுகிறது.

இது காய கற்பம் ஒன்றின் செயற்பாட்டு விளக்கம்,

“ விந்திருகிக் குளிர்ந்து விடுந்த் தாபசோபம்
வெதுப்படங்கி தன் உடம்பு வலுக்குந்தானே “

குறிப்பிட்ட காயகற்பம் திராவகமாக வடிக்கப்பட்டு மீண்டும் ரேசிக்கப்பட்டு இருமுறை வடிக்கப்பட்ட திராவகம். இதை காலை மாலை அரிசி எடை மண்டலம் உண்டால் தாதுக்கள் வலுப்பெற்று உடல் பிரகாசிகும், உடல் குளிச்சியாக இருக்கும், நரை திரை போகும்,, உடல் கஸ்தூரி வாசம் பெறும், கண்கள் பிரகாசிக்கும், ஆண்மை அதிகரிக்கும், ஓராண்டு தொடர்ந்து உண்டால் ஆயுல் அதிகரித்து யோக மார்க்கத்தில் பயனிக்கலாம்.

” சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே”

இங்கு கூறப்படும் வாயு இதுவே..இதைத் தான் உள்ளே அடங்கச் செய்ய வேண்டும்.
வெறுமனே காற்றை பிடித்து ஒன்றும் பலனில்லை..

” அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே”

நீங்கள் ஆகமம் ஓதினாலும் வேதம் ஓதினாலும் அந்த ஓர் எழுத்தை அறிந்தால் தான் இது சாத்தியம் என்கிறார்.

” விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே”

புரிந்தால் நீங்களும் சித்தர் தான்.. க க க...

” தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே”

யாருக்கு இது பொருந்துகிறது,,,

“ உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே”

யார் உய்யப் போகிறீர்கள்...













“ உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே”

மூலர் சொன்ன வயுக்கள் என்ன என்று தெரியாமல் காற்றை மூக்கல் பிடித்து மார்புக்குள் அடக்கும் மேதைகளே, இதய அடைப்பு ஏற்பட்டு இறப்பதற்குள் தப்பித்துக் கொள்ளுங்கள்.

நுண்ணறிவினால் ஆராயாமல் உங்கள் அறிவால் ஆராய்ந்தால் கடவுள் இல்லை, அவரின் காலடி தூசு கூட கிட்டாது.

” போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே”

காற்றாக கலந்தவன் என்றால் எந்த காற்று என்பதுவே நுண்ணறிவு.. மேதாவிகளே..

“ உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பிரானே”

நுண்ணறிவு வேண்டும் மேதாவிகளே, நீரான காற்று வேண்டும்...

” மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே “

திருமந்திரம் 3000 மட்டும் பார்த்துவிட்டு பேசக்கூடாது...! 



நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.

1 comment:

  1. Karungkanthal mattrum muthupundu pondra aborva mooligalin padangalai Ariya vendum! thangalal udhava mudiuma? Nandri

    ReplyDelete