வணக்கம் தோழர்களே,
மந்திரம் அது தந்திரம் என்று கூருகிறவர்களுக்கு இது.
பாடல்
மந்திரங் கொண்டு மதிக்கின்ற ஓமமுந்
தந்திரந் தர்பணஞ் சாற்றுமந் திரமும்
நந்தியெம் நாதன் நவையற ஓதினன்
பைந்தொடி மேனிப் பயனிது தானே
பயன்றான் அறியலாம் பற்றற் றிருந்தால்
நயந்தான் மிகவுண்டாம் நந்தி அருளால்
உயர்ந்தார் உரைத்தது ஓதிய பின்னை
நயந்தால் பிறர்க்கிது நன்மையுண் டாகுமே
நன்மையுண் டாமெங்கள் நாதன் உரைத்தது
தின்மையின் றாகத் தெளிவிக்கும் நாதனை
தன்மையுண் டாகத் தனித்தனி நாடிப்போய்ப்
பொன்மையுண் டாகப் புகழ்ந்துகொள் வோர்க்கே
கொள்ளுவார் கொள்ளுங் குருவின் அருளாலே
உள்ளுவார் உள்ளும் உடனின்ற சத்தியைத்
தெள்ளுவார் வாலை புவனை திரிபுரை
கள்ளுவார் பூங்கோதை காரணி பேரே
காரணி பேரொடு கண்ணுதல் அண்ணையைப்
பூரண மாகப் புரைதோன்றும் போக்கிற்கு
ஆரண வேதம் அறியாத சக்தியை
நாரண நந்தி நமக்குரைத் தானே.
இந்த பாடல் மூலம் தெளிவாக புரியும் என்ற நம்பிக்கையில்.
போலியான வேசம் போட்டு, நல்லது நடக்காதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை ஏமாற்றும் சிலரின் ஈனச்செயலால், நமது சமயத்துக்கும் தமிழுக்கும் தான் அவமானம் அதிகம்.
இதன் காரணங்களால் தான் இன்று பிற மதங்கள் நமது சமயத்தவரை கொச்சைப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் மதமாற்றத்தையும் செய்ய தூண்டுகிறார்கள்.
பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஏன் மதச்சடங்குகளை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் புரிய வில்லை.
என்னை தொடர்பு கொண்டு பேசும் பலரும் கூறுவது “ நாங்கள் அவரிடம் ஏமாந்தோம்” என்று. மந்திர பிரயோகம் என்பது முக்தியை அடைய வழி செய்வது, அத்துடன் தீவினைகளையும் அகற்ற வல்லது. ஆனால் பணம் சம்பாதிக்க இது வழி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இருக்கும் போது ஏன் மீண்டும் மீண்டும் மகேசனை (ஈசனை) ஏமாற்றுகிறார்கள்.
”நாயினும் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனே”
நன்றி
No comments:
Post a Comment