மூலிகை சாப நிவர்த்தி பற்றி பல வலைத்தளங்களிள் விளக்கப்பட்டு முறைகளும் தரப்பட்ட நிலையில் இங்கு நான் பயன்படுத்தும் முறையை உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்.
பலரும் கூறுவது போல் இது ஒன்றும் கடினமான வேலை இல்லை. இந்த மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி சித்தி செய்ய தேவையில்லை. அன்றாடம் நீங்கள் காலையில் பூசைக்காகவோ அல்லது கடவுளுக்காகவோ பூக்களை பறிக்கும்போது இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்து வணங்கி பின்னர் பூக்களை எடுக்கவும். நடைமுறையில் இதை கடைப்பிடித்தால் எப்போதும் எங்கேயும் நீங்கள் பூ காய் பழம் மரம் செடி கொடி என எதை பறிப்பதானாளும் இது உங்களது மனதில் வந்துவிடும்.
காப்பு கட்டி உபதேசம் செய்து பெலி கொடுத்து மூலிகையை பிடுங்குவதானாள் அதற்கு சில முறைகள் உல்லது அதையும் விளக்கியுள்ளேன்.
கன்னி நூலால் காப்பு கட்டி எடுப்பது என்பது தாமரை மொட்டு உள்ள (பூக்கும் முன் - தாமரைக்கன்னி) தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றி கட்டுவது.
மஞ்சல் நூலால் காப்புகட்ட வேண்டும் என்றால் மேற்படி எடுத்த நூலை பச்சை மஞ்சலை அறைத்து அதில் கன்னி நூலையிட்டு பிறட்டி பின்னர் உலர்த்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
இது தவிர சில இரகசிய முறைகள் மாரண மந்திர பிரயோகங்களின் போது தேவைப்படும் இது பற்றி பின்னர் தேவை ஏற்படின் பார்க்களாம்.
உபதேசம் என்பது அதற்கான தீட்சையை செய்வது. இது அனைவராலும் செய்யமுடியாது காரணம் தீட்சை வழங்குபவர் குறைந்தபட்சம் அவர் சமய தீட்சையாவது பெற்றிருக்கவேண்டும். அப்படி இருப்பின் சிகப்பு சீலை ஒன்றினால் தன்னையும் செடியையும் மூடிக்கொண்டு குறிப்பிட்ட மந்திரத்தை மூன்று முறை உபதேசிக்கவும்.
பெலி கொடுத்தல் என்றால் குறிப்பிட்ட ஒன்றினை இரும்பு அல்லாத ஆயுதத்தாள் அறுத்து மூலிகையின் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் வீசுவது. இதற்கான காரணம் குறிப்பிட்ட மூலிகையை காவல் செய்து வந்த தேவதையை அதிலிருந்து விலக்கி நமது தேவைக்கான தேவதையை அதிலிருத்துவது.
குறிப்பிட்ட ஒன்றினை பெலிகொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள் அதை அருத்தெரியவும் இல்லாத போது பொதுவில் தேசிக்கணியை உபயோகிக்கவும்.
இது மிகவும் இரகசியமான முறை, பாரம்பரிய சித்த வைதியர்களிடம் மட்டுமே கிடைக்கும் தகவல். அது மட்டுமின்றி இக்குறிப்புக்களை ஏடுகளிளோ அல்லது வாகடங்களிளோ கான்பது மிகவும் கடினம். இந்த பதிவுகலை தயவு செய்து பிரதி பன்னி வெளியிடவேண்டாம்.
உண்மைத்தகவல்களை வெளியிடுவதெ எனது நோக்கம் அதை மனதில் வைத்து நீங்களும் செயட்படவேண்டும்.
சாப நிவர்த்தி செய்ய முதலிள் கலசத்தில் சலம் அரட்டிய நீரை பயன்படுத்தல் வேண்டும் அந்த விபரம் முன்னமே தந்துள்ளேன்.
கலச நீரை மூன்றுமுறை மூலிகையில் தெளித்து பின்னர்.
சாப நிவர்த்தி
ஓம் பூமியே பூமாதேவித்தாயே பூமியில் உள்ள புல் பூண்டுகள் எள்ளாம் என்கை வசமாகவே சுவாகா.
ஓம் அவ்வும் அகத்தியர் சாபம் நசி நசி சங்கரனார் சாபம் நசி நசி சுக்கிரீபர் சாபம் நசி நசி நான் செய்யும் மருந்து மந்திர இயந்திரங்கள் சித்தி சித்திக்கவே சிவாகா.
உரு 3 முறை தினமும் பயன்படுத்தவும்.
உபதேசம்
ஓம் ஆதிமூல பரமேஸ்பராய நம உபதேசி பரமகுருவே வா வா சிவாயா.
இது இவ்வாறு வெளியிடக்கூடிய மந்திரம் அல்ல இருப்பினும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தள் எழுதியுள்ளேன். பெரியவர்கள் என்னை மண்னிக்கவேண்டும்.
பெலி கொடுக்க
ஓம் ஆ ஈ ஊ ஏ ஐ எனும் ஐந்தெழுத்து பஞ்சாட்ஷரத்தின் ஆணை பெலி நீ ஏற்கவே சிவாகா.
இது தேசிக்கணியை அறுக்க.
முப்பெலி தொடர்பான விளக்கங்களை பின்னர் பார்க்களாம்.
முகிலியை பிடுங்கும் போது
ஓம் முகிலி சிவ முகிலி சிவ பஞ்சாட்ஷர முகிலி உன்னை நான் நம்பினேன் என்னை நீ கார் கார் முகிலி சிவாகா
இதை கூறியபடி பிடுங்கவும்
முகிலியின் குறிப்பிட்ட பகுதியை எடுக்கவேண்டும் என்று இருந்தால் அதை எடுக்கவும். இல்லாத இடத்து வடக்கு வேர் எடுக்கவும். இரும்பு அல்லாத அயுதத்தை பயன்படுத்தவும்.
மாந்திரீக வேலைக்காக எடுக்கும் போது தனியாக இருக்கும் முகிலியை தனியாக சென்று எடுப்பது மிகவும் பலனுள்ளதாகும்.
முகிலி எடுக்கும் காலம் குறிப்பிடபட்டிருந்தால் அப்படியே செய்யவும் அல்லாது போனால் வெள்ளி கிழமை சூரிய உதயத்தின் முன் அல்லது பின் எடுக்கவும்.
காப்புகட்டி உபதேசம் செய்து மறு வாரம் பெலியிட்டு முகிலியை எடுப்பது மிகவும் சிறந்த முறையாகும்.
சந்தேகங்கள் இருப்பின் எழுதவும்.
நன்றி
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்.
தங்களின் பதிவுகள் தமிழர்களுக்கு ஒரு வர பிரசாதம் . இத்தகைய அரிய ரகசியங்களை தொடர்ந்து வெளி விடுங்கள் , அப்பொழுதுதான்
ReplyDeleteதமிழ் மொழி வளரும் ... தங்களின் முயற்சிக்கு கோடி வணக்கம் .
மூலிகை சாப நிவர்த்தி ஆகி விட்டுது என்பதை எவ்வாறு அறிவது ? ( இதை எந்த வலைத்தளத்திலும் குறிப்பிட வில்லை )
தேசிக்கணியை என்பது எலுபிச்சை பழம் தானே ?
முகிலிக்கு பதில் மூலிகை என்ற வார்த்தையை உபயோகிக்கலாம ?
தவறு இருந்தால் பொறுத்து மன்னிக்கவும்.
இவன்
பழனி
pazhani91@gmail.com
ஓம் நம சிவாய
அன்பின் தேழரே பழனி,
ReplyDeleteமுதலில் நீங்கள் எதற்காக மூலிகையை இந்த விதிமுறையில் எடுக்கிறீர்கள்... மாந்திரீக வேலைக்காக அல்லவா, அப்படியானாள் அந்த வேலை வெற்றியளித்தாள் நீங்கள் செய்தது சரி என்று தானே அர்த்தம்.
நான் கடந்த 18 வருடங்களாக இந்த முறையைத்தான் பயன்படுத்தி அஷ்டகர்மங்களை செய்து வெற்றியடைந்தேன்.
என் முன்னோர்களின் வாக்கியம் பொய்யானது அல்ல என்பது எனது நம்பிக்கை.
கவனிக்க வேண்டிய விடயம் இதில், நீங்கள் செய்ய எடுத்த கர்மமும் அதற்கான மூலிகையும் சரியானதா என்பத்தான். அப்படி இல்லாவிட்டால் இந்த முறை அல்ல எந்த முறையும் பயன் தராது.
முகிலி என்பதும் மூலிகை என்பதும் ஒன்றுதான் ஆனால் தமிழ் மந்திரங்களில் இவ்வாறுதான் என்னிடம் இருக்கிறது. மந்திரச்சொல் ஒருபோதும் நமது தேவைக்காக மாற்றக்கூடாது.
நன்றி
ஐயா,
ReplyDeleteஉபதேசதில் ஓம் ஆதிமூல பரமேஸ்பராய அல்லது பரமேஸ்வராய இதில் சரி , விளக்கவும்..... நன்றி
வணக்கம் தேழரே,
ReplyDeleteஓம் ஆதிமூல பரமேஸ்பராய என்றுதான் நான் பயன்படுத்துகிறேன்.
நன்றி
ayya ,manthiram anaithum "SIVA" endru than mudiyum endru kelvi pattirukinren.
ReplyDelete