Friday, September 19, 2014

உங்கள் பங்களிப்பு எப்படி...

எமது குருகுல மற்றும் சித்தர்கள் மருத்துவ ஆய்வியல் செயற்திட்டம்.. ஓர் பார்வை..

இது முழுமையான ஓர் தமிழ் மற்றும் சித்தர்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் கற்கும், ஆய்வு செய்யும் ஓர் செயற் திட்டம்..
இங்கு ஆன்மீகம், மாந்திரீகம், மருத்துவம், இரசவாதம் என சித்தர்கள் மற்றும் தமிழ் சான்றோர்கள் கூறிய பல விடயங்கள் உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இது இருக்கும்..

இதில் பல குருமார்கள் பங்கெடுப்பதாக மாணவர்களை பயிற்றுவிக்க உதவுவதாக எமக்கு உறுதி கூறியிருக்கிறார்கள்.. அவர்கள் இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஞானிகள்..

எம்மிடம் இருக்கும் ஆய்வுகள் இவர்கள் எமக்கு தந்த அறிவின் வெளிப்பாடு என்றால்.. அவர்களை பற்றி அதிகம் பேசத்தேவையில்லை..

இவர்களுல் சிலர் எம்மை கற்பித்த குருமாரும் ஆகும்.. இவர்கள் மேடைபோட்டு பேசும் ஆசாமிகள் அல்ல, இலைமறை காயாக சமூகத்தில் இருக்கும் ஞானிகள்... சிலர் இரசவாதம் பற்றியும், சிலர் மாந்திரீகம் பற்றியும், சிலர் மருத்துவம் பற்றியும் சில தமிழ் பற்றியும் உங்களுக்கு கற்பிக்ககூடும்..

சித்தர்களை அவர்களின் குகையில் சென்று சந்திக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது என்று காலம் தீர்மானிக்கட்டும்..

இதில் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழையும் சித்தர்கள் விஞ்ஞானத்தையும் ஆய்வு செய்ய விரும்பும் அனைவரும் பங்கேட்கலாம்.. இது ஒரு தனி நபர் அமைப்பு இல்லாமல் முழுமையான மாணவர்கள் அமைப்பாக இருக்க வேண்டும் என்பது எமது அவா..

இதில் ஆண் பெண் என்ற வேற்றுமை கிடையாது,, வயது எல்லை உண்டு.. அதாவது உங்கள் வயது நீங்கள் சுயமாக முடிவெடுக்கும் காலத்தை கொண்டது..

எல்லாம் சரி எப்படி நாங்கள் இதை முழு நேரமாக கற்பது என்ற சிந்தனை வேண்டாம்.. விஞ்ஞானம் கற்ற போகிறோம் ஆகவே அதற்கு இணையம் துணையாக இருக்கும்..

பதிவு செய்யும் மாணவர்கள் இணையத்தின் வழி தனி அடையாளம் மற்றும் கடவுச் சொல் மூலம் எமது தனித்துவமான தளத்தில் சேர்ந்து வாதங்கள் பயிற்சிகள் என ஒளி ஒலி காட்சிகள் மற்றும் கட்டுரைகள், செயற்திட்டங்கள் என பலவற்றையும் பெறலாம்.

அதற்கு மேலாக எமது ஆய்வியல் மையத்தில் குறித்த காலத்துக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு பங்கெடுக்கும் வாய்ப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும்.. அதற்கு தேவையான வீசா மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்..

இது தவிர்த்து இந்தியா மலேசியா மற்றும் சில நாடுகளில் ஆய்வியல் மையத்தின் சிறு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்கள் தரப்படும்..

இதில் உங்களுக்கு என்ன பலன் என்று சிந்திக்கிறீர்களா..! அதாகப்பட்டது.. இதுவரை எமது பதிப்புக்கள் ஆய்வுகளை உற்று நோக்கியவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஓர் விடயம்,, காலம் காலமாக நாம் செய்துவரும் பல விடயங்கள் உண்மையானவை அல்ல என்றும், நமது தமிழ் சமூகம் எங்கு சென்றாலும் கொச்சைப்படுத்தப் பட்டு துணையின்ன்றி இருப்பதற்கு காரணமும் நமது மூட நம்பிக்கைகள் தான் என்றும்..

இந்த சமூக அமைப்பில் இருந்து எமது வளர்ந்து வரும் குழந்தைகளை காக்க வேண்டும், உலகுக்கு தமிழன் ஆதியானவன் என்பதை காட்டவேண்டும். அதற்கு தேவையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களை நாம் தயார் செய்ய வேண்டும்.

இப்படி பல காரணங்கள் இருக்கிறது அத்துடன் எமது வாழ்க்கை சிறப்பகவும் காலத்தை முடிந்தவரை கடந்தும் வாழ்ந்துகாட்ட வேண்டும்.. தமிழ்ன் தவிர எவனாலும் இது சாத்தியம் இல்லை என்ற விஞ்ஞானத்தை கொடுக்க வேண்டும்..

பிறந்தோம் திண்றோம், படுத்தோம், இறந்தோம் என இல்லாது சாதித்து காட்டினோம் என்ற பேரானந்ததுடன் கண் மூட வேண்டும்.. காலதால் அழியாது நிற்கும் தமிழ் எழுத்துக்கள் போல் எமது பெயர்கள் நிலைக்க வேண்டும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நிரூபிக்க வேண்டும்... பாடசாலைகளில் விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலில் நீங்களும் சேரவேண்டும்..

சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சாமியார்கள் எனும் ஆசாமிகளிடம் இருந்து மக்களையும் சமயத்தையும் காக்கவேண்டும்..

இங்கு அனைவரும் கடவுள் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

இன்று மதமாற்றம் செய்யும் துரோகிகளை அடையாளம் இல்லாமல் செய்யவேண்டும் வேண்டும்.

எஞ்சிக்கிடக்கும் தமிழையாவது காத்து புதுப்பிக்கவேண்டும்.

பணத்துக்காக ஓடும் மக்கள் கடவுளை பணம் அச்சடிக்கும் இயந்திரமாக கருதுவதை மாற்ற வேண்டும்..

அனைத்துக்கும் மேலாக கடவுள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்..

இப்படி பட்டியல் தொடர்கிறது..

இதை எல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டால்,,, இப்படி கேட்டதன் பலன் தான் தமிழ் வளர்த்த கடவுளர் வேறு மொழொயில் இன்று வணங்கப்படுவதும் அவருக்கு பலரும் முதலாளிகள் ஆனதும்.

இதே தவறை நாமும் செய்வதானால், அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

சிறப்பாக வாழ்ந்த தமிழன் இன்று சீரழிக்கப்படுவது எதனால்.. நமக்கென்ன என்ற சிந்தனையின் பலன் தான் இது..

பிறவியால் எவனும் சித்தனும் இல்லை ஞானியும் இல்லை.. முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..

எம்மால் (எங்களால்) இவை சாத்தியமா என்ற சிந்தனை வருகிறதா.. கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதில் ஐயமில்லை அதனால் தான் சாமியார்களிடம் அனேகமாக ஏமாற்றப்படுவது தமிழனாக இருக்கிறான்..

முயற்சியை நாம் தொடருவோம்.. பலனை கடவுள் என்ற சக்தி தீர்மானிக்கட்டும்..

” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்”

என்ற வாக்கின் படி முயற்சி செய்யலாம் அல்லவா..

இந்த செயற்திட்டத்துக்கு உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..

“ எறும்பூர கல்லும் தேயும்” நாம் எறும்புகளாக இருந்து பாறைகளை தேய்க்கலாம்..

” மெல்லமெல்ல பாயும் தண்ணீர் கல்லை உருக்கிப் பாயும்” என்றது போல் நாமும் முயற்சி செய்யலாம்..

இதுவரை எம்மிடம் இருந்த சேமிப்புக்களை வைத்து காணி நிலம் இதற்காக வாங்கி அதில் ஓர் சிறு கட்டிடம் ஏற்படுத்தி, நான்கில் இரண்டு பகுதிக்கு சிறு வேலி போட்டு அதைல் ஒரு பெரிய கிணற்றையும் கட்டியிருக்கிறோம்.. அதாவது 5 ஏக்கர் அளவு கொண்ட ஓர் காட்டு காணி..

ஆய்வு மையத்துக்கு ஏன் இத்தனை பொரிய இடம் என்ற கேள்வி வருகிறதா..

தொடங்குவதற்கு பணத்தை சேர்ப்பதே கடினமாக இருக்கும் நிலையின் ஆய்வுகள் சேவைகள் என எவ்வாறு முயற்சியை தொடருவது.. அத்துடன் இது ஓர் சித்தர் கலை பற்றிய ஆய்வியல் அல்லவா.. ஆகவே அவர்களின் அறிய வகை மூலிகைகள் மற்றும் எமது ஆய்வுக்கு தேவையான மூலிகை மற்றும் கட்டிட அமைப்பு என பல விடயங்கள் தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாடு..

இதுவரை சுமார் 2000க்கு மேற்பட்ட மூலிகைகளை கண்டிருக்கிறோம், அவற்றை முறையாக தோட்டமாக செய்த்து மக்களுக்கு காட்டவேண்டும் அல்லவா..

உதாரணமாக நத்தை சூரி வேரை காசு கொடுத்து வாங்கும் எத்தனை பேர் இது நத்தைச் சூரிதான் என ஆராய்ந்து வாங்குகிறார்கள்.. அத்துடன் நத்தை சூரி என்ற பேரில் இணையத்தில் இருக்கும் எதுவும் நத்தைச் சூரி இல்லை..

இப்படி பல மூலிகைகள்.. பல அற்புதங்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

அதில் தமிழ் தந்த சிவனின் சமாதி பதிணெண் சித்தர்கள் சமாதி என பல விடயங்கள் வர இருக்கிறது.. தழ்மி மொழியை தந்த சிவனை வடமொழொயில் வணங்குவது எவ்வளவு கொடுமையானதும் பாவமானதுமான விடயமாக அவர் கருதுவார்..

இப்படி பல செயற்பாடுகள் கொண்டதாக இந்த திட்டம் இருக்கும்..

இந்த செயட்திட்டத்தின் பிரதான ஆய்வியம் மையம் இலங்கையில் இருப்பதற்கும் காரணம் உண்டு.. அதாவது நாம் கூற முற்படுவதும், செய்ய முட்படுவதும் பல சாமியார்கள் மற்றும் சமயங்களை விற்கும் ஆசாமிகளுக்கும் பாரிய பிரச்சினையாக வரும்.. அதில் இந்தியா முதலிடம் வகிப்பதால் அவர்களின் பல தொல்லைகளும் எமக்கு ஏற்படும், அரசியல் நகர்வு மற்றும் பாதிப்புக்கள் என எமது செயற்திட்டத்தை தடுப்பதற்கு பலரும் முன்வருவார்கள்.. அதுவும் பண வசதி அவர்களிடம் தான் குவிந்து கிடப்பதால் அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்..

இங்கு எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இங்கு நாம் அரசாங்கத்துக்கு எந்த தொல்லையும் செய்யாத வரை எவரும் எம்மை தொல்லை கொடுக்கப்போவதில்லை.. அத்துடன் போலிச் சாமியார்கள் ஆசாமிகல் என பிரச்சாரங்கள் மிக குறைவான நாடும் இது.. மற்றும் தமிழர் இங்கு தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களின் ஆத்மாக்களும் இந்த தமிழ் தொண்டிற்கு உதவி செய்யட்டும்...

தமிழ் நாட்டுக்காக பாடுபடும் மக்கள் தமிழ் மொழிக்காகவும் பாடுபடுவது மிக அவசியம்.. தமிழர்களிடம் இத்தனை திறமைகள் இருப்பதை காட்டினால் தானே தமிழ் மீது மக்களுக்கும் பற்றுதல் அதிகமாகும்..

இதன் மீதமான விளக்கங்கள் அடுத்த பதிவாக வரும்,, அதற்கிடையில் உங்கள் கருத்துக்களையும் உங்கள் சிந்தனைகளையும் பகிருங்கள் பார்ப்போம்..

அளவு கடந்த பணம் வைத்திருக்கும் எந்த தமிழனும் இதை விரும்புவதாக தெரியவில்லை.. இருப்பினும் நாம் அதை தகர்த்து வெற்றியடையவேண்டும்..

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

சித்தர்களின் பாதம் வணங்கி உங்களிடம் இதை சமர்பிக்கிறேன்..

தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்து பதிவதாக இருந்தால் அதை மின்னஞ்சல் செய்யுங்கள்..

muthaly@gmail.com

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment