வணக்கம் தோழர்களே,
நமது பயனத்துக்கு ஆயத்தமாகும் வேலைகள் அதிகமாக இருப்பதால் புதிய விடயங்கள் எதையும் பதிவிட முடியவில்லை.
எம்மை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றிய விடயங்கள் வெள்ளிக்கிழமை முக நூலில் தரப்படும். மேலும் பலரும் பயன்படும் வகையில்
சென்னையில் மாந்திரீக வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என நினைக்கிறேன்.
பலரிடமும் சென்று பணத்தை செலவு செய்து ஒன்றும் பலன் கிடைக்கவில்லை என்ற
கவலையில் இருக்கும் அனைவரும் இதில் பங்கேட்கலாம்.
இது ஓர் அறிமுக
வகுப்பாக அமைக்கலாம் என இருக்கிறேன், பலரிடமும் சென்று எதுவும்
நடக்கவில்லை என்பதற்கான காரணம் என்ன, வெறுமனே மந்திரங்களை உபாசனை செய்தால்
நீங்கள் நினைப்பது நடக்குமா போன்ற அடிப்படை விளக்கத்துடன் சில ஆரம்பகட்ட
உபாசனைகள் இயந்திர விளக்கம், மை முதல் அஞ்சனம் வரை இருக்கும் ரகசியம் என்ன,
போன்ற விடயங்களை தெளிவுபடுத்தி முறையான வெற்றிக்கான பாதை எது என்பதை
நீங்களே அறிவைக் கொண்டு தெளியும் உண்மைகளை வகுப்பாக அமக்கலாம் என
இருக்கிறேன்.
இதில் நிச்சயமாக பல பாரம்பரிய இரகசியங்கள்
விளக்கப்படும், மேலும் அஷ்டகர்ம வினை பற்றிய சரியான பாதைகள்
தெளிவுபடுத்தப்படும். இயந்திர விதிமுறைகள் மற்றும் முத்திரைகள் பயன்படும்
முறைகள் அதன் பரிபாஷையாக வந்த விடயங்கள் பேசப்படும்.
இது
நிச்சயமாக இலவசமாக இருக்காது அத்துடன் அதிகமாகவும் இருக்காது.. பலரும்
பங்கேட்கும் அளவு இடம் ஏற்பாடு செய்வதற்கு தேவையான செலவுகள் மற்றும் உணவு
உபசாரங்களுக்கு தேவையான பணமும் கட்டணமாக அறவிடப்படும்.
எமக்கு
மின்னஞ்சல் மூலம் வரும் கோரிக்கைகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனைகள்
செய்வதற்கு நேரம் போதாத காரணமும் எங்களுக்கு கூறவில்லை என்ற பிரச்சனையும்
வரக்கூடாது என்பத்ற்காக இந்த ஏற்பாடுகள் செய்யலாம் என இருக்கிறேன்.
உங்கள் மின்னஞ்சல்களுக்கு தனித்தனியே பதிவுகள் இட்டுக்கொண்டிருந்தால் எமது
வேலைகள் தாமதமாகின்றது, ஆகவே எம்மை சந்தித்து பேசவும் தீர்வுகள்
தேவப்படும் தோழர்கள் இந்த வகுப்புக்கு வருவதன் மூலம் உங்கள் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.,
மேலும் எமது பாட நெறிகள்
மலேசியாவில் அடுத்த மாதம் இடம்பெற இருப்பதால் எமக்கான சென்னைப் பயனத்தின்
நாட்கள் மிக குறைவாக இருக்கின்றது, அதனால் தனித்துவமாக பேசவேண்டும் என்ற
ஆசை இருப்பவகள் கூட இந்த வகுப்புக்கு வருவதன் மூலமே எமது தொடர்பை
பெறக்கூடியவாறு அமையும் என்பதையும் நினைவில் வையுங்கள்.
இந்த
வகுப்பில் என்ன கற்றுத்தரப் போரார் என்ற கேள்வி வேண்டாம், எமது வலைத்
தளத்தை பார்த்து படித்து அதன் உண்மையை புரிந்தவர்கள், எது உண்மை என ஆய்வில்
இருப்பவர்கள் யாரும் பங்கேட்கலாம். வாதம் விவாதம் பேசுபவர்களும் அன்புடன்
பங்கேட்கலாம்.
உங்கள் கருத்துக்களை பகிரவும், ஞாபகத்தில்
வையுங்கள் விதண்டாவாதம் செய்பவருக்கு நாம் கொடுக்கும் பதில்கள் சற்று
காரசாரமாக (சிவசக்தி) இருக்கும்.
எமது முக நூல். https://www.facebook.com/siththarvaakadam
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Thursday, June 5, 2014
Saturday, May 31, 2014
இந்திய பயனம் எதிர்வரும் 5ம் திகதி
வணக்கம் தோழர்களே மற்றும் மாணவர்களே,
எமது இந்திய பயனம் எதிர்வரும் 5ம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது எனபதை மகிழ்ச்சியோடு தெரிவிற்கிறேன்.
எம்மை சந்திக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ உதவியை எதிர்பார்க்கும் தோழர் தோழிகள் எம்மை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால், எமது தொலைபேசி இலக்கம் கிடைக்கும் அதன் மூலம் எங்கு எப்படி நம்மை சந்திக்கலாம் என்ற தகவல் கிடைக்கும்.
நமது ஆய்வுக்கான பயனம் இது என்பதால் குறிப்பிட்ட சில தினங்களே உங்களை சந்திக்க முடியும் என்பதால் தேவை இருப்பின் குறிப்பிட்ட தினத்தில் நம்மை சந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள், தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்து எம்மையும் உங்களையும் சிறமத்துக்கு தல்லவேண்டாம்.
ஆகவே முன்கூட்டியே அனுமதி பெருபவர்களை மட்டுமே சந்திப்பதாக இருப்பதால் உண்மையான தேவை இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
muthaly@gmail.com

Friday, May 30, 2014
தாதுக்கள் கெடுதல்
வணக்கம் தோழர்களே,
இன்றும் ஓர் மிக இரகசியமான மருத்துவ முறையை செய்ய ஆரம்பித்த போது எடுத்த படங்கள் இது.
உடல் தாதுக்கள் கெட்டு பிண்டத்தில் அக்கினி அதிகரித்து அதன் காரணமாக முக்குற்றம் எனப்படும் வாத பித்த கபங்களின் செயற்பாடுகள் மாற்றமடைந்து உடலின் பலம் கெட்டு பல வித ரோககங்களை ஏற்படுத்தும். இதனால் உடல் சோர்வடைந்து அளவுக்கு மீறிய எடை குறைந்து தீர்வற்ற பல உடல் உருப்புக்களை செயலிலக்க வைக்கும். அதிலும் மேலாக குருதியின் வெண் சிறு துணிக்கைகள் மிக குறைவடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலமிலக்க செய்யும்.
இப்படி உடல் தாது வர்கத்தின் தாக்கம் என்ன என்று சரியாக புரியாமல் பல மருந்துகளையும் எடுப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கான சரியான காரணங்கள் கிடையாது தீர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மொத்தமாக 64 வகையான சரக்குகள் சேர்கின்றன. இங்கு குறிப்பிடத்தக்க முக்கியமான மூலிகைகள் மற்றும் பாஷானங்கள் படமாக தரப்படவில்லை.

மதன சுந்தரி இலேகியம்
வணக்கம் தோழர்களே,
தாது வலுவுக்கான மருந்துகள் பற்றிய காட்சிகள் முன்னர் தரப்பட்டது அதன் ஒரு பகுதியான மருந்துகளை பிரித்து “ மதன சுந்தரி” எனும் பாரம்பரிய இலேகியம் ஒன்றை தயாரித்த போது எடுத்த படம் இது.
(இது நாம் உண்பதற்காக என்று வைத்துக் கொள்ளுங்கள்)
அது என்ன “மதன சுந்தரி” மன்மதனின் மனைவியர் ஒருவரின் பெயர் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உடல் சூட்டை கட்டுப்படுத்தி நாபிக்கமலம் வழியே ஏற்படும் தாது உபாதைகளை தீர்க்கவல்லது. அத்துடன் முருகவேல் எனும் அழகுக் கடவுளின் தேகத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை (அனுபவ உண்மை) மேலும் இதை பெண்களுக்கு என சில மூலிகை சரக்குகளை மேன்படுத்தி மண்டலம் உண்டால் கிழவியும் குமரியே ( உடல் சதை தொகுதி இருகி மீண்டும் குமரியாவாள்) என்பதிலும் மாற்றம் இல்லை. அத்துடன் குழந்தை இன்மை என்ற பெண்களின் ஆறு உடல் பிரசினையில் குறிப்பிடும் படியான மூன்று வகையான பிரச்சினைகளுக்கு இது சரியான தீர்வாக நாம் கையாண்டு வந்திருக்கிறோம்.
காய கற்ப மருந்துகளின் வகையைச் சேர்ந்த இது பாரம்பரிய முறையாக கைகண்ட மருந்தாக உபோயாகப்படுகிறது.
சுமார் 64 வகைக்கு மேல் மூலிகை சரக்குகள், இரண்டு விதமான பற்பங்கள், அத்துடன் சிறு தேன், வென் பசுவின் நெய் என தேடி தேடி தேர்வு செய்யப்பட்ட முறைகளை கொண்டு மட்டுமே இதை செய்ய முடியும்.

Monday, May 26, 2014
கொலஸ்ட்ரால் மற்றும் இதயக் கோளாறு
வணக்கம் தோழர்களே,
காலையில் இதய நோயாளிக்கு தேவையான சூரணம் ஒன்றை தயார் செய்த படங்கள்.
இம் மருந்து கொலஸ்ட்ரால் பாதிப்பால் குருதி நாலங்க சுருங்கி மூர்சை ஏற்படுதலை சீர் செய்யும், அதாவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு படிமங்களை அகற்றி சுவாச நிலையை துரிதப்படுத்தும். அத்துடன் நுரையீரலையும் சுத்தி செய்யும்.
இதன் முக்கிய விளைவாக குருதி தனது நீரியல் தன்மையை துரிதப்படுத்தி வேகமாக இதய நாலங்கலிள் பயனிக்கும். மேலும் குருதி சிறு துணிக்கைகள் புத்துணர்வு பெற்று நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்கி செயற்படும்.
உங்கள் நோய்களை சொல்லி மருந்துகளை கேட்க வேண்டாம், முறையான பரிசீலனை செய்யாமல் மருந்துகள் ஆலோசனை செய்வது (குறிப்பிட்ட நோய்க்கான) மிக தவறானது. எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எமது சென்னை பயனத்தில் சந்திப்பதற்கு அனுமதிகளை பெற்றால், முடிந்த வரை உதவி செய்கிறேன்.
இதில் சில முக்கிய (இரகசிய) மூலிகைகள் படமாக்கப் படவில்லை. காரணம் படம் பார்த்து வியாபாரம் செய்யும் அன்பர்களும் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

Sunday, May 25, 2014
மதுமேகம், எழும்புருக்கி
வணக்கம் தோழர்களே,
இரண்டு நாட்களாக மருத்துவ வேலைகள் அதிகமாக இருந்தமையால் பதிவுகள் தரவில்லை.
இது மதுமேகத்துடன் கூடிய இரத்த நாலங்களில் இருக்கும் அடைப்புக்களை நீக்கி உடல் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி உடல் சீராக இருக்க பயன்படுத்தும் ஓர் பாரம்பரிய சூரணம்.
இதில் இரச பற்பம் 10 : 1 என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகிறது.
மதுமேகத்தின் விளைவாக ஏற்படும் இரத்த நாலங்களின் அடைப்புக்களுக்கு அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தில் சரியான தீர்வுகள் இல்லாத காரணங்களால் நோயாளர்களின் கால் கை போன்ற உருப்புக்கள் துண்டிக்கப்படுகின்றன.
ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கான பல தீர்வுகள் உண்டு, நோயாளியின் நாடி நிலையை சரியாக கணித்து, அவரின் சலம் மற்றும் குருதியை சித்த மருத்துவ முறையில் சோதித்து அதற்கேற்ப சரியான மருந்துகளை கொடுத்தால் நிச்சயமாக மதுமேகத்தை அதனுடன் கூடிய நீரழிவு, எழும்புருக்கி, குருதிஅனல், நேத்திர ரோகம் போன்றவை நீங்கும்.

Friday, May 23, 2014
சத்திசுர குடி நீர்
வணக்கம் தோழர்களே,
இன்னும் ஓர் மருத்துவ பகிர்வு.. இதில் எழுதி இருப்பதை கூறுங்கள் பார்க்களாம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
இன்னும் ஓர் மருத்துவ பகிர்வு.. இதில் எழுதி இருப்பதை கூறுங்கள் பார்க்களாம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
வயிற்றுக்கடுப்பு
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மருத்துவக் குறிப்பு உங்கள் குழந்தைகளுக்காக..
கண்டத்தையும் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக்கடுப்பு தீர மிக இலகுவான பாரம்பரிய கைகண்ட மருந்து (குடி நீர்) இது.
ஓமம். நாவல் மரத்துளிர் இரண்டையும் சரி எடையாக எடுத்து சிறு தீயில் வறுத்து, சுத்த சலம் விட்டு எட்டு ஒன்றாய் காய்ச்சி கொடுக்க சில நிமிடங்களில் வயிற்றுக் கடுப்பு பஞ்சாய் பறக்கும்.

சிகப்புடுத்தி காட்சி
வணக்கம் தோழர்களே,
கலையில் அம்பாலின் அபிஷேகத்தின் பின்னர் சிகப்புடுத்தி காட்சி..
” உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”
” நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே “

Monday, May 19, 2014
பிரமச்சரியம் .,,,
வணக்கம் தோழர்களே,
இந்த (இந்து) சமய மேதாவிகள் சாமியார்கள் என்ன சொல்றாங்க என்னே புரியமாட்டேங்குது. எனது புலம்பல், யாரையும் குறிப்பிடவில்லை.
முக நூலில் இணையத்தளத்தில் பரவலாக பேசப்படும் போதிக்கப்படும் விடயங்களில் இந்த சைவ அசைவ கோட்பாடு மிக கடுமையாக இருக்குது. அதிலும் பிரமச்சரியம் ஒருபக்கம்.
முக்திக்கு வழி என்ற பெயரில் நடப்பது என்ன என்ற தெளிவுகூட இல்லாமல் மக்கள் பணத்தை செலவு செய்து பாவத்தையே பாக்கியமாக பெருகிறார்கள் போல இருக்கு.
இந்த சைவம் அசைவம் இரண்டையும் பற்றி பேசி முக்திக்கு வழி காட்டும் வாதிகளிடம் ஒரு சிறு கேள்வி.
” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் “
இப்ப சிவபுராணத்தின் படி ஒரு ஆத்மா இத்தனை பிறவிகளை எடுக்கிறது என்று கூறப்படுகிறது அல்லவா..! இதன் படி மிருகமாக அசுரராக பாம்பாக பறவையாக பல பிறவிகளை எடுக்கும் போது இந்த அதே ஆத்மா எவற்றை எல்லாம் சாப்பிட்டிருக்கும். அப்படி கண்டதையும் சாப்பிட்ட அதே ஆத்மா தானே முக்தியையும் அடைய பாடுபடுகிறது. இப்படி இருக்க சைவ அசைவ விடயம் ஒன்று எப்படி முக்தியை தடுக்க முடியும். இதில் சைவ அசைவம் என்றாலே என்ன என்று இங்கு யாருக்கும் தெரியாது அது அப்படி இருக்க, இந்த சைவ அசைவ கேட்பாடுகளை கூறும், கூறியதாக கட்டப்படும் கதைகளின் அர்த்தம் என்ன.! (வியாபாரம்..!)
அப்படியே பிரம்மச்சரியம் காக்க வேண்டுமாம், விந்து கழிதமாகதவனே முக்தியை அடைவானாம், யோகம் கிட்டுமாம், ஞானம் கிடைக்குமாம், மந்திரம் சித்தியாகுமாம் இப்படி பல புரட்டுகள் வேறு. ஏங்க உங்க அம்மா அப்பா இணைந்ததால் தான் நீங்களே வந்தீங்க, இல்லேன்னா நீங்களே இல்ல, அப்படி இருக்க விந்து விடக்கூடாது பிரமச்சரியம் காக்கனும் என்றால் எப்படி சாத்தியம். சரி அதையும் விடுவோம்..... படைத்தலின் அடிப்படையே விந்தில் தானே இருக்கிறது, நீங்கள் விந்தை விடவில்லை என்றால் இறைவனின் தத்துவத்துக்கெ முறனானவராக மாறுகிறீர்கள், அப்புரம் எப்படி இறைவனை நோக்கி முத்தியை அடைவது.
பிறப்பு இல்லை என்றால் யாருங்க சமயத்தை வளர்ப்பது. பிறப்பு இல்லை என்றால் யாருங்க வரலாற்றில் உங்கள் பெயரை முக்தியடைந்தவர் இவர் என்று பதிவு செய்வது. பிறப்பில்லை என்றால் எப்படி பிரபஞ்சம் இயங்குவது, பிறப்பில்லை என்றால் யாருக்காக இறைவன் தேவைப்படுகிறான். பிறப்பில்லை என்றால் ஏனுங்க இந்த வரலாற்று சுவடுகள் நமக்கு..
விந்து என்ற சொலுக்கான பொருள் என்ன என்று தெரியாதவர் எல்லாம் சமய வாதிகள் சாமியார்கள், ஆதீனாதி பதிகள். தமிழ் அகராதியையும் நிகண்டையும் எடுத்து வைத்துக்கொண்டு பொருள் தேடும், பொருள் கூறுவதும் ஞானம் அல்ல. அதை குழந்தை கூட சொல்லும்.
ஏங்க காவி அல்லது வெள்ளை கட்டிக்கொண்டு உலக வாழ்கையை விட்டு வெளியேறினால் முக்தி கிடைக்கும் என்று யாருங்க கண்டுபிடிச்சது. அல்லது அவங்க சொன்னது சொல்றது எல்லாம் சரி என்று எந்த ஆய்வும் செய்யாமல் எப்படி இங்க நம்புகிறீங்க..!
உங்கள் வீடுகளில் இருக்கு சாமிப்படங்களில் எத்தனை சாமிகள் காவியும் வெள்ளையும் உடுத்து உலக வாழகைக்கு உட்படாமல் இருக்கு என்று பாக்க மாட்டீங்கலா..! அல்லது வெறும் படம் என்றால் ஏங்க வீட்டில் வைத்து பூசை செய்றீங்க..!
அன்றைய காலகட்டத்தில் முனிவர், சித்தர், ஞானியர், என அவர்கள் காடுகளில் இருந்தார்கள் என்றால் அதற்கான காரணத்தை சரியாக ஆய்வு செய்ய வேண்டும், அதை விட்டு அவர்கள் உலக வாழ்கையை வெறுத்து காடு சென்றனர் என்றும், பிரமச்சரியம் காத்தனர் என்றும், சன்னியாசம் பூண்டனர் என்றும் கூறுவது அறியாமையின் வெளிப்பாடே..!
இந்த ஆச்சி(ரமம்) என்ற பெயரில் பணம் சம்பாதிக்க சமயத்தையும் இறைவனையும் மக்களையும் ஏமாற்றாமல் இருந்தாலே முக்தி கிடைக்கும்.
இது எனது தனிக்கருத்து, தவறு என்று உணரும் அன்பு நெஞ்சங்கள் தடை இன்றி எனது முக நூலை விட்டு வெளியேறலாம், அதை விட்டு வாதம் செய்ய முட்பட்டு விதண்டாவாதம் செய்வதாக நம்மை பேசினால், தண்டனை உடன் கிடைக்கும் (அது தாங்க நண்பரில் இருந்து நீக்கம்) செய்யப்படுவீர்கள். உங்கள் கருத்தை உங்கள் முக நூலில் பதிவிடுங்கள். சாட்சிகளுடன் பேசுங்கள் ஆய்வு செய்வோம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோமுதலியார்

Friday, May 16, 2014
துவாலை மறிக்க பெண்களுக்கு
வணக்கம் தோழர்களே,
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓர் மாந்திரீகப் பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி, ஆனால் மற்றவர்கள் தங்கள் தளங்களில் போட்டு கூறி விற்காவிட்டால் போதும்.
இது பெண்களுக்கு மிக அவசியமான ஓர் பதிவாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.
துவாலை மறிக்க என்ற பெயரிடப்பட்ட மந்திரிக வரிசையில் இலகுவான முறை இது. அதாவது துவாலை என்பது பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் பெருக்கை குறிக்கும். தொடர்ச்சியான உதிரப் பெருக்கு ஏற்பட்டு பெண்கள் அதிக சோர்வடைவதால் பல உடல் மன உபாதைகள் ஏற்பட்டு மிகவும் வருந்தியவன்னம் இருப்பார்கள். அவர்கள் தாங்களே இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டு பயன்படுத்த முடியும்.
மந்திரம்
ஓம் பஞ்சமாயோகி பாதாளயோகி பரமசிவனே பாரச்சட்டி என்முகம் இறங்காதே, நில்லடி அம்மே திரிமுடி காளி திருவசம் பற்றாதே தறியடி தம்போதறி சுவாக..
கிரிகை.
ஒரு சிறு கலசத்தில் கை படாமல் சுத்த சலம் எடுத்து அதில் சற்று விபூதி தூவி இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அருந்தினால் துவாலை கட்டும்.
மந்திரத்தை சித்தி செய்ய..
தினம் 108 வீதம் 7 நாட்கள் உருச் செய்யவும். பின்னர் தேவையானவருக்கு சலம் உரு செய்து கொடுக்கலாம்.

கொல்லிமலையில் பூசை
வணக்கம் தோழர்களே,
கடந்த பவுர்ணமி தினத்தில் எமது பிரதான மாணவர்கள் கொல்லிமலையில் பூசை செய்த போது.
நாம் எங்கிருந்தாலும் எமது ஆசிகளும், இறைவனின் ஆசிகளும் எப்போதும் கிடைக்கும்.
” முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே “
நன்றி
சிவஸ்ரீ மா. கோ முதலியார்

Wednesday, May 14, 2014
முப்பூ பற்றிய சில விளக்கம்.
வணக்கம் தோழர்களே,
முப்பு பற்றிய இன்னும் ஓர் சித்தர் பாடல் வரிகளை கவனியுங்கள். ஞானம் வேண்டுமானால் வாதம் கிடைக்கவேண்டும், வாதம் செய்ய நாதம் விந்து வேண்டும், நாதம் விந்து கிடைக்க முப்பூ என்னும் அப்பு ஆகிய பூதம் வேண்டும்.
(ரச)வாதம் என்றால் தங்கம் செய்வது என்று மட்டும் அர்த்தம் கிடையாது என்பதை சரியாக உணராதவரை வேதியல் என கூறப்படும் ரசவாத தத்துவத்தை புரிவது கடினமாகவே இருக்கும்.
பாடல்.
முப்பூ வென்பதிதுகா ணுமிதை
முத்திய தாகவே சத்தியமாய்
அப்புவி நீரை யரிந்தாலேவாதம்
ஆகுமே பாரடி ஞானப்பெண்ணே
நாகமென்றதோர் சரக்கு உப்புநல்ல
நாதாந்த வீரமும் தானுமுப்பு
போகமான ரசமும் உப்புயிது
போக்கோடே இம்மூன்றும் சேர்ந்ததாலே
சத்தியமாகவே முப்பூக் குருவாகும்
சக்தி சரக்கெல்லாம் கட்டிவிடும்
முத்தியதாகவே வேதை யாகுமிது
முக்கிய மாகுமே ஞானப்பெண்ணே
---------------------------------------------------------------------
வாதம்செய்கிறேன் என்றுசொல்லி பணம்
வாகாகத் தானே செலவுசெய்து
பேதக மாகவே பித்தலாட்டம்பண்ணி
பிதற்றித் திரிவா ருலகுதன்னில்
நாதத்தில் வாதமிருக்குதென் றேசொல்லி
நாடியே பெண்ணை துடர்ந்துசென்று
போதமதாகவே நாதம் பிடித்துமே
பொல்லாத புத்தியாய் தானலைந்து
வாதைப்பட்டு அதைதான் முறிந்துகொண்டு
வாகாய் சரக்கில் சுருக்குமிட
போதைமயக்கத்தால் கெட்டலைந்து பின்பு
போக்கோடே செம்பில் கொடுத்தெடுத்து
கரியதாக எடுத்தெரிந்து கெட்டு
கள்ளரைப் போல முழிமுழித்து
துரியமாகவே ஞானம்வந்த் தால்வாதம்
தும்பரமாக வருகு மென்று
----------------------------------------------
நெல்லுப்பயிர்கள் விளையவே தாந்தண்ணீர்
நிச்சய மாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்ததைபோலவே
புத்தி யுமான ரசவாதம்
நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுயிது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக்கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தி யில்லாதோர் வாதிகளே
வாதிக ளென்றுமே பேர்படைத்து ரச
வாதத்தை சுட்டு கரியாக்கி
நீதியில்லாமலே பொய்கள் சொன்னால்கரு
நிலைக்கு மோசொல்லும் ஞானப்பெண்ணே.
என்ன அழகான வரிகள், படிக்கும் போதே மெய் சிலிர்த்து பரமனின் பிரபஞ்ச வித்தையை என்னி மனம் பிதற்றுகிறது.
இதை தான் மாணிக்கவாச நாயனார் சிவபுராணத்தில்
“ஊற்றான உண்ணர் அமுதே உடையானே”
என்றும்
“கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே”
என்றும்
சிவமாகிய அகாரத்தை, விந்தை, சாரத்தை, பழச்சாற்றை, கற்பத்தை, அமுர்தத்தை புகழ்ந்து பாடுகிறார்.
இதையே அபிராமிப்பட்டர் தமது அந்தாதியில் இவ்வாறு பாடுகிறார்
”அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை, செப்புஉரை செய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரிபாதம் என் சென்னியதே. ”
அதை மீண்டும் உணர்த்துகிறார் பாருங்கள்
“கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
மீண்டும் படுகிறார்
“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”
பாடல்களில் இருக்கும் பரிபாஷையை புரிவது சற்று கடினமாகவே இருக்கும், அதை புறக்கண்ணால் பார்த்தால் தோன்றாது உண்மை.
இதையே அவ்வை பாட்டி வினாயகர் அகவலில் பாடுகிறார் பாருங்கள்
” குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென “
மேலும்
” அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி “
எந்த பாடல்களையும் மேலோட்டமாக பார்த்தால் அதன் உண்மை புரியாது என்பதை உணர்ந்து ஆய்வு செய்யின், நாமும் பரம்பொருள் பற்றிய சரியான விளக்கத்தை உணரமுடியும்.

Subscribe to:
Posts (Atom)