Monday, September 1, 2014

யார் சாமி...

வணக்கம் தோழர்களே,,

ஒரு சிலர் பாடல்கள் காட்டுகிறார்கள் நமக்கே... அவர்களின் அறிவு எப்படி செயலாற்றுகிறது என்று பார்க்கலாம்..

“ அலையவே நாலுவே தத்திலுள்ள
அடைவான குருமார்கள் பொய்கள்சொல்லி
நிலையவே அவரவர்கள் வேதங்கட்டி
நீச்சாஉன் தெய்வம் எந்தெய்வம் என்றூ
மலையவே மானுடரை மயக்கங்காட்டி
மகிமைபெற இருந்துமே நிட்டைப்போலே
குலையவே காட்டியே அடிமைசெய்வார்
குரூரமாய்ப் பார்த்தறிந்தா லெல்லாம்பொய்யே.”

” என்பார்கள் உறுதியில்லா ராசைகூடார்
இன்பமா யுடம்புவளை யாமல்தானும்
நன்மையாய் புத்துமண்ணை லிங்கமாக
நாடியே யொருபிடித்து செபங்கள்செய்வார்
வன்பாக பசிவந்த போதில்தானும்
வடிவாக யிரந்துண்பார் மாயமெத்த
உண்பாரை யுடுப்பாரை பார்த்துஏங்கி
உறுதிதா னில்லாம லலைகுவாரே.”

பாடல் விளக்கம்... சுருக்கமாக..














நான்கு வேதத்திலும் இருக்கின்ற குருமார்கள் பொய்களைச் சொல்லி அதோடு அவர்களின் வேதாந்தமும் சொல்லி, இது இந்த சாதிக்கு, அது அந்த சாதிக்கு (பிரிவினை) உரிய தெய்வம் என்று மக்களை மயக்கி, அவர்கள் சுகமாக இருந்து சாமியார் போல் மக்களை அடிமையாக்கி வைப்பார்கள்.. இதை அறிவாழ் பார்த்தால் இவர்கள் செய்யும் பொய் தெரியும் என்கிறார்..

உதாரணமாக .. சாய் பாபா, சத்குரு, நித்தியானந்தா, ரவிசர்மா, அம்மா, அப்பா, கல்கி போன்ற ஆசாமிகள்..

இந்த சாமியார்களுக்கு பெண்கள் இல்லாவிட்டால் மாக்கட்டிங் இல்லை..

இந்த சாமியார்களின் சொத்து மதிப்பில் பாதியைவிட குறைவாகவே நாட்டின் பொருளாதார கடன்கள் இருக்கிறது.. ஏழை நாடு என்கிறீர்கள், அரசியல் வாதிகள் சொத்துமதிப்பை பேசும் நீங்கள் இந்த சாமியார்களின் சொத்துக்களை ஆராய்ந்து பாருங்கள்.. அவர்களிடம் வரும் பக்தருக்கு ஆசி வழங்கத்தேவையில்லை, தலா 1 கோடி கொடுத்தால் போதும், நாட்டின் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.. இவர்களிடம் இருக்கும் பணம் போதும் நதிகளை உலக மயப்படுத்தலாம்..

தங்குவதற்கு மாளிகைகள் எதற்கு சாமியாருக்கு.. குடில் போதாது.. பயனிக்க மெர்சிடஸ், பி.எம்,டபில்யு, ஆடி, என சொகுசு வண்டி எதற்கு, விமானத்தில் விஐபி ஆசனம் எதற்கு, பளபளப்பான ஆடைகள் எதற்கு, கரண்டியால் சாதம் சாப்பிடும் இவர்கள் சாமியார்கள் என்றால்..

காட்டிலும் மேட்டிலும் அழைந்து திரிந்து மக்களுக்கு அறிய மருந்துகளையும் வாழ்வியலின் உண்மையையும் தந்த ஞானிகள் சித்தர்கள் எல்லாம் யாருங்க...

இப்ப முட்டாப் பசங்க யாருன்னு நீங்களே தீர்மானிங்க...

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment