Thursday, January 23, 2014

புது வருட காட்டு பயனம்

வணக்கம் தோழர்களே,

பொங்கள் தினத்தில் அன்று எங்களது மூலிகை ஆய்வின் சில காட்சிகள்.

இதில் இருக்கும் மூலிகைகளை இனங்கான முடிந்தால் கூறுங்கள் பார்க்கலாம். இதில் மூன்று முக்கியமான மந்திர பிரயோகத்துக்கு உரிய மூலிகைகள் இருக்கிறது.






















நன்றி

Wednesday, January 22, 2014

காளி உபாசனை செய்ய


வணக்கம் தோழர்களே,

மந்திர பிரயோகத்தில் மிக முக்கியமாக தேவர்கள் முதல் சித்தர்கள் வரை போற்றப்பட்ட மந்திரக் கன்னி எனும் மகா காளியை சரியாக உபாசனை செய்யக்கூடியவனே சக்திவாய்ந்த மந்திரவாதியாக இருக்கமுடியும்.

மந்திரங்களை பொருத்தவரை காளி (திரிபுரை சக்தி) தனித்தன்மை பெற்றவல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வீர சக்தி மட்டுமல்ல நமது மாயையை அகற்றும் சக்தியும் இவள் தான். அதனால் தான் சத்துரு சங்ஙாரி என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட சக்தியை முறைப்படி உபாசனை செய்ய முடிந்தால் அவன் இப்புவியில் பெரும் பாக்கியசாலி என்பதில் ஐயமில்லை. கூப்பிட்ட குறலுக்கு ஓடிவரும் அதி தேவதையாக இவள் இருந்தால் அதைவிட பாக்கியம் ஒன்றும் இல்லை.

உபாசனை என்பது அவளின் தரிசனம் கான எடுக்கும் முயற்ச்சி ஆகவே இதை இலகுவான விடயமாக கருதவேண்டாம். கடுமையான தவத்தின் அருள் வேண்டும் என்று பலர் நினைக்க கூடும் ஆனால் மனதில் தூய்மை இருந்தால் அதுவே பல ஆண்டு தவத்துக்கு சமமாகும் என்பது எனது அனுபவ உண்மை.

”மனமது செம்மையானால் மந்திரம் செப்பவேண்டாம்”  இதை ஞாபகத்தில் இருத்தி செயற்பட்டால் சத்தி கிட்டுவது நிச்சயம்.

மந்திரம்

ஓம் ஓங்ஙாரம் தரித்த ஓங்ஙார காளி அறுகோணம் படைத்த ஆங்ஙார சக்தி அங்ங றிங்ங சக்தி வா ஆதி சக்தி வா சிவானந்தி வா அவ்வும் உவ்வும் ஆன பரமகல்யாணி நீலி பத்திரகாளி அகார உகார அரன் உபதேஷித்த சிகார மகார உத்தண்ட மாகாளி வா சீறிச்சினந்து வாடி அம்மே சிவந்த ரூபம் உள்ளவளே சிங்ங வாகனத்தில் ஏறிய திரிபுரை காளி அண்டம் வெளித்திட அருள் எழுந்து ஓடிவாம்மா மலையாள மண்டபத்தில் இருக்கும் ஆ ஈ வா அங்கு வா இங்கு வா பஞ்ச பூதங்களையும் அடக்கி நின்று ஆடி வா ஆசனம் குலுங்க அசைந்து வா அமராவதி நடுங்க பாடி வா சவ்வொடு சவ்வுமாய் நின்ற அஞ்சரக் கன்னி ஆதி சக்தி பத்திரகாளி வா அம்மா வா சுவாகா. 





















கிரிகை

அமாவாசை தினத்தில் நடு இரவில் மயானத்தில் இருந்து செய்ய வேண்டியது. 

சிகப்பு சீலை விரித்து அதின் மேல் நவதானியம் 24” நீள அகலத்துக்கு 3” உயரத்துக்கு பரவி அதில் கீழ் இருக்கும் அட்சரம் போட வேண்டும். பின்னர் அதற்கு மலர் மாலை சாத்தி தூப தீபம் காட்டி பன்னீர் தெளித்து விட்டு அதன் முன்னால் சிறப்பான ஓர் மடை வைத்து உங்களால் முடிந்த அனைத்துவகை படையல்களும் வைக்கலாம். மது என்பது தேன் ஆகவே சாராயம் வைக்க வேண்டாம். இது சுத்த சைவ பூசை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். 

 மடை வைக்கும் போது பிள்ளையார், உங்கள் குரு, சிவன் இந்த மூவருக்கும் பின்னரே, காளிக்கு உரிய மடையும் படையலும்.

சிகப்பு வேட்டி கட்டி வடக்கு திசை அமர்ந்து பூசை செய்யவும். மந்திர உரு கண்களை மூடிக்கொண்டு செய்யவும் உங்கள் அருகில் தண்ணீர் ஓதும் முறைப்படி செய்த தண்ணீர் ஓரு செம்பில் இருப்பது அவசியம், திடீர் ஆபத்து வந்தால் அதில் சிறிது நீரை ஆபத்தின் மீது தெளித்தால் அது விலகிவிடும். 

பல தடங்களுக்கு பிறகு அம்பாள் பிரசன்னமாவால் அது நீங்கள் கேட்கும் உருவில் வருவாள் அது உருதி உண்மை என் குருமார் மீது ஆணை. நான் கண்ட ரூபம் கூற முடியாது நீங்கள் காண்பதும் யாரிடமும் கூற கூடாது. அது தேவையும் அல்ல.

குறிப்பாக தனிமையாக செய்யவேண்டும். அல்லது உங்கள் குரு சற்று விலகி இருந்து பார்கலாம். மற்றவர் கூடாது. காரணம் நடக்க இருக்கும் சம்பவம் கடுமையானது. 

முடிந்தால் அக்கினி வளர்த்து அதில் தேன் ஊற்றியவாரு உரு செய்யலாம். 

பிரசன்னமாகி அவள் கேட்பதை கொடுக்க தயாராகி இருங்கள்.


அட்சரம் - காளி உபாசனை
















இப்படி பலதரப்பட்ட தேவதைகளையும் உபாசனை செய்ய முடியும். நமது தேவைக்கேற்ப தேவதைகளை உபாசனை செய்து அவற்றிடம் இருந்து ஞானத்தை பெற முடியும். நமது சமயத்தில் (சைவத்தில்) முப்பத்தி மூன்று கோடி தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது வேதம்.

நன்றி
 

அடியேன் தான் இது

வணக்கம் தோழர்களே,


தகவள் தான் முக்கியம் என்று எனது புகைப்படத்தை இதுவரை அடையாளம் காட்டவில்லை. ஆனால் பலரும் மின்னஞ்சல் மூலம் கேட்டதனால் எனது படத்தை வெளியிடுகிறேன்.

10 வருடங்களுக்கு முன்னர் (திரி தீட்சை காலம்)















7 வருடங்களுக்கு முன்னர் (தச தீட்சை முடித்த பின்)



















4 வருடங்களுக்கு முன்னர்
மனைவி கிளேஸ்றிஸ் கிறீஜித்
எனது தந்தை மாணிக்கராச முதலியார்
மூத்த மகள் தாட்ஷாயினி

சித்த வைத்தியம் ஆரம்பித்த காலம்















தற்போது இன்னும் ஓர் மகன் இருக்கிறான் அவன் கதிவேல் முதலியார்
2 வயது.

இந்த தகவல் போதும் என்று நினைக்கிறேன்.

நன்றி

மா. கோ. முதலியார்
muthaly@gmail.com






Tuesday, January 21, 2014

மந்திரம் எப்படி வந்தது.

வணக்கம் தோழர்களே,

மந்திரம் அது தந்திரம் என்று கூருகிறவர்களுக்கு இது.

பாடல்

மந்திரங் கொண்டு மதிக்கின்ற ஓமமுந்
தந்திரந் தர்பணஞ் சாற்றுமந் திரமும்
நந்தியெம் நாதன் நவையற ஓதினன்
பைந்தொடி மேனிப் பயனிது தானே

பயன்றான் அறியலாம் பற்றற் றிருந்தால்
நயந்தான் மிகவுண்டாம் நந்தி அருளால்
உயர்ந்தார் உரைத்தது ஓதிய பின்னை
நயந்தால் பிறர்க்கிது நன்மையுண் டாகுமே

நன்மையுண் டாமெங்கள் நாதன் உரைத்தது
தின்மையின் றாகத் தெளிவிக்கும் நாதனை
தன்மையுண் டாகத் தனித்தனி நாடிப்போய்ப்
பொன்மையுண் டாகப் புகழ்ந்துகொள் வோர்க்கே

கொள்ளுவார் கொள்ளுங் குருவின் அருளாலே
உள்ளுவார் உள்ளும் உடனின்ற சத்தியைத்
தெள்ளுவார் வாலை புவனை திரிபுரை
கள்ளுவார் பூங்கோதை காரணி பேரே

காரணி பேரொடு கண்ணுதல் அண்ணையைப்
பூரண மாகப் புரைதோன்றும் போக்கிற்கு
ஆரண வேதம் அறியாத சக்தியை
நாரண நந்தி நமக்குரைத் தானே. 





















இந்த பாடல் மூலம் தெளிவாக புரியும் என்ற நம்பிக்கையில்.

போலியான வேசம் போட்டு, நல்லது நடக்காதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை ஏமாற்றும் சிலரின் ஈனச்செயலால், நமது சமயத்துக்கும் தமிழுக்கும் தான் அவமானம் அதிகம்.

இதன் காரணங்களால் தான் இன்று பிற மதங்கள் நமது சமயத்தவரை கொச்சைப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் மதமாற்றத்தையும் செய்ய தூண்டுகிறார்கள்.

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஏன் மதச்சடங்குகளை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் புரிய வில்லை.

என்னை தொடர்பு கொண்டு பேசும் பலரும் கூறுவது “ நாங்கள் அவரிடம் ஏமாந்தோம்” என்று. மந்திர பிரயோகம் என்பது முக்தியை அடைய வழி செய்வது, அத்துடன் தீவினைகளையும் அகற்ற வல்லது. ஆனால் பணம் சம்பாதிக்க இது வழி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இருக்கும் போது ஏன் மீண்டும் மீண்டும் மகேசனை (ஈசனை) ஏமாற்றுகிறார்கள்.

”நாயினும் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனே” 

நன்றி



இந்திர கோபம்

வணக்கம் தோழர்க்ளே,

சித்த மருத்துவ வரிசையில் சித்தர்கள் மூலிகைகளை மட்டும் கையாலவில்லை, பலதரப்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் அபூர்வ வகை பூச்சிகள் என்பனவற்றையும் உபயோகித்துள்ளனர். அவற்றின் வரிசையில் இந்திர கோபம் எனும் இந்திராணி சிலந்தி ஓர் அறிய வகை மருந்தாகும்.
















இந்திர கோபம் எனும் அபூர்வ வகை சிலந்தி மழைகாலத்தில் மட்டுமே கிடைக்கும். இது ஓர் காய கற்ப மருந்தாகவும் வீரிய விருத்தி தரும் உணவாகவும் இருக்கிறது.

இதில் இருந்து எடுக்கும் குழித்தைலம் பல மாந்திரீக பிரயோகங்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கிறது.

நன்றி

Monday, January 20, 2014

அன்பு வேண்டுகோள்.

வணக்கம் தோழர்களே,

இதுவரயில் தளத்தில் கிடைத்த பதிவுகளை பயன்படுத்தி பலன் பெற்றவர்கள் அவர்களின் பலனை பற்றி குறிப்பிட்டால் புதியவர்களுக்கும் அது ஓர் நம்பகத்தன்மையை தருவதோடு, எமது பனியின் திருப்தியும் எமக்கு கிடைக்கும். 

என்றும் அன்புடன்

மா கோ முதலியார்
சித்த வைத்தியர்

வாசகர் கேள்விக்கு பதில்கள்

வணக்கம் தோழர்களே,

குறிப்பிட்ட நாட்கள் கடுமையான வேலை காரணமாக வாசகர் கேள்விகள் பலவற்றுக்கு பதில் தருவதில் ஏற்பட்ட தடங்களுக்கு மண்ணிக்கவும்.

மருந்துகள் தொடர்பான பதிவுகளில் இருக்கும் சரக்குகள் உங்களுக்கு குழப்பமாக இருந்தால் அருகில் இருக்கும் சித்த மருந்து கடைகளில் கேட்டால் அதற்கான விளக்கம் கிடைக்கும். உதாரணமாக கடல் நுறை என்பது கடலில் இருந்து கிடைக்கும் நுறைதான் அது கடைகளில் கிடைக்கும். உபரசங்களில் ஒன்று. அத்துடன் மனோசீலை என்பது  நவபாஷானங்களில் ஒன்று, கடையில் கிடைக்கும்.

மூலிகைகள் தொடர்பான சந்தேகம் பலருக்கு இருக்கலாம், ஆனால் அடியேன் சரி என கருதும் மூலிகைகளையே இங்கு பதிவிடுகிறேன். அதில் உங்கள் சந்தேகம் இருப்பின் சரியான மூலிகையின் படங்களை மின்னஞ்சல் அனுப்புங்கள் அதை பதிவில் இனைப்போம்.

மந்திர யந்திர முறைகள் சந்தேகம் இருப்பின் தெளிவாக கேட்டால் இயன்ற வரை உதவி செய்கிறேன். செய்முறைகளை காட்டுவதற்கு விரவில் முயற்சி செய்கிறேன்.

நன்றி

பேய்களை கட்ட - தேவதைகளும் அடங்கும்

வணக்கம் தோழர்களே,

படுகளம் போடுதல் போன்று இதுவும் ஓர் கட்டு முறையே. ஆலயங்களில் பேய் ஆடும் போது குறிப்பிட்ட தேவதயை கட்ட இது உதவும்.

மந்திரம்.

ஓம் அரியும் பிரமனும் அரனை ஓதி அமரரும் தேவரும் அமிர்தம் கடைய அடியுயர்ந்த மேரு அடி பறந்தால் போலே இவர் தலை காளமாமுனி எக்கிஷத்தில் உயிர் அயர்ந்து நிற்கவே சுவாகா.

கிரிகை

குறிப்பிட்ட தேவதைகான மடையில் வைக்கப்பட்டிருக்கும் பூ ஒன்றினை எடுத்து (இரகசியமாக) உரு 108 செய்து நமது வேட்டி மூலையில் முடிந்து வைக்கவும். பேய் ஆடாது.

நன்றி 

Saturday, January 18, 2014

படுகளம் போட்டு தேவதையை கட்ட.

வணக்கம் தோழர்களே,

தேவதைகாளை கட்டவும் தெரிதல் அவசியம்., அவற்றுக்கான காரணம் விரிவாக பதிவிடப்படும். முதலில் மந்திரங்களை சித்தி செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றின் தேவைக்கேற்ப பயன்படுத்தல் வேண்டும்.

இது ஓர் இலகுவான மந்திர முறை எந்த தேவதையையும் கட்டி நமது பிடிக்குள் வைத்து இருக்க முடியும் (தற்களிகமாக அதுவும் அத் தேவதை நம் மீது அன்பு இருந்தால் மட்டும்).

மேலதிக விபரம் மாணவர்களுக்கு தரப்படும் விரைவில்,

மந்திரம்

ஓம் ஈ நமசிவாயா நம, ஓம் ஈ நமசிவாயா நம, ஓம் ஈ நமசிவாயா நம சீ. 

கிரிகை.

