Wednesday, August 20, 2014

யார் கடவுள்...

வணக்கம் தோழர்களே,

கடவுள் பற்றி எழுத ஆரம்பித்ததும் பலதரப்பட்ட கருத்துக்கள் வரத்துவங்கின, ஆனால் இதையே மேடையில் பலரும் பேசுகிறார்கள் அதற்கு எவரும் கேள்வி கேட்பதாக தெரியவில்லை. அதுவும் சரி கேள்வி கேட்பவன் போவதில்லை என்பதுவும் உண்மைதான். காரணம் அடியேன் கூட போவதில்லை, போக ஒருவரும் அனுமதிப்பதும் இல்லை.

பதிவுகள் தொடர்பாக எனது மாணவர்கள் பலரும் குழப்பமடைந்து எனக்கு மின்னஞ்சலும் சிலர் அழைபேசியிலும் கேட்டது..

“ நீங்கள் தானே ஐயா கூறினீர்கள் சிவனே பெரும் கடவும் என்றும் விட்ணு இரண்டாவது பெரும் கடவுள் எனவும் மற்றும் உள்ள தெய்வங்கள் விம்பங்களாக சித்தரிக்கப் பட்டவை என்றும், ஆனால் நீங்களே இன்று கடவுள் என்பது அறிவு என்கிறது போல பதிவிட்டிருக்கிறீர்கள், மேலும் சிவன் பெருங்கடவுளுக்கு சாட்சி கேட்கொறீர்கள்” என்று கேள்விகள் பாய்கின்றது..

எமது மாணவர்கள் என்று கூறிக் கொள்ளும் அனைவரும் கவனமாக அவதானியுங்கள்..

நாம் எப்போதாவது உங்களுடன் இருந்து மந்திர உபாசனை செய்வதை பார்த்ததுண்டா, அல்லது மந்திரம் ஓதி ஏதாவது ஓர் காரியத்தை செய்து காட்டியதுண்டா.. அல்லது உங்களுக்கு புரியாத மொழியில் பேசியதுண்டா அல்லது மந்திரத்தால் அனைத்தையும் செய்ய முடியும் என்று கூறியது தான் உண்டா..!

ஆனால் உங்களில் சிலரது உண்மையான பிரச்சினைகளை உடண்டியாகவே தீர்த்து காட்டியிருக்கிறோம்.. எமக்கு நாடுகள் கடந்து இருப்பதும் கவலையில்லை, யார் என்பதும் கவலையில்லை, ஆனால் அது உண்மையான விடயமாக இருக்கவேண்டும். அது உங்கள் பலருக்கும் தெரியும்.. பூசைகள் செய்வதில்லை ஆனால் நீங்க என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே உங்கள் பிரச்சினைகள் தீர்ந்தவர்கள் உண்டு தானே...

பலருக்கு சமய தீட்சையும், சிலருக்கு உபணயனமும் செய்திருக்கிறோம் அல்லவா.. அப்போது ஏனும் உங்களுக்கு புரியாத சொற்களை உங்கள் காதுகளில் கூறியதுண்டா.!

ஆனால் நாம் சிவ பூசைகள் செய்வதையும் சக்தி பூசைகள் செய்வதையும் நீங்கள் பார்திருக்கிறீர்கள், அதில் நாம் பாடல்களை தவிர்த்து ஏதேனும் கூறுவதை பார்த்ததுண்டா..! சில சமயங்களில் நாம் பேச்சு மொழியில் உரையாடுவதை அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் உங்களில் பலருக்கும் மந்திரங்கள் தரப்பட்டிருக்கிறதும் உண்மை, சிலர் வாலாயம் செய்திருப்பதும் உண்மை, அதில் ஏற்படும் சக்தி மாற்றங்களை கண்டிருக்கிறீர்கள், தற்போதும் அதை செய்து வருகிறீர்கள்,.. தொடர்ந்தும் செய்யப் போகிறீர்கள்.

இதில் உங்களுக்கு பலதரப்பட்ட தெய்வங்களைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பேசியிருக்கிறேன், அதன் வரலாறுகள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சித்தர்கள் வழிமுறையை கொண்டே உங்களுக்கு காட்டப்பட்டிருக்கிறது.

இப்போது விடயத்துக்கு வருவோம்..

உங்களில் எத்தனை பேர் உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்ற தேவையின் நிமித்தம் எம்மிடம் வந்தீர்கள், எத்தனை பேர் கடவுளை அறிய வந்தீர்கள், எத்தனை பேர் எது உண்மை என தேடி வந்தீர்கள்..

உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி காரணங்கள் உண்டு, தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, மாந்திரீக பிரயோகம், குடும்ப சுமை, என உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தேடியே வந்தீர்கள் என்பது தான் முதல் உண்மை. காரணம் நீங்கள் அனைவரும் முன்னமே பல அல்லது ஒரு குருவிடமாவது கற்றவராகவே இருந்தீர்கள், அங்கு சரியான பதில் இல்லை என்றதும் இங்கு வந்தீர்கள், நாளை இன்னும் ஒருவரை தேட வேண்டும் சிலர் தேடியும் இருக்கிறீர்கள்..

ஆக மொத்ததில் கடவுளை தேடி வந்தவர்கள் இங்கு யாரும் இல்லை.. ஆலயத்துக்கு செல்வது ...

“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”

என்ற அவ்வையின் பாடலைப் பாடுவது பின்னர் பிள்ளையார் அப்பா, எனக்கு குடும்ப கஷ்டமா இருக்கு பணவசதிகளை தா என கேட்பது, சிலர் தொழிலை தா, சிலர் மனைவி தா, கனவன் தா, இப்படி கேட்பது.. யாரும் தமிழைத் தா என்று கேட்பதில்லை..

கடவுளிடம் பேசுங்கள் என்றால் சிறிப்பது..

தனியாக பூசை அறைக்குள் இருந்து மந்திரம் சொன்னால் கடவுளுக்கு கேட்கும் என்ற சிந்தனையோடு ஆரம்பித்த உங்கள் பயனத்தை எப்படி ஒரே நாளில் மாற்ற முடியும்..

உண்மையை எடுத்துச் சொன்னால் சிறிக்கிறீர்கள், சினிமாவைப் பாருங்கள், நகச்சுவை நடிகனாக வருபவன் உண்மையாக பேசி அடிபடுவான், அதைப் பார்த்து நாமும் சிறிப்பது, கதா நாயகன் நாயகி பொய்யைச் சொல்லி பெயர் வாங்குவது அதை நாம் பாரட்டுவது..

ஆகவே உண்மையைச் சொன்னால் உலகம் சிறிக்கும் என்பது உண்மைதான், அதனால் தான் சித்தர்களை பார்த்து பித்துப் பிடித்த்வர் என்று கேலிபன்னி சிறிக்கிறீர்கள்,, சாமி வேடம் போடும் கயவர்களை பார்த்து அன்போடு வணங்குகிறீர்கள்..

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள் கேட்டால் சிவன் இப்படித்தான் திரிந்தான் என்பார்கள் ஏதோ சிவனுடன் இவர்கள் திரிந்த மாதிரி..

சிவன் என்றால் அறிவு என்று அர்த்தம் அதன்படி சித்தர் போக்கு அறிவின் போக்கு என்பது அர்த்தம்..

அடியேன் சிவனை வணங்குவது, அதுவே அறிவு என்பதனால் தான். அந்த அறியே ஞானம் என கூறப்பட்டது..

விடயத்துக்கு வருவோம், நீங்கள் எம்மிடம் தேடியதைத் தான் நாம் கொடுக்க முடியும், ஆனால் நீங்கள் தேடுவதோ கிடைக்காத ஒன்றை..

மேலை நாடுகளில் இருக்கும் மாஜிக் காரர்களை பார்த்திருப்பீர்கள் இல்லாத ஒன்றை அவர்கள் எடுத்து தருவார்கள், அவர்களை அங்கிருப்பவர்கள் சாமியார்கள் என்று கூறுவதில்லை, ஆனால் இங்கு விபூதி எடுத்தால் போதும் அவன் சாமியாராகி விடுகிறான், சேர்த்து குங்குமம் எடுத்தால் போதும் பீடாதிபதி, சிலைகள் எடுத்தால் போதும் அவன் கடவுளாகவே மாற்றப்படுகிறான். வெள்ளையன் செய்தால் அது மாஜிக், நம்மாட்கள் செய்தால் அது கடவுள் அவதாரம்..

இப்படி சமூக அமைப்பில் வளர்ந்த உங்களை மாற்றுவது என்றால் எப்படி சாத்தியம், எமது மாணவர்கள் பலரே, தங்களது வாகனங்களில் பல கயிருகள் கட்டியிருக்கிறார்கள் (வெட்கமாகவே இருக்கிறது) கட்டியவர்களின் வண்டிகளில் பெற்றோல் முடிவதில்லையா என்று ஓர் சந்தேகம் எனக்கு, கேட்டால் இது நம்பிக்கை என்கிறார்கள்.. கண்களை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கும் பூனைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது..

உங்களுக்கு கட்டுங்கள் காரணம் உங்கள் படைப்பின் இரகசியம் யாருக்கும் தெரியாது, ஆனால் வண்டியின் பிறப்பு புத்தகமாகவே கிடைக்கிறது அல்லவா..

விபூதியை நீங்கள் அணியுங்கள் பொட்டை நீங்கள் வையுங்கள், அதை ஏன் வண்டிக்கு வைக்கிறீர்கள் அதுவும் இந்து மதத்தை சேர்ந்ததுவா,, அதன் தாய் தந்தை யார் என்று தேடிப்பாருங்கள் நிச்சயமாக வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான்.. வண்டிக்கும் மதமாற்றம் செய்வதுதான் உங்கள் அறிவு என்றால் சிவனைப் பற்றியும் சமயத்தின் அடிப்படைப் பற்றியும் நீங்கள் புரிவது எப்படி சாத்தியம்,..

சித்தன் போக்கு சிவன் போக்கு...

பிரபஞ்ச சக்தி ஒன்றே என்று கூறும் யாருக்கும் பிரபஞ்சத்தின் பரிமானங்கள் தெரியாது, விஞ்ஞான ஆய்வுகளே ஒரு முடிவுக்கு வர இயலாத விடயத்தை நாம் முடிவெடுத்து பேசிவிடுகிறோம்..

சந்திரனை பாம்பு விழுங்குவதே கிரகனம் என்றார்கள் சான்றோர்கள், நாமோ அதை அப்படியே நம்பி செயற்பட்டோம் முற் காலத்தில், பின்னர் விஞ்ஞானம் வந்தது அது பாம்பு விழுங்குவதில்லை, பூமியின் நிழல் மறைக்கிறது என்றதும் சிறித்தோம், மடையர்கள் என்று சான்றோரை பேசினோம், ஆனால் பாம்பு என்றால் நிழல் என்ற ஓர் அர்த்தம் தமிழ் நிகண்டுகளில் இருப்பது யாரும் அவதானிப்பதில்லை, அவதானித்தவர்கள் சொன்னால் அதை ஏற்பதில்லை. அவதானித்தவர்களும் உண்மையை சொன்னால் நம்மை பைத்தியம் என்பார்கள் என்று சொல்வதும் இல்லை. கிரகங்களில் இரண்டு நிழல் கிரகம் என்றார்கள் அவற்றின் உருவத்தை பாம்பைப் போல காட்டியதன் காரணம் அது தானே..

எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லை..

சித்தன் போக்கு சிவன் போக்கு

விடயத்துக்கு வருவோம்.. மாந்திரீகம் இல்லை என்றும் நாம் கூறவில்லை அது பொய் என்றும் நாம் உங்களுக்கு ஒரு போதும் கூறவில்லை.

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

மனது என்பது அறிவு, அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்றார்கள், அதாவது தெளிந்த அறிவு வந்தபின் மந்திரம் என்ற மறை பொருள் எதற்கு என்பது இதன் கருத்து.

” நிறை மொழி மாந்தர் ,ஆணையிற் கிளத்த. மறைமொழி தானே மந்திரம் என்ப”

மறை மொழி என்றால் மறைவாக கருத்து கூறப்பட்ட சொற்றொடர் என்று அர்த்தம்.. அதாவது அர்த்தம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.. தெளிவான அறிவு பெற்ற ஒருவனுக்கு எதற்கு மறைவாக கூறப்பட்ட மொழி.
( மந்திரம் ). தெளிவான அறிவு இருந்தால் அவனே நிறை மொழி மாந்தன் என்பது.. அப்படி அவனே ஏன மந்திரம் செபிக்க வேண்டும்.

இதற்கு மேலும் இந்த கடவுள் நம்பிக்கை எந்தளவு சமூகத்தை பாதிக்கிறது என்று பாருங்கள்..

திருப்பதிக்கு போனால் செல்வம் பெருக்கும் என்கிறார்கள், அங்கு தினமும் பெருமாலுக்கு பூசை செய்யும் குருக்கள் இருப்பது தேவஸ்தான வீட்டுத்திட்டத்தில், அவர்கள் வைத்திருப்பது இரண்டு சக்கர மோட்டார் வண்டிகள், அங்கு தரும் லட்டு புன்னியம் என்கிறார்கள் ஆனால் அந்த லட்டை செய்யும் குருக்கள் மார்கள் நடைபாதையில் திரிகிறார்கள்..

கொல்லிமலைக்கு போனால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்குமாம், ஆனால் அங்கு இருக்கும் மக்களோ அன்றாட உணவுக்கு பாடுபடுகிறார்கள்.. இப்படியே அனைத்து ஆலய மற்றும் புன்னிய தலங்கள்..

இதைச் சொன்னால் நாத்திகம் என்பார்கள் ஆனால் அதை எம்மிடம் கூற முடியாது காரணம் நாம் தினமும் கடவுளை வழிபடுகிறோம். அவனுக்கு பூசைகள் செய்கிறோம், அவனை தரிசிக்கிறோம், அவனுக்கு ஆராதனைகள் செய்கிறோம். அவன் தந்த அறிவுக்கு நன்றி செலுத்துகிறோம்..

சித்தன் போக்கு சிவன் போக்கு

சரியை கிரியை யோகம் ஞானம் என வழிகாட்டப் பட்டிருப்பது இதன் அமைப்பையே, பல விதமான பயிற்சிகளின் முடிவிலேயே உண்மையை அறிய முடியும்..

இந்த பயிற்சிகள் இல்லை என்றால் உங்களால் நாம் சொல்வதை ஏற்க முடியாது..

ஆலயத்தினுல் அம்பாள் அழகாக அழங்கரிக்கப் பட்டு ஆசி வழங்க காத்திருந்தாலும், வெளிவட்டத்தில் ஆட்டம் போடும் சாமி (பேயை) வணங்கி அதனிடம் குறி கேட்ட பின் தானே மற்ற வேலை. பேய் சொன்னதற்கு அம்பாள் சாட்சி.. என்ன கொடுமையடா இது..

கடவுள் கூத்தாடினால் உலகம் தாங்குமா என்ற சின்ன சிந்தனை கூட இல்லை இங்கு.. அப்படியே சாமி சொல்ல வேண்டுமானால் அதை ஆலயத்தில் தானா அல்லது ஒருவனின் உடலில் தானா சொல்ல வேண்டும், அப்படியானால் கடவுளின் சக்திக்கு கட்டுப்பாடுகள் உண்டா,, கட்டுப் பாடுகள் இருப்பின் அது கடவுளாக முடியுமா.. !

உங்கள் சிந்தனைகளை நீங்கள் வெற்றியடைய அதன் மாயையில் இருந்து வெற்றி பெற பயிற்சிகள் தேவை அதற்குத் தான் மந்திரங்கள். அவை நீங்கள் சொன்னதை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அதை நீங்கள் வகுக்கவில்லை.

உங்கள் சிறந்த அறிவினால் மந்திரங்களை கட்டுப்படுத முடியும், அதன் காரணமாகவே ஒரே விடயத்துக்கு பல பல மந்திரங்கள் அமையப் பெற்றிருக்கிரது.

நீங்கள் கடவுள் என நினைப்பது கடவுள் இல்லை என்பதுவே நாம் அனைத்து மாணவர்களுக்கும் கூறுவது.

அதனால் தான் உருவம் அருவம் அருஉருவம் என வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்கள் சான்றோர்கள். அறிவினால் காண்பதுவே கடவுள்..

கடவுள் என்ற ஒன்றை வணங்கினால் போதும் என்றால் ஏன் எமக்கு மூப்பு எய்தவேண்டும் என்ற அறிவின் வெளிப்பாடே மருந்துகள் என பெயர் பெற்றன.. நீங்கள் கடவுளை வணக்கினாலும் சரி இல்லையாலும் சரி உடலுக்கு தேவை உணவு, உணவுக்கு தேவை சத்துக்கள், சத்துக்களை சரியாக பகுத்து கூறினால் அதுவே மருந்து. அதுவே பகுத்தறிவு..

அவனின்றி அணுவும் அசையாது, மருந்தின்றி அவனும் அசைய முடியாது.. அதனால் தான் அமிர்தம் என்ற கதை உங்களுக்கு கூறப்பட்டிருக்கிறது..

கடவுளாக இருந்தாலும் மருந்தை செய்தே சாப்பிடவேண்டும் என்பதற்கு தான் மந்திர மலையும் பாற்கடலும், வாசுகிப் பாம்பும் உவமையப் படுத்தப்பட்டிருக்கிறது..

ஏன் கடவுளுக்கு சக்தி இல்லையா அமிர்தத்தை மந்திரத்தால் கையில் அழைப்பித்து தேவர்களுக்கு கொடுக்க.

கதை கதையாம் காரணமாம்..

சித்தன் போக்கு சிவன் போக்கு..

ஆகவே நாம் உங்களுக்கு கூறியிருப்பது நீங்கள் பயனிக்கும் பாதையை மட்டுமே,, அதில் இருக்கும் துன்பங்களை தாண்டுவது உங்கள் அறிவினால் தான் ஏனனில் அறிவே கடவுள்.

அதனால் தான் அறிஞர்கள் காலத்தை தாண்டி இருக்கிறார்கள் கடவுளைப் போல.. இன்று நீங்கள் சித்தர் ரிசி முனி என்று பேசுவது அவர்களின் அறிவினை பற்றியே, அவர்களது அறிவே கடவுள் என்பது அதன் உட்கிடக்கும் புதையல்.

முயற்சி செய்தவர்கள் எல்லாம் புதையல் எடுத்த வரலாறு இல்லை. ஆனால் முயற்சி செய்யாமல் அதைப் பற்றி பேசவும் கூடாது.

கடவுளின் உருவத்துக்கும் அதன் தன்மைக்கும் எந்த ஒற்றுமையும் அல்ல, வேற்றுமையும் அல்ல, அவர்வர் விரும்பும் வடிவத்தை அவரவர் கடவுளாக வணங்க முடியும். ஆனால் அது கடவுள் இல்லை. அனைத்தையும் கடந்து நிற்பது தான் கடவுள் என்றால் கடவுளையும் கடந்து நிற்பது எதுவோ அதுவே கடவுளாக இருக்க முடியும்.

“ அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் ” கடவுள் என நீங்கள் நினைப்பதை தாண்டியும் சிந்திக்க முடியும் என்பதே மேல் உள்ள வரிகள் கூறுவது.

அப்படி அதைத் தாண்டி சிந்திப்பது அறிவு.. ஞானம்.. கடவுள்..

இந்த நிலை உங்களுக்கு புரிய வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல, முடிந்தால் புரிய முயற்சி செய்யுங்கள்... அவ்வளவு தான்.

நாம் உங்களுக்கு தந்திருக்கும் பயிற்சிகளை முதலில் செய்யுங்கள் அதன் தன்மைகளை ஆராயுங்கள், பின்னர் இந்த நிலை பற்றி சிந்திக்கலாம், ஆனால் நீங்கள் பயனிக்கப் போகும் பாதை பற்றி தெரியப்படுத்துகிறேன். முடியும் என நினைப்பவன் பிந்தொடரு... முடியாதவன் விட்டுவிடு..

” ” தொட்டல்லோ காட்டாத வித்தைபாரிற்
தொட்டெண்ணிப் போட்டாலும் வாராதுவித்தை
விட்டல்லோ தன்னாலே யாகுமென்று
மேதினியில் இறந்தவரோ கோடாகோடி””

சித்தன் போக்கு சிவன் போக்கு..

எனைஈன்ற தாய்தந்தை பாதம் போற்றி
எனையாண்ட குருமாரே சித்தர்களே போற்றி..
வாலையாம் மணோன்மணியால் பாதம் போற்றி
யான்செய்யும் நாற்பத்துமுக்கோண பூசை போற்றி
என்னறிவில் நீங்காத கூத்தாடி சிரசே போற்றி











 













சிவசக்தி மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment