Monday, September 30, 2013

சாப நிவர்த்தி செய்த மூலிகை

திரு. பழனி  அவர்களே, உங்களது கேல்வி மிக அறுமையானது.

“ மூலிகை சாப நிவர்த்தி ஆகிவிட்டது என்று எப்படி அறிவது?”

( முதலில் நீங்கள் எதற்காக மூலிகையை இந்த விதிமுறையில் எடுக்கிறீர்கள்... மாந்திரீக வேலைக்காக அல்லவா, அப்படியானாள் அந்த வேலை வெற்றியளித்தாள் நீங்கள் செய்தது சரி என்று தானே அர்த்தம்.

நான் கடந்த 18 வருடங்களாக இந்த முறையைத்தான் பயன்படுத்தி அஷ்டகர்மங்களை செய்து வெற்றியடைந்தேன்.

என் முன்னோர்களின் வாக்கியம் பொய்யானது அல்ல என்பது எனது நம்பிக்கை.

கவனிக்க வேண்டிய விடயம் இதில், நீங்கள் செய்ய எடுத்த கர்மமும் அதற்கான மூலிகையும் சரியானதா என்பத்தான். அப்படி இல்லாவிட்டால் இந்த முறை அல்ல எந்த முறையும் பயன் தராது.

முகிலி என்பதும் மூலிகை என்பதும் ஒன்றுதான் ஆனால் தமிழ் மந்திரங்களில் இவ்வாறுதான் என்னிடம் இருக்கிறது. மந்திரச்சொல் ஒருபோதும் நமது தேவைக்காக மாற்றக்கூடாது. )

இது நான் உங்களுக்கு தந்த பதில் அல்லவா.. இப்போது மற்றவர்கலும் அறியும் வகையில் ஓர் முறையை தருகிறேன்.

நீங்கள் மாந்திரீக சித்தி அடைந்தவராக இருந்தாள் உங்களுக்கு சாப நிவர்த்தி முடிந்தது உடனே தெரியும் அல்லாது போனால் அது கடினமானதுதான்.

சாப நிவர்த்தி முடித்த மூலிகை இலகுவில் வாடாது ஆனால் சும்மா எடுத்தது உடனே வாடிவிடும்.

சாப நிவர்த்தி செய்த மூலிகையை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது அது தானாகவே உங்களிடம் இருந்து தொலைந்துவிடும்.

சில விடயங்கள் அனுபவத்தை வைத்துதான் கற்று தேறவேணடும்.

நன்றி

3 comments:

  1. வணக்கம் .....

    என் கேள்விக்காக ஒரு பதிவாக வெளிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி.....

    நான் சித்த( அற ) வழி பாதை செல்ல விரும்புகேறன் , என் நோக்கமும் அதுதான். அதற்க்கு தன் மூலிகை சாப நிவர்த்தி பற்றி விளக்கி கேட்டேன்.

    எண்ணிடும் மற்றொரு கேள்வியும் உள்ளது. சாப நிவர்த்தி செய்தல் மட்டும் மூலிகை நிலைத்து நிற்குமா ?

    மூலிகைக்கு உயிர் கொடுக்க வேண்டாமா ?

    தவறு இருப்பின் மனிக்கவும்.

    ஓம் நம சிவாய

    ReplyDelete
  2. வணக்கம் தேழர் பழனி..

    சித்தர் பாதையில் செல்வதற்கும் சாப நிவர்த்தி செய்வதற்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, இருப்பினும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

    சாப நிவர்த்தி என்பதே அதன் உண்மைத்தன்மையை (மறைந்திறுக்கும் சக்தியை) அடைவதற்காக செய்வது. அப்படி இருக்கும்போது அதாவது அதன் சக்தி மூலிகைக்கு வந்தபின்னர் அது உயிர் பெற்றதாகத்தானே அர்த்தம், அப்படி இருக்க ஏன் மீண்டும் உயிர் கொடுக்கவேண்டும்.

    சிந்தித்து பார்த்து பின்னர் எழுதவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை , இருப்பினும் என் கருத்து


      சித்தி பெற்றவனே சித்தன் ,

      சித்த பாதைக்கு செல்ல வேண்டேவன் உடலையும் உள்ளத்தையும் சுத்தி செய்வது அவசியம் ( எனக்கு தெரிந்த மட்டும் )

      இவ்வாறு உடலையும், உள்ளத்தையும் சுத்தி செய்வதில் நம்மை தீய சக்தி இருந்து காக்க மூலிகை பங்கு அதிகம். இது உண்மை தானே

      அதற்க்கு தான் நான் அவ்வாறு கேட்டேன். அது மட்டும் அல்லாமல் சில வலை தளங்களில் இவ்வாறு
      http://www.siddharmaruthuvam.blogspot.in/

      சாப நிவர்த்தி, சாப நிவர்த்தி இலகு மூறை , மூலிகைக்கு உயிர் கொடுத்தல் என மூன்று முறைகள் உள்ளன. இவ்வாறு இருக்க
      தங்கள் கூறியது சாப நிவர்த்தி மட்டுமே. ஒவ்வருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது.

      என் எண்ணம் என்னவென்றால் மனதார வேண்டினால் போதும் என்று .(மனதின் எண்ணமே மந்திரம் என்று என் சித்தம் ) இதற்க்கு பெலி
      கொடுத்தல் அவசியம் தானா ?

      அதிகம் பேசி இருந்தால் மனிக்கவும்.
      சிவன் விளையாட்டு என்றும் புரியாத புதிர் !!!!

      நன்றி

      ஓம் நம சிவாய

      Delete