Wednesday, November 5, 2014

அணைவருக்கும் வணக்கம்,

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாளாக எந்த பதிவும் வரவில்லை என்று நினைக்க வேண்டாம். எமது புதிய தளத்தில் அணைத்தும் கிடைக்கும்.. சித்தர்கள் தொடர்பானவை..

http://siththarvaakadam.org/

நன்றி..

Saturday, October 4, 2014

விடம் தீண்டினால்

வணக்கம் தோழர்களே,

விடம் தீண்டியவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று கேட்ட தோழர்களுக்கு இந்த மந்திரப்பதிவு.

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து வைத்திருந்தால் யாருக்கு விடம் தீண்டினாலும் உபயோகிக்களாம். அது போல் மந்திரம் சித்தியானவருக்கு விட பூச்சிகள் குறிப்பாக பாம்பு தீண்டாது..

சித்தி செய்வது அமாவாசை இரவு நல்லிரவில் 108 முறை தனிமையான இடத்தில் இருந்து உருச்செய்ய வேண்டும்..

சித்தியானால் அதில் இருந்து மூன்று நாட்களுல் உங்கள் உறவுகள்








அல்லது நண்பர் யாருக்காவது பாம்பு தீண்டும்,,..

பயந்தால் மந்திரம் செய்யும் என்னத்தை விட்டுவிடுங்கள்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, October 3, 2014

இரசவாதம்.. கல்லுப்பு

வணக்கம் தோழர்களே,

எமது பயனத்தின் போது கல்லுப்பு பற்றிய ஓர் தேடலுக்காக இந்து சமுத்திரத்தின் ஓர் பகுதியின் நிலப்பரப்புக்கு சென்றிருந்தோம்.

அருமையான கடல், அமைதியாக இருந்தது, குறித்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் புதையல்கள் அளவு கடந்து கிடப்பது தெரிந்தது..

மிக அருமையான மருத்துவப் பொருட்கள் குமிந்து கிடக்கும் ஓர் இடம் அது.. ஆனால் அந்த பிரதேசத்தை ஒட்டிய எந்த மருத்துவருக்கும் இது தொடர்பான எந்த ஆற்றலும் அறிவும் இல்லை..., அவர்களை பொருத்தவரை அங்கு இருப்பது கட்கள் அவ்வளவு தான்..

ஆனால் எமது கண்ணுக்கு தெரிந்தவை புதையல்கள்.., அதில் நாம் சிறப்பான பல விடயங்களை படமாக்கினோம்.. அவை ஒவ்வொன்றாக பதிவாகும் இங்கு..

அதில் ஒன்று இங்கு காட்டப்படுகிறது..

“ வாதியா மென்றுசொல்லி கல்லுப்பைதான்
வடிவாக விட்டுமே மூலிதேடி
சேதியாய் கேட்டுமே வாதம்சுட்டு
சிறப்பித்து திரிவார்கள் உலகவாதி”

“ ஆகுமே கல்லுப்பு திராவகத்தால்
வடைவான வேதையிது அடுத்துப்பாரு
ஏருமே சரக்கெல்லாம் கட்டிப்போகும்
மெளிதான லோகமெல்லாம் தானேநீரும்”

“ கொள்ளவே கல்லுப்பு பலமோபத்து
கூறான வீரமது பலமோபத்து
கொள்ளவே இதுவிரண்டும் கல்வத்திட்டு
விருப்பமாம் சாமமிரண்டு அரைத்துக்கொள்ளு”

இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய கல்லுப்பு இதுவாகும்..

சுக்காண் கல்லு இது இல்லை என்பதை மிக தெளிவாக அவதானிக்க வேண்டும்... இது கடலின் நுறையால் உப்பாக மாற்றப்படும் கல்.

கடுமையானதாக இருக்கும், நிலத்தில் பூனீரு பூப்பது போல் இது கல்லில் கடலின் நுறையால் பூக்கும், ஆனால் கடல்நுறையும் இல்லை.. இதன் மோல் எந்தக்காலத்திலும் கடல்பாசி படியாது.. அதை தவிர்த்து மற்ற இடங்களில் படியும்..

இதை முறையாக சுத்தி செய்தால் இதையும் அறு சுவைக்கு பயன்படுத்த முடியும்,

கல்லுப்பு என்றால் சமையலுக்கு பயன்படும் உப்பை எடுப்பது இல்லை, கல்லுப்பு நீருக்கு கரையாத உப்பு என்பதை தெளிவாக படிக்க வேண்டும்..

சமையல் உப்பிலும் இதன் தன்மை கிடைக்கும் ஆனால் மிக குறைவாக இருக்கும், அதாவது 100க்கு 10 வீதம் என்று..

படங்களை பார்த்தால் தெரியும்..
























நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, October 2, 2014

சரசுவதி மகா மந்திரம் - இருள் நீங்கட்டும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே,

இன்று விசயதசமி என்று மிக கடுமையான பூசைகளில் இருக்கும் அன்பர்களுக்கு ஓர் மந்திரப்பதிவு..

இது ஓர் அற்புதமான மகா சரசுவதி மந்திரம்.., இன்றில் இருந்து ஆரம்பிக்களாம், கல்வியில் மேம்மையடைய நினைக்கும் ஆண், பெண் இருவரும் உபாசணை செய்யலாம். பல அறிய இரகசியங்கள் படிக்கும் போது நமக்கு தெளிவடைய இம் மந்திரம் மிக உதவியாக இருக்கும்..

சுமார் 15 ஆண்டுகள் நாம் இதை உபாசணை செய்து, இதன் உண்மையான சக்தியை தெரிந்துகொண்டோம்..

இது குருமூலமாக கிடைக்கவேண்டியது என்பதால் எமது குருமாரின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்...

சரசுவதி மகா மந்திரம்

ஓம் மகா சரசுவதி, ஓம் வாடி ஈசுவரியே பரமசக்தியே வா வா, ஓம் நம சக்தி வா, ஓம் கணபதியே வா, ஓம் மந்திர சங்ஙாரியே வா, ஓம் பூவும் வா, திருவும் வா, ஐயும் வா, சவ்வும் வா, கிலியும் வா, புவணாபதியும், புவணேசுவரியும் என் நாவிலும் சிந்தையிலும் முன் நிற்கவே சுவாகா...


இயந்திரம்...

உபாசணை செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் இதன் இயந்திர பூசைகள் தேவையில்லை என்பதால் அதை பின்னர் தேவைப்படுபவருக்கு ஏற்ப கிடைக்கும்..

கிரிகை.

இன்றில் இருந்து தினமும் மாலையில் இதை வடக்கு முகமாக இருந்து எதிரே கலைவாணி இருப்பதாக உவமைப்படுத்தி குரு வணக்கம் செய்து பின் இந்த மகா மந்திரத்தை 64 முறை உபாசணை செய்து விபூதி பூசவும்..
இது விளையாட்டு அல்ல.. யாரிடம் விளையாடினாலும் கலைவாணியிடம் மிக அவதானமாக இருக்க வேண்டும்...

நாவில் இருப்பவள் என்பதால் சற்று காராசாரமான வார்த்தைகள் வர தொடங்கும் ஆனால் அது உங்களை சோதிப்பதற்கு என்று நினைவில் இருந்துங்கள்..

வரம் கிடைக்க முன், அதற்கான தகுதியானவரா என்ற சோதனை எப்போதும் உண்டு..

பாரம்பரிய மந்திரங்கள் பதிவிடுவதில்லை என்று இருந்தேன், இருப்பினும் இன்று இருள் நீங்கிய முழு நாள் என்பதால் உங்களில் சிலரின் இருளாவது விலகட்டும் என்று பதிவிடுகிறேன்..

இதையும் அப்படியே பிரதி செய்து உங்கள் இணையத்தில் போட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம்.. உங்கள் பதிவாகவும் போட்டு சரசுவதியின் விளையாட்டில் சிக்கிக் கொள்ளவேண்டாம்..



















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

மூலிகை ஆய்வு...

வணக்கம் தோழர்களே,


எமது பயனத்தின் போது செயற்திட்ட இடத்தில் இருந்து சுமார் 24 கி மீ. தூரத்தில் இருக்கும் ஓர் பெரிய காடு சென்று சில மூலிகைகள் ஆய்வுகள் மேற்கொண்டோம்... அப்போது நாம் கண்ட சில மூலிகைகள் உங்களுக்கு தொடர்சியாக பதிவிடுகிறேன்..


அத்துடன் பல மாதங்களாக தேடிய ஓர் அற்புத மூலிகையும் கிட்டியது.. அது தொடர்பான விளக்கம் பின்னர் தருகிறேன்..


















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, October 1, 2014

செயற்திட்டம் ஆரம்பம்....

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே...
செயற்திட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...
இன்னும் ஓர் வாரத்தில் நிலப்பரப்புக்கள் சுத்தம் செய்ய வேலையாட்களை நியமித்திருக்கிறேன்.. அதை எமது மாணவர் ஒருவர் அங்கிருந்து மேற்பார்வை செய்வார்.. அதன் பின் எமது கட்டிட வேலைகல் தொடங்க வேண்டும்.. எப்படியாவது இந்த மாத இருதிக்குள் கட்டிட வேலைகள் முடித்து அங்கு செல்லவேண்டும் என்ற நோக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..
கடந்த வருடம் இதை ஆரம்பிக்கலாம் என தொடங்கிய போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்படியே நிறுத்திவைத்திருந்தேன்.. ஆனால் இம்முறை எது எப்படி இருந்தாலும் இதை செய்வது என்ற முடிவுக்கு வந்தாயிற்று..
உங்களில் பலரின் ஒத்துலைப்பு கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் மிக மிக சிலர் மட்டுமே இதுவரை உதவியிருக்கிறீர்கள்.. பலரும் குடும்ப்பப் பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சினை என்று காரணம் காட்டியிருக்கிறீர்கள்.. பரவயில்லை... ”வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்” என்றது போல் நடப்பது நன்மைக்கே என்று செயற்படவேண்டியது தான்..
எமது வாசகர் ஒருவர் எமது செயற்திட்டத்துக்கான இணையத்தை தயார்செய்து வருகிறார்.. விரைவில் தளம் ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் மற்றும் வாசகரள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்..












எமது சேவை தனிப்பயன் உடையது அல்ல, இது உங்கள் சேவை உங்கள் செயற்திட்டம்.. அதின் வெற்றி உங்கள் முயற்சியில் தான் இருக்கிறது..
விரும்பிய போது நேரில் வந்து கற்கும் வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படிகிறது.. உங்கள் முயற்சி உங்கள் வெற்றி..
தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படிகிறது.. இதன் செலவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்,, முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்.. உங்கள் உதவியுடன்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Saturday, September 27, 2014

இடகலை, பிங்கலை, சுழினை

வணக்கம் மாணவர்களே... மணிகளே, சுடர்களே, எனதன்பின் முட்டாப்பசங்களே...

இதுவும் அது..அதுவும் இது...

“ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று
இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர்
இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால்
இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும்
இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன்
இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும்
இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி
இக்கலையை யறிந்துணர்ந்தவ் விடத்தில்நில்லே..””

“ நில்லென்று சொன்னதொரு ஆசான்வாக்கை
நிலைதவற விட்டாலே பலிதமாகா
அல்லவிதன் விபரமதை தெரியக்கேளு
அண்ணாக்கை யுண்ணாக்கி லயிக்கம்பண்ணி
நல்லாய ரவிமதிபூ ரணங்கண்மூக்கு
நானிலத்தில் வாய்செவியும் பரிசம்மெட்டும்
சொல்லாதே நடுவணையென் றிதற்குநாமஞ்
சொல்லிடுவார் கயிலாசஞ் சொர்க்கமென்றே..”

இதைவிடவும் ஓர் இலகுவான விளக்கம் உங்களுக்கு வாசி பற்றி பிராணாயாமம் பற்றி மூச்சுப் பயிற்சி பற்றி கூறமுடியாது..
பாடல் விளக்கம் குறிப்பாக..

இடகலை பிங்கலை சுழிமுனை என்ற மூன்றும் ஒன்று இது இன்பத்துடன் இருப்பதற்குறிய பொருள்.. இதுவே ஈசனாகவும் இருக்கிறது.. இது தெரியாமல் முட்டாள் பயலுகள் திரிறாங்கலாம்..இடது வலது நடு என்பது உச்சி நடு அடி என இருக்கிறது... இதை உணர்ந்து நில்..
இப்படி உண்மைய ஆராய சொன்ன குருவின் சொல்லை மதியாமல் திரிபனுக்கு இது பலியாது,,.. இதன் விபரம் என்னவென்றால் உள்ளிருப்பதையும் வெளியிருப்பதையும் ஒன்றாக கூட்டி உடலின் பரிசங்கள் எட்டுக்கும் இது தான் நடுவாகும்.. இதைத் தான் கயிலாயம் என்றும் சொர்க்அமென்றும் சான்றோர் கூறுவர்..
இப்படி கூறும் சித்தர்கள் எப்படி உங்களை மூக்கை பொத்திக் கொண்டு காற்றை இழுக்கவும் விடவும் சொல்லியிருப்பார்கள்.. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அதில் எத்தனை வீதம் பரிபாசை கலந்திருக்கும்..

“ என்றேபற் பலவாக யியம்புவார்கள்
இந்திரபுரி வைகுண்ட கயிலாசந்தான்
நன்றேகன் யாகுமரி காசிசேது
நலமான மேகமொடு நாதமென்றும்
வல்லதொரு காற்றுடனே சூட்சமென்றும்
மன்றாகு மவுனமுடன் ஆதியென்றும்
குன்றான ஆதிநடு முடிவீதென்றும்
குணமுடைய வஸ்துபதி யிதுயென்பாரே..”

இந்திர லோகம், வைகுண்டம், கயிலாசம், கன்யாகுமரி, காசி, சேது, மேகம், நாதம், காற்றின் சூட்சம், மவுனம், ஆதி, குன்று இப்படி எல்லாப் பெயராலும் அழைக்கப்பட்டது ஒன்றே...

ஏகாதசியில் செத்தவன் வைகுண்டம் போவான் என்று சொன்ன பழந்தமிழனின் வாக்கு இன்று பஞ்சாங்கத்தில் முடங்கிப் போனது..
கயிலாசத்துக்கு (இமயத்துக்கு) போனால் இன்று நமது மக்கள் மட்டும் ரிசிகளாகவும், சித்த்ர்களாகவும், யோகியாகவும், சாமியாராகவும் மாறுகிறார்கள்.. ஆனால் சுற்றுலாக்கு வரும் எந்த வெள்ளையனின் கண்ணுக்கும் தெரியாத காட்சி நமது மக்களுக்கு மட்டும் தெரிகிறது.. கேட்டால் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் காட்சி தரமாட்டார் என்பது...! ஏண்டாப்பா.. நம்பிக்கை இல்லாதனை நம்பவைப்பது தானே இறைவனின் ஆற்றலாக இருக்க வேண்டும்... கேட்டால் நம்பினார் கெடுவதில்லை என்பார்கள்... நாங்கு மறை தீர்ப்பு என்பார்கள்...நம்பாதவர்கள் யாரும் இங்கு வாழ்வதில்லையா.. உங்கள் பரமனை நம்பாத நாடுகள் உங்கள் நாட்டைவிட சிறந்த நாடுகளாகவும் செழிப்பாகவும் இருக்கிறதே.. இப்படிக் கேட்டால் விதண்டாவாதம் என்பார்கள்.. எதற்கும் அடியும் முடியும் தெரியாதவர்கள் கூறும் நொண்டிச் சாட்டுக்கு விதண்டாவாதம் என்று பெயர்..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.. இன்று குமரன் என்ற பெயரில் கோவில்கள் மட்டும் இருக்கிறது,.. குமரன் எவனையும் கானவில்லை..

இப்படி பல பல இரகசியங்கள் புதைந்த தமிழை பணத்துக்காக அடகு வைக்கும் ஆசாமிகளை என்ன சொல்வது..
கடவுள் என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு.. இதை சரியாக புரிந்தால் நீங்கள் யாரும் சாமியார்களிடம் போகப்போவதில்லை.. மந்திரவாதிகளை தேடப்போவதில்லை..

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால்.. நீ விரும்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி... அவரின் அன்பு எப்போதும் இருக்கும்.. அதை பணத்தை கொடுத்து வாங்க நினைப்பது அவரை நீ உதாசினம் செய்ய முடிவாகியது என்று அர்த்தம்..
அருச்சணை போட்டால் கஷ்டம் தீரும் என்றால்.. அருச்சனை போடாதவன் கஷ்டத்தை அவர் தீர்க்கமாட்டாரா... அப்படியானால் அவரை தாயுமானவர் என்றும், அன்பின் சொரூபம் என்றும், அன்பே சிவன் என்றும் ஏன் கூறுகிறீர்கள்..

அவருக்கு நீங்கள் அன்பு செலுத்த விரும்பினால் அதை நீங்கள் உங்கள்

கடமைகள் மூலம் சரியாக செய்யுங்கள்..
“ வையப்பா உபதேசம் யாராருக்கென்றால்
மைந்தனே யெச்சாதி யானாலென்ன
மெய்யப்பா தவறாத சீடன்வேனும்
மேன்மையுள்ள புத்தியதா யிருக்கவேணும்””

எமக்கு குரு வம்சத்தின் மூலம் கிடைத்த உண்மைகளை எமக்கு பின்னர் யார் எடுத்துச் செல்வார்கள் என்று தேடுகிறோம்... இதுவரை எவரையும் சந்திக்கவில்லை..

ஒன்று மந்திரம் கற்க வருகிறார்கள்.. கேட்டால் சமூக சேவை செய்ய என்பார்கள், அல்லது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க மந்திரம் தாருங்கள் என்பார்கள்... இப்படியே செல்கிறது பயனம்...

இன்றைய காலகட்டத்தில் அதை தவறாகவும் கூற இயலாது.. சிந்தனைகள் கடமைகள் என அளவு கடந்து தேவைகளை ஏற்படுத்திய சமூகத்தில் தேவைகள் அற்று உண்மையை தேட எத்தனை போர் வரப்போகிறார்கள்..

அனைத்தையும் தாண்டிய அம்சம் ஒன்று உண்டு என்பது பழந்தமிழன் வாக்கு.. அதற்கமைய காலத்தின் கட்டளையை காத்து எமது பயனம் தொடரும்..

இங்கு நீங்கள் யாரும் நல்ல மாணவர்கள் அல்ல என்ற அர்த்தம் அல்ல.. உங்கள் நிலை உண்மையை கற்பதை விட வாழ்க்கையை வெற்றியடையச் செய்வது என்ற பயனத்தில் இருப்பதால்... அந்த மாயையில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் எடுக்கும்...

வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, September 24, 2014

ஊரை ஏமாற்றும் புதிய கூட்டம்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே..

காலையில் ஓர் மின்னஞ்சல் நம்மை வயிறு குழுங்க சிரிக்க வைத்தது... கடிதத்தில் குறித்த ஒரு நபரைப்பற்றி கேட்டிருந்தார் ஒருவர்..

அதாவது குறித்த ஆசாமி நண்பர் வாசியோகப்பயிற்சி கற்பிக்கும் ஒரு சித்தராம்.. அவரின் ஆற்றல் பற்றியும் வாசி பற்றியும் எம்மிடம் கேட்டார் மின்னஞ்சல் மூலமாக ஒரு நபர்..

அதன் பின் நாம் குறித்த சித்தரின் முகநூலை அலசினோம்.. சிறிப்பு தாங்க முடியல.... அவர்களின் தளத்தில் இருக்கும் சில கட்டளைகள்.. இது குறித்த சித்தர் கூறுவதாம்...

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள் அனைவரும் வெளியிடங்களில் சாப்பிடநேர்ந்தால் மிதமான உணவு தயிர்சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மீறினால் உடல் உபாதைகள் ஏற்படும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள், சேவகர்கள், அனைவரும் மருந்து சாப்பிட கூடாது, வலிநிவாரணி உபயோகிக்க கூடாது
கை வைத்தியம் கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.”

“ வாசியோகப் பயிற்சியாளர்கள்,
பக்தர்கள் அனைவரும்
இரத்ததானம், உடல் உறுப்பும் தானம்,
செய்ய கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். ”

“ வாசியோக பயிற்சியில் புதிதாக சேரும் பயிற்சியாளர்கள் உடல் எடை கூடி வயிறு பெருத்து காண்பார்கள் இதற்கு காரணம் உடலில் உள்ள மலம்தான் .
உடலில் வயிறு பெருத்து இருப்பதற்கு காரணம் (கழிவு)மலம்தான் கழிவுகள் சேர்ந்து வயிறு பெருக்கிறது, பயிற்சி செய்ய செய்ய கழிவுகள் வெளியேறும் உடம்பில் எலும்போடு ஒட்டியதோல் போல் இருக்கும் .
இதில் தவறும் போது உன் எண்ணப்படி குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய். “

“ வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் டீ சாப்பிட வேண்டும்.”

” வாசியோகப் பயிற்சியாளர்கள் பக்தர்கள் அனைவரும் சரியாக 11 மணி , 11.30 மணிக்குள் தினமும் கொய்யாப் பழம் அல்லது நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.
கொய்யா பழம் (சிறிது என்றால் 2(இரண்டு) பெரியது என்றால் 1(ஒன்று) மட்டும்) சாப்பிட வேண்டும்.
1: ஒரு நாள் கொய்யா பழம் மறுநாள் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்
2:கொய்யா, நெல்லிக்காய் சாப்பிடும் போது டீ சாப்பிடக் கூடாது
அனைத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும், குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்.“

“ வாசியோகப் பயிற்சியாளர்கள், பக்தர்கள், அனைவரும் அதிகாலை புதினா, மல்லி, சாப்பிடவுடன் 15 நிமிடம் கழித்து பால் அல்லது டீ சாப்பிட வேண்டும், காப்பி வாழ்நாள் முழுவதும் சாப்பிட கூடாது.“

” குருகுலத்தில் பயிற்சிக்கு வரும் பயிற்சியாளர்கள், சேவையாளர்கள், பக்தர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட கூடாது
1: இடுப்பு வலிக்கு பெல்ட் போட கூடாது
2:கழுத்து வலிக்கு பெல்ட் போட கூடாது
3:சக்கரை நோய்க்கு ஊசி போட கூடாது
மீறினால் குருகுலத்தை விட்டு விலகிவிடுவாய்..“

****** எனக்கு மிக பிடித்த வியாபார உத்தி..****

“ வாசியோகப் பயிற்சிக்கு வருவோர் கணவன் மனைவியாக (குடும்ப சகிதமாக) வரவேண்டும்.

வாசியோகம் என்பது இல்லறத்தை நல்லறமாக்குவது ஆகும்

இதில் ஒருவர் மட்டும் பயிற்சி செய்தால் பலன்கள் காலதாமதமாகும்.”

” அதிகாலை எழுந்தவுடன் கால்களை மடக்கி அமர்ந்து குறித்த சித்தரின் (ஆசாமி) மந்திரத்தை (உதடு அசையாமல் முப்பது முறை) உச்சரிக்க வேண்டும்”
------------------------------------------------------------------

ஊரை ஏமாற்ற புதிய கூட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..

இந்த ஆசாமியை ஆரம்பத்திலேயா நிறுத்தவில்லை என்றால் உங்கள் சமூகம் மீண்டும் ஒரு புதிய சமயத்தை ஏற்க வேண்டி இருக்கும்..

வாசி என்றால் மூக்கால் காத்தை இழுக்கும் மடப்பயளுக்கு.. உடலில் ஒன்பது ஓட்டைகள் இருப்பது தெரியாது..

மூக்கையும் வாயையும் அடைக்கும் முட்டாள் மூலத்தையும் யோனியையும் எதனால் அடைப்பானோ... ஒரு வேலை தும்பு கொடுப்பார்களாக்கும் குரு குலத்தில்.. முட்டாப் பசங்க.. 



எப்படா திருந்துவீங்க..


எது நவராத்திரி


வணக்கம் மாணவர்களே/தோழர்களே,

நவராத்திரி பற்றி பலர் எம்மிடம் தொடர்சியாக கேட்டிருக்கிறீர்கள், அதன் வெளிப்பாடாக இந்த பதிவு..

நவம் என்றால் ஒன்பது, இராத்திரி என்றால் சூரியன் ஒதுங்கிய பொழுது என்றும் கருத்தாக இருக்கிறது....

எமது ஆய்வுகள் எப்போதும் உங்களுக்கு மகிழ்சியான கதைகளை கூறுவதில்லை என்பதால் இதையும் சற்று ஆச்சரியத்துடன் தான் பார்க்க வேண்டி இருக்கும்…

நவராத்திரி பற்றி சமயம் கூறுவது..

“மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் இவை இரண்டையும் சேர்த்த கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான். இதுவே இந்த படைப்பிற்கு அவன் எடுத்த கால அளவு ஒன்பதாக கூறப்படுகிறது.
இச்சை = விருப்பம் அல்லது ஆசை,
ஞானம் =அறிவு அல்லது தெளிவு,
கிரியா = செய்தல் அல்லது ஆக்கல் என பிரிக்கப்படுகிறது..

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் காலம்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.

இப்படி சிவ ஆகமங்கள் கூறுகின்றன்… இது பலருக்கும் தெரிந்த விடயமாக இருக்கும் என நினைக்கிறேன்..

இதன் பின்னர்.. விஜயதசமி..

” நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.”
இந்த இட்த்தில் தான் எமது ஆய்வுகள் ஆரம்பித்தன..
இறைவன் படைத்தலை விரும்பியதன் காரணமாக ஏற்பட்ட சக்திகள் என்று கூறும் ஆகமங்கள் ஒருபுரம், மகிடனை அழித்து ஆயுதங்களை பூசித்த நாள் என மறுபுரம்…,
இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்கள்,, ஒன்றாக எப்படி சேர்க்கப்படும்..

***இதை நாம் ஆராய தொடங்கினோம்,,, சுமார் 15 வருடங்கள் முன்னர் செய்த ஆய்வு என்பதால் சில குறிப்புக்கள் எமக்கும் மறந்து போயின.. இருப்பினும் இயன்றவரை ஞாபகப்படுத்தி பார்கிறேன்..***

இந்த குழப்பங்களை நமது சித்தர்களிடம் ஆராய முயன்றேன்.. பல ஆச்சரியங்கள் திடுக்கிடும் உண்மைகள் தெளிவாகின.. அன்றில் இருந்து நவராத்திரி என்ற ஒன்றை நாம் செய்வதே இல்லை..
ஆனால் நீங்கள் செய்ய வேண்டும்,, அல்லாது போனால் உணமை புரியாது..

சித்தர்கள் இதை நவகும்ப பூசை என்பார்கள். இது சக்திகளாக பிரிந்த சிவத்தை குறித்து செய்யும் பூசை முறை, ஆனால் இன்று இது சக்திக்குறியதாக மாறிவிட்டது..

இங்கு சக்திகளாக பிரிந்த ஒன்பது விடயங்கள் இங்கு பலவாக இரகசியமாக காட்டப்பட்டிருக்கிறது.. அதாவது நீங்கள் நவக்கிரகமாக வணங்குவதும் இந்த சக்திகளைத் தான்.. நவ துவாரங்களாக உடலில் இருப்பதும் இவைதான்.. நவபாசாணமாக இங்கு பிரிந்து கிடப்பதும் இந்த சக்திகள் தான்..

என்ன செய்வது இங்கு ஆன்மீக ஆராய்சியாலர்கள் மந்திரங்களை உருவாக்க தெரிந்தளவுக்கு உண்மையை தெளியும் அறிவில்லாமல் போய்விட்டார்கள்..

இறைவன் பஞ்சபூத சக்தி என்பதை பல முறை இங்கு கூறியிருக்கிறேன் அல்லவா.. அந்த பஞ்சபூத சக்திகள் பிரிந்தும் ஒடுங்கியும் இருக்கும் நிலைதான் இந்த நவசக்திகள்..
இலகுவாக உங்களுக்கு புரியவேண்டுமானால்.. மூன்று சக்திகள் கொண்ட பூசைக்கு எதற்கு ஒன்பது நாட்கள்.. அல்லது ஒரு நாள் பூசையில் குறித்த சக்தியை வழிபடமுடியாதா.. எதற்கு ஒவ்வொன்றுக்கும் மூன்று நாள் என்ற சிறு சிந்தனை இருந்தால் போதும். உங்களுக்கு தெளிவு கிடைக்கும்..

ஆகவே இங்கு மூன்று சக்திகள் என்ற பெயரில் மறைவாக இருப்பது ஒன்பது சக்திகள்.. இவை ஒன்பதும் குறித்த ஒன்றில் இருந்து பிரிந்த சக்தி அந்த ஒன்றை ஆதியானது என்பார்கள் சித்தர்கள்.. இதனால் தான் சக்தியாகிய பெண்ணை நவக்கிரக நாயகி என்று மறைப்பாக கூறினார்கள்..

ஆக மொத்தமாக பத்து சக்திகள் இதை பிரித்து ஒன்றாகவும் பலவாகவும் மறைத்தார்கள் சான்றோர்கள்..

இதை தமிழில் சிவயநம என பஞ்சாட்சரம் ஆக மறைத்தார்கள்.. அதில் உயிரும் மெய்யும் சேந்து பத்து சக்திகளை வைத்தார்கள்.. அதிலும் ஒன்று மூலமான சக்தி என்பதை காட்டுவதற்கு இகாரத்தை பதித்தனர்..

இ + ச் = சி
அ + வ் = வ
அ + ய் = ய
அ + ந் = ந
அ + ம் = ம

தமிழில் உயிர் எழுத்துக்கள் அகரம் எனவும், மெய் எழுத்துக்கள் உகரம் எனவும், உயிர்மெய் எழுத்துக்கள் இகரம் எனவும் அமைத்தனர்..

அதனால் சிவயநம என்பதில் பதினைந்து அட்சரங்கள் இருக்கும், அதில் ஐந்து வெளிப்படையாகவும் பத்து மறைப்பாகவும் இருக்கும், அதிலும் ஒன்று மட்டும் இகார வரிசையை மறைப்பாக காட்டி முன் நிற்க மற்ற அனைத்தும் அகரவரிசையில் காட்டியிருப்பர் சான்றோர்கள்..

இதனால் தான் பஞ்சாட்சரம் பல வடிவுகளில் எழுதப்பட்டு பல இயந்திரங்கள் அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் மட்டும் மாறுவதில்லை.. அதனால் தான் பஞ்சாட்சரத்தை அல்லது சிவன் ஐந்தெழுத்தை தமிழை தவிற வேறு எந்த மொழியிலும் எழுதவும் முடியாது..

ஆகவே படைப்பின் காரணமாகவும், படைப்புக்கு காரணமகவும் தோன்றிய சக்திகள் ஒன்பதாக பிரிக்கப்பட்டு அவை கடவுளின் அந்தரங்கமாக நவகிரகமாகவும், நவதுவாரமாகவும், நவசக்தியாகவும் தோன்றின..

ஆனால் இங்கு இன்று சான்றோரின் ஆற்றல்கள் மறைக்கப்பட்டு தமிழ் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுவிட்டது..
சமயத்தை ஆய்வு செய்ய வந்தவர்கள் சாமியாராகவும், சில இடங்களில் கடவுளாகவும் மாறி விட்டார்கள்.. சாமி யாரு என்று தேடி அவன் சாமியாகிவிட்டான்..

இதனால் தான்

”ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க”

“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐபுலக் கதவை அடைப்பதுவும் காட்டி”

”மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை”

இதனால் தான் சான்றோர்கள் தமிழ் இலக்கங்களில் இகாரத்தை சேர்க்கவில்லை.. ஏன் எனில் இகாரத்தை அளவிட முடியாது என்பது அவர்களின் தெளிவாக இருந்தது,..
அப்படியே சித்தர்களும் அகார, உகார, மகார, சிகார, வகார தீட்சைகள் சொன்னார்கள் ஆனால் இகார தீட்சை பற்றியோ அல்லது இகார மருந்துகளோ சொல்ல வில்லை..

எட்டும் இரண்டும் என்று பேசிய சித்தர்கள் அகரத்தை சிவம் எனவும் உகரத்தை சக்தி எனவும் கூறுவர் மகரத்தை சிவசக்தி என்பர் ஆனால் இகரம் பற்றி பேசவில்லை..

அளவிட முடியாத ஒன்றை எப்படி பேசுவது என்ற தெளிவு ஞானம் அவர்களுக்கு இருந்தது.

சித்தர்கள் தங்களை சிவம் என்பர், சதாசிவன் என்பர், சிவசக்தி சொரூபம் என்பர், முறையாக கற்பங்கள் உண்டால் அவனே சிவன் போல் சதாகோடி காலம் இருப்பன் என்பர்.. ஆனால் அவனும் இறப்பன் என்பர்.. அதிலும் இகாரத்தை வைத்தனர்.

சரி.. இதுவரை பேசியது நவராத்திரி என்பது மூன்று சக்திகளின் செயற்பாடுகள் இல்லை என்பதை காட்டவும், விசய தசமி என்பது ஆயுதம் தொடர்பான ஒன்றும் அல்ல. என்பதை காட்டவும்…

இங்கு இதற்கு சான்றாக ஓர் உதாரணமும் காட்டமுடியும்.. விசய தசமி போரின் வெற்றியை கொண்டாடுவதானால் ஏன், குழந்தைகளுக்கு கற்றலை, எழுதுதலை ஆரம்பிக்கும் நாளாக நமது சான்றோர்கள் அமைத்திருந்தனர்.. !

அதாவது ஓர் ஆரம்பம் இது என்பதை காட்டுவதற்கு மறைப்பாக வைத்தார்கள்..இறைவன் எழுத ஆரம்பித்த நாள் இது அதனால் இதில் குழந்தையும் எழுத ஆரம்பித்தால் அதுவும் சிறப்பாக எழுதும் என்ற அறிவின் நிமித்தம். ஆனால் இது இன்று சம்பிரதாயமாக மாறிவிட்டது…

ஆகவே நவராத்திரி என்றால் ஒளி அற்ற ஒன்பது என்று அர்த்தம்..
ஒளியை படைத்தால் அனைத்தும் தானாகவே படைக்கப்படும் (உற்பத்தியாகும்) என்பது தெளிவு..

அதுபோல் மகா சங்காரம் அல்லது மகா பிரளையம் என்றால் அது இருட்டு என்று அர்த்தம், இந்த இருட்டின் பின் அதற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனுக்கு ஒளி கொடுக்கப்படும், அவன் மூலம் இங்கு உயிர்ப்பு ஆரம்பமாகும்..

இதைத்தான் இன்று விஞ்ஞானம் “ பிக்பாங்” எனற முறையில் உறுதிசெய்கிறது..

நீங்கள் மிக தெளிவாக சிந்திக்க வேண்டும்.. பிரளையம், யுக முடிவு என்றால் இந்த பூலோகத்தை அழிப்பது என்று அர்த்தம் கிடையாது, அது கடவுளுக்கு தேவையானதும் இல்லை, சூரியனை ஒளி இல்லாமல் செய்தால் போதும்.. இங்கு நாம் இருக்கும் பிரபஞ்சம் இருண்டுவிடும், அதை விடுத்து இந்த சுனாமியும் தேவையில்லை, பூகம்பமும் தேவையில்லை, தீவிரவாதமும் தேவையில்லை..

தச அவதாரம் என்ற போரில் பூமியை வைத்து விளையாட்டுக் காட்டும் கதைகள் கடவுளுக்கு தேவையல்ல..

அத்துடன் அவர் இங்கு வந்து தான் அதை சாதிக்க வேண்டும் என்றால் அவர் கடவுளும் இல்லை..

சரி விடயத்துக்கு வருவோம்.. ஆகவே நவராத்திரி என்பது துற்கை இலக்குமி சரஸ்வதி என்ற மூன்று சக்திகளாக பிரிக்கப்பட்ட அம்சங்களுக்கு உரிய நிகழ்வு இல்லை.

வீட்டில் பொம்மைகளை வாங்கி அடுக்க அர்பர்கள் ஏற்பாடு செய்த ஓர் பண்டிகையகிட்டு..

நவராத்திரி என்பது இந்த படைப்பை ஏற்படுத்திய அதாவது இருளில் இருந்து வெளிவர ஒளியை தந்த சக்திக்கும் அவை ஒன்பதாக விரிந்து குவியும் நவசக்திகளுக்கும் நன்றி சொல்லும் ஓர் நிகழ்வாக இருக்க இதை ஆரம்பித்தனர் சான்றோர்கள்.. அப்படியே இந்த ஒன்பது சக்திகளும் பிரிந்த அந்த சக்தியை வெளிச்சத்தின் முன் வணங்கிய நாள் பத்தாவது நாளாக அமைக்கப்பட்டு. பத்து சக்திகளுக்கும் பத்து நாள் என பிரித்தார்கள்..

இதன் அடிப்படையில் நவசக்திகளையும் கொண்டு இங்கு உற்பத்தியான முதல் தாவர வகைகளாவன நவதானியங்கள் என பெயரிட்டு அவற்றை மீண்டும் இங்கு உற்பத்தி செய்யும் நாளாகவும் அமைத்தனர்.

இப்படி பல விடயங்கள் அடுக்கிக் கொண்டு போகக்கூடியதாக தமிழில் சான்றோர்கள் செய்தனர்..

அப்படியே உயிர்ப்புக்கு இறைவன் கையாண்ட மூலக்கூறுகளை நவபாசாணங்கள் என்று வகைப்படுத்தினர். அப்படியே அவன் எழுதிய எழுத்தை அல்லது சட்டங்களை நவக்கிரகமாக பிரித்தனர், அப்படியே அவன் மனிதனில் சுவாசமாக (சீவனாக) அடங்கும் விரியும் இடங்களை நவதுவாரங்கள் என்றார்கள்..

இதனடிப்படையில் தான் சில சித்தர்கள் நவபாசாணங்களில் சிலைகளை செய்து அவைக்கு உயிர் கொடுக்க முற்பட்டனர்..

ஆனால் அது பரமனின் இரகசியம்.. அது சித்தனுக்கும் இயலாது சித்தன் அப்பனுக்கும் இயலாது என்பதை புரிந்தபின்னரே அவர்கள் கிடைத்த இந்த உயிரையாவது நீண்ட நாள் நோயற்று இருக்க மருந்துகள், ஔட்தங்கள் என தேட ஆரம்பித்து காயகற்பங்களை கண்டறிந்தனர்..

இந்த காயகற்பங்கள் இயற்கையில் இருப்பதனால் தான் இயற்கை காலத்தை கடந்து இருப்பதும் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.. அதனால் தான் அவர்கள் சிவத்தை அடைவது என்பது காயகற்பம் சாப்பிட்டு யுகங்களை கடந்து இருந்து பிரளையங்களை பார்க்கவும், படைப்பின் இரகசியத்தை அறியவும் முட்பட்டார்கள்..

சித்தர்களை பற்றி முதலில் ஆராய வேண்டும் இந்த சித்தர்களை பற்றி மேடைப்போட்டு புகழ்பாடும் ஆசாமிகள்.. பெயருக்கு முன்னால் சித்தரையும், பின்னால் சுவாமியையும் சேர்ப்பது பெரிதல்ல.. அதற்கு உணக்கு அணுவளவு ஏனும் தகுதி உண்டா என பார்க்க வேண்டும்..

இப்போது உண்மையாக ஓர் தமிழனாக எப்படி நவராத்திரியாகிய, அந்த சக்திகளை வணங்கி நன்றி செய்யலாம் என பார்க்களாம்,..
உங்கள் வீட்டில் பூசை அறையில் வென்மையான துணிவிரித்து அதில் நவதானியங்களை சமமாக சேர்த்து பரப்பி அதன் மேல் ஒன்பது பூரணகும்பம் வைக்க வேண்டும்..

அதாவது மண்ணால் ஆன கலசங்கள் ஒறே அளவானவைகளாக எடுத்து அதற்கு நூல் சுற்றி, அதனுல் நீர் ஊற்றி, அதில் மாவிலைகள் வைத்து, மாவிலைகள் நடுவில் முடியுடன் கூடிய தேங்காய் வைத்து அதற்கு பொட்டு பூ வைத்து.. சலசத்துக்கு வெள்ளை பட்டு சுற்றி.. அதை நடுவில் ஒன்றும் மீதம் சுற்றியும் வைத்து இவை ஒன்பதையும் சுற்றி மீண்டும் வெள்ளை பட்டால் சுற்றி வழிபட வேண்டும்..

இதற்கிடையில் ஓர் மண் பாத்திரத்தில் ஈரமான மண்ணுடன் நவதானியங்களைப் போட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.. இந்த நவதானியம் வளர்க்கும் சட்டிக்கும் நூல் சுற்றி பட்டு சுற்றி பொட்டு பூ வைத்து வெள்ளை சீலையின் மேல், முன்னர் வைத்த ஒன்பது கும்பங்களும் பார்க்குபடி வைக்க வேண்டும்..
இங்கு நூல் சுற்றுவது, நீர் ஊற்றுவது, இலைவைப்பது தேங்காய் வைப்பது ஏன் என்று தெரியாவிடில்.. இதை செய்யாமல் இருப்பது சிறந்தது..

நவதானியங்கள் வளர்க்க நீங்கள் எடுத்த பாத்திரம் தான் பத்தாவது சக்தி.. அதாவது உற்பத்திக்கு காரணமாகிய அந்த சக்தி.. இகாரம் என நாம் கருதுவது..

இப்போது இந்த வழிபாட்டில் நீங்கள் தினமும் சூரிய ஒளி உங்கள் ஊரில் இருக்கும் காலத்தில் மட்டும், இந்த வெளிச்சத்தை தந்த அந்த சக்திக்கு நன்றி செலுத்துவது நவராத்திரி..

இரவில் வழிபட முடியாது, காரணம் நாம் நன்றி சொல்லப் போவது வெளிச்சத்துக்கு.. அதனால் தான் எந்த ஓர் விடயமாக இருந்தாலும் எந்த சமயமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் இங்கு விளக்கு அல்லது ஒளியை முதலில் வைத்தபின்னர் வணக்கம் தொடங்கபடுகிறது..

அந்த ஒளிக்கு காரணமான சக்தியை வணங்குவது தான் நவராத்திரி..

இதற்கு காலம் என்ற ஒன்று தேவையல்ல, எப்போது உங்களுக்கு நன்றி செலுத்தும் வசதி இருக்கிறதோ.. அப்போது செய்யலாம், அதனால் தான் இங்கு சூரிய ஒளி இல்லாத காலமும் தரப்பட்டிருக்கு..

அது போலவே நமது கலாச்சாரத்தில் இறந்தவர் தலையருகில் விளக்கு வைக்கிறோம்.. அதாவது இறப்பு என்பது இருட்டு என்றும் பிறப்பு என்பது வெளிச்சம் என்பதும் இங்கு காட்டப்படுகிறது.. இறந்தவன் வெளிச்சத்தை நோக்கிய முக்தியை அடையட்டும் என்ற அடிப்படையில் சான்றோர்கள் செய்தார்கள்.. அதனால் தான் விதகள் முதல் கருவரை முதல் பிறப்புக்கு முன்னர் இருள் சூழ்ந்திருப்பது சாட்சியாக இருக்கிறது..

எப்படி வணங்குவது என்று கேட்கிறீர்களா..

உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்கள் நன்றியை மட்டும் சொல்லுங்கள் அதற்கு எந்த மந்திரமும் தேவையில்லை இயந்திரமும் தேவையில்லை, தந்திரமும் இல்லை, அப்படியே நன்றி சொல்ல உங்களுக்கு பிடித்த உணவுகளை தினமும் அவர்களுக்கு அர்பனித்து அதை உங்களைச் சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவாக கொடுங்கள்..

பத்தாவது நாள் உங்களிடம் நன்கு வளர்ந்த தாவரங்கள் பல இருக்கும் அதில் சிலவற்றை தனியாக பிரித்து உங்கள் வசதிக்கேற்ப நடுங்கள்,, அவற்றை பாதுகாத்து அதில் இருந்து ஒரு முறையாவது தானியம் சிலவற்றை பெற்று அதில் உணவு சமைத்து சாப்பிடுங்கள்.. இதுவே கடவுளின் தொழில் எப்படியானது என்பதை உங்களுக்கு உணர்த்தும், அத்துடன் படைப்பின் உண்மையை உணர்ந்து நீங்கள் செய்த நன்றிக்கும், நீங்கள் அந்த தானியங்களை காத்து வளப்பதுக்கும் உறிய பலன் என்ன என்பதை கடவுள் என்ற அந்த சக்தி உங்களுக்கு அடுத்தவருடம் நவராத்திரிக்கும் முன்னர் அடையாளப்படுத்தும்..
நவக்கிரகம் என்ற பேரில் நீங்கள் ஆலயம் போகவும் வேண்டாம், பரிகாரம் செய்யவும் வேண்டாம்.. அவர்கள் யார் என்பது மட்டுமே இங்கு நமக்கு தேவையான அறிவு.. மீதம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..

இப்போது புரிந்திருக்கும் இந்த சாதகம் பார்ப்பது சாதகம் கணிப்பது எங்கிருந்து வந்திருக்கும் என்றும்.. படைப்பின் இரகசியம்.. கடவுளின் சூட்சுமம் அதற்கு அட்டவணை போட்டால், கடவுளுக்கும் போடுபவனுக்கும் என்ன வேறுபாடு.. ஆகவே அந்தக் கணக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்..
இரகசியம் என்றால் அது ஒருவனுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கு எல்லாருக்கும் எப்படி தெரிந்தது… 
 

 


 
 
 
 
 
 
 
 
 
 
குறிப்பு..

இது எமது ஆய்வியல் தெளிவு.. யாரையும் இதை பின்பற்றச் சொல்லவில்லை.. முடிந்தால் உங்கள் அறிவை தெளிவடைய செய்து பாருங்கள்.. முடிந்தால் அதன்படி நடவுங்கள்.. இல்லை என்றால் உங்கள் சித்தம்,,..

” ஒருவனென்றே தெய்வத்தை வணங்கவேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனதைவிடான் பரமஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்கள் அப்பனே அனேகங்கோடி
வார்தையினால் பசப்புவார் திருடர்தானே.”

” சத்தியே பராபரமே ஒன்றேதெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு
பத்தியினால் மனமடங்கி நிலையில்நிற்பார்
பாழிலே மனதைவிடார் பரமஞானி
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ்சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந்தானே.”

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Sunday, September 21, 2014

போகரும் புலிப்பாணியும்..

வணக்கம் தோழர்களே,

நேற்று இரவு எமது வாசகர் ஒருவர் அழைபேசியில் கன்னியாகுமரியில் இருந்து வாதம் ஒன்றை செய்தார்..

அதாவது அவர் எம்மை பற்றி அவரின் சில நண்பர்களிடம் விசாரித்தாராம், எமது மருத்துவக் குறிப்புக்களை காட்டி கேட்டிருக்கிறார், அதற்கு அவரின் நண்பர் எம்மை நல்ல மருத்துவர் என்று சான்றிதழ் கொடுத்தபின்னரே அவர் எம்மிடம் மருந்து வாங்கியதாகவும், பதிவுகளை நம்பிப் படிப்பதாகவும் கூறினார்..

இதில் என்ன இரகசியம் என்றால் அவரின் நண்பர் மூன்று தலைமுறையாக சித்த மருத்துவர்களாம், ஆனால் தற்போது பணம் சம்பாதிப்பதற்காக வேறு தொழில் செய்வதாகவும் கூறினார்.. இதற்கிடையில் நாம் 7 தலைமுறை தாண்டி சித்தர்கள் வழியில் இருக்கிறோம் ஆனால் நேற்று வந்தவர்கள் எல்லாம் சான்றிதழ் கொடுத்தால் தான் மருந்து சாப்பிடுவார்களாம்.. சிரிப்பாக இருந்தது..

அத்துடன் அவர் நத்தைசூரி மூலிகையும், பறட்டை விதையும் தேடுகிறாராம் அந்த மருத்துவ பாரம்பரிய நபர்.. சிரிப்பிலும் சிரிப்பு..

ஆனால் அவர் வாதம் செய்ய வந்த விடயம் வேறு.. அவருக்கு எமது மருந்தில் சந்தேகம் இல்லையாம்.. காரணம் சான்றிதழ் இருப்பதால்..

ஆனால் சாத்திரம் பற்றியும் சாமி ஆடுவது பற்றியும் கேட்டார்.. அவரது தம்பி சாமி ஆடுகிறானாம் அதனால் சாமி ஆடுகிறது என்கிறார்..அப்படியே அவருக்கு சாதகம் பார்க்கும் வியாபாரம் இருக்கும் போல அல்லது கற்கிறார் போல அதனால் அது உண்மை என்றார்..

ஆனால் எப்போதும் போல கேள்விகளுக்கு விடை தெரியாது, வாதம் மட்டும் செய்ய தெரிகிறது நன்றாக...

சூரிய உதயம் இல்லாத இடங்களில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி சாதகம் எழுதுவது என்றால் .....! பதில் இல்லை..

சூரிய உதயம் இல்லாத நாட்டுக்கு பஞ்சாங்கம் எழுதுவது எப்படி.! பதில் இல்லை..

ஆனால் சில கிரகத்தின் பெயரை சொல்லி அது அங்கு நின்றால் இது பலன், இது அங்கு நின்றால் இது பலன் என்கிறார்.. நாம் கேட்டோம் அது இது அங்கும் இங்கும் இருக்கு என்று எப்படி கூறமுடியும் என்று.. அவர் அதை கணிக்க முடியும் என்றார்.. நல்லது எப்படி கணிப்பது யார் அதை கணிக்கும் முறையை சொன்னது என்றால் தெரியவில்லை..

அப்படியே குறித்த இரண்டு கிரகம் குறித்த இடத்தில் இருந்தால் ஆண்மை குறைபாடு இருக்குமாம் என்றார், அதற்கு சித்த மருந்துகள் சாப்பிட்டால் குணம் கிடைக்குமாம் என்றார்.. அவரிடம் கேட்டோம்.. மருந்து சாப்பிட்டு குறை நீங்கியதும் கிரகங்கள் இடம் மாறுமா என்று...அவர் அது தான் தனக்கும் சந்தேகம் என்கிறார்..

புலிப்பானி சித்தர் போகரின் சீடராம் (எம்மிடம் கூறுகிறார்) அவர் பல சோதிட நூல்களை செய்தாராம் அதில் பல விடயங்கள் கூறியிருக்கிறாராம்.. நாம் கேட்டோம் அப்படியானால் அவர் சாதகம் கணிக்கும் முறையும் கூறினாரா என்று.. அவர் அது தெரியாது என்கிறார்..

எந்த விடயமும் அடியும் முடியும் இல்லாமல் பேசும் அளவுக்கு அவர் திறமையானவர் என்பது தெரிந்தது.. அது அவரின் குற்றம் அல்ல சமூகத்தின் குற்றம்.. அதன் இசைவாக்கம் அவரை பேச வைக்கிறது.. அவ்வளவு தான்.. ஆனால் அவரின் குருவிடம் கேட்க அவரால் முடியவில்லை.. அது தான் பிரசினை,, கேள்வி கேட்டால் உடனடியாக இவர் வெளியேர வேண்டும் போல..

சரி அவருக்கும் அவரின் குரு மாருக்கும்,, மற்றும் சாதக சிந்தாமணிகளுக்கும்,, சோதிட சக்கரவர்த்திகளுக்கும்... இந்த சாட்டை அடி.. வாங்க தயாராகுங்கள் முட்டாள் பசங்களா...

1. உங்கள் கணிதம் சரியானதாக இருந்தால் எப்படி ஒரு சூரியனுக்கு இரண்டு உதயம் இருக்க முடியும்..

வாக்கியம், திருக்கணிதம் என பஞ்சாங்கம் எப்படி இருக்க முடியும்.. கணிதம் என்றால் விடை (பதில்) எந்த விதத்தில் போட்டாலும் சரியானதாகவும், ஒன்றானதாகவும் வர வேண்டும்.. உங்களிடம் இருக்கும் கணிதம் பல ஒரு கேள்விக்கு பல விடைகள் தருகிறது.. இது எப்படி கணிதமாகும்..

முன்னர் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை இந்த கேள்விக்காவது பதில் வருகிறதா பார்க்களாம்..

புலிப்பானி சித்தரின் அப்பன் போகர் சொல்வதை கேளுங்கள் முட்டாள் பசங்களே...

“உண்டான கட்டளைகள் அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
திண்டான நல்லநாள் தீயநாளும் திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
சண்டாள மாண்பரெல்லாம் சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
கொண்டபடி யவரவர்கள் தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே”

“ஆமேதான் கெட்டநாள் நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
போமேதான் கதிரோனின் நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநா ளென்றிருக்க
வேமேதான் நாளெட்டும் நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
ஆமேதான் நாதரவர் செய்திருக்க வப்பனே நம்மாலே யாவதென்ன”

“என்னவே தேவனது யெட்டுநாளும் எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
பன்னவே வெள்ளிதனில் திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
சொன்னபடி காரிதனில் சவளமாகா துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
நன்மையாய் திங்களது வாரசூலை நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே”

“ நாட்டமுடன் செவ்வாய்க்கு மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
தேட்டமுடன் புதனுக்கு வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
நீட்டமுடன் குருவாரம் ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் தீயநாளாய்
வாட்டமுடன் சாஸ்திரங்கள் கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே”

“காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால்
தோணவே எந்தநாள் நல்லநாளென்று துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
வேணவே நாளெட்டும் நல்லநாளாய் விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு மதிகெட்டு நின்றிட்டாரே”

““ஆச்சப்பா வையகத்தில் சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
பாச்சலுடன் சாத்திரங்கள் கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
ஆச்சரிய மானதொரு தேகமப்பா வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே”

போகர் இல்லை என்ற விடயத்தை புலிப்பானி இருக்கு என்கிறார் என்றால் சிந்தக்க வேண்டும் முட்டாப்பசங்களே…. அதில் ஏதோ இரகசியம் இருக்கு என்று…

போகர் நாட்களை எட்டு என்று கூறியிருக்கிறார் மேதாவிகளே..அதற்காவது அர்த்தம் தெரிகிறதா..சிந்தாமணிகளுக்கு..

அறிவு கெட்டு திரிவதை விட்டு கற்பதை தெளிவாக கற்க வேண்டும்..

அப்படியே அவர் சாமி ஆடுவது பற்றி பேசினார் ஆலயத்தில் வில்லுப் பட்டு பாடும்போதும், தீப ஆராதனை செய்யும் போதும், இப்படி சில நேரங்களில் அனேகருக்கு சாமி வருவது பொய்யா என்றார்.. நாம் கேட்டோம் வரும் சாமி ஏதாவது ரேஸன் காட் வைத்திருக்கா.. அல்லது பாஸ்போர்ட் இருக்கா.. அவர் கோவிலிள் சாமிதான் வரும் என்றார்… நாம் பேய் வராதா என்று கேட்டோம்,,, அவர் ஆலயத்தில் எப்படி கெட்ட்து வரும் என்றார்…

அப்படியானால் கோயில் கோபுரங்களில் இருப்பது யார்… பேய் என்றால் கெட்டது என்று எதை வைத்து கூறுகிறீர்களோ அதே செயலை தெய்வங்களும் செய்வதாகவே புராணங்கள் கூறுகிறது..

ஏன் பரமன், சிவன், ஒருவன், தலைவன் என நீங்கள் புகழும் பாடும் ஆதியானவர் சுடலையில் இருப்பவர், பேய்களுக்கு தலைவர், பூதங்கள் பிசாசுகளுடன் திரிபவர் அவரின் படைகளே அவை தானே.. கெட்டவர்களை வைத்து அரசியல் செய்யும் அவர் மட்டும் எப்படி நல்லவராக உங்களுக்கு காட்சி தருகிறார்…

சாமி பூலோகம் வரவேண்டுமானால் நேராக வருவது தானே, எதற்கு மனிதன் மீது வரவேண்டும்.. அப்படி நேராக வர சக்தியில்லாத ஒன்று எப்படி சாமியானது…

இது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்,.. மேலும் வேண்டுமானால் இனி பணம் கட்டிப் படிப்பவர்கள் மாட்டும் வாருங்கள்..

பணம் கொடுத்து படிப்பது தான் உண்மை என்ற நிலை உங்களையும் சேர்த்து முட்டாளாக்கி விட்டது போல…

அப்படியே புலிப்பாணி பாடிய நூல்களை படிக்கும் முன் இதைப் படியுங்கள் முட்டாள் பசங்களே..

காலங்கிநாதர் போகருக்கு கூறிய புத்தி..

” மாண்பான சாஸ்திரத்தை யுந்தன்சீஷன் மகத்தான புலிப்பாணிக் குபதேசித்தீர்
ஆண்மையுள்ள சித்தாதி சித்தரெல்லாம் அவர்பேரில் மெத்த மனஸ்தாபமுண்டு
வீண்போன்ற சாத்திரமா இருந்தாலல்லோ விருப்பமுடன் அவர்தமக்கு உபதேசிக்க
தாண்மையுள்ள சாத்திரந்தான் சத்தகாண்டம் தாரணியில் சாத்திரங்கள் மெத்தவுண்டே”

” தானான சத்தகாண்ட மேழாயிரந்தான் தகமையுடன் கூறிவிட்டீர் தோஷமில்லை
பானான யெண்ணாயிரஞ் சாத்திரத்தை பகரவேண்டாம் புலிப்பாணி நாதருக்கு
தேனான சாத்திரத்தை மனதுவந்து தேற்றமுடன் மேருகிரி தன்னிலப்பா
கோனான குகைதனிலே வைத்தாலல்லோ கொற்றவனே லோகமெலாம் மதிப்பார்தானே”

புலிப்பாணிக்கு அணைத்தையும் கற்பிக்க வேண்டாம் என போகரின் குரு காலங்கிநாதன் கூறுவதைப் பாருங்கள்..

அடியும் தெரிவதில்லை முடியும் தெரிவதில்லை.. வாதம் செய்ய வந்தாச்சு…

இது குறிப்பிட்ட அந்த வாசகருக்கு மட்டும் அல்ல.. அவர் மேல் எந்த தவறும் அல்ல.. அவரையும் ஏமாற்றிய அர்ப்பர்களுக்கு…

இது போதும் என நினைக்கிறேன்… தேவை எனின் மீண்டும் தொடரும்… போகரின் காண்டம் மட்டும் இப்போது தந்திருக்கேன்.. தேவைப்படுமயிம்….. உங்கள் கைகளில் இல்லாத பாடல்கள் எல்லாம் வரும்….

“ பாடலாய் மறைத்துவைத்த சங்கையெல்லாம் பாரிலுள்ள மாண்பர்களுங் கண்டுகொள்வார்
தேடவே சாத்திரத்தை புனிதவானே தேற்றமுடன் புலிப்பாணிக் குறுதிகூறி
ஆடவே யம்பலத்தில் நல்லோர்தம்மை அறிவுடையோர் சிவயோக மாண்பருக்கு
கூடவே சாத்திரத்தை தேர்ந்துமல்லோ குணமான வெகுபுத்தி கூறுவீரே”

உங்கள் விளையாட்டுக்கள் இங்கு வேண்டாம்...

எமது குருகுல மாணவர்களாக வர இருக்கும் வாசகர்கள்... இதைப் போன்ற பல இரகசியங்கள் கற்பதற்கு தயாராக இருங்கள்..

சித்தர்களை பார்க்க வேண்டும் அல்லவா... நியத்தில் பார்க்களாம்... தயாராகுங்கள்...

ஆனால் நீங்கள் புலிப்பாணி போகருக்கு இருந்தாற்போல் இல்லாமல்,

.. போகர் காலங்கிநாதருக்கு இருந்தாற்போல் இருக்க வேண்டும்.

” விட்டகுறை தொட்டகுறை இல்லாவிட்டால் தரணியில் சித்தர் அருள் கிடையாதப்பா..”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, September 19, 2014

உங்கள் பங்களிப்பு எப்படி...

எமது குருகுல மற்றும் சித்தர்கள் மருத்துவ ஆய்வியல் செயற்திட்டம்.. ஓர் பார்வை..

இது முழுமையான ஓர் தமிழ் மற்றும் சித்தர்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் கற்கும், ஆய்வு செய்யும் ஓர் செயற் திட்டம்..
இங்கு ஆன்மீகம், மாந்திரீகம், மருத்துவம், இரசவாதம் என சித்தர்கள் மற்றும் தமிழ் சான்றோர்கள் கூறிய பல விடயங்கள் உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இது இருக்கும்..

இதில் பல குருமார்கள் பங்கெடுப்பதாக மாணவர்களை பயிற்றுவிக்க உதவுவதாக எமக்கு உறுதி கூறியிருக்கிறார்கள்.. அவர்கள் இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஞானிகள்..

எம்மிடம் இருக்கும் ஆய்வுகள் இவர்கள் எமக்கு தந்த அறிவின் வெளிப்பாடு என்றால்.. அவர்களை பற்றி அதிகம் பேசத்தேவையில்லை..

இவர்களுல் சிலர் எம்மை கற்பித்த குருமாரும் ஆகும்.. இவர்கள் மேடைபோட்டு பேசும் ஆசாமிகள் அல்ல, இலைமறை காயாக சமூகத்தில் இருக்கும் ஞானிகள்... சிலர் இரசவாதம் பற்றியும், சிலர் மாந்திரீகம் பற்றியும், சிலர் மருத்துவம் பற்றியும் சில தமிழ் பற்றியும் உங்களுக்கு கற்பிக்ககூடும்..

சித்தர்களை அவர்களின் குகையில் சென்று சந்திக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது என்று காலம் தீர்மானிக்கட்டும்..

இதில் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழையும் சித்தர்கள் விஞ்ஞானத்தையும் ஆய்வு செய்ய விரும்பும் அனைவரும் பங்கேட்கலாம்.. இது ஒரு தனி நபர் அமைப்பு இல்லாமல் முழுமையான மாணவர்கள் அமைப்பாக இருக்க வேண்டும் என்பது எமது அவா..

இதில் ஆண் பெண் என்ற வேற்றுமை கிடையாது,, வயது எல்லை உண்டு.. அதாவது உங்கள் வயது நீங்கள் சுயமாக முடிவெடுக்கும் காலத்தை கொண்டது..

எல்லாம் சரி எப்படி நாங்கள் இதை முழு நேரமாக கற்பது என்ற சிந்தனை வேண்டாம்.. விஞ்ஞானம் கற்ற போகிறோம் ஆகவே அதற்கு இணையம் துணையாக இருக்கும்..

பதிவு செய்யும் மாணவர்கள் இணையத்தின் வழி தனி அடையாளம் மற்றும் கடவுச் சொல் மூலம் எமது தனித்துவமான தளத்தில் சேர்ந்து வாதங்கள் பயிற்சிகள் என ஒளி ஒலி காட்சிகள் மற்றும் கட்டுரைகள், செயற்திட்டங்கள் என பலவற்றையும் பெறலாம்.

அதற்கு மேலாக எமது ஆய்வியல் மையத்தில் குறித்த காலத்துக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு பங்கெடுக்கும் வாய்ப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும்.. அதற்கு தேவையான வீசா மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்..

இது தவிர்த்து இந்தியா மலேசியா மற்றும் சில நாடுகளில் ஆய்வியல் மையத்தின் சிறு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்கள் தரப்படும்..

இதில் உங்களுக்கு என்ன பலன் என்று சிந்திக்கிறீர்களா..! அதாகப்பட்டது.. இதுவரை எமது பதிப்புக்கள் ஆய்வுகளை உற்று நோக்கியவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஓர் விடயம்,, காலம் காலமாக நாம் செய்துவரும் பல விடயங்கள் உண்மையானவை அல்ல என்றும், நமது தமிழ் சமூகம் எங்கு சென்றாலும் கொச்சைப்படுத்தப் பட்டு துணையின்ன்றி இருப்பதற்கு காரணமும் நமது மூட நம்பிக்கைகள் தான் என்றும்..

இந்த சமூக அமைப்பில் இருந்து எமது வளர்ந்து வரும் குழந்தைகளை காக்க வேண்டும், உலகுக்கு தமிழன் ஆதியானவன் என்பதை காட்டவேண்டும். அதற்கு தேவையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களை நாம் தயார் செய்ய வேண்டும்.

இப்படி பல காரணங்கள் இருக்கிறது அத்துடன் எமது வாழ்க்கை சிறப்பகவும் காலத்தை முடிந்தவரை கடந்தும் வாழ்ந்துகாட்ட வேண்டும்.. தமிழ்ன் தவிர எவனாலும் இது சாத்தியம் இல்லை என்ற விஞ்ஞானத்தை கொடுக்க வேண்டும்..

பிறந்தோம் திண்றோம், படுத்தோம், இறந்தோம் என இல்லாது சாதித்து காட்டினோம் என்ற பேரானந்ததுடன் கண் மூட வேண்டும்.. காலதால் அழியாது நிற்கும் தமிழ் எழுத்துக்கள் போல் எமது பெயர்கள் நிலைக்க வேண்டும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நிரூபிக்க வேண்டும்... பாடசாலைகளில் விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலில் நீங்களும் சேரவேண்டும்..

சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சாமியார்கள் எனும் ஆசாமிகளிடம் இருந்து மக்களையும் சமயத்தையும் காக்கவேண்டும்..

இங்கு அனைவரும் கடவுள் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

இன்று மதமாற்றம் செய்யும் துரோகிகளை அடையாளம் இல்லாமல் செய்யவேண்டும் வேண்டும்.

எஞ்சிக்கிடக்கும் தமிழையாவது காத்து புதுப்பிக்கவேண்டும்.

பணத்துக்காக ஓடும் மக்கள் கடவுளை பணம் அச்சடிக்கும் இயந்திரமாக கருதுவதை மாற்ற வேண்டும்..

அனைத்துக்கும் மேலாக கடவுள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்..

இப்படி பட்டியல் தொடர்கிறது..

இதை எல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டால்,,, இப்படி கேட்டதன் பலன் தான் தமிழ் வளர்த்த கடவுளர் வேறு மொழொயில் இன்று வணங்கப்படுவதும் அவருக்கு பலரும் முதலாளிகள் ஆனதும்.

இதே தவறை நாமும் செய்வதானால், அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

சிறப்பாக வாழ்ந்த தமிழன் இன்று சீரழிக்கப்படுவது எதனால்.. நமக்கென்ன என்ற சிந்தனையின் பலன் தான் இது..

பிறவியால் எவனும் சித்தனும் இல்லை ஞானியும் இல்லை.. முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..

எம்மால் (எங்களால்) இவை சாத்தியமா என்ற சிந்தனை வருகிறதா.. கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதில் ஐயமில்லை அதனால் தான் சாமியார்களிடம் அனேகமாக ஏமாற்றப்படுவது தமிழனாக இருக்கிறான்..

முயற்சியை நாம் தொடருவோம்.. பலனை கடவுள் என்ற சக்தி தீர்மானிக்கட்டும்..

” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்”

என்ற வாக்கின் படி முயற்சி செய்யலாம் அல்லவா..

இந்த செயற்திட்டத்துக்கு உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..

“ எறும்பூர கல்லும் தேயும்” நாம் எறும்புகளாக இருந்து பாறைகளை தேய்க்கலாம்..

” மெல்லமெல்ல பாயும் தண்ணீர் கல்லை உருக்கிப் பாயும்” என்றது போல் நாமும் முயற்சி செய்யலாம்..

இதுவரை எம்மிடம் இருந்த சேமிப்புக்களை வைத்து காணி நிலம் இதற்காக வாங்கி அதில் ஓர் சிறு கட்டிடம் ஏற்படுத்தி, நான்கில் இரண்டு பகுதிக்கு சிறு வேலி போட்டு அதைல் ஒரு பெரிய கிணற்றையும் கட்டியிருக்கிறோம்.. அதாவது 5 ஏக்கர் அளவு கொண்ட ஓர் காட்டு காணி..

ஆய்வு மையத்துக்கு ஏன் இத்தனை பொரிய இடம் என்ற கேள்வி வருகிறதா..

தொடங்குவதற்கு பணத்தை சேர்ப்பதே கடினமாக இருக்கும் நிலையின் ஆய்வுகள் சேவைகள் என எவ்வாறு முயற்சியை தொடருவது.. அத்துடன் இது ஓர் சித்தர் கலை பற்றிய ஆய்வியல் அல்லவா.. ஆகவே அவர்களின் அறிய வகை மூலிகைகள் மற்றும் எமது ஆய்வுக்கு தேவையான மூலிகை மற்றும் கட்டிட அமைப்பு என பல விடயங்கள் தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாடு..

இதுவரை சுமார் 2000க்கு மேற்பட்ட மூலிகைகளை கண்டிருக்கிறோம், அவற்றை முறையாக தோட்டமாக செய்த்து மக்களுக்கு காட்டவேண்டும் அல்லவா..

உதாரணமாக நத்தை சூரி வேரை காசு கொடுத்து வாங்கும் எத்தனை பேர் இது நத்தைச் சூரிதான் என ஆராய்ந்து வாங்குகிறார்கள்.. அத்துடன் நத்தை சூரி என்ற பேரில் இணையத்தில் இருக்கும் எதுவும் நத்தைச் சூரி இல்லை..

இப்படி பல மூலிகைகள்.. பல அற்புதங்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

அதில் தமிழ் தந்த சிவனின் சமாதி பதிணெண் சித்தர்கள் சமாதி என பல விடயங்கள் வர இருக்கிறது.. தழ்மி மொழியை தந்த சிவனை வடமொழொயில் வணங்குவது எவ்வளவு கொடுமையானதும் பாவமானதுமான விடயமாக அவர் கருதுவார்..

இப்படி பல செயற்பாடுகள் கொண்டதாக இந்த திட்டம் இருக்கும்..

இந்த செயட்திட்டத்தின் பிரதான ஆய்வியம் மையம் இலங்கையில் இருப்பதற்கும் காரணம் உண்டு.. அதாவது நாம் கூற முற்படுவதும், செய்ய முட்படுவதும் பல சாமியார்கள் மற்றும் சமயங்களை விற்கும் ஆசாமிகளுக்கும் பாரிய பிரச்சினையாக வரும்.. அதில் இந்தியா முதலிடம் வகிப்பதால் அவர்களின் பல தொல்லைகளும் எமக்கு ஏற்படும், அரசியல் நகர்வு மற்றும் பாதிப்புக்கள் என எமது செயற்திட்டத்தை தடுப்பதற்கு பலரும் முன்வருவார்கள்.. அதுவும் பண வசதி அவர்களிடம் தான் குவிந்து கிடப்பதால் அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்..

இங்கு எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இங்கு நாம் அரசாங்கத்துக்கு எந்த தொல்லையும் செய்யாத வரை எவரும் எம்மை தொல்லை கொடுக்கப்போவதில்லை.. அத்துடன் போலிச் சாமியார்கள் ஆசாமிகல் என பிரச்சாரங்கள் மிக குறைவான நாடும் இது.. மற்றும் தமிழர் இங்கு தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களின் ஆத்மாக்களும் இந்த தமிழ் தொண்டிற்கு உதவி செய்யட்டும்...

தமிழ் நாட்டுக்காக பாடுபடும் மக்கள் தமிழ் மொழிக்காகவும் பாடுபடுவது மிக அவசியம்.. தமிழர்களிடம் இத்தனை திறமைகள் இருப்பதை காட்டினால் தானே தமிழ் மீது மக்களுக்கும் பற்றுதல் அதிகமாகும்..

இதன் மீதமான விளக்கங்கள் அடுத்த பதிவாக வரும்,, அதற்கிடையில் உங்கள் கருத்துக்களையும் உங்கள் சிந்தனைகளையும் பகிருங்கள் பார்ப்போம்..

அளவு கடந்த பணம் வைத்திருக்கும் எந்த தமிழனும் இதை விரும்புவதாக தெரியவில்லை.. இருப்பினும் நாம் அதை தகர்த்து வெற்றியடையவேண்டும்..

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

சித்தர்களின் பாதம் வணங்கி உங்களிடம் இதை சமர்பிக்கிறேன்..

தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்து பதிவதாக இருந்தால் அதை மின்னஞ்சல் செய்யுங்கள்..

muthaly@gmail.com

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, September 18, 2014

ஆகாய வயிரவர்

வணக்கம் தோழர்களே,

தொடர்சியான சில மந்திர பதிவுகளை படிக்கும் வகையில் நாம் வேத கால மந்திரங்கள் உங்களுக்கு தருகிறோம்.. அத்துடன் போலியான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் சமூகத்துக்கு முடிந்த வரை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாம் இந்த பதிவுகளை பகிர்வதன் மூலம் உண்மைகள் அவர்களுக்கு தெரியவரும் என்பதை மனதில் நிறுத்தி... அதற்கமைய தகவல்களை பகிருங்கள்..

நீங்கள் மட்டும் பலனடையவேண்டும் என்று மற்றவரை போல் தன்னலத்துடன் இல்லாமல் செயற்படுங்கள்..

வயிரவர் பற்றிய விடயங்கள் மந்திரங்கள் பற்றிய அடுத்த பதிவு இது..

ஆகாய வயிரவன் தந்திர நூலில் இருந்து இந்த பதிவு..

ஆகாய வயிரவர் மூல மந்திரம் இது.. குறித்த நூலின் படி..

“ ஓம் நமோ விஜய வயிரவாய ப்ரலயாந்ததாய மகா வயிரவாயா ஸ்ர்வ விக்ந நிவாரணாய சக்தி தராய சக்ரபாணாயே வடமூல நிஷண்ணாய அகில கண நாயகாயா ஆபதுத்தாரணாய ஆகர்ஷய ஆகர்ஷய ஆவேஷாய மோஹய மோஹய ப்ராமய ப்ராமயா பாஷய பாஷய சீக்ரம் பாஷய ஹ்ராம ஹ்ரீம் த்ரிபுரதாண்டவாய பாஷய ஸ்வாஹா:||”

இது மிக அற்புதமான மந்திரம் என சிலர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் நாம் உபயோகிப்பதில்லை.. வடமொழியில் அவ்வளவு பற்றுதல் இல்லாத காரணமும், அளவுக்கு மேலாகவே தமிழ் மந்திரங்கள் குவிந்து கிடப்பதாலும், சித்தர்களின் உண்மைகள் நன்கே தெளிவாக புரிந்ததனாலும், எமது மந்திரப் பிரயோகம் எல்லாம்... தமிழை அடிப்படையாக கொண்டது..

இதற்கு பதில் ஆகாய வயிரவர் என்ற ஆதி வயிரவனை நாம் அழைக்கும் மந்திரம் தமிழில் இப்படி இருக்கும்...

” ஓம் சிறியும் கிலியும் என நின்ற திரிசூல வயிரவா ஐயும் கிலியும் என நின்ற அட்டவயிரவா ஆகாய வயிரவ சக்தி வயிரவா சங்கார வயிரவா........................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
........................................
என் முன் நிற்கவே சிவாகா...

நீங்கள் எந்த மொழியில் வயிரவனை வணங்கினாலும், அவரின் செயல் இருளை அழித்து ஒளியை தருவது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்..

உண்மை ஞானம் தேடி அவரை அழைக்கலாம், ஆனால் பண ஞானம் தேடி அழைக்கவேண்டாம்,, இருப்பது இல்லாமல் போகும்..

இவ்வாறு தமிழில் மந்திரங்கள் தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது அதனால் நாம் வேதம் வடமொழிக்கு சொந்தம் என கூறமுடியாது..

குறிப்பு,.. கருத்துக்கள் பதியுங்கள்... அப்படியே பதிவையும் பகிருங்கள்... உண்மையானவை மக்களை சென்றடைய காரணமாக இருங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

கால வயிரவர்

வணக்கம் தோழர்களே,

இதோ நீங்கள் எதிபார்க்கும் வயிரவனை முறையாக வழிபட....

ஆகாய வயிரவ தந்திர நூலில் இருந்து.. இது நாம் காசியில் இருந்த போது கால வயிரவனை தரிசிக்க பயன்படுத்திய மந்திரங்களில் ஒன்று.. இது கிரந்த அட்சரங்களில் எம்மிடம் கிடைத்தன அவற்றை உங்களுக்கு தமிழில்..

“ ஓம் நமோ பகவதே காலாய கோராய வஜ்ர தம்ஷ்ட்ராயா |
சத்ரு நாசாய ஸர்வ பூத தமநாய ஹூம் பட் ஸ்வாகா|| ”

இது இன்று பலருக்கு தெரியும் ஆனால் இதன் தன்மையை புரிவது எந்த அளவு இலகுவானது அல்ல என்பது அகோரிகள் கருத்து..

இதைப் போல் சித்தர்கள் வழியில்... நாம் உபாசனை செய்த மகா கால வயிரவன் மந்திரம்..

“ ஓம் அகார உகாரா உக்கிரப்பிரளைய காலதாண்டவராயா அகோர அட்ட லிங்க ஆதி பரமேசுர புத்திரா கால வயிரவா.....................................................................................
.....................................................................................................
உன் குரு ஆதி சிவன் ஆணை என் வாக்கில் .....................
ஓம் அ ... .... .... ... .... எனும் பஞ்சாட்சரத்தின் ... ...... வா வா சிவாகா”

இங்கு மந்திரத்தை முழுமையாக பதிவிடமுடியாமைக்கு வருந்துகிறேன்.. காரணம் நமது பதிவுகள், அதில் இருக்கும் உண்மைகள் தேவைப்படுவதில்லை பலருக்கும் ஆனால் மந்திரங்கள் மட்டும் தேவைப்படும், அது மட்டும் இல்லாமல் நாளை பலரது இணையப்பக்கங்களில் அது அவர்களின் பாரம்பரிய முறையாக மாற்றப்பட்டிருக்கும்..

ஆகவே எமது மாணவர்களாக எமது குருகுல செயற்திட்டத்தில் பங்கெடுக்கும் வாசகர்கள் மட்டும் இதைப் போல் பல உண்மையான மந்திரப்பதிவுகளை பெருவார்கள்..

இந்த மந்திரத்தை முறையான இயந்திரம் இரும்புத் தகட்டில் கீறி மண்டலம் ஒன்று தனியாக இருந்து பூசை செய்தால் கால வயிரவர் யார் என்பதை அனைவரும் காணலாம்..

மந்திரங்களின் தன்மையும் மாணவர்களின் பக்குவ நிலையும் தெரிந்தே குரு மந்திரங்களை உபதேசிப்பர் என்பதை மனதில் வையுங்கள்..

வேத மந்திரங்கள் போல் சித்தர் மந்திரங்கள் விளையாட்டு அல்ல..சரியான குருவும் சரியான வழிகாட்டலும் சரியான பற்றுதலும் இல்லாது போனால் வாழ்க்கை மிக ஆபத்தாக மாறிவிடும்.

ஆகாய வயிரவ தந்திர நூலில் இருக்கும் மந்திரம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.. அது உங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்