வணக்கம் தோழர்களே,
இதோ நீங்கள் எதிபார்க்கும் வயிரவனை முறையாக வழிபட....
ஆகாய வயிரவ தந்திர நூலில் இருந்து.. இது நாம் காசியில் இருந்த போது கால
வயிரவனை தரிசிக்க பயன்படுத்திய மந்திரங்களில் ஒன்று.. இது கிரந்த
அட்சரங்களில் எம்மிடம் கிடைத்தன அவற்றை உங்களுக்கு தமிழில்..
“ ஓம் நமோ பகவதே காலாய கோராய வஜ்ர தம்ஷ்ட்ராயா |
சத்ரு நாசாய ஸர்வ பூத தமநாய ஹூம் பட் ஸ்வாகா|| ”
இது இன்று பலருக்கு தெரியும் ஆனால் இதன் தன்மையை புரிவது எந்த அளவு இலகுவானது அல்ல என்பது அகோரிகள் கருத்து..
இதைப் போல் சித்தர்கள் வழியில்... நாம் உபாசனை செய்த மகா கால வயிரவன் மந்திரம்..
“ ஓம் அகார உகாரா உக்கிரப்பிரளைய காலதாண்டவராயா அகோர அட்ட லிங்க ஆதி
பரமேசுர புத்திரா கால
வயிரவா.....................................................................................
.....................................................................................................
உன் குரு ஆதி சிவன் ஆணை என் வாக்கில் .....................
ஓம் அ ... .... .... ... .... எனும் பஞ்சாட்சரத்தின் ... ...... வா வா சிவாகா”
இங்கு மந்திரத்தை முழுமையாக பதிவிடமுடியாமைக்கு வருந்துகிறேன்.. காரணம்
நமது பதிவுகள், அதில் இருக்கும் உண்மைகள் தேவைப்படுவதில்லை பலருக்கும்
ஆனால் மந்திரங்கள் மட்டும் தேவைப்படும், அது மட்டும் இல்லாமல் நாளை பலரது
இணையப்பக்கங்களில் அது அவர்களின் பாரம்பரிய முறையாக மாற்றப்பட்டிருக்கும்..
ஆகவே எமது மாணவர்களாக எமது குருகுல செயற்திட்டத்தில்
பங்கெடுக்கும் வாசகர்கள் மட்டும் இதைப் போல் பல உண்மையான மந்திரப்பதிவுகளை
பெருவார்கள்..
இந்த மந்திரத்தை முறையான இயந்திரம் இரும்புத்
தகட்டில் கீறி மண்டலம் ஒன்று தனியாக இருந்து பூசை செய்தால் கால வயிரவர்
யார் என்பதை அனைவரும் காணலாம்..
மந்திரங்களின் தன்மையும் மாணவர்களின் பக்குவ நிலையும் தெரிந்தே குரு மந்திரங்களை உபதேசிப்பர் என்பதை மனதில் வையுங்கள்..
வேத மந்திரங்கள் போல் சித்தர் மந்திரங்கள் விளையாட்டு அல்ல..சரியான
குருவும் சரியான வழிகாட்டலும் சரியான பற்றுதலும் இல்லாது போனால் வாழ்க்கை
மிக ஆபத்தாக மாறிவிடும்.
ஆகாய வயிரவ தந்திர நூலில் இருக்கும் மந்திரம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.. அது உங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment