Thursday, June 5, 2014

புதிய வகுப்புகள் ஆரம்பம்

வணக்கம் தோழர்களே,

நமது பயனத்துக்கு ஆயத்தமாகும் வேலைகள் அதிகமாக இருப்பதால் புதிய விடயங்கள் எதையும் பதிவிட முடியவில்லை.

எம்மை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றிய விடயங்கள் வெள்ளிக்கிழமை முக நூலில் தரப்படும். மேலும் பலரும் பயன்படும் வகையில் சென்னையில் மாந்திரீக வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என நினைக்கிறேன். பலரிடமும் சென்று பணத்தை செலவு செய்து ஒன்றும் பலன் கிடைக்கவில்லை என்ற கவலையில் இருக்கும் அனைவரும் இதில் பங்கேட்கலாம்.

இது ஓர் அறிமுக வகுப்பாக அமைக்கலாம் என இருக்கிறேன், பலரிடமும் சென்று எதுவும் நடக்கவில்லை என்பதற்கான காரணம் என்ன, வெறுமனே மந்திரங்களை உபாசனை செய்தால் நீங்கள் நினைப்பது நடக்குமா போன்ற அடிப்படை விளக்கத்துடன் சில ஆரம்பகட்ட உபாசனைகள் இயந்திர விளக்கம், மை முதல் அஞ்சனம் வரை இருக்கும் ரகசியம் என்ன, போன்ற விடயங்களை தெளிவுபடுத்தி முறையான வெற்றிக்கான பாதை எது என்பதை நீங்களே அறிவைக் கொண்டு தெளியும் உண்மைகளை வகுப்பாக அமக்கலாம் என இருக்கிறேன்.

இதில் நிச்சயமாக பல பாரம்பரிய இரகசியங்கள் விளக்கப்படும், மேலும் அஷ்டகர்ம வினை பற்றிய சரியான பாதைகள் தெளிவுபடுத்தப்படும். இயந்திர விதிமுறைகள் மற்றும் முத்திரைகள் பயன்படும் முறைகள் அதன் பரிபாஷையாக வந்த விடயங்கள் பேசப்படும்.

இது நிச்சயமாக இலவசமாக இருக்காது அத்துடன் அதிகமாகவும் இருக்காது.. பலரும் பங்கேட்கும் அளவு இடம் ஏற்பாடு செய்வதற்கு தேவையான செலவுகள் மற்றும் உணவு உபசாரங்களுக்கு தேவையான பணமும் கட்டணமாக அறவிடப்படும்.

எமக்கு மின்னஞ்சல் மூலம் வரும் கோரிக்கைகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனைகள் செய்வதற்கு நேரம் போதாத காரணமும் எங்களுக்கு கூறவில்லை என்ற பிரச்சனையும் வரக்கூடாது என்பத்ற்காக இந்த ஏற்பாடுகள் செய்யலாம் என இருக்கிறேன்.

உங்கள் மின்னஞ்சல்களுக்கு தனித்தனியே பதிவுகள் இட்டுக்கொண்டிருந்தால் எமது வேலைகள் தாமதமாகின்றது, ஆகவே எம்மை சந்தித்து பேசவும் தீர்வுகள் தேவப்படும் தோழர்கள் இந்த வகுப்புக்கு வருவதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.,

மேலும் எமது பாட நெறிகள் மலேசியாவில் அடுத்த மாதம் இடம்பெற இருப்பதால் எமக்கான சென்னைப் பயனத்தின் நாட்கள் மிக குறைவாக இருக்கின்றது, அதனால் தனித்துவமாக பேசவேண்டும் என்ற ஆசை இருப்பவகள் கூட இந்த வகுப்புக்கு வருவதன் மூலமே எமது தொடர்பை பெறக்கூடியவாறு அமையும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இந்த வகுப்பில் என்ன கற்றுத்தரப் போரார் என்ற கேள்வி வேண்டாம், எமது வலைத் தளத்தை பார்த்து படித்து அதன் உண்மையை புரிந்தவர்கள், எது உண்மை என ஆய்வில் இருப்பவர்கள் யாரும் பங்கேட்கலாம். வாதம் விவாதம் பேசுபவர்களும் அன்புடன் பங்கேட்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிரவும், ஞாபகத்தில் வையுங்கள் விதண்டாவாதம் செய்பவருக்கு நாம் கொடுக்கும் பதில்கள் சற்று காரசாரமாக (சிவசக்தி) இருக்கும்.


எமது முக நூல். https://www.facebook.com/siththarvaakadam

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment