வணக்கம் தோழர்களே,
நேற்று இரவு எமது வாசகர் ஒருவர் அழைபேசியில் கன்னியாகுமரியில் இருந்து வாதம் ஒன்றை செய்தார்..
அதாவது அவர் எம்மை பற்றி அவரின் சில நண்பர்களிடம் விசாரித்தாராம், எமது மருத்துவக் குறிப்புக்களை காட்டி கேட்டிருக்கிறார், அதற்கு அவரின்
நண்பர் எம்மை நல்ல மருத்துவர் என்று சான்றிதழ் கொடுத்தபின்னரே அவர்
எம்மிடம் மருந்து வாங்கியதாகவும், பதிவுகளை நம்பிப் படிப்பதாகவும்
கூறினார்..
இதில் என்ன இரகசியம் என்றால் அவரின் நண்பர் மூன்று
தலைமுறையாக சித்த மருத்துவர்களாம், ஆனால் தற்போது பணம் சம்பாதிப்பதற்காக
வேறு தொழில் செய்வதாகவும் கூறினார்.. இதற்கிடையில் நாம் 7 தலைமுறை தாண்டி
சித்தர்கள் வழியில் இருக்கிறோம் ஆனால் நேற்று வந்தவர்கள் எல்லாம் சான்றிதழ்
கொடுத்தால் தான் மருந்து சாப்பிடுவார்களாம்.. சிரிப்பாக இருந்தது..
அத்துடன் அவர் நத்தைசூரி மூலிகையும், பறட்டை விதையும் தேடுகிறாராம் அந்த மருத்துவ பாரம்பரிய நபர்.. சிரிப்பிலும் சிரிப்பு..
ஆனால் அவர் வாதம் செய்ய வந்த விடயம் வேறு.. அவருக்கு எமது மருந்தில் சந்தேகம் இல்லையாம்.. காரணம் சான்றிதழ் இருப்பதால்..
ஆனால் சாத்திரம் பற்றியும் சாமி ஆடுவது பற்றியும் கேட்டார்.. அவரது தம்பி
சாமி ஆடுகிறானாம் அதனால் சாமி ஆடுகிறது என்கிறார்..அப்படியே அவருக்கு
சாதகம் பார்க்கும் வியாபாரம் இருக்கும் போல அல்லது கற்கிறார் போல அதனால்
அது உண்மை என்றார்..
ஆனால் எப்போதும் போல கேள்விகளுக்கு விடை தெரியாது, வாதம் மட்டும் செய்ய தெரிகிறது நன்றாக...
சூரிய உதயம் இல்லாத இடங்களில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி சாதகம் எழுதுவது என்றால் .....! பதில் இல்லை..
சூரிய உதயம் இல்லாத நாட்டுக்கு பஞ்சாங்கம் எழுதுவது எப்படி.! பதில் இல்லை..
ஆனால் சில கிரகத்தின் பெயரை சொல்லி அது அங்கு நின்றால் இது பலன், இது
அங்கு நின்றால் இது பலன் என்கிறார்.. நாம் கேட்டோம் அது இது அங்கும்
இங்கும் இருக்கு என்று எப்படி கூறமுடியும் என்று.. அவர் அதை கணிக்க
முடியும் என்றார்.. நல்லது எப்படி கணிப்பது யார் அதை கணிக்கும் முறையை
சொன்னது என்றால் தெரியவில்லை..
அப்படியே குறித்த இரண்டு கிரகம்
குறித்த இடத்தில் இருந்தால் ஆண்மை குறைபாடு இருக்குமாம் என்றார், அதற்கு
சித்த மருந்துகள் சாப்பிட்டால் குணம் கிடைக்குமாம் என்றார்.. அவரிடம்
கேட்டோம்.. மருந்து சாப்பிட்டு குறை நீங்கியதும் கிரகங்கள் இடம் மாறுமா
என்று...அவர் அது தான் தனக்கும் சந்தேகம் என்கிறார்..
புலிப்பானி
சித்தர் போகரின் சீடராம் (எம்மிடம் கூறுகிறார்) அவர் பல சோதிட நூல்களை
செய்தாராம் அதில் பல விடயங்கள் கூறியிருக்கிறாராம்.. நாம் கேட்டோம்
அப்படியானால் அவர் சாதகம் கணிக்கும் முறையும் கூறினாரா என்று.. அவர் அது
தெரியாது என்கிறார்..
எந்த விடயமும் அடியும் முடியும் இல்லாமல்
பேசும் அளவுக்கு அவர் திறமையானவர் என்பது தெரிந்தது.. அது அவரின் குற்றம்
அல்ல சமூகத்தின் குற்றம்.. அதன் இசைவாக்கம் அவரை பேச வைக்கிறது.. அவ்வளவு
தான்.. ஆனால் அவரின் குருவிடம் கேட்க அவரால் முடியவில்லை.. அது தான்
பிரசினை,, கேள்வி கேட்டால் உடனடியாக இவர் வெளியேர வேண்டும் போல..
சரி அவருக்கும் அவரின் குரு மாருக்கும்,, மற்றும் சாதக
சிந்தாமணிகளுக்கும்,, சோதிட சக்கரவர்த்திகளுக்கும்... இந்த சாட்டை அடி..
வாங்க தயாராகுங்கள் முட்டாள் பசங்களா...
1. உங்கள் கணிதம் சரியானதாக இருந்தால் எப்படி ஒரு சூரியனுக்கு இரண்டு உதயம் இருக்க முடியும்..
வாக்கியம், திருக்கணிதம் என பஞ்சாங்கம் எப்படி இருக்க முடியும்.. கணிதம்
என்றால் விடை (பதில்) எந்த விதத்தில் போட்டாலும் சரியானதாகவும்,
ஒன்றானதாகவும் வர வேண்டும்.. உங்களிடம் இருக்கும் கணிதம் பல ஒரு கேள்விக்கு
பல விடைகள் தருகிறது.. இது எப்படி கணிதமாகும்..
முன்னர் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை இந்த கேள்விக்காவது பதில் வருகிறதா பார்க்களாம்..
புலிப்பானி சித்தரின் அப்பன் போகர் சொல்வதை கேளுங்கள் முட்டாள் பசங்களே...
“உண்டான கட்டளைகள் அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
திண்டான நல்லநாள் தீயநாளும் திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
சண்டாள மாண்பரெல்லாம் சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
கொண்டபடி யவரவர்கள் தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே”
“ஆமேதான் கெட்டநாள் நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
போமேதான் கதிரோனின் நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநா ளென்றிருக்க
வேமேதான் நாளெட்டும் நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
ஆமேதான் நாதரவர் செய்திருக்க வப்பனே நம்மாலே யாவதென்ன”
“என்னவே தேவனது யெட்டுநாளும் எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
பன்னவே வெள்ளிதனில் திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
சொன்னபடி காரிதனில் சவளமாகா துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
நன்மையாய் திங்களது வாரசூலை நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே”
“ நாட்டமுடன் செவ்வாய்க்கு மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
தேட்டமுடன் புதனுக்கு வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
நீட்டமுடன் குருவாரம் ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் தீயநாளாய்
வாட்டமுடன் சாஸ்திரங்கள் கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே”
“காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால்
தோணவே எந்தநாள் நல்லநாளென்று துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
வேணவே நாளெட்டும் நல்லநாளாய் விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு மதிகெட்டு நின்றிட்டாரே”
““ஆச்சப்பா வையகத்தில் சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
பாச்சலுடன் சாத்திரங்கள் கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
ஆச்சரிய மானதொரு தேகமப்பா வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே”
போகர் இல்லை என்ற விடயத்தை புலிப்பானி இருக்கு என்கிறார் என்றால் சிந்தக்க
வேண்டும் முட்டாப்பசங்களே…. அதில் ஏதோ இரகசியம் இருக்கு என்று…
போகர் நாட்களை எட்டு என்று கூறியிருக்கிறார் மேதாவிகளே..அதற்காவது அர்த்தம் தெரிகிறதா..சிந்தாமணிகளுக்கு..
அறிவு கெட்டு திரிவதை விட்டு கற்பதை தெளிவாக கற்க வேண்டும்..
அப்படியே அவர் சாமி ஆடுவது பற்றி பேசினார் ஆலயத்தில் வில்லுப் பட்டு
பாடும்போதும், தீப ஆராதனை செய்யும் போதும், இப்படி சில நேரங்களில்
அனேகருக்கு சாமி வருவது பொய்யா என்றார்.. நாம் கேட்டோம் வரும் சாமி ஏதாவது
ரேஸன் காட் வைத்திருக்கா.. அல்லது பாஸ்போர்ட் இருக்கா.. அவர் கோவிலிள்
சாமிதான் வரும் என்றார்… நாம் பேய் வராதா என்று கேட்டோம்,,, அவர் ஆலயத்தில்
எப்படி கெட்ட்து வரும் என்றார்…
அப்படியானால் கோயில்
கோபுரங்களில் இருப்பது யார்… பேய் என்றால் கெட்டது என்று எதை வைத்து
கூறுகிறீர்களோ அதே செயலை தெய்வங்களும் செய்வதாகவே புராணங்கள் கூறுகிறது..
ஏன் பரமன், சிவன், ஒருவன், தலைவன் என நீங்கள் புகழும் பாடும் ஆதியானவர்
சுடலையில் இருப்பவர், பேய்களுக்கு தலைவர், பூதங்கள் பிசாசுகளுடன் திரிபவர்
அவரின் படைகளே அவை தானே.. கெட்டவர்களை வைத்து அரசியல் செய்யும் அவர்
மட்டும் எப்படி நல்லவராக உங்களுக்கு காட்சி தருகிறார்…
சாமி
பூலோகம் வரவேண்டுமானால் நேராக வருவது தானே, எதற்கு மனிதன் மீது
வரவேண்டும்.. அப்படி நேராக வர சக்தியில்லாத ஒன்று எப்படி சாமியானது…
இது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்,.. மேலும் வேண்டுமானால் இனி பணம் கட்டிப் படிப்பவர்கள் மாட்டும் வாருங்கள்..
பணம் கொடுத்து படிப்பது தான் உண்மை என்ற நிலை உங்களையும் சேர்த்து முட்டாளாக்கி விட்டது போல…
அப்படியே புலிப்பாணி பாடிய நூல்களை படிக்கும் முன் இதைப் படியுங்கள் முட்டாள் பசங்களே..
காலங்கிநாதர் போகருக்கு கூறிய புத்தி..
” மாண்பான சாஸ்திரத்தை யுந்தன்சீஷன் மகத்தான புலிப்பாணிக் குபதேசித்தீர்
ஆண்மையுள்ள சித்தாதி சித்தரெல்லாம் அவர்பேரில் மெத்த மனஸ்தாபமுண்டு
வீண்போன்ற சாத்திரமா இருந்தாலல்லோ விருப்பமுடன் அவர்தமக்கு உபதேசிக்க
தாண்மையுள்ள சாத்திரந்தான் சத்தகாண்டம் தாரணியில் சாத்திரங்கள் மெத்தவுண்டே”
” தானான சத்தகாண்ட மேழாயிரந்தான் தகமையுடன் கூறிவிட்டீர் தோஷமில்லை
பானான யெண்ணாயிரஞ் சாத்திரத்தை பகரவேண்டாம் புலிப்பாணி நாதருக்கு
தேனான சாத்திரத்தை மனதுவந்து தேற்றமுடன் மேருகிரி தன்னிலப்பா
கோனான குகைதனிலே வைத்தாலல்லோ கொற்றவனே லோகமெலாம் மதிப்பார்தானே”
புலிப்பாணிக்கு அணைத்தையும் கற்பிக்க வேண்டாம் என போகரின் குரு காலங்கிநாதன் கூறுவதைப் பாருங்கள்..
அடியும் தெரிவதில்லை முடியும் தெரிவதில்லை.. வாதம் செய்ய வந்தாச்சு…
இது குறிப்பிட்ட அந்த வாசகருக்கு மட்டும் அல்ல.. அவர் மேல் எந்த தவறும் அல்ல.. அவரையும் ஏமாற்றிய அர்ப்பர்களுக்கு…
இது போதும் என நினைக்கிறேன்… தேவை எனின் மீண்டும் தொடரும்… போகரின்
காண்டம் மட்டும் இப்போது தந்திருக்கேன்.. தேவைப்படுமயிம்….. உங்கள்
கைகளில் இல்லாத பாடல்கள் எல்லாம் வரும்….
“ பாடலாய் மறைத்துவைத்த சங்கையெல்லாம் பாரிலுள்ள மாண்பர்களுங் கண்டுகொள்வார்
தேடவே சாத்திரத்தை புனிதவானே தேற்றமுடன் புலிப்பாணிக் குறுதிகூறி
ஆடவே யம்பலத்தில் நல்லோர்தம்மை அறிவுடையோர் சிவயோக மாண்பருக்கு
கூடவே சாத்திரத்தை தேர்ந்துமல்லோ குணமான வெகுபுத்தி கூறுவீரே”
உங்கள் விளையாட்டுக்கள் இங்கு வேண்டாம்...
எமது குருகுல மாணவர்களாக வர இருக்கும் வாசகர்கள்... இதைப் போன்ற பல இரகசியங்கள் கற்பதற்கு தயாராக இருங்கள்..
சித்தர்களை பார்க்க வேண்டும் அல்லவா... நியத்தில் பார்க்களாம்... தயாராகுங்கள்...
ஆனால் நீங்கள் புலிப்பாணி போகருக்கு இருந்தாற்போல் இல்லாமல்,
.. போகர் காலங்கிநாதருக்கு இருந்தாற்போல் இருக்க வேண்டும்.
” விட்டகுறை தொட்டகுறை இல்லாவிட்டால் தரணியில் சித்தர் அருள் கிடையாதப்பா..”
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment