Saturday, September 6, 2014

தென்நாடுடைய சிவனே என்றால்

வணக்கம் தோழர்களே,

” கீழோர் மறப்பர், மேலோர் நினைப்பர்”

கீழோர் என்றால் கால்கள், மேலோர் என்றால் கண்கள்..

மனைவியை விட்டுப் பிரிந்து கனவன் வணிகத்துக்கு போகும் போது மனைவி பாடிய பாடல் இது... தான் தினமும் சேவை செய்த கால்கள் தன்னை மறந்து போவதையும், சேவைகள் எதுவும் செய்யப்படாத கண்கள் திரும்பிப் பார்த்து பார்த்து போகும் போது அதை என்னி பாடிய செய்யுள்...

இப்படி பலரும் இங்கு சமயம் என்ற பேரில் பேசுவது இதைத் தான்...

உண்மை எங்கோ இருக்கும் ஆனால் அதைவிடுத்து பொய்களை தேடும் உத்தமர்களுக்கு என்ன செய்வது..

காவியைக் கட்டி அல்லது பட்டுடுத்தி பார்ப்பதற்கு சற்று அழகாக தெரிந்தால் போதும் அவர் சொல்வதெல்லாம் தத்துவங்களும், அவர் காட்டுவதெல்லாம் கடவுளும் என்றாகிவிட்டது..

பரதேசி போல் இருந்தால் அவர் சித்தர் என்றாகிவிட்டது..

இரசவாதம் செய்த சித்தர்கள் பரதேசியாகவா இருந்திருப்பார்கள்.. இன்று மக்களை பேசி பேசி பணம் சம்பாதித்த சாமியார்களே ஆகா ஓகோ என்று வாழ்கிறார்கள்.. நேர்மையாக வாதம் செய்த சித்தர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..

தென்நாடுடைய சிவனே என்றால், .....

தமிழ் சங்கம் தந்தவர் அவர் அல்லவா... முதல் சங்கத்தின் தலைவர் என்பதாலும் அவரை பிரமொழிகளை விட தமிழே அதிகமாக பாடி இருப்பதாலும் அவர் வேற மொழிக்கு சங்கம் வைக்காததாளும் அவரை தென்நாட்டவர் என்றார்கள்.. ஆகவே அவரின் மொழி என்றால் அது தமிழாகவே இருக்கமுடியும்...

வேதங்கள் சமசுகிருதம் மெழியில் வந்திருந்தால் முதலில், ஏன் சமசுகிருத சங்கம் வரவில்லை அவர் அதை செய்த்தாகவும் தெரியவில்லை. சமசுகிருதம் தேவ மொழி என்று யாராவது இனி பேசினால் இதைக் கேளுங்கள்..

தமிழ் சங்கம் வளர்த்த சிவனாரா,, சமசுகிருதத்தில் வேதங்கள் செய்திருப்பார்.. !

வேதங்கள் தமிழில் தான் வந்தது அது பின்னர் சமசுகிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது... இங்கு வந்தவர்கள் சிவனின் பேர் ஆற்றலைக் கண்டு அவரை தமக்கும் கடவுளாக மாற்றிக் கொண்டனர்.. மதமாற்றம் ஏற்பட்டது இன்று இல்லை..

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்றால்...

தமிழ் எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய்மையானது என்றதால், தமிழை தந்த சிவனை (தமிழை) கூறினார்கள்..

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...

குமரன் என்றால் இளமை என்று அர்த்தம் குன்றில் (மலைகள்) அது சார்ந்த பகுதிகளில் தான் அதிகளவில் மூலிகைகள் வளர்ந்தது.. அவை மனிதரை இளமையாக அதாவது நோய் அற்று இருக்க உதவியதனால் அவர்கள் இளமையாக இருந்தர்கள் அப்படி இருந்தால் அந்நாடு சுருசுருப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் குன்றிருந்தால் குமரன் போல் இருக்கலாம் என்றதை குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதினர்.

அதனால் தான் குமரனை, முருகன் என்றார்கள்.... முருகு என்றால் அழகு, அழகு என்றால் கண்ணால் பார்த்து தெரியும் முக உடல் அழகு இல்லை.. தமிழை வளர்த்த சான்றோர் அழகு என்று புற அழகையா பேசி இருப்பார்கள்... அப்படி பேசினால் அகத்தை பார்கச் சொல்லியிருப்பார்களா.. ஆகவே முருகு என்பது அழகு ஆனால் அது புற அழகல்ல..., அக அழகு அதாவது நோயற்ற தேகமாக கருதுவர்..

தமிழை அக அழகு கொண்ட மொழி என்கிறது தொல்காப்பியம்.. ஆகவே அதை புற அழகு கொண்டு பார்க்க கூடாது..

இவை இலக்கிய விளக்கம்,... இது தாண்டி தத்துவ விளக்கமும் உண்டு...

அதை பின்னர் தேவை இருப்பின் பார்க்கலாம்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment