Monday, September 8, 2014

திருந்தினர் விட்டார்

வணக்கம் தோழர்களே,

இன்று முழு நிலவு நாள், அருமையாக இருக்கிறது காலைப் பொழுது.

சரி, இந்த சிதம்பரம் இராமலிங்கத்தாரின் விவாதத்தை இன்று முற்றுப் புள்ளிவைக்கலாம் என முடிவு உதித்திருக்கிறது. அதற்கமைய இன்றுடன் அதற்கான விடயங்களை பேசிவிடலாம்..

இராமலிங்கத்தாரின் கொள்கைகளை வரிசைப் படுத்தினால்..

1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2. புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய
வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி
இடுதலும் கூடாது.
9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத்
துன்புறுத்தக்கூடாது.
10. மத வெறி கூடாது .

” எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய்”
— திருவருட்பா , ஆறாம் திருமுறை ,3639

ஒன்றே கடவுள் என்றார் ஆனால் அருட்பாடலில் அவர் பெயர் குறித்தே பல தெய்வங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார், மன்றாடியிருக்கிறார்... சண்முகன், வினாயகர், என பல தெய்வங்கள் அதில் குறிப்பிடப்பட்டது ஏன்...!

கடவுள் ஒன்றுதான் அவரின் பெயர்கள் பல என நீங்கள் (வள்ளலார் பிரியர்கள்) பேசுவதானால், அதை தான் மற்றவர்களும் சொல்மிறார்கள்.. அவர் மட்டும் பல பெயரால் ஒரே இறைவனை வழிபட முடியும் ஆனால் மற்றவர்கள் வழிபடக்கூடாது என்றால் எப்படி...

அருட்பாடல் இலகு தமிழில் இருக்கிறது என்றால் ஏன் அதற்கு உரைநடை எழுத வேண்டும்.. விளக்க உரை எழுத முட்படால் காரணம் அது புரியவில்லை என்று தானே..

சரி, பழமையானவை புரியாமல் இருந்தது அதை புரியவைப்பதாக இருந்தால் அவர் அதை உரைநடையாக எழுதி வைத்திருக்கலாமே.. ஏன் பாடல்களாக எழுத வேண்டும் அதில் எதற்கு அவர் பரிபாசைகள் பேச வேண்டும்.. பரிபாசைகள் அதில் இல்லை என்றால் நீங்கள் அருட்பாடல்கள் படிக்கவில்லை என்று அர்த்தம் அல்லது உங்களுக்கு பரிபாசை என்றால் என்ன என்று தெரியாது என்று அர்த்தம்..

புலால் என்றால் என்ன என்ற கேள்வியை பல முறை இங்கு கேட்டிருக்கிறோம், யாரும் பதில் தந்ததாக இல்லை..! உயிர் உள்ளவை என்றால் தாவரங்கள் உயிர் இல்லாதவை என்று அர்த்தமா..! சிறிய உயிர் என்றால், ஆல மரம் சிறிதாகவா இருக்கிறது, குருதி இருந்தால் அது புலால் என்றால் தாவரங்களில் அது வேறு நிரத்தில் இருக்கிறது, ஏன் வெட்டுக் கிளியின் இரத்தம் பச்சையாக இருக்கிறது,, இரால் (கடல்) உணவுகள் பல வற்றில் இரத்தம் சிகப்பாக இருப்பதில்லை. எந்த அடிப்படையில் இந்த புலால் உணவுகள் பிரிக்கப்படுகிறது என்று யாராவது கூறமுடியுமா..! இரத்தம் பாலாக மாறி, பால் வென்னையாக மாறி, வென்னை நெய்யாக மாறி.. இப்படி பல மாற்றங்களை மட்டுமே இங்கு காட்டம் முடியும், ஆனால் அது வந்த இடம் பெரிய உயிரில் இருந்து தானே..

ஆதியை பற்றியும் ஒன்றே இறைவன் என்ற தத்துவத்தை பேசும் போது அனைத்திலும் ஆதியானவற்றை பார்க்கவேண்டும் அல்லவா.. அனைத்திலும் கருணையாக இருக்க வேண்டும் என்றால் கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் என காய்கரிகளை பறிக்கும் போது அந்த தாவரம் அழுவது புரியவில்லையா.. இராமலிங்கத்தாருக்கு... ஓர் அறிவு தாவரத்தின் கண்ணீர் புரியாத அவர் ஆறு அறிவு தாவரத்தின் கண்ணீரைப் பற்றிப் பேசியது வியப்பே..

இறந்தவர்களை எரிக்ககூடாது என்றால், அவர் ஒரு சித்த மருத்துவர் என்ற அடிப்படையில் இருந்து வேறுபடுகிறார்.. இறந்தவர்களை எரிப்பது அந்த உடலின் மூலம் பரவும் நோய்களை தடுப்பதே அல்லாது வேறு அல்ல.. அதை தாண்டி பேசினால் அவரின் அருட்பெரும் சோதி சுடலையின் சாம்பல் பூசி கூத்தாடுபவன் அல்லவா.. அவன் பூசுவதற்கு சாம்பலுக்கு எங்கு போவான்...!

சித்தர்கள் தங்களை சமாதி வைக்க சொன்னார்கள், அவர்களே சமாதியில் இருந்தார்கள், காரணம் அவர்கள் காலத்தை தாண்டி வாழ்ந்து காட்டினார்கள், பல மருந்துகளாலும் உடலை அழியாமல் இருக்கும் உபாயம் தெரிந்தவர்கள், அதையும் தாண்டி காடுகளில் மலைகளில் மக்கள் நடமாற்றல் இல்லாத இடத்தில் சமாதியில் அமர்ந்தார்கள் அவர்களின் உட அழியும் போது ஏற்படும் கிருமிகள் மக்களை அடையாது என்ற தெளிவான சிந்தனை அவர்களுக்க்கு இருந்தது. நாம் இங்கு சுடுகாட்டுகு பக்கத்தில் வீடு கட்டி வசிக்கிறோம், அங்கு தினமும் புதைக்கப்பட்டால் அந்த கிருமிகளின் தாக்கம் எப்படி இருக்கும்.. சிந்திக்க மறந்தவரா இராமலிங்கம்...

சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது என்றால் அவரே சிறியது ஒன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. ஏன் அதை வழிபடக்கூடாது என்றுதான் கூறவில்லை.. ஏன் மக்களுக்கு நல்லது நடந்தால் அது யார் செய்தால் என்ன.. நல்லது செய்வதில் சிறிதென்ன பெரிதென்ன.. சிறிதிலும் அவனே பெரிதிலும் அவனே என்று அவருக்கு தெரியவில்லையா..!

அணைத்திலும் அன்பாய் இரு என்றால் சிறு தெய்வத்தில் அன்பாய் இருப்பது ஏன் கூடாது.. பலியிடுதல் கூடாது என்றால்.., எதை, பலியிடுவது என்றால் என்ன..! இறைவனுக்கு கொடுக்கும் உணவுகளில் அதுவும் ஒன்று..

“கதிர் அறுக்காமல் நெல் கிடைக்காது மக்காள்..” அறுப்பது நெல்லில் இருந்தே ஆரம்பிக்கிறது.. அறுப்பது என்று முடிவாகிவிட்டால் அதில் என்ன பலியும் பூசையும்..

சித்தர்கள் முப்பலியும் தீர்த்து மூலிகைகளை பிடுங்கும் முறைகளை வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் கண்ட சோதியை விடவா இவரின் சோதி பெரியது.. அவர்கள் ஆராய்ந்த விடயத்தை விடவா இவரின் ஆராய்தல் பெரியது, அவர்களின் வாழ்கையை விடவா இவரின் வாழ்கை தூய்மையானது..

அவருக்கு சாதகமான விடயத்தை பேசிவிட்டு போய்விட்டார்.. அவ்வளவுதான்..

”I could find that the different from your main posting and now.
"Avar sonnathu unmai entru entha arivalium erka mattan". Now you agree that prathi. You only told me vallalar message oru prathi; Prathi means is kind of same like original. SO YOU ARE CONTRADICTING WITH YOUR REPLY.
"Vallalar prathi edukka vallavar entral avar eduttha prathi unmai thane." Vallalar eppadiyo irukkattum Nam antha prathi in unmai thanmaiyai nambuvom. ”

நாம் அவர் பிரதி பன்னியிருக்கிறார் என்றோம் அல்லவா,.. பிரதியை எப்படி பன்னியிருக்கிறார் என்று சொல்லவில்லையே,..

தவராக பிரதி பன்னியிருக்கிறார்.. மக்களை முட்டாலாக்கி இருக்கிறார்.. சித்தர்கள் மரபில் வந்தவர் என்றால் அவர்கள் கூறிய விடயங்களை அப்படியே கூறியிருக்கலாம்,

பிரதி என்றால் அவற்றை தனக்கு ஏற்ப மற்றியிருக்கிறார் என்று அல்லவா அர்த்தம், இருப்பதை அப்படியே சொல்பவன் ஏன் பிரதி செய்யப்போகிறான்...

சிறு தெய்வங்கள் வழிபடும் முறைகள் அவற்றுக்கான மந்திர பூசை விதிகள் என பல விடயங்கள் சித்தர்களால் தரப்பட்டிருக்கிறது, அவர்கள் செய்த தொண்டு எங்கே அவர்களின் பேரைச் சொல்லி இவர் செய்த்து என்ன...

சித்தர்கள் காட்டிய கருப்பன்ன சுவாமியும், மாடான் சுவாமியும் தூமாதேவியும் இறை அம்சம் இல்லை என்றால் இவர் கூறும் அருட்பெரும் சோதி யார், என்ன..!

18 சித்தர்களும் அவர்களின் வழி வந்தவர்களும் கூறிய விடயங்களை அப்படியே (தாறு மாறாக) பிரதிபன்னி தனக்கொரு பாதையை அமைத்தவர் அவர்.. அவ்வளவு தான்..

சித்தர்களின் வித்தைகள் வேண்டும், அவர்களின் மருத்துவம் வேண்டும், ஆனால் அவர்கள் சொன்ன சிறு தெய்வம் தேவையல்ல..

சித்தர்கள் தங்களை சிவமாக கருதினார்கள், சிவ பூசை செய்தார்கள், இல்லறத்திலும் இருந்தார்கள்..

”இல்லறம் அல்லது நல்லறம் அன்று” மூதாட்டியின் வாக்கு.. நல்லறம் செய்பவனாக இருந்தால் இல்லறத்தில் இருந்திருக்க வேண்டும். அது எவனாக இருந்தாலும் சரி.. இறைவனும் இல்லற வாசியாக காட்சி தருவது ஏன்.!

ஓர் குழந்த ஏன் அழுகிறது என்று பெற்ற தாயை விட வேறு எவனாலும் இங்கு அறுதியிட்டு கூறமுடியாது.. குழந்தை பிறக்கும் போது அது மாமிசத்தில் இருந்து தான் பிறக்கிறது, மாமிசத்தை தான் உண்கிறது, வந்த பின்னும் பால் என்ற பெயரில் தாயின் இரத்தம் தான் அதற்கு உணவாகிறது.. அப்படி இருக்க புலால் பற்றி என்ன விளக்கம் இங்கு பேசுகிறீர்கள்..

சரியான தமிழ் அறிவு கூட இல்லை அவருக்கு...

அருட்பெரும் ஜோதி,.. இதில் தமிழ் முழுமையாக இல்லை.. ஜீவகாருண்யம்.. இதிலும் தமிழ் முழுமையாக இல்லை..

ஜ் என்ற எழுத்து தமிழ் அகரவரிசை அல்லவே.. இது தமிழில் உபயோகிக்கப் படும் கிரந்த எழுத்து..

தமிழில் எழுதுவதாக இருந்தால் அருட்பெரும் சோதி, சீவகாருண்யம் என்று எழுதியிருக்க வேண்டும்.

யாரிடம் அய்யா பேசுகிறீர்கள் இராமலிங்கத்தாரைப் பற்றி..

சீவ காருண்யம் என்றால் என்ன என்று உங்களை விட மிக நன்றாகவே எமக்கு தெரியும்.. காரணம் நாம் ஒரு சித்த மருத்துவர்.. உயிரின் முக்கியத்துவம் பற்றி எம்மிடம் பேச வேண்டாம்.

மக்களுக்கு நட்பணிகள் செய்வதானால் அதை தாறாலமாக செய்யலாம், அதற்காக சமயம் என்ற ஒன்றை இங்கு மாற்றத் தேவையில்லை.. புதிதாக கொள்கைகள் பரப்பத் தேவையும் இல்லை. இந்த சாமியார்கள் என்ன அரசியல் வாதிகலா.. விரும்பும் படி கொள்கைகள் வைத்திருக்கிறார்கள்..

இறைவன் தந்த கொள்கை என்ன என்று இங்கு யுகங்கள் கடந்து ஆராய்ந்து சித்தர்கள், கூறிவிட்டார்கள் அதை விடுத்து என்ன புதிய கொள்கை வேண்டும். அதிலும் சித்தர்கள் கூறியதாக இங்கு பலரும் கூறுவது அதுவும் அல்ல என்ற ஓர் விடயமும் அதில் அடங்கி இருக்கிறது..

”நாம் இங்கு கூறுவது சித்தர்கள் மரபில் அவர்கள் கூறியிருக்கும் பரிபாசைகளின் விளக்கம் மட்டுமே..”

இந்த பிறவியின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு பதில் கூறியவர்கள் முன்னமே அதை எழுதி வைத்திருக்கிறார்கள். அதைவிடுத்து புதிய கொள்கை அதற்கு கொள்கை பரப்பும் சங்கம், ஆச்சிரமம், என எத்தனை பித்தலாட்டம்..

சீவகாருண்யம் பேசும் எவரும் உடுப்பு போடக்கூடாது.. அதுவும் துணியாக இருக்கக் கூடாது.. தோலினால் ஆன பாதனிகள் வைத்திருக்கிறிர்கள் அவை எங்கு இருந்து வந்தது.. விலங்குகள் கலட்டிப் போட்ட துணியா அது.. அப்படியானால் பாம்பின் சட்டையை மட்டும் தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்..

உங்கள் வசதிக்காக ஏதாவது ஒன்றை செய்வது அதற்கு சாட்சிகள் கூறுவது.. உங்கள் வீட்டில் இருக்கும் செங்கல் ஓடுகள் எங்கு இருந்து என்ன செய்யப் பட்டு வருகிறது தெரியுமா.. அவற்றை சுடுவதற்காக எத்தனை காடுகள் அழிக்கப்படுகிறது தெரியுமா..! அந்த காடுகள் அழிக்கும் போதும் எத்தனை விலங்குகள் இறக்கிறது தெரியுமா...

சீவகாருண்யம் பேசுபவர்கள்.. இதற்கு மாற்றாக என்ன செய்திருக்க வேண்டும்.

வீட்டில் ஈயை கொல்ல, என்ன செய்கிறீர்கள்.. ஈ உயிர் இல்லையா.. அது இறைவனின் படைப்பு இல்லையா.. அதற்கு உயிர் இல்லையா..!

உங்களை துன்புருத்தினால் அதை நீங்கள் விடுவதில்லை.

இங்கு படைப்பின் காரணம் தெரிந்தவன் ஒருவன், அவனே அதை பற்றி பேசியதில்லை.. நீங்கள் பேசுகிறீகள்.

பசுவை அறுக்காமல் கோரோசணை பெற முடியாது. கோரோசணை இல்லாமல் குழந்தகளுக்கான சுவாச ரோகங்களை குணம் செய்ய முடியாது.. சீவகாருண்யம் எங்கே போனது..

சித்தர்கள் மருத்துவ குணபாடம், மற்றும் மருத்துவ நிகண்டு என்பன எழுதியிருக்கிறார்கள் அதில் விலங்குகள் உணவு அதாவது உங்கள் புலால் என கருதும் உணவுகள் மனித உடலுக்கு எத்தனை அவசியமானது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

இறைவன் மனிதனை சிறப்பாக வாழ அனைத்தையும் தந்திருக்கிறான், அவனுக்கு தெரியாதா எது மனிதனுக்கு தேவையற்றவை என்று.. புலால் உணவுகள் மனிதனுக்கு தேவையற்றவை என்றால் அதை அவன் விசமாக படைத்திருப்பான், அவ்வாறு படைத்தும் இருக்கிறான், அந்த விசத்திலும் மருந்துகளை மறைத்திருக்கிறான் அவன்..

இந்த இரகசியங்கள் ஆராய்ந்து சொன்ன சித்தர்கள் எங்கே அவர்கள் கூறிய விடயத்தை தனது சுயநலத்துக்காக மாற்றும் இந்த சாமியார்கள் எங்கே..

அதிலும் மேலாக இராமலிங்கம் எப்படி பட்டவர் என்பதை அவரே கூறுகிறார்.

“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே”

இராமலிங்கத்தார் யாரையும் தன்னைபின்பற்ற அழக்கவில்லை என்றால் இந்த பாடலின் அர்த்தம் என்னவோ..

தான் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இறைவனின் வார்த்தையாம்.. நம்புவபர்களை வரட்டுமாம் இதுவே நல்ல தருனமாம்.., அவருடன் சேர்ந்தால் சித்தி பெறலாம் என்றும்,, கூறும் இந்த பாடலின் உள் கருத்து என்னவோ..

இதைத் தான் இன்று அனைத்து சாமியார்களும் சொல்கிறார்கள் செய்கிறார்கள்..

சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் இறைவன் முன்னர் சொன்னது பொய் இவர்களிடம் இன்று சொல்லுவது மெய்.

அவர்களே தாங்கள் சொல்வது இறைவன் கற்பித்தகா கூறிவிட்டார்கள் முன்ன்ரே.. பிறகு என்ன சொன்ன விடயத்தை மாற்றி மாற்றி பேசுவது கடவுளின் விளையாட்டா என்ன.. !

சாத்திரங்களை சுட்டவனே சித்தன் என்றார்கள் காரணம், இப்படி இவர்கள் எழுதிய சாத்திரத்தின் மகிமை தெரிந்தே...

திருவாசகத்தை விட அருட்பாடல் இனிமையாகவும், இலகுவாகவும் இருக்கிறது என்றால் உங்கள் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது மக்காள்... திருவாசகத்தை எதனுடன் ஒப்பிடுவது என்று முறையில்லாமல் போய்விட்டது.

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

அறிவினால் பார்க்க வேண்டும். அதனால் தான் பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

கண்களை மூடிக் கொண்டு இறைவனை பார்ப்பதானால் கண்கள் இல்லாமல் அவன் நம்மை படைத்திருக்கலாம்.

நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையை பார்த்து அதில் இருக்கும் உண்மையை உணர முடியாத பகுக்க முடியாத நாமா.. கண்னை மூடி தியானதில் இறைவனை காண்பது..அப்படி தியானத்தைல் எவனுக்காவது அமைதி கிடைத்துவிட்டால் அதை விட்டு எழுந்திருப்பானா.!

அமைதி வேண்டி தியானத்தில் இருந்து அது கிடைத்தால் ஏன் எழுந்திருக்கிறீகள் வேறு என்ன வேண்டும்... ஆகவே நீங்கள் கேட்பது நிச்சயமாக அமைதியை அல்ல,..!

இராமகிருஸ்ணரின் எழுத்துக்களை நாம் எந்தளவு படித்திருக்கிறோம் என்று எம்மை தெரிந்தவர்களுக்கு நன்கே தெரியும்.. அவர் சிறு தெய்வ வழிபாட்டில் வெற்றி பெற்றவர்.. காளியை தரிசிப்பவர்,. ஆகவே அவரை எல்லாம் இங்கு இராமலிங்கத்தாருக்கு சாட்சிக்கு கூப்பிட்டு பலனில்லை.

ஆயிரம் வழிகள் இருக்கட்டும் இறைவனை அடைவதற்கு ஆனால் இராமலிங்கத்தாரின் வழியில் இறைவனை அல்ல அவனின் காலடியைக் கூட காணமுடியாது.

இராமலிங்கத்தாருக்கே அவருக்கு என்ன நடந்தது என தெரியாது, பிறகு மற்றவர்களின் நிலை,.. இறைவன் அவருடன் பேசியதாக கூறிய அவரை இறைவன் காக்க மறந்தது தான் வேடிக்கை..

”“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே”

கடவுள் என்ன விளையாட்டுப் பொருளா... நினைத்தபடி அவனை சொல்லுவதற்கு... முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள் என்றால் சரி.. அதை யாரும் தடுக்க முடியாது, அது தேவையும் அல்ல.. ஆனால் நாங்கள் செய்வது தான் சரி என்றால் தான் இங்கு பிரச்சினைகள்..

உண்மையை புரிந்தவர்கள் இன்னும் இங்கு உளாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்..

இதற்கு சாட்சி கூறுபவர்கள் உங்கள் முகனூலில் இது தொடர்பான கருத்துக்களை தாறாலமாக பதிவிடுங்கள்.. படிப்பவர்கள் ஆராயட்டும்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment