Sunday, August 31, 2014

ஜீவகாருண்யம்,,,,

வணக்கம் தோழர்களே,

இந்த வள்ளலார் என்ற ஒருவரை பின்பற்றும் அன்பர்களின் போதனைகள் தாங்க முடியல சாமி...

அருட்பெரும்ஜோதி, தனிப் பெரும் கருனை.. இது என்னடா கோதாரி வந்திருக்கு... பலரும் ஆகா ஓகோ என்றாங்க...!

ஜீவ காருண்யம் என்றால் என்ன என்று வள்ளலாருக்கே தெரியாது போல...

ஒரு சிறு கேள்வி... ஜீவகாருண்யம் பற்றி..

உயிரற்ற ஒரு பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, அது எதுவாக இருந்தாலும் அதில் அணுக்கல் இருக்கும் உண்மை தெரியாதா.. அந்த ஆணுக்களைத் தானே உயிர் என்பது, எதுவாக அது இருந்தாலும் அணுமாற்றத்தின் மூலமே அதன் தன்மை மாறுபடுகிறது அல்லவா.. சரி அப்படி இல்லை என்றால் பாசியில் (அல்கா) இருந்து தானே தாவரங்கள் வகைப்படுத்தப்படுகிறது, அவை உயிர் உள்ளதனால் தானே வளர்கிறது.. அவற்றின் வளர்ச்சிக்கு அதன் அணுமாற்றம் தானே காரணம். இவர் ஜீவகாருண்யம் என்றால் எதை சொல்கிறார்.. இங்கு சைவம் அசைவம் என்ற வேறுபாட்டுடன் எந்த உயிரும் படைக்கப் படவில்லை, அனைத்தும் ஒன்றாகவே படைக்கப் பட்டிருப்பது கூட தெரியாத ஞானி..

பருத்தியின் பஞ்சு தான் உடையாக இருக்கிறது என்றால்.. பருத்தி இங்கு நீங்கள் உடை தயாரிப்பதற்காக படைக்கப்படவில்லையே.. அப்படி இல்லை என்றால் மற்றவையும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று தானே கூறவேண்டும்..

இந்த பட்டுப் பூச்சியின் கூடு ஜீவகாருண்யம் இல்லையா..! உடலை மறைக்க உங்கள் மனைவிகள் உடுத்தும் துனி... அது எங்கிருந்து வந்தது... பட்டுப் பூச்சியிடம் இருந்து... பட்டுப் பூச்சி வெளிவிடும் பஞ்சு அதன் முட்டையை காக்கவும் குஞ்சுகளை காக்கவும் தானே..அப்படி பட்டுப் பூச்சியைக் கொன்று உடலை மறைக்க துனி போட்டிருக்கும் நீங்கள் ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறீர்கள்..

அவர் சொன்னது உண்மை என்று எந்த அறிவாழியும் ஏற்க மாட்டான்.

ஏண்டா அப்பா.. சிந்தித்து பார்க்கும் அறிவு மொத்தமா போயிட்டா உங்களுக்கு...

அது போகட்டும்... இதைப் பாருங்கள்
ஒரு தளத்தில் இருந்து எடுத்தது வள்ளலாரின் வாரிசுகளாம்

“Most important NOTE to Members of Suddha Sanmarga ;-

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-”
-----------------------
சமயம் மதம் இவற்றை விட்டவர்கள் தான் சன்மார்கமாம்... சிரிப்பாயில்லை..

அவரே சொல்கிறார் யாரையும் வணங்காதே என்று,, இவனுங்க அவரையே படமா போட்டு ஆனில மாட்டி பூப் போட்டு கும்பிடுறானுங்க.. என்னடா உங்க கொள்கை..

”இதோ அவரே வெளியிட்ட 12.04.1871 அறிக்கையில் தன் மார்க்க கடவுளை வெளிப்படுத்துகிறார்.”

“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”

இவரின் கூற்றுப்படி மற்றவர்களின் அறிவில் கிடைத்தவை எல்லாம் கதைகலாம்,, இவரின் அறிவில் வந்தவை மட்டும் உண்மையாம்.. முழுப் பூசனியை சோற்றில் மறைக்கிறது இது தான்.. பார்த்துக் கோங்க...

எந்த சமய மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது சுத்த சன்மார்க்கத்துக்கு.. அப்பிடின்னா.. இவனுங்க எப்படி கல்யானம் பன்னி பிள்ளை பெர்றானுங்க... அதும் ஜோதியாய் வருமோ...

மதம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தம்.. கலாச்சாரத்தை விட்டு விடு என்றால் உடுப்பே போடக்கூடாதே... ஏண்டாப்பா உங்களுக்கு வீடுகளே தேவையில்லையே.. அதுவும் கலாச்சாரம் தானே..

அதுவும் போகட்டும் உங்களுக்கு பெயர்களே இருக்கக் கூடாதே... நீங்கள் எழுதும் மொழிகள் அனைத்தும் ஒரு கலாச்சாரத்தின் அங்கம் அல்லவா...

நீங்கள் மதம் என்று எதை கூறிகிறீர்கள் சமயம் என்று எதை கூறுகிறீர்கள் என்று விளக்கமாக உங்கள் சன்மார்க்க குருவிடம் முதலில் கேளுங்கள்..

சன்மார்கத்தில் இருப்பவன் எவனும் வக்கீலாக இருக்க கூடாதே.. ஆனால் பலர் இருக்கிறீர்கள், தனியார் மருத்துவ மனை செய்யக் கூடாது அங்கு வேலையும் செய்யக் கூடாது ஆனால் பலர் இருக்கிறீர்கள்...

கேட்டால் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பீர்கள் அதுக்கு விவசாயம் போதும், அதுவும் உங்கள் உணவுக்கு மட்டும் போதுமான அளவு செய்யுங்கள்.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் அரச பாடசாலையில் படிக்கிறது.. இலவச கல்வியை நாடுகிறது.. தனியார் பாடசாலையில் வரிசையில் நின்று கட்டனம் கட்டி சேர்த்துவிட்டு சன்மார்கம் ஜீவகாருண்யம் பேசுகிறீர்கள்..

சன்மார்க்கத்தில் இருப்பவர் எத்தனைப் பேருக்கு மலிகை கடை இருக்கு துனிக்கடை இருக்கு அதில் எத்தனை வீதம் இலாபம் வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நகை கடைகள் இருக்கு அங்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்கிறீர்கள்..

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு அப்பவின் பெயரை சேர்க்க கூடாது.. மத அமைப்பின் வெளிப்பாட்டின் அடித்தளம் இது தான்.. முடியுமா உங்களால்.. முடிந்தால் வாழ்ந்துகாட்டுங்கள்.. இன்னாரின் மகன் என்று சொல்லக் கூடாது, இன்னார் தான் எனது அப்பா என்றும் சொல்லக் கூடாது.. கேட்டால் யாரும் இல்லை என்று கூறவேண்டும்..

படைப்பே இங்கு சன்மார்க்கத்தில் இல்லை, பிறகு எதைப் பற்றி பேசுகிறீர்கள்.. உங்கள் வீட்டுக்கார அம்மா..(மனைவி) வீட்டுக்கு விலக்கு வந்தால் தான் தாயாக முடியும்,.. அதுவே மிகப் பெரிய அசைவம்... முடிந்தால் அவர்களை தொடாதீர்கள்... அப்படியே நீங்களே இரத்தம், சதை, மச்சை, மயிர் எனத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்கள் ஆகவே நீங்களே மிகப் பெரிய மாமிசம்...

சும்மா ஊரை ஏமாத்துரத்த விட்டுட்டு நேர்மையாக உழைத்து சாப்பிடுங்கப்பா... அது தான் கடவுள் ....

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

நவக்கிரகம் ஆலயம்

வணக்கம் தோழர்களே,

எமது வாசகி ஒருவர் இந்த கடித்தம் எழுதியிருக்கிறார் மின்னஞ்சலுக்கு...

“ தங்களின் சாதகம் பார்ப்பது என்ற தலைப்பில் எழுதிய கருத்துக்கள் மிக அருமை. பலரின் வாழ்க்கையோடு விளையாடி பணம் சேர்க்கும் பலருக்கு சாட்டையடி.

ஆனால் எனக்கோ குழப்பத்தின் மேல் குழப்பம். சாதகம் பார்ப்பதென்பது பொய்யா, தமிழ்நாட்டில் சனிகொரு கோவில், குரு, சுக்கிரன், ராகு, கேது என்று அனைத்திற்கும் தனிதனி கோவில்கள் கட்டி உள்ளார்களே தோழரே, அணைத்து கிரகத்திற்கும் கோவில்கள் உண்டென்றால் அந்தந்த கிரகத்திற்கான ரகு கேது குரு சனி சுக்கிரன் போன்றோரும் உண்டு என்றுதானே அர்த்தம். அது உண்மையென்றால் இந்த கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுகிறது என்றுதானே அர்த்தம். தங்களின் நிலைப்பாடு இதுபற்றி என்னவென்ற தெளிவை எங்களுக்கு அளிக்க முடியுமா தோழரே. தங்களின் அறிவு பகர்வு மிகவும் இன்றியமையாதது.

பொதுவாக அனைவராலும் கெட்டவன் என்று பெயர் பெற்ற கிரகம் சனி கிரகம் தானே. என்னை பொருத்தமட்டில் சாதகம் பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ராகு மற்றும் கேதுவும் சனி கிரகத்திற்கு நிகரான கெடுதல்களை செய்யகூடியவர்கள் என அறிகிறேன். தெளிவு தங்களிடமிருந்துதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ”

இது முறையான கேள்வியும் சரியான சந்தேகமும் தான்..

தெளிவாக படிக்கவேண்டும் என்பது இதைத்தான்.. நாம் இந்த கிரகங்கள் இல்லை என்றும் கூறவில்லை, இராசி மண்டலம் இல்லை என்றும் கூறவில்லை.

ஆலயங்கள் என்பது ஆகம நெறிக்கு உட்பட்டவை,, ஆனால் இன்று ஆலயம் என்ற பெயரில் இருக்கும் கட்டிடங்களை ஆலயம் என்று கூறமுடியாது.

” ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புல கதவு அடைப்பதுவும் காட்டி”

”மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை”

நவக்கிரகம் என்பது ஒன்பது வாயில்கள், அதனால் தான் நமக்கும் ஒன்பது வயில்கள் தரப்பட்டிருக்கிறது. அது எம்முடனேயே இருப்பது.. ஞானம் என்ற கடவுளை தரிசிக்க இந்த ஒன்பது வாயில்களையும் சரியாக திறக்கவும் அடைக்கவும் தெரியவேண்டும் என்பதே அறிவு.

ஐம்புலன்கள் என்பது ஐம்பூதங்கள் ஆன சிவசக்தி சொரூபம்.. இந்த சிவசக்தியை நாம் அடைய முடியாத வகையில் காவலாக இருக்கும் வாயில்கள் தான் இந்த நவ துவாரங்கள் அல்லது நவ கிரகங்கள்.

ஆதியில் அறிவினால் கண்டறிந்த உண்மைகளை திறம்பட கூறியிருக்கிறார்கள் ஆனால் அவை காலத்தின் போக்கிலும் மாற்று மத ஆதிக்கத்திலும் வேறு உருவம் எடுத்துவிட்டது.

நவக்கிரகங்கள் இவைதான் என்பது கூட நம்மை சுற்றி இருக்கும் அடையாளங்களை வைத்தே ஆதியில் கணித்தனர். அதாவது கோலங்கள் என்றார்கள் அவற்றுக்கு பேர் வைத்தார்கள்.

எந்த ஒரு உருவத்தையும் நாம் சுற்றிவிடும் போது அது கோலமாக (வட்டமாக) தோனும், ஆனால் வட்டமான அல்லது கோலமான உருவத்தை சுற்றிவிட்டால் அது சுற்றுவது தெரியாது,, இதை ஆதியில் அவர்கள் அறிவினால் கண்டிருந்தனர் அதனால் தான் கோலங்கள் என்றனர்.

