வணக்கம் தோழர்களே,
இன்றில் இருந்து நாம் தொடர்சியாக பல மந்திர தந்திர உபாசனைகள் பற்றி பயிலப்போகிறோம்,, அதன் முதல் பாடநெறியாக..
” தணக்கு தேவையான தங்கங்களை தானே இரசவாதத்தால் செய்யும் ஆற்றல் கொண்ட சித்தர்கள் ஏண்டா தம்பி சொர்ண வயிரவரை கூப்பிட்டு தங்கம் கேட்கப் போகிறார்கள்.. சிந்திக்க மாட்டீர்களா..!”
”சுவர்ண ஆகருசணம்” வயிரவன் பற்றி பார்க்கலாம்..
இன்றைய மக்களிடையே இருக்கும் மூட நம்பிக்கைகளை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகளுக்கு அளவில்லாமல் போயிற்று..
சுவர்ணம் என்றால் பொன் என்றும் ஆகருசணம் என்றால் அழைத்தல் என்ற
கருத்தையும் வைத்து, சுவர்ண ஆகருசண வயிரவன் என்றால் பொன்னை அழைத்துவரும்
கடவுள் என்று கருதி இந்த மந்திர உபாசனை செய்தால் பணப்பிரச்சினைகள் தீரும்
என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஆசாமிகள்..
சிவனாரின் அவதாரம் வயிரவன் என்று கூறும் அறிவாழிகள் எதையும் முழுமையாக ஆழமாக கற்பதில்லை போலும்...
அசுர வதம் செய்ய சிவனால் தாருகாபுரம் எரித்த அக்கினியை ஓர் சக்தியாய்
மாற்றினார் அந்த சக்தி வயிரவம் என்று அழைக்கப்பட்டதாக வேதம் கூறுகிறது..
அந்த சக்தி அசுரனால் இருளாக மாற்றப்பட்ட லோகங்களின் எட்டு திசைகளையும்
பிரகாசிக்க செய்ய எட்டு சக்திகளாக மாறின.. இப்படித்தான் வேதம் கூறுகிறது..
அதன் பின் அந்த அசுரன் அழிக்கப்பட்டு பின்னர் தாட்சாயினி கதை தக்கன் யாகம்,
தாட்சாயின் இறப்பு சிவன் சக்தியை தூக்கி அழைந்த கதை அதில் விட்னு
சக்கரத்தால் சக்தியை துண்டுகளாக வெட்டியது பின்னர் அந்த துண்டுகள்
சக்திபீடமாக மாரினதும் அதற்கு காவலாக எட்டுப்பேரும் (வைரவர்) 64 சக்திகளாக
பிரிந்து காவல் செய்வதும் தான் புராணம்..
இதில் இந்த எட்டுப் பேரிலும் சரி 64 பேரிலும் சரி சொர்ண ஆகருசண வயிரவர் இல்லையே… அப்படி என்றால் இவர் எங்கிருந்து வந்தார்..
பணம் கிடைக்கும் இவரிடம் போனால் என்றால் போதும்.. உடனே கூட்டமாக கிழம்ப வேண்டியது தான்… எதையும் சிந்திப்பதில்லை..
சுவர்ண ஆகருசணம் என்றால் என்ன என்று யாராவது இந்த ஆசாமிகளை கேட்டதுண்டா..
அல்லது அவர்கள் தான் கூறியதுண்டா.. பணம் வரும் என்றால் எதையும் செய்ய
தயாராக இருக்கும் மக்களை சுவர்ண ஆகருசண வயிரவன் கூட காப்பாற்ற முடியாது..
சொர்ண வயிரவர் என்றால் … சித்தர்கள் கூறுவது..
”தானேதான் சொர்ணமென்ற வயிரவன்தியானஞ்
சாற்றுகிறேன் அட்சரங்கள் சரினின்றாட
வானேதான் சோதித்ததுபோல் வாதவித்தை
வகையான அட்டகர்ம சித்திக்காக
சேனேதான் அனேகமுண்டு கர்மவித்தை
செய்வதற்கு சொர்ணவயிரவனை பூசி
நானேநீயென்று சொல்லெண் கோணத்துள்ளே
நாட்டுவாய் அட்சரத்தை நாட்டுவாயே”
இது சித்தர்கள் கூறிய சொர்ண வைரவன் பூசை முறையின் பாடல் ஒன்று…
சித்தர்களின் இரசவாத வித்தைக்கு காவலாக அட்ட கர்மங்கள் சித்தி செய்வதற்காக
அழைக்கப்படும் ஓர் காவல் தேவதையின் பூசை முறை.. வாதவித்தைகள் செய்யும்
போது அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை காப்பதுக்காக இந்த சொர்ண வயிரவன்
அழைக்கப்படுகிறார்.. சொர்ண வயிரவர் அழைக்கப்படுவதை ஆகருசணம் என்று
கூறுவது.. இதை இங்கு சொர்ணம் கிடைப்பதற்காக என்று மாற்றி மக்களை ஏமாற்றி
ஆசாமிகள் பணம் ஆகருசணம் செய்வது ஏனோ மக்களுக்கு புரிவதில்லை..
தணக்கு தேவையான தங்கங்களை தானே இரசவாதத்தால் செய்யும் ஆற்றல் கொண்ட
சித்தர்கள் ஏண்டா தம்பி சொர்ண வயிரவரை கூப்பிட்டு தங்கம் கேட்கப்
போகிறார்கள்.. சிந்திக்க மாட்டீர்களா..!
அப்படியானால் சொர்ண
வயிரவரின் வேலைதான் என்ன..! அதற்கு முதல் அட்ட வயிரவர்கள் யார் என பார்க்க
வேண்டும் அவர்களில் இவர் இருக்கிறாரா என பார்க்க வேண்டும்..
1. அசிதாங்கன்
2. ருருவன்
3. சண்டையன்
4. குரோதன்
5. கபாலன்
6. உன்மத்தன்
7. பீசணன்
8. சங்காரன்
இவர்களில் சொர்ண வயிரவன் வரவில்லையே…
மேல் குறித்த சித்தர் பாடல் இவ்வாறு முடிகிறது …
” தானென்ற வயிரவர்கள் எட்டுப்பேரும்
தனித்துமே சக்கரத்தில் நின்றுபூசை
வானென்ற அட்டமாசித்தி எட்டும்
மைந்தனே வயிரவர்கள் எட்டுப்பேராம்
கோனென்றநீ இவர்களைத்தான் பூசி”
சித்தர்கள் பரிபாசை பேசுபவர்கள் என்று நன்றாக தெரிந்தும் அவர்கள் கூறும்
விளக்கத்தை அடியும், முடியும் இல்லாமல் படித்த ஆசாமிகளை என்ன சொல்வது..
”போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற வாக்கியம் ஞாபகத்தில்
இருக்கிறதா.. இந்த போதும் என்ற மன நிலையை தருவதே இந்த சொர்ண வயிரவரின்
செயற்பாடு.. அதாவது இருளை நீக்கி ஒளியை தருவது அவரின் செய்கை..
அட்ட சித்திகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் தெளிவான சிந்தனைகள் என
ஆத்மபலத்தை அடைவதற்கு சொர்ண வயிரவன் என்ற ஓர் தேவதையை உருவகப்படுத்தி அதன்
மூலம் தங்களை வாதவித்தைகளில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர் சித்தர்கள்..
எட்டுவிதமான வயிரவர் என்றால் அவர்களுக்கு தனித்தனியே பூசைகள் செய்ய
வேண்டும் என்பதால் அவர்களை ஒருமுகப்படுத்தி சொர்ண வயிரவர் என்ற பெயரை
சூட்டினார்கள் சித்தர்கள்..
“ மாயையை போக்கும் கடவுள் இன்று
மாயையின் முழு உருவமான பணத்தை தருவதாக மாற்றியது எந்த ஆசாமியின் வேலையோ
தெரியவில்லை” ஆனால் அதை இன்று இங்கு இருக்கும் பல ஆசாமிகள் நன்றாக
வியாபாரம் செய்கிறார்கள்.
சொர்ண ஆகருசண வயிரவனை வழிபட முறையான
இயந்திரம் மற்றும் மந்திரம் என தெளிவான விடயங்கள் சித்தர்கள் சிலர்
கூறுகின்றனர்,, அதிலும் தூய தங்கத்தில் இந்த இயந்திரம் செய்யப்படவேண்டும்
என்கிறார்கள்… அதாவது இருளின் நிறம் கருப்பு (இரும்பு) ஒளியின் நிறம் பொன்
(தங்கம்) என்ற அடிப்படையில் இருளை நீக்கி ஒளியை தருபவன் வயிரவன் என்று
அதற்கான நியதிகளை அமைத்திருக்கிறார்கள்..
ஒன்றையும் ஆராய்வதும் இல்லை சிந்திப்பதும் இல்லை… மேடை போட்டுப் பேசினால் உடனே கிழம்பவேண்டியது தான்..
இதை வேதகாலத்துக்கு பின் வந்த பல நூல்கள் தவறாக சித்தரித்துப்பேசியதால் வந்த வினைதான் இன்று ஆசாமிகள் பேசுவது..
அதுவும் இவர்கள் கூறும் இந்த சுவர்ண ஆகருசண வயிரவன் மந்திரங்கள் எந்த
நூல்களில் இருந்து கிடைத்தது என்று கூட இவர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை..
எம்மிடம் தொடர்ச்சியாக பல மாணவர்கள் கேட்ட விடயமும் இதுதான்..
சுவர்ண ஆகருசண வயிரவன் மந்திரம் என்ற பேரில் எதையோ எல்லாம் பதிவிடும்
ஆசாமிகள் மக்களின் நம்பிக்கையோடு அளவு கடந்து விளையாடுவது
தண்டனைக்குறியது..
” சிந்தாமணி பைரவ நூல்” இந்த வயிரவ கலைகளைப்பற்றி பேசுகிறது அதில் ஏற்பட்ட குழப்பத்தின் வெளிப்பாடுதான் இந்த சொர்ண வயிரவன்…
பேருக்கு முன்னால் பைரவன் சேர்த்தால் போதாது.. வயிரவன் பற்றி சில விடயமாவது தெரியவேண்டும்..
சிவ மூர்த்தங்களையும் வயிரவனையும் கடவுளாக சித்தரித்து பேசிவிட்டது இந்த வயிரவ நூல்கள் பல..
சிந்தாமணி நூலின்படி சுவர்ண ஆகருசண வயிரவர் மந்திரங்கள் என பல பல
கூறப்படுகிறது.. அதில் இல்லாத மந்திரங்கள் எல்லாம் இன்று சமூகத்தில்
புலக்கத்தில் இருப்பது எப்படி என்று தான் புரியவில்லை..
உதாரணமாக..
“ ஓம் வம் ஆம் ஹ்ரீம் ஹ்ரௌம் மகாபைரவாய
ஆபதுத்தாரணாய அஜாமில பந்தநாய
லோகேச்வராய ஸ்வர்ணாகாஷணாய
மம தாரித்ர்யா பஹராய ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரௌம் ஆம் ஸ்வாகா||”
மூலம்.. இந்நூல் நாம் ஆய்வு செய்த இடம் காசி ஆபதுத்தாரணாய அகோரிகள்
கூட்டம்.. அகோரிகள் பலரிடம் இந்த சொர்ண ஆகருசண பயிற்சி இருக்கிறது..
அவர்கள் தங்கம் எடுப்பதாக நாம் அங்கு இருந்த காலத்தில் கண்டதில்லை..
அவர்களுடன் சேர்ந்து நாமும் பிச்சை எடுத்து தான் சாப்பிட்டிருக்கிறோம்..
அது ஒரு தவக்காலம்,..
இந்த மந்திரம் சிந்தாமணி பைரவ நூலில்
இருக்கும் சிறு மந்திரம்.. முடிந்தவரை தமிழில் எழுதியிருக்கிறேன்.. இதன்
மூலம் கிரந்தத்தில் (வடமொழி) இருக்கிறது..
ஆனால் இம் மந்திரம்
இன்று பீசங்கள் மாற்றப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.. நண்பர்
ஒருவர் எமக்கு இன்று கீழ் இருக்கும் மந்திரத்தை அனுப்பி இதன் உண்மையை
கேட்டார், அவர் இந்த மந்திரம் கிடைத்த தளம் பற்றி சொன்னதும் நாம் அங்கு
சென்று பார்த்தோம்,, ஊரை ஏமாற்றும் ஓர் அசாமியின் தளத்தில் இது இருந்தது..
குறித்த நபர் அவரின் குரு இவருக்கு இதை உபதேசம் செய்த்தாக
எழிதியிருக்கிறார் முகனூலில்..
நல்ல குருவும் நல்ல மாணவர்களும் என்று சிரித்துவிட்டு இதை உங்களுக்கு பதிவிடுகிறேன்..
"ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலபத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்திரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நம:"
மந்திரத்தில் பாதியைக்காணவில்லை, அத்துடன் அட்சரங்கள் (எழுத்துக்கள்)
கூறும் அர்த்தமே மாரிவிட்ட்து.. மந்திரம் எழுதும் சொல்லும் முன் அதன்
அர்த்தம் என்ன என்று சொல்லித்தரும் குருவிடம் கேட்டுப்பாருங்கள் பல
குருமார் இடம் தெரியாமல் ஓட்டம் பிடிப்பர்கள்.. தாய் மொழியில் கற்பதே
கடினமாக இருக்கிறது அதில் வடமொழி மந்திரங்கள் வேறு..
இப்படி எல்லாம் கூட்டம் கூட்டி பேசும் ஆசாமிகளை நம்பி உங்கள் பிறவியை மீண்டும் ஒருமுறை இங்கே எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..
தங்கம் பணம் தருவதாக எத்தனை கடவுளைத்தான் உருவாக்கிவிட்டீர்கள்.. முதலில்
இலட்சுமி, விட்ணு, பின்னர் குபேரன் என்ற பேரில் சீன குண்டன் ஒருவன்,
பின்னர் சொர்ண ஆகருசண வயிரவர்.. இன்னும் சில நாளில் புதிகாக யாராவது
கிழம்பும் அபாயம் இருக்கும் என நினைக்கிறேன்..
சிவ அம்சம்
என்றால் அது மாயையை அருத்து முத்தியை தருவது,, அவரே உடம்பில் ஒரு துண்டு
தங்கம் இல்லாமல் வெரும் உருத்திராட்சம் மற்றும் பாம்பு, தோல் ஆடை என
சுடுகாட்டிக் திரிகிறார்.. அவரின் அவதாரம் என்ற பேரில் வயிரவனை
உவமைப்படுத்தி அவனிடன் செல்வம் கேட்கும் உங்களை.. எப்படி அழைக்கலாம்..
காவல் தெய்வம் காசுத் தெய்வமானது கவலையாகவே இருக்கிறது..
முக்தி தேடி உங்கள் இருளை நீக்கி பயனிக்க விரும்பும் அன்பர்கள் எம்மை
தொடர்புகொண்டால் உங்களுக்கு இந்த சித்தர்கள் சொன்ன சொர்ண வயிரவர் முறைகள்
கற்பிக்கப்படும்..
ஆனால் நிச்சயம் நாம் பணம் வாங்கிய பின்னரே கற்பிப்போம்..
பொய்யை கற்க உங்களிடம் பணம் இருக்கிறது என்றால், உண்மையை கற்க செலவு செய்யுங்கள்..
நாம் எமது ஆய்வியல் மையத்தின் மற்றும் ஒன்று சேர்ந்த இணைய குருகுல
செயற்திட்டத்துக்காகவும் இந்த ஏற்பாடுகளை செய்யலாம் என இருக்கிறோம்..
விரும்புபவர்கள் ஒன்று சேருங்கள்…
நன்றி..
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment