Wednesday, January 22, 2014

காளி உபாசனை செய்ய


வணக்கம் தோழர்களே,

மந்திர பிரயோகத்தில் மிக முக்கியமாக தேவர்கள் முதல் சித்தர்கள் வரை போற்றப்பட்ட மந்திரக் கன்னி எனும் மகா காளியை சரியாக உபாசனை செய்யக்கூடியவனே சக்திவாய்ந்த மந்திரவாதியாக இருக்கமுடியும்.

மந்திரங்களை பொருத்தவரை காளி (திரிபுரை சக்தி) தனித்தன்மை பெற்றவல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வீர சக்தி மட்டுமல்ல நமது மாயையை அகற்றும் சக்தியும் இவள் தான். அதனால் தான் சத்துரு சங்ஙாரி என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட சக்தியை முறைப்படி உபாசனை செய்ய முடிந்தால் அவன் இப்புவியில் பெரும் பாக்கியசாலி என்பதில் ஐயமில்லை. கூப்பிட்ட குறலுக்கு ஓடிவரும் அதி தேவதையாக இவள் இருந்தால் அதைவிட பாக்கியம் ஒன்றும் இல்லை.

உபாசனை என்பது அவளின் தரிசனம் கான எடுக்கும் முயற்ச்சி ஆகவே இதை இலகுவான விடயமாக கருதவேண்டாம். கடுமையான தவத்தின் அருள் வேண்டும் என்று பலர் நினைக்க கூடும் ஆனால் மனதில் தூய்மை இருந்தால் அதுவே பல ஆண்டு தவத்துக்கு சமமாகும் என்பது எனது அனுபவ உண்மை.

”மனமது செம்மையானால் மந்திரம் செப்பவேண்டாம்”  இதை ஞாபகத்தில் இருத்தி செயற்பட்டால் சத்தி கிட்டுவது நிச்சயம்.

மந்திரம்

ஓம் ஓங்ஙாரம் தரித்த ஓங்ஙார காளி அறுகோணம் படைத்த ஆங்ஙார சக்தி அங்ங றிங்ங சக்தி வா ஆதி சக்தி வா சிவானந்தி வா அவ்வும் உவ்வும் ஆன பரமகல்யாணி நீலி பத்திரகாளி அகார உகார அரன் உபதேஷித்த சிகார மகார உத்தண்ட மாகாளி வா சீறிச்சினந்து வாடி அம்மே சிவந்த ரூபம் உள்ளவளே சிங்ங வாகனத்தில் ஏறிய திரிபுரை காளி அண்டம் வெளித்திட அருள் எழுந்து ஓடிவாம்மா மலையாள மண்டபத்தில் இருக்கும் ஆ ஈ வா அங்கு வா இங்கு வா பஞ்ச பூதங்களையும் அடக்கி நின்று ஆடி வா ஆசனம் குலுங்க அசைந்து வா அமராவதி நடுங்க பாடி வா சவ்வொடு சவ்வுமாய் நின்ற அஞ்சரக் கன்னி ஆதி சக்தி பத்திரகாளி வா அம்மா வா சுவாகா. 





















கிரிகை

அமாவாசை தினத்தில் நடு இரவில் மயானத்தில் இருந்து செய்ய வேண்டியது. 

சிகப்பு சீலை விரித்து அதின் மேல் நவதானியம் 24” நீள அகலத்துக்கு 3” உயரத்துக்கு பரவி அதில் கீழ் இருக்கும் அட்சரம் போட வேண்டும். பின்னர் அதற்கு மலர் மாலை சாத்தி தூப தீபம் காட்டி பன்னீர் தெளித்து விட்டு அதன் முன்னால் சிறப்பான ஓர் மடை வைத்து உங்களால் முடிந்த அனைத்துவகை படையல்களும் வைக்கலாம். மது என்பது தேன் ஆகவே சாராயம் வைக்க வேண்டாம். இது சுத்த சைவ பூசை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். 

 மடை வைக்கும் போது பிள்ளையார், உங்கள் குரு, சிவன் இந்த மூவருக்கும் பின்னரே, காளிக்கு உரிய மடையும் படையலும்.

சிகப்பு வேட்டி கட்டி வடக்கு திசை அமர்ந்து பூசை செய்யவும். மந்திர உரு கண்களை மூடிக்கொண்டு செய்யவும் உங்கள் அருகில் தண்ணீர் ஓதும் முறைப்படி செய்த தண்ணீர் ஓரு செம்பில் இருப்பது அவசியம், திடீர் ஆபத்து வந்தால் அதில் சிறிது நீரை ஆபத்தின் மீது தெளித்தால் அது விலகிவிடும். 

பல தடங்களுக்கு பிறகு அம்பாள் பிரசன்னமாவால் அது நீங்கள் கேட்கும் உருவில் வருவாள் அது உருதி உண்மை என் குருமார் மீது ஆணை. நான் கண்ட ரூபம் கூற முடியாது நீங்கள் காண்பதும் யாரிடமும் கூற கூடாது. அது தேவையும் அல்ல.

குறிப்பாக தனிமையாக செய்யவேண்டும். அல்லது உங்கள் குரு சற்று விலகி இருந்து பார்கலாம். மற்றவர் கூடாது. காரணம் நடக்க இருக்கும் சம்பவம் கடுமையானது. 

முடிந்தால் அக்கினி வளர்த்து அதில் தேன் ஊற்றியவாரு உரு செய்யலாம். 

பிரசன்னமாகி அவள் கேட்பதை கொடுக்க தயாராகி இருங்கள்.


அட்சரம் - காளி உபாசனை
















இப்படி பலதரப்பட்ட தேவதைகளையும் உபாசனை செய்ய முடியும். நமது தேவைக்கேற்ப தேவதைகளை உபாசனை செய்து அவற்றிடம் இருந்து ஞானத்தை பெற முடியும். நமது சமயத்தில் (சைவத்தில்) முப்பத்தி மூன்று கோடி தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது வேதம்.

நன்றி
 

4 comments: