Saturday, September 27, 2014

இடகலை, பிங்கலை, சுழினை

வணக்கம் மாணவர்களே... மணிகளே, சுடர்களே, எனதன்பின் முட்டாப்பசங்களே...

இதுவும் அது..அதுவும் இது...

“ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று
இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர்
இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால்
இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும்
இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன்
இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும்
இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி
இக்கலையை யறிந்துணர்ந்தவ் விடத்தில்நில்லே..””

“ நில்லென்று சொன்னதொரு ஆசான்வாக்கை
நிலைதவற விட்டாலே பலிதமாகா
அல்லவிதன் விபரமதை தெரியக்கேளு
அண்ணாக்கை யுண்ணாக்கி லயிக்கம்பண்ணி
நல்லாய ரவிமதிபூ ரணங்கண்மூக்கு
நானிலத்தில் வாய்செவியும் பரிசம்மெட்டும்
சொல்லாதே நடுவணையென் றிதற்குநாமஞ்
சொல்லிடுவார் கயிலாசஞ் சொர்க்கமென்றே..”

இதைவிடவும் ஓர் இலகுவான விளக்கம் உங்களுக்கு வாசி பற்றி பிராணாயாமம் பற்றி மூச்சுப் பயிற்சி பற்றி கூறமுடியாது..
பாடல் விளக்கம் குறிப்பாக..

இடகலை பிங்கலை சுழிமுனை என்ற மூன்றும் ஒன்று இது இன்பத்துடன் இருப்பதற்குறிய பொருள்.. இதுவே ஈசனாகவும் இருக்கிறது.. இது தெரியாமல் முட்டாள் பயலுகள் திரிறாங்கலாம்..இடது வலது நடு என்பது உச்சி நடு அடி என இருக்கிறது... இதை உணர்ந்து நில்..
இப்படி உண்மைய ஆராய சொன்ன குருவின் சொல்லை மதியாமல் திரிபனுக்கு இது பலியாது,,.. இதன் விபரம் என்னவென்றால் உள்ளிருப்பதையும் வெளியிருப்பதையும் ஒன்றாக கூட்டி உடலின் பரிசங்கள் எட்டுக்கும் இது தான் நடுவாகும்.. இதைத் தான் கயிலாயம் என்றும் சொர்க்அமென்றும் சான்றோர் கூறுவர்..
இப்படி கூறும் சித்தர்கள் எப்படி உங்களை மூக்கை பொத்திக் கொண்டு காற்றை இழுக்கவும் விடவும் சொல்லியிருப்பார்கள்.. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அதில் எத்தனை வீதம் பரிபாசை கலந்திருக்கும்..

“ என்றேபற் பலவாக யியம்புவார்கள்
இந்திரபுரி வைகுண்ட கயிலாசந்தான்
நன்றேகன் யாகுமரி காசிசேது
நலமான மேகமொடு நாதமென்றும்
வல்லதொரு காற்றுடனே சூட்சமென்றும்
மன்றாகு மவுனமுடன் ஆதியென்றும்
குன்றான ஆதிநடு முடிவீதென்றும்
குணமுடைய வஸ்துபதி யிதுயென்பாரே..”

இந்திர லோகம், வைகுண்டம், கயிலாசம், கன்யாகுமரி, காசி, சேது, மேகம், நாதம், காற்றின் சூட்சம், மவுனம், ஆதி, குன்று இப்படி எல்லாப் பெயராலும் அழைக்கப்பட்டது ஒன்றே...

ஏகாதசியில் செத்தவன் வைகுண்டம் போவான் என்று சொன்ன பழந்தமிழனின் வாக்கு இன்று பஞ்சாங்கத்தில் முடங்கிப் போனது..
கயிலாசத்துக்கு (இமயத்துக்கு) போனால் இன்று நமது மக்கள் மட்டும் ரிசிகளாகவும், சித்த்ர்களாகவும், யோகியாகவும், சாமியாராகவும் மாறுகிறார்கள்.. ஆனால் சுற்றுலாக்கு வரும் எந்த வெள்ளையனின் கண்ணுக்கும் தெரியாத காட்சி நமது மக்களுக்கு மட்டும் தெரிகிறது.. கேட்டால் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் காட்சி தரமாட்டார் என்பது...! ஏண்டாப்பா.. நம்பிக்கை இல்லாதனை நம்பவைப்பது தானே இறைவனின் ஆற்றலாக இருக்க வேண்டும்... கேட்டால் நம்பினார் கெடுவதில்லை என்பார்கள்... நாங்கு மறை தீர்ப்பு என்பார்கள்...நம்பாதவர்கள் யாரும் இங்கு வாழ்வதில்லையா.. உங்கள் பரமனை நம்பாத நாடுகள் உங்கள் நாட்டைவிட சிறந்த நாடுகளாகவும் செழிப்பாகவும் இருக்கிறதே.. இப்படிக் கேட்டால் விதண்டாவாதம் என்பார்கள்.. எதற்கும் அடியும் முடியும் தெரியாதவர்கள் கூறும் நொண்டிச் சாட்டுக்கு விதண்டாவாதம் என்று பெயர்..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.. இன்று குமரன் என்ற பெயரில் கோவில்கள் மட்டும் இருக்கிறது,.. குமரன் எவனையும் கானவில்லை..

இப்படி பல பல இரகசியங்கள் புதைந்த தமிழை பணத்துக்காக அடகு வைக்கும் ஆசாமிகளை என்ன சொல்வது..
கடவுள் என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு.. இதை சரியாக புரிந்தால் நீங்கள் யாரும் சாமியார்களிடம் போகப்போவதில்லை.. மந்திரவாதிகளை தேடப்போவதில்லை..

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால்.. நீ விரும்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி... அவரின் அன்பு எப்போதும் இருக்கும்.. அதை பணத்தை கொடுத்து வாங்க நினைப்பது அவரை நீ உதாசினம் செய்ய முடிவாகியது என்று அர்த்தம்..
அருச்சணை போட்டால் கஷ்டம் தீரும் என்றால்.. அருச்சனை போடாதவன் கஷ்டத்தை அவர் தீர்க்கமாட்டாரா... அப்படியானால் அவரை தாயுமானவர் என்றும், அன்பின் சொரூபம் என்றும், அன்பே சிவன் என்றும் ஏன் கூறுகிறீர்கள்..

அவருக்கு நீங்கள் அன்பு செலுத்த விரும்பினால் அதை நீங்கள் உங்கள்

கடமைகள் மூலம் சரியாக செய்யுங்கள்..
“ வையப்பா உபதேசம் யாராருக்கென்றால்
மைந்தனே யெச்சாதி யானாலென்ன
மெய்யப்பா தவறாத சீடன்வேனும்
மேன்மையுள்ள புத்தியதா யிருக்கவேணும்””

எமக்கு குரு வம்சத்தின் மூலம் கிடைத்த உண்மைகளை எமக்கு பின்னர் யார் எடுத்துச் செல்வார்கள் என்று தேடுகிறோம்... இதுவரை எவரையும் சந்திக்கவில்லை..

ஒன்று மந்திரம் கற்க வருகிறார்கள்.. கேட்டால் சமூக சேவை செய்ய என்பார்கள், அல்லது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க மந்திரம் தாருங்கள் என்பார்கள்... இப்படியே செல்கிறது பயனம்...

இன்றைய காலகட்டத்தில் அதை தவறாகவும் கூற இயலாது.. சிந்தனைகள் கடமைகள் என அளவு கடந்து தேவைகளை ஏற்படுத்திய சமூகத்தில் தேவைகள் அற்று உண்மையை தேட எத்தனை போர் வரப்போகிறார்கள்..

அனைத்தையும் தாண்டிய அம்சம் ஒன்று உண்டு என்பது பழந்தமிழன் வாக்கு.. அதற்கமைய காலத்தின் கட்டளையை காத்து எமது பயனம் தொடரும்..

இங்கு நீங்கள் யாரும் நல்ல மாணவர்கள் அல்ல என்ற அர்த்தம் அல்ல.. உங்கள் நிலை உண்மையை கற்பதை விட வாழ்க்கையை வெற்றியடையச் செய்வது என்ற பயனத்தில் இருப்பதால்... அந்த மாயையில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் எடுக்கும்...

வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, September 24, 2014

ஊரை ஏமாற்றும் புதிய கூட்டம்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே..

காலையில் ஓர் மின்னஞ்சல் நம்மை வயிறு குழுங்க சிரிக்க வைத்தது... கடிதத்தில் குறித்த ஒரு நபரைப்பற்றி கேட்டிருந்தார் ஒருவர்..

அதாவது குறித்த ஆசாமி நண்பர் வாசியோகப்பயிற்சி கற்பிக்கும் ஒரு சித்தராம்.. அவரின் ஆற்றல் பற்றியும் வாசி பற்றியும் எம்மிடம் கேட்டார் மின்னஞ்சல் மூலமாக ஒரு நபர்..

அதன் பின் நாம் குறித்த சித்தரின் முகநூலை அலசினோம்.. சிறிப்பு தாங்க முடியல.... அவர்களின் தளத்தில் இருக்கும் சில கட்டளைகள்.. இது குறித்த சித்தர் கூறுவதாம்...

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள் அனைவரும் வெளியிடங்களில் சாப்பிடநேர்ந்தால் மிதமான உணவு தயிர்சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மீறினால் உடல் உபாதைகள் ஏற்படும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள், அனைவரும் மருந்து சாப்பிட கூடாது, வலிநிவாரணி உபயோகிக்க கூடாது
கை வைத்தியம் கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.”

“ வாசியோகப் பயிற்சியாளர்கள்,
பக்தர்கள் அனைவரும்
இரத்ததானம், உடல் உறுப்பும் தானம்,
செய்ய கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். ”

“ வாசியோக பயிற்சியில் புதிதாக சேரும் பயிற்சியாளர்கள் உடல் எடை கூடி வயிறு பெருத்து காண்பார்கள் இதற்கு காரணம் உடலில் உள்ள மலம்தான் .
உடலில் வயிறு பெருத்து இருப்பதற்கு காரணம் (கழிவு)மலம்தான் கழிவுகள் சேர்ந்து வயிறு பெருக்கிறது, பயிற்சி செய்ய செய்ய கழிவுகள் வெளியேறும் உடம்பில் எலும்போடு ஒட்டியதோல் போல் இருக்கும் .
இதில் தவறும் போது உன் எண்ணப்படி குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். “

“ வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் டீ சாப்பிட வேண்டும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் சரியாக 11 மணி , 11.30 மணிக்குள் தினமும் கொய்யாப் பழம் அல்லது நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.
கொய்யா பழம் (சிறிது என்றால் 2(இரண்டு) பெரியது என்றால் 1(ஒன்று) மட்டும்) சாப்பிட வேண்டும்.
1: ஒரு நாள் கொய்யா பழம் மறுநாள் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்
2:கொய்யா, நெல்லிக்காய் சாப்பிடும் போது டீ சாப்பிடக் கூடாது
அனைத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும், குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.“

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், பக்தர்கள், அனைவரும் அதிகாலை புதினா, மல்லி, சாப்பிடவுடன் 15 நிமிடம் கழித்து பால் அல்லது டீ சாப்பிட வேண்டும், காப்பி வாழ்நாள் முழுவதும் சாப்பிட கூடாது.“

” குருகுலத்தில் பயிற்சிக்கு வரும் பயிற்சியாளர்கள், சேவையாளர்கள், பக்தர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட கூடாது
1: இடுப்பு வலிக்கு பெல்ட் போட கூடாது
2:கழுத்து வலிக்கு பெல்ட் போட கூடாது
3:சக்கரை நோய்க்கு ஊசி போட கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்..“

****** எனக்கு மிக பிடித்த வியாபார உத்தி..****

“ வாசியோகப் பயிற்சிக்கு வருவோர் கணவன் மனைவியாக (குடும்ப சகிதமாக) வரவேண்டும்.

வாசியோகம் என்பது இல்லறத்தை நல்லறமாக்குவது ஆகும்

இதில் ஒருவர் மட்டும் பயிற்சி செய்தால் பலன்கள் காலதாமதமாகும்.”

” அதிகாலை எழுந்தவுடன் கால்களை மடக்கி அமர்ந்து குறித்த சித்தரின் (ஆசாமி) மந்திரத்தை (உதடு அசையாமல் முப்பது முறை) உச்சரிக்க வேண்டும்”
------------------------------------------------------------------

ஊரை ஏமாற்ற புதிய கூட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..

இந்த ஆசாமியை ஆரம்பத்திலேயா நிறுத்தவில்லை என்றால் உங்கள் சமூகம் மீண்டும் ஒரு புதிய சமயத்தை ஏற்க வேண்டி இருக்கும்..

வாசி என்றால் மூக்கால் காத்தை இழுக்கும் மடப்பயளுக்கு.. உடலில் ஒன்பது ஓட்டைகள் இருப்பது தெரியாது..

மூக்கையும் வாயையும் அடைக்கும் முட்டாள் மூலத்தையும் யோனியையும் எதனால் அடைப்பானோ... ஒரு வேலை தும்பு கொடுப்பார்களாக்கும் குரு குலத்தில்.. முட்டாப் பசங்க.. 

எப்படா திருந்துவீங்க..

எது நவராத்திரி

வணக்கம் மாணவர்களே/தோழர்களே,

நவராத்திரி பற்றி பலர் எம்மிடம் தொடர்சியாக கேட்டிருக்கிறீர்கள், அதன் வெளிப்பாடாக இந்த பதிவு..

நவம் என்றால் ஒன்பது, இராத்திரி என்றால் சூரியன் ஒதுங்கிய பொழுது என்றும் கருத்தாக இருக்கிறது....

எமது ஆய்வுகள் எப்போதும் உங்களுக்கு மகிழ்சியான கதைகளை கூறுவதில்லை என்பதால் இதையும் சற்று ஆச்சரியத்துடன் தான் பார்க்க வேண்டி இருக்கும்…

நவராத்திரி பற்றி சமயம் கூறுவது..

“மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் இவை இரண்டையும் சேர்த்த கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான். இதுவே இந்த படைப்பிற்கு அவன் எடுத்த கால அளவு ஒன்பதாக கூறப்படுகிறது.
இச்சை = விருப்பம் அல்லது ஆசை,
ஞானம் =அறிவு அல்லது தெளிவு,
கிரியா = செய்தல் அல்லது ஆக்கல் என பிரிக்கப்படுகிறது..

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் காலம்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.

இப்படி சிவ ஆகமங்கள் கூறுகின்றன்… இது பலருக்கும் தெரிந்த விடயமாக இருக்கும் என நினைக்கிறேன்..

இதன் பின்னர்.. விஜயதசமி..

” நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.”
இந்த இட்த்தில் தான் எமது ஆய்வுகள் ஆரம்பித்தன..
இறைவன் படைத்தலை விரும்பியதன் காரணமாக ஏற்பட்ட சக்திகள் என்று கூறும் ஆகமங்கள் ஒருபுரம், மகிடனை அழித்து ஆயுதங்களை பூசித்த நாள் என மறுபுரம்…,
இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்கள்,, ஒன்றாக எப்படி சேர்க்கப்படும்..

***இதை நாம் ஆராய தொடங்கினோம்,,, சுமார் 15 வருடங்கள் முன்னர் செய்த ஆய்வு என்பதால் சில குறிப்புக்கள் எமக்கும் மறந்து போயின.. இருப்பினும் இயன்றவரை ஞாபகப்படுத்தி பார்கிறேன்..***

இந்த குழப்பங்களை நமது சித்தர்களிடம் ஆராய முயன்றேன்.. பல ஆச்சரியங்கள் திடுக்கிடும் உண்மைகள் தெளிவாகின.. அன்றில் இருந்து நவராத்திரி என்ற ஒன்றை நாம் செய்வதே இல்லை..
ஆனால் நீங்கள் செய்ய வேண்டும்,, அல்லாது போனால் உணமை புரியாது..

சித்தர்கள் இதை நவகும்ப பூசை என்பார்கள். இது சக்திகளாக பிரிந்த சிவத்தை குறித்து செய்யும் பூசை முறை, ஆனால் இன்று இது சக்திக்குறியதாக மாறிவிட்டது..

இங்கு சக்திகளாக பிரிந்த ஒன்பது விடயங்கள் இங்கு பலவாக இரகசியமாக காட்டப்பட்டிருக்கிறது.. அதாவது நீங்கள் நவக்கிரகமாக வணங்குவதும் இந்த சக்திகளைத் தான்.. நவ துவாரங்களாக உடலில் இருப்பதும் இவைதான்.. நவபாசாணமாக இங்கு பிரிந்து கிடப்பதும் இந்த சக்திகள் தான்..

என்ன செய்வது இங்கு ஆன்மீக ஆராய்சியாலர்கள் மந்திரங்களை உருவாக்க தெரிந்தளவுக்கு உண்மையை தெளியும் அறிவில்லாமல் போய்விட்டார்கள்..

இறைவன் பஞ்சபூத சக்தி என்பதை பல முறை இங்கு கூறியிருக்கிறேன் அல்லவா.. அந்த பஞ்சபூத சக்திகள் பிரிந்தும் ஒடுங்கியும் இருக்கும் நிலைதான் இந்த நவசக்திகள்..
இலகுவாக உங்களுக்கு புரியவேண்டுமானால்.. மூன்று சக்திகள் கொண்ட பூசைக்கு எதற்கு ஒன்பது நாட்கள்.. அல்லது ஒரு நாள் பூசையில் குறித்த சக்தியை வழிபடமுடியாதா.. எதற்கு ஒவ்வொன்றுக்கும் மூன்று நாள் என்ற சிறு சிந்தனை இருந்தால் போதும். உங்களுக்கு தெளிவு கிடைக்கும்..

ஆகவே இங்கு மூன்று சக்திகள் என்ற பெயரில் மறைவாக இருப்பது ஒன்பது சக்திகள்.. இவை ஒன்பதும் குறித்த ஒன்றில் இருந்து பிரிந்த சக்தி அந்த ஒன்றை ஆதியானது என்பார்கள் சித்தர்கள்.. இதனால் தான் சக்தியாகிய பெண்ணை நவக்கிரக நாயகி என்று மறைப்பாக கூறினார்கள்..

ஆக மொத்தமாக பத்து சக்திகள் இதை பிரித்து ஒன்றாகவும் பலவாகவும் மறைத்தார்கள் சான்றோர்கள்..

இதை தமிழில் சிவயநம என பஞ்சாட்சரம் ஆக மறைத்தார்கள்.. அதில் உயிரும் மெய்யும் சேந்து பத்து சக்திகளை வைத்தார்கள்.. அதிலும் ஒன்று மூலமான சக்தி என்பதை காட்டுவதற்கு இகாரத்தை பதித்தனர்..

இ + ச் = சி
அ + வ் = வ
அ + ய் = ய
அ + ந் = ந
அ + ம் = ம

தமிழில் உயிர் எழுத்துக்கள் அகரம் எனவும், மெய் எழுத்துக்கள் உகரம் எனவும், உயிர்மெய் எழுத்துக்கள் இகரம் எனவும் அமைத்தனர்..

அதனால் சிவயநம என்பதில் பதினைந்து அட்சரங்கள் இருக்கும், அதில் ஐந்து வெளிப்படையாகவும் பத்து மறைப்பாகவும் இருக்கும், அதிலும் ஒன்று மட்டும் இகார வரிசையை மறைப்பாக காட்டி முன் நிற்க மற்ற அனைத்தும் அகரவரிசையில் காட்டியிருப்பர் சான்றோர்கள்..

இதனால் தான் பஞ்சாட்சரம் பல வடிவுகளில் எழுதப்பட்டு பல இயந்திரங்கள் அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் மட்டும் மாறுவதில்லை.. அதனால் தான் பஞ்சாட்சரத்தை அல்லது சிவன் ஐந்தெழுத்தை தமிழை தவிற வேறு எந்த மொழியிலும் எழுதவும் முடியாது..

ஆகவே படைப்பின் காரணமாகவும், படைப்புக்கு காரணமகவும் தோன்றிய சக்திகள் ஒன்பதாக பிரிக்கப்பட்டு அவை கடவுளின் அந்தரங்கமாக நவகிரகமாகவும், நவதுவாரமாகவும், நவசக்தியாகவும் தோன்றின..

ஆனால் இங்கு இன்று சான்றோரின் ஆற்றல்கள் மறைக்கப்பட்டு தமிழ் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுவிட்டது..
சமயத்தை ஆய்வு செய்ய வந்தவர்கள் சாமியாராகவும், சில இடங்களில் கடவுளாகவும் மாறி விட்டார்கள்.. சாமி யாரு என்று தேடி அவன் சாமியாகிவிட்டான்..

இதனால் தான்

”ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க”

“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐபுலக் கதவை அடைப்பதுவும் காட்டி”

”மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை”

இதனால் தான் சான்றோர்கள் தமிழ் இலக்கங்களில் இகாரத்தை சேர்க்கவில்லை.. ஏன் எனில் இகாரத்தை அளவிட முடியாது என்பது அவர்களின் தெளிவாக இருந்தது,..
அப்படியே சித்தர்களும் அகார, உகார, மகார, சிகார, வகார தீட்சைகள் சொன்னார்கள் ஆனால் இகார தீட்சை பற்றியோ அல்லது இகார மருந்துகளோ சொல்ல வில்லை..

எட்டும் இரண்டும் என்று பேசிய சித்தர்கள் அகரத்தை சிவம் எனவும் உகரத்தை சக்தி எனவும் கூறுவர் மகரத்தை சிவசக்தி என்பர் ஆனால் இகரம் பற்றி பேசவில்லை..

அளவிட முடியாத ஒன்றை எப்படி பேசுவது என்ற தெளிவு ஞானம் அவர்களுக்கு இருந்தது.

சித்தர்கள் தங்களை சிவம் என்பர், சதாசிவன் என்பர், சிவசக்தி சொரூபம் என்பர், முறையாக கற்பங்கள் உண்டால் அவனே சிவன் போல் சதாகோடி காலம் இருப்பன் என்பர்.. ஆனால் அவனும் இறப்பன் என்பர்.. அதிலும் இகாரத்தை வைத்தனர்.

சரி.. இதுவரை பேசியது நவராத்திரி என்பது மூன்று சக்திகளின் செயற்பாடுகள் இல்லை என்பதை காட்டவும், விசய தசமி என்பது ஆயுதம் தொடர்பான ஒன்றும் அல்ல. என்பதை காட்டவும்…

இங்கு இதற்கு சான்றாக ஓர் உதாரணமும் காட்டமுடியும்.. விசய தசமி போரின் வெற்றியை கொண்டாடுவதானால் ஏன், குழந்தைகளுக்கு கற்றலை, எழுதுதலை ஆரம்பிக்கும் நாளாக நமது சான்றோர்கள் அமைத்திருந்தனர்.. !

அதாவது ஓர் ஆரம்பம் இது என்பதை காட்டுவதற்கு மறைப்பாக வைத்தார்கள்..இறைவன் எழுத ஆரம்பித்த நாள் இது அதனால் இதில் குழந்தையும் எழுத ஆரம்பித்தால் அதுவும் சிறப்பாக எழுதும் என்ற அறிவின் நிமித்தம். ஆனால் இது இன்று சம்பிரதாயமாக மாறிவிட்டது…

ஆகவே நவராத்திரி என்றால் ஒளி அற்ற ஒன்பது என்று அர்த்தம்..
ஒளியை படைத்தால் அனைத்தும் தானாகவே படைக்கப்படும் (உற்பத்தியாகும்) என்பது தெளிவு..

அதுபோல் மகா சங்காரம் அல்லது மகா பிரளையம் என்றால் அது இருட்டு என்று அர்த்தம், இந்த இருட்டின் பின் அதற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனுக்கு ஒளி கொடுக்கப்படும், அவன் மூலம் இங்கு உயிர்ப்பு ஆரம்பமாகும்..

இதைத்தான் இன்று விஞ்ஞானம் “ பிக்பாங்” எனற முறையில் உறுதிசெய்கிறது..

நீங்கள் மிக தெளிவாக சிந்திக்க வேண்டும்.. பிரளையம், யுக முடிவு என்றால் இந்த பூலோகத்தை அழிப்பது என்று அர்த்தம் கிடையாது, அது கடவுளுக்கு தேவையானதும் இல்லை, சூரியனை ஒளி இல்லாமல் செய்தால் போதும்.. இங்கு நாம் இருக்கும் பிரபஞ்சம் இருண்டுவிடும், அதை விடுத்து இந்த சுனாமியும் தேவையில்லை, பூகம்பமும் தேவையில்லை, தீவிரவாதமும் தேவையில்லை..

தச அவதாரம் என்ற போரில் பூமியை வைத்து விளையாட்டுக் காட்டும் கதைகள் கடவுளுக்கு தேவையல்ல..

அத்துடன் அவர் இங்கு வந்து தான் அதை சாதிக்க வேண்டும் என்றால் அவர் கடவுளும் இல்லை..

சரி விடயத்துக்கு வருவோம்.. ஆகவே நவராத்திரி என்பது துற்கை இலக்குமி சரஸ்வதி என்ற மூன்று சக்திகளாக பிரிக்கப்பட்ட அம்சங்களுக்கு உரிய நிகழ்வு இல்லை.

வீட்டில் பொம்மைகளை வாங்கி அடுக்க அர்பர்கள் ஏற்பாடு செய்த ஓர் பண்டிகையகிட்டு..

நவராத்திரி என்பது இந்த படைப்பை ஏற்படுத்திய அதாவது இருளில் இருந்து வெளிவர ஒளியை தந்த சக்திக்கும் அவை ஒன்பதாக விரிந்து குவியும் நவசக்திகளுக்கும் நன்றி சொல்லும் ஓர் நிகழ்வாக இருக்க இதை ஆரம்பித்தனர் சான்றோர்கள்.. அப்படியே இந்த ஒன்பது சக்திகளும் பிரிந்த அந்த சக்தியை வெளிச்சத்தின் முன் வணங்கிய நாள் பத்தாவது நாளாக அமைக்கப்பட்டு. பத்து சக்திகளுக்கும் பத்து நாள் என பிரித்தார்கள்..

இதன் அடிப்படையில் நவசக்திகளையும் கொண்டு இங்கு உற்பத்தியான முதல் தாவர வகைகளாவன நவதானியங்கள் என பெயரிட்டு அவற்றை மீண்டும் இங்கு உற்பத்தி செய்யும் நாளாகவும் அமைத்தனர்.

இப்படி பல விடயங்கள் அடுக்கிக் கொண்டு போகக்கூடியதாக தமிழில் சான்றோர்கள் செய்தனர்..

அப்படியே உயிர்ப்புக்கு இறைவன் கையாண்ட மூலக்கூறுகளை நவபாசாணங்கள் என்று வகைப்படுத்தினர். அப்படியே அவன் எழுதிய எழுத்தை அல்லது சட்டங்களை நவக்கிரகமாக பிரித்தனர், அப்படியே அவன் மனிதனில் சுவாசமாக (சீவனாக) அடங்கும் விரியும் இடங்களை நவதுவாரங்கள் என்றார்கள்..

இதனடிப்படையில் தான் சில சித்தர்கள் நவபாசாணங்களில் சிலைகளை செய்து அவைக்கு உயிர் கொடுக்க முற்பட்டனர்..

ஆனால் அது பரமனின் இரகசியம்.. அது சித்தனுக்கும் இயலாது சித்தன் அப்பனுக்கும் இயலாது என்பதை புரிந்தபின்னரே அவர்கள் கிடைத்த இந்த உயிரையாவது நீண்ட நாள் நோயற்று இருக்க மருந்துகள், ஔட்தங்கள் என தேட ஆரம்பித்து காயகற்பங்களை கண்டறிந்தனர்..

இந்த காயகற்பங்கள் இயற்கையில் இருப்பதனால் தான் இயற்கை காலத்தை கடந்து இருப்பதும் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.. அதனால் தான் அவர்கள் சிவத்தை அடைவது என்பது காயகற்பம் சாப்பிட்டு யுகங்களை கடந்து இருந்து பிரளையங்களை பார்க்கவும், படைப்பின் இரகசியத்தை அறியவும் முட்பட்டார்கள்..

சித்தர்களை பற்றி முதலில் ஆராய வேண்டும் இந்த சித்தர்களை பற்றி மேடைப்போட்டு புகழ்பாடும் ஆசாமிகள்.. பெயருக்கு முன்னால் சித்தரையும், பின்னால் சுவாமியையும் சேர்ப்பது பெரிதல்ல.. அதற்கு உணக்கு அணுவளவு ஏனும் தகுதி உண்டா என பார்க்க வேண்டும்..

இப்போது உண்மையாக ஓர் தமிழனாக எப்படி நவராத்திரியாகிய, அந்த சக்திகளை வணங்கி நன்றி செய்யலாம் என பார்க்களாம்,..
உங்கள் வீட்டில் பூசை அறையில் வென்மையான துணிவிரித்து அதில் நவதானியங்களை சமமாக சேர்த்து பரப்பி அதன் மேல் ஒன்பது பூரணகும்பம் வைக்க வேண்டும்..

அதாவது மண்ணால் ஆன கலசங்கள் ஒறே அளவானவைகளாக எடுத்து அதற்கு நூல் சுற்றி, அதனுல் நீர் ஊற்றி, அதில் மாவிலைகள் வைத்து, மாவிலைகள் நடுவில் முடியுடன் கூடிய தேங்காய் வைத்து அதற்கு பொட்டு பூ வைத்து.. சலசத்துக்கு வெள்ளை பட்டு சுற்றி.. அதை நடுவில் ஒன்றும் மீதம் சுற்றியும் வைத்து இவை ஒன்பதையும் சுற்றி மீண்டும் வெள்ளை பட்டால் சுற்றி வழிபட வேண்டும்..

இதற்கிடையில் ஓர் மண் பாத்திரத்தில் ஈரமான மண்ணுடன் நவதானியங்களைப் போட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.. இந்த நவதானியம் வளர்க்கும் சட்டிக்கும் நூல் சுற்றி பட்டு சுற்றி பொட்டு பூ வைத்து வெள்ளை சீலையின் மேல், முன்னர் வைத்த ஒன்பது கும்பங்களும் பார்க்குபடி வைக்க வேண்டும்..
இங்கு நூல் சுற்றுவது, நீர் ஊற்றுவது, இலைவைப்பது தேங்காய் வைப்பது ஏன் என்று தெரியாவிடில்.. இதை செய்யாமல் இருப்பது சிறந்தது..

நவதானியங்கள் வளர்க்க நீங்கள் எடுத்த பாத்திரம் தான் பத்தாவது சக்தி.. அதாவது உற்பத்திக்கு காரணமாகிய அந்த சக்தி.. இகாரம் என நாம் கருதுவது..

இப்போது இந்த வழிபாட்டில் நீங்கள் தினமும் சூரிய ஒளி உங்கள் ஊரில் இருக்கும் காலத்தில் மட்டும், இந்த வெளிச்சத்தை தந்த அந்த சக்திக்கு நன்றி செலுத்துவது நவராத்திரி..

இரவில் வழிபட முடியாது, காரணம் நாம் நன்றி சொல்லப் போவது வெளிச்சத்துக்கு.. அதனால் தான் எந்த ஓர் விடயமாக இருந்தாலும் எந்த சமயமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் இங்கு விளக்கு அல்லது ஒளியை முதலில் வைத்தபின்னர் வணக்கம் தொடங்கபடுகிறது..

அந்த ஒளிக்கு காரணமான சக்தியை வணங்குவது தான் நவராத்திரி..

இதற்கு காலம் என்ற ஒன்று தேவையல்ல, எப்போது உங்களுக்கு நன்றி செலுத்தும் வசதி இருக்கிறதோ.. அப்போது செய்யலாம், அதனால் தான் இங்கு சூரிய ஒளி இல்லாத காலமும் தரப்பட்டிருக்கு..

அது போலவே நமது கலாச்சாரத்தில் இறந்தவர் தலையருகில் விளக்கு வைக்கிறோம்.. அதாவது இறப்பு என்பது இருட்டு என்றும் பிறப்பு என்பது வெளிச்சம் என்பதும் இங்கு காட்டப்படுகிறது.. இறந்தவன் வெளிச்சத்தை நோக்கிய முக்தியை அடையட்டும் என்ற அடிப்படையில் சான்றோர்கள் செய்தார்கள்.. அதனால் தான் விதகள் முதல் கருவரை முதல் பிறப்புக்கு முன்னர் இருள் சூழ்ந்திருப்பது சாட்சியாக இருக்கிறது..

எப்படி வணங்குவது என்று கேட்கிறீர்களா..

உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்கள் நன்றியை மட்டும் சொல்லுங்கள் அதற்கு எந்த மந்திரமும் தேவையில்லை இயந்திரமும் தேவையில்லை, தந்திரமும் இல்லை, அப்படியே நன்றி சொல்ல உங்களுக்கு பிடித்த உணவுகளை தினமும் அவர்களுக்கு அர்பனித்து அதை உங்களைச் சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவாக கொடுங்கள்..

பத்தாவது நாள் உங்களிடம் நன்கு வளர்ந்த தாவரங்கள் பல இருக்கும் அதில் சிலவற்றை தனியாக பிரித்து உங்கள் வசதிக்கேற்ப நடுங்கள்,, அவற்றை பாதுகாத்து அதில் இருந்து ஒரு முறையாவது தானியம் சிலவற்றை பெற்று அதில் உணவு சமைத்து சாப்பிடுங்கள்.. இதுவே கடவுளின் தொழில் எப்படியானது என்பதை உங்களுக்கு உணர்த்தும், அத்துடன் படைப்பின் உண்மையை உணர்ந்து நீங்கள் செய்த நன்றிக்கும், நீங்கள் அந்த தானியங்களை காத்து வளப்பதுக்கும் உறிய பலன் என்ன என்பதை கடவுள் என்ற அந்த சக்தி உங்களுக்கு அடுத்தவருடம் நவராத்திரிக்கும் முன்னர் அடையாளப்படுத்தும்..
நவக்கிரகம் என்ற பேரில் நீங்கள் ஆலயம் போகவும் வேண்டாம், பரிகாரம் செய்யவும் வேண்டாம்.. அவர்கள் யார் என்பது மட்டுமே இங்கு நமக்கு தேவையான அறிவு.. மீதம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..

இப்போது புரிந்திருக்கும் இந்த சாதகம் பார்ப்பது சாதகம் கணிப்பது எங்கிருந்து வந்திருக்கும் என்றும்.. படைப்பின் இரகசியம்.. கடவுளின் சூட்சுமம் அதற்கு அட்டவணை போட்டால், கடவுளுக்கும் போடுபவனுக்கும் என்ன வேறுபாடு.. ஆகவே அந்தக் கணக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்..
இரகசியம் என்றால் அது ஒருவனுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கு எல்லாருக்கும் எப்படி தெரிந்தது… 
 
குறிப்பு..

இது எமது ஆய்வியல் தெளிவு.. யாரையும் இதை பின்பற்றச் சொல்லவில்லை.. முடிந்தால் உங்கள் அறிவை தெளிவடைய செய்து பாருங்கள்.. முடிந்தால் அதன்படி நடவுங்கள்.. இல்லை என்றால் உங்கள் சித்தம்,,..

” ஒருவனென்றே தெய்வத்தை வணங்கவேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனதைவிடான் பரமஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்கள் அப்பனே அனேகங்கோடி
வார்தையினால் பசப்புவார் திருடர்தானே.”

” சத்தியே பராபரமே ஒன்றேதெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு
பத்தியினால் மனமடங்கி நிலையில்நிற்பார்
பாழிலே மனதைவிடார் பரமஞானி
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ்சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந்தானே.”

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Sunday, September 21, 2014

போகரும் புலிப்பாணியும்..

வணக்கம் தோழர்களே,

நேற்று இரவு எமது வாசகர் ஒருவர் அழைபேசியில் கன்னியாகுமரியில் இருந்து வாதம் ஒன்றை செய்தார்..

அதாவது அவர் எம்மை பற்றி அவரின் சில நண்பர்களிடம் விசாரித்தாராம், எமது மருத்துவக் குறிப்புக்களை காட்டி கேட்டிருக்கிறார், அதற்கு அவரின் நண்பர் எம்மை நல்ல மருத்துவர் என்று சான்றிதழ் கொடுத்தபின்னரே அவர் எம்மிடம் மருந்து வாங்கியதாகவும், பதிவுகளை நம்பிப் படிப்பதாகவும் கூறினார்..

இதில் என்ன இரகசியம் என்றால் அவரின் நண்பர் மூன்று தலைமுறையாக சித்த மருத்துவர்களாம், ஆனால் தற்போது பணம் சம்பாதிப்பதற்காக வேறு தொழில் செய்வதாகவும் கூறினார்.. இதற்கிடையில் நாம் 7 தலைமுறை தாண்டி சித்தர்கள் வழியில் இருக்கிறோம் ஆனால் நேற்று வந்தவர்கள் எல்லாம் சான்றிதழ் கொடுத்தால் தான் மருந்து சாப்பிடுவார்களாம்.. சிரிப்பாக இருந்தது..

அத்துடன் அவர் நத்தைசூரி மூலிகையும், பறட்டை விதையும் தேடுகிறாராம் அந்த மருத்துவ பாரம்பரிய நபர்.. சிரிப்பிலும் சிரிப்பு..

ஆனால் அவர் வாதம் செய்ய வந்த விடயம் வேறு.. அவருக்கு எமது மருந்தில் சந்தேகம் இல்லையாம்.. காரணம் சான்றிதழ் இருப்பதால்..

ஆனால் சாத்திரம் பற்றியும் சாமி ஆடுவது பற்றியும் கேட்டார்.. அவரது தம்பி சாமி ஆடுகிறானாம் அதனால் சாமி ஆடுகிறது என்கிறார்..அப்படியே அவருக்கு சாதகம் பார்க்கும் வியாபாரம் இருக்கும் போல அல்லது கற்கிறார் போல அதனால் அது உண்மை என்றார்..

ஆனால் எப்போதும் போல கேள்விகளுக்கு விடை தெரியாது, வாதம் மட்டும் செய்ய தெரிகிறது நன்றாக...

சூரிய உதயம் இல்லாத இடங்களில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி சாதகம் எழுதுவது என்றால் .....! பதில் இல்லை..

சூரிய உதயம் இல்லாத நாட்டுக்கு பஞ்சாங்கம் எழுதுவது எப்படி.! பதில் இல்லை..

ஆனால் சில கிரகத்தின் பெயரை சொல்லி அது அங்கு நின்றால் இது பலன், இது அங்கு நின்றால் இது பலன் என்கிறார்.. நாம் கேட்டோம் அது இது அங்கும் இங்கும் இருக்கு என்று எப்படி கூறமுடியும் என்று.. அவர் அதை கணிக்க முடியும் என்றார்.. நல்லது எப்படி கணிப்பது யார் அதை கணிக்கும் முறையை சொன்னது என்றால் தெரியவில்லை..

அப்படியே குறித்த இரண்டு கிரகம் குறித்த இடத்தில் இருந்தால் ஆண்மை குறைபாடு இருக்குமாம் என்றார், அதற்கு சித்த மருந்துகள் சாப்பிட்டால் குணம் கிடைக்குமாம் என்றார்.. அவரிடம் கேட்டோம்.. மருந்து சாப்பிட்டு குறை நீங்கியதும் கிரகங்கள் இடம் மாறுமா என்று...அவர் அது தான் தனக்கும் சந்தேகம் என்கிறார்..

புலிப்பானி சித்தர் போகரின் சீடராம் (எம்மிடம் கூறுகிறார்) அவர் பல சோதிட நூல்களை செய்தாராம் அதில் பல விடயங்கள் கூறியிருக்கிறாராம்.. நாம் கேட்டோம் அப்படியானால் அவர் சாதகம் கணிக்கும் முறையும் கூறினாரா என்று.. அவர் அது தெரியாது என்கிறார்..

எந்த விடயமும் அடியும் முடியும் இல்லாமல் பேசும் அளவுக்கு அவர் திறமையானவர் என்பது தெரிந்தது.. அது அவரின் குற்றம் அல்ல சமூகத்தின் குற்றம்.. அதன் இசைவாக்கம் அவரை பேச வைக்கிறது.. அவ்வளவு தான்.. ஆனால் அவரின் குருவிடம் கேட்க அவரால் முடியவில்லை.. அது தான் பிரசினை,, கேள்வி கேட்டால் உடனடியாக இவர் வெளியேர வேண்டும் போல..

சரி அவருக்கும் அவரின் குரு மாருக்கும்,, மற்றும் சாதக சிந்தாமணிகளுக்கும்,, சோதிட சக்கரவர்த்திகளுக்கும்... இந்த சாட்டை அடி.. வாங்க தயாராகுங்கள் முட்டாள் பசங்களா...

1. உங்கள் கணிதம் சரியானதாக இருந்தால் எப்படி ஒரு சூரியனுக்கு இரண்டு உதயம் இருக்க முடியும்..

வாக்கியம், திருக்கணிதம் என பஞ்சாங்கம் எப்படி இருக்க முடியும்.. கணிதம் என்றால் விடை (பதில்) எந்த விதத்தில் போட்டாலும் சரியானதாகவும், ஒன்றானதாகவும் வர வேண்டும்.. உங்களிடம் இருக்கும் கணிதம் பல ஒரு கேள்விக்கு பல விடைகள் தருகிறது.. இது எப்படி கணிதமாகும்..

முன்னர் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை இந்த கேள்விக்காவது பதில் வருகிறதா பார்க்களாம்..

புலிப்பானி சித்தரின் அப்பன் போகர் சொல்வதை கேளுங்கள் முட்டாள் பசங்களே...

“உண்டான கட்டளைகள் அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
திண்டான நல்லநாள் தீயநாளும் திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
சண்டாள மாண்பரெல்லாம் சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
கொண்டபடி யவரவர்கள் தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே”

“ஆமேதான் கெட்டநாள் நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
போமேதான் கதிரோனின் நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநா ளென்றிருக்க
வேமேதான் நாளெட்டும் நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
ஆமேதான் நாதரவர் செய்திருக்க வப்பனே நம்மாலே யாவதென்ன”

“என்னவே தேவனது யெட்டுநாளும் எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
பன்னவே வெள்ளிதனில் திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
சொன்னபடி காரிதனில் சவளமாகா துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
நன்மையாய் திங்களது வாரசூலை நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே”

“ நாட்டமுடன் செவ்வாய்க்கு மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
தேட்டமுடன் புதனுக்கு வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
நீட்டமுடன் குருவாரம் ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் தீயநாளாய்
வாட்டமுடன் சாஸ்திரங்கள் கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே”

“காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால்
தோணவே எந்தநாள் நல்லநாளென்று துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
வேணவே நாளெட்டும் நல்லநாளாய் விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு மதிகெட்டு நின்றிட்டாரே”

““ஆச்சப்பா வையகத்தில் சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
பாச்சலுடன் சாத்திரங்கள் கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
ஆச்சரிய மானதொரு தேகமப்பா வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே”

போகர் இல்லை என்ற விடயத்தை புலிப்பானி இருக்கு என்கிறார் என்றால் சிந்தக்க வேண்டும் முட்டாப்பசங்களே…. அதில் ஏதோ இரகசியம் இருக்கு என்று…

போகர் நாட்களை எட்டு என்று கூறியிருக்கிறார் மேதாவிகளே..அதற்காவது அர்த்தம் தெரிகிறதா..சிந்தாமணிகளுக்கு..

அறிவு கெட்டு திரிவதை விட்டு கற்பதை தெளிவாக கற்க வேண்டும்..

அப்படியே அவர் சாமி ஆடுவது பற்றி பேசினார் ஆலயத்தில் வில்லுப் பட்டு பாடும்போதும், தீப ஆராதனை செய்யும் போதும், இப்படி சில நேரங்களில் அனேகருக்கு சாமி வருவது பொய்யா என்றார்.. நாம் கேட்டோம் வரும் சாமி ஏதாவது ரேஸன் காட் வைத்திருக்கா.. அல்லது பாஸ்போர்ட் இருக்கா.. அவர் கோவிலிள் சாமிதான் வரும் என்றார்… நாம் பேய் வராதா என்று கேட்டோம்,,, அவர் ஆலயத்தில் எப்படி கெட்ட்து வரும் என்றார்…

அப்படியானால் கோயில் கோபுரங்களில் இருப்பது யார்… பேய் என்றால் கெட்டது என்று எதை வைத்து கூறுகிறீர்களோ அதே செயலை தெய்வங்களும் செய்வதாகவே புராணங்கள் கூறுகிறது..

ஏன் பரமன், சிவன், ஒருவன், தலைவன் என நீங்கள் புகழும் பாடும் ஆதியானவர் சுடலையில் இருப்பவர், பேய்களுக்கு தலைவர், பூதங்கள் பிசாசுகளுடன் திரிபவர் அவரின் படைகளே அவை தானே.. கெட்டவர்களை வைத்து அரசியல் செய்யும் அவர் மட்டும் எப்படி நல்லவராக உங்களுக்கு காட்சி தருகிறார்…

சாமி பூலோகம் வரவேண்டுமானால் நேராக வருவது தானே, எதற்கு மனிதன் மீது வரவேண்டும்.. அப்படி நேராக வர சக்தியில்லாத ஒன்று எப்படி சாமியானது…

இது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்,.. மேலும் வேண்டுமானால் இனி பணம் கட்டிப் படிப்பவர்கள் மாட்டும் வாருங்கள்..

பணம் கொடுத்து படிப்பது தான் உண்மை என்ற நிலை உங்களையும் சேர்த்து முட்டாளாக்கி விட்டது போல…

அப்படியே புலிப்பாணி பாடிய நூல்களை படிக்கும் முன் இதைப் படியுங்கள் முட்டாள் பசங்களே..

காலங்கிநாதர் போகருக்கு கூறிய புத்தி..

” மாண்பான சாஸ்திரத்தை யுந்தன்சீஷன் மகத்தான புலிப்பாணிக் குபதேசித்தீர்
ஆண்மையுள்ள சித்தாதி சித்தரெல்லாம் அவர்பேரில் மெத்த மனஸ்தாபமுண்டு
வீண்போன்ற சாத்திரமா இருந்தாலல்லோ விருப்பமுடன் அவர்தமக்கு உபதேசிக்க
தாண்மையுள்ள சாத்திரந்தான் சத்தகாண்டம் தாரணியில் சாத்திரங்கள் மெத்தவுண்டே”

” தானான சத்தகாண்ட மேழாயிரந்தான் தகமையுடன் கூறிவிட்டீர் தோஷமில்லை
பானான யெண்ணாயிரஞ் சாத்திரத்தை பகரவேண்டாம் புலிப்பாணி நாதருக்கு
தேனான சாத்திரத்தை மனதுவந்து தேற்றமுடன் மேருகிரி தன்னிலப்பா
கோனான குகைதனிலே வைத்தாலல்லோ கொற்றவனே லோகமெலாம் மதிப்பார்தானே”

புலிப்பாணிக்கு அணைத்தையும் கற்பிக்க வேண்டாம் என போகரின் குரு காலங்கிநாதன் கூறுவதைப் பாருங்கள்..

அடியும் தெரிவதில்லை முடியும் தெரிவதில்லை.. வாதம் செய்ய வந்தாச்சு…

இது குறிப்பிட்ட அந்த வாசகருக்கு மட்டும் அல்ல.. அவர் மேல் எந்த தவறும் அல்ல.. அவரையும் ஏமாற்றிய அர்ப்பர்களுக்கு…

இது போதும் என நினைக்கிறேன்… தேவை எனின் மீண்டும் தொடரும்… போகரின் காண்டம் மட்டும் இப்போது தந்திருக்கேன்.. தேவைப்படுமயிம்….. உங்கள் கைகளில் இல்லாத பாடல்கள் எல்லாம் வரும்….

“ பாடலாய் மறைத்துவைத்த சங்கையெல்லாம் பாரிலுள்ள மாண்பர்களுங் கண்டுகொள்வார்
தேடவே சாத்திரத்தை புனிதவானே தேற்றமுடன் புலிப்பாணிக் குறுதிகூறி
ஆடவே யம்பலத்தில் நல்லோர்தம்மை அறிவுடையோர் சிவயோக மாண்பருக்கு
கூடவே சாத்திரத்தை தேர்ந்துமல்லோ குணமான வெகுபுத்தி கூறுவீரே”

உங்கள் விளையாட்டுக்கள் இங்கு வேண்டாம்...

எமது குருகுல மாணவர்களாக வர இருக்கும் வாசகர்கள்... இதைப் போன்ற பல இரகசியங்கள் கற்பதற்கு தயாராக இருங்கள்..

சித்தர்களை பார்க்க வேண்டும் அல்லவா... நியத்தில் பார்க்களாம்... தயாராகுங்கள்...

ஆனால் நீங்கள் புலிப்பாணி போகருக்கு இருந்தாற்போல் இல்லாமல்,

.. போகர் காலங்கிநாதருக்கு இருந்தாற்போல் இருக்க வேண்டும்.

” விட்டகுறை தொட்டகுறை இல்லாவிட்டால் தரணியில் சித்தர் அருள் கிடையாதப்பா..”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, September 19, 2014

உங்கள் பங்களிப்பு எப்படி...

எமது குருகுல மற்றும் சித்தர்கள் மருத்துவ ஆய்வியல் செயற்திட்டம்.. ஓர் பார்வை..

இது முழுமையான ஓர் தமிழ் மற்றும் சித்தர்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் கற்கும், ஆய்வு செய்யும் ஓர் செயற் திட்டம்..
இங்கு ஆன்மீகம், மாந்திரீகம், மருத்துவம், இரசவாதம் என சித்தர்கள் மற்றும் தமிழ் சான்றோர்கள் கூறிய பல விடயங்கள் உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இது இருக்கும்..

இதில் பல குருமார்கள் பங்கெடுப்பதாக மாணவர்களை பயிற்றுவிக்க உதவுவதாக எமக்கு உறுதி கூறியிருக்கிறார்கள்.. அவர்கள் இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஞானிகள்..

எம்மிடம் இருக்கும் ஆய்வுகள் இவர்கள் எமக்கு தந்த அறிவின் வெளிப்பாடு என்றால்.. அவர்களை பற்றி அதிகம் பேசத்தேவையில்லை..

இவர்களுல் சிலர் எம்மை கற்பித்த குருமாரும் ஆகும்.. இவர்கள் மேடைபோட்டு பேசும் ஆசாமிகள் அல்ல, இலைமறை காயாக சமூகத்தில் இருக்கும் ஞானிகள்... சிலர் இரசவாதம் பற்றியும், சிலர் மாந்திரீகம் பற்றியும், சிலர் மருத்துவம் பற்றியும் சில தமிழ் பற்றியும் உங்களுக்கு கற்பிக்ககூடும்..

சித்தர்களை அவர்களின் குகையில் சென்று சந்திக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது என்று காலம் தீர்மானிக்கட்டும்..

இதில் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழையும் சித்தர்கள் விஞ்ஞானத்தையும் ஆய்வு செய்ய விரும்பும் அனைவரும் பங்கேட்கலாம்.. இது ஒரு தனி நபர் அமைப்பு இல்லாமல் முழுமையான மாணவர்கள் அமைப்பாக இருக்க வேண்டும் என்பது எமது அவா..

இதில் ஆண் பெண் என்ற வேற்றுமை கிடையாது,, வயது எல்லை உண்டு.. அதாவது உங்கள் வயது நீங்கள் சுயமாக முடிவெடுக்கும் காலத்தை கொண்டது..

எல்லாம் சரி எப்படி நாங்கள் இதை முழு நேரமாக கற்பது என்ற சிந்தனை வேண்டாம்.. விஞ்ஞானம் கற்ற போகிறோம் ஆகவே அதற்கு இணையம் துணையாக இருக்கும்..

பதிவு செய்யும் மாணவர்கள் இணையத்தின் வழி தனி அடையாளம் மற்றும் கடவுச் சொல் மூலம் எமது தனித்துவமான தளத்தில் சேர்ந்து வாதங்கள் பயிற்சிகள் என ஒளி ஒலி காட்சிகள் மற்றும் கட்டுரைகள், செயற்திட்டங்கள் என பலவற்றையும் பெறலாம்.

அதற்கு மேலாக எமது ஆய்வியல் மையத்தில் குறித்த காலத்துக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு பங்கெடுக்கும் வாய்ப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும்.. அதற்கு தேவையான வீசா மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்..

இது தவிர்த்து இந்தியா மலேசியா மற்றும் சில நாடுகளில் ஆய்வியல் மையத்தின் சிறு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்கள் தரப்படும்..

இதில் உங்களுக்கு என்ன பலன் என்று சிந்திக்கிறீர்களா..! அதாகப்பட்டது.. இதுவரை எமது பதிப்புக்கள் ஆய்வுகளை உற்று நோக்கியவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஓர் விடயம்,, காலம் காலமாக நாம் செய்துவரும் பல விடயங்கள் உண்மையானவை அல்ல என்றும், நமது தமிழ் சமூகம் எங்கு சென்றாலும் கொச்சைப்படுத்தப் பட்டு துணையின்ன்றி இருப்பதற்கு காரணமும் நமது மூட நம்பிக்கைகள் தான் என்றும்..

இந்த சமூக அமைப்பில் இருந்து எமது வளர்ந்து வரும் குழந்தைகளை காக்க வேண்டும், உலகுக்கு தமிழன் ஆதியானவன் என்பதை காட்டவேண்டும். அதற்கு தேவையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களை நாம் தயார் செய்ய வேண்டும்.

இப்படி பல காரணங்கள் இருக்கிறது அத்துடன் எமது வாழ்க்கை சிறப்பகவும் காலத்தை முடிந்தவரை கடந்தும் வாழ்ந்துகாட்ட வேண்டும்.. தமிழ்ன் தவிர எவனாலும் இது சாத்தியம் இல்லை என்ற விஞ்ஞானத்தை கொடுக்க வேண்டும்..

பிறந்தோம் திண்றோம், படுத்தோம், இறந்தோம் என இல்லாது சாதித்து காட்டினோம் என்ற பேரானந்ததுடன் கண் மூட வேண்டும்.. காலதால் அழியாது நிற்கும் தமிழ் எழுத்துக்கள் போல் எமது பெயர்கள் நிலைக்க வேண்டும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நிரூபிக்க வேண்டும்... பாடசாலைகளில் விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலில் நீங்களும் சேரவேண்டும்..

சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சாமியார்கள் எனும் ஆசாமிகளிடம் இருந்து மக்களையும் சமயத்தையும் காக்கவேண்டும்..

இங்கு அனைவரும் கடவுள் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

இன்று மதமாற்றம் செய்யும் துரோகிகளை அடையாளம் இல்லாமல் செய்யவேண்டும் வேண்டும்.

எஞ்சிக்கிடக்கும் தமிழையாவது காத்து புதுப்பிக்கவேண்டும்.

பணத்துக்காக ஓடும் மக்கள் கடவுளை பணம் அச்சடிக்கும் இயந்திரமாக கருதுவதை மாற்ற வேண்டும்..

அனைத்துக்கும் மேலாக கடவுள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்..

இப்படி பட்டியல் தொடர்கிறது..

இதை எல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டால்,,, இப்படி கேட்டதன் பலன் தான் தமிழ் வளர்த்த கடவுளர் வேறு மொழொயில் இன்று வணங்கப்படுவதும் அவருக்கு பலரும் முதலாளிகள் ஆனதும்.

இதே தவறை நாமும் செய்வதானால், அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

சிறப்பாக வாழ்ந்த தமிழன் இன்று சீரழிக்கப்படுவது எதனால்.. நமக்கென்ன என்ற சிந்தனையின் பலன் தான் இது..

பிறவியால் எவனும் சித்தனும் இல்லை ஞானியும் இல்லை.. முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..

எம்மால் (எங்களால்) இவை சாத்தியமா என்ற சிந்தனை வருகிறதா.. கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதில் ஐயமில்லை அதனால் தான் சாமியார்களிடம் அனேகமாக ஏமாற்றப்படுவது தமிழனாக இருக்கிறான்..

முயற்சியை நாம் தொடருவோம்.. பலனை கடவுள் என்ற சக்தி தீர்மானிக்கட்டும்..

” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்”

என்ற வாக்கின் படி முயற்சி செய்யலாம் அல்லவா..

இந்த செயற்திட்டத்துக்கு உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..

“ எறும்பூர கல்லும் தேயும்” நாம் எறும்புகளாக இருந்து பாறைகளை தேய்க்கலாம்..

” மெல்லமெல்ல பாயும் தண்ணீர் கல்லை உருக்கிப் பாயும்” என்றது போல் நாமும் முயற்சி செய்யலாம்..

இதுவரை எம்மிடம் இருந்த சேமிப்புக்களை வைத்து காணி நிலம் இதற்காக வாங்கி அதில் ஓர் சிறு கட்டிடம் ஏற்படுத்தி, நான்கில் இரண்டு பகுதிக்கு சிறு வேலி போட்டு அதைல் ஒரு பெரிய கிணற்றையும் கட்டியிருக்கிறோம்.. அதாவது 5 ஏக்கர் அளவு கொண்ட ஓர் காட்டு காணி..

ஆய்வு மையத்துக்கு ஏன் இத்தனை பொரிய இடம் என்ற கேள்வி வருகிறதா..

தொடங்குவதற்கு பணத்தை சேர்ப்பதே கடினமாக இருக்கும் நிலையின் ஆய்வுகள் சேவைகள் என எவ்வாறு முயற்சியை தொடருவது.. அத்துடன் இது ஓர் சித்தர் கலை பற்றிய ஆய்வியல் அல்லவா.. ஆகவே அவர்களின் அறிய வகை மூலிகைகள் மற்றும் எமது ஆய்வுக்கு தேவையான மூலிகை மற்றும் கட்டிட அமைப்பு என பல விடயங்கள் தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாடு..

இதுவரை சுமார் 2000க்கு மேற்பட்ட மூலிகைகளை கண்டிருக்கிறோம், அவற்றை முறையாக தோட்டமாக செய்த்து மக்களுக்கு காட்டவேண்டும் அல்லவா..

உதாரணமாக நத்தை சூரி வேரை காசு கொடுத்து வாங்கும் எத்தனை பேர் இது நத்தைச் சூரிதான் என ஆராய்ந்து வாங்குகிறார்கள்.. அத்துடன் நத்தை சூரி என்ற பேரில் இணையத்தில் இருக்கும் எதுவும் நத்தைச் சூரி இல்லை..

இப்படி பல மூலிகைகள்.. பல அற்புதங்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

அதில் தமிழ் தந்த சிவனின் சமாதி பதிணெண் சித்தர்கள் சமாதி என பல விடயங்கள் வர இருக்கிறது.. தழ்மி மொழியை தந்த சிவனை வடமொழொயில் வணங்குவது எவ்வளவு கொடுமையானதும் பாவமானதுமான விடயமாக அவர் கருதுவார்..

இப்படி பல செயற்பாடுகள் கொண்டதாக இந்த திட்டம் இருக்கும்..

இந்த செயட்திட்டத்தின் பிரதான ஆய்வியம் மையம் இலங்கையில் இருப்பதற்கும் காரணம் உண்டு.. அதாவது நாம் கூற முற்படுவதும், செய்ய முட்படுவதும் பல சாமியார்கள் மற்றும் சமயங்களை விற்கும் ஆசாமிகளுக்கும் பாரிய பிரச்சினையாக வரும்.. அதில் இந்தியா முதலிடம் வகிப்பதால் அவர்களின் பல தொல்லைகளும் எமக்கு ஏற்படும், அரசியல் நகர்வு மற்றும் பாதிப்புக்கள் என எமது செயற்திட்டத்தை தடுப்பதற்கு பலரும் முன்வருவார்கள்.. அதுவும் பண வசதி அவர்களிடம் தான் குவிந்து கிடப்பதால் அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்..

இங்கு எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இங்கு நாம் அரசாங்கத்துக்கு எந்த தொல்லையும் செய்யாத வரை எவரும் எம்மை தொல்லை கொடுக்கப்போவதில்லை.. அத்துடன் போலிச் சாமியார்கள் ஆசாமிகல் என பிரச்சாரங்கள் மிக குறைவான நாடும் இது.. மற்றும் தமிழர் இங்கு தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களின் ஆத்மாக்களும் இந்த தமிழ் தொண்டிற்கு உதவி செய்யட்டும்...

தமிழ் நாட்டுக்காக பாடுபடும் மக்கள் தமிழ் மொழிக்காகவும் பாடுபடுவது மிக அவசியம்.. தமிழர்களிடம் இத்தனை திறமைகள் இருப்பதை காட்டினால் தானே தமிழ் மீது மக்களுக்கும் பற்றுதல் அதிகமாகும்..

இதன் மீதமான விளக்கங்கள் அடுத்த பதிவாக வரும்,, அதற்கிடையில் உங்கள் கருத்துக்களையும் உங்கள் சிந்தனைகளையும் பகிருங்கள் பார்ப்போம்..

அளவு கடந்த பணம் வைத்திருக்கும் எந்த தமிழனும் இதை விரும்புவதாக தெரியவில்லை.. இருப்பினும் நாம் அதை தகர்த்து வெற்றியடையவேண்டும்..

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

சித்தர்களின் பாதம் வணங்கி உங்களிடம் இதை சமர்பிக்கிறேன்..

தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்து பதிவதாக இருந்தால் அதை மின்னஞ்சல் செய்யுங்கள்..

muthaly@gmail.com

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, September 18, 2014

ஆகாய வயிரவர்

வணக்கம் தோழர்களே,

தொடர்சியான சில மந்திர பதிவுகளை படிக்கும் வகையில் நாம் வேத கால மந்திரங்கள் உங்களுக்கு தருகிறோம்.. அத்துடன் போலியான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் சமூகத்துக்கு முடிந்த வரை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாம் இந்த பதிவுகளை பகிர்வதன் மூலம் உண்மைகள் அவர்களுக்கு தெரியவரும் என்பதை மனதில் நிறுத்தி... அதற்கமைய தகவல்களை பகிருங்கள்..

நீங்கள் மட்டும் பலனடையவேண்டும் என்று மற்றவரை போல் தன்னலத்துடன் இல்லாமல் செயற்படுங்கள்..

வயிரவர் பற்றிய விடயங்கள் மந்திரங்கள் பற்றிய அடுத்த பதிவு இது..

ஆகாய வயிரவன் தந்திர நூலில் இருந்து இந்த பதிவு..

ஆகாய வயிரவர் மூல மந்திரம் இது.. குறித்த நூலின் படி..

“ ஓம் நமோ விஜய வயிரவாய ப்ரலயாந்ததாய மகா வயிரவாயா ஸ்ர்வ விக்ந நிவாரணாய சக்தி தராய சக்ரபாணாயே வடமூல நிஷண்ணாய அகில கண நாயகாயா ஆபதுத்தாரணாய ஆகர்ஷய ஆகர்ஷய ஆவேஷாய மோஹய மோஹய ப்ராமய ப்ராமயா பாஷய பாஷய சீக்ரம் பாஷய ஹ்ராம ஹ்ரீம் த்ரிபுரதாண்டவாய பாஷய ஸ்வாஹா:||”

இது மிக அற்புதமான மந்திரம் என சிலர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் நாம் உபயோகிப்பதில்லை.. வடமொழியில் அவ்வளவு பற்றுதல் இல்லாத காரணமும், அளவுக்கு மேலாகவே தமிழ் மந்திரங்கள் குவிந்து கிடப்பதாலும், சித்தர்களின் உண்மைகள் நன்கே தெளிவாக புரிந்ததனாலும், எமது மந்திரப் பிரயோகம் எல்லாம்... தமிழை அடிப்படையாக கொண்டது..

இதற்கு பதில் ஆகாய வயிரவர் என்ற ஆதி வயிரவனை நாம் அழைக்கும் மந்திரம் தமிழில் இப்படி இருக்கும்...

” ஓம் சிறியும் கிலியும் என நின்ற திரிசூல வயிரவா ஐயும் கிலியும் என நின்ற அட்டவயிரவா ஆகாய வயிரவ சக்தி வயிரவா சங்கார வயிரவா........................
........................................

என் முன் நிற்கவே சிவாகா...

நீங்கள் எந்த மொழியில் வயிரவனை வணங்கினாலும், அவரின் செயல் இருளை அழித்து ஒளியை தருவது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்..

உண்மை ஞானம் தேடி அவரை அழைக்கலாம், ஆனால் பண ஞானம் தேடி அழைக்கவேண்டாம்,, இருப்பது இல்லாமல் போகும்..

இவ்வாறு தமிழில் மந்திரங்கள் தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது அதனால் நாம் வேதம் வடமொழிக்கு சொந்தம் என கூறமுடியாது..

குறிப்பு,.. கருத்துக்கள் பதியுங்கள்... அப்படியே பதிவையும் பகிருங்கள்... உண்மையானவை மக்களை சென்றடைய காரணமாக இருங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

கால வயிரவர்

வணக்கம் தோழர்களே,

இதோ நீங்கள் எதிபார்க்கும் வயிரவனை முறையாக வழிபட....

ஆகாய வயிரவ தந்திர நூலில் இருந்து.. இது நாம் காசியில் இருந்த போது கால வயிரவனை தரிசிக்க பயன்படுத்திய மந்திரங்களில் ஒன்று.. இது கிரந்த அட்சரங்களில் எம்மிடம் கிடைத்தன அவற்றை உங்களுக்கு தமிழில்..

“ ஓம் நமோ பகவதே காலாய கோராய வஜ்ர தம்ஷ்ட்ராயா |
சத்ரு நாசாய ஸர்வ பூத தமநாய ஹூம் பட் ஸ்வாகா|| ”

இது இன்று பலருக்கு தெரியும் ஆனால் இதன் தன்மையை புரிவது எந்த அளவு இலகுவானது அல்ல என்பது அகோரிகள் கருத்து..

இதைப் போல் சித்தர்கள் வழியில்... நாம் உபாசனை செய்த மகா கால வயிரவன் மந்திரம்..

“ ஓம் அகார உகாரா உக்கிரப்பிரளைய காலதாண்டவராயா அகோர அட்ட லிங்க ஆதி பரமேசுர புத்திரா கால வயிரவா.....................................................................................
.....................................................................................................
உன் குரு ஆதி சிவன் ஆணை என் வாக்கில் .....................
ஓம் அ ... .... .... ... .... எனும் பஞ்சாட்சரத்தின் ... ...... வா வா சிவாகா”

இங்கு மந்திரத்தை முழுமையாக பதிவிடமுடியாமைக்கு வருந்துகிறேன்.. காரணம் நமது பதிவுகள், அதில் இருக்கும் உண்மைகள் தேவைப்படுவதில்லை பலருக்கும் ஆனால் மந்திரங்கள் மட்டும் தேவைப்படும், அது மட்டும் இல்லாமல் நாளை பலரது இணையப்பக்கங்களில் அது அவர்களின் பாரம்பரிய முறையாக மாற்றப்பட்டிருக்கும்..

ஆகவே எமது மாணவர்களாக எமது குருகுல செயற்திட்டத்தில் பங்கெடுக்கும் வாசகர்கள் மட்டும் இதைப் போல் பல உண்மையான மந்திரப்பதிவுகளை பெருவார்கள்..

இந்த மந்திரத்தை முறையான இயந்திரம் இரும்புத் தகட்டில் கீறி மண்டலம் ஒன்று தனியாக இருந்து பூசை செய்தால் கால வயிரவர் யார் என்பதை அனைவரும் காணலாம்..

மந்திரங்களின் தன்மையும் மாணவர்களின் பக்குவ நிலையும் தெரிந்தே குரு மந்திரங்களை உபதேசிப்பர் என்பதை மனதில் வையுங்கள்..

வேத மந்திரங்கள் போல் சித்தர் மந்திரங்கள் விளையாட்டு அல்ல..சரியான குருவும் சரியான வழிகாட்டலும் சரியான பற்றுதலும் இல்லாது போனால் வாழ்க்கை மிக ஆபத்தாக மாறிவிடும்.

ஆகாய வயிரவ தந்திர நூலில் இருக்கும் மந்திரம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.. அது உங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

சுவர்ண வயிரவர்

வணக்கம் தோழர்களே,

இன்றில் இருந்து நாம் தொடர்சியாக பல மந்திர தந்திர உபாசனைகள் பற்றி பயிலப்போகிறோம்,, அதன் முதல் பாடநெறியாக..

” தணக்கு தேவையான தங்கங்களை தானே இரசவாதத்தால் செய்யும் ஆற்றல் கொண்ட சித்தர்கள் ஏண்டா தம்பி சொர்ண வயிரவரை கூப்பிட்டு தங்கம் கேட்கப் போகிறார்கள்.. சிந்திக்க மாட்டீர்களா..!”

”சுவர்ண ஆகருசணம்” வயிரவன் பற்றி பார்க்கலாம்..

இன்றைய மக்களிடையே இருக்கும் மூட நம்பிக்கைகளை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகளுக்கு அளவில்லாமல் போயிற்று..

சுவர்ணம் என்றால் பொன் என்றும் ஆகருசணம் என்றால் அழைத்தல் என்ற கருத்தையும் வைத்து, சுவர்ண ஆகருசண வயிரவன் என்றால் பொன்னை அழைத்துவரும் கடவுள் என்று கருதி இந்த மந்திர உபாசனை செய்தால் பணப்பிரச்சினைகள் தீரும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஆசாமிகள்..

சிவனாரின் அவதாரம் வயிரவன் என்று கூறும் அறிவாழிகள் எதையும் முழுமையாக ஆழமாக கற்பதில்லை போலும்...

அசுர வதம் செய்ய சிவனால் தாருகாபுரம் எரித்த அக்கினியை ஓர் சக்தியாய் மாற்றினார் அந்த சக்தி வயிரவம் என்று அழைக்கப்பட்டதாக வேதம் கூறுகிறது.. அந்த சக்தி அசுரனால் இருளாக மாற்றப்பட்ட லோகங்களின் எட்டு திசைகளையும் பிரகாசிக்க செய்ய எட்டு சக்திகளாக மாறின.. இப்படித்தான் வேதம் கூறுகிறது.. அதன் பின் அந்த அசுரன் அழிக்கப்பட்டு பின்னர் தாட்சாயினி கதை தக்கன் யாகம், தாட்சாயின் இறப்பு சிவன் சக்தியை தூக்கி அழைந்த கதை அதில் விட்னு சக்கரத்தால் சக்தியை துண்டுகளாக வெட்டியது பின்னர் அந்த துண்டுகள் சக்திபீடமாக மாரினதும் அதற்கு காவலாக எட்டுப்பேரும் (வைரவர்) 64 சக்திகளாக பிரிந்து காவல் செய்வதும் தான் புராணம்..

இதில் இந்த எட்டுப் பேரிலும் சரி 64 பேரிலும் சரி சொர்ண ஆகருசண வயிரவர் இல்லையே… அப்படி என்றால் இவர் எங்கிருந்து வந்தார்..

பணம் கிடைக்கும் இவரிடம் போனால் என்றால் போதும்.. உடனே கூட்டமாக கிழம்ப வேண்டியது தான்… எதையும் சிந்திப்பதில்லை..

சுவர்ண ஆகருசணம் என்றால் என்ன என்று யாராவது இந்த ஆசாமிகளை கேட்டதுண்டா.. அல்லது அவர்கள் தான் கூறியதுண்டா.. பணம் வரும் என்றால் எதையும் செய்ய தயாராக இருக்கும் மக்களை சுவர்ண ஆகருசண வயிரவன் கூட காப்பாற்ற முடியாது..

சொர்ண வயிரவர் என்றால் … சித்தர்கள் கூறுவது..

”தானேதான் சொர்ணமென்ற வயிரவன்தியானஞ்
சாற்றுகிறேன் அட்சரங்கள் சரினின்றாட
வானேதான் சோதித்ததுபோல் வாதவித்தை
வகையான அட்டகர்ம சித்திக்காக
சேனேதான் அனேகமுண்டு கர்மவித்தை
செய்வதற்கு சொர்ணவயிரவனை பூசி
நானேநீயென்று சொல்லெண் கோணத்துள்ளே
நாட்டுவாய் அட்சரத்தை நாட்டுவாயே”

இது சித்தர்கள் கூறிய சொர்ண வைரவன் பூசை முறையின் பாடல் ஒன்று…

சித்தர்களின் இரசவாத வித்தைக்கு காவலாக அட்ட கர்மங்கள் சித்தி செய்வதற்காக அழைக்கப்படும் ஓர் காவல் தேவதையின் பூசை முறை.. வாதவித்தைகள் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை காப்பதுக்காக இந்த சொர்ண வயிரவன் அழைக்கப்படுகிறார்.. சொர்ண வயிரவர் அழைக்கப்படுவதை ஆகருசணம் என்று கூறுவது.. இதை இங்கு சொர்ணம் கிடைப்பதற்காக என்று மாற்றி மக்களை ஏமாற்றி ஆசாமிகள் பணம் ஆகருசணம் செய்வது ஏனோ மக்களுக்கு புரிவதில்லை..

தணக்கு தேவையான தங்கங்களை தானே இரசவாதத்தால் செய்யும் ஆற்றல் கொண்ட சித்தர்கள் ஏண்டா தம்பி சொர்ண வயிரவரை கூப்பிட்டு தங்கம் கேட்கப் போகிறார்கள்.. சிந்திக்க மாட்டீர்களா..!

அப்படியானால் சொர்ண வயிரவரின் வேலைதான் என்ன..! அதற்கு முதல் அட்ட வயிரவர்கள் யார் என பார்க்க வேண்டும் அவர்களில் இவர் இருக்கிறாரா என பார்க்க வேண்டும்..

1. அசிதாங்கன்
2. ருருவன்
3. சண்டையன்
4. குரோதன்
5. கபாலன்
6. உன்மத்தன்
7. பீசணன்
8. சங்காரன்

இவர்களில் சொர்ண வயிரவன் வரவில்லையே…
மேல் குறித்த சித்தர் பாடல் இவ்வாறு முடிகிறது …

” தானென்ற வயிரவர்கள் எட்டுப்பேரும்
தனித்துமே சக்கரத்தில் நின்றுபூசை
வானென்ற அட்டமாசித்தி எட்டும்
மைந்தனே வயிரவர்கள் எட்டுப்பேராம்
கோனென்றநீ இவர்களைத்தான் பூசி”

சித்தர்கள் பரிபாசை பேசுபவர்கள் என்று நன்றாக தெரிந்தும் அவர்கள் கூறும் விளக்கத்தை அடியும், முடியும் இல்லாமல் படித்த ஆசாமிகளை என்ன சொல்வது..

”போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற வாக்கியம் ஞாபகத்தில் இருக்கிறதா.. இந்த போதும் என்ற மன நிலையை தருவதே இந்த சொர்ண வயிரவரின் செயற்பாடு.. அதாவது இருளை நீக்கி ஒளியை தருவது அவரின் செய்கை..

அட்ட சித்திகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் தெளிவான சிந்தனைகள் என ஆத்மபலத்தை அடைவதற்கு சொர்ண வயிரவன் என்ற ஓர் தேவதையை உருவகப்படுத்தி அதன் மூலம் தங்களை வாதவித்தைகளில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர் சித்தர்கள்.. எட்டுவிதமான வயிரவர் என்றால் அவர்களுக்கு தனித்தனியே பூசைகள் செய்ய வேண்டும் என்பதால் அவர்களை ஒருமுகப்படுத்தி சொர்ண வயிரவர் என்ற பெயரை சூட்டினார்கள் சித்தர்கள்..

“ மாயையை போக்கும் கடவுள் இன்று மாயையின் முழு உருவமான பணத்தை தருவதாக மாற்றியது எந்த ஆசாமியின் வேலையோ தெரியவில்லை” ஆனால் அதை இன்று இங்கு இருக்கும் பல ஆசாமிகள் நன்றாக வியாபாரம் செய்கிறார்கள்.

சொர்ண ஆகருசண வயிரவனை வழிபட முறையான இயந்திரம் மற்றும் மந்திரம் என தெளிவான விடயங்கள் சித்தர்கள் சிலர் கூறுகின்றனர்,, அதிலும் தூய தங்கத்தில் இந்த இயந்திரம் செய்யப்படவேண்டும் என்கிறார்கள்… அதாவது இருளின் நிறம் கருப்பு (இரும்பு) ஒளியின் நிறம் பொன் (தங்கம்) என்ற அடிப்படையில் இருளை நீக்கி ஒளியை தருபவன் வயிரவன் என்று அதற்கான நியதிகளை அமைத்திருக்கிறார்கள்..

ஒன்றையும் ஆராய்வதும் இல்லை சிந்திப்பதும் இல்லை… மேடை போட்டுப் பேசினால் உடனே கிழம்பவேண்டியது தான்..

இதை வேதகாலத்துக்கு பின் வந்த பல நூல்கள் தவறாக சித்தரித்துப்பேசியதால் வந்த வினைதான் இன்று ஆசாமிகள் பேசுவது..

அதுவும் இவர்கள் கூறும் இந்த சுவர்ண ஆகருசண வயிரவன் மந்திரங்கள் எந்த நூல்களில் இருந்து கிடைத்தது என்று கூட இவர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை..

எம்மிடம் தொடர்ச்சியாக பல மாணவர்கள் கேட்ட விடயமும் இதுதான்..

சுவர்ண ஆகருசண வயிரவன் மந்திரம் என்ற பேரில் எதையோ எல்லாம் பதிவிடும் ஆசாமிகள் மக்களின் நம்பிக்கையோடு அளவு கடந்து விளையாடுவது தண்டனைக்குறியது..

” சிந்தாமணி பைரவ நூல்” இந்த வயிரவ கலைகளைப்பற்றி பேசுகிறது அதில் ஏற்பட்ட குழப்பத்தின் வெளிப்பாடுதான் இந்த சொர்ண வயிரவன்…

பேருக்கு முன்னால் பைரவன் சேர்த்தால் போதாது.. வயிரவன் பற்றி சில விடயமாவது தெரியவேண்டும்..

சிவ மூர்த்தங்களையும் வயிரவனையும் கடவுளாக சித்தரித்து பேசிவிட்டது இந்த வயிரவ நூல்கள் பல..

சிந்தாமணி நூலின்படி சுவர்ண ஆகருசண வயிரவர் மந்திரங்கள் என பல பல கூறப்படுகிறது.. அதில் இல்லாத மந்திரங்கள் எல்லாம் இன்று சமூகத்தில் புலக்கத்தில் இருப்பது எப்படி என்று தான் புரியவில்லை..

உதாரணமாக..

“ ஓம் வம் ஆம் ஹ்ரீம் ஹ்ரௌம் மகாபைரவாய
ஆபதுத்தாரணாய அஜாமில பந்தநாய
லோகேச்வராய ஸ்வர்ணாகாஷணாய
மம தாரித்ர்யா பஹராய ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரௌம் ஆம் ஸ்வாகா||”

மூலம்.. இந்நூல் நாம் ஆய்வு செய்த இடம் காசி ஆபதுத்தாரணாய அகோரிகள் கூட்டம்.. அகோரிகள் பலரிடம் இந்த சொர்ண ஆகருசண பயிற்சி இருக்கிறது.. அவர்கள் தங்கம் எடுப்பதாக நாம் அங்கு இருந்த காலத்தில் கண்டதில்லை.. அவர்களுடன் சேர்ந்து நாமும் பிச்சை எடுத்து தான் சாப்பிட்டிருக்கிறோம்.. அது ஒரு தவக்காலம்,..

இந்த மந்திரம் சிந்தாமணி பைரவ நூலில் இருக்கும் சிறு மந்திரம்.. முடிந்தவரை தமிழில் எழுதியிருக்கிறேன்.. இதன் மூலம் கிரந்தத்தில் (வடமொழி) இருக்கிறது..

ஆனால் இம் மந்திரம் இன்று பீசங்கள் மாற்றப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.. நண்பர் ஒருவர் எமக்கு இன்று கீழ் இருக்கும் மந்திரத்தை அனுப்பி இதன் உண்மையை கேட்டார், அவர் இந்த மந்திரம் கிடைத்த தளம் பற்றி சொன்னதும் நாம் அங்கு சென்று பார்த்தோம்,, ஊரை ஏமாற்றும் ஓர் அசாமியின் தளத்தில் இது இருந்தது.. குறித்த நபர் அவரின் குரு இவருக்கு இதை உபதேசம் செய்த்தாக எழிதியிருக்கிறார் முகனூலில்..

நல்ல குருவும் நல்ல மாணவர்களும் என்று சிரித்துவிட்டு இதை உங்களுக்கு பதிவிடுகிறேன்..

"ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலபத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்திரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நம:"

மந்திரத்தில் பாதியைக்காணவில்லை, அத்துடன் அட்சரங்கள் (எழுத்துக்கள்) கூறும் அர்த்தமே மாரிவிட்ட்து.. மந்திரம் எழுதும் சொல்லும் முன் அதன் அர்த்தம் என்ன என்று சொல்லித்தரும் குருவிடம் கேட்டுப்பாருங்கள் பல குருமார் இடம் தெரியாமல் ஓட்டம் பிடிப்பர்கள்.. தாய் மொழியில் கற்பதே கடினமாக இருக்கிறது அதில் வடமொழி மந்திரங்கள் வேறு..

இப்படி எல்லாம் கூட்டம் கூட்டி பேசும் ஆசாமிகளை நம்பி உங்கள் பிறவியை மீண்டும் ஒருமுறை இங்கே எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..

தங்கம் பணம் தருவதாக எத்தனை கடவுளைத்தான் உருவாக்கிவிட்டீர்கள்.. முதலில் இலட்சுமி, விட்ணு, பின்னர் குபேரன் என்ற பேரில் சீன குண்டன் ஒருவன், பின்னர் சொர்ண ஆகருசண வயிரவர்.. இன்னும் சில நாளில் புதிகாக யாராவது கிழம்பும் அபாயம் இருக்கும் என நினைக்கிறேன்..

சிவ அம்சம் என்றால் அது மாயையை அருத்து முத்தியை தருவது,, அவரே உடம்பில் ஒரு துண்டு தங்கம் இல்லாமல் வெரும் உருத்திராட்சம் மற்றும் பாம்பு, தோல் ஆடை என சுடுகாட்டிக் திரிகிறார்.. அவரின் அவதாரம் என்ற பேரில் வயிரவனை உவமைப்படுத்தி அவனிடன் செல்வம் கேட்கும் உங்களை.. எப்படி அழைக்கலாம்..

காவல் தெய்வம் காசுத் தெய்வமானது கவலையாகவே இருக்கிறது..

முக்தி தேடி உங்கள் இருளை நீக்கி பயனிக்க விரும்பும் அன்பர்கள் எம்மை தொடர்புகொண்டால் உங்களுக்கு இந்த சித்தர்கள் சொன்ன சொர்ண வயிரவர் முறைகள் கற்பிக்கப்படும்..

ஆனால் நிச்சயம் நாம் பணம் வாங்கிய பின்னரே கற்பிப்போம்..

பொய்யை கற்க உங்களிடம் பணம் இருக்கிறது என்றால், உண்மையை கற்க செலவு செய்யுங்கள்..

நாம் எமது ஆய்வியல் மையத்தின் மற்றும் ஒன்று சேர்ந்த இணைய குருகுல செயற்திட்டத்துக்காகவும் இந்த ஏற்பாடுகளை செய்யலாம் என இருக்கிறோம்..

விரும்புபவர்கள் ஒன்று சேருங்கள்…

நன்றி..
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Tuesday, September 16, 2014

யாகம் யார் செய்வது...

வணக்கம் தோழர்களே,

இன்றைய பதிவு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன்,... வேதம் ஓதும் அன்பர்களுக்கு கூட இதன் தன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

தொழில் செய்யும் போது இரகசியங்கள் வெளியிடக்கூடாது... எல்லாம் ஊரை ஏமாற்றி பிழைப்பு தேடும் கூட்டத்தின் வேலைகள்.. உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது..

இன்று நம் அரசியல் பிரமுகர்களும், சாமியார்களிடமும் இல்லாத பணமும் செல்வாக்குமா... ஆனால் அவர்களால் நாம் குறிப்பிட்ட அதிக பலன்களை தரும் மகா யாகங்கள் செய்ய முடியாது.... காரணம் இது தான்,,,

அவர்களின் மனைவிகள் அனுமதிக்கவேண்டும் அல்லவா.. இல்லை என்றால் இன்றும் நாம் இந்த யாகங்கள் பற்றி தெரிந்திருக்கலாம்..

உணமையை மறைத்து இன்று கணபதி யாகம், லட்சுகி யாகம் என குட்டி யாகங்கள்,,, எந்த பலனும் இல்லாத பிழைப்புக்காக செய்யும் (வேதம் ஓதும்) யாகங்கள் மட்டும் நடைபெருகிறது..

வேதங்களின் படி பிரமச்சரியம் காக்கும் எவனும் ஓம குண்டத்துக்கு பக்கதில் கூட செல்ல முடியாது.. ஓர் சிறு துரும்பு கூட அக்கினியில் போடமுடியாது..

இன்று காவியை கட்டிக் கொண்டு உங்கள் சாமியார்கள் செய்யாத யாகங்கள் இல்லை.. அதை மேடை போட்டு செய்கிறார்கள் அதற்கு பணம் கொடுத்து நீங்கள் பார்கிறீர்கள்,..

யாகத்தின் முதல் விதி..

யாகம் செய்பவன் ஒருவனாக இருக்கவேண்டும், கூட்டம் கூடி செலவு செய்து யாகம் செய்ய முடியாது,, அத்துடன் யாகத்துக்கு வரும் அணைத்து மானிடர்களுக்கும் அவன் கானிக்கை கொடுக்க வேண்டும், அப்படியே வந்தவர்களை வணங்கி அவர்களிடம் ஆசிகள் வாங்குதல் வேண்டும்..

இன்று உங்கள் சாமியார்கள் செய்வது என்ன,..! அவர்கள் ஓமம் செய்து உங்களுக்கு அருள் தருகிறார்கள்.. யாகம் செய்வதற்கு மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அதை அவர்கள் செய்து, உங்களுக்கு அவர்கள் ஆசி தருகிறார்கள்..

இதை பின்பற்றும் நீங்கள் அறிவாழிகள்... நீங்களே பீர்த்திக் கொள்ளவேண்டியது தான்..

இன்று நடக்கும் யாகங்கள் எதுவும் உண்மையான யாகங்கள் இல்லை... உருத்திர யாகம்.. செய்கிறார்கள்.. அதின் செய்கை, அது ஏன் செய்வது என்று வேதம் ஓதும் வித்துவான்களுக்கு கூட தெரிவதில்லை..

வேதம் படித்த வித்துவான்களே செய்ய முடியாத யாகங்கள்,.. இன்று உங்கள் சாமியார்கள் செய்வது மிக அற்புதம்..

சாதாரன.... காயத்திரி (சாவித்திரி) சுலோகத்தின் விளக்கம் கூட புரியாதா...சாமியார்கள் எல்லாம்... உங்கள் வழிகாட்டிகள்..

பெண்கள் சாமியாரை சுற்றுவதை விட்டு.. கனவனை சுற்றுங்கள்.. ஆண்கள் உங்கள் மனைவியை சுற்றுங்கள்... அது தான் சிறந்த யாகம்..

இன்று மேடை போட்டு பேசும் இந்த சாமியார்கள், மற்றும் குரு மார், மாஸ்டர் மார்... இவர்களை நம்பி உங்கள் பணத்தை செலவு செய்யாது... நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுங்கள்.. சாகும் வரை உங்கள் உடலாவது மகிழ்சியாக இருக்கட்டும்..

நாம் முன்னமே எச்சரித்தோம்.. மீண்டும் வருவோம் என்று.. மீண்டும் எச்சரிக்கிறோம்...

கூட்டம் கூட்டி ஊரை ஏமாற்றுவதை விட்டு.. உழைத்து சாப்பிடுங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

வேதங்களும் யாகங்களும்.. புலால் சீவகாருண்யம்..

வணக்கம் தோழர்களே,

வாசகர் ஒருவர் எம்மிடம் நீண்ட வாதம் ஒன்றை செய்தார், அதாவது புலால் உண்ணுதல் கூடாது என்றும் அப்படி உண்பவன் பேய்க்கு ஒப்பானவன் என்றும், கூறினார்...

எப்போதும் போல நாம் சில கேள்விகள் கேட்டோம், அதற்கு பதில்கள் இல்லை. ஆனால் உண்ணக்கூடாது என்று அதற்கான சாட்சிகள் பல,, சாமியார்களின் புத்தகங்களில் இருந்து பதிப்பிட்டார்.. அதில் திருமுறைகள், கீதை, என பல புராணங்கள், வரலாறுகள் காட்டினார்... அதில் அவரின் அறிவின் தேடலின் வெளிப்பாடான ஓர் கேள்வி இது..

” மகிமை உள்ள பசுவை ரட்சித்து அதன் பாலை கறந்து உண்ண வேண்டும் அல்லாது அதை வதைத்து உண்ணுவது நியாயமோ? அந்த பாலை ரத்தத்தில் இருந்து வந்ததால் அது புலால் என்றால், பசுவை கொன்று உண்ணும் ஊனை போல அதன் மல மூத்திரங்களையும் உண்ணாமல் நீக்குதல் ஏனோ? பசுவின் ஊனும் புலால், பசுவின் பாலும் புலால், அதன் மல மூத்திரமும் புலால் தானே. தள்ளுவன தள்ளலும், கொள்ளுவன கொள்ளலும் பகுத்தறிவாம். உய்த்து உணர்க”

அடியாரின் அறிவு எப்படி என்று பாருங்கள்.. ஓர் சிறு விடயம் சைவத்தில் இருப்பது கூட தெரியாமல் ஆராய்சி செய்ய ஆரம்பித்து, எம்முடன் வாதத்துக்கும் வந்துவிட்டார்..

பஞ்ச கவ்வியம், என்றால் என்ன என்று தெரியாதவன் எல்லாம் இங்கு சமயம் பற்றி பேசுவது ஆச்சரியம் இல்லை, அவமானம்..

நாம் எப்போதும் கூறுவது போல் அடியும் இல்லாமல் முடியும் இல்லாமல் பேசுவதை விடுத்து ஆராய்ந்து படியுங்கள்..

இதற்கு மேல் உங்கள் புலால் உண்ணாமையையும், சீவகாருண்யத்தையும், அதை சொன்ன உங்கள் சாமியார்களையும் வதம் செய்யாமல் இருக்க முடியாது.. முட்டாப் பசங்களே... சாமியார் பக்த்தர்களே.. கேளுங்கள்..

சமயத்தின் அடி தளத்தில் இருந்து உங்கள் வாதங்களை தவடு பொடியாக்கலாம்.. வேதம் இல்லை என்றால் நீங்களும் இல்லை சமயமும் இல்லை..

யசுர் வேதம் என்பது எதைப் பற்றி பேசுகிறது தெரியுமா... முட்டால் சாமியார்களே, முட்டால் குருமார்களே... உயிர் பலி கொடுக்கும் யாகங்கள் பற்றிய் தொகுப்பு... அதில் 30க்கு மேல் கடுமையான சக்திகளை தரக்கூடிய யாகங்கள் பற்றி விவரிக்கப்படுகிறது, அத்தனையும் உங்கள் கடவுளை மகிழ்விக்க செய்யும் யாகங்கள்.. உயிர் பலிகள்..

வேதம் கடவுள் தந்தது என்று மார்பு தட்டி பேசும் அதே முட்டால் பசங்க... இதை படியுங்கள்...

”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” ஆகவே இங்கு வேதம் கூறும் அசுவமேத யாகம் பற்றி பார்க்கலாம்..

அரசன் தனது பட்டத்து ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவான். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போர் செய்து வெற்றியின் பின்னர், அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். இப்படி இந்த யாகத்தை செய்பவன் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுவான்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் பெண் குதிரையை பார்த்து ஆண் குதிரையின் புணர்சி உறுப்பு நீண்டிருக்கும்.

அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரசனின் ராணி (மனைவி)... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.( அங்கு பல விடயம் நடக்கும்) இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதை படிக்க ஒரு மாதிரித்தான் இருக்கும் ஆனால், அசுவமேத யாக ஸ்லோகம் இருப்பது அப்படித்தான்.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...”

இராணி குதிரையுடன் விளையாடும் முறை இது.//

இரவு இப்படி நடந்த பின்னர், நாளை அந்த ஆண் குதிரையை கொன்று அக்கினியில் போட்டு சாம்பலாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.

சமயத்தை மட்டும் பேசினால் போதாது, சமயம் அன்பை போதிக்கிறது என்றால் இங்கு நடப்பது எப்படியான அன்பு...

பசு என்பதற்கு சமசுகிருதத்தில் நான்கு கால் விலங்கு என்று அர்த்தம், இன்று கறவை மாடு என்று ஆகிவிட்டது..

பசு எனும் விலங்கை கறவை மாட்டை போட்டு செய்யும் யாகங்களும் உண்டு.

இராமாயணம் இராமன் பற்றி பேசி மார்பு தட்டும் பலரும் இராமர் எப்படி பிறந்தார் என்பதை பார்க்கலாமா..

அறுபதாயிரத்து மூன்று மனைவிகளை கொண்ட தசரதனுக்கு குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக ருசிய சிருங்கர் முனிவர் வந்தார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். வால்மீகி இராமாயணத்தில் இருந்து..

” Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives. “

விளக்கம்...

தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் (பிராமணர்கள்) இராணி மார்களை புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் இராணிகள் கெற்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்......,

கம்பர், வால்மீகியின் இராமாயணத்தை பிரதி செய்யும் போது (மொழிமாற்றம் செய்யும் போது) கதையை பிரட்டி பேசிவிட்டார்.. கம்பருக்கு ஏன் இந்த பொல்லாத வேலை.. புலவன் பொய் சொல்லுவான் என்பது சரியாகிவிட்டது பார்த்தீர்களா..

” யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கெற்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

இராமாயணம் வால்மீகியால் வட மெழியில் எழுதப்பட்டது, அதை பிற்காலத்தில் தனது புகழ்சிக்காக மொழிபெயர்த்த கம்பர் செய்த கூத்து, இராமாயணத்தை வேறு திசைக்கு கொண்டுபோய்விட்டது..

எதையும் அதன் அடியில் இருந்து தேட வேண்டும்,, அப்போது தான் அதன் முடி கிடைக்கும்..

அதனால் தான் அடி முடி தேடிய கதை இருக்கிறது .. இதை பல முறை நாம் இங்கு கூறிவிட்டோம்..

இப்படி மட்டுமா.. மகா பாரதம் உண்மையின் தத்துவம்... அதையும் பார்க்கலாம்.. தருமன்,, அவன் தரும தேவதையின் மைந்தன் என்று பேசுகிறீர்கள்...