எந்த தேவதையை படுகளம் போட வேண்டுமோ அதன் முன்னால் நின்று அதன் முகத்தை பார்த்து இந்த மந்திரத்தை நமது வேட்டியின் ஓர் மூலையில் உரு செய்து முடிந்து இடுப்பில் செருகவும்.  உரு உங்கள் சித்திக்கு ஏற்ப பலன் கிடைக்கும். 

நன்றி

திரு நாச்சியார் படுகள எழுப்பு

வணக்கம் தோழர்களே,

இதுவும் ஓர் படுகள எழுப்பு முறையே.

மந்திரம்

ஓம் திரைசேர் மடந்தை திரு நாச்சி அம்மை திரு நஞ்சை உண்டு திருக்கண் உறங்கிறாள் வாடா நந்தி பிடியடா நீற்றை எறியடா முகத்தில் ஓம் சிவ சிவ சங்ஙார காளமாமுனி ஆணை இந்தா பார் எழும்பு சுவாகா.

கிரிகை

மந்திர சித்தி செய்து பின்னர் படுகள எழுப்பு முறைக்கு செய்யவும்.

நன்றி

இயமன் படுகளம் எழுப்ப

வணக்கம் தோழர்களே,

மந்திர வரிசையில் அடுத்து வருவது ஆலயங்களில் தெய்வம் ஆடும் போது கட்டுண்டு கிடந்தால் அதனை தண்ணீர் தெளித்து எழுப்பும் முறை ஒன்று.

இம் மந்திரம் இயமன் (எமன்) எனும் உயிர் பிரிக்கும் தேவன் மூலம் கட்டு பட்டு கிடக்கும் தேவதைகளை எழுப்பும் முறையாகும்.

மந்திரம் 

ஓம் அரி அரி பாதாளம் நடு நடுங்க எமலோகம் கிடு கிடென பாசக்கயிரு கொண்டு பலுத்த கிடா மேல் இயமனும் படுகளத்துக்கு எழுந்தருளி வாரான் ஓம் அரி அரி சங்ஙரி ஆதி சக்தி பரமேஸ்வரி ஆணை இந்தா பார் எழும்பு சுவாகா.

கிரிகை

மந்திரத்தை சித்தி செய்த பின்னர் தேவைப்படும் போது சுத்த சலத்தை கையில் எடுத்து மூன்று முறை மந்திரத்தை கடுமையாக உச்சரித்து தண்ணீரை கட்டு பட்டுகிடக்கும் தேவதையின் முகத்தில் எறிய தெய்வம் ஆடும். 

மந்திர சித்தி பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் ஆகவே எடுத்ததும் கேட்காமல் தளத்தை நன்கு பார்த்து விட்டு பின்னர் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நன்றி

குரு குலம் ஆரம்பமாகிறது.

வணக்கம் தோழர்களே,

பல மாணவர்களினதும் சில பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு அமைய அடியேன் விரவில் ஓர் குரு குலம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன், சித்த மருத்துவமும் மாந்திரீகமும் சேர்ந்த ஓர் பாரம்பரிய கல்வி முறைக்கு இது அமைய வேண்டும் என்பது எனது மனதில் இருக்கிறது. இதை ஓர் குழுமம் போன்று அமைத்து அதில் பலரும பலன் பெரும் வன்னம் செய்ய வேண்டும். அதற்கான இடமும் வாங்கி அதில் வேலைகளை செய்து வருகிறேன். இது தொடர்பான படங்களையும் நீங்கள் விரைவில் கான முடியும்.

நவீன தொழில்னுட்பம் வந்து குவிந்து கிடக்கும் இந்த உலகத்துக்கு இதுவரயில் யாரும் கண்டிராத பல அட்புதங்களையும் நுட்பங்களையும் விட்டு சென்ற சித்தர்களின் ஆசியோடு இதை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு உங்கள் கருத்தும் பங்களிப்பும் மிகவும் அவசியம். ஓர் புதிய சமூகத்தை துவங்க நினைக்கிறேன் அதே எனது இருதியாகி விடாமல் கை கொடுத்து உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்ககியில் உங்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் பதிவுகளை தாருங்கள்.

நன்றி

மா. கோ. முதலியார்.

muthaly@gmail.com

தை பிறந்தால் வழி பிறக்கும்..


வணக்கம் தோழர்களே,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்த தோழர்களுக்கும் அனைவருக்கும் எனது புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.

அன்பு தோழர்களே மீண்டும் மீண்டும் எனது மின்னஞ்சலை கேட்கும் முன்னர் தயவு செய்து பதிவுகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள் அதில் மின்னஞ்சல் இருக்கிறது.


எனது இடமாற்றம் மற்றும் கடுமையான வேலை பளு இவைகளில் இருந்து சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் தளத்தில் புதிய பல விடயங்கள் வர இருக்கிறது.

கடந்த சில தினங்களாக எங்களது மூலிகை ஆய்வு பல அடர்ந்த காடுகளை நோக்கி நகர்கிறது, அதன் மூலம் நாம் கண்டறிந்த பல அற்புத அறிய வகை மூலிகைகளையும் சித்தர் பெருமக்கள் கண்டறிந்த இரகசியங்களையும் நாம் ஆராய்ந்து அதன் நம்பகத்தன்மையை (சரியான மூலிகை) விரைவில் அனைவரும் பலனடையும் வகயில் தர இருக்கிறோம்.

அதன் ஓர் சாட்சியான காட்சி இங்கு.

















நன்றி

Monday, January 6, 2014

ஆதி பரமேஸ்பரர் உடல் கட்டு

வணக்கம் தோழர்களே,

புத்தாண்டை இனிதே கழித்து விட்டு மீண்டும் வாழ்க்கை சக்கரத்தில் பயனம் செய்ய தொடங்கியிருப்பீர்கள். உங்களின் பல கேள்விகள் எனது மின்னஞ்சலில் குவிந்து கிடக்கிறது, அவற்றுக்கான பதில்கள் அனைத்தும் மிக விறைவில் பதிவுகளாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவற்றின் ஆரம்ப பதிவாக இந்த ஆதி பரமேஸ்பரர் உடல் கட்டு மந்திரம் இருக்கும். அத்துடன் இது வெருமனே உடல் கட்டு மட்டுமல்லாது சர்வ பேய், சூனியம், ஏவல் போன்ற துஷ்ட சக்திகளை கட்டும் மகா மந்திரமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

முறைப்படி சித்தி செய்து கொண்டால் இம் மந்திரத்தை நமக்காகவும் பிறருக்காகவும் பயன் படுத்த முடியும். 

மந்திரம்.

ஓம் ஆதி பரமேஸ்பர கடவுள் வாரார்  வாரார் பூமி புலித்தோலாகவும் வீமன் கை முத்துக்குடையாகவும் மாமேரு பருவதம் தண்டாகவும் உச்சி லோகமாகவும் நெற்றி சிவலிங்க பிள்ளையாராகவும் நாக்கு நஞ்சுண்ட ஈசுபரனாகவும் மூக்கு முப்பத்து முக்கோடி தேவராகவும் கண்கள் கனபதியாகவும் இடது கண் சந்திரனாகவும் வலக்கண் சூரியனாகவும் இடது தோள் எக்கிலாத்தேவியாகவும் வலது தோள் சிவதக்க மாமுனியாகவும் இப்படி புறப்பட்டு வருகிற ஆதி பரமேஸ்பரன் ஆதி பரமேஸ்வரியை கண்டு வணங்கிய சர்வ கோடி பூதப் பிரேத பசாசு பில்லி வஞ்சனை சூனியம் எல்லாம் நானும் ஆதி பரமேஸ்பரன் ஆதி பரமேஸ்வரியாக வந்து நிற்கின்றேன் என்னைக்கண்டு வணங்கவே சிவாகா. 

கிரிகை

முறைப்படி சித்தி செய்து கொண்டு பின்னர் தண்ணீர் ஓதி மற்றவருக்கு கொடுக்களாம், நமக்கு தேவை என்றால் விபூதி மந்திரித்து பூசலாம். 

நன்றி