Monday, January 6, 2014

ஆதி பரமேஸ்பரர் உடல் கட்டு

வணக்கம் தோழர்களே,

புத்தாண்டை இனிதே கழித்து விட்டு மீண்டும் வாழ்க்கை சக்கரத்தில் பயனம் செய்ய தொடங்கியிருப்பீர்கள். உங்களின் பல கேள்விகள் எனது மின்னஞ்சலில் குவிந்து கிடக்கிறது, அவற்றுக்கான பதில்கள் அனைத்தும் மிக விறைவில் பதிவுகளாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவற்றின் ஆரம்ப பதிவாக இந்த ஆதி பரமேஸ்பரர் உடல் கட்டு மந்திரம் இருக்கும். அத்துடன் இது வெருமனே உடல் கட்டு மட்டுமல்லாது சர்வ பேய், சூனியம், ஏவல் போன்ற துஷ்ட சக்திகளை கட்டும் மகா மந்திரமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

முறைப்படி சித்தி செய்து கொண்டால் இம் மந்திரத்தை நமக்காகவும் பிறருக்காகவும் பயன் படுத்த முடியும். 

மந்திரம்.

ஓம் ஆதி பரமேஸ்பர கடவுள் வாரார்  வாரார் பூமி புலித்தோலாகவும் வீமன் கை முத்துக்குடையாகவும் மாமேரு பருவதம் தண்டாகவும் உச்சி லோகமாகவும் நெற்றி சிவலிங்க பிள்ளையாராகவும் நாக்கு நஞ்சுண்ட ஈசுபரனாகவும் மூக்கு முப்பத்து முக்கோடி தேவராகவும் கண்கள் கனபதியாகவும் இடது கண் சந்திரனாகவும் வலக்கண் சூரியனாகவும் இடது தோள் எக்கிலாத்தேவியாகவும் வலது தோள் சிவதக்க மாமுனியாகவும் இப்படி புறப்பட்டு வருகிற ஆதி பரமேஸ்பரன் ஆதி பரமேஸ்வரியை கண்டு வணங்கிய சர்வ கோடி பூதப் பிரேத பசாசு பில்லி வஞ்சனை சூனியம் எல்லாம் நானும் ஆதி பரமேஸ்பரன் ஆதி பரமேஸ்வரியாக வந்து நிற்கின்றேன் என்னைக்கண்டு வணங்கவே சிவாகா. 

கிரிகை

முறைப்படி சித்தி செய்து கொண்டு பின்னர் தண்ணீர் ஓதி மற்றவருக்கு கொடுக்களாம், நமக்கு தேவை என்றால் விபூதி மந்திரித்து பூசலாம். 

நன்றி











2 comments:

  1. ஐயா,

    நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பதிவை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

    சித்தி 108 முறை.
    பிரயோகம் செய்யும் போது எத்தனை முறை மந்திரம் சொல்ல வேண்டும்?.
    தண்ணீர் ஓதி தரும் போது எந்த வேப்பிலை பயன்படுத்தலாமா ?

    நன்றி

    ReplyDelete
  2. ஐயா
    எனக்கு ராமர் வாலாயம் வேண்டும் மந்திரம் பதியவும்.
    ஐயா
    நன்றி

    ReplyDelete