அவர்கள் இதற்கு சாட்சியாக எடுத்த விடயம் உங்கள் கண்கள், உடலுருப்பில் முழுமையான 360 பாகை வட்டமாக கோலமாக இருப்பது கண்கள் (மணிகள்) மட்டுமே என்றார்கள், அவை நீள்வட்டமான இமைகளின் நடுவே இருக்கிறதும் அவர்களுக்கு அறிவை தூண்டியது.. இந்த பிரபஞ்சம் என்பது வெளியில் இல்லை என்பதை அவர்கள் இதை வைத்தே ஆய்வுகள் செய்ய தொடங்கினர்.. அவர்களிடன் தொலைகாட்டிகள் இல்லை, அதையும் தாண்டிய பகுத்தறிவு எனும் இறைவன் தந்த கருவி இருந்தது. பார்க்கும் காட்சிகள் எந்தளவு உறுதியற்றவை என்பதற்கு கண்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் மூக்கை பார்த்தார்கள்,, உங்கள் கண்களால் மூக்கை நேரடியாக பார்த்தால் தெரியும் ஏன் என்று. தெளிவற்ற நிலையில் என்ன என்று கூறமுடியாத ஒன்றாக இது தோன்றும்.. இன்னும் சற்று ஆராய்ந்தால் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் முக்கின் இடம் மாறித் தெரியும்.. மாறி மாறித் தெரியும்,. ஒரு விடயம் இரண்டு இடங்களில் இருப்பது போன்று தோன்றும்.. இதையே அவர்கள் மாயை என்றார்கள்..

பார்வைக்கு மிக அருகாமையில் இருந்தால் அதன் உண்மை புலப்படாது என்பது அவர்களின் அறிவாக இருந்தது.. அதனால் தான் இறைவன் என்ற ஐம்பூதங்கள் மிக அருகாமையில் இருப்பதால் அதன் உண்மையை புரிய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்கள். அவற்றை நம்மை விட சற்று விலக்கி வைத்தால் தான் அவற்றை சரியாக பார்க்க முடியும் என்றார்கள்.. அதனால் தான் கோவில்கள் வந்தன.. கோவில் என்பது ஆராய்சியின் கூடம் அவர்களுக்கு.. பகுத்துப் பார்க்கும் தன்மை அவர்களின் அறிவு,, இதை உண்டால் இது நடக்கும் என்பது ஆய்வியல் மூலமே சாத்தியம் இல்லாது போனால் அறு சுவை என்பது இல்லாத விடயமாக இருந்திருக்கும்.

அருகாமையில் இருப்பவனை அறியாமல் இருக்கிறாய் என்றார்கள் அதனால் தான்.. பிரபஞ்சம் எப்படி செயலாற்றுகிறது என்பதை அவர்கள் மனித உடலை வைத்தே ஆய்வு செய்தனர், அதன் வெளிப்பாடாக பல உண்மைகளை அவர்களால் கூற முடிந்தது. மனிதனின் உடல் செயற்பாட்டு விளக்க எப்படியோ அப்படியே பிரபஞ்சம் செயலாற்றுகிறது என்றார்கள்..

திருமந்திரம் கூறுவது இதை தான்.. உனக்குள் இருப்பதை அறிவது என்பது இறிவனை அறிய வேண்டிய விடயம் அல்ல உன்னை நீ அறிய வேண்டிய விளக்கம், இந்த பிரபஞ்சம் எப்படி மாயையாக இருக்கிறது என்ற விடயம், இந்த அடிப்படை விளக்கங்களை மக்களுக்கு தெளிவு படுத்த ஏற்படுத்திய இடமே ஆலயம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள் காரணம் அங்கு சென்றால் இந்த உலக அமைப்பு உனக்கு புலனாகும் அதைக் கொண்டு நீ உனது வாழ்க்கையின் பிறவியின் நோக்கத்தை அடைவாய் என்றார்கள்.. பிறவியின் நோக்கம் கடவுளை அடைவது தானே என்கிறீர்களா..! நல்லது.. எப்படி அடைவது என்ற விடயம் மறந்து போனது அல்லவா..

படித்தால் தான் பரீட்சை எழுத முடியும்.. பரீட்சை எழுதித் தானே முடிவுகளை அறிய முடியும்.

இங்கு பரீட்சை ஆரம்பிக்கும் இடம் தான் ஆலயம்.. காரணம் அது தானே ஆய்வு கூடம்.. அங்கேயே அனைத்து மாயைகளையும், உண்மைகளையும் வைத்தார்கள். சரியானதை தேர்ந்தெடுத்து படித்தால் அவன் பரீட்சையில் சித்தி அடைகிறான்.. அவனே சித்தன் என்றார்கள்.. அதனால் தான் சித்தர்கள் ஆலயங்களில் இருப்பதில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை ஆலயமாக அமைத்தார்கள் அது ஓர் ஆராய்சி மையம் (ஆச்சிரமம்) என்றார்கள். இப்படி பல உண்மைகளை அறிவின் மூலம் பகுத்தாய்வு செய்த அவர்கள் கடவுள் என்பது மிக பெரிய அறிவு என்றார்கள் அதுவே ஞானம் என்றார்கள். ஒன்றும் ஆய்வு செய்யாமலா 3000 பாடல்களை ஒருவரால் எழுத முடியும்.

இவ்வாறு பல மாயைகளையும் ஆராய்ந்த அவர்கள் இந்த பிரப்ஞ்சத்தை பத்திரப்படுத்துவதே இந்தப் பிறவியின் நோக்கம் என்ற தெளிவான அறிவை பெற்றார்கள், அதன் மூலம் இந்த உடல் தான் பிரபஞ்சமாக காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த அறிந்த அவர்கள் நாம் எப்படி நம்மை பாதுகாப்பது என்ற தேடலின் வெளிப்பாடுகளாகவே மருத்துவம் என்ற ஒன்று ஆரம்பமானது.

அதனால் தான் உடலை அழியாமல் இருக்கும் முறைகளை கண்டாராய வேண்டி அவர்களின் தேடல் காய கற்பம் வரை தொடர்ந்தது, சாகவரம் இல்லாதது இருப்பது எது என ஆராய்ந்து நீண்ட காலம் வாழக்கூடிய மருந்துகளை தயாரித்தார்கள் அப்படி வாழ்வதன் மூலமே இந்த பிரபஞ்சம் எங்கு பயனிக்கிறது என்ற ஆய்வின் முடிவுக்கு வர நினைத்தனர். பிரபஞ்ச சக்திய அறிந்தால் தானே நமது பிறவியின் நோக்கத்தை தெரியமுடியும் என்றதில் மிக தெளிவாக இருந்தார்கள்.

கடவுள் என்பது பலவாக இருந்தால் அதன் உண்மை பொயாகிவிடும் அல்லவா.. உண்மை என்றைக்கும் ஒன்றாகத் தான் இருக்க முடியும். பலவாக இருப்பது பொய்யாகவே இருக்கும் என்பது அவர்களின் தெளிந்த அறிவு. அதனால் தான் கடவுள் என்ற பால் குறிக்காத சொல்லை வைத்தார்கள்.

இப்படி அவர்கள் ஆய்வுகள் செய்த விடயங்கள் பல தொகுதியாக எழுதி வைத்தனர், இதற்கிடையில் இன்று இருக்கும் வியாபாரிகள் போல அன்றும் வியாபாரிகள் செய்த உத்திகள் மக்களின் பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று வேறு திசைக்கே அழைத்துச் சென்றுவிட்டது.

இதற்கிடையின் எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்திருகிறோம் என்று நினைக்கவேண்டாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்ன என்ற ஓர் கேள்வியும் இங்கு வந்ததால் இது பதிவாகியது.

இராசி மண்டலங்களை ஏன் ஆலயங்களில் கூரையில் வைத்தார்கள் என்றால் ... அவற்றை நம்முள் இருந்து விலக்கினால் தான் தெளிவாக பார்க்க முடியும் என்பதற்காக.. வெளியில் இருந்து பார்த்தால் தான் அதன் உண்மை புரியும் என்பதனாலும் அவை எமக்கு தேவை அற்றவை ஆகவே அதை தள்ளி வைத்தார்கள்.. அவற்றைப் பற்றிய ஆய்வுகள் செய்தார்கள் அவை எம்மை பிரபஞ்சத்தோடு சேர்கும் அறிவை மயக்குகிறது என்பதை அறிந்தார்கள் அதை தள்ளினார்கள்.. அதற்கு துணையாக இருக்கும் வாசல்களான கிரகங்களை விகாரமாக அமைத்தார்கள் அவர்களுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லை என்றார்கள்.. வாய் சொல்வதை காது கேட்கும் ஆனால் மூக்கு நுகராது.. கண்கள் பார்ப்பதை மூக்குகள் நுகரும் ஆனால் செவிகள் சொல்லாது ஆகவே அவை தொடர்பற்றவை என்றார்கள்.. அதனால் தான் அவற்றை அடக்குங்கள் என்றார்கள் அதாவது அதை கட்டி வைத்துவிடுங்கள் என்றார்கள்.. ஆனால் நாம் இன்று அவற்றிடம் பிச்சை எடுக்கிறோம்..

ஆலயங்கள் அனைத்தும் ஆலயங்கள் அல்ல என்பதை புரிய வேண்டும். எல்லா ஆய்வு கூடங்களும் கல்வியை தராது... சில வியாபாரம் கருதி ஆரம்பிக்கப் படும்.. நீங்கள் வாங்கிய அனைத்து பட்டங்களுக்கும் ஒரே மதிப்பு இல்லை தானே.. அனைத்து கல்லூரிகளும் சிறந்தவை அல்லவே...

ஓர் உயிர் எப்போது உற்பத்தியாகிறது என்பது யாரும் கூறமுடியாத உண்மை அல்லவா.. அந்த நிமிடத்தில் இருந்தே இந்த வாசல்கல் இங்கே தான் வரப்போகுது என்பது முடிவாகிவிடும்.. அதாவது நீங்கள் வீட்டை கட்டிய பின்னரா வாசல் வைக்கிறீர்கள்,, திட்டம் போட்டபோதே வாசல் முடிவாகிறது அல்லவா..

குழந்தை பிறப்பது கட்டிய வீடு அல்லவா, அதற்கு வாசல்கள் வைக்கப்பட்ட இடம் கட்டியவனை தவிர எவனுக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பது அவர்களின் ஆராய்சி முடியுகள்..

எது எப்படி இருந்தாலும் உயிர் வாழ தேவையானது உணவு அதற்கு மேல் உடலை பாது காக்க வேண்டியது மருந்துகள் என்ற உண்மையின் நிமித்தம் அவர்கள் பயனம் ஆரம்பமானது..

இப்படி பல விடயங்கள் காலத்தால் வியாபாரம் நோக்கத்துடன் மாற்றியமைக்கப் பட்டிருப்பது தான் உண்மை.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றார்கள் காரணம் நாதன் என்ற சிவசக்தி உடம்பில் அதாவது மனித உடலில் இல்லை நடப் பட்ட கல்லினுல் இருக்கிறது என்றார்கள்.. ஆதியில் அவர்கள் சிவலிங்கமாக பிரதிட்டை செய்தவை எதுவும் கற்கள் இல்லை மருந்துகள் செய்யும் மூலப்பொருள் அது.

ஆலயம் என்றால் ஆய்வு கூடம் என்று சொன்னால் அங்கு இருப்பவை ஆய்வுக்கு தேவையான மருந்துகளும் அல்லவா.. பாதுகாப்பாக இருக்கும் இடமாக அதை வைத்தே அமைத்தனர்.

மாயையை வெளியிலும் உண்மையான ஒன்றை மூலத்திலும் வைத்தார்கள். அதனால் தான், நாம் கூறியிருந்தோம் வெளியில் இருக்கும் லிங்க செய்ய முடியாததையா உள்லிருக்கும் லிங்க செய்யப் போகுது என்று. அப்போதாவது நீங்கள் சிந்திப்பீர்கள் என நினைத்தோம்.

தர வேண்டியவை எல்லாம் தந்து தான் உங்களை இங்கு அனுப்பியிருக்காங்க... அது என்ன என்ற தெளிவு இருந்தால் மனிதப் பிறவியின் நோக்கம் பிச்சை எடுப்பது இல்லை என்ற அறிவு வளரும். கடவுளிடமும் பிச்சைதான் எடுக்கிறோம் ஆனால் வசதியாக வந்து பிச்சை எடுக்கிறோம்..

பிச்சை எடுக்கும் இடம் இன்று ஆலயம் கோவில் தேவஸ்தானம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் வழிமுறைகள் கற்பிக்கும் இடம் ஆச்சிரமம், சோதிட நிலையம் என பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.

பிச்சை எடுக்கும் முறையை சொல்லுபவன் பணம் சம்பாதிக்கிறான் ஆனால் பிச்சை எடுப்பவன் எடுத்த வன்னம் இருக்கிறான்.

இதை நாம் சொன்னால்... நம்மை அறிவாழியா நீ பெரிய என்று பிச்சைக் காரன் கேட்கிறான்.

நவக் கிரகம் என்பது வாசல்கள் அவற்றை அடைப்பதற்கு வழி தேடவேண்டும் அதை விடுத்து அதனை நம்முடன் கூட்டிக் கொண்டு திரியக்கூடாது..

இந்த ஒன்பது வாசல்களும் ஒன்றை ஒன்று பார்க்காத படி படைக்கப்பட்டிருக்கும் மனிதன் அதை பார்க வைக்கும் முறையை செய்து விட்டு அதனிடம் இருந்து பாது காப்பு கேட்பது மிக தெளிவான அறிவுதான்..

படைத்தவனுக்கு தெரியாதா அதை பார்க்கும் படி செய்வதற்கு அவனே அது பார்க்ககூடாது என்று அமைத்திருக்கும் போது நாம் அதை பார்க முட்பட்டால் அவனின் படைப்பை குறைகூருவதாக அமையாதா... அப்படி அவனை குறை கூறுவதற்கு அவன் இருக்கும் இடம் என்ற பெயரில் ஆலயத்துக்கு போய் அவனுக்கு திட்டிவிட்டு வருவதற்கு பெயர் வழிபாடு...

உங்க வீட்டுக்கு வந்து உங்களை திட்டிட்டு போனால் அவனுக்கு நீங்க உதவி செய்வீங்களா அல்லது கட்டிப் பிடிச்சி கொஞ்சுவீங்களா...

இதன் விளக்கம் மீண்டும் ஓர் பதிவா வரும் ...

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”

வணக்கம் தோழர்களே.

திரு R Prabu Mec, என்பவர் சில குற்றச் சாட்டை வைத்திருக்கிறார், அவர் சொல்வதற்கு பதில் கொடுப்பது நமது கடமை அல்லவா..

வணக்கம் R Prabu Mec,கருத்து இல்லாத தளத்தை பார்வையிட இத்தனை காலம் ஏன் காத்திருந்தீர்கள்...

இங்கு நண்பராக வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டீர்கள்...

தெரிஞ்சவங்க அமைதியா இருந்தா உங்களுக்கு எப்படி எம்மை விட முப்பு குரு பற்றி அதிகம் தெரிஞ்சவங்க இருக்காங்க என்று தெரியும்... ஒரு வேலை கனவு கானும் பழக்கம் இருக்குமோ...

அல்லது ஞான திருஸ்டியால் கண்டீர்களோ..

அப்படி ஞான திருஸ்டி என்றால் நாம் இருக்கும் விலாசம் சொல்ல முடியுமா...

நாம் எங்காவது எமக்குத் தான் இவை தெரியும் என்று பதிவிட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அல்லது எங்காவது எம்மைவிட சிறந்தவர் இல்லை என்று எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...

நீங்களா முடிவெடுத்து பேசுறதுக்கு என்ன செய்றது தம்பி.. விடயத்தில் கருத்து இருக்கா இல்லையா என்று பார்க்குறத்துக்கு அறிவு வேனும் அப்பனே..

இவை நீங்கள் எம்மைப் பற்றி கூறியது

“ நான் என்ற அகந்தை அதிகம் உள்ளது !

உங்கழுக்கும் மேலான சிறந்த முப்பு குரு மருந்து அறிந்த மூர்த்தவங்கல்லாம் அமைதியா இருக்காங்க.

"யாரொருவர் தன்னை அறிவாழியாக நினைக்க ஆரம்பிக்கின்றாறோ அக்கமே முட்டாள் ஆகிறார்"

"யாரொருவர் தன்னை முட்டாளாக கருதி அமைதி காக்கின்றாறோ அக்கனமே அறிவாழி ஆகின்றார்"

கற்றது கையலவு ,
கல்லாதது உலகலவு ..

நீங்க எல்லாரையும் முட்டாலா நினைத்து பேசுவது தவறு ..

நீங்க பக்கம் பக்கமா எழுதுரிங்கலே தவிர கருத்து ஒன்றும் இல்லை !

அவ்வளவு தொழில் நுனுக்கம் உங்களிடம் ...

தனக்கு மட்டுந்தா எல்லாம் தெரியும்னு நினைச்சி பேசுறது ரொம்ப தவறு ...”

நாம் எப்போதும் எல்லோரையும் முட்டால் என்று சொல்லவில்லையே.. முட்டாலைத் தான் அப்படி சொன்னோம்,,, ஒரு வேலை அது உங்களை பாதித்தால் நீங்கள் யார் என்று புரிகிறது..

அறிவாழி என்றால் அமைதியாய் இருப்பாங்க என்று எந்த முட்டாப் பயல் உங்களுக்கு சொன்னது..

ஆயிரக கணக்கில் பாடல்களாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துக்கள் “ தொல்காப்பியம் முதல் அர்த்தமுள்ள இந்துமதம் வரை” முட்டால்கள் எழுதினதாக நீங்க சொல்றீங்க.. அதாவது அறிவாழி அமைதியா இருந்தா... எழுதினது எல்லாம் யாரு..!

அவ்வையார் முட்டால் அது தான் அவர் பாடிய பாடலை இங்கு எமக்கு சுட்டிக் காட்டி இருக்கீங்க அப்படித் தானே.. உங்கள் கருத்துப் படி நான் அறிவாழியாக இருக்க விரும்பவில்லை... அவ்வையைப் போல் முட்டாலாகவே இருக்க ஆசைப் படுகிறேன்,,

தமிழ் இலக்கியத்தில் அவை அடக்கம் என்றும் அவயை அடக்குதல் என்றும் இரு மரபுகள் உண்டு தெரியுமா தம்பிக்கு... அது தெரிந்தால் ஏன் இந்தக் கேள்வி கேட்கப் போறீர்கள்..


அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத் தவன்

---இறைவன்.

சங்கறுப்ப தெங்கள் குலம்,சங்கரனார்க்கு ஏதுகுலம்,
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை..

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

---நக்கீரர்


நான் தமிழன்....

அடிமை அல்ல....

கேள்வி எவனிடமும் கேட்பேன், அவன் செய்வது தவறாக இருந்தால்...

நீ சரியானவனாக இருந்தால் தெளிவான ஞானம் இருப்பின் கேள்விக்கு பதில் சொல்.. இல்லையா ஓடி விடு...

சித்தர்கள் அமைதியார் இருந்தால் இந்த முப்பு குரு பற்றி நீயும் பேசியிருக்க முடியாது.. எம்மை விட மூத்த அனுபவசாலிகள் பலர் இருக்கட்டும் அவர்கள் அமைதியாய் ஏன் இருக்கிறார்கள்.. உன்னைப் போல் பலரும் பேசுவதனால் தான்..

சமூகத்துக்கு பயந்தவன் தான் அமைதியாக இருப்பான்,.. கடவுளை நேசிப்பவன் ஏன் பயப்பட வேண்டும்,

அவனின்றி அணுவும் அசையாது என்று பலரும் சொல்ல முடியும் அப்படி இருக்க வேண்டும்.. அவனே சித்தன்..

சித்து விளையாடுபவன் சித்தன் கிடையாது சித்துக்கு விளையாடுபவனே சித்தன்,,, புரிகிறதா இலக்கியம்,..

இலக்கிய அறிவுக்கு ஓர் சாட்சி மற்றும் அறிவாழி எப்படி பேசுவான் என்பதற்கும் ஓர் சாட்சி..

“ உதாரணமாக, ஒரே ஒரு பாடல்.

காளமேகம் புலவர் ஒரு அரசரின் சபைக்குச் சென்றிருக்கிறார். அங்கே சிலர் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு, இவரை மேலும், கீழுமாக ஆராய்ந்திருக்கிறார்கள்.

'யார் நீ ?', என்று அவர்கள் காளமேகத்தை அதட்ட, அவருக்குக் கோபம் வந்துவிட்டது, 'நீங்கள் யார் ? அதை முதலில் சொல்லுங்கள்' என்று எதிர்க் கேள்வி போட்டிருக்கிறார்.

'நாங்கள் கவிகள்', என்று அவர்கள் கம்பீரமாகச் சொன்னதும், காளமேகத்துக்குச் சிரிப்பு. அப்போது அவர் பாடிய பாடல்தான் இது :

'வாலெங்கே நீண்டெழுத்த வல்லுகிரெங்கே, நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காண் நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.'

கவி என்றால் கவிதை பாடுபவர் என்றும் குரங்கு என்றும் அர்த்தம்..

அறிவாழி பேசாமல் இருப்பான் என்று கூறிய முட்டாலிடம் போய் சொல்லுங்கள்.. அறிவாழி என்றால் போசனும் என்று..

பேசாமல் இருந்தால் அவன் பயந்தவன் என்று அர்த்தம்..

நாம் இங்கு கணிதம் விஞ்ஞானம் புவியியல் மெய்யியல் வானியல் என பாடமா நடத்துகிறோம்... எமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல... பின்னர் ஏன் இந்த வசனம் இங்கு போட்டிருக்கீங்க தம்பி..

“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”

இது அவ்வை அவருக்கு அவர் கூறிய விடயம்... அவரிடம் தமிழ் மற்றும் சமயம் பற்றி பேசினால் பதில் சொல்லியிருப்பார்.. மாறாக வெங்காயம் நாட்ட சிறந்த பூமி எது என்றால் இப்படித்தான் சொல்வார்..

சிந்திக்க தெரியாதவன் உங்களைப் போல் தான் கேள்வி கேட்பான்.. கருத்தும் சொல்வான்,, சிந்திக்க தெரிந்ததனால் தான் எனது பதிவின் கருத்து உனக்கு பிரியவில்லை.

இப்ப முட்டாப் பசங்க இருக்காங்கலா இல்லையா... இருந்தா அவங்கள அப்படி கூப்பிட்டா என்ன..!

கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்கும் காரணம் தெரியுமா.. உண்மை என்பது ஒன்று என்பதற்காகவே.. அப்படி இருக்க மூன்றாவது கண்ணைத் திறக்க பயிற்சி செய்றவனை முட்டால் எங்காம என்ன சொல்றது..

சூரிய உதயம் இல்லாத நாட்டுல பிறக்கும் குழந்தைக்கு எப்படிடா சாதகம் எழுதுவீங்க என்னா இது விதண்டா வாதமா.... இல்லை மணிக்கூடு ( கடிகாரம்) இல்லாத காலத்தில் எதை வைத்து நாழிகை கணித்தீர்கள் அல்லது சூரிய உதயம் கணித்தீர்கள் என்றால் விதண்டா வாதமா..!

முடிந்தால் சில அறிவாழிகளை காட்டுங்கள் நாம் அவர்களிடம் கற்க ஆவலாகவே இருக்கிறோம்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர் (சிலரின் மகிழ்சிக்காக)

Saturday, August 30, 2014

நாதம் விந்து..

வணக்கம் தோழர்களே,

திரு விஜயகுமார் சு, எனும் வாசகர் ஒருவர் எம்மிடம் கேட்டிருக்கும் கேள்வி இது.

பரிபாசை புரியாதவர் இந்த பாடலை படித்திருக்க வாய்ப்புக்கள் இல்லை, அல்லாது போனால் அவரின் புரிதல் வேறாக இருக்கும், அல்லது நாம் இவ்வளவு பேசுகிறோம் என்றதால் இவரை சோதித்துப் பார்க்கலாம் என இருக்கும். இதில் எது என்பது நகக்கு புரியவில்லை.. இருப்பினும் அது எதுவாக இருந்தாலும் கவலையும் இல்லை..

” தாக்குவது ருதுவான யேழாநாளில்
தனபானம் பற்றி நீ தருணம் பார்த்து
பாக்கிலையும் அருந்தியது படுத்துப்பாரு
படுக்குமுன்னே வாழையிலை விரித்துக்கொள்ளு
முக்கிலையுஞ் செவி வெளியில் நாக்கு நாபி
மோகனப் பெண்குறி குடைந்து விரலைநீவி
நாக்கைவிட்டு மணிவருடி நடத்தும்போது
நாரி மின்னாள் காம ப்பால் வடியும் பாரே....”

இந்த பரிபாசை பாடலன் அர்த்தம் யாது ஐயா?”

இதற்கு மாற்றாக நாம் ஒரு பாடலை போடவில்லை என்றால் அது சரியாக இருக்காது அல்லவா..

“ ................................
பண்பான ஆண் பட்சி கொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதம் தான்
மகத்தான ஆத்மசலம் கூடக் கூட்டே”

இங்கு இருக்கும் இரு பாடல்களும் கூறுவது ஒன்றேதான் விஜயகுமார்..

ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் பார்த்து அதற்கான பரிபாசையை விளக்கக் கூடாது இருப்பினும் நீங்கள் பதிவிட்டது நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பாடல் என்பதால் விளக்கம் குழப்பம் இல்லை.

இது ஓர் மருந்து செய்முறையை மிக தெளிவாக விளக்கமாக கூறியிருக்கும் பாடல். இதில் எந்த காம சேட்டையும் இல்லை.

நாதம், விந்து அல்லது சக்தி, சிவம், அல்லது உகரம், அகரம் அல்லது எட்டு, ஒன்று அல்லது வாசி, யோகம் அல்லது இடகலை, பிங்கலை அல்லது குண்டலினி, சக்கரம் என பல பெயர்கலாள் கூறப்படும் கடவுள் இதுதான்,..

”நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” இதுவும் அது தான்..

பார்பான் தேகத்தில் பார் பசு ஐந்துண்டு இதுவும் அது தான்..

நீராய் உருகி என் ஆருயிராய் என்றானே இதுவும் அது தான்..

ஊற்றான உண்ணர் அமுதே உடையானே இதுவும் அது தான்..

கள்ளப் புலக்குறம்பை கட்டழிக்க வல்லானே இதுவும் அது தான்...

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி இதுவும் அது தான்...

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து இதுவும் அது தான்..

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி இதுவும் அது தான்..

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து இதுவும் அது தான்...

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே

இதுவும் அது தான்..

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இதுவும் அது தான்..

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே

இதுவும் அது தான்..

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே

இதுவும் அது தான்..

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே

இதுவும் அது தான்..

” கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”

இதுவும் அது தான்..
---------------------------------------------------------------

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே

இது அது என புரியாத மடையருக்கு...

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

இதுவும் அது தான்...

இப்படி ஒன்று பத்து ஆயிரன் இலட்சம் என பல பல கூறிக் கொண்டு போகலாம்...

பரிபாசை எதை கூறுகிறது என்றதன் விளகம் ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன், ஆனால் இந்த நாதம் விந்து பற்றி கேட்டால் அதற்கும் பதில் உண்டு..

பதில்

சித்தர்கள் வாழ்வியலை கற்கவும் சித்த மருத்துவம் கற்கவும் எமது ஆய்வியல் மையத்தில் சேர்வதற்கு தயாராக இருங்கள், விரைவில் அனைத்தும் இணையத்தளம் மூலம் சாத்தியமாக்கப் படும்..

அதற்கான செயற்திட்டங்கள் தொடங்கிவிட்டது, விரைவில் உண்மையை கற்க வேண்டும் என்பவர்களும், தமிழனின் பாரம்பரியத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் எமது சேவையில் இணைய வாய்ப்புக்கள் தரப்படும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர்..

உயர்வு என்பது

வணக்கம் தோழர்களே,

இது ஓர் முக்கியமான வாதமாகவே நான் கருதுகிறேன், திரு தினகரன் அவர்களின் கேள்விகள் உண்மைகளை சொல்ல உதவியானவை..

வணக்கம் Dhina Karan, அவர்கள் உங்களுக்கு விலை சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் ஏன் பதிவிடவில்லை.! அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றால் ஏன் அதை நீங்கள் மற்றவருக்கு எடுத்துக் கூறவில்லை..!

உயர்வு என்பது நீங்கள் எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள், அது பணமாக இருந்தால்... நீங்கள் பணக்கரரை போய் பார்ப்பதில்லையே ஏதோ ஓர் சாமியார் அல்லது பூசாரியைத் தான் பாக்கிறீர்கள் அவர்கள் பணத்தால் உயர்ந்தவர்கள் அல்லவே..

பணம் தான் சம்பாதிக்கவேனும் என்றால் ஆயிரம் வழிகள் உண்டு,, அதில் என்ன நல்ல வழி கெட்ட வழி,, உங்களுக்கு நல்லதாக இருக்கும் வழி மற்றவருக்கு கெட்டதாக இருக்க முடியும் அல்லவா..

ஜாதகம் கணிக்கும் வேலை நாம் செய்வதாக கூறவில்லையே,,. காரணம் அது முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் செயல்... நாம் திடீர் என முளைத்த செடிகளைப் பற்றி பேசுவதில்லை..அப்படி பேசினால் அதில் வேறு அர்த்தம்
இருக்கும்.

முகனூலில் பலரும் பலதையும் பதிவிடலாம், ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். பலனற்ற வார்த்தை எதை செய்யும். உங்கள் தேவை பலரதும் ஆலோசனைகள் கருத்துக்கள் என்றால் உங்கள் சுய சிந்தனை எங்கே போனது,

மனிதன் ஆறு அறிவு கொண்ட பகுத்தறிவாளன் என்றால் என்ன அர்த்தம்..

நாம் இங்கு கூறுவது உங்கள் சிந்தனையை தெளிவுபடுத்த வேண்டியே..

ஒரு உதாரணம் மட்டும் போதும் உங்கள் முகனூல் தகவல் மற்றும் கருத்துக்களின் திறமையை சொல்ல....

திரிகடுகு சூரணம் அதாவது திப்பிலி மிளகு சுக்கு..

இதை செய்து சாப்பிட்டல் உடல் நலம் கிடைக்கும் என்கிறார்கள் பல முகனூல்களில் உங்கள் நண்பர்கள்...

நான் அதை கடுமையாக மறுக்கிறேன். காரணம் அவர்களின் அறிவு புத்தகம் மட்டுமே செயலில் இல்லை.. இவை மூன்றும் முறையாக சுத்தி செய்யாவிட்டால் உங்கள் சிறு நீரகங்கள் உட்பட பல உடல் உருப்புக்கள் பாதிப்படையும்... காரணம் அதில் இருக்கும் நஞ்சு..

சுக்கு நல்லது என்று எவன் சொன்னது,,.ஏதாவது சித்தர் பாடல் காட்டுவீர்கள் ஆனால் அதே சித்தர் அதற்கான சுத்திமுறையை வேறு இடத்தில் சொல்லியிருந்தால் என்ன செய்வீர்கள்..

திருமந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மூலர் இதைத்தான் சொன்னர் என்று கூறக்கூடாது அவர் பாடிய தொகுப்புக்கள் அனைத்தும் வேண்டும் அல்லாது போனால் அவர் குறிக்கும் பாடல் தொகுதியாவது வேண்டும் உண்மையை புரிய..

இப்படி எங்காவது ஓர் விடயத்தை பார்த்தால் அதை அப்படியே பதிவிடுவது.. நாம் கெட்டது பரவாயில்லை இன்னும் சில சேர்ந்து கெடட்டும் என்ற நல்ல சிந்தனையாக இருக்குமோ..

பழமையான ஆலயங்கள் குறிப்பாக சிவ ஆலயங்கள் போங்கள் அங்கு மூலவர் என்று லிங்கம் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கும், ஆனால் அதே போன்று பல லிங்கங்கள் வெளியில் பல மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள் என பலராலும் பிரதிட்டை செய்திருப்பார்கள்.. இங்கு மூலவராக இருப்பதும் அவரே, வெளியில் இருப்பவரும் அவரே.. ஆனால் மூலவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவைக்கு கொடுப்பதில்லை ஏன்!

அப்படியானால் நீங்கள் இறைவனை தரிசிக்க போகவில்லை.. மூலவராக கருத்தப்படும் கல்லையே தரிசிக்க போகிறீர்கள் என்பது தெளிவு.. கல்லை ஏன் அங்கு போய் தரிசிக்க வேண்டும்.. அதை வீதியில் வைத்தும் தரிசிக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே மரத்தடிப் பிள்ளையார் மற்றும் மற்ற தெய்வங்கள்.. மரத்தடியுல் இருக்கும் பிள்ளையார் செய்ய முடியாததையா திருச்சி உச்சிப் பிள்ளையார் செய்யப் போகிறார். அப்படியானால் மரத்தடியில் பிள்ளையார் ஏன்..!

இந்த கேள்வி உங்களுக்கு விதண்டாவாதம்..! காரணம் உண்மை இருக்கிறது அல்லவா..

நாம் பெரியவர் என்று சொன்னதில்லை ஆனால் உங்களைவிட கெட்டிக் காரன் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை.. காரணம் விதண்டாவாதத்துக்கும் நாம் பதில் தருகிறோம் அல்லவா..

வீட்டில் குழந்தை நமக்கு புரியாத விடயத்தை கேட்டல் விதண்டாவாதம் என்பார்கள்.. அது போன்றுதான் இதுவும்..

உங்கள் நண்பர்கள் அவர்களின் முகனூலில் பதிவிடுவது போலவே, நாமும் இங்கு பதிவிடுகிறோம் இது எமது சுதந்திரம், விருப்பம் இருந்தால் நீங்கள் படியுங்கள் திருந்துங்கள்.. எம்மை பதிவிடச் சொல்வதும் விட்டுவிடச் சொல்வதும் எப்படி சாத்தியம்..

நாம் மற்றவரை குறை கூறவில்லை, குறையைக் கூறுகிறோம். குறை தெரிந்தால் தானே நிறையைத் தேடமுடியும்.

” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”

” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”

” அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே “

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, August 28, 2014

சாதகம் பார்ப்பது பாகம் 2

வணக்கம் தோழர்களே,

இன்றில் இருந்து எமது முகணூல் மூடப்பட்ட தளமாக இருக்கும், நண்பர்கள் மட்டுமே பார்க்கமுடியும், காரணம் தேவையானவர்கள் கேட்டு உள் நுலையட்டும் என்றுதான்.

அது இருக்க, நவக்கிரகம் பற்றி கேட்ட கேள்விக்கு சரியான பதிலைக் கானவில்லை, சாத்திரம் சொல்லும் சாம்பவான்கள் பலர் முக நூலில் சுற்றித்திரிகிறார்கள் ஆனால் எவனும் பதில் சொல்வதாக இல்லை. முட்டால் பசங்க..

அடுத்த கேள்வி..

பழமையான கோவில் அல்லது ஆலயங்களுக்கு சென்றால் அங்கு வசந்த மண்டபத்தின் கூறையில் தலைகீழாக இருக்கும் படி அதாவது நாம் மேல் நோக்கி பார்க்க வேண்டும், அவை நம்மை கீழ் நோக்கி பாக்கவேண்டும் என்ற அமைப்பில் இராசி சக்கரம் அல்லது இராசி மண்டலம் செதுக்கப் பட்டிருக்கும். இதை எத்தனை பேர் பாத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொன்னால் இதுவரை நீங்கள் ஆலயங்கள் கோவில்கள் போகவில்லை என்று அர்த்தம்.

இப்போது இந்த இராசி மண்டலம் ஏன் தலைகீழாக அமைக்கப்பட்டிருக்கிறது ?

மேதாவிகளே, சாதக நிபுணர்களே இதற்கு எங்காவது பாடல்களில் அல்லது புராணங்கள் வேதங்கள் ஆகமங்கள் உப நிடத்துக்கள், இதிகாசங்கள், சித்தர் பாடல்கள் என விளக்கம் உங்களால் தரமுடியுமா..!

சிந்தியுங்கள் மேதாவிகளே,...

சாதகம் பார்ப்பது ஏன் என்று முதலில் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள். பல நிபுணர்களின் வீட்டில் போய் பாருங்கள் அவர்களின் நிலை என்ன என்று.

எவன் எப்ப பிறந்தான் என்று இங்கு எவனுக்கும் தெரியாது. நேரத்தை அல்லது மணியை கண்டுபிடிச்சவன் யாரு.. உங்க அப்பன் மாரா முட்டாப் பசங்களா... சிந்திக்க மாட்டிங்களா,

நேரம் காலம் இவை இரண்டுக்கும் ஆரம்பம் தெரியாது என்று கூடத் தெரியாத முட்டாப் பசங்க எல்லாம் சாதகம் கணிக்கும் நிபுணர்கள்...

கடிகாரம் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படிடா நீங்க பஞ்சாங்கம் எழுதுவீங்க.. மேதாவிகளே, யாராவது 2000 வருடத்துக்கு முந்தய பஞ்சாங்கம் காட்ட முடியுமா..!

சூரிய உதயம் இல்லாத நாட்டுக் காரனுக்கு எப்படி சாதகம் எழுதுவாங்களோ, இந்த மேதாவிகள்.

ராமர், கண்ணன், வினாயகர், என உங்களிடம் இருக்கும் சாதகங்களுக்கு கணக்கு இல்லை, ஆனால் அதே சாதக அமைப்பில் பிறக்கும் எவனும் அப்படி இருப்பதில்லை ஏனோ..!

முதல் தடவை வரும் 7 1/2 ஆண்டு சனி கூடாது, அதுவே நடுவில் வந்தால் பொங்கும் சனி, மீண்டும் வந்தால் மங்கு சனி.. ஆகமொத்ததில் ஒன்றுக்கும் நிரந்தரக் குணம் கிடையாது..

மனிதன் அப்படி இருந்தால் குறங்கு என்பது அதுவே நவக்கிரகம் என்றால் சாமி, கடவுள் என்பது, என்னடா உங்க நியாயம்..

சனீச்வரனுக்கு பிடித்த உலோகம் இரும்பு என்கிறீங்க, ஆனால் தங்கத்தால் கவசம், காகம், ஆபரணங்கள் போட்டு சோடிச்சிறுக்கீங்க, என்னடா கொடுமை இது, நீங்க சொல்றத நீங்களே கடைப்பிடிக்கிறது இல்லை, ஆனால் மற்றவனுக்கு ஆலோசனை கொடுப்பது, முதலில் இந்த நிபுணர்கள் எல்லம் சேர்ந்து ஒரு விதிமுறையை உருவாக்குங்கடா..

சனிக் கிரகம் இருப்பதால் நாசா சட்டலைட் வரும் போது தடைப்படுகிறது என்கிறீங்க, ஏண்டா அதே சனியை தூக்கி 10 கிலோமீற்றர் மாத்தி வைத்துபாருங்க என்ன நடக்குது பார்க்கலாம், உங்க நாட்டை வேவு பாக்கும் சட்டலைட் எல்லாத்தையும் நிருத்திடலாம், முட்டால் பசங்க..குறித்த ஆலயத்தில் இருக்கும் சனிக்கு இரும்புக் கவசம் போடுங்க முதல்ல...

உழைத்து சாப்பிட நினைங்க.. இல்ல பல சுனாமிகள் இன்னும் வரும். இப்படித் தான் கிருஸ்ணரின் நாடே அழிந்த்து.

” சூதும் வாதும் வேதனை செய்யும் “, அது கடவுளாக இருந்தாலும் சரி..

”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” திருந்துங்க முட்டாப் பசங்களா..

” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.”

” என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”.

எல்லாம் நல்லது என்றுகூறியிருக்கும் போது கூட சந்தேகம். இந்த தேவாரத்தை சாந்தி பரிகாரம் என்று சொல்லி வியாபாரம் செய்யது எத்தனை பேர்..கணக்கில் இல்லை.

கடைசிப் பாடலை பாருங்கள்

“ தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”

இந்த பாடலை மாலையில் ஓதினால் வானில் அரசாள்வார் என்கிறார், இதற்கும் நாம் இங்கு கேட்ட கேள்விக்கும் தொடர்பு உண்டு மேதாவிகளே..

படிச்சவன் சொன்னாலும் கேட்கிறதில்லை, பழையவன் சொன்னாலும் கேட்கிறது இல்லை.

இனியாவது திருந்துங்க தம்பிமாரே....!







 















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, August 27, 2014

சாதகம் பார்ப்பது...

வணக்கம் தோழர்களே,


இன்று ஒரு முக்கியமான விடயத்தை பற்றி உங்களுக்கு கேள்வி கேட்டு அதற்கு சரியான ஆய்வினை தருபவருக்கு சித்தர்கள் கூறிய மூலிகை “ நத்தைச் சூரி” எது என்ற விளக்கம் அதன் எட்டுவகைப் பெயர், பரிபாசை பாடல், குணபாடம், அகராதி விளக்கம், என அனைத்து ஆதாரங்களுடனும் தரப்படும்.

காரணம் சென்ற முறை நாம் சிவன் தான் பெருங்கடவுளா அதற்கான ஆதாரங்கள் தரமுடியுமா என்ற கேள்வியை கேட்டதற்கு ஒரு நபர் என்னிடம் நேரடியாக கேட்காமல், எம்முடைய மாணவர் என்ற ஒருவரிடம் கேட்டிரிக்கிறார்.

“ இவர் யார் கேள்வி கேட்பதற்கும் பரிசு கொடுப்பதற்கு” என்று.. அவரிடம் நாம் கேட்பது நீங்கள் யார் அதை நான் செய்யக் கூடாது என்பதற்கு... உங்களால் மறுக்கப் படும் விடயம் சாத்தியம் என்றால் அதை ஆமோதிக்க எம்மல் முடியாத என்ற சிந்தனை கூட இல்லை, கடவுளைப் பற்றி பேசுவது...

சரி விடயம் இதுதான்.. இந்த சோதிடக் கலை நிபுணர்களுக்கு இந்த கேள்வி.

”கெட்டவன் கெட்டுடில் கிட்டிடும் இராஜ யோகம்” 

சோதிடகலை நிபுணர்கள் இது இல்லை என்று கூறமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இதில் கெட்டவன் என்பது யாரை அவன் மேலும் கெடுவது என்பது என்ன?

நவக்கிரகங்கள் என்றால் ஒன்பது கோள்கள் என்று அர்த்தம் கூறும் நிபுணர்கள், இந்த ஒன்பது கோள்களில் எது அல்லது எவை கெட்டவன் என்ற பெயர் பெருகிறான் என்ற விளக்கத்தை தரவும்.

மிக அவதானமான ஆய்வுகள் எமக்கு வேண்டும், இல்லாது போனால், எம்மை குறைகூறக் கூடாது..
















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

போலிகளிடம் இருந்து தப்புவது...

வணக்கம் அன்பான தோழர்களே,

மிக அருமையான பதிவொன்றை மிக மிக அருமையான முகனூலில் பார்க்க கிடைத்து இன்று.

எமது வாசகர்களில் பலர் குறிப்பிட்ட தளத்தில் நண்பராக இருப்பது பார்த்து மிக மகிழ்ச்சியாக இருந்தது, எத்தனை முறை சொன்னாலும், எங்களை மாற்ற முடியாது என்பதற்கு பலரும்
சாட்சி.

குறித்த தளத்தில் இருக்கும் பதிவு இது..
------------------------------------------------------------------------------------------------------------
“ குடிசையில் இருப்பவனையும் குபேரனாக்கும் அதிசய சஞ்சீவி

லக்ஷ்மி நாராயண சஞ்சீவி மூலிகையின் மகிமைகள் :

இந்த மூலிகை எளிதில் கிடைப்பதில்லை அவ்வளவு அபூர்வமான மூலிகை எங்களிடம் தெய்வத்தின் அருளால் கிட்டியது .

இந்த மூலிகையானது எவருடைய கைகளில்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் சில உண்டு .

அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் தெய்வத்திடம் கேட்டு கொடுக்கிறோம்

இந்த அதிர்ஷ்டம் யாருக்கு என்றால் இந்த செய்தியானது எல்லோருடைய கண்களுக்கும் தெரிவதில்லை இந்த செய்தியை படிக்கிற அபூர்வ சாலிகளுக்கு மட்டுமே கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன

இந்த லக்ஷ்மி நாராயண சஞ்சீவி காப்பிணை அணிந்து கொண்டால் நீங்கள் விசயத்தில் எல்லாம் தோல்வி அடைந்தீர்களோ அனைத்திலும் வெற்றியை தேடித்தரும் சஞ்சீவி இது .

இதை அணிந்த பிறகு இழந்த சொத்துகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள்

நெடுநாட்களாக இழுத்துகொண்டிருந்த வழக்கு முடிந்து வெற்றி அடைந்திருகிறது வீட்டில் சந்தோசம் நிலவுகிறது .

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர்

நெடுநாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு திருமண தடை நீங்கி நல்ல வாழ்க்கை கிடைத்திருகிருக்கிறது”
-----------------------------------------------------------------------------------------------------

இதை எங்களுக்கு தருமாரும் குறித்த நபரின் தொடரிலக்கம் கேட்டும் பதிவிடும் வாசகர்கள் என்னிக்கை கணக்கில் இல்லை.

இவ்வளவு அபூர்வ மூலிகை கிடைத்த அவர் அதை ஏன் விற்கிரார் என்று தான் புரியவில்லை, அவருக்கு அனைத்து குபேர சொத்துக்களும் கிடைத்திருக்க வேண்டும், லட்சுமியின் கடாச்சம் கிடைத்த அவர் அதை மற்றவருக்கு கொடுக்க ஏன் பணம் வாங்க வேண்டும்.

எமது மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்குவார்கள் என்று நன்றாக தெரியும் இவர்களைப் போன்றவர்களுக்கு.

அது இருக்கட்டும் இது யார் கையில் இருக்குதோ அவர் இழந்த அனைத்தும் அவரை தேடி வரும் என்கிறார். அப்படியானால் கடந்த சட்டமன்ற தேர்தலில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் பலருக்கும் இது தேவைப் படும்...

இதை வைத்திருந்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று சொன்னாரோ அதில் ஒன்றாவது அவருக்கு நடந்திருக்கா என்று நேரில் போய் பாருங்கள், குறைந்த பச்சம் ஓர் செகுசான கார், பங்களா, காணி, நிலம், அரச மரியாதை, வியாபாரத்தில் பெரும் புள்ளி என ஏதாவது ஒன்றாவது இருக்குதா என்று பாருங்கள்.

முட்டால் பசங்களே, யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பாமல் சிந்தியுங்கள், பட்டப் படிப்பு படிச்சவனும் சரி, படிக்காதவனும் சரி எப்படியாவது முன்னேறனும் என்ற ஆசையில் மந்திரத்தை மட்டும் நம்பாமல் உங்கள் உழைப்பையும் கொஞ்சம் நம்புங்கள், எல்லாவற்றையும் தவறாக செய்து வாழ்கையை தொழைப்பது பின்னர் மந்திரம். சாபம், குலதெய்வம், கிரகம், என்ற பேரில் பூசாரியை போய் பார்ப்பது.

உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் யார் தடுத்தாலும் இறைவன் தருவான் ஆனால் நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டும்.

அடியும் புரியாமல் முடியும் புரியாமல் இருப்பதனால் தான் சாமியார்கள் என்ற பெயரில் இன்று பல அவதார புருசர்கள் உருவாகி இருக்கிறார்கள், ஒரே நேரத்தில் எத்தை அவதாரம் தான் வருமோ தெரியல.. அவதாரம் வந்தால் உலகம் அழியும் என்றாங்க ஆனால் அவதாரங்கள் தான் அழிந்து சாம்பலாய் போகிறது.. இது கூட புரியாத புத்தி ஜீவிகலே, உங்கள் பணத்தை உழைப்பை ஒரு சோம்பேரிக்கு கொடுத்து ஏமாராமல் நிருத்திக் கொள்ளுங்கள்.

அவர்களின் பீடத்தில் இறைவனின் சக்தி இருக்கிறதாம், அதனால் தான் இப்படி அதிசய மூலிகைகள் கிடைக்கிறதாம், அவர்களின் தளத்தில் இருக்கும் பல மந்திரப் பதிவுகள் எமது பிலாக்கில் இருந்து பிரதி செய்து பதியப்பட்டிருக்கிறது. அதற்கான சாட்சிகள், மற்றும் சித்தர் இராச்சியம் எனும் தளத்தில் இருந்தும் பிரதி செய்திருக்கிறார்.

இது எமது பதிவுதான் என்பதற்கு சாட்சிகள் நமது பதிவுகளின் திகதியை பாருங்கள் நமது பிலாக்கில், அப்படியே, நாம் எப்படி எழுத்துப் பிழைகளுடன் எழுதினோமோ அதே போன்று எந்த ஓர் இடைவெளியும் இல்லாமல் பிரதி செய்து போட்டிருக்காறு கோடிஸ்வரன்.

மற்றவரின் பதிவை பிரதி செய்வதை முதலில் நிருத்தி சொந்தமாக கூலி வேலை செய்தாவது உழைத்து சாப்பிடுங்க பாவிகளே.

மந்திரங்கள் என்பது நீங்கள் நினைப்பவை போல விளையாட்டான விடயம் அல்ல, அவை சரியானவையா சரியானவரிடம் இருந்து கிடைக்கிறதா என்ற விடயங்கள் மிக முக்கியமானவை. கண்டதையும் சொல்லி உங்கள் சந்ததிக்கு சாபங்களை வாங்கி கொடுக்காது இருப்பதே மேல்.

ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவுகளை சாப்பிடுங்கள் அதன் மூலம் உங்கள் உழைப்பை அதிகரிக்க முயலுங்கள்.. மன அமைத்திக்காகவும், சில தடங்கள்கள் விளகவும் உங்களுக்கு ஏற்ப சரியான மந்திர உபாசனைகளை சமய தீட்சை மற்றும் குரு ஆசியுடன் மட்டும் செய்ய பாருங்கள். மாந்திரீகத்தை ஓர் அறிவாக பாருங்கள், அதிஷ்டமாக பார்க்க வேண்டாம்.

நீங்கள் வேலைசெய்தால் தான் சம்பாதிக்க முடியும், இந்த மாதிரி அதிசய (அசிங்க) மூலிகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இப்படி ஒரு மூலிகை எங்கு இருந்து வந்தது என்றாவது முதலில் ஆதாரம் உண்டா என பாருங்கள்.. மூலிகை என்றால் அகராதியில் இருக்க வேண்டும் பரிபாசை திரட்டுக்களில் இருக்க வேண்டும்.

சித்தர்களுக்கே தெரியாத மூலிகைகள் எல்லாம் இன்று சந்தைக்கு வருவது தான் அதிசயம்..

சித்தர் கூறாத விடயங்கள் எல்லாம் அவர்களின் பெயரால் விளம்பரம் செய்வது இவர்களை எங்கே கூட்டிச் செல்லும் என்ற விளக்கம் இல்லாமல் நடக்கும் விளையாட்டில் நீங்களும் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம்.

இவர்களை போல் போலியானவர்களிடம் சென்று ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவு..

“ மந்திர மாவது மாயம் பொருளது
தந்திர மாகச் சமைக்கி லுமதுமாம்”

சிந்தித்து செயலாற்றுங்கள் வாசகர்களே..

இங்கு அது தொடர்பான சாட்சிகள் படமாக....









நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்

தலை முடிக்கு... எண்ணெய்

வணக்கம் தோழர்களே,

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் தயாரிக்க வேண்டிய தலைக்கு வைக்கும் எண்ணெய் ஒன்றின் காட்சிகள் இங்கு படம்மாக பதிவாகிறது.

இது குறிப்பாக இளநரை, முடி உதிர்தல், முடி அடர்தியாதல், முடி கருத்து இருக்கமாக வளர்தல், தலை சூட்டை தனித்தல், கண்பார்வையை தெளிவு படுத்தல், நாசி அரித்தலை நிறுத்தல், போன்ற பல விடயத்துக்கு தீர்வாக அமையும் எண்ணெய் இது.

செவ்வல் தேங்காயின் எண்ணெய்யில் இது தயாராகுறது, மேலும் இரண்டு வகையான எண்ணெய்களும் குறிப்பிட்ட அளவில் 1/5 என்று சேர்க்கப் பட்டு அத்துடன் சில விலங்குகளின் ரோமங்கள், தணியவகை சில, மூலிகை சில, வாசனைத் திரவியம் என சேர்த்து இரண்டு சாமம் சிறு தீயாக எரித்து பதப்படுத்தும் ஓர் எண்ணெய் இது. 










 







நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Tuesday, August 26, 2014

மதன காமேஸ்வரி தயார்..


வணக்கம் தோழர்களே.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மதன காமேஸ்வரி குறிப்பிட்ட சிலருக்கு (ஐரோப்பாவில்) தயாராகிவிட்டது. அதன் செய்முறை காட்சிகள் சில இங்கு உங்களுக்கு பதிவாகிறது..

குறிப்பிட்ட நபர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இது இலேகியமாக தரப்படுகிறது, ஆனால் இதை சூரணமாகவும் பயன்படுத்த முடியும்.

48 நாட்கள் இருவேலை சாப்பாட்டுக்கு முன்னர் 05 கிராம் அல்லது 01 கழஞ்சி என்ற வீதம் சாப்பிடவேண்டும். சாப்பாட்டில் புளி மற்றும் கசப்பு சேர்க்க கூடாது ( தவிர்க்க முடியாத நிலை பரவாயில்லை) , போதியவரை எண்ணெய் கலந்த சாப்பாடுகளை தவிர்ப்பது உத்தமம், அதிக வெப்பத்தில் (சூரிய) நடமாடுவதை தவிர்ப்பதும் நல்லது, 21 நாட்கள் எந்த வித ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காது காத்துக் கொள்ளவேண்டும். இது இரு பாலாருக்கும் பொதுவான கட்டுப்பாடுகள். இரவு நேரங்களில் தலைக்கு குளிக்க கூடாது.

இது ஓர் காயகற்ப நிலையில் இருக்கும் அவுடதம், நாம் இதன் சரக்குகள் அதன் செய்முறைகள் என பலவற்றையும் இங்கு பகிர்ந்திருக்கிறோம். இதில் எந்த வித போதைப் பொருட்களோ அல்லது இரசாயன சேர்க்கைகளோ ஒன்றும் இல்லை.

தொலைக் காட்சிகளில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க பலரும் கூறும் அவுடதம் இது இல்லை. அதன் சேர்கைகள் எந்த அளவு தூய்மையாய் இருக்கும் என்பது அதை வாங்கி உபயோகம் செய்து அதற்கு அடிமையானவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தாது புஸ்டி என்ற பேரில் நடக்கும் பல ஏமாற்று வேலைகளால் தங்கள் தாதுக்களை அளித்த அன்பர்கள் பலரை நாம் மருத்துவ ரீதியாக சந்தித்திருக்கிறோம்.

ஆகவே எந்த ஓர் மருந்தாக இருந்தாலும் அது நாமே தருவதாக இருந்தாலும் அதன் உண்மையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். 
 
 



 


 
 
 
 
 
 
 
 
நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

மனதை கட்டுப் படுத்த மந்திரம்

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓர் மாந்திரீக பதிவு உங்களுக்காக, .

இது உங்கள் மனதைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.

தாட்சாயனி தேவி உபாசித்த மந்திரம் இது என்று எம்மை வழி நடத்துபவர் ஒருவர் கூறியது ஞாபகத்தில் உண்டு.

“ ஓம் அவ்வும் உவ்வும் சிவாய சக்தி, சிவ பரமேஸ்வரி, ஹ்ரீம் வசி வசி என் சிந்தையில் நிற்கவே சுவாகா.

முறையாக உபாசித்தால் நிச்சயம் உங்கள் மனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆன்மீகம் தெளிவுபடும். குறிப்பாக பெண்களுக்கு உகந்தது.

இதையும் பிரதி பன்னி உங்கள் பெயர்களில் பதிவிடாமல் இருந்தால் நல்லது. அல்லது 18பேர் சாபம் நிச்சயம் உங்களுக்கு என்பதில் மாற்றல் இல்லை. இது ஆணை.

அப்படியே மதனகாமேஸ்வரி தயாராகிறது, இந்தியாவில் இருக்கும் தோழர்கள் உங்கள் முற்பணம் செலுத்தியதை உறுதி செய்து கொள்ளவும்.

விரைவில் உங்களுக்கு கிடைக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.

Friday, August 22, 2014

காயகற்பம் உங்களுக்கு தயார்


வணக்கம் தோழர்களே,

எமது வாசகர்களின் பல நாள் கோரிக்கை இன்று தயாராகிறது.

தேவையிருக்கும் அன்பர்கள் எம்மை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு உலகில் எங்கிருந்தாலும் இம் மருந்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

இது எமது பாரம்பரிய முறையில் கைகண்ட ஓர் அவுடதம், காயகற்பம் சாப்பிட முடியலில்லையே என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை, இம்மருந்தின் விளக்கம் பாடலாகவே கீழே பதிவிட்டிருக்கிறேன்.

.........

இம்மருந்தை மண்டலமாய் அருந்தினோர்க்கு, விந்துப் பெலனும் விந்துமுண்டாம், அடியாருக்கு போகம்தனக்கு பொருந்த வலுவும் உண்டாம், மானேகேள், குஞ்சரத்தில் உள்ள பெலனும் கூடுமே, மிஞ்சிப் புணர்வோர்க்கு மிடுக்காம், மன்மதன் தேகத்தில் வருவான், புத்திதரும், வித்தைதரும், பொன்போல் மேனிவளரும், சுத்தமுற கண்ணொலி தோன்றும், கண்டத்தில் ஓசை உண்டாகும், மெய் பெலக்கும், விருத்தருக்கு தாது உண்டாகும், சொற்பனத்தை மாற்றும், பெரு நீரழிவு மாற்றும், மேகவெட்டை போகும், ரோகங்கள் அனேகம் விலகும், மூலம் போம், காயசுவாதம் போம், முப்பினியும் போம், இம்மருந்தை செய்வீராய் இம்ப சுகமென்றறிந்து அம்மைக்கு அரனுரைத்தார் ஆராய்ந்து..
.........................

சிவன் பார்வதிக்கு கூறிய அவுடதம் இது,,

இதில் 64 வகைச் சரக்குகளுக்கு மேலாக சேர்கிறது.. இங்கு இல காட்சிகள் மட்டும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன், அனைத்தையும் படமாக காட்டினால், நாளை இன்னும் ஒரு தளத்தில் இந்த மருந்து கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகவே இருப்பது அனைவருக்கும் புரியும் அல்லவா.

இதை நாம் இலகுபடுத்தி லேகியமாகவும் செய்துதரமுடியும்.

இளமை துன்பங்களை போக்க மிக அற்புதமான அவுடதம், ஆண் பெண் என்ற வேறுபாடு இதை உண்பதற்கு இல்லை,. கனவனும் மனைவியும் சேர்ந்தே சாப்பிடலாம்.

மேனியை பல கிரீம் போட்டு அழகுபடுத்தும் பெண்களுக்கு இது ஓர் அற்புதமான மருந்து, இளமை பொழிவுடன் அழகை காக்கும் ஓர் அவுடதம் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்களின் உடல் உருப்புக்களை திடமாக வைத்திருப்பதில் மிக அற்புதமான சக்தி கொண்ட அவுடதம் இது, 
 
 
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இதில் விந்துப் பெலன், போகம் செய்தல் போன்ற சொற்களை கண்டு பெண்கள் அஞ்சத் தேவையில்லை, உங்கள் மாதாந்த பிரச்சினைகளை மிக இலகுபடுத்தும். உங்கள் புத்தியும் வித்தைகள் (கல்விக்கான அறிவு) அதிகமாகும். மேனி பிரகாசிக்கும்.

ஆண்கள் உங்களுக்கு சொல்லவே தேவையில்லை, நரம்புத் தளர்சி, மற்றும் திருமணம் தொடர்பான பயத்தை இது இலகுவாக போக்கிவிடும், மேலும் 50 வயது கடந்துவிட்டது என்ன செய்வது இனி என்ற கவலையும் தேவையில்லை. தாதுக்களை உற்பத்திசெய்வதில் மிக அற்புதமாக செயலாற்றும்.

இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற கவலையும் தேவையில்லை, உங்கள் இல்லற வாழ்க்கைக்கு இது ஓர் இன்பமான சுகம்.

இதை தவிர்த்து பல அற்புத குணங்கள் கொண்டது இந்த மதனகாமேஸ்வரி அவுடதம். எமது தனித்துவமான அனுபவம் இதில் உண்டு.

இம்புறை நாம் காட்ட்டுக்குச் சென்றது இதன் சரக்குவகைகளை பெற்றுவரவே.. எமது ஆய்வுகள் எப்படியானவை என்பது அனேகருக்கும் தெரியும் அல்லவா..

இதற்காகவே கொப்பான் தேன், காராம் பசு நெய், மதனகாமியம், கூந்தற்பனை வென்னை, நீரோட்பலம், என பல அரிய வகை பொருட்களை நாம் எடுத்திருக்கிறோம்.

தேவையிருப்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும், குறைந்த அளவிலேயே தயாராகிறது என்பதால் அனைவருக்கும் தருவது இயலாத காரியமாகும்.

இந்தியாவில் சென்னையிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ், ஜேர்மனில் இருந்தும், மலேசியாவிலும், அரபு நாடுகளுக்கு கட்டாரில் இருந்தும் கிடைக்கும். இலங்கையில் அனைத்து பகுதிக்கும்.

மின்னஞ்சல். muthaly@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.. மேலதிக தகவல்கள் தரப்படும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, August 21, 2014

காட்டுப் பயனத் தொடர்சி

வணக்கம் தோழர்களே,

சில காட்சிகள்...




















நன்றி

காச ரோகம்...

வணக்கம் தோழர்களே,

சுவாசகாசம் மற்றும் ஈலை, இருமல், நெஞ்சுப்புண் போன்றவற்றுக்கான சூரணம் ஒன்றின் காட்சிகள்..











 











நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, August 20, 2014

யார் கடவுள்...

வணக்கம் தோழர்களே,

கடவுள் பற்றி எழுத ஆரம்பித்ததும் பலதரப்பட்ட கருத்துக்கள் வரத்துவங்கின, ஆனால் இதையே மேடையில் பலரும் பேசுகிறார்கள் அதற்கு எவரும் கேள்வி கேட்பதாக தெரியவில்லை. அதுவும் சரி கேள்வி கேட்பவன் போவதில்லை என்பதுவும் உண்மைதான். காரணம் அடியேன் கூட போவதில்லை, போக ஒருவரும் அனுமதிப்பதும் இல்லை.

பதிவுகள் தொடர்பாக எனது மாணவர்கள் பலரும் குழப்பமடைந்து எனக்கு மின்னஞ்சலும் சிலர் அழைபேசியிலும் கேட்டது..

“ நீங்கள் தானே ஐயா கூறினீர்கள் சிவனே பெரும் கடவும் என்றும் விட்ணு இரண்டாவது பெரும் கடவுள் எனவும் மற்றும் உள்ள தெய்வங்கள் விம்பங்களாக சித்தரிக்கப் பட்டவை என்றும், ஆனால் நீங்களே இன்று கடவுள் என்பது அறிவு என்கிறது போல பதிவிட்டிருக்கிறீர்கள், மேலும் சிவன் பெருங்கடவுளுக்கு சாட்சி கேட்கொறீர்கள்” என்று கேள்விகள் பாய்கின்றது..

எமது மாணவர்கள் என்று கூறிக் கொள்ளும் அனைவரும் கவனமாக அவதானியுங்கள்..

நாம் எப்போதாவது உங்களுடன் இருந்து மந்திர உபாசனை செய்வதை பார்த்ததுண்டா, அல்லது மந்திரம் ஓதி ஏதாவது ஓர் காரியத்தை செய்து காட்டியதுண்டா.. அல்லது உங்களுக்கு புரியாத மொழியில் பேசியதுண்டா அல்லது மந்திரத்தால் அனைத்தையும் செய்ய முடியும் என்று கூறியது தான் உண்டா..!

ஆனால் உங்களில் சிலரது உண்மையான பிரச்சினைகளை உடண்டியாகவே தீர்த்து காட்டியிருக்கிறோம்.. எமக்கு நாடுகள் கடந்து இருப்பதும் கவலையில்லை, யார் என்பதும் கவலையில்லை, ஆனால் அது உண்மையான விடயமாக இருக்கவேண்டும். அது உங்கள் பலருக்கும் தெரியும்.. பூசைகள் செய்வதில்லை ஆனால் நீங்க என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே உங்கள் பிரச்சினைகள் தீர்ந்தவர்கள் உண்டு தானே...

பலருக்கு சமய தீட்சையும், சிலருக்கு உபணயனமும் செய்திருக்கிறோம் அல்லவா.. அப்போது ஏனும் உங்களுக்கு புரியாத சொற்களை உங்கள் காதுகளில் கூறியதுண்டா.!

ஆனால் நாம் சிவ பூசைகள் செய்வதையும் சக்தி பூசைகள் செய்வதையும் நீங்கள் பார்திருக்கிறீர்கள், அதில் நாம் பாடல்களை தவிர்த்து ஏதேனும் கூறுவதை பார்த்ததுண்டா..! சில சமயங்களில் நாம் பேச்சு மொழியில் உரையாடுவதை அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் உங்களில் பலருக்கும் மந்திரங்கள் தரப்பட்டிருக்கிறதும் உண்மை, சிலர் வாலாயம் செய்திருப்பதும் உண்மை, அதில் ஏற்படும் சக்தி மாற்றங்களை கண்டிருக்கிறீர்கள், தற்போதும் அதை செய்து வருகிறீர்கள்,.. தொடர்ந்தும் செய்யப் போகிறீர்கள்.

இதில் உங்களுக்கு பலதரப்பட்ட தெய்வங்களைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பேசியிருக்கிறேன், அதன் வரலாறுகள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சித்தர்கள் வழிமுறையை கொண்டே உங்களுக்கு காட்டப்பட்டிருக்கிறது.

இப்போது விடயத்துக்கு வருவோம்..

உங்களில் எத்தனை பேர் உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்ற தேவையின் நிமித்தம் எம்மிடம் வந்தீர்கள், எத்தனை பேர் கடவுளை அறிய வந்தீர்கள், எத்தனை பேர் எது உண்மை என தேடி வந்தீர்கள்..

உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி காரணங்கள் உண்டு, தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, மாந்திரீக பிரயோகம், குடும்ப சுமை, என உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தேடியே வந்தீர்கள் என்பது தான் முதல் உண்மை. காரணம் நீங்கள் அனைவரும் முன்னமே பல அல்லது ஒரு குருவிடமாவது கற்றவராகவே இருந்தீர்கள், அங்கு சரியான பதில் இல்லை என்றதும் இங்கு வந்தீர்கள், நாளை இன்னும் ஒருவரை தேட வேண்டும் சிலர் தேடியும் இருக்கிறீர்கள்..

ஆக மொத்ததில் கடவுளை தேடி வந்தவர்கள் இங்கு யாரும் இல்லை.. ஆலயத்துக்கு செல்வது ...

“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”

என்ற அவ்வையின் பாடலைப் பாடுவது பின்னர் பிள்ளையார் அப்பா, எனக்கு குடும்ப கஷ்டமா இருக்கு பணவசதிகளை தா என கேட்பது, சிலர் தொழிலை தா, சிலர் மனைவி தா, கனவன் தா, இப்படி கேட்பது.. யாரும் தமிழைத் தா என்று கேட்பதில்லை..

கடவுளிடம் பேசுங்கள் என்றால் சிறிப்பது..

தனியாக பூசை அறைக்குள் இருந்து மந்திரம் சொன்னால் கடவுளுக்கு கேட்கும் என்ற சிந்தனையோடு ஆரம்பித்த உங்கள் பயனத்தை எப்படி ஒரே நாளில் மாற்ற முடியும்..

உண்மையை எடுத்துச் சொன்னால் சிறிக்கிறீர்கள், சினிமாவைப் பாருங்கள், நகச்சுவை நடிகனாக வருபவன் உண்மையாக பேசி அடிபடுவான், அதைப் பார்த்து நாமும் சிறிப்பது, கதா நாயகன் நாயகி பொய்யைச் சொல்லி பெயர் வாங்குவது அதை நாம் பாரட்டுவது..

ஆகவே உண்மையைச் சொன்னால் உலகம் சிறிக்கும் என்பது உண்மைதான், அதனால் தான் சித்தர்களை பார்த்து பித்துப் பிடித்த்வர் என்று கேலிபன்னி சிறிக்கிறீர்கள்,, சாமி வேடம் போடும் கயவர்களை பார்த்து அன்போடு வணங்குகிறீர்கள்..

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள் கேட்டால் சிவன் இப்படித்தான் திரிந்தான் என்பார்கள் ஏதோ சிவனுடன் இவர்கள் திரிந்த மாதிரி..

சிவன் என்றால் அறிவு என்று அர்த்தம் அதன்படி சித்தர் போக்கு அறிவின் போக்கு என்பது அர்த்தம்..

அடியேன் சிவனை வணங்குவது, அதுவே அறிவு என்பதனால் தான். அந்த அறியே ஞானம் என கூறப்பட்டது..

விடயத்துக்கு வருவோம், நீங்கள் எம்மிடம் தேடியதைத் தான் நாம் கொடுக்க முடியும், ஆனால் நீங்கள் தேடுவதோ கிடைக்காத ஒன்றை..

மேலை நாடுகளில் இருக்கும் மாஜிக் காரர்களை பார்த்திருப்பீர்கள் இல்லாத ஒன்றை அவர்கள் எடுத்து தருவார்கள், அவர்களை அங்கிருப்பவர்கள் சாமியார்கள் என்று கூறுவதில்லை, ஆனால் இங்கு விபூதி எடுத்தால் போதும் அவன் சாமியாராகி விடுகிறான், சேர்த்து குங்குமம் எடுத்தால் போதும் பீடாதிபதி, சிலைகள் எடுத்தால் போதும் அவன் கடவுளாகவே மாற்றப்படுகிறான். வெள்ளையன் செய்தால் அது மாஜிக், நம்மாட்கள் செய்தால் அது கடவுள் அவதாரம்..

இப்படி சமூக அமைப்பில் வளர்ந்த உங்களை மாற்றுவது என்றால் எப்படி சாத்தியம், எமது மாணவர்கள் பலரே, தங்களது வாகனங்களில் பல கயிருகள் கட்டியிருக்கிறார்கள் (வெட்கமாகவே இருக்கிறது) கட்டியவர்களின் வண்டிகளில் பெற்றோல் முடிவதில்லையா என்று ஓர் சந்தேகம் எனக்கு, கேட்டால் இது நம்பிக்கை என்கிறார்கள்.. கண்களை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கும் பூனைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது..

உங்களுக்கு கட்டுங்கள் காரணம் உங்கள் படைப்பின் இரகசியம் யாருக்கும் தெரியாது, ஆனால் வண்டியின் பிறப்பு புத்தகமாகவே கிடைக்கிறது அல்லவா..

விபூதியை நீங்கள் அணியுங்கள் பொட்டை நீங்கள் வையுங்கள், அதை ஏன் வண்டிக்கு வைக்கிறீர்கள் அதுவும் இந்து மதத்தை சேர்ந்ததுவா,, அதன் தாய் தந்தை யார் என்று தேடிப்பாருங்கள் நிச்சயமாக வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான்.. வண்டிக்கும் மதமாற்றம் செய்வதுதான் உங்கள் அறிவு என்றால் சிவனைப் பற்றியும் சமயத்தின் அடிப்படைப் பற்றியும் நீங்கள் புரிவது எப்படி சாத்தியம்,..

சித்தன் போக்கு சிவன் போக்கு...

பிரபஞ்ச சக்தி ஒன்றே என்று கூறும் யாருக்கும் பிரபஞ்சத்தின் பரிமானங்கள் தெரியாது, விஞ்ஞான ஆய்வுகளே ஒரு முடிவுக்கு வர இயலாத விடயத்தை நாம் முடிவெடுத்து பேசிவிடுகிறோம்..

சந்திரனை பாம்பு விழுங்குவதே கிரகனம் என்றார்கள் சான்றோர்கள், நாமோ அதை அப்படியே நம்பி செயற்பட்டோம் முற் காலத்தில், பின்னர் விஞ்ஞானம் வந்தது அது பாம்பு விழுங்குவதில்லை, பூமியின் நிழல் மறைக்கிறது என்றதும் சிறித்தோம், மடையர்கள் என்று சான்றோரை பேசினோம், ஆனால் பாம்பு என்றால் நிழல் என்ற ஓர் அர்த்தம் தமிழ் நிகண்டுகளில் இருப்பது யாரும் அவதானிப்பதில்லை, அவதானித்தவர்கள் சொன்னால் அதை ஏற்பதில்லை. அவதானித்தவர்களும் உண்மையை சொன்னால் நம்மை பைத்தியம் என்பார்கள் என்று சொல்வதும் இல்லை. கிரகங்களில் இரண்டு நிழல் கிரகம் என்றார்கள் அவற்றின் உருவத்தை பாம்பைப் போல காட்டியதன் காரணம் அது தானே..

எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லை..

சித்தன் போக்கு சிவன் போக்கு

விடயத்துக்கு வருவோம்.. மாந்திரீகம் இல்லை என்றும் நாம் கூறவில்லை அது பொய் என்றும் நாம் உங்களுக்கு ஒரு போதும் கூறவில்லை.

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

மனது என்பது அறிவு, அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்றார்கள், அதாவது தெளிந்த அறிவு வந்தபின் மந்திரம் என்ற மறை பொருள் எதற்கு என்பது இதன் கருத்து.

” நிறை மொழி மாந்தர் ,ஆணையிற் கிளத்த. மறைமொழி தானே மந்திரம் என்ப”

மறை மொழி என்றால் மறைவாக கருத்து கூறப்பட்ட சொற்றொடர் என்று அர்த்தம்.. அதாவது அர்த்தம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.. தெளிவான அறிவு பெற்ற ஒருவனுக்கு எதற்கு மறைவாக கூறப்பட்ட மொழி.
( மந்திரம் ). தெளிவான அறிவு இருந்தால் அவனே நிறை மொழி மாந்தன் என்பது.. அப்படி அவனே ஏன மந்திரம் செபிக்க வேண்டும்.

இதற்கு மேலும் இந்த கடவுள் நம்பிக்கை எந்தளவு சமூகத்தை பாதிக்கிறது என்று பாருங்கள்..

திருப்பதிக்கு போனால் செல்வம் பெருக்கும் என்கிறார்கள், அங்கு தினமும் பெருமாலுக்கு பூசை செய்யும் குருக்கள் இருப்பது தேவஸ்தான வீட்டுத்திட்டத்தில், அவர்கள் வைத்திருப்பது இரண்டு சக்கர மோட்டார் வண்டிகள், அங்கு தரும் லட்டு புன்னியம் என்கிறார்கள் ஆனால் அந்த லட்டை செய்யும் குருக்கள் மார்கள் நடைபாதையில் திரிகிறார்கள்..

கொல்லிமலைக்கு போனால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்குமாம், ஆனால் அங்கு இருக்கும் மக்களோ அன்றாட உணவுக்கு பாடுபடுகிறார்கள்.. இப்படியே அனைத்து ஆலய மற்றும் புன்னிய தலங்கள்..

இதைச் சொன்னால் நாத்திகம் என்பார்கள் ஆனால் அதை எம்மிடம் கூற முடியாது காரணம் நாம் தினமும் கடவுளை வழிபடுகிறோம். அவனுக்கு பூசைகள் செய்கிறோம், அவனை தரிசிக்கிறோம், அவனுக்கு ஆராதனைகள் செய்கிறோம். அவன் தந்த அறிவுக்கு நன்றி செலுத்துகிறோம்..

சித்தன் போக்கு சிவன் போக்கு

சரியை கிரியை யோகம் ஞானம் என வழிகாட்டப் பட்டிருப்பது இதன் அமைப்பையே, பல விதமான பயிற்சிகளின் முடிவிலேயே உண்மையை அறிய முடியும்..

இந்த பயிற்சிகள் இல்லை என்றால் உங்களால் நாம் சொல்வதை ஏற்க முடியாது..

ஆலயத்தினுல் அம்பாள் அழகாக அழங்கரிக்கப் பட்டு ஆசி வழங்க காத்திருந்தாலும், வெளிவட்டத்தில் ஆட்டம் போடும் சாமி (பேயை) வணங்கி அதனிடம் குறி கேட்ட பின் தானே மற்ற வேலை. பேய் சொன்னதற்கு அம்பாள் சாட்சி.. என்ன கொடுமையடா இது..

கடவுள் கூத்தாடினால் உலகம் தாங்குமா என்ற சின்ன சிந்தனை கூட இல்லை இங்கு.. அப்படியே சாமி சொல்ல வேண்டுமானால் அதை ஆலயத்தில் தானா அல்லது ஒருவனின் உடலில் தானா சொல்ல வேண்டும், அப்படியானால் கடவுளின் சக்திக்கு கட்டுப்பாடுகள் உண்டா,, கட்டுப் பாடுகள் இருப்பின் அது கடவுளாக முடியுமா.. !

உங்கள் சிந்தனைகளை நீங்கள் வெற்றியடைய அதன் மாயையில் இருந்து வெற்றி பெற பயிற்சிகள் தேவை அதற்குத் தான் மந்திரங்கள். அவை நீங்கள் சொன்னதை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அதை நீங்கள் வகுக்கவில்லை.

உங்கள் சிறந்த அறிவினால் மந்திரங்களை கட்டுப்படுத முடியும், அதன் காரணமாகவே ஒரே விடயத்துக்கு பல பல மந்திரங்கள் அமையப் பெற்றிருக்கிரது.

நீங்கள் கடவுள் என நினைப்பது கடவுள் இல்லை என்பதுவே நாம் அனைத்து மாணவர்களுக்கும் கூறுவது.

அதனால் தான் உருவம் அருவம் அருஉருவம் என வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்கள் சான்றோர்கள். அறிவினால் காண்பதுவே கடவுள்..

கடவுள் என்ற ஒன்றை வணங்கினால் போதும் என்றால் ஏன் எமக்கு மூப்பு எய்தவேண்டும் என்ற அறிவின் வெளிப்பாடே மருந்துகள் என பெயர் பெற்றன.. நீங்கள் கடவுளை வணக்கினாலும் சரி இல்லையாலும் சரி உடலுக்கு தேவை உணவு, உணவுக்கு தேவை சத்துக்கள், சத்துக்களை சரியாக பகுத்து கூறினால் அதுவே மருந்து. அதுவே பகுத்தறிவு..

அவனின்றி அணுவும் அசையாது, மருந்தின்றி அவனும் அசைய முடியாது.. அதனால் தான் அமிர்தம் என்ற கதை உங்களுக்கு கூறப்பட்டிருக்கிறது..

கடவுளாக இருந்தாலும் மருந்தை செய்தே சாப்பிடவேண்டும் என்பதற்கு தான் மந்திர மலையும் பாற்கடலும், வாசுகிப் பாம்பும் உவமையப் படுத்தப்பட்டிருக்கிறது..

ஏன் கடவுளுக்கு சக்தி இல்லையா அமிர்தத்தை மந்திரத்தால் கையில் அழைப்பித்து தேவர்களுக்கு கொடுக்க.

கதை கதையாம் காரணமாம்..

சித்தன் போக்கு சிவன் போக்கு..

ஆகவே நாம் உங்களுக்கு கூறியிருப்பது நீங்கள் பயனிக்கும் பாதையை மட்டுமே,, அதில் இருக்கும் துன்பங்களை தாண்டுவது உங்கள் அறிவினால் தான் ஏனனில் அறிவே கடவுள்.

அதனால் தான் அறிஞர்கள் காலத்தை தாண்டி இருக்கிறார்கள் கடவுளைப் போல.. இன்று நீங்கள் சித்தர் ரிசி முனி என்று பேசுவது அவர்களின் அறிவினை பற்றியே, அவர்களது அறிவே கடவுள் என்பது அதன் உட்கிடக்கும் புதையல்.

முயற்சி செய்தவர்கள் எல்லாம் புதையல் எடுத்த வரலாறு இல்லை. ஆனால் முயற்சி செய்யாமல் அதைப் பற்றி பேசவும் கூடாது.

கடவுளின் உருவத்துக்கும் அதன் தன்மைக்கும் எந்த ஒற்றுமையும் அல்ல, வேற்றுமையும் அல்ல, அவர்வர் விரும்பும் வடிவத்தை அவரவர் கடவுளாக வணங்க முடியும். ஆனால் அது கடவுள் இல்லை. அனைத்தையும் கடந்து நிற்பது தான் கடவுள் என்றால் கடவுளையும் கடந்து நிற்பது எதுவோ அதுவே கடவுளாக இருக்க முடியும்.

“ அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் ” கடவுள் என நீங்கள் நினைப்பதை தாண்டியும் சிந்திக்க முடியும் என்பதே மேல் உள்ள வரிகள் கூறுவது.

அப்படி அதைத் தாண்டி சிந்திப்பது அறிவு.. ஞானம்.. கடவுள்..

இந்த நிலை உங்களுக்கு புரிய வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல, முடிந்தால் புரிய முயற்சி செய்யுங்கள்... அவ்வளவு தான்.

நாம் உங்களுக்கு தந்திருக்கும் பயிற்சிகளை முதலில் செய்யுங்கள் அதன் தன்மைகளை ஆராயுங்கள், பின்னர் இந்த நிலை பற்றி சிந்திக்கலாம், ஆனால் நீங்கள் பயனிக்கப் போகும் பாதை பற்றி தெரியப்படுத்துகிறேன். முடியும் என நினைப்பவன் பிந்தொடரு... முடியாதவன் விட்டுவிடு..

” ” தொட்டல்லோ காட்டாத வித்தைபாரிற்
தொட்டெண்ணிப் போட்டாலும் வாராதுவித்தை
விட்டல்லோ தன்னாலே யாகுமென்று
மேதினியில் இறந்தவரோ கோடாகோடி””

சித்தன் போக்கு சிவன் போக்கு..

எனைஈன்ற தாய்தந்தை பாதம் போற்றி
எனையாண்ட குருமாரே சித்தர்களே போற்றி..
வாலையாம் மணோன்மணியால் பாதம் போற்றி
யான்செய்யும் நாற்பத்துமுக்கோண பூசை போற்றி
என்னறிவில் நீங்காத கூத்தாடி சிரசே போற்றி











 













சிவசக்தி மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

மேலும் சில மூலிகை காட்சிகள்.

வணக்கம் தோழர்களே,

மீண்டும் சில இயற்கை காட்சிகள்....





















நன்றி

சிவசக்தி மா கோ முதலியார்
சித்த மருத்துவர்