Thursday, September 11, 2014

சுத்த உணவு, அசுத்த உணவு

வணக்கம் தோழர்களே,

உணவுகளை உடம்புக்காக சாப்பிட வேண்டும், கடவுளுக்காக சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் தான் நான் வருவேன் என்றால் அது கடவுளும் இல்லை..

இங்கு உங்கள் பார்வைக்கு சில பதார்த்த குண விளக்கம். சுத்த உணவுகளாக இருக்கும் (பலர் புலால் என ஊரை ஏமாற்றும் உணவு) அவற்றின் குணபாடமும், அசுத்த உணவாக இருக்கும் (பலரின் சைவ) உணவும் இங்கு உதாரணப்படுத்தியிருக்கிறேன்,,..

தயிர் சாதம் இன்றுடன் இருக்கும் இடம் இல்லாமல் போகட்டும், உடல் ஆரோக்கியம் வளரட்டும்.

இவை எமக்கு தேவையற்றது தான் இருப்பினும் சாட்சிகளோடு மட்டுமே நாம் இங்கு எதையும் பதிகிறோம் என்பதை வாசகர்கள் புரிய வேண்டும்,, இந்த உண்மைகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும், அதன் மூலம் இந்த போலிச் சாமியார்களையும் போலி சமய சம்பிரதாயங்களியும் உடைக்க வேண்டும். 

மக்களுக்கு தேவை நோயற்ற வாழ்கை அதுவே பெரும் செல்வம். அதற்கு தடையாக இருக்கும் இந்த சமயம் சார்ந்த விடயங்களை விட்டு ஆரோக்கியமாக வாழ வழி தேடவேண்டும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Wednesday, September 10, 2014

பரிபாசை

வணக்கம் தோழர்களே,,

இங்கு பலருக்கும் நாம் பல முறை தெரிவித்திருக்கிறோம், இங்கு பதியப்படும் விடயங்கள் எதுவும் சாட்சிகள் இல்லாமல் பதியப்படுவதில்லை என்று, அதே போல் ஒவ்வொறு பதிவிலும் அதற்கான சாட்சிகள் சித்தர்களின் இலக்கியங்களில் இருந்து பாடலாக தந்திருக்கிறோம்..

பரிபாசை புரியாத காரணத்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிவது போல் அல்லது விளக்க உரைகளை படித்து அதன் படி பேசுவதானால் அல்லது பின்பற்றுவதானால் தாறாளமாக பின்பற்றலாம். ஆனால் தவறானவற்றை பின்பற்றி நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை..

திருமந்திரத்தில் அணைத்துவிடயமும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாலர்கள், அதற்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்கள் பல முனைவர்கள்.

ஒரு விடயத்துக்கு விளக்க உரை எழுதுவதானால் அதன் விளக்கம் நன்றாக ஆசிரியருக்கு புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. அப்படி திருமந்திர விளக்கம் புரிந்திருந்தால் அதற்கு விளக்க உரை எழுதியவர் முதல் அதை படித்தவர் வரை யாரும் திருமூலரின் ஆயுளில் நான்கில் ஒரு பங்கு கூட வாழவில்லை.... ஏன்.. உங்களுக்கு திருமந்திரத்தின் தத்துவம் புரிந்துதானே அதற்கு விளக்க உரை எழுதினீர்கள், அதில் உங்கள் ஆயுளை நீடித்து பெரு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து விடயமும் இருக்கிறது, அப்படி அதில் இருக்கும் உபாயம் ஏன் உங்களுக்கு பலன்தரவில்லை..
ஏன் நீண்ட நாள் வாழவில்லை, ஏன் நோயற்ற வாழ்கை கிடைக்கவில்லை..

புரிதல் என்பது ஒவ்வெறுவருக்கும் தனித்துவமானது அதில் தவறு இல்லை, ஆனால் புரிதலின் பலன்கிடைக்கவேண்டும் அல்லவா..

ஆயிரம் ஞானிகள் ஆயிரம் முறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் காலத்தை கடந்து வாழ்ந்த பெருமை சித்தர்களுக்கு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் பேர் ஆயிரம் வழியை கூறினார்கள் ஆனால் அவர்கள் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்த வரலாறு இல்லையே, சித்தர்களுக்கு இருக்கும் வேறுபாடு அதில் தானே மறைந்திருக்கிறது, பதிணெண் சித்தர்களும் ஒரே வழியை மட்டுமே கூறுகிறார்கள், அது மறை மொழியாக உலாசுகிறது இங்கு.

ஒரு விடயத்தை ஆராய முட்பட்டால் அதை அடியில் இருந்து தேடவேண்டும். அதற்கு பெயர்தானே அறிவு. அதனால் தான் அடியை தேடியவன் முடியை கண்டான் என்றார்கள். சித்தர்பாடல் என்றால் பரிபாசை மறைப்பு என்று தெரிந்தபின்னும் அதன் தன்மையை ஆராயாமல் அப்படியே எடுப்பது எந்த பலனும் தரப்போவதில்லை என்பதே எமது கூற்று.. அதனால் தான் சிந்தியுங்கள் என்று உங்களை சொல்வது..

ஓர் விடயத்தை இது தான் என ஏற்றபின் அதன் உண்மையை உணர, ஏற்க மனது தடை செய்வது இயல்பே, அதை மீறி தேடினால் அதுவே அறிவு..

உதாரணமாக பூமி தட்டையானது என்று கூறப்பட்டு எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நம்பப் பட்டு வந்தது, ஆனால் அதில் நம்பிக்கை அற்ற நிலையின் தேடலினால் தானே அது பொய் என நிறூபனமானது. இப்படி காலத்தால் பல விடயங்கள் அப்படியே ஏற்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவை சரியானதா என ஆராயவே நமக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

சித்தர்பாடல்கள் (இலக்கியங்கள்) பாரம்பரியமானவை வம்சாவழியாக பாதுகாத்து வரப்பட்ட பொக்கிசங்கள், அதை மறைவாகவே வைக்கும் படி சித்தர்களே கூறியதன் விளைவாக அவை மறைவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து வந்தன. காலத்தின் தேவை அவை இப்போது வெளிவரத்துவங்கி 100 ஆண்டுகள் இருக்கும்.. வெளி வராதவை இன்னும் பல உண்டு.

மறைப்பதற்கு காரணம் இல்லை எனில் அதை அவர்கள் மறைக்க சொல்ல வேண்டிய தேவையும் இல்லை, அப்படி அதில் இருக்கும் உண்மைகள் புரிவதற்கு இலகுவானதாக இருந்திருந்தால் அதை பாதுகாத்து வந்த வம்சாவழிகளும் சித்தர்களாக மாறியிருப்பர்.

இதைத்தான் சிந்திக்க சொல்வது நாம் உங்களை..

காவி கட்டிக் கொண்டு சொல்வது எதுவானாலும் அது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் சித்தர்களுக்கும் இல்லை.. ஆகவே அவர்கள் அறுதியிட்டு கூறிய விடயம் எது என ஆராயவேண்டும், பதிணெண் சித்தர்கள் வரிசை தொடராத காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இன்று சாமியர்கள் வரிசைகள் தொடருகிறதே..

பதிணெண் சித்தர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என ஆராய வேண்டும், அப்போது தான் அவர்களின் வரிசை தொடராத காரணம் புரியும்.. அப்படி ஆராயத் தொடங்கினால் கிடைப்பது ஒன்றே.. அதை மீறிய எவரும் சித்தர்களாக கருதப்படவில்லை.

சித்தர்களின் வாழ்வியலைப் பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்கள் கூறும் உண்மைகள் என்ன என்ற ஆய்வுகளையும் செய்ய வேண்டும்,, அவர்கள் கூறுவதுவும் அதுவே..

நாம் இங்கு எமது கொள்கைகள் என்று எதையும் யாரையும் பின்பற்ற கூறுவதில்லை, சித்தர்களின் இலக்கிய அறிவின் பின்னனியில் இருக்கும் இரகசியம் என்ன என்ற ஆய்வுகள் செய்து அதன் தெளிவுகளை நீங்களும் ஆராயுங்கள் என்று சொல்லுகிறோம்.

மறைப்பாக வைக்கும் படி சித்தர்கள் அவர்களின் நூல்களை சொல்லுகிறார்கள் என்றால், அதன் உண்மையை மறைக்க எத்தனை விதமாக அவர்கள் பேசி இருக்க முடியும்.. நாம் ஆராயவேண்டியதும் புரிய வேண்டியதும் பதிணெண் சித்தர்களின் ஒற்றுமை எதில் இருக்கிறது என்பதை.. சித்தர்கள் விஞ்ஞானிகள் என்று பேசுவதோடு நிறுத்தக் கூடாது ஓர் விஞ்ஞானி எதை எப்படி செய்வான் என்ற சிந்தனையும் வேண்டும், சாட்சிகள் இல்லாமல் உணர்வாக அறிவது விஞ்ஞானத்தின் நோக்கம் அல்ல, சித்தர்களின் நோக்கமும் அல்ல. சித்தி பெற்றார்கள் என்றால் எதில் என்று தெரிய வேண்டும் ஆராய வேண்டும்.

கடவுளை நாம் தேடுவது எதற்காக என்ற தெளிவான அறிவு இருந்தால் இந்த ஆய்வுகள் இலகுவாக இருக்கும்.. அல்லது கடினமே..

ஆசையை துறந்து கடவுளை நாட வேண்டும் என்கிறார்கள்.. ஆசையை வரிசைப் படுத்தினால் அதில் பெரியது சிறியது என பிரிக்கலாம். இங்கு பெரிய சக்தி என்பது கடவுள் அதை காணவேண்டும் என்பது தான் மிக பெரிய ஆசை.. ஆனால் ஆசைகள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.. இந்த கூற்று சரியானது அல்ல என்றால்.. என்னை குறைகூற வரிசையாக வருகிறீர்கள்.. சிற்றின்பம் பேரின்பம் என வகைப்படுத்தி பேசுகிறார்கள்.. இரண்டிலும் இன்பம் தானே இருக்கிறது.. அதில் என்ன சிறிது பெரிது.. பசிக்கும் போது உணவு சுவையற்றது.. அதன் சுவை நமது பசியின் வேகத்தைப் பொருத்து பேசப்படும்.. மொத்தத்தில் பசியின் நிலையை பொருத்தே சுவையின் அளவும்.

சைவம் என்பது என்ன என்று ஆராய்வது இல்லை, ஆனால் சைவர்கள் என்பது.. கேட்டால் சமயம் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் என்பது.. முன்னோர்கள் சொன்னார்கள் பல விடயங்களை, எத்தனை விடயத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்..தமிழர் என்பது,, இங்கு எத்தனை பேரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேர் வைத்திருக்கிறீகள், தமிழர் என்பது,, உங்கள் கலாச்சார ஆடைகலையா அணிகிறீர்கள் ( நாமும் தான்).. ஆலயத்துக்கு செல்லும் போது கூட சில விசேட நாட்கள் என்றால் மட்டும் தானே.. முன்னோர்கள் சொன்ன விடயங்கள் அனைத்தையும் இங்கு யாரும் பின்பற்றுவதில்லை, அவரவர் வசதிகளுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம்.

கடவுளைப் பற்றி பேசுவதானால் கூட அப்படியே.. இன்று இருக்கும் ஆலயங்களின் பெயர்களை பாருங்கள் அமைப்பை பாருங்கள்.. முன்னோர்களின் ஆகம விதிக்கு அமைப்பதாக இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் ஆலயங்களை இடித்து மூடவேண்டும்..

நம்பிக்கை என்ற பேரில் எதையும் செய்வது அவரவர் விருப்பம், எமது ஆய்வுகளின் தெளிவுகளை பேசுவதும் எமது விருப்பம்.. உண்மையை ஆராய விரும்பம் இருந்தால் ஆராயுங்கள்.. இல்லை நாங்கள் உணர்வதே கடவுள் என்றால் மகிழ்சியாக கடைப்பிடியுங்கள்..

புலால் உணவு என்பது எதை வைத்து பிரிக்கப்படுகிறது என்றால் அது தொடர்பாக எந்த தெளிவும் இங்கு யாரும் கூறுவதில்லை, கேட்டால் தாவரம் அல்லாதது என்பார்கள்.. அடியும் முடியும் தெரியாமல் பேசுவது பூசைக்கு செல்லாது..

” சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை,
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி,
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு,
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே.”

விளக்கம்.. சைவர்கள் என்று சொல்லும் வாக்கியம் கேட்டிருக்கிறாராம், ஆனால் சைவர்களை கண்டதில்லையாம். இறைச்சி புலால் சாப்பிடுவதில்லை என்று கூறுவார்கலாம், அவரவருக்கு ஏற்ப காரணம் சொல்லி பிதற்றி திரிவார்கலாம், தினமும் கொலைசெய்து புலால் தின்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கலாம்.. ( மகிழ்சியடைய வேண்டாம்)

” கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா,
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி,
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா,
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் பட்டிமாடே.”

விளக்கம்.. பலபல சாதிகள் கூறி அதிலும் பிராமணர் என்ற சாதியாம், சைவத்தை மாற்றிப் பேசி ஆகமம் என்பார்கள் மகத்துவம் இருக்கு என்பார்கள், கண்டபடி வேதம் பற்றி பேசி உலகில் அனேகம் பேர் பிழைக்கிறார்கலாம், ஆறுதலம் யோக நிஷ்டைகள்(உச்சிமுதல் பாதம்வரை சக்கரம் என்பது) சிறப்பாக செய்பவர்கள் பட்டியில் கட்டிய மாடுகலாம்.

” மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா,
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்,
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி,
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே,

விளக்கம் .. மாட்டுக் கூட்ட மனிதர்கள் உலகத்தில் சாதி கெட்ட சைவர்கலாம், கோடான கோடிப் பேர் சைவர் என்று சொல்லி கேட்டிருக்கிறாராம், மாமிசத்தை தின்பவன் பாதிப் பேர், நெய்குடிக்கிறவன் பாதிப்பேர், சுத்தமான தயிர் சைவமாடா.. ஆனால் அது சைவம் என்று நம்புவாங்கலாம்.

”நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்தர்களுஞ் சொல்லவில்லை,
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை,
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா,
தும்பியுடன் பிரம்மகுல சாத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே.”

விளக்கம்.. நம்புவதற்கு சைவம் என்று ஒன்றும் இல்லையாம், நாதாக்களும் (சான்றோர்கள்) சித்தர்களும் சைவம் என்று ஒன்று சொல்லவும் இல்லையாம், வம்பான விடயம் அது என்று மறைத்தார் சைவத்தை பற்றி பேசாமல் விட்டார்கள், சுவையான புலால் தின்னாதவன் இங்கு எவனும் இல்லையாம், ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிடுவானாம் சூத்திரன், குடும்பி கட்டின பிராமணர்கள் (வேதம் படித்தவர்கள்) தூசு துப்பரவாக நெய்யும் மோரும் சாப்பிடுவாங்களாம்.

” குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்,
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை,
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்,
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே.”

விளக்கம்.. பால் தயிர் மோர் நெய் சாப்பிடுவாங்கலாம் ஆனால் இறைச்சியை நீக்கிட்டாங்கலாம், நடிப்பாக சைவம் என்று சொல்லல் ஆகுமோ, நாதாக்கள் இதை கைமறைப்பாய் காட்டவில்லையாம், எல்லா சாதிக்காரனும் புலால் சுவையாக சாப்பிடுவானாம், மாமிசம் என்பது அடிப்படை மட்டுமாம், ஆனால் நெய் என்பது என்ன மேல்மிதற்குது அடுத்த பாடலில்.

” நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று,
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல,
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ,
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே.”

விளக்கம்.. நெய் என்பது கொஞ்சம் இல்லை, எட்டுப்பங்கு நெய் சேர்ந்தால் தான் ஒரு பங்கு இறைச்சி கிடைக்குமாம், அடிப்படையாக கிடைக்கும் மாமிசத்தை (இறைச்சியை) தின்பவன் சைவனாம், சுத்தமான நெய் தின்பவன் சைவன் அல்லவாம், மாமிசத்தில் நெய் இல்லையாம், இரத்தமானது சுண்டி (இறுகி வற்றி) அது பாலாகி பாலில் இருந்து வந்த நெய்தான் இறைச்சியைக் காட்டிலும் கொடியது.

”அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு,
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு,
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ,
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே.”

விளக்கம்.. அதிகமாம் காய்கறியில் புழுக்கல் உண்டாம், இலைகளில் புழுவும் உண்டாம், அதிகமாக தண்ணீரில் புழுக்கள் உண்டாம், கண்ணால் காணாத எச்சிலும் மலமும் தண்ணீரில் உண்டாம், சுத்தம் என்பது எதில் உண்டு.. சுகமுண்டா சைவத்தில் அதிகம் உண்டா, இங்கு பொய்யான சைவர்கள் தவிர்த்து உன்மையான சைவர்கள் இல்லை என்கிறார்..

” கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு,
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்,
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்,
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே.”

விளக்கம்.. உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் சீரழிந்து சைவம் கெட்டு, எழிலான பிறவியாம் இந்த சைவர்கள் என்று நம்புறார்கலாம், தொட்ட பொருள் எல்லாம் சைவம் இல்லையாம், இங்க இருக்கும் எல்லாரும் புலால் தின்பவர்தானாம், நீதிமுறையாக அவரின் குரு காலங்கி நாதர் சாட்சியுடன் கூறிய நூலாம் இது.

புலால் பற்றிய சந்தேகம் இருப்பவர்கள் பதிணெண் சித்தர்களை நாடி அவர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இது காலங்கி நாதர் சொன்ன விடயம்.. நாம் சொன்ன விடயம் அல்ல அர்பர்களே..

உங்கள் சீவகாருண்யம் இந்த புலால் உணவை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.. இங்கு புலால் அல்லாத விடயமே ஒன்றும் இல்லாத போது எங்கிறுந்து வந்தது இந்த சீவகாருண்யம்.

”கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை”

இங்கு ஒருவரும் நிரந்தரம் அல்ல..

“உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு,
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல,
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்,
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே.”

குட்டி விளக்கம்.. பெரிசா படிச்சு கரைகண்ட வித்துவான் போல பேசி சித்தர்கள் போல இருப்பாங்கலாம்.. இவங்களைப்பார்த்து தேவரும் முனிவரும் சிந்திக்கைறமாதிரி இருக்குமாம்..

“பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே”

குட்டி விளக்கம்… கதைகட்டுறதுல வின்னர்கலாம்.. பொய் எல்லாத்தையும் உண்மைபோல் சொல்லுவாங்கலாம்…

“ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை”

தத்துவங்களையும் தியான மார்க்கங்களையும் உறுதியானது என்று சான்றோர்கள் சொல்லவே இல்லையாம்..

” உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே”

குட்டி விளக்கம்.. இவர்கள் இங்கு கூறும் கதைகள் எல்லம் பொய்யாம்.. அவர் உலகை சுற்றி பார்த்து உண்மையை அறிந்தாராம்.

இந்த விளக்கங்கள் ஓரள்வுக்கு புரியும் என நினைக்கிறேன்,,

சித்தர்கள் பாடல்களை படித்தால் மட்டும் போதாது, அதன் நுணுக்கங்கள் தெளிவாக ஆராய வேண்டும்.. ஒரு சில புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு அதன் உரைநடையை படித்து பதில் பேசக் கூடாது..

” விட்டகுறை இல்லாட்டால் தொட்டாலும் வாராது,
தொட்டகுறை இல்லாட்டால் சுட்டாலும் வாராது”

இது சித்தர்களின் வாக்கு.. அவர்களை புரிதல், அவர்களின் அறிவை ஆராய்தல் என்பது இலகுவானதாக இருக்காது.. காலத்தால் பழகிய விடயங்கள் நம்மை மாற்றத்துக்கு கொண்டு செல்ல விடாதுதான்,, ஆனால் அதை மீறி உழைக்க வேண்டும், தேட வேண்டும்.. அப்போது தான் எது இன்பம் என்பது புரியும்..

சித்தர்கள் இலக்கியத்தில் அவர்கள் அறுதியிட்டு கூறும் விடயம் என ஒன்றும், அறுதியில்லாத விடயங்கள் பலவும் உண்டு. அவற்றை தேடி ஆராய்ந்தால் காலத்தை வெல்வது இலகுவாக இருக்கும், எது அவர்கள் கூறும் ஒன்றான விடயம் என்பதுவும் புரியும்..

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

இதற்கு விளக்கம் முன்னரே நாம் பேசியிருக்கிறோம் ஆனால் இதை ஒரு தோழர் இன்று எமக்கு பலியிடலுக்கு எதிரான பாடலாக இதை காட்டியிருக்கிறார்..

இதில் வாசியும் வேண்டாம் வாயுவும் வேண்டா, மந்திரமும் வேண்டாம் என கூறும் அகத்தியர் எதை வேண்டுமென கூறவில்லை என்று சிந்திக்கவே நாம் சொல்கிறோம்..

பலியிடல் வேண்டாம் என சொல்லுவதற்கு இதை காட்டும் நீங்கள், ஏன் ஆலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும் இதை சொல்லி நிறுத்தலாமே.. ஆலயங்களில் இருக்கும் குருக்கள் மார்கள் மனது செம்மையாகாதவர்கள் என்றால் ஏன் அவர்களிடம் போய் அர்சணை செய்ய சொல்கிறீர்கள்.. புரியாமல் பேசினால் இப்படித்தான்…

மனம் என்றால் பொய் என்று அல்லவா அர்த்தம்.. காரணம் அப்படி ஒன்றும் உடலில் இல்லை..மனம் என்பது அறிவின் மறு பெயர், அறிவு செம்மையானால் என்று படித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்..

பரிபாசை என்பது சித்தர்களின் உண்மையை மறைக்கும் சொல், ஆகவே அவை எப்படி இருக்கும் என்று ஆராய வேண்டும் அல்லது உண்மையான குரு மூலம் கற்க வேண்டும்.. கைலாயம் என்றால் இமய மலையை பேசும் உலகத்தாருக்கு பரிபாசை புரிதல் கடினமே.. மேரு என்றால் சிறி சக்கரம் வைத்து பூசை செய்பவர்களுக்கு பரிபாசை புரிதல் கடினமே… தியானம் என்றால் சம்மனம் கட்டி கண்களை மூடி வாய் முனுமுனுக்கும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

”நட்டல் கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” என்று கடவுள் உள்ளுக்கு இருக்கிறார் என்று பேசும் உலகத்துக்கு பரிபாசை புரிதல் கடினமே..

ஆலயங்களில் மூல விக்கிரகமாக கல்லைத் தான் வைக்கிறார்கள்.. அது எந்த பெரிய பணக்காரன் கட்டிய ஆலயமாக இருந்தாலும் சரி.. ஏன் தங்கத்தில் வைப்பதில்லை.. சிந்திக்க மறந்த கூட்டம்… எதை அபிசேகம் செய்து குடித்தாலும் மூல விக்கிரகத்தின் அபிசேகம் மட்டும் அதிக விசேடமாக கருதுவது ஏன்..

கடவுள் கல்லினுள் தான் இருக்கிறான் ஆனால் கல்லாக இல்லை… கடவுள் இருக்கும் கல்லை காண்பது கடினமே..

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பாட்டி, ஆனால் இங்கு கற்கையே பிச்சை எடுக்கத் தானே…

ஆயிரம் வழிகளை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றில் மட்டுமே ஒத்துப் போகிறார்கள் அது எது என்பதை புரிந்தால்.. அவர்கள் கூறிய கடவுள் யார் என்ற உண்மை தெரிய ஆரம்பிக்கும்..

ஆயிரம் வழிகள் இருப்பதாக கூறுவது பரிபாசையின் வெளிப்பாடு.. ஒன்றை அப்படியே கூறிவிட்டால் நடப்பது எதுவாக இருக்கும் என்ற சிறு சிந்தனை கூட இல்லாதவர்களையா நாம் சித்தர்கள் என்று கூறப்போகிறோம், அல்லது அவர்கள் கூறியதை ஒப்புக்கொண்டிருப்போமா.. காலத்தை தாண்டி பேசப்படுபவர்கள் அவர்கள் தானே..

கடந்த சில நூறாண்டுகளில் வந்த மகான்கள் அவதார புருசர்கள் யோகிகள் என கருதப்படும் யாரும் காலத்தை கடந்து வாழ்ந்துகாட்டவில்லை, அவர்கள் சராசரி மனித வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள்.. குறிப்பிட்ட காலத்தை தாண்டி அவர்களால் பயனிக்கவே முடியவில்லை, மூப்பெய்தி இறந்தார்கள்.. அவர்கள் மிக நல்ல எண்ணம் படைத்தவர்களாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவியவராக இருக்கட்டும், சமுதாயத்தை நல்வழி படுத்த முயன்றவராக இருக்கட்டும், ஆனால் அவர்கள் சித்தர்கள் அல்ல, பாடல் பாடுபவன் எல்லாம் சித்தன் அல்ல.. ஆயிரம் வழிகளை காட்டுபவன் எல்லாம் சித்தனும் அல்ல. அவர்கள் முயற்சி செய்தார்கள் கடவுள் என்ற ஒன்றை அடையவேண்டும் என்று, அதற்கு அவர்கள் ஒவ்வொறு முயற்சியும் செய்தார்கள், முயற்சியில் வென்றார்களா என்பது தான் கேள்வி.. வென்றிருந்தால் அவர்கள் காலத்தை கடந்து சாதனை செய்திருக்கலாம்.. நாட்டின் நிலையை மாற்றியிருக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றது சிந்தனையை அமைதியை தரக் கூடிய சில பயிற்சிகள் மட்டுமே.. அதை தாண்டி அவர்கள் செய்த சாதனைகள் என்ன என்று யாராலும் பட்டியல் இட முடியுமா.. அந்த சாதனைகளுக்கும் கடவுளுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா..

அன்பே சிவம் என்பார்கள், அன்பை வரைமுறைப்படித்திப் பாருங்கள்.. நீங்கள் செய்த வேலைக்கு சரியான கூலிதராத முதலாலியிடம் உங்களுக்கு இருப்பது அன்பா.. உங்கள் அன்பை அட்டவனைப்படுத்திப் பாருங்கள்.. எத்தனை சிவம் அதில் இருக்கிறது என்று..

உலகம் மாயையின் வடிவம் என்கிறீர்கள், மாயை என்பது தானே பரிபாசை.. அதை சரியாக புரிந்தால்….. நீங்கள் பிறந்த காரணம் தெரியவரும்…

உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம்,.. எமது தளத்தில் நாம் பதிக்கிறோம்.. உங்களை பின்பற்றச் சொல்லி நாம் கூறவில்லை.. முடிந்தால் ஆய்வு செய்யுங்கள்.. உண்மையை தேடுங்கள்.. உண்மையை தேடும் வாசகர்களுக்கு இது புரிந்தால் போதும்..

மாற்றம் என்ற சொல்லை விட மற்ற எல்லாம் மாறும்..

“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
புகைப்படம்: வணக்கம் தோழர்களே,, 

Monday, September 8, 2014

திருந்தினர் விட்டார்

வணக்கம் தோழர்களே,

இன்று முழு நிலவு நாள், அருமையாக இருக்கிறது காலைப் பொழுது.

சரி, இந்த சிதம்பரம் இராமலிங்கத்தாரின் விவாதத்தை இன்று முற்றுப் புள்ளிவைக்கலாம் என முடிவு உதித்திருக்கிறது. அதற்கமைய இன்றுடன் அதற்கான விடயங்களை பேசிவிடலாம்..

இராமலிங்கத்தாரின் கொள்கைகளை வரிசைப் படுத்தினால்..

1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2. புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய
வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி
இடுதலும் கூடாது.
9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத்
துன்புறுத்தக்கூடாது.
10. மத வெறி கூடாது .

” எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய்”
— திருவருட்பா , ஆறாம் திருமுறை ,3639

ஒன்றே கடவுள் என்றார் ஆனால் அருட்பாடலில் அவர் பெயர் குறித்தே பல தெய்வங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார், மன்றாடியிருக்கிறார்... சண்முகன், வினாயகர், என பல தெய்வங்கள் அதில் குறிப்பிடப்பட்டது ஏன்...!

கடவுள் ஒன்றுதான் அவரின் பெயர்கள் பல என நீங்கள் (வள்ளலார் பிரியர்கள்) பேசுவதானால், அதை தான் மற்றவர்களும் சொல்மிறார்கள்.. அவர் மட்டும் பல பெயரால் ஒரே இறைவனை வழிபட முடியும் ஆனால் மற்றவர்கள் வழிபடக்கூடாது என்றால் எப்படி...

அருட்பாடல் இலகு தமிழில் இருக்கிறது என்றால் ஏன் அதற்கு உரைநடை எழுத வேண்டும்.. விளக்க உரை எழுத முட்படால் காரணம் அது புரியவில்லை என்று தானே..

சரி, பழமையானவை புரியாமல் இருந்தது அதை புரியவைப்பதாக இருந்தால் அவர் அதை உரைநடையாக எழுதி வைத்திருக்கலாமே.. ஏன் பாடல்களாக எழுத வேண்டும் அதில் எதற்கு அவர் பரிபாசைகள் பேச வேண்டும்.. பரிபாசைகள் அதில் இல்லை என்றால் நீங்கள் அருட்பாடல்கள் படிக்கவில்லை என்று அர்த்தம் அல்லது உங்களுக்கு பரிபாசை என்றால் என்ன என்று தெரியாது என்று அர்த்தம்..

புலால் என்றால் என்ன என்ற கேள்வியை பல முறை இங்கு கேட்டிருக்கிறோம், யாரும் பதில் தந்ததாக இல்லை..! உயிர் உள்ளவை என்றால் தாவரங்கள் உயிர் இல்லாதவை என்று அர்த்தமா..! சிறிய உயிர் என்றால், ஆல மரம் சிறிதாகவா இருக்கிறது, குருதி இருந்தால் அது புலால் என்றால் தாவரங்களில் அது வேறு நிரத்தில் இருக்கிறது, ஏன் வெட்டுக் கிளியின் இரத்தம் பச்சையாக இருக்கிறது,, இரால் (கடல்) உணவுகள் பல வற்றில் இரத்தம் சிகப்பாக இருப்பதில்லை. எந்த அடிப்படையில் இந்த புலால் உணவுகள் பிரிக்கப்படுகிறது என்று யாராவது கூறமுடியுமா..! இரத்தம் பாலாக மாறி, பால் வென்னையாக மாறி, வென்னை நெய்யாக மாறி.. இப்படி பல மாற்றங்களை மட்டுமே இங்கு காட்டம் முடியும், ஆனால் அது வந்த இடம் பெரிய உயிரில் இருந்து தானே..

ஆதியை பற்றியும் ஒன்றே இறைவன் என்ற தத்துவத்தை பேசும் போது அனைத்திலும் ஆதியானவற்றை பார்க்கவேண்டும் அல்லவா.. அனைத்திலும் கருணையாக இருக்க வேண்டும் என்றால் கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் என காய்கரிகளை பறிக்கும் போது அந்த தாவரம் அழுவது புரியவில்லையா.. இராமலிங்கத்தாருக்கு... ஓர் அறிவு தாவரத்தின் கண்ணீர் புரியாத அவர் ஆறு அறிவு தாவரத்தின் கண்ணீரைப் பற்றிப் பேசியது வியப்பே..

இறந்தவர்களை எரிக்ககூடாது என்றால், அவர் ஒரு சித்த மருத்துவர் என்ற அடிப்படையில் இருந்து வேறுபடுகிறார்.. இறந்தவர்களை எரிப்பது அந்த உடலின் மூலம் பரவும் நோய்களை தடுப்பதே அல்லாது வேறு அல்ல.. அதை தாண்டி பேசினால் அவரின் அருட்பெரும் சோதி சுடலையின் சாம்பல் பூசி கூத்தாடுபவன் அல்லவா.. அவன் பூசுவதற்கு சாம்பலுக்கு எங்கு போவான்...!

சித்தர்கள் தங்களை சமாதி வைக்க சொன்னார்கள், அவர்களே சமாதியில் இருந்தார்கள், காரணம் அவர்கள் காலத்தை தாண்டி வாழ்ந்து காட்டினார்கள், பல மருந்துகளாலும் உடலை அழியாமல் இருக்கும் உபாயம் தெரிந்தவர்கள், அதையும் தாண்டி காடுகளில் மலைகளில் மக்கள் நடமாற்றல் இல்லாத இடத்தில் சமாதியில் அமர்ந்தார்கள் அவர்களின் உட அழியும் போது ஏற்படும் கிருமிகள் மக்களை அடையாது என்ற தெளிவான சிந்தனை அவர்களுக்க்கு இருந்தது. நாம் இங்கு சுடுகாட்டுகு பக்கத்தில் வீடு கட்டி வசிக்கிறோம், அங்கு தினமும் புதைக்கப்பட்டால் அந்த கிருமிகளின் தாக்கம் எப்படி இருக்கும்.. சிந்திக்க மறந்தவரா இராமலிங்கம்...

சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது என்றால் அவரே சிறியது ஒன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. ஏன் அதை வழிபடக்கூடாது என்றுதான் கூறவில்லை.. ஏன் மக்களுக்கு நல்லது நடந்தால் அது யார் செய்தால் என்ன.. நல்லது செய்வதில் சிறிதென்ன பெரிதென்ன.. சிறிதிலும் அவனே பெரிதிலும் அவனே என்று அவருக்கு தெரியவில்லையா..!

அணைத்திலும் அன்பாய் இரு என்றால் சிறு தெய்வத்தில் அன்பாய் இருப்பது ஏன் கூடாது.. பலியிடுதல் கூடாது என்றால்.., எதை, பலியிடுவது என்றால் என்ன..! இறைவனுக்கு கொடுக்கும் உணவுகளில் அதுவும் ஒன்று..

“கதிர் அறுக்காமல் நெல் கிடைக்காது மக்காள்..” அறுப்பது நெல்லில் இருந்தே ஆரம்பிக்கிறது.. அறுப்பது என்று முடிவாகிவிட்டால் அதில் என்ன பலியும் பூசையும்..

சித்தர்கள் முப்பலியும் தீர்த்து மூலிகைகளை பிடுங்கும் முறைகளை வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் கண்ட சோதியை விடவா இவரின் சோதி பெரியது.. அவர்கள் ஆராய்ந்த விடயத்தை விடவா இவரின் ஆராய்தல் பெரியது, அவர்களின் வாழ்கையை விடவா இவரின் வாழ்கை தூய்மையானது..

அவருக்கு சாதகமான விடயத்தை பேசிவிட்டு போய்விட்டார்.. அவ்வளவுதான்..

”I could find that the different from your main posting and now.
"Avar sonnathu unmai entru entha arivalium erka mattan". Now you agree that prathi. You only told me vallalar message oru prathi; Prathi means is kind of same like original. SO YOU ARE CONTRADICTING WITH YOUR REPLY.
"Vallalar prathi edukka vallavar entral avar eduttha prathi unmai thane." Vallalar eppadiyo irukkattum Nam antha prathi in unmai thanmaiyai nambuvom. ”

நாம் அவர் பிரதி பன்னியிருக்கிறார் என்றோம் அல்லவா,.. பிரதியை எப்படி பன்னியிருக்கிறார் என்று சொல்லவில்லையே,..

தவராக பிரதி பன்னியிருக்கிறார்.. மக்களை முட்டாலாக்கி இருக்கிறார்.. சித்தர்கள் மரபில் வந்தவர் என்றால் அவர்கள் கூறிய விடயங்களை அப்படியே கூறியிருக்கலாம்,

பிரதி என்றால் அவற்றை தனக்கு ஏற்ப மற்றியிருக்கிறார் என்று அல்லவா அர்த்தம், இருப்பதை அப்படியே சொல்பவன் ஏன் பிரதி செய்யப்போகிறான்...

சிறு தெய்வங்கள் வழிபடும் முறைகள் அவற்றுக்கான மந்திர பூசை விதிகள் என பல விடயங்கள் சித்தர்களால் தரப்பட்டிருக்கிறது, அவர்கள் செய்த தொண்டு எங்கே அவர்களின் பேரைச் சொல்லி இவர் செய்த்து என்ன...

சித்தர்கள் காட்டிய கருப்பன்ன சுவாமியும், மாடான் சுவாமியும் தூமாதேவியும் இறை அம்சம் இல்லை என்றால் இவர் கூறும் அருட்பெரும் சோதி யார், என்ன..!

18 சித்தர்களும் அவர்களின் வழி வந்தவர்களும் கூறிய விடயங்களை அப்படியே (தாறு மாறாக) பிரதிபன்னி தனக்கொரு பாதையை அமைத்தவர் அவர்.. அவ்வளவு தான்..

சித்தர்களின் வித்தைகள் வேண்டும், அவர்களின் மருத்துவம் வேண்டும், ஆனால் அவர்கள் சொன்ன சிறு தெய்வம் தேவையல்ல..

சித்தர்கள் தங்களை சிவமாக கருதினார்கள், சிவ பூசை செய்தார்கள், இல்லறத்திலும் இருந்தார்கள்..

”இல்லறம் அல்லது நல்லறம் அன்று” மூதாட்டியின் வாக்கு.. நல்லறம் செய்பவனாக இருந்தால் இல்லறத்தில் இருந்திருக்க வேண்டும். அது எவனாக இருந்தாலும் சரி.. இறைவனும் இல்லற வாசியாக காட்சி தருவது ஏன்.!

ஓர் குழந்த ஏன் அழுகிறது என்று பெற்ற தாயை விட வேறு எவனாலும் இங்கு அறுதியிட்டு கூறமுடியாது.. குழந்தை பிறக்கும் போது அது மாமிசத்தில் இருந்து தான் பிறக்கிறது, மாமிசத்தை தான் உண்கிறது, வந்த பின்னும் பால் என்ற பெயரில் தாயின் இரத்தம் தான் அதற்கு உணவாகிறது.. அப்படி இருக்க புலால் பற்றி என்ன விளக்கம் இங்கு பேசுகிறீர்கள்..

சரியான தமிழ் அறிவு கூட இல்லை அவருக்கு...

அருட்பெரும் ஜோதி,.. இதில் தமிழ் முழுமையாக இல்லை.. ஜீவகாருண்யம்.. இதிலும் தமிழ் முழுமையாக இல்லை..

ஜ் என்ற எழுத்து தமிழ் அகரவரிசை அல்லவே.. இது தமிழில் உபயோகிக்கப் படும் கிரந்த எழுத்து..

தமிழில் எழுதுவதாக இருந்தால் அருட்பெரும் சோதி, சீவகாருண்யம் என்று எழுதியிருக்க வேண்டும்.

யாரிடம் அய்யா பேசுகிறீர்கள் இராமலிங்கத்தாரைப் பற்றி..

சீவ காருண்யம் என்றால் என்ன என்று உங்களை விட மிக நன்றாகவே எமக்கு தெரியும்.. காரணம் நாம் ஒரு சித்த மருத்துவர்.. உயிரின் முக்கியத்துவம் பற்றி எம்மிடம் பேச வேண்டாம்.

மக்களுக்கு நட்பணிகள் செய்வதானால் அதை தாறாலமாக செய்யலாம், அதற்காக சமயம் என்ற ஒன்றை இங்கு மாற்றத் தேவையில்லை.. புதிதாக கொள்கைகள் பரப்பத் தேவையும் இல்லை. இந்த சாமியார்கள் என்ன அரசியல் வாதிகலா.. விரும்பும் படி கொள்கைகள் வைத்திருக்கிறார்கள்..

இறைவன் தந்த கொள்கை என்ன என்று இங்கு யுகங்கள் கடந்து ஆராய்ந்து சித்தர்கள், கூறிவிட்டார்கள் அதை விடுத்து என்ன புதிய கொள்கை வேண்டும். அதிலும் சித்தர்கள் கூறியதாக இங்கு பலரும் கூறுவது அதுவும் அல்ல என்ற ஓர் விடயமும் அதில் அடங்கி இருக்கிறது..

”நாம் இங்கு கூறுவது சித்தர்கள் மரபில் அவர்கள் கூறியிருக்கும் பரிபாசைகளின் விளக்கம் மட்டுமே..”

இந்த பிறவியின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு பதில் கூறியவர்கள் முன்னமே அதை எழுதி வைத்திருக்கிறார்கள். அதைவிடுத்து புதிய கொள்கை அதற்கு கொள்கை பரப்பும் சங்கம், ஆச்சிரமம், என எத்தனை பித்தலாட்டம்..

சீவகாருண்யம் பேசும் எவரும் உடுப்பு போடக்கூடாது.. அதுவும் துணியாக இருக்கக் கூடாது.. தோலினால் ஆன பாதனிகள் வைத்திருக்கிறிர்கள் அவை எங்கு இருந்து வந்தது.. விலங்குகள் கலட்டிப் போட்ட துணியா அது.. அப்படியானால் பாம்பின் சட்டையை மட்டும் தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்..

உங்கள் வசதிக்காக ஏதாவது ஒன்றை செய்வது அதற்கு சாட்சிகள் கூறுவது.. உங்கள் வீட்டில் இருக்கும் செங்கல் ஓடுகள் எங்கு இருந்து என்ன செய்யப் பட்டு வருகிறது தெரியுமா.. அவற்றை சுடுவதற்காக எத்தனை காடுகள் அழிக்கப்படுகிறது தெரியுமா..! அந்த காடுகள் அழிக்கும் போதும் எத்தனை விலங்குகள் இறக்கிறது தெரியுமா...

சீவகாருண்யம் பேசுபவர்கள்.. இதற்கு மாற்றாக என்ன செய்திருக்க வேண்டும்.

வீட்டில் ஈயை கொல்ல, என்ன செய்கிறீர்கள்.. ஈ உயிர் இல்லையா.. அது இறைவனின் படைப்பு இல்லையா.. அதற்கு உயிர் இல்லையா..!

உங்களை துன்புருத்தினால் அதை நீங்கள் விடுவதில்லை.

இங்கு படைப்பின் காரணம் தெரிந்தவன் ஒருவன், அவனே அதை பற்றி பேசியதில்லை.. நீங்கள் பேசுகிறீகள்.

பசுவை அறுக்காமல் கோரோசணை பெற முடியாது. கோரோசணை இல்லாமல் குழந்தகளுக்கான சுவாச ரோகங்களை குணம் செய்ய முடியாது.. சீவகாருண்யம் எங்கே போனது..

சித்தர்கள் மருத்துவ குணபாடம், மற்றும் மருத்துவ நிகண்டு என்பன எழுதியிருக்கிறார்கள் அதில் விலங்குகள் உணவு அதாவது உங்கள் புலால் என கருதும் உணவுகள் மனித உடலுக்கு எத்தனை அவசியமானது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

இறைவன் மனிதனை சிறப்பாக வாழ அனைத்தையும் தந்திருக்கிறான், அவனுக்கு தெரியாதா எது மனிதனுக்கு தேவையற்றவை என்று.. புலால் உணவுகள் மனிதனுக்கு தேவையற்றவை என்றால் அதை அவன் விசமாக படைத்திருப்பான், அவ்வாறு படைத்தும் இருக்கிறான், அந்த விசத்திலும் மருந்துகளை மறைத்திருக்கிறான் அவன்..

இந்த இரகசியங்கள் ஆராய்ந்து சொன்ன சித்தர்கள் எங்கே அவர்கள் கூறிய விடயத்தை தனது சுயநலத்துக்காக மாற்றும் இந்த சாமியார்கள் எங்கே..

அதிலும் மேலாக இராமலிங்கம் எப்படி பட்டவர் என்பதை அவரே கூறுகிறார்.

“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே”

இராமலிங்கத்தார் யாரையும் தன்னைபின்பற்ற அழக்கவில்லை என்றால் இந்த பாடலின் அர்த்தம் என்னவோ..

தான் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இறைவனின் வார்த்தையாம்.. நம்புவபர்களை வரட்டுமாம் இதுவே நல்ல தருனமாம்.., அவருடன் சேர்ந்தால் சித்தி பெறலாம் என்றும்,, கூறும் இந்த பாடலின் உள் கருத்து என்னவோ..

இதைத் தான் இன்று அனைத்து சாமியார்களும் சொல்கிறார்கள் செய்கிறார்கள்..

சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் இறைவன் முன்னர் சொன்னது பொய் இவர்களிடம் இன்று சொல்லுவது மெய்.

அவர்களே தாங்கள் சொல்வது இறைவன் கற்பித்தகா கூறிவிட்டார்கள் முன்ன்ரே.. பிறகு என்ன சொன்ன விடயத்தை மாற்றி மாற்றி பேசுவது கடவுளின் விளையாட்டா என்ன.. !

சாத்திரங்களை சுட்டவனே சித்தன் என்றார்கள் காரணம், இப்படி இவர்கள் எழுதிய சாத்திரத்தின் மகிமை தெரிந்தே...

திருவாசகத்தை விட அருட்பாடல் இனிமையாகவும், இலகுவாகவும் இருக்கிறது என்றால் உங்கள் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது மக்காள்... திருவாசகத்தை எதனுடன் ஒப்பிடுவது என்று முறையில்லாமல் போய்விட்டது.

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

அறிவினால் பார்க்க வேண்டும். அதனால் தான் பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

கண்களை மூடிக் கொண்டு இறைவனை பார்ப்பதானால் கண்கள் இல்லாமல் அவன் நம்மை படைத்திருக்கலாம்.

நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையை பார்த்து அதில் இருக்கும் உண்மையை உணர முடியாத பகுக்க முடியாத நாமா.. கண்னை மூடி தியானதில் இறைவனை காண்பது..அப்படி தியானத்தைல் எவனுக்காவது அமைதி கிடைத்துவிட்டால் அதை விட்டு எழுந்திருப்பானா.!

அமைதி வேண்டி தியானத்தில் இருந்து அது கிடைத்தால் ஏன் எழுந்திருக்கிறீகள் வேறு என்ன வேண்டும்... ஆகவே நீங்கள் கேட்பது நிச்சயமாக அமைதியை அல்ல,..!

இராமகிருஸ்ணரின் எழுத்துக்களை நாம் எந்தளவு படித்திருக்கிறோம் என்று எம்மை தெரிந்தவர்களுக்கு நன்கே தெரியும்.. அவர் சிறு தெய்வ வழிபாட்டில் வெற்றி பெற்றவர்.. காளியை தரிசிப்பவர்,. ஆகவே அவரை எல்லாம் இங்கு இராமலிங்கத்தாருக்கு சாட்சிக்கு கூப்பிட்டு பலனில்லை.

ஆயிரம் வழிகள் இருக்கட்டும் இறைவனை அடைவதற்கு ஆனால் இராமலிங்கத்தாரின் வழியில் இறைவனை அல்ல அவனின் காலடியைக் கூட காணமுடியாது.

இராமலிங்கத்தாருக்கே அவருக்கு என்ன நடந்தது என தெரியாது, பிறகு மற்றவர்களின் நிலை,.. இறைவன் அவருடன் பேசியதாக கூறிய அவரை இறைவன் காக்க மறந்தது தான் வேடிக்கை..

”“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே”

கடவுள் என்ன விளையாட்டுப் பொருளா... நினைத்தபடி அவனை சொல்லுவதற்கு... முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள் என்றால் சரி.. அதை யாரும் தடுக்க முடியாது, அது தேவையும் அல்ல.. ஆனால் நாங்கள் செய்வது தான் சரி என்றால் தான் இங்கு பிரச்சினைகள்..

உண்மையை புரிந்தவர்கள் இன்னும் இங்கு உளாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்..

இதற்கு சாட்சி கூறுபவர்கள் உங்கள் முகனூலில் இது தொடர்பான கருத்துக்களை தாறாலமாக பதிவிடுங்கள்.. படிப்பவர்கள் ஆராயட்டும்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Saturday, September 6, 2014

ஈசனாரும் முருகவேலும்

வணக்கம் தோழர்களே,

வேதங்கள் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான மொழி பற்றி பேசியாகவேண்டும்..

ஆதியில் இருந்தே தமிழுக்கு இருக்கும் இலக்கண இலக்கிய இயல்புகள் சமசுகிருதத்துக்கு இருந்ததில்லை, தனக்கென முழுமையான அட்சரவடிவங்கள் கூட இல்லாத மொழி அது. ஒளி வடிவமாக கூட அதில் அனைத்து சத்தங்களும் எழுப்ப முடியாத ஓர் மொழியாகவே இது இருகிறது.

தமிழ் மொழியோ முழுமையான ஓர் மொழியாக இருக்கிறது தனக்கென முழுமையான அட்சரங்கள் இலக்கங்கள் இலக்கண அமைப்பு என முழு ஒளி அமைப்பைக் கொண்டது.

முன்னரே நாம் கூறியது போல், முதற் கடவுள் என வேதம் கூறும் சிவன், அவரே வேதம் தந்தார் என்றும் கூறுகிறது. சமசுகிருதம் எனும் மொழியில் வேதம் அருளப்பட்டதாக இருந்தால் இன்று அந்த மொழியின் நிலை என்ன.. வேத நாயகன் இன்னும் அவரது பிடியில் தானே நாட்டை வைத்திருக்கிறார். ஆனால் அவர் வேதம் அருளிய மொழிக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி இல்லையா உங்கள் யாரிடமும்..

அவ்வாறு வேதங்களை சமசுகிருதத்தில் அருளியவர் ஏன் அந்த மொழியை காக்கவில்லை. சிவனை பற்றிய விடயங்கள் சைவம் தொடர்பான தத்துவங்கள் அதிகமாக பேசப்பட்டிருக்கும் மொழி எது..!

தமிழுக்கு சங்கம் வைத்தை அவர் ஏன் சமசுகிருதத்தை சங்கம் வைத்து காக்கவில்லை..! வருத்தப்படாத சமசுகிருத சங்கம் ஒன்றை அவர் அமைத்திருக்கலாம்.. ஆனால் அதை அவர் செய்ததாக காணவில்லை.

ஈசனாரும் முருகவேலும் கட்டிக்காத்த தமிழ் சங்கம் போல்,, என்பார்கள் இலக்கியங்களில்.. தமிழைக் காக்கவேண்டிய காரணம் சிவனாருக்கு ஏன்...அதில் அப்படிஎன்ன இருக்கிறது.. அதில் தான் அனைத்தும் இருக்கிறது.

இப்போது விடயத்துக்கு வருவோம்.. வேதங்கள் தமிழில் என்றால் இப்போது எங்கே போனது என்ற கேள்வி வந்திருக்கு..!

ஒரு சமூகம் இருக்கிறது அது மிக நவீனமாக அபிவிருத்தியடைந்த சமூகம் ( நாடு), நீங்கள் முதன் முறையாய் இந்த சமூகத்துக்குள் வருகிறீர்கள் காரனம் நீங்கள் வேறு சமூகம், புதிய சமூகங்களை தேடி அளைகிறீர்கள் அப்போது நீங்கள் கண்ட சமூகம் இது. இதில் அனைத்தும் இருக்கிறது மிக செழிப்பாக அமைந்த சமூகம், மொழி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் சிறந்த சமூகம்...

உங்கள் சமூகமோ இன்னும் சிந்திக்காத அளவு இந்த சமூகம் இருக்கிறது.. காரணத்தை தேடினால் இவர்கள் கடவுள் என்ற ஓர் விடயத்தை சக்தியை மிக தெளிவாக அமைத்திருக்கிறார்கள் அதனால் அவர்களின் மக்கள் பின்பற்றி வாழ்கையை சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற விளக்கம் உங்களுக்கு கிடைக்கிறது..

உங்கள் சமூகத்தை நீங்கள் இவ்வாறு செழிப்பாக அமைக்க வேண்டும் அதற்கு உங்களுக்கு இங்கு இருக்கும் இரகசியங்கள் (கடவுள்) என்ற விடயம் வேண்டும் அது உங்கள் மக்களுக்கு உரித்தாக வேண்டும்.. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்..

சரியான ஓர் திருடன் தனது திருட்டுக்கான சாட்சிகளை வைக்க மாட்டான் அல்லவா...

சமூகங்களுக்கு இடையிலான போர்கள் மூண்டன, இங்கு இருக்கும் விடயங்கள் அது தொடர்பான விடயங்கள் அழிக்கப்பட்டன... அவை பின்னர் தங்கள் மொழியுடன் கலக்கப்பட்டது.. புதிய சமூகத்துக்கு இது வந்த இடம் வேறாக சித்தரிக்கப் பட்டது.. இதற்கு எதிரான சாட்சிகள் அழிக்கப்பட்டன..

உதாரணம்.. இன்று இலங்கை ஓர் சிங்கள நாடு என்று பரைச்சாற்றும் சிங்களவர், நாகர் என்பது ஓர் மனித இனம் அல்ல என்றும், இயக்கர்கள் அவர்கள் என்றும் இராவணன் ஓர் சிங்கள் மன்னன் என்றும் கூறுகிறார்கள் ஏன், எவ்வாறு..

இதற்கு எதிரான சாட்சிகள் எங்கு போயின..

தென் ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகம் அதில் இருந்த இலங்கயின் புராதன நூலகம் இலங்கையில் யாழ்பானம் எனும் ஊரில் இருந்தது.. அது போர் என்ற பேரில் அழிக்கப்பட்டது..

உலக வரலாறுகளை எடுத்துப் படியுங்கள் உலகப் போர்கள் கூறும் உண்மைகளை.. போரில் வென்றால் முதலில் நூலகங்கள் தான் அழிக்கப்படும். காரணம் என்ன.. இருக்கும் சமூகம் அழிக்கப்பட்டு புது சமூகம் வந்தவர்களின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான்... இல்லாவிட்டால் உங்களை எப்படி கட்டி ஆட்சி செய்வது.. அவர்கள் வந்து போன சுவடுகள் இருக்க வேண்டும் அல்லவா..

ஆங்கிலேயர் நாடுகளை போர்களில் வென்று ஆட்சியில் வந்திருக்கவில்லை என்றால் கிருஸ்தவத்தின் நிலையை சிந்தியுங்கள்..

போர்களில் அழிக்கப்பட்ட நூல்களை விட்டு எஞ்சிக் கிடைப்பவை தான் இன்று நாம் பார்க்கும் தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்கள்..

வேதங்கள் மொழிவடிவாக அருளப்பட்டதாக கூறப்படவில்லை,, அது வேதத்தில் கூட இல்லை... அது கற்பிக்கப்பட்டது செவி வழியாக.. என்கிறது காலக்கோடு... அப்படி இருக்கும் போது அது சமசுகிருதத்தில் தான் வந்தது என்று யாரும் கூறமுடியாது அதே போல் தமிழையும் கூறமுடியாது...

ஆனால் மொழிவடிவம் பெற்ற பின்னர் அதை பேசும் போது தான் ஆராய வேண்டும்.. நாம் கேட்ப்பது ஒன்றே ... முழுமையான மொழிவடிவம் தமிழில் இருக்கும் போது ஏன் சமசுகிருதம் பயன்படுத்தப் பட்டது,..! தமிழ் சங்கம் வளர்த்த ஈசனார் ஏன் தமிழில் வேதம் எழுதும் படி கூறவில்லை..

தமிழை வளர்த்த அவரே ஏன் தமிழுக்கு துரோகம் செய்தார்..

நாயன்மார்கள் காலத்தில் பிந்தியவர்கள் ஆனால் அகத்தியர் காலத்தில் முந்தியவர் ஏன் வேதம் தமிழில் செய்ய வில்லை..

இப்படி பல விடயங்கள் காலத்தை தாண்டிய உண்மையாக இருக்கிறது அவற்றை தேடிப் பிடிப்பது என்பது இலகுவானது அல்ல.. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை..

தமிழரின் மிக பெரிய பலகீனம் ஒன்றே.. அது எவன் கெட்டாலும் சரி நம் குடும்பம் நல்லா இருந்தா போதும் இது இன்று வந்த விடயம் அல்ல.. அதனால் தான் நம்மிடம் இருக்கும் அறிவை மற்றவருக்கு கொடுப்பதில்லை.. அது எப்படி மற்றவனை ஏமாற்றுவது தொடர்பான அறிவாக இருந்தாலும் சரி..

இலங்கையில் இருந்த நூலகத்தை தமிழன் நினைத்தால் காத்திருக்கலாம்.. ஆனால் அவனோ சாதிகலாள் பிரிக்கப்பட்டவன் தன்னை விட மற்ற சாதிக்காரன் முன் வரக்கூடாது என்று நினைப்பவன், அவனது அறிவு புத்தகமாக இருந்த்து அது வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று மறைத்து வைப்பது தமிழன் பழக்கம்... இதை விடுத்து நூல்களை முன்னரே பிரதிகள் செய்திருக்கலாம் அவற்றை நாடு முலுவதும் இருக்கும் அனைத்து தமிழ் நூலகத்திலும் சேர்த்திருக்கலாம் ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.. காரணம் மற்றவன் படித்தால் நமக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற நிலைதான்..

இப்படி தமிழன் மட்டுமே நினைப்பதனால் தான் இன்றும் ஆயிரக்கணக்கான நூல்கள் ஏடுகளாகவே கிடக்கிறது.. புதிய புத்தகங்கள் எழுதுவதை விட்டும் அவற்றை பதிப்பதை விட்டும் இருப்பதை பதிவிட்டால் போதும் தமிழ் சிறப்பாக வளரும். 

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

தென்நாடுடைய சிவனே என்றால்

வணக்கம் தோழர்களே,

” கீழோர் மறப்பர், மேலோர் நினைப்பர்”

கீழோர் என்றால் கால்கள், மேலோர் என்றால் கண்கள்..

மனைவியை விட்டுப் பிரிந்து கனவன் வணிகத்துக்கு போகும் போது மனைவி பாடிய பாடல் இது... தான் தினமும் சேவை செய்த கால்கள் தன்னை மறந்து போவதையும், சேவைகள் எதுவும் செய்யப்படாத கண்கள் திரும்பிப் பார்த்து பார்த்து போகும் போது அதை என்னி பாடிய செய்யுள்...

இப்படி பலரும் இங்கு சமயம் என்ற பேரில் பேசுவது இதைத் தான்...

உண்மை எங்கோ இருக்கும் ஆனால் அதைவிடுத்து பொய்களை தேடும் உத்தமர்களுக்கு என்ன செய்வது..

காவியைக் கட்டி அல்லது பட்டுடுத்தி பார்ப்பதற்கு சற்று அழகாக தெரிந்தால் போதும் அவர் சொல்வதெல்லாம் தத்துவங்களும், அவர் காட்டுவதெல்லாம் கடவுளும் என்றாகிவிட்டது..

பரதேசி போல் இருந்தால் அவர் சித்தர் என்றாகிவிட்டது..

இரசவாதம் செய்த சித்தர்கள் பரதேசியாகவா இருந்திருப்பார்கள்.. இன்று மக்களை பேசி பேசி பணம் சம்பாதித்த சாமியார்களே ஆகா ஓகோ என்று வாழ்கிறார்கள்.. நேர்மையாக வாதம் செய்த சித்தர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..

தென்நாடுடைய சிவனே என்றால், .....

தமிழ் சங்கம் தந்தவர் அவர் அல்லவா... முதல் சங்கத்தின் தலைவர் என்பதாலும் அவரை பிரமொழிகளை விட தமிழே அதிகமாக பாடி இருப்பதாலும் அவர் வேற மொழிக்கு சங்கம் வைக்காததாளும் அவரை தென்நாட்டவர் என்றார்கள்.. ஆகவே அவரின் மொழி என்றால் அது தமிழாகவே இருக்கமுடியும்...

வேதங்கள் சமசுகிருதம் மெழியில் வந்திருந்தால் முதலில், ஏன் சமசுகிருத சங்கம் வரவில்லை அவர் அதை செய்த்தாகவும் தெரியவில்லை. சமசுகிருதம் தேவ மொழி என்று யாராவது இனி பேசினால் இதைக் கேளுங்கள்..

தமிழ் சங்கம் வளர்த்த சிவனாரா,, சமசுகிருதத்தில் வேதங்கள் செய்திருப்பார்.. !

வேதங்கள் தமிழில் தான் வந்தது அது பின்னர் சமசுகிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது... இங்கு வந்தவர்கள் சிவனின் பேர் ஆற்றலைக் கண்டு அவரை தமக்கும் கடவுளாக மாற்றிக் கொண்டனர்.. மதமாற்றம் ஏற்பட்டது இன்று இல்லை..

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்றால்...

தமிழ் எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய்மையானது என்றதால், தமிழை தந்த சிவனை (தமிழை) கூறினார்கள்..

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...

குமரன் என்றால் இளமை என்று அர்த்தம் குன்றில் (மலைகள்) அது சார்ந்த பகுதிகளில் தான் அதிகளவில் மூலிகைகள் வளர்ந்தது.. அவை மனிதரை இளமையாக அதாவது நோய் அற்று இருக்க உதவியதனால் அவர்கள் இளமையாக இருந்தர்கள் அப்படி இருந்தால் அந்நாடு சுருசுருப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் குன்றிருந்தால் குமரன் போல் இருக்கலாம் என்றதை குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதினர்.

அதனால் தான் குமரனை, முருகன் என்றார்கள்.... முருகு என்றால் அழகு, அழகு என்றால் கண்ணால் பார்த்து தெரியும் முக உடல் அழகு இல்லை.. தமிழை வளர்த்த சான்றோர் அழகு என்று புற அழகையா பேசி இருப்பார்கள்... அப்படி பேசினால் அகத்தை பார்கச் சொல்லியிருப்பார்களா.. ஆகவே முருகு என்பது அழகு ஆனால் அது புற அழகல்ல..., அக அழகு அதாவது நோயற்ற தேகமாக கருதுவர்..

தமிழை அக அழகு கொண்ட மொழி என்கிறது தொல்காப்பியம்.. ஆகவே அதை புற அழகு கொண்டு பார்க்க கூடாது..

இவை இலக்கிய விளக்கம்,... இது தாண்டி தத்துவ விளக்கமும் உண்டு...

அதை பின்னர் தேவை இருப்பின் பார்க்கலாம்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

தென்னாடுடைய சிவனும் கைலாயமும்

வணக்கம் தோழர்களே,

தென்னாடுடைய சிவனும் கைலாயமும் ஒன்று தான் என்றும் சிலர், இவை இரண்டும் வேறு என சிலரும் கூறியிருக்கிறீர்கள்..

பல ஆய்வுகள் உங்கள் மனதில் தோன்றிய படி எழுதியமைக்கு நன்றிகள்...

”குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”

இதற்கும் தென்நாடுடைய சிவனுக்கும் தொடர்பு இருக்குமா.. !

அல்லது குன்றுகள் பல சேர்ந்த இமயத்தில் குமரன் ஏன் இல்லை என்ற சந்தேகம் வரவேண்டுமா இல்லையா..!

மொத்தத்தில் குன்றுக்கும் கடவுள் என்று நாம் பேசும் ஒரு சக்திக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது தெரிகிறதா..!

உலகத்தில் எங்கு குன்றுகள் இருந்தாலும் அதில் குமரன் இருக்க வேண்டும் அல்லவா.. ! அப்படியானால் ..! இப்படியாகுமோ..! எப்படியிருக்கும்..!

விடைகளை சொல்லுபவன் ஆசான் (குரு) இல்லை,,, விடைகளை தேடும் வழிகளை சொல்லுபவனே ஆசான், இதை முதலில் தெரிந்து பேசுங்கள்..

எதற்கெடுத்தாலும் இவர் விடை சொல்லாது விடுகிறார் என்று நினைப்பதை விட்டு விடைக்கான தேடலை தந்திருக்கிறார் என்று பாருங்கள் எமது பதிவுகளின் உண்மை உங்களுக்கு புரியும்..

எமக்கு அனைத்தும் தெரியும் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை அப்படி யாரவது நினைத்தால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என நீங்கள் நினைப்பதாக அர்த்தம். அகவே சிந்திக்க வேண்டும் என்பதே நாம் உங்களுக்கு இங்கு கூறுவது, அதற்கு சாட்சிகள் தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுவது.. நாம் காட்டுவது தவறானால்.., சரியானதை நீங்கள் காட்ட வெண்டும் அதற்கு சாட்சிகள் ஆதாரங்கள் என பலவும் தரப்பட வேண்டும்...

உதாரனமாக முப்பு பற்றி நாம் பேசும் போது அதில் இருக்கும் தத்துவத்தை தமிழில் சித்தர்கள் எப்படி மறைத்திருக்கிறார்கள் என்றும், பஞ்சாட்சரம் என்பது எந்த சொரூபம் என்றும் இங்கு மிக எழிமையாக ஆதாரத்துடன் காட்டியிருக்கிறோம்.. அது போல் நீங்களும் காட்ட வேண்டும்.. புராணம் இதிகாசம் என்ற பூச்சாண்டி கதைகள் இங்கு வேண்டாம்,,,

நாம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசுகிறோம், விஞ்ஞானம் பேசுகிறோம்,, ஆதாரங்கள் அவற்றில் இருக்க வேண்டும்..

பார்க்கலாம் உங்கள் அடுத்த ஆய்வுகளை...

குன்றில் இருப்பவன்,,, தென்னாடுடைய சிவன் என்கிறேன், அதனால் தான் கைலாயம் அவனது வீடு என்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் சிவன் குமரன் அவனில்லை..

குறிப்பு... குமரன் அழகாக இருப்பான் அப்பன் அசிங்கமாக இருப்பான்... அசிங்கத்தில் இருந்து தான் அழகு கிடைக்கும் நமது சினிமா நடிகைகள் போல,,,

தாமரை வளர்வது சேற்றில் என்றார்கள்...

சிந்தியுங்கள்.. ஆசிரியராக எனது சேவையை செய்ய்கிறேன்,, மாணவனாக முடிந்தால் படியுங்கள்... நிச்சயம் பரீட்சை உண்டு..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Tuesday, September 2, 2014

முப்பு என்றால் என்ன?

வணக்கம் தோழர்களே,

இன்று முக நூல் பார்க்க சற்று தாமதாகிவிட்டது, ஆனால் பார்த்தால் திடுக்கிடும் தகவள் ஒன்று காத்திருந்தது.. அது நம்ம தம்பி எழுதிய கருத்து..

பின்வருமாறு..

“ R Prabu Mec மருபடியும் அதே ஆனவ பேச்சி !

குறிப்பு :

1. முப்பு என்றால் என்ன?
2.முப்பில் அடங்கிய மூன்று உப்புக்கள் யாவை ?
3.முப்பை கட்டும் முறை என்ன ?
4.முப்பில் அடங்கிய தெய்வங்களின் பெயர் என்ன ?
5.முப்பு சித்த மருத்துவத்தில் எதில் அதிக உபயோகம் ஆகும்?
6.முப்பு சேர்க்கப்படா மருந்தின் நிலை என்னவென்று தெரியுமா ?
7.உங்கழுக்கு ரசவாதம் அத்துப்படியா ?
8.பாதரசத்தையும், தங்கத்தையும், செம்பையும் சாகடித்து கையில் சாம்பலாக எடுத்துகாட்ட முடியுமா?
9.வாழான் கொட்டை சுத்தி செய்யும் முறை எவ்வாறு?
10.குருனா எப்படி இருப்பாங்கனு தெரியுமா ?

நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "

நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!

அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “

இதைத் தான் “ வாயைக் கொடுத்து எதையோ கெடுக்கிற” என்பார்கள்.. தம்பி R Prabu Mec ஓடுவதற்கு ஆதாரங்கள் கேட்கிறார் அதை கொடுத்து ஓடவிடலாமா...

முதலில் எமது பதிவுகளை எத்தனை காலமாக பார்கிறீர்கள் தம்பி, எமது பிலாக் (blogs) பற்றி தெரியுமா, அந்தப் பக்கம் போன அனுபவம் உண்டா..!

நீங்கள் இங்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பல காலங்களின் முன்னரே பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.. இங்கு முகணூலில் காலக்கோட்டில் கீழ் நோக்கிப் போனால் அதன் சாரம் பதிவாகி இருக்கும்.

ஒன்றையும் அடியும் முடியும் இல்லாம பார்த்தால் இப்படித்தான் பிதற்றவேண்டி இருக்கும்..

சரி, முப்பு பற்றி எங்காவது நாம் ” இவை எமக்குத் தான் தெரியும், எம்மை விட்டால் ஆட்கள் இதற்கில்லை, நாம் இரசவாத வித்தகர், தங்கம் செய்வோம், வெள்ளி செய்வோம், ரசம் கட்டுவோம்” என்று கூறியிருக்கிறோமா..!

நாம் கூறாத விடயத்தை நீங்கள் கூவிக் கூறினால் அது உண்மையாகுமா..!

இத்தனை கேள்விகள் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் ஏதாவது சில விடயமாவது உங்களுக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சியாக ஏன் இது இருக்கக் கூடாது..

அதையும் தாண்டி நீங்கள் எமது மாணவரா,..! உங்களுக்கு இரசவாத இரகசியங்களை சொல்லுவதற்கு.. வேண்டுமானால் எமது மாணவராக சேர்ந்து எமக்கு சேவைகள் செய்யுங்கள் உங்கள் தொண்டு உண்மையானது என்றால் ஒரு காலகட்டத்தில் இந்த இரகசியங்கள் சொல்லித் தருகிறேன்..

இருப்பினும்.. “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” என்ற வாக்குக்கமைய.. இந்த விளக்கம் தருகிறேன்,,. இங்கு எவருக்காவது (எமது வாசகர்கள்) முப்பு பற்றி ஏதாவது ஞானம் இருந்தால் அது தொடர்பான தேடலில் இருந்தது உண்மையானால், நாம் இங்கு கூறும் விடயம் உங்கள் அறிவை ஒரு திசைக்கு சுற்றிவிடும். மேலும் முப்பு பற்றி இதுவரை ஆய்வு செய்த (சித்தர்கள் தவிர்த்து) இரசவாதிகள் காணாத பேசாத எழுதாத விடயம் பற்றி இப்போது புரியும்..

பரிபாசை என்பது எப்படி இருக்கும் என்று இந்த ஆய்வு உங்கள் அறிவை தூண்டட்டும்..

முப்பு என்றால் என்ன ..! ஓடுவதற்கு தயாராகுங்கள் தம்பி...

உ + ம் + ப் + உ + ப் = முப்பு ...

புரியவில்லையா.... உங்கள் அறிவு அவ்வளவுதான்,,,

எத்தனை எழுத்துக்கள் சேர்ந்தது முப்பு என்று சொல்லுங்கள்.. ! ஐந்து ... அவற்றில் உயிர்கள் எத்தனை மெய்கள் எத்தனை...!

இரண்டு உயிரும் மூன்று மெய்யும் சேர்ந்தது இந்த முப்பு.. இதுவும் புரியவில்லையா..உங்கள் அறிவு அவ்வளவுதான்..!

ஏன் இரண்டு உயிர் மூன்று மெய்... குரு எப்படி இருப்பார் என்று கேட்டீர் அல்லவா... படியும் பார்த்துப் படியும்...

ஆகாயம், பூமி ( நிலம்), காற்று, தீ, நீர்... இவை எது என்று தெரியுமா... பஞ்சபூதம் என்பார்கள்... இதற்கும் உயிர், மெய் இவைகளுக்கும் என்ன தொடர்பு புரிகிறதா...இல்லையா...உங்கள் அறிவு அவ்வளவுதான்...

ஆகாயமும் நிலமும் உயிராக கொண்டு காற்று, தீ, நீர் இவை மூன்றும் மெய்யாகக் கொண்டு உருவானதே பிறப்பு... இந்த இரண்டு உயிருக்கும் நடுவில் தான் மெய்யாகிய உற்பத்தி இருக்கிறது..

இதைத் தான் பஞ்சபூதம் என்பது.. இந்த பஞ்ச பூதங்களை ஒன்றாக சேர்த்த ஒன்றே முப்பு என்பது...

பஞ்சபூதம் தான் பிரபஞ்ச சக்தி என்பதை காட்டுவதற்காகவே முதற்கடவுள் என்ற சிவனை பஞ்சாட்சரத்தால் அழைக்கிறோம்..

நமசிவய என்று.. இதை பாருங்கள் இதிலும் எந்த உயிர் எழுத்தும் தனியாக இல்லை.. மெய்யும் தனியாக இல்லை.. உயிர்மெய்யாகவே அமைக்கப் பட்டிருக்கும்.. இதைத் தான் ”காரண பஞ்சாட்சரம்” என்பது.(இதுவும் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்).. சிவசக்தி என்பார்கள்... அர்த்தனாரீசம் என்பார்கள் காரணம் பஞ்சாட்சரம் சமமாக பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஐந்து உயிரும் ஐந்து மெய்யும் இருக்கும்... தனியாக அது செயற்படுவதில்லை.. அதனால் தான் சிவலிங்கள் சித்தர்களால் வழிபடப்பட்டவையாக இருந்தது..

இப்படி இந்த பஞ்சபூத சக்தியை பிரித்து தனியாக கையாண்டால் இந்த பிறவியின் இரகசியத்தை அறியலாம் என்ற விடயம் சித்தர்களின் ஆய்வாக அமைந்த்து ஏற்பட்டதுவே இந்த முப்பு..

முப்புவில் ஐந்து பூதங்களும் அடங்கி இருக்கும். பஞ்சபூதத்தில் இரண்டு உயிரும் மூன்று மெய்யும் இருக்கும் உண்மையை அறிந்தவர்கள், இதன் சமனிலை மாறுவதை கண்டனர்.. ஏதோ ஒன்று இங்கு அதிகமாக இருக்கிறது அதை சரிசெய்தால் நாமும் சிவமே என்ற உண்மையை பெற்றனர். அதாவது அனைத்தும் சமமக இருந்தால் ஒன்றும் அழியாது என்பதை உணர்ந்தனர்.

ஆனால் இந்த ஐம்பூதங்களும் ஒன்றாக இருந்தால் தான் படைத்தல் நடக்கும் என்பதால் இதை தனித்தனியே தேடிப் பயன் இல்லை.. ஆகாயத்தை எப்படி எடுப்பது என்று முதல் உயிரிலேயே சிக்கல் ஏற்பட்டது அதன் விளைவாகவே அவர்கள் பஞ்சபூதங்களும் சேர்ந்து கிடைக்க வேண்டிய விடயம் எது என தேடினர், அது கிடைத்தால் அதை வைத்து எதையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற தத்துவத்தை அடைந்தார்கள்.

ஐந்தொழில்கள் இறைவன் செய்வதானால் அவனிடன் ஐந்தும் சேர்ந்த ஒன்று இருக்கிறது அதை வைத்தே அவன் இதைச் செய்கிறான் அதை அவன் இங்கும் தந்திருக்கிறான் அதை கண்டுபிடித்தால் அவனும் சிவனே என்று நம்பினார்கள்.. எங்கோ இருந்து கொண்டு ஐந்தொழிலை இங்கே செய்ய முடியாது என்றும், அது இங்கு தான் மறைக்கப் பட்டிருகிறது என்றும் உண்மையை கண்டார்கள். அதன் வெளிப்பாடாக அவர்களின் தேடல் ஆரம்பமாகியது.. அந்த பயனத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பாடல்களாக மாறின,.. இறைவனின் சக்தி இங்கு அனைவருக்கும் கிடைத்தால் அவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதை அவர்களுடன் இருந்தவர்கள் செய்த விடயங்களே அவர்களுக்கு சாட்சியாயின, அதன் காரணமாக இரைவன் எப்படி பஞ்சபூதங்களை இங்கு ஒரே சக்தியாக மறைத்து வைத்திருக்கிறானோ அதே முறையில் மொழியை பரிபாசைகளாக அமைத்தார்கள்.

ஏகன் அனேகன் என்றார்கள்..அதாவது ஒருவன் ஆனால் அவன் பவலன்.. ஐம்பூதங்களாய் விரியக்கூடியவன் என்றார்கள்..

” ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க”

வேகம் கெடுப்பது என்றால் இறப்பதற்கான காலத்தை தாண்டுவது என்று பொருள்... திருவாசகத்துக்கு உரை எழுதிய ஆய்வாளர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று நினைத்ததன் பலன் இங்கு வேறு விதாமாய் போய்விட்டது..

பிறப்பருக்கும் என்றால் இறந்தால் தானே இனி பிறப்பதற்கு..

புறத்தார்கு என்றால் ஏகனை காணாதவனுக்கு என்று அர்த்தம்,,, அவன் இறப்பது உண்மை..

கரங்குவித்தால் தான் அமிர்தம் வாங்க முடியும்,..

சிரம்குவிவார் என்றால் பனிவுடன் இருப்பது என்று பொருள்,, குருவிடம் பனிந்தால் அமிர்த்தம் கிடைக்கும்,,,

இதற்கிடையில் அனைத்திலும் வெல்க... வெற்றி பெற்றால் சிவமாக மாறலாம்...என்றார்..

இப்படி பல இரகசிய வாக்கியங்கள் பாடல்கள் மூலம் இந்த முப்பு கூறப்பட்டிருக்கிறது..

முப்பு என்றால் பஞ்சபூதம் என்று அர்த்தம்... அவை ஒன்றாக சேர்ந்த பொருள் முப்பு..

“ அண்டமதான அக்கினி உப்பை
கண்டறியார்கள் காசினி மூடர்கள்
பிண்டம் அதனில் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாத்திரம் பார்த்தே..”

இது உங்களை போல தம்பி...

“ கூர்வசனம் தவறாத குருவைக் கண்டு
குணமாக அவர்பதத்தில் பணிந்துகொண்டு
நேர்வசனம் நிசவசனம் ஆகப் பெற்று
நின்றதனால் சகலசித்தும் நேரதாகும்”

இது எம்மைப் போல ...

ஆர்வசனம் சொன்னாலும் கேட்டுக்கொண்டு
அலைவார்கள் உலகமதில் அசட்டுவாதி

இது உங்களைப் போல///

பேர்வசனப் பெருமையினால் பேரண்டத்தை
பேனியே பெற்றவனே சித்தனாமே...

இது யாரைப் போல.. வாசகர்கள் சொல்லுங்கள்...

வாயைக் கொடுக்கும் முன் யாரிடம் கொடுக்கிறோம் என்று கொடுக்காவிட்டால் இப்படித் தான் ஆகும்,,...

வடலூர் இராமலிங்கம் (வள்ளலார்) என்ன பெரிய ஞானியா... அருட்பா என்ன இரகசியமா,,.. திருவள்ளுவரின் ஞான வெட்டியானும், அகத்தியரின் பெருணூல் காவியமும் இல்லை என்றால் அவரின் அருட்பாவில் ஒன்றும் இருக்காது... அங்கு இருப்பதை வேறு வரிசையில் பிரதிபன்னிட்டு பெரிசா பேச வந்துட்டாங்க..

படிக்காத முட்டாலுக்குத் தான் இராமலிங்கம் குருவாக இருக்கமுடியும்..

உங்கள் விடயத்துக்கு வருவோம்.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தேவை என்றால் எம்மிடம் மாணவராக வந்து பனிசெய்யுங்கள்.. சிரம் குவியுங்கள் பின்னர் பார்க்கலாம் உங்களுக்கு அது புரிகிறதா என்று..

உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு எந்த அறிவும் முப்பு பற்றி இல்லை என்பது ...

முப்பை கட்டுவதில்லை.. கட்டியிருப்பது தான் முப்பு.. இங்கு யாராலும் முப்பை கட்ட முடியாது, முப்பை செய்யவும் முடியாது, அது சித்தர்களால் கூட முடியாது.. முப்பு என்பது ஒன்று அது இங்கே கட்டப் பட்டிருக்கிறது, அதை அவிழ்ப்பதே முப்புவின் இரகசியம்.. பஞ்சபூதங்கள் சேர்ந்த நிலை அல்லவா முப்பு அப்படி இருக்க அதை எப்படி கட்டுவது, அதை தனித் தனியாக பிரிக்க வேண்டும் அப்பனே...

இரசவாதம் அத்துப் படிதான்... என்ன செய்ய வேண்டும், தங்கம் வேண்டுமா, வெள்ளி வேண்டுமா, அல்லது கற்பம் வேண்டுமா... ஒன்றும் கவலை இல்லை... ரூபாய் ஒரு கோடி எடுத்துக் கொண்டு எம்மை சந்தியுங்கள் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் கண்முன்னால் செய்து காட்டுகிறேன்...எதை சாகடிக்கவேண்டும் உங்களையும் சேர்த்து சாகடித்து சாம்பலாக்கி காட்டிகிறேன்.. இரசவாதம் செய்ய செலவு இருப்பதாவது தெரியுமா,. அல்லது அதுவும் ஆகாயத்தில் இருந்து விழும் என்று யாராவது சொன்னார்களா...

சித்த மருத்துவத்துக்கும் எமக்கும் என்ன தொடர்பு என்று தேடிப்பாருங்கள் அப்போது விளங்கும் முப்புக்கும் இருக்கும் தொடர்பு..

அடி முட்டால் நீ என்பதற்கு இந்த கேள்வி பொருத்தம்.. வாழான் கொட்டையை எப்படி சுத்தி செய்வது...?

சாதாரனமான ஓர் பேதிக் குளிகை செய்ய தெரியாமலா மருத்துவர்கள் இருப்பார்கள்.. ஒரு வேலை உனது ஊரில் அப்படியாக இருக்கலாம்.. அல்லது உனது குரு மார்கள் அப்படி இருக்கலாம், முப்புவைப் பற்றி பேசும் போது வாழான் கொட்டைப் பற்றி கேட்டிருக்கும் போதே உமது அறிவு நன்றாக புரிகிறது..

எமது பிலாக்கில் போய் பாரும்... தம்பியாரே...

முப்புவுகும் தெய்வத்துக்கும் என்னையா தொடர்பு.. அது பஞ்சபூதங்கள் என்ற சக்தியின் வெளிப்பாடு, நீங்கள் பஞ்சபூதங்களை தெய்வமாக கருதி அதற்கு பெயர்கள் வைத்தால் அதற்கு நாம் பொருப்பாக முடியுமா.. நாம் ஏகனை மட்டும் பார்க்கும் வம்சத்தில் வந்தவர்கள், அவர்களை குருவாக பெற்றவர் ஆகவே எமது தெய்வம் முப்பில் ந ம சி வ ய என்பது மட்டுமே..

குரு எப்படி இருப்பார் என்று தெரியுமா... முட்டால் தனமான கேள்வியை கேட்கும் மாணவனுக்கும் பதில் கூறுத தெரிந்தவராக இருப்பார்.

” நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "

ஏண்டா தம்பி, எது சரியான பதில் என்று எப்படிடா நீ சொல்லுவாய்... அப்படி சொல்வதானல் அதை நீயே இங்கு சொல்ல வேண்டியது தானே... பிறகு ஏண்டா என்னிடம் கேட்கிறாய்... வள்ளலாரை பற்றி பேச என்னால் முடியுமா என கேட்கும் நீ,, எப்படி என்னைப் பற்றி கேட்க முடியும்.. முட்டால் பயலே...

” நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!”

உனக்கு தெரிஞ்சா நீ அதை சொல்ல வேண்டியது தானே,, ஏன் எனது தளத்தில் சுற்றித் திறிகிறாய்.. மற்றவனுக்கு புரியாத விடயம் உனக்கு புரிஞ்சா நீ இப்ப எங்க வேலை செய்கிறாய்,, அதையா செய்வாய்... முட்டால் பயலே..

அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “

இப்ப நாம் சொன்னது உனது மரமண்டைக்கு புரிஞ்சிருக்கும் என நினைக்கிறேன்... இல்லாட்டியும் பரவாயில்லை.. நீ நாம் சொல்றது புரிஞ்சவன் என்றால் உமக்கு இங்கு வேலை கிடையாது,, உமது தளத்தில் வேலையைப் பாரும்.

கேள்வி கேட்பதில் நீ நாகேஸ் என்றால் பதில் கூறுவதில் நாம் சிவாஜி...

சிங்கம் சிங்கிலாத் தான் வரும், பன்னிதான் கூட்டமா வரும்..

ஒரு கேள்வி.. உனது தாய் தந்தை, அம்மா அப்பா, பெயர்களை கூறும் பார்க்கலாம்..!

“ வாறான சனங்களுக்கும் ஐந்துபூதம்
மருவியதோ தேவதைக்கும் ஐந்துபூதம்
தாறான அண்டம்எல்லாம் ஐந்துபூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்துபூதம்
குரும்பரே ஐந்தினால் எல்லாம்ஆச்சு
நீறான வேடமிட்டு உபதேசித்த
நிலையெல்லாம் ஐந்தெழுத்தின் நிலையுமாச்சே..”

” தெளிவான மண்ணதுவும் நீரில்சேரும்
சேர்ந்துஎழுந்த சலமதுவும் தீயிற்சேரும்
ஒளியான தீச்சென்று வாயுவிற்சேரும்
ஓடியந்த வாயுவதும் வெளியிற்சேரும்
களியாகி செடமாகி செத்தபின்பு
கசடரே நரகசொர்க்கம் ஆவதென்கே
தெளிவான வாயுவொன்றே விந்திற்சேரும்
நேராக நாலும் அங்கே நீக்கிப் போச்சே.”

இங்கு ஐம்பூதங்கள் எவ்வாறு செயலாற்றுகிறது என்று தெளிவாகவே இருக்கிறது.

ஐம்பூதத்தில் ஒன்றை மட்டும் புரிந்துவிட்டால் சமச்சீர் எது என புரியும். அதுவே முப்புவின் இரகசியம். சாகாவரம்.. இது அறிவாழ் மட்டுமே கிடைக்கும், அதனால் தான் நாம் உங்களுக்கு சொல்வது தெளிவான அறிவே ஞானம், அதுவே கடவுள் என்று.. முட்டாப் பசங்கலா...

” நூல்கிடைப்பது யாருக்கு விட்டகுறையோருக்கு
நுணுக்கமற்ற சாத்திரங்கள் கருக்காணாது
நூல்கிடைத்தும் கருகாணோம் என்றுஏங்கி
நோய்கொண்டு மனமுடைந்து நொந்தோர்கோடி
நூல்கிடைத்தால் என்னுடைய நிகண்டைப்பாரு
நுணுக்கமுற்ற கருக்களெல்லாம் வெளியாய்போகும்
நூல்கிடைப்பது அரிதல்லவென்னி கண்டுகிட்டார்
நுகராமல் சாத்திரத்தை ஒளித்திட்டாரே.”

நுணுக்கமாய் படுக்கவேண்டும்.. வள்ளலார் சொன்னாலும் சரி அவர் அப்பா சொன்னாலும் சரி, நாம் சொன்னாலும் சரி...

“ சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்” இது பெரிய இரகசியம் போலும், என்னவோ வள்ளலார் தான் இதை சொன்னார் போலும் பேசும் முட்டாப் பசங்களுக்கு இது.

“ போகாத விந்துவினால் பிறக்குங்கோடி
புகழான வித்ததினால் மரமோகோடி
சாகாத காலிது தானறிவாய் மக்காள்
சமுசயங்கள் எண்ணாதே சனனமில்லை
வேகாத தலையறிந்தால் எல்லாம் போச்சு
வெட்டவெளியான மனம் பிறக்குமோடா
பாகாத திரோதகையின் மயக்கமானால்
பரிவான நாதவிந்து பரிசமாமே.”

இப்படி அருட்பாவில் பிரதி செய்யப்பட்டது தான் இருக்கு.. அப்பரம் என்னடா வள்ளலார்,, சும்மா இராமலிங்கம் தான்....

அறிவு என்பது ஞானம் அதுவே கடவுள்.. இங்கு நாம் ஆய்வுகள் செய்யாமல் வரவில்லை, துனிச்சலாக பேசுகிறோம் என்றால் ஆதாரங்கள் காட்டமுடியாமல் இல்லை.

எமது வயதுக்கும் எமது தோற்றத்துக்கும் எமது அறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அனைத்தும் நாம்தான்.

25 முதல் 30 வருட ஆய்வுகள், தெளிவான ஆய்வுகள், கடவுள் சொன்னாலும் நம்பாத ஆய்வுகள். எமது குரு பரம்பரை வித்தியாசமானது. நாம் கூத்தடிக்கும் கும்பலுடன் திரிந்தவர் அல்ல.. கலவும் கற்று மற என்பது போல் கும்பலாக திரிந்து கலவை கற்றவர் நாம், இப்போது மறந்துவிட்டோம்.

யாரிடம் சாட்சிகள் கேட்கிறீர்... இல்லாதவனிடம் கேளுங்கள். இங்கு அது குவிந்து கிடக்கிறது காரணம் நாம் சிரம் குவிபவர்..

அந்த பரமனை விட்டு எவனுக்கும் சிரம் குவியாது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவன் இருக்கும் போது, எமக்கு அறிவுக்கு என்ன பஞ்சம்.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.

என்ன கவலை..

யாரிடம் கேற்கிறாய் கேள்வி, என்னிடம் தீட்சை பெற்றாயா, மாணவனாக வந்தாயா, சேவை செய்தாயா.. மாமனா, மச்சானா,,, முட்டாப் பயலே..

இதற்கு மேல் உங்களுக்கு இங்கு வேலை கிடையாது தம்பி.

நாம் எப்படி பேசுவோம், எப்படி பழகுவோம் என்றும் எமது மாணவர்களுக்கு தெரியும் ஓரளவு.

முடிந்தால் அறிவை தேடுங்கள் கடவுள் உங்களைத் தேடுவான்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..

Monday, September 1, 2014

ஐயங்கார் இறந்தார்..

வணக்கம் தோழர்களே,,

நாம் பலமுறை கூறியிருக்கிறோம், இந்த பிராணாயாமம், வாசி யோகம், குண்டலினி என்று அர்த்தம் புரியாமல் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் என்று.

வாசி யோகம், பிராணாயாமம், குண்டலினி என்ற பயிற்சிகள் செய்தால் மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய நோய், நுரையீரல் பாதிப்பு என உங்கள் சுவாசத் தொகுதியை மிக ஆபத்தாக பாதிக்கும், இந்த பாதிப்பு உங்கள் பயிற்சியின் நேர கால அமைப்பை பொருத்து இருக்கும், ஆனால் பாதிப்பு பாதிப்புத் தான்..

அதற்கு சாட்சியாக இந்த செய்தி...

BKS Iyengar has died after a recent hospitalization, as reported by several Indian news sites and the official Iyengar website.

Iyengar had been ill for weeks, according to the Times of India, and had been suffering from heart problems. Admitted to the hospital on August 12, Iyengar's condition had worsened in recent days, and he was put on dialysis.

இத்தனை வருட யோகப் பயிற்சி இதயத்தை பாதுகாக முடியாது போனது..

Despite suffering two massive heart-attacks in 1996 and 1998.

இவரை விட இங்கு யாரும் யோகா வாசி பிராணாயாமம் பற்றி பேசி இருக்க முடியாது, இவரின் வருகைக்கு பிறகுதான் இந்த விடயங்கள் மேல் நாடுகளில் சூடுபிடித்தது, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தது..

தெளிவாக கற்றபின் எதையும் ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தான் அதன் உண்மை புரியும்.. 

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

யார் சாமி...

வணக்கம் தோழர்களே,,

ஒரு சிலர் பாடல்கள் காட்டுகிறார்கள் நமக்கே... அவர்களின் அறிவு எப்படி செயலாற்றுகிறது என்று பார்க்கலாம்..

“ அலையவே நாலுவே தத்திலுள்ள
அடைவான குருமார்கள் பொய்கள்சொல்லி
நிலையவே அவரவர்கள் வேதங்கட்டி
நீச்சாஉன் தெய்வம் எந்தெய்வம் என்றூ
மலையவே மானுடரை மயக்கங்காட்டி
மகிமைபெற இருந்துமே நிட்டைப்போலே
குலையவே காட்டியே அடிமைசெய்வார்
குரூரமாய்ப் பார்த்தறிந்தா லெல்லாம்பொய்யே.”

” என்பார்கள் உறுதியில்லா ராசைகூடார்
இன்பமா யுடம்புவளை யாமல்தானும்
நன்மையாய் புத்துமண்ணை லிங்கமாக
நாடியே யொருபிடித்து செபங்கள்செய்வார்
வன்பாக பசிவந்த போதில்தானும்
வடிவாக யிரந்துண்பார் மாயமெத்த
உண்பாரை யுடுப்பாரை பார்த்துஏங்கி
உறுதிதா னில்லாம லலைகுவாரே.”

பாடல் விளக்கம்... சுருக்கமாக..

நான்கு வேதத்திலும் இருக்கின்ற குருமார்கள் பொய்களைச் சொல்லி அதோடு அவர்களின் வேதாந்தமும் சொல்லி, இது இந்த சாதிக்கு, அது அந்த சாதிக்கு (பிரிவினை) உரிய தெய்வம் என்று மக்களை மயக்கி, அவர்கள் சுகமாக இருந்து சாமியார் போல் மக்களை அடிமையாக்கி வைப்பார்கள்.. இதை அறிவாழ் பார்த்தால் இவர்கள் செய்யும் பொய் தெரியும் என்கிறார்..

உதாரணமாக .. சாய் பாபா, சத்குரு, நித்தியானந்தா, ரவிசர்மா, அம்மா, அப்பா, கல்கி போன்ற ஆசாமிகள்..

இந்த சாமியார்களுக்கு பெண்கள் இல்லாவிட்டால் மாக்கட்டிங் இல்லை..

இந்த சாமியார்களின் சொத்து மதிப்பில் பாதியைவிட குறைவாகவே நாட்டின் பொருளாதார கடன்கள் இருக்கிறது.. ஏழை நாடு என்கிறீர்கள், அரசியல் வாதிகள் சொத்துமதிப்பை பேசும் நீங்கள் இந்த சாமியார்களின் சொத்துக்களை ஆராய்ந்து பாருங்கள்.. அவர்களிடம் வரும் பக்தருக்கு ஆசி வழங்கத்தேவையில்லை, தலா 1 கோடி கொடுத்தால் போதும், நாட்டின் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.. இவர்களிடம் இருக்கும் பணம் போதும் நதிகளை உலக மயப்படுத்தலாம்..

தங்குவதற்கு மாளிகைகள் எதற்கு சாமியாருக்கு.. குடில் போதாது.. பயனிக்க மெர்சிடஸ், பி.எம்,டபில்யு, ஆடி, என சொகுசு வண்டி எதற்கு, விமானத்தில் விஐபி ஆசனம் எதற்கு, பளபளப்பான ஆடைகள் எதற்கு, கரண்டியால் சாதம் சாப்பிடும் இவர்கள் சாமியார்கள் என்றால்..

காட்டிலும் மேட்டிலும் அழைந்து திரிந்து மக்களுக்கு அறிய மருந்துகளையும் வாழ்வியலின் உண்மையையும் தந்த ஞானிகள் சித்தர்கள் எல்லாம் யாருங்க...

இப்ப முட்டாப் பசங்க யாருன்னு நீங்களே தீர்மானிங்க...

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Sunday, August 31, 2014

ஜீவகாருண்யம்,,,,

வணக்கம் தோழர்களே,

இந்த வள்ளலார் என்ற ஒருவரை பின்பற்றும் அன்பர்களின் போதனைகள் தாங்க முடியல சாமி...

அருட்பெரும்ஜோதி, தனிப் பெரும் கருனை.. இது என்னடா கோதாரி வந்திருக்கு... பலரும் ஆகா ஓகோ என்றாங்க...!

ஜீவ காருண்யம் என்றால் என்ன என்று வள்ளலாருக்கே தெரியாது போல...

ஒரு சிறு கேள்வி... ஜீவகாருண்யம் பற்றி..

உயிரற்ற ஒரு பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, அது எதுவாக இருந்தாலும் அதில் அணுக்கல் இருக்கும் உண்மை தெரியாதா.. அந்த ஆணுக்களைத் தானே உயிர் என்பது, எதுவாக அது இருந்தாலும் அணுமாற்றத்தின் மூலமே அதன் தன்மை மாறுபடுகிறது அல்லவா.. சரி அப்படி இல்லை என்றால் பாசியில் (அல்கா) இருந்து தானே தாவரங்கள் வகைப்படுத்தப்படுகிறது, அவை உயிர் உள்ளதனால் தானே வளர்கிறது.. அவற்றின் வளர்ச்சிக்கு அதன் அணுமாற்றம் தானே காரணம். இவர் ஜீவகாருண்யம் என்றால் எதை சொல்கிறார்.. இங்கு சைவம் அசைவம் என்ற வேறுபாட்டுடன் எந்த உயிரும் படைக்கப் படவில்லை, அனைத்தும் ஒன்றாகவே படைக்கப் பட்டிருப்பது கூட தெரியாத ஞானி..

பருத்தியின் பஞ்சு தான் உடையாக இருக்கிறது என்றால்.. பருத்தி இங்கு நீங்கள் உடை தயாரிப்பதற்காக படைக்கப்படவில்லையே.. அப்படி இல்லை என்றால் மற்றவையும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று தானே கூறவேண்டும்..

இந்த பட்டுப் பூச்சியின் கூடு ஜீவகாருண்யம் இல்லையா..! உடலை மறைக்க உங்கள் மனைவிகள் உடுத்தும் துனி... அது எங்கிருந்து வந்தது... பட்டுப் பூச்சியிடம் இருந்து... பட்டுப் பூச்சி வெளிவிடும் பஞ்சு அதன் முட்டையை காக்கவும் குஞ்சுகளை காக்கவும் தானே..அப்படி பட்டுப் பூச்சியைக் கொன்று உடலை மறைக்க துனி போட்டிருக்கும் நீங்கள் ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறீர்கள்..

அவர் சொன்னது உண்மை என்று எந்த அறிவாழியும் ஏற்க மாட்டான்.

ஏண்டா அப்பா.. சிந்தித்து பார்க்கும் அறிவு மொத்தமா போயிட்டா உங்களுக்கு...

அது போகட்டும்... இதைப் பாருங்கள்
ஒரு தளத்தில் இருந்து எடுத்தது வள்ளலாரின் வாரிசுகளாம்

“Most important NOTE to Members of Suddha Sanmarga ;-

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-”
-----------------------
சமயம் மதம் இவற்றை விட்டவர்கள் தான் சன்மார்கமாம்... சிரிப்பாயில்லை..

அவரே சொல்கிறார் யாரையும் வணங்காதே என்று,, இவனுங்க அவரையே படமா போட்டு ஆனில மாட்டி பூப் போட்டு கும்பிடுறானுங்க.. என்னடா உங்க கொள்கை..

”இதோ அவரே வெளியிட்ட 12.04.1871 அறிக்கையில் தன் மார்க்க கடவுளை வெளிப்படுத்துகிறார்.”

“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”

இவரின் கூற்றுப்படி மற்றவர்களின் அறிவில் கிடைத்தவை எல்லாம் கதைகலாம்,, இவரின் அறிவில் வந்தவை மட்டும் உண்மையாம்.. முழுப் பூசனியை சோற்றில் மறைக்கிறது இது தான்.. பார்த்துக் கோங்க...

எந்த சமய மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது சுத்த சன்மார்க்கத்துக்கு.. அப்பிடின்னா.. இவனுங்க எப்படி கல்யானம் பன்னி பிள்ளை பெர்றானுங்க... அதும் ஜோதியாய் வருமோ...

மதம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தம்.. கலாச்சாரத்தை விட்டு விடு என்றால் உடுப்பே போடக்கூடாதே... ஏண்டாப்பா உங்களுக்கு வீடுகளே தேவையில்லையே.. அதுவும் கலாச்சாரம் தானே..

அதுவும் போகட்டும் உங்களுக்கு பெயர்களே இருக்கக் கூடாதே... நீங்கள் எழுதும் மொழிகள் அனைத்தும் ஒரு கலாச்சாரத்தின் அங்கம் அல்லவா...

நீங்கள் மதம் என்று எதை கூறிகிறீர்கள் சமயம் என்று எதை கூறுகிறீர்கள் என்று விளக்கமாக உங்கள் சன்மார்க்க குருவிடம் முதலில் கேளுங்கள்..

சன்மார்கத்தில் இருப்பவன் எவனும் வக்கீலாக இருக்க கூடாதே.. ஆனால் பலர் இருக்கிறீர்கள், தனியார் மருத்துவ மனை செய்யக் கூடாது அங்கு வேலையும் செய்யக் கூடாது ஆனால் பலர் இருக்கிறீர்கள்...

கேட்டால் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பீர்கள் அதுக்கு விவசாயம் போதும், அதுவும் உங்கள் உணவுக்கு மட்டும் போதுமான அளவு செய்யுங்கள்.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் அரச பாடசாலையில் படிக்கிறது.. இலவச கல்வியை நாடுகிறது.. தனியார் பாடசாலையில் வரிசையில் நின்று கட்டனம் கட்டி சேர்த்துவிட்டு சன்மார்கம் ஜீவகாருண்யம் பேசுகிறீர்கள்..

சன்மார்க்கத்தில் இருப்பவர் எத்தனைப் பேருக்கு மலிகை கடை இருக்கு துனிக்கடை இருக்கு அதில் எத்தனை வீதம் இலாபம் வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நகை கடைகள் இருக்கு அங்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்கிறீர்கள்..

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு அப்பவின் பெயரை சேர்க்க கூடாது.. மத அமைப்பின் வெளிப்பாட்டின் அடித்தளம் இது தான்.. முடியுமா உங்களால்.. முடிந்தால் வாழ்ந்துகாட்டுங்கள்.. இன்னாரின் மகன் என்று சொல்லக் கூடாது, இன்னார் தான் எனது அப்பா என்றும் சொல்லக் கூடாது.. கேட்டால் யாரும் இல்லை என்று கூறவேண்டும்..

படைப்பே இங்கு சன்மார்க்கத்தில் இல்லை, பிறகு எதைப் பற்றி பேசுகிறீர்கள்.. உங்கள் வீட்டுக்கார அம்மா..(மனைவி) வீட்டுக்கு விலக்கு வந்தால் தான் தாயாக முடியும்,.. அதுவே மிகப் பெரிய அசைவம்... முடிந்தால் அவர்களை தொடாதீர்கள்... அப்படியே நீங்களே இரத்தம், சதை, மச்சை, மயிர் எனத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்கள் ஆகவே நீங்களே மிகப் பெரிய மாமிசம்...

சும்மா ஊரை ஏமாத்துரத்த விட்டுட்டு நேர்மையாக உழைத்து சாப்பிடுங்கப்பா... அது தான் கடவுள் ....

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்