” குருச்சேத்திரப் போருக்குப் பின் தருமன் “சக்கரவர்த்தி” பட்டத்திற்காக அசுவமேத யாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அருச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று யாகம் நடத்தி சக்கரவர்த்தியானான்”

தருமன் செய்த தருமம்... குதிரையை பலியிடுவது மட்டும் அல்ல,, அவன் இரானியை குதிரையுடன் படு.............. செய்திருக்கிறார்ன்,, காரணம் அசுவ மேத யாகத்தின் விதிமுறை அது.

ஒன்றையும் முழுமையாக படிப்பதில்லை.. வந்துட்டாங்க பேசி விளையாட... முட்டாப் பசங்க...

மேலும்...

“ சாதவாகன அரசர்களில் மூன்றாவது மன்னரான முதல் சாதகர்ணி தனது ஆட்சி எல்லைப்பகுதியை தக்காணத்தின் வடக்குப்பகுதியில் நிலை நிறுத்தியதோடு அல்லாமல் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். இதற்காக இரண்டு அசுவமேத யாகம் நடத்தியதாக அறியப்படுகிறது”

உங்கள் அறிவு கெட்ட அறிவை வேறு இடத்தில் வைத்துக் கொள்(ல்)ங்கள்... இங்கு விளையாட வேண்டாம்... நுணிப்புல்லை மேய்ந்த ஆடுகள், காடு இப்படித்தான் இருக்கும் என்று கூறியது போல்... உங்கள் சாமியார்களை அவர்களின் முகங்களை அவர்களின் கோமனத்தால் மூடச் சொல்லுங்கள்...

” சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.”

திருமணம் செய்வது பற்றி வேதம் என்ன கூறுகிறது என்று தெரியுமா.. அல்லது வேதம் ஓதும் அந்தனர் சொல்லும் மொழிதான் புரிகிறதா.

“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... ”

மாட்டை வெட்டித்தான் திருமணம் செய்ய வேண்டும்...

கிரிகொரஹ யாகம் சொல்வதை பாருங்கள்..

இந்த யாகத்துக்கு வர மர அணில் இறைச்சி, குரங்கு இறைச்சி உற்பட 3 வகையான இறைச்சியும், 3 சிரட்டை இரத்தமும் இரு வகையான பூக்களும் தேவைப்படுகின்றது.

என்ன முட்டாப் பசங்களே... கற்றது கையளவு என்பது ஞாபகத்தில் எமக்கு இருக்கிறது... உங்களுக்கு எப்படி...

இதையும் தாண்டி மனித உயிரை பலி கொடுக்கும் யாகம் யார் செய்த்து என்று பார்த்தால் உங்கள் சாமியார்களையும் உங்கள் குருமாரையும் வெட்டி போட்டு உங்கள் யாகத்தை செய்ய் வேண்டும்.

சமயம் என்ற பேரில் நீங்க செய்தது என்ன இப்போது செய்வது என்ன.. ஆனால் நாம் மாற்றிப் பேசுகிறோம்,.. என்று எம்மிடம் சொல்லுகிறீர்கள்..

சந்தியத்துக்காக வாழ்ந்தவன் அரிச்சந்திரன் என்றுதான் உங்களுக்கு தெரியும். அவனின் சத்தியம் என்ன என்று பார்க்களாம்..

அரிச்சந்திரன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று ” நர மேத யாகம்” செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் சீவகாருண்யத்தையும், புலால் உண்னாமையையும்.. எவன் சொல்கிறானோ... அவன் சைவத்துக்கு எதிரியானவன் என்கிறது வேத மந்திரங்கள்...

சமயம் செய்த கடவுள் சொன்னது பொய்,,, கடவுள் இருக்கிறார் என்று பூச்சாண்டி காட்டும் உங்கள் சாமியார்கள் உண்மை... என்னங்கடா உங்க அறிவு...

உங்கள் சாமியார்களின் சுயலாபத்துக்காக பேசிய விடயங்கள் உங்கள் முட்டால் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.. அது பகுத்தறின் ஞானத்தில் இருப்பவனுக்கு தூசியிலும் சிறியதே...

முட்டால் பசங்க என்று நாம் கூறியது யாரை என்று முட்டால் பசங்களுக்கு புரிந்தால் சரி...

இனியாவது கடவுள் என்ற பேரில் சாமியார்களிடம் கைகட்டி தலை குனிந்து நிற்காமல்,,, உங்கல் உடலை காக்கும் உண்மையான வழிகளை தேடுங்கள்..

மேடைகளில் சாமியார்கள் பேசினால் அவர்களிடன் கேள்விகள் கேளுங்கள். பூம்பூம் மாடுகள் போல் தலையாட்டாமல் சிந்தியுங்கள்..

எமது பதிவுகள் பலரும் பிரதி செய்து வியாபாரம் செய்வதாகவும் பல தகவல்கள் சாட்சிகளுடன் எமக்கு கிடைத்தவண்ணம் இருக்கிறது. நிறுத்திக் கொள்ளுங்கள்..

விரைவில் முக நூல் தனிப்பயனாக்கப்படும். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அழைக்கப்படுவர்...

” முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, September 11, 2014

சுத்த உணவு, அசுத்த உணவு

வணக்கம் தோழர்களே,

உணவுகளை உடம்புக்காக சாப்பிட வேண்டும், கடவுளுக்காக சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் தான் நான் வருவேன் என்றால் அது கடவுளும் இல்லை..

இங்கு உங்கள் பார்வைக்கு சில பதார்த்த குண விளக்கம். சுத்த உணவுகளாக இருக்கும் (பலர் புலால் என ஊரை ஏமாற்றும் உணவு) அவற்றின் குணபாடமும், அசுத்த உணவாக இருக்கும் (பலரின் சைவ) உணவும் இங்கு உதாரணப்படுத்தியிருக்கிறேன்,,..

தயிர் சாதம் இன்றுடன் இருக்கும் இடம் இல்லாமல் போகட்டும், உடல் ஆரோக்கியம் வளரட்டும்.

இவை எமக்கு தேவையற்றது தான் இருப்பினும் சாட்சிகளோடு மட்டுமே நாம் இங்கு எதையும் பதிகிறோம் என்பதை வாசகர்கள் புரிய வேண்டும்,, இந்த உண்மைகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும், அதன் மூலம் இந்த போலிச் சாமியார்களையும் போலி சமய சம்பிரதாயங்களியும் உடைக்க வேண்டும். 

மக்களுக்கு தேவை நோயற்ற வாழ்கை அதுவே பெரும் செல்வம். அதற்கு தடையாக இருக்கும் இந்த சமயம் சார்ந்த விடயங்களை விட்டு ஆரோக்கியமாக வாழ வழி தேடவேண்டும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, September 10, 2014

பரிபாசை

வணக்கம் தோழர்களே,,

இங்கு பலருக்கும் நாம் பல முறை தெரிவித்திருக்கிறோம், இங்கு பதியப்படும் விடயங்கள் எதுவும் சாட்சிகள் இல்லாமல் பதியப்படுவதில்லை என்று, அதே போல் ஒவ்வொறு பதிவிலும் அதற்கான சாட்சிகள் சித்தர்களின் இலக்கியங்களில் இருந்து பாடலாக தந்திருக்கிறோம்..

பரிபாசை புரியாத காரணத்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிவது போல் அல்லது விளக்க உரைகளை படித்து அதன் படி பேசுவதானால் அல்லது பின்பற்றுவதானால் தாறாளமாக பின்பற்றலாம். ஆனால் தவறானவற்றை பின்பற்றி நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை..

திருமந்திரத்தில் அணைத்துவிடயமும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாலர்கள், அதற்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்கள் பல முனைவர்கள்.

ஒரு விடயத்துக்கு விளக்க உரை எழுதுவதானால் அதன் விளக்கம் நன்றாக ஆசிரியருக்கு புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. அப்படி திருமந்திர விளக்கம் புரிந்திருந்தால் அதற்கு விளக்க உரை எழுதியவர் முதல் அதை படித்தவர் வரை யாரும் திருமூலரின் ஆயுளில் நான்கில் ஒரு பங்கு கூட வாழவில்லை.... ஏன்.. உங்களுக்கு திருமந்திரத்தின் தத்துவம் புரிந்துதானே அதற்கு விளக்க உரை எழுதினீர்கள், அதில் உங்கள் ஆயுளை நீடித்து பெரு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து விடயமும் இருக்கிறது, அப்படி அதில் இருக்கும் உபாயம் ஏன் உங்களுக்கு பலன்தரவில்லை..
ஏன் நீண்ட நாள் வாழவில்லை, ஏன் நோயற்ற வாழ்கை கிடைக்கவில்லை..

புரிதல் என்பது ஒவ்வெறுவருக்கும் தனித்துவமானது அதில் தவறு இல்லை, ஆனால் புரிதலின் பலன்கிடைக்கவேண்டும் அல்லவா..

ஆயிரம் ஞானிகள் ஆயிரம் முறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் காலத்தை கடந்து வாழ்ந்த பெருமை சித்தர்களுக்கு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் பேர் ஆயிரம் வழியை கூறினார்கள் ஆனால் அவர்கள் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்த வரலாறு இல்லையே, சித்தர்களுக்கு இருக்கும் வேறுபாடு அதில் தானே மறைந்திருக்கிறது, பதிணெண் சித்தர்களும் ஒரே வழியை மட்டுமே கூறுகிறார்கள், அது மறை மொழியாக உலாசுகிறது இங்கு.

ஒரு விடயத்தை ஆராய முட்பட்டால் அதை அடியில் இருந்து தேடவேண்டும். அதற்கு பெயர்தானே அறிவு. அதனால் தான் அடியை தேடியவன் முடியை கண்டான் என்றார்கள். சித்தர்பாடல் என்றால் பரிபாசை மறைப்பு என்று தெரிந்தபின்னும் அதன் தன்மையை ஆராயாமல் அப்படியே எடுப்பது எந்த பலனும் தரப்போவதில்லை என்பதே எமது கூற்று.. அதனால் தான் சிந்தியுங்கள் என்று உங்களை சொல்வது..

ஓர் விடயத்தை இது தான் என ஏற்றபின் அதன் உண்மையை உணர, ஏற்க மனது தடை செய்வது இயல்பே, அதை மீறி தேடினால் அதுவே அறிவு..

உதாரணமாக பூமி தட்டையானது என்று கூறப்பட்டு எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நம்பப் பட்டு வந்தது, ஆனால் அதில் நம்பிக்கை அற்ற நிலையின் தேடலினால் தானே அது பொய் என நிறூபனமானது. இப்படி காலத்தால் பல விடயங்கள் அப்படியே ஏற்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவை சரியானதா என ஆராயவே நமக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

சித்தர்பாடல்கள் (இலக்கியங்கள்) பாரம்பரியமானவை வம்சாவழியாக பாதுகாத்து வரப்பட்ட பொக்கிசங்கள், அதை மறைவாகவே வைக்கும் படி சித்தர்களே கூறியதன் விளைவாக அவை மறைவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து வந்தன. காலத்தின் தேவை அவை இப்போது வெளிவரத்துவங்கி 100 ஆண்டுகள் இருக்கும்.. வெளி வராதவை இன்னும் பல உண்டு.

மறைப்பதற்கு காரணம் இல்லை எனில் அதை அவர்கள் மறைக்க சொல்ல வேண்டிய தேவையும் இல்லை, அப்படி அதில் இருக்கும் உண்மைகள் புரிவதற்கு இலகுவானதாக இருந்திருந்தால் அதை பாதுகாத்து வந்த வம்சாவழிகளும் சித்தர்களாக மாறியிருப்பர்.

இதைத்தான் சிந்திக்க சொல்வது நாம் உங்களை..

காவி கட்டிக் கொண்டு சொல்வது எதுவானாலும் அது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் சித்தர்களுக்கும் இல்லை.. ஆகவே அவர்கள் அறுதியிட்டு கூறிய விடயம் எது என ஆராயவேண்டும், பதிணெண் சித்தர்கள் வரிசை தொடராத காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இன்று சாமியர்கள் வரிசைகள் தொடருகிறதே..

பதிணெண் சித்தர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என ஆராய வேண்டும், அப்போது தான் அவர்களின் வரிசை தொடராத காரணம் புரியும்.. அப்படி ஆராயத் தொடங்கினால் கிடைப்பது ஒன்றே.. அதை மீறிய எவரும் சித்தர்களாக கருதப்படவில்லை.

சித்தர்களின் வாழ்வியலைப் பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்கள் கூறும் உண்மைகள் என்ன என்ற ஆய்வுகளையும் செய்ய வேண்டும்,, அவர்கள் கூறுவதுவும் அதுவே..

நாம் இங்கு எமது கொள்கைகள் என்று எதையும் யாரையும் பின்பற்ற கூறுவதில்லை, சித்தர்களின் இலக்கிய அறிவின் பின்னனியில் இருக்கும் இரகசியம் என்ன என்ற ஆய்வுகள் செய்து அதன் தெளிவுகளை நீங்களும் ஆராயுங்கள் என்று சொல்லுகிறோம்.

மறைப்பாக வைக்கும் படி சித்தர்கள் அவர்களின் நூல்களை சொல்லுகிறார்கள் என்றால், அதன் உண்மையை மறைக்க எத்தனை விதமாக அவர்கள் பேசி இருக்க முடியும்.. நாம் ஆராயவேண்டியதும் புரிய வேண்டியதும் பதிணெண் சித்தர்களின் ஒற்றுமை எதில் இருக்கிறது என்பதை.. சித்தர்கள் விஞ்ஞானிகள் என்று பேசுவதோடு நிறுத்தக் கூடாது ஓர் விஞ்ஞானி எதை எப்படி செய்வான் என்ற சிந்தனையும் வேண்டும், சாட்சிகள் இல்லாமல் உணர்வாக அறிவது விஞ்ஞானத்தின் நோக்கம் அல்ல, சித்தர்களின் நோக்கமும் அல்ல. சித்தி பெற்றார்கள் என்றால் எதில் என்று தெரிய வேண்டும் ஆராய வேண்டும்.

கடவுளை நாம் தேடுவது எதற்காக என்ற தெளிவான அறிவு இருந்தால் இந்த ஆய்வுகள் இலகுவாக இருக்கும்.. அல்லது கடினமே..

ஆசையை துறந்து கடவுளை நாட வேண்டும் என்கிறார்கள்.. ஆசையை வரிசைப் படுத்தினால் அதில் பெரியது சிறியது என பிரிக்கலாம். இங்கு பெரிய சக்தி என்பது கடவுள் அதை காணவேண்டும் என்பது தான் மிக பெரிய ஆசை.. ஆனால் ஆசைகள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.. இந்த கூற்று சரியானது அல்ல என்றால்.. என்னை குறைகூற வரிசையாக வருகிறீர்கள்.. சிற்றின்பம் பேரின்பம் என வகைப்படுத்தி பேசுகிறார்கள்.. இரண்டிலும் இன்பம் தானே இருக்கிறது.. அதில் என்ன சிறிது பெரிது.. பசிக்கும் போது உணவு சுவையற்றது.. அதன் சுவை நமது பசியின் வேகத்தைப் பொருத்து பேசப்படும்.. மொத்தத்தில் பசியின் நிலையை பொருத்தே சுவையின் அளவும்.

சைவம் என்பது என்ன என்று ஆராய்வது இல்லை, ஆனால் சைவர்கள் என்பது.. கேட்டால் சமயம் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் பல விடயங்களை, எத்தனை விடயத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்..தமிழர் என்பது,, இங்கு எத்தனை பேரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேர் வைத்திருக்கிறீகள், தமிழர் என்பது,, உங்கள் கலாச்சார ஆடைகலையா அணிகிறீர்கள் ( நாமும் தான்).. ஆலயத்துக்கு செல்லும் போது கூட சில விசேட நாட்கள் என்றால் மட்டும் தானே.. முன்னோர்கள் சொன்ன விடயங்கள் அனைத்தையும் இங்கு யாரும் பின்பற்றுவதில்லை, அவரவர் வசதிகளுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம்.

கடவுளைப் பற்றி பேசுவதானால் கூட அப்படியே.. இன்று இருக்கும் ஆலயங்களின் பெயர்களை பாருங்கள் அமைப்பை பாருங்கள்.. முன்னோர்களின் ஆகம விதிக்கு அமைப்பதாக இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் ஆலயங்களை இடித்து மூடவேண்டும்..

நம்பிக்கை என்ற பேரில் எதையும் செய்வது அவரவர் விருப்பம், எமது ஆய்வுகளின் தெளிவுகளை பேசுவதும் எமது விருப்பம்.. உண்மையை ஆராய விரும்பம் இருந்தால் ஆராயுங்கள்.. இல்லை நாங்கள் உணர்வதே கடவுள் என்றால் மகிழ்சியாக கடைப்பிடியுங்கள்..

புலால் உணவு என்பது எதை வைத்து பிரிக்கப்படுகிறது என்றால் அது தொடர்பாக எந்த தெளிவும் இங்கு யாரும் கூறுவதில்லை, கேட்டால் தாவரம் அல்லாதது என்பார்கள்.. அடியும் முடியும் தெரியாமல் பேசுவது பூசைக்கு செல்லாது..

” சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை,
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி,
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு,
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே.”

விளக்கம்.. சைவர்கள் என்று சொல்லும் வாக்கியம் கேட்டிருக்கிறாராம், ஆனால் சைவர்களை கண்டதில்லையாம். இறைச்சி புலால் சாப்பிடுவதில்லை என்று கூறுவார்கலாம், அவரவருக்கு ஏற்ப காரணம் சொல்லி பிதற்றி திரிவார்கலாம், தினமும் கொலைசெய்து புலால் தின்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கலாம்.. ( மகிழ்சியடைய வேண்டாம்)

” கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா,
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி,
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா,
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் பட்டிமாடே.”

விளக்கம்.. பலபல சாதிகள் கூறி அதிலும் பிராமணர் என்ற சாதியாம், சைவத்தை மாற்றிப் பேசி ஆகமம் என்பார்கள் மகத்துவம் இருக்கு என்பார்கள், கண்டபடி வேதம் பற்றி பேசி உலகில் அனேகம் பேர் பிழைக்கிறார்கலாம், ஆறுதலம் யோக நிஷ்டைகள்(உச்சிமுதல் பாதம்வரை சக்கரம் என்பது) சிறப்பாக செய்பவர்கள் பட்டியில் கட்டிய மாடுகலாம்.

” மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா,
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்,
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி,
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே,

விளக்கம் .. மாட்டுக் கூட்ட மனிதர்கள் உலகத்தில் சாதி கெட்ட சைவர்கலாம், கோடான கோடிப் பேர் சைவர் என்று சொல்லி கேட்டிருக்கிறாராம், மாமிசத்தை தின்பவன் பாதிப் பேர், நெய்குடிக்கிறவன் பாதிப்பேர், சுத்தமான தயிர் சைவமாடா.. ஆனால் அது சைவம் என்று நம்புவாங்கலாம்.

”நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்தர்களுஞ் சொல்லவில்லை,
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை,
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா,
தும்பியுடன் பிரம்மகுல சாத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே.”

விளக்கம்.. நம்புவதற்கு சைவம் என்று ஒன்றும் இல்லையாம், நாதாக்களும் (சான்றோர்கள்) சித்தர்களும் சைவம் என்று ஒன்று சொல்லவும் இல்லையாம், வம்பான விடயம் அது என்று மறைத்தார் சைவத்தை பற்றி பேசாமல் விட்டார்கள், சுவையான புலால் தின்னாதவன் இங்கு எவனும் இல்லையாம், ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிடுவானாம் சூத்திரன், குடும்பி கட்டின பிராமணர்கள் (வேதம் படித்தவர்கள்) தூசு துப்பரவாக நெய்யும் மோரும் சாப்பிடுவாங்களாம்.

” குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்,
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை,
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்,
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே.”

விளக்கம்.. பால் தயிர் மோர் நெய் சாப்பிடுவாங்கலாம் ஆனால் இறைச்சியை நீக்கிட்டாங்கலாம், நடிப்பாக சைவம் என்று சொல்லல் ஆகுமோ, நாதாக்கள் இதை கைமறைப்பாய் காட்டவில்லையாம், எல்லா சாதிக்காரனும் புலால் சுவையாக சாப்பிடுவானாம், மாமிசம் என்பது அடிப்படை மட்டுமாம், ஆனால் நெய் என்பது என்ன மேல்மிதற்குது அடுத்த பாடலில்.

” நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று,
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல,
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ,
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே.”

விளக்கம்.. நெய் என்பது கொஞ்சம் இல்லை, எட்டுப்பங்கு நெய் சேர்ந்தால் தான் ஒரு பங்கு இறைச்சி கிடைக்குமாம், அடிப்படையாக கிடைக்கும் மாமிசத்தை (இறைச்சியை) தின்பவன் சைவனாம், சுத்தமான நெய் தின்பவன் சைவன் அல்லவாம், மாமிசத்தில் நெய் இல்லையாம், இரத்தமானது சுண்டி (இறுகி வற்றி) அது பாலாகி பாலில் இருந்து வந்த நெய்தான் இறைச்சியைக் காட்டிலும் கொடியது.

”அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு,
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு,
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ,
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே.”

விளக்கம்.. அதிகமாம் காய்கறியில் புழுக்கல் உண்டாம், இலைகளில் புழுவும் உண்டாம், அதிகமாக தண்ணீரில் புழுக்கள் உண்டாம், கண்ணால் காணாத எச்சிலும் மலமும் தண்ணீரில் உண்டாம், சுத்தம் என்பது எதில் உண்டு.. சுகமுண்டா சைவத்தில் அதிகம் உண்டா, இங்கு பொய்யான சைவர்கள் தவிர்த்து உன்மையான சைவர்கள் இல்லை என்கிறார்..

” கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு,
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்,
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்,
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே.”

விளக்கம்.. உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் சீரழிந்து சைவம் கெட்டு, எழிலான பிறவியாம் இந்த சைவர்கள் என்று நம்புறார்கலாம், தொட்ட பொருள் எல்லாம் சைவம் இல்லையாம், இங்க இருக்கும் எல்லாரும் புலால் தின்பவர்தானாம், நீதிமுறையாக அவரின் குரு காலங்கி நாதர் சாட்சியுடன் கூறிய நூலாம் இது.

புலால் பற்றிய சந்தேகம் இருப்பவர்கள் பதிணெண் சித்தர்களை நாடி அவர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இது காலங்கி நாதர் சொன்ன விடயம்.. நாம் சொன்ன விடயம் அல்ல அர்பர்களே..

உங்கள் சீவகாருண்யம் இந்த புலால் உணவை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.. இங்கு புலால் அல்லாத விடயமே ஒன்றும் இல்லாத போது எங்கிறுந்து வந்தது இந்த சீவகாருண்யம்.

”கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை”

இங்கு ஒருவரும் நிரந்தரம் அல்ல..

“உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு,
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல,
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்,
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே.”

குட்டி விளக்கம்.. பெரிசா படிச்சு கரைகண்ட வித்துவான் போல பேசி சித்தர்கள் போல இருப்பாங்கலாம்.. இவங்களைப்பார்த்து தேவரும் முனிவரும் சிந்திக்கைறமாதிரி இருக்குமாம்..

“பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே”

குட்டி விளக்கம்… கதைகட்டுறதுல வின்னர்கலாம்.. பொய் எல்லாத்தையும் உண்மைபோல் சொல்லுவாங்கலாம்…

“ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை”

தத்துவங்களையும் தியான மார்க்கங்களையும் உறுதியானது என்று சான்றோர்கள் சொல்லவே இல்லையாம்..

” உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே”

குட்டி விளக்கம்.. இவர்கள் இங்கு கூறும் கதைகள் எல்லம் பொய்யாம்.. அவர் உலகை சுற்றி பார்த்து உண்மையை அறிந்தாராம்.

இந்த விளக்கங்கள் ஓரள்வுக்கு புரியும் என நினைக்கிறேன்,,

சித்தர்கள் பாடல்களை படித்தால் மட்டும் போதாது, அதன் நுணுக்கங்கள் தெளிவாக ஆராய வேண்டும்.. ஒரு சில புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு அதன் உரைநடையை படித்து பதில் பேசக் கூடாது..

” விட்டகுறை இல்லாட்டால் தொட்டாலும் வாராது,
தொட்டகுறை இல்லாட்டால் சுட்டாலும் வாராது”

இது சித்தர்களின் வாக்கு.. அவர்களை புரிதல், அவர்களின் அறிவை ஆராய்தல் என்பது இலகுவானதாக இருக்காது.. காலத்தால் பழகிய விடயங்கள் நம்மை மாற்றத்துக்கு கொண்டு செல்ல விடாதுதான்,, ஆனால் அதை மீறி உழைக்க வேண்டும், தேட வேண்டும்.. அப்போது தான் எது இன்பம் என்பது புரியும்..

சித்தர்கள் இலக்கியத்தில் அவர்கள் அறுதியிட்டு கூறும் விடயம் என ஒன்றும், அறுதியில்லாத விடயங்கள் பலவும் உண்டு. அவற்றை தேடி ஆராய்ந்தால் காலத்தை வெல்வது இலகுவாக இருக்கும், எது அவர்கள் கூறும் ஒன்றான விடயம் என்பதுவும் புரியும்..

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

இதற்கு விளக்கம் முன்னரே நாம் பேசியிருக்கிறோம் ஆனால் இதை ஒரு தோழர் இன்று எமக்கு பலியிடலுக்கு எதிரான பாடலாக இதை காட்டியிருக்கிறார்..

இதில் வாசியும் வேண்டாம் வாயுவும் வேண்டா, மந்திரமும் வேண்டாம் என கூறும் அகத்தியர் எதை வேண்டுமென கூறவில்லை என்று சிந்திக்கவே நாம் சொல்கிறோம்..

பலியிடல் வேண்டாம் என சொல்லுவதற்கு இதை காட்டும் நீங்கள், ஏன் ஆலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும் இதை சொல்லி நிறுத்தலாமே.. ஆலயங்களில் இருக்கும் குருக்கள் மார்கள் மனது செம்மையாகாதவர்கள் என்றால் ஏன் அவர்களிடம் போய் அர்சணை செய்ய சொல்கிறீர்கள்.. புரியாமல் பேசினால் இப்படித்தான்…

மனம் என்றால் பொய் என்று அல்லவா அர்த்தம்.. காரணம் அப்படி ஒன்றும் உடலில் இல்லை..மனம் என்பது அறிவின் மறு பெயர், அறிவு செம்மையானால் என்று படித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்..

பரிபாசை என்பது சித்தர்களின் உண்மையை மறைக்கும் சொல், ஆகவே அவை எப்படி இருக்கும் என்று ஆராய வேண்டும் அல்லது உண்மையான குரு மூலம் கற்க வேண்டும்.. கைலாயம் என்றால் இமய மலையை பேசும் உலகத்தாருக்கு பரிபாசை புரிதல் கடினமே.. மேரு என்றால் சிறி சக்கரம் வைத்து பூசை செய்பவர்களுக்கு பரிபாசை புரிதல் கடினமே… தியானம் என்றால் சம்மனம் கட்டி கண்களை மூடி வாய் முனுமுனுக்கும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

”நட்டல் கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” என்று கடவுள் உள்ளுக்கு இருக்கிறார் என்று பேசும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

ஆலயங்களில் மூல விக்கிரகமாக கல்லைத் தான் வைக்கிறார்கள்.. அது எந்த பெரிய பணக்காரன் கட்டிய ஆலயமாக இருந்தாலும் சரி.. ஏன் தங்கத்தில் வைப்பதில்லை.. சிந்திக்க மறந்த கூட்டம்… எதை அபிசேகம் செய்து குடித்தாலும் மூல விக்கிரகத்தின் அபிசேகம் மட்டும் அதிக விசேடமாக கருதுவது ஏன்..

கடவுள் கல்லினுள் தான் இருக்கிறான் ஆனால் கல்லாக இல்லை… கடவுள் இருக்கும் கல்லை காண்பது கடினமே..

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பாட்டி, ஆனால் இங்கு கற்கையே பிச்சை எடுக்கத் தானே…

ஆயிரம் வழிகளை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றில் மட்டுமே ஒத்துப் போகிறார்கள் அது எது என்பதை புரிந்தால்.. அவர்கள் கூறிய கடவுள் யார் என்ற உண்மை தெரிய ஆரம்பிக்கும்..

ஆயிரம் வழிகள் இருப்பதாக கூறுவது பரிபாசையின் வெளிப்பாடு.. ஒன்றை அப்படியே கூறிவிட்டால் நடப்பது எதுவாக இருக்கும் என்ற சிறு சிந்தனை கூட இல்லாதவர்களையா நாம் சித்தர்கள் என்று கூறப்போகிறோம், அல்லது அவர்கள் கூறியதை ஒப்புக்கொண்டிருப்போமா.. காலத்தை தாண்டி பேசப்படுபவர்கள் அவர்கள் தானே..

கடந்த சில நூறாண்டுகளில் வந்த மகான்கள் அவதார புருசர்கள் யோகிகள் என கருதப்படும் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்துகாட்டவில்லை, அவர்கள் சராசரி மனித வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள்.. குறிப்பிட்ட காலத்தை தாண்டி அவர்களால் பயனிக்கவே முடியவில்லை, மூப்பெய்தி இறந்தார்கள்.. அவர்கள் மிக நல்ல எண்ணம் படைத்தவர்களாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவியவராக இருக்கட்டும், சமுதாயத்தை நல்வழி படுத்த முயன்றவராக இருக்கட்டும், ஆனால் அவர்கள் சித்தர்கள் அல்ல, பாடல் பாடுபவன் எல்லாம் சித்தன் அல்ல.. ஆயிரம் வழிகளை காட்டுபவன் எல்லாம் சித்தனும் அல்ல. அவர்கள் முயற்சி செய்தார்கள் கடவுள் என்ற ஒன்றை அடையவேண்டும் என்று, அதற்கு அவர்கள் ஒவ்வொறு முயற்சியும் செய்தார்கள், முயற்சியில் வென்றார்களா என்பது தான் கேள்வி.. வென்றிருந்தால் அவர்கள் காலத்தை கடந்து சாதனை செய்திருக்கலாம்.. நாட்டின் நிலையை மாற்றியிருக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றது சிந்தனையை அமைதியை தரக் கூடிய சில பயிற்சிகள் மட்டுமே.. அதை தாண்டி அவர்கள் செய்த சாதனைகள் என்ன என்று யாராலும் பட்டியல் இட முடியுமா.. அந்த சாதனைகளுக்கும் கடவுளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா..

அன்பே சிவம் என்பார்கள், அன்பை வரைமுறைப்படித்திப் பாருங்கள்.. நீங்கள் செய்த வேலைக்கு சரியான கூலிதராத முதலாலியிடம் உங்களுக்கு இருப்பது அன்பா.. உங்கள் அன்பை அட்டவனைப்படுத்திப் பாருங்கள்.. எத்தனை சிவம் அதில் இருக்கிறது என்று..

உலகம் மாயையின் வடிவம் என்கிறீர்கள், மாயை என்பது தானே பரிபாசை.. அதை சரியாக புரிந்தால்….. நீங்கள் பிறந்த காரணம் தெரியவரும்…

உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம்,.. எமது தளத்தில் நாம் பதிக்கிறோம்.. உங்களை பின்பற்றச் சொல்லி நாம் கூறவில்லை.. முடிந்தால் ஆய்வு செய்யுங்கள்.. உண்மையை தேடுங்கள்.. உண்மையை தேடும் வாசகர்களுக்கு இது புரிந்தால் போதும்..

மாற்றம் என்ற சொல்லை விட மற்ற எல்லாம் மாறும்..

“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
புகைப்படம்: வணக்கம் தோழர்களே,, 