வணக்கம் மாணவர்களே,,
இது எமது பாரம்பரிய முறைகளை பின்பற்றும் மாணவர்களுக்கான பதிவு...மிக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..
சித்தர்களின் வழியில் செல்வது இலகுவானது அல்ல எனறு நாம் முன்னமே கூறியிருக்கிறோம், முக்தி வழி செல்வது பற்றியும் மிக தெளிவாகவே கூறியிருக்கிறோம், அறிவு எமது ஞானம் என்பதையும் கூறியிருக்கிறோம்...
மந்திரம் சொன்னால் பணம் வருமாக இருந்தால் அதை அன்றே பாண்டவர்கள்
கூறியிருப்பார்கள் அல்லவா... எதற்காக போர் தேவைப்பட்டது என்பது பற்றி
சிந்திக்க வேண்டும்... சிவனிடம் வரம் பெற்ற எவனும் செல்வங்கள் அனைத்தும்
கிடைக்க வேண்டும் என்று கேட்டதாக வரலாறுகள் இல்லை... அர்சுணன் தவவலிமக்கு
ஆயுதமே கேட்டான், அதை விடுத்து நாடு நகரம் கேட்கவில்லை என்பது தெரியாது
உங்களுக்கு..
உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் பார்க்கும் எத்தனை
பேர் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்... பணத்துக்காக நீங்கள் இறைவனை
நாடுவதானால் அவர் உங்களிடம் இருந்து மிக தூரமாக செல்வார் என்பதற்கு நீங்களே
சாட்சி...
“ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ”
இந்த வாக்கு உங்களைப் போன்றவருக்காகவே கூறப்பட்டது..
” தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் “
இதுவும் உங்களுக்கு கூறப்பட்டது தான்.. தேவையுடன் நீங்கள் அவனை நோக்கி
செல்லுவது, அவன் உருவாக்காத விடயத்தை, அப்படி இருக்க அதை அவன் உங்களுக்கு
எப்படி வரமாக தரமுடியும் என சிந்தியுங்கள்...
மந்திரங்கள் உங்கள் தடைகளை நீக்கவே உள்ளது, நீங்கள் உண்மையாக செயற்பட்டால் தானே அதன் தடைகளை மந்திரங்கள் நீங்க முடியும்.
கடனை நீக்குவதற்கு மந்திரம் செபிக்கலாம் என்றால் இன்று அதை உங்கள் நாட்டு அரசாங்கமே செய்துவிடும் அல்லவா...
அளவு கடந்த ஆசையின் காரணத்தாலேயே நீங்கள் பண நெருக்கடியில் இருப்பது
தெளிவாக உங்களுக்கே தெரியும். ஆண்மீகம் என்பது மன நிறைவிற்காக சிலரும்,
கஷ்டங்களை போக்க சிலரும், வாழ்வியல் முன்னேற்றதுக்காக சிலரும் என ஒவ்வொறு
காரணத்துக்காக செல்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே
சிந்தியுங்கள்...
இறைவனிடம் நாம் கேட்டு அது கிடைப்பது என்றால்
அதற்கான தவமும் இருக்க வேண்டும் அல்லவா.. இன்று பயிற்சி செய்தால் நாளை
கிடைக்கும் என்று எந்த காலத்திலும் சொல்லவில்லையே, தவமியற்றுவது எமது கடமை
அவர் வருவது அவரது கடமை,, தவத்தின் போது நமது சிந்தனை எதுவாக
இருக்கவேண்டும்,.. அவரை விடமாட்டோம் என்று இருக்க வேண்டும். மாறாக 15
நாட்கள் அவர் குரு, 15 நாட்கள் இவர் குரு, என்றால் கடவுளை அடமானம் வைப்பது
யார்.
பிரச்சினைகள் கஷ்ட நட்டங்கள் இல்லாதவர் இங்கு யாரும்
அல்ல.. பல ஆயிரம் கோடிகள் குவிக்கும் சாமியார்களுக்கு கூட எப்போது எந்த
நிகழ்சியில் நமது அந்தரங்கம் வெளியாக்கும் என்ற கவலை நிரம்பியிருக்கிறது.
ஆகவே பிரச்சினை ஒன்றே ஆனால் அதன் வடிவம் வேறு.
“ போர்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா”
என்ற வாக்கு இதைத்தானே குறிக்கிறது... உங்கள் தேவைக்காகவே யாதகம்
பார்ப்பது, உங்கள் தேவைக்காகவே பரிகாரம் செய்வது, உங்கள் தேவைக்காகவே
ஆலயங்கள் செல்வது, உங்கள் தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறீர்கள், அவனின்
மகிழ்சிக்காக அல்ல என்பதை நினைவில் வையுங்கள்...
ஒரு நிமிடமாவது
அவனைப் பற்றி அவனிடம் விசாரித்தது உண்டா..! அவனின் குறைகளை கேட்டது
உண்டா..! இது என்னடா புதுசா இருக்கு என்று நினைக்க வேண்டாம், வீட்டுக்கு
வந்தவரிடம் நலம் விசாரிப்பது நமது பன்புதானே...
உங்கள் முயற்சிகளை தொடருங்கள் அதற்கான வேலைகளை செய்யுங்கள், அதன் பலனை அவனிடம் கொடுத்துவிடுங்கள்.
உலக சரித்திரம் சொல்வது புரியாதவரா நீங்கள், ஆசியா அலக்சாண்டரை நோக்கி
பயனிக்கவில்லை, ஐரோப்பா நெப்போலியனை நோக்கி பயனிக்கவில்லை, அமெரிக்கா
கொலம்பஸ்ஸை நோக்கி பயனிக்கவில்லை, இறைவனும் உங்களை நோக்கி பயனிப்பதில்லை,
நீங்கள் தான் அவனை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை
வேண்டும்..
பணம் கொடுத்தால் தான் இறைவன் என்றால்,
விபச்சாரிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம், தாயிடம் கேட்பது பசிக்கு உணவு,
உண்மையான பாசம், தேவையின் போது பாதுகாப்பு. இதை எதிர்பார்க்கும் நாம்
தாயிடம் உண்மையானவராய் இருப்பது அவசியம் அல்லவா..
உங்களுக்கு
அனைத்தும் தரப்பட்டிருக்கிறது, அதை சரியாக பயன்படுத்தும் விதமே ஞானம்,
அதுவும் கிடைக்கிறது, இருப்பினும் பலனில்லை என்றால் என்ன அர்த்தம்..
“ இருப்பவன் சரியாக இருந்தால், சிரைப்பவன் சரியாக சிரைப்பான்”
உங்கள் சிந்தனைகளை தெளிவாக வையுங்கள் முழுமையாக அவனிடம் சரணடைய வேண்டும்.
நல்லது நடந்தால் அவன் செயல் என்று கூறும் நீங்கள் கெட்டது நடந்தால் அவனை
திட்டுகிறீர்கள். அதிலும் ஒரு காரணம் இருக்கும் என்று ஏற்பது இல்லை.
ஆனால் நீங்கள் மட்டும் இதை நான் உனது நன்மைக்காகவே செய்தேன் என்று
மற்றவருக்கு உபதேசம் செய்கிறீர்கள்.. அது எப்படி சாத்தியம்.. யாரை நீங்கள்
ஏமாற்றுகிறீர்கள்...
பணம் சம்பாதிக்க எத்தனையோ முறைகள் உண்டு,
கடத்தல் மூலமும் பணம் சம்பாதிக்க முடியுமே... ஏன் அதை நீங்கள்
செய்வதில்லை.. யாருக்கு பயம்... ஏன் பயம்,,, அதை தண்டிப்பவன் யார்...
இதற்கெள்ளாம் விளக்கம் தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் வாழ்கையின் உண்மை
புரிவதில்லை..
விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது இதைத் தானே...
முதலில் வரவிற்கு ஏற்ப வாழ்கையை திட்டமிடுங்கள் பின்னர் அதிக வரவு வரும்
போது அடுத்த கட்டத்தை சிந்தியுங்கள், செலவை முன்னமே செய்துவிட்டு, அதற்கான
வரவை எதிர்பார்த்தால் உங்கள் நம்பிக்கை இப்படித்தான் போகும்..
இன்று தமிழ் பற்றி பேசும் உங்களின் எத்தனை பேர் உங்கள் குழந்தைகளை தமிழில்
கற்க அனுப்புகிறீர்கள்.. சங்கம், சேவை, சமூகம் என்று பேசுவது உங்கள்
தேவைக்காகவே என்பது கூட தெரியாதவனா இறைவன்..
சமயத்துக்காக
பாடுபடும் உங்களின் எத்தனை பேரின் குழந்தைகள் உங்கள் சமய சம்பிரதாயங்கள்
நிறைந்த பாடசாலைக்கு செல்கிறது, கான்வெண்டுக்கும், மசூதிகளின்
ஆதிக்கத்துக்கும் தானே அனுப்புகிறீர்கள்.
” ஆடு பகை குட்டி உறவா..!” என்ற மொழிக்கு காரணமானவர்கள் நீங்கள் தானே...
தமிழ் வளர்க்கும் கவிஞ்ஞர்களின் மகன்கள் மகள்கள் மேலைனாடுகளில் உயர் கல்வி
கற்கிறார்கள், ஏன் தமிழகத்தின் கல்லூரிகள் தகுதியற்றனவா...
அரச
பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் தகுதியற்றவரா... இதில் உண்மை என்னவென்றால்
உங்கள் குழந்தைகள் தகுதியற்றவர்கள் அரச பாடசாலையிலும், கல்லுரிகலுளும்
பயிலுவதற்கு.. அவர்களுடன் உங்கள் குழந்தைகளால் போட்டி போடமுடியாது
என்பதற்காகவே பணத்தை கொடுத்து கல்வியை வாங்கிக் கொடுக்கிறீர்கள். உங்கள்
குழந்தைகளை இப்போதே பிச்சை எடுக்க பழக்குவது நீங்கள் தான்.. அது வளர்ந்து
வேறு என்ன செய்யும் மற்றவரிடம் பிச்சை எடுக்கும். ஆகவே நீங்களே
அனைத்துக்கும் காரணம்,, ஆனால் கடவுளை குற்றம் சாட்டுவது.. சமூகத்தை குற்றம்
சாட்டுவது..
இதையும் மீறி நாம் கூருவதற்கு எதுவும் இல்லை..
இறைவனை பகடைக் காய் என உருட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணங்கள்
உண்டு... சிந்தித்து செயற்படுங்கள்..
இங்கு நாம் யாரையும் குற்றம் சாட்டவில்லை, உங்கள் குற்றங்களை போக்கிக் கொள்ளுங்கள், அதன் பின் அவனிடம் கேளுங்கள்...
” தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் “ என்ற ஓர் வாக்கும்
உண்டு... தட்டும் போது சரியான கதவை தட்ட வேண்டும், நாமும் சரியாக இருக்க
வேண்டும்.
மாணவர்களுக்கு மட்டும் இல்லாது பலருக்கும் இது சிந்திக்க வைக்கும் என சிந்திக்கிறேன்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment