Monday, August 11, 2014

அம்மை அப்பனுகு பூசை

வணக்கம் தோழர்களே,

நேற்று அம்மை அப்பனுக்கு சிறப்பு பூசைகள் ஆண்டுப்பூசை இடம்பெற்றன. தாய் தந்தையை அழகுபடுத்திப் பார்ப்பது மிக மகிழ்சியை தருகிறது.

” எட்டெழுத் தட்சரம தானவளும் நீயே
ஏகமுறு மஞ்செழுத் துற்பனமு நீயே
திட்டமுறு நவகோண சத்திபரை நீயே
திருமேவும் ஐம்பத் தோரட்சரமு நீயே “

“ ஓதுவே நின்புகழ் ஆதி அபிராமி
ஓன்று மறியாஏளை உன்னடியை நம்பி
நீதியாய் என்றுமே காக்கநினை அம்மா
நீள்புகழ் சடைச்சி எனநின்ற பத்தினியே “










 














நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

ஓர் காய கற்பம் செய்முறை விளக்கம்

வணக்கம் தோழர்களே,

சித்த மருத்துவத்தின் பல பரிணாமங்களில் இது மிக முக்கியத்துவம் பெருகிறது. வாலையில் வடிக்கும் திராவகம் ஒன்று இங்கு செய்து காட்டப்படுகிறது.

இது காய கற்பம் ஒன்றின் செயற்பாட்டு விளக்கம்,

“ விந்திருகிக் குளிர்ந்து விடுந்த் தாபசோபம்
வெதுப்படங்கி தன் உடம்பு வலுக்குந்தானே “

குறிப்பிட்ட காயகற்பம் திராவகமாக வடிக்கப்பட்டு மீண்டும் ரேசிக்கப்பட்டு இருமுறை வடிக்கப்பட்ட திராவகம். இதை காலை மாலை அரிசி எடை மண்டலம் உண்டால் தாதுக்கள் வலுப்பெற்று உடல் பிரகாசிகும், உடல் குளிச்சியாக இருக்கும், நரை திரை போகும்,, உடல் கஸ்தூரி வாசம் பெறும், கண்கள் பிரகாசிக்கும், ஆண்மை அதிகரிக்கும், ஓராண்டு தொடர்ந்து உண்டால் ஆயுல் அதிகரித்து யோக மார்க்கத்தில் பயனிக்கலாம்.

” சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே”

இங்கு கூறப்படும் வாயு இதுவே..இதைத் தான் உள்ளே அடங்கச் செய்ய வேண்டும்.
வெறுமனே காற்றை பிடித்து ஒன்றும் பலனில்லை..

” அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே”

நீங்கள் ஆகமம் ஓதினாலும் வேதம் ஓதினாலும் அந்த ஓர் எழுத்தை அறிந்தால் தான் இது சாத்தியம் என்கிறார்.

” விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே”

புரிந்தால் நீங்களும் சித்தர் தான்.. க க க...

” தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே”

யாருக்கு இது பொருந்துகிறது,,,

“ உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே”

யார் உய்யப் போகிறீர்கள்...













“ உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே”

மூலர் சொன்ன வயுக்கள் என்ன என்று தெரியாமல் காற்றை மூக்கல் பிடித்து மார்புக்குள் அடக்கும் மேதைகளே, இதய அடைப்பு ஏற்பட்டு இறப்பதற்குள் தப்பித்துக் கொள்ளுங்கள்.

நுண்ணறிவினால் ஆராயாமல் உங்கள் அறிவால் ஆராய்ந்தால் கடவுள் இல்லை, அவரின் காலடி தூசு கூட கிட்டாது.

” போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே”

காற்றாக கலந்தவன் என்றால் எந்த காற்று என்பதுவே நுண்ணறிவு.. மேதாவிகளே..

“ உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பிரானே”

நுண்ணறிவு வேண்டும் மேதாவிகளே, நீரான காற்று வேண்டும்...

” மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே “

திருமந்திரம் 3000 மட்டும் பார்த்துவிட்டு பேசக்கூடாது...! 



நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.

Friday, August 8, 2014

சாமி ஆடுவதும் பேய் ஆடுவதும்...

வணக்கம் தோழர்களே,

வணக்கம் Nirmalaraj Jeyarajah, உங்கள் கேள்வி சரியானதே, இது ஆதிக் குடிகளின் வழிபாட்டு முறைகளில் ஒன்று, அவர்களின் பாரம்பரியத்தில் தான் நாமும் வந்திருக்கிறோம், அவர்கள் செய்யும் முறைகளைத் தான் நாமும் அப்படியே நம்பின காலமும் இருந்தது, ஆனால் பின்னர் பல மாற்றங்கள் பல வினோதங்கள் மூலம் நமது பாதை மாற்றியமைக்கப்பட்டது.

உண்மைகளை புரியும் போது எமக்கும் ஆச்சரியங்கள் தான் காத்திருந்தது, ஆனால் உண்மையை மறுக்க யாராலும் இயலாது அல்லவா. சரி இந்த பத்தாதி முறைகளில் எங்கேயேனும் சாமி மனிதனில் வந்து பேசும் என்று கூறப்படுவதாக கானவில்லை, மாறாக பேய்கள் தான் வரும் என கூறப்படுகிறது,

உதாரணமாக இந்த பாரம்பரிய முறைகளில் பேய் ஆட்ட, பேய் அழைக்க என்ற தலைப்புக்களில் தான் மனிதர்களில் பேய்களை அழைப்பித்து வாக்கு கேட்கும் மந்திரங்கள் கூறப்பட்டுள்ளது.

இன்னும் தெளிவாக கூறினால் சாமி ஆடுகிறது என்றால் எதற்கு சாமிக்கு கும்பம் வைத்து அதை அழங்கரிப்பது, பேசாமால் சாமி ஆடுபவரை இருத்தி அவருக்கு அழங்கரித்து அவருக்கு பூசைகள் செய்ய வேண்டியது தானே. மேலும் வாக்கெடுப்பது போன்ற விடயங்களை ஆழமாக பார்த்தால் பல உண்மைகள் தெளிவாக புரியும்.

நாம் இந்த வழிபாடுகள் தவறானது என்று கூறவில்லை, அங்கு சாமிகள் ஆடுவதில்லை, பேய்கள் தான் ஆடுகிறது அதற்கு சாட்சிகள் ஆயிரம் உண்டு. அதனால் தான் கும்பத்தில் இருக்கும் தேவதைகளை பார்த்து பேய்கள் பூசைகள் செய்கின்றன. அல்லாது போனால் எதற்கு சாமி (மாரி), சாமிக்கு (மாரிக்கு - கும்பத்துக்கு) பூசை செய்யவேண்டும்.

அங்கு ஆடுவதாக கூறப்படுவது குறிப்பிட்ட பேய்கள் குறித்த தேவதைகளின் பரிபாரங்கள் ( காவலாளிகள்) அவ்வளவு தான், அவை குறித்த தேவதைகளின் பிரதினிதியாக வருவதாக வேண்டுமானால் கூறலாம்.

உற்சவம் என்பது தமிழ் சொல் அல்லவே, ஆகவே தமிழில் சடங்கு என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இன்று எந்த பூசாரியும் தமிழை மட்டும் ( பத்தாதியை) வைத்து சடங்குகள் செய்வதாக நாம் காணவில்லை, காயத்திரி சுலோகங்கள், மற்றும் அர்ச்சனை முறைகள் என பத்ததியில் இல்லாத விடயங்கள் அதிகமாக சேர்ந்துவிட்டது, நாட்கணக்கு அதிகமாகிவிட்டது, என்ன செய்வது பூசாரிகளும் பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லவா..

சரி விடயத்துக்கு வருவோம், இந்த நீங்கள் குறிப்பிட்ட “ கெங் கெங் கணபதி கௌரி புத்திராய” என்ற மந்திரம் உண்மையில் அந்த பத்தாதியில் இல்லை. இது குறிப்பிட்ட ஒருவராள் புகுத்தப்பட்ட முறை, அவரும் கிழக்கில் தான் இருக்கிறார். முடியுமானால் பத்தாதி வைத்திருக்கும் யாரிடமாவது கேட்டு பாருங்கள், ஆனால் அது பழைய பிரதியாக இருக்க வேண்டும், தற்போது இருக்கும் யாருடைய எழுத்திலும் இருக்க கூடாது.

மேலும் கௌரி புத்திராய என்று அவர்கள் கூறுவது அல்ல “ கௌரி புத்திராயி” என்றூ தான் கூறுவது வழக்கம், அதுவும் தவறு கிடையாது.

கௌரியின் மகனை அவர்கள் பெண் தேவதைகளுடன் சேர்த்து அழைக்கும் போது வினாயகரையும் பெண்னாகவே கருதி அழைக்கிறார்கள். பிள்ளையாருக்கு யானை முகம் வைக்கும் போது ஆண் பெண் என்ற கருத்துக்களை அவர்கள் வைப்பதிலும் தவறில்லைதானே. காரணம் இது ஆதிக் குடிகளின் பூசை முறைகள் என்பதால் அவர்களுக்கு உடன்பாடான விடயத்தை செய்யும் அனுமதி இருக்கலாம் என தோனுகிறது.

ஆனால் நாம் கூறுவது வினாயகர் என்பது பஞ்ச பூதங்களின் செயற்பாடுகள் மட்டுமே. அதற்கு உருவ அமைப்பை கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டளையாள் ஏற்பட்டது அதனால் தான் அவருக்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காரணம் யார் இருந்தலும் இல்லாவிட்டாலும் பஞ்சபூதங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியாது என்பதே உண்மை. இதுவே மருந்தும்.

இங்கு அணைவரும் வருகிறார்கள் போகிறார்கள் (பிறப்பு - இறப்பு) அதிலனைத்து வித உயிர்களும் அடக்கம், இங்கு இறைவன் இருக்கிறான் என்பவனும் வாழ்கிறான், வேறு வித வழிபாட்டில் இருப்பவனும் வாழ்கிறான் ஆகவே இது தான் சரியான தெய்வம் என்ற கோட்பாட்டுக்குள் யாரும் அடங்க முடியாது. இருப்பினும் அனைத்தும் இயங்கிறது அல்லவா, அதற்கான காரணம் தான் பஞ்ச பூதங்கள்.

இதன் உண்மையை பகுத்தறிபவன் ஞானி என பெயர் பெருகிறான், அதனால் தான் இறைவணை ஆதியும் அந்தமும் இல்லாதவனை பஞ்சாட்சரத்தில் அடக்கி அதற்கு பஞ்சபூதங்களையும் சாட்சியாக்கி ஐம்புலன்களையும் அடக்கும் உபாயமாக பஞ்ச பூதங்களையும் அடக்கியாலும் வகைகளை அனைத்து ஞானிகளும் பரிபாசையாக பாடி வைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையை புரியும் போது அவன் முக்தியின் வாயிலை அடைகிறான்.

உங்களுக்கு தெரியுமா,, பஞ்சாட்சரத்தின் உண்மை எது என்று.. விரைவில் அதுவும் வரும்,... ஆய்வுகள் தொடரட்டும், இதுவே நெற்றிக் கண் திறப்பது என்பது,, அதை விடுத்து மண்டையின் நெற்றியில் கண்ணைத் தேடும் மதியிலீர்,, மீண்டும் மீண்டும் இங்கு பிறப்பது திண்ணம்.

” வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம் ”

திருமந்திரம்..

” உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே”

” அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே”

நன்றி..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..

Thursday, August 7, 2014

திருமந்திர விளக்கம்.

வணக்கம் தோழர்களே,

நாம் இங்கு எமது கருத்து என்று எதையும் பதிடவில்லை, மாறாக சமயம் சார்ந்த வெளிப்படையான உண்மைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். அதை சாட்சிகளோடும், ஆதாரங்களோடும் உங்கள் முன் பதிவிடுகிறோம், உண்மையை ஏற்க விரும்பும் மற்றும் ஆராயும் தோழர்களுக்கு இது புரியும்.

எமது சமய நியமங்கள் தடம்மாறி சென்றதற்கான கரணங்களை கண்டறிந்தால் எமது நாடுகளும், மக்களும் உண்மையான வாழ்கையை வாழ்வதற்கும், போலிகளிடம் இருந்து வெளிவருவதற்கும் இலகுவாக இருக்கும்.

இன்றும் உங்களிடம் ஒரு பதிவை கேள்வியாகவும் விவாதமாகவும் வைக்கிறேன், முடிந்தால் ஆராயுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

திருமந்திரம் மூவாயிரம் பாடல்களை வைத்து வாசி யோகம், குண்டலினி பயிற்சி, உடல் சக்கரம், ஞானக் கண், தாமரை இதழ், என பல பல பெயர் பேசி தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றும் இந்த சாமியார்கள், யோகிகள், யோகாசன மேதவிகள், மற்றும் ஆராய்ச்சியாலர்கள், பேராசிரியர்கள் என நீண்ட பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் ( ஒட்டு மொத்த உலகுக்கும்) இந்த பாடல்கள் எதை கூறுகிறது என உங்களிடம் இருக்கும் சாதாரன கண்ணையும் அறிவையும் வைத்து சிந்தித்து பதில் ( கருத்துக்களை) பதிவிடுங்கள்.

மூன்றாம் தந்திரம் - அமுரி தாரணை பகுதிக்கு விரையுங்கள்..

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே

.846..
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே

.847..
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே

.848..
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே

.849..
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகிடு மேனி இருளுங் கபாலமே.

.850..
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

இதில் இருதிப் பாடல் மிக தெளிவாக பதித்திருக்கிறார் மூலர்,
“ சோதி மருந்திது சொல்லவொண்ணாதே”

உண்மையான மருந்தை கூறமுடியாது என்று தெளிவாக கூறியிருக்கிறார். இதைத் தான் நாம் முந்தய பதிவில் வேறு சாட்சியுடன் கூறியிருந்தோம், அது கீழே...
----------------------------------------------------------------------------------------------------
“ முத்தியும் சித்தியும் முதல்கரு தீட்சையும்
சித்தியாய் பாடிய சிறந்த இருநூறை
வித்தியாச மாக விருதாவில் மூலர்
புத்தியில் லாமற் கிழித்தாரே நூலை “

மூலர் தமது உண்மையான நூலை கிழித்துவிட்டார்.
உணமையின் பயனின்மையினால் அதை புத்தியில்லாமற் கிழித்தார் என்கிறது பாடால். “விருதா - பயனின்மை, பிழை, வீண் “
அதாவது இந்த மனித குலத்தின் தன்மையை பார்த்து இது வேண்டாம் என அவர் கருதியதாக பொருள்.

அடுத்த பாடல் இதை உருதி செய்யும்.

“ கிழிபட்ட நூலின் கெடிபெற்ற சூத்திரம்
விழிபட யிருப்பதும் வாய்த்தவர் சித்தராம்
கழிபட்ட மூடர்க்குக் காணுமோ அமுதம்
வழிபடப் பாரார்க்கு வாயாது ஞானமே “

கிழிக்கப்பட்ட நூலைப் படித்தவன் சித்தன் என்றும் அவர் கிழியாது விட்ட, கழிக்கப்பட்ட நூலில் அமுதம் இல்லை என்றும், அதை பார்ப்பவருக்கு ஞானம் கிடையாது என்றும் கூறுகிறார்.
----------------------------------------------------------------------------------------------------
ஆகவே மூலரே தனது திருமந்திரம் மூவாயிரத்தில் உண்மையான மருந்தை கூற முடியாது என கூறியிருப்பது தெளிவு.

அதையும் மீறி வாதிட்டால் ஓர் கேள்வி,,,

வாசியாலும், குண்டலினியாலும், உடற்சக்கரம், நெற்றிக்கண் திறப்பது போன்ற விடயத்தை கூறிய அவர் எதற்காக காய கற்பம் பற்றி பேச வேண்டும்...!

சித்தர் பாடல்கள் என்றால் பரிபாசை திரட்டு என்று தானே அர்த்தம், அப்படி இருக்க அவர் கூறிய வாசி, குண்டலினி, யோகம் அனைத்துமே பரிபாசைக்கு உட்பட்டது அல்லவா..

அப்படி இதன் பரிபாசை எங்களுக்கு புரிகிறது என்றால் ஏன் மருத்துவம் தொடர்பான காயகற்பம் தொடர்பான பரிபாசைகள் புரியவில்லை.

ஏன் எவனும் இருக்கும் காலம் வரை நோயற்று இருக்கவில்லை, மரணத்தை அதன் காலத்தை நீடிக்கவில்லை.

” கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மாண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே

.828..
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே

.829..
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே

இங்கு திருமூலர் என்ன ஆபாசப் பாடமா நடத்துகிறார், புணர்ச்சி விந்து தலைவன் தலைவி, உள்ளே விடாதே வெளியில் விடு என்று..

சிந்திப்பது மறந்த இனமா நாம், பகுத்தறிவின் வித்தே நாம் தானே, உலகுக்கு முதல் குடியும் நாம் தானே, நமது படைப்பின் நோக்கம் மறந்தது ஏன், மறக்கடிக்கப்பட்டது யாரால்..!

திரு மந்திரம் பொய் என்பது அல்ல, அதன் புரிதல் தவறாக இங்கு கூறப்படுகிறது என்பது தான் எமது வாதம்.

இதன் தொடர்ச்சி மேலும் தொடரும்..

“ சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?”

” அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்?”

“ சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? ”

”என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Monday, August 4, 2014

எது வாசி யோகம்,...

வணக்கம் தோழர்களே,

வாசி செய்கிறோம், யோகம் செய்கிறோம், பிராணாயாமம் செய்கின்றோம் மூச்சை அடக்குகிறோம், என்று கூறும் பல அன்பர்களுக்கு அன்பாகவே கூறியிருக்கிறேன், அதை செய்ய வேண்டாம் என்று காரணம்... வாசிப் பயிற்சி உடலாரோக்கியத்தை கெடுக்கும், மார்பு வலியை உண்டுபன்னும், மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவும் நேரும்...

உண்மையைச் சொன்னால் யார் தான் கேட்கிறார்கள், பணம் சம்பாதிக்கும் கூட்டம் சொல்வதை நம்பி வாழ்க்கையை தொழைப்பது பின்னர் வைத்தியசாலையில் போய் பணத்தை செலவு செய்வது கேட்டால் பணக் கஷ்டம் என்பது...

” தானது வான தான பூமியில்
தானது வான தன்மை யறிந்திலர்
தானது தனக்குள் தானுண்டு வென்று
போனது காயம் புலனறி யாரே “

இந்த பூமியில் கிடைக்கும் மருந்தை (கற்பத்தை) அறியாமல், தனக்குள் இருக்கிறது (வாசி) என்று நினைத்து உடலை அழிப்பர்.

” அறியாது மூடர் ஆல வனத்தை
பரியாது சப்பரம் பாரிதை விட்டால்
தெரியாது சோதி திடமில்லா காயம்
குறியாது முத்தி கூடாது அற்பரே”

கற்பம் அறியாதவருக்கு இறைவனை பற்றி தெரியப்போவதில்லை (சோதி) உடல் திடமில்லாமல் இருந்தால் முத்தி எப்படி கிடைக்கும்.

“ அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பது பாரே “

யோகம் எது என்று தெரியாமல் கண்டதையும் செய்து (வாசி) செத்தது தான் மிச்சம், கற்பம் என்பதுவே ஞானத்தின் அடிப்படை, அது இன்றி இங்கு எதுவும் இல்லை,,, அற்பர்களே உங்களை அழிம்பு என கூறுகிறார்..

“ பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீடரைச் செய்து உபதேசம்
கூத்திது வாகும் கூடாது முத்தியே “

இதை விட தெளிவாக ஒரு பாடலை காட்ட வேண்டுமா என்ன...

சில நூல்களை படித்துவிட்டு காத்தடைக்கும் உபாயம் (வாசி) செய்வதாகவும் நாம் யோகி என்றும் கூறி சீடரை சேர்த்து உபதேசம் செய்து கூத்தாடுவது என்கிறார், இது முக்தி கிடையாது...

மிக முக்கியமான பதிவு இது... திரு மூலரையும், திரு மந்திரத்தையும் ஆதாரமாக கொண்டு பேசும் அன்பர்களுக்கு இது இதய அடைப்பு வந்தால் நாம் காரணம் அல்ல...

“ முத்தியும் சித்தியும் முதல்கரு தீட்சையும்
சித்தியாய் பாடிய சிறந்த இருநூறை
வித்தியாச மாக விருதாவில் மூலர்
புத்தியில் லாமற் கிழித்தாரே நூலை “

மூலர் தமது உண்மையான நூலை கிழித்துவிட்டார்.
உணமையின் பயனின்மையினால் அதை புத்தியில்லாமற் கிழித்தார் என்கிறது பாடால். “விருதா - பயனின்மை, பிழை, வீண் “
அதாவது இந்த மனித குலத்தின் தன்மையை பார்த்து இது வேண்டாம் என அவர் கருதியதாக பொருள்.
அடுத்த பாடல் இதை உருதி செய்யும்.

“ கிழிபட்ட நூலின் கெடிபெற்ற சூத்திரம்
விழிபட யிருப்பதும் வாய்த்தவர் சித்தராம்
கழிபட்ட மூடர்க்குக் காணுமோ அமுதம்
வழிபடப் பாரார்க்கு வாயாது ஞானமே “

கிழிக்கப்பட்ட நூலைப் படித்தவன் சித்தன் என்றும் அவர் கிழியாது விட்ட, கழிக்கப்பட்ட நூலில் அமுதம் இல்லை என்றும், அதை பார்ப்பவருக்கு ஞானம் கிடையாது என்றும் கூறுகிறார்.

“ ஞானமும் யோகமும் நலமான வாதமும்
பானமும் உண்டாம் பரமான உப்பினால்
ஞானமுஞ் சித்தி நவிலாதே சுந்தரா
மீனமே மேசமா யிருபது முற்றே “

இதில் தெளிவாக இருக்கிறது எதை சொல்லக்கூடாது என்று, அப்படி இருக்க அதை மூலரும் சொல்லியிருப்பாரா,,, அப்படியே, இதில் “ மீனம், மேசம் “ என இரு புதிய விடயம் வருகிறது அல்லவா.. அது பற்றி அடுத்த பதிவில் படிக்கலாம்.

இப்போது வாசி செய்தால் என்ன கிடைக்கும் என பார்க்கலாம்..

“ வாச்சப்பா நாவையும் தான்மேலே யூணி
வடிவான வாய்வுகளை கட்டும் போது
பேச்சப்பா கண் தெரிக்கும் வாய்வுதானும்
பிரியமுடன் சய ரோக மாகுந்தானே “

வாசியை (வாயுவை) அடக்கி கிடைப்பது என்ன என்று ஓர் சிறிய உதாரணமே இது.. சய ரோகம் வரும்.. கவனம் தோழர்களே..

“ தானென்ற வாசியென்றும் சொல்லக் கேளு
தந்தையுட விந்து வல்லோ வாசியாச்சு “

இங்கு வாசி என்பது தந்தையின் விந்து என்று கூறப்படுகிறது அதற்காக தந்தையிடம் விந்த தரும் படி கேட்டு அடி வாங்காதீர்கள்..

தந்தை என்பது சிவம் எனவும் விந்து என்பது நாதத்தில் இருந்து பிரிக்கப் படுவது. இது காயகற்ப முறை.

” ஆடுமே யுப்பா லழியாது காயம்
ஆடுமே வாசி யசையாமல் நிற்கும்
ஆடுமே யோகம் ஆதியுப் பாலே
ஆடுமே யோகம் அப்போது சித்தியே “

” கற்பத்தை யுண்டாற் காயம் அழியாது
கற்பத்தி னாலே காணலாம் கைலையை
கற்பத்தி னாலே காணலாஞ் சோதியை
கற்பத்தி னாலே காலனை கட்டிடே “

இங்கு தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதைப் போன்றே குண்டலினியை எழுப்புவதாக கூறி சிலர் மூலம் பௌத்திரம் போன்ற ரோகங்களை வரவளைக்க முயற்சிக்கிறார்கள்.. அவதானமாக இருங்கள். உடலைக் காக்க மருந்துகளால் மட்டுமே முடியும். வேறு எந்த பயிற்சியும் உதவாது.

திரு மூலரின் திருமந்திரம் மூவாயிரம் ஓர் பரிபாசை திரட்டு, அதனுல் இருப்பது நீங்கள் நினைப்பது போன்று வாசி எனும் மூச்சுப் பயிற்சியும் இல்லை, குண்டலினி எனும் பிரானாயாமமுமில்லை, வாசிக்கும் குண்டலினிக்கும் எதற்கு அமுரி தாரனையும், அட்டகர்ம பிரயோகமும்..

திரு மந்திரதிரத்துக்கு விளக்க உரை எழுதி ஆசிரியர்களாலும், அதை ஆய்வு செய்து முதுமாணி பட்டம் பெற்ற பேராசிரியர்களாலும் கூட அதில் கூறியது போல் வாழ முடியாது இறந்து போயினர்.. ஆகவே அவர்கள் எழுதிய விளக்க உரைகள் தவரானது என்பதற்கு அவர்கள் மரணமே சாட்சி.

அப்படி இருக்க அதை எடுத்து படித்து நீங்கள் எப்படி முக்தி அடையப் போகிறீர்கள், சிந்திக்க மறந்த இனம் மனிதம் ஆனதால் தான், வெளிப்படையான நூல்கள் கிழிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன, பிற மொழிகள் சைவத்துக்குள் உள் நுளைந்தது.

அல்லாது போனால் தென்னாடுடைய சிவனுக்கு எதற்கு வட மொழி பிரயோகம். சிந்திக்க மாட்டீர்களா..

சிந்தியுங்கள்.. ஆழ்ந்து ஆராயுங்கள். 








 






நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
மனிதன்.
சித்த மருத்துவன்..

Saturday, August 2, 2014

முடிந்தால் படியுங்கள்...

வணக்கம் மாணவர்களே,,

இது எமது பாரம்பரிய முறைகளை பின்பற்றும் மாணவர்களுக்கான பதிவு...மிக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..

சித்தர்களின் வழியில் செல்வது இலகுவானது அல்ல எனறு நாம் முன்னமே கூறியிருக்கிறோம், முக்தி வழி செல்வது பற்றியும் மிக தெளிவாகவே கூறியிருக்கிறோம், அறிவு எமது ஞானம் என்பதையும் கூறியிருக்கிறோம்...

மந்திரம் சொன்னால் பணம் வருமாக இருந்தால் அதை அன்றே பாண்டவர்கள் கூறியிருப்பார்கள் அல்லவா... எதற்காக போர் தேவைப்பட்டது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்... சிவனிடம் வரம் பெற்ற எவனும் செல்வங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கேட்டதாக வரலாறுகள் இல்லை... அர்சுணன் தவவலிமக்கு ஆயுதமே கேட்டான், அதை விடுத்து நாடு நகரம் கேட்கவில்லை என்பது தெரியாது உங்களுக்கு..

உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் பார்க்கும் எத்தனை பேர் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்... பணத்துக்காக நீங்கள் இறைவனை நாடுவதானால் அவர் உங்களிடம் இருந்து மிக தூரமாக செல்வார் என்பதற்கு நீங்களே சாட்சி...

“ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ”

இந்த வாக்கு உங்களைப் போன்றவருக்காகவே கூறப்பட்டது..

” தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் “

இதுவும் உங்களுக்கு கூறப்பட்டது தான்.. தேவையுடன் நீங்கள் அவனை நோக்கி செல்லுவது, அவன் உருவாக்காத விடயத்தை, அப்படி இருக்க அதை அவன் உங்களுக்கு எப்படி வரமாக தரமுடியும் என சிந்தியுங்கள்...

மந்திரங்கள் உங்கள் தடைகளை நீக்கவே உள்ளது, நீங்கள் உண்மையாக செயற்பட்டால் தானே அதன் தடைகளை மந்திரங்கள் நீங்க முடியும்.

கடனை நீக்குவதற்கு மந்திரம் செபிக்கலாம் என்றால் இன்று அதை உங்கள் நாட்டு அரசாங்கமே செய்துவிடும் அல்லவா...

அளவு கடந்த ஆசையின் காரணத்தாலேயே நீங்கள் பண நெருக்கடியில் இருப்பது தெளிவாக உங்களுக்கே தெரியும். ஆண்மீகம் என்பது மன நிறைவிற்காக சிலரும், கஷ்டங்களை போக்க சிலரும், வாழ்வியல் முன்னேற்றதுக்காக சிலரும் என ஒவ்வொறு காரணத்துக்காக செல்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே சிந்தியுங்கள்...

இறைவனிடம் நாம் கேட்டு அது கிடைப்பது என்றால் அதற்கான தவமும் இருக்க வேண்டும் அல்லவா.. இன்று பயிற்சி செய்தால் நாளை கிடைக்கும் என்று எந்த காலத்திலும் சொல்லவில்லையே, தவமியற்றுவது எமது கடமை அவர் வருவது அவரது கடமை,, தவத்தின் போது நமது சிந்தனை எதுவாக இருக்கவேண்டும்,.. அவரை விடமாட்டோம் என்று இருக்க வேண்டும். மாறாக 15 நாட்கள் அவர் குரு, 15 நாட்கள் இவர் குரு, என்றால் கடவுளை அடமானம் வைப்பது யார்.

பிரச்சினைகள் கஷ்ட நட்டங்கள் இல்லாதவர் இங்கு யாரும் அல்ல.. பல ஆயிரம் கோடிகள் குவிக்கும் சாமியார்களுக்கு கூட எப்போது எந்த நிகழ்சியில் நமது அந்தரங்கம் வெளியாக்கும் என்ற கவலை நிரம்பியிருக்கிறது. ஆகவே பிரச்சினை ஒன்றே ஆனால் அதன் வடிவம் வேறு.

“ போர்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா”

என்ற வாக்கு இதைத்தானே குறிக்கிறது... உங்கள் தேவைக்காகவே யாதகம் பார்ப்பது, உங்கள் தேவைக்காகவே பரிகாரம் செய்வது, உங்கள் தேவைக்காகவே ஆலயங்கள் செல்வது, உங்கள் தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறீர்கள், அவனின் மகிழ்சிக்காக அல்ல என்பதை நினைவில் வையுங்கள்...

ஒரு நிமிடமாவது அவனைப் பற்றி அவனிடம் விசாரித்தது உண்டா..! அவனின் குறைகளை கேட்டது உண்டா..! இது என்னடா புதுசா இருக்கு என்று நினைக்க வேண்டாம், வீட்டுக்கு வந்தவரிடம் நலம் விசாரிப்பது நமது பன்புதானே...

உங்கள் முயற்சிகளை தொடருங்கள் அதற்கான வேலைகளை செய்யுங்கள், அதன் பலனை அவனிடம் கொடுத்துவிடுங்கள்.

உலக சரித்திரம் சொல்வது புரியாதவரா நீங்கள், ஆசியா அலக்சாண்டரை நோக்கி பயனிக்கவில்லை, ஐரோப்பா நெப்போலியனை நோக்கி பயனிக்கவில்லை, அமெரிக்கா கொலம்பஸ்ஸை நோக்கி பயனிக்கவில்லை, இறைவனும் உங்களை நோக்கி பயனிப்பதில்லை, நீங்கள் தான் அவனை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும்..

பணம் கொடுத்தால் தான் இறைவன் என்றால், விபச்சாரிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம், தாயிடம் கேட்பது பசிக்கு உணவு, உண்மையான பாசம், தேவையின் போது பாதுகாப்பு. இதை எதிர்பார்க்கும் நாம் தாயிடம் உண்மையானவராய் இருப்பது அவசியம் அல்லவா..

உங்களுக்கு அனைத்தும் தரப்பட்டிருக்கிறது, அதை சரியாக பயன்படுத்தும் விதமே ஞானம், அதுவும் கிடைக்கிறது, இருப்பினும் பலனில்லை என்றால் என்ன அர்த்தம்..

“ இருப்பவன் சரியாக இருந்தால், சிரைப்பவன் சரியாக சிரைப்பான்”

உங்கள் சிந்தனைகளை தெளிவாக வையுங்கள் முழுமையாக அவனிடம் சரணடைய வேண்டும்.

நல்லது நடந்தால் அவன் செயல் என்று கூறும் நீங்கள் கெட்டது நடந்தால் அவனை திட்டுகிறீர்கள். அதிலும் ஒரு காரணம் இருக்கும் என்று ஏற்பது இல்லை.

ஆனால் நீங்கள் மட்டும் இதை நான் உனது நன்மைக்காகவே செய்தேன் என்று மற்றவருக்கு உபதேசம் செய்கிறீர்கள்.. அது எப்படி சாத்தியம்.. யாரை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்...

பணம் சம்பாதிக்க எத்தனையோ முறைகள் உண்டு, கடத்தல் மூலமும் பணம் சம்பாதிக்க முடியுமே... ஏன் அதை நீங்கள் செய்வதில்லை.. யாருக்கு பயம்... ஏன் பயம்,,, அதை தண்டிப்பவன் யார்... இதற்கெள்ளாம் விளக்கம் தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் வாழ்கையின் உண்மை புரிவதில்லை..

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது இதைத் தானே... முதலில் வரவிற்கு ஏற்ப வாழ்கையை திட்டமிடுங்கள் பின்னர் அதிக வரவு வரும் போது அடுத்த கட்டத்தை சிந்தியுங்கள், செலவை முன்னமே செய்துவிட்டு, அதற்கான வரவை எதிர்பார்த்தால் உங்கள் நம்பிக்கை இப்படித்தான் போகும்..

இன்று தமிழ் பற்றி பேசும் உங்களின் எத்தனை பேர் உங்கள் குழந்தைகளை தமிழில் கற்க அனுப்புகிறீர்கள்.. சங்கம், சேவை, சமூகம் என்று பேசுவது உங்கள் தேவைக்காகவே என்பது கூட தெரியாதவனா இறைவன்..

சமயத்துக்காக பாடுபடும் உங்களின் எத்தனை பேரின் குழந்தைகள் உங்கள் சமய சம்பிரதாயங்கள் நிறைந்த பாடசாலைக்கு செல்கிறது, கான்வெண்டுக்கும், மசூதிகளின் ஆதிக்கத்துக்கும் தானே அனுப்புகிறீர்கள்.

” ஆடு பகை குட்டி உறவா..!” என்ற மொழிக்கு காரணமானவர்கள் நீங்கள் தானே...

தமிழ் வளர்க்கும் கவிஞ்ஞர்களின் மகன்கள் மகள்கள் மேலைனாடுகளில் உயர் கல்வி கற்கிறார்கள், ஏன் தமிழகத்தின் கல்லூரிகள் தகுதியற்றனவா...

அரச பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் தகுதியற்றவரா... இதில் உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகள் தகுதியற்றவர்கள் அரச பாடசாலையிலும், கல்லுரிகலுளும் பயிலுவதற்கு.. அவர்களுடன் உங்கள் குழந்தைகளால் போட்டி போடமுடியாது என்பதற்காகவே பணத்தை கொடுத்து கல்வியை வாங்கிக் கொடுக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளை இப்போதே பிச்சை எடுக்க பழக்குவது நீங்கள் தான்.. அது வளர்ந்து வேறு என்ன செய்யும் மற்றவரிடம் பிச்சை எடுக்கும். ஆகவே நீங்களே அனைத்துக்கும் காரணம்,, ஆனால் கடவுளை குற்றம் சாட்டுவது.. சமூகத்தை குற்றம் சாட்டுவது..

இதையும் மீறி நாம் கூருவதற்கு எதுவும் இல்லை.. இறைவனை பகடைக் காய் என உருட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு... சிந்தித்து செயற்படுங்கள்..

இங்கு நாம் யாரையும் குற்றம் சாட்டவில்லை, உங்கள் குற்றங்களை போக்கிக் கொள்ளுங்கள், அதன் பின் அவனிடம் கேளுங்கள்...

” தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் “ என்ற ஓர் வாக்கும் உண்டு... தட்டும் போது சரியான கதவை தட்ட வேண்டும், நாமும் சரியாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு மட்டும் இல்லாது பலருக்கும் இது சிந்திக்க வைக்கும் என சிந்திக்கிறேன்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Friday, August 1, 2014

எமது மலேசிய பயனத்தின் சில காட்சிகள்

வணக்கம் தோழர்களே,

எமது மலேசியப் பயனத்தின் சில காட்சிகள், இயற்கையும், செயற்கையும்...



















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

தேவிக்கு நீர் அபிசேகம்

வணக்கம் தோழர்களே,

இன்று தேவிக்கு நீர் அபிசேகம், மற்றும் புத்தாடை... அவளின் சிரிப்புக்கு நிகர் இல்லை....

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே







 










நன்றி
 

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

காயத்திரி மந்திரம் எனும் பொய்....

வணக்கம் தோழர்களே,

காயத்திரி மந்திரம் எனும் பொய் ஓர் பார்வை...

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|

அடி முடி தெரியாமல் செய்யும் விடயங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது இன்று.. அதிலும் மிகக் கவலை “ காயத்திரி சித்தர்” என்ற ஒருவரின் படத்தை வைத்து அதை தீட்சை மூலமாக பெற்றது என்று பாராயனம் செய்வது..

அதுவும் ஐந்து முகங்களுடன் ஒரு பெண் உறுவம் அதற்கு தாமரை ஆசனம், பல ஆயுதங்கள், பல வர்ணங்கள் என பல சோடிப்புக்கள்..

முதலில் சித்தர் என்று ஒருவரை கூறுவதானால் அவர் சித்துக்கள் செய்யவேண்டும், அதிலும் அட்ட கர்ம பிரயோகம் சித்தி பெற்றவராக இருக்கவேண்டும்.. குறைந்த பட்சம் மூலிகைகள் மருந்துகள் நாடிப்பரீட்சை என சில சித்தர் பாரம்பரிய விடயம் தெரிய வேண்டும்.. எதை வைத்து இங்கு பலரும் ஒருவரை சித்தர் என்று கருதுகிறார்கள் என்று புரியவில்லை..

இருக்கு வேதத்தின் பின் பகுதியில் வரும் ஓர் துதிப்பாடல் இது... இருக்கு வேதம் என்றாலே பாடல்கள் என்று தானே அர்த்தம். அப்படி இருக்க இந்த காயத்திரி எப்படி மந்திரமானது.. சிந்திக்க மறந்த விலங்கா மனிதன்...

” எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்,
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு “

அறிவு என்பதே ஞானம் ஆனால் ஞானத்தை தேடி ஓடும் பலரும் அறிவற்றிருந்தால் எப்படி சாத்தியம்...

காயத்திரி என்பது விஸ்வாமித்திரர் எனும் கௌசிக மன்னன் தனது தவ வலிமையை காட்டி சிவனை தரிசித்த போது சிவனுக்காக பாடிய துதியாக அல்லவா வேதம் குறிப்பிடுகிறது.. அப்படி இருக்க அது எப்படி ஓர் காயத்திரி எனும் பெண் தெய்வத்தை குறிப்பதாக கருத்தப் பட முடியும். அப்படியே ஆயினும் இருக்கு வேத காலத்தில் எந்த எப்படி தெய்வ வழிபாடுகள் இருந்தது என்று இருக்கு வேதத்தில் இருக்க வேண்டுமே, அதை யாரும் உற்று நோக்குவதில்லையா..

சக்தி வழிபாடுகள் சைவம் கிடையாதே,,, அது சாக்தம் எனும் பிற சமயமாயிற்றே... அப்படி இருக்க எப்படி அதை சைவம் என்று கருதுவது.. அதாவது வேதங்களை ஆதாரமாக கொண்டவர்களுக்கு... எது எப்படி என்ற விளக்கம் இல்லாமல் அதை எப்படி செய்து முக்தி அடைய முடியும் என நினைக்கிறீர்கள்..

” கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ற வாக்கின் அர்த்தம் என்னவோ... ஆலயங்களில் அந்தணர்கள் ஓர்துவது அனைத்தும் மந்திரம் என்ற நினைப்பில் இருக்கும் தோழர்களுக்கு முதலில் அவர்களில் மொழி புரிய வேண்டும் அப்பொது தான் என்ன சொல்கிறார்கள் என்ற தெளிவு கிடைக்கும்.. அர்ச்சணை என்றால் என்ன, அபிசேகம் என்றால் என்ன என்ற பிரிவு புரியும்.

வெறுமனே ஒன்றும் புரியாமல் ஒன்றை சொல்வது எவ்விதத்தில் பலன் தரும் என நினைக்கிறீர்கள், அப்படி அது எங்கள் நம்பிக்கை என்றால் அதற்கு இதைத்தான் கூறவேண்டும் என்ற தெவை அல்ல புரியாத எதுவும், அதுவாக இருக்க முடியுமே.

வேதங்கள் இறைவனால் அருளப்பட்டதாக கூறும் பலரும் முட்டால்கள் என்பதற்கு அவர்களே சாட்சி.. காரணம் வேதத்தில் இருக்கும் பாடல்கள் முதல் மந்திரங்கள் வரை இதை யார் தந்தார் என்ற விளக்கம் இருக்கிறது... அப்படி என்றால் அதை எப்படி இறைவன் தரமுடியும், தரவேண்டும். தென்னாடுடைய சிவன் எதற்கு வடமொழியில் கூற வேண்டும்.. சிந்திக்க மாட்டீர்களா...! பகுத்தறிவே மனிதனின் ஆயுதமாக தரப்பட்டிருக்கிறது அப்படி இருக்க அதை விடுத்து எப்படி நீங்கள் ஞான மார்கம் செல்ல இந்த போலிகளை நம்புகிறீர்கள்..

” கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே ”

இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிகிறதா...

” மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே “

இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிகிறதா...

அறிவே நீ எனும் வாக்கு ஏன் வந்தது,,

” பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே”

பொய் என்பது என்ன என்பதை புரியாதவனை எப்படி ஞானி என்பது...

வேத உபாசணைகள் செய்தால் அவர்கள் சித்தர் மரபில் இருக்க முடியாது என்பது முதல் நோக்கு.. அப்படி இருக்க வேதம் என்பதே என்ன என்று தெரியாதவன் எப்படி சித்தனாக இருக்க முடியும். அதுவும் காயத்திரி சித்தன் என்றால் அது சித்தர் வம்சத்தை இழிவு படுத்தும் சொல் அல்லவா...

ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு சக்தியை உணர்ந்தவன் எப்படி எல்லைகளுக்குள் உட்பட்ட சக்தியை வணங்கியிருப்பான் என்ற சிந்தனை வேண்டாமா.. அப்படி அவன் வணங்குவதானால் அதற்கு ஏற்ற காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டாமா..

காயத்திரி என்று உபாசனை செய்து நீங்கள் காண்பது என்ன என்ற விளக்கம் உங்களுக்கு இந்த அறிய மந்திரத்தை தந்தவர்கள் கூறியதுண்டா... அல்லது அவர்களிடம் நீங்கள் கேட்டதுண்டா..!

அது இருக்கட்டும் அது ஏன் இந்த பெண் உருவுக்கு ஐந்து தலைகள் என்ற கேள்வியாவது எழுப்பியதுண்டா, அல்லது அவர்கள் கூறியதுண்டா...

திரு மந்திர முதல் பாடலுக்கே அர்த்தம் புரியவில்லை,, பின்னர் குண்டலினி என்பதும் வாசி என்பது சக்கரம் என்பது எப்படி புரிந்தது பலருக்கும். பரிபாசை என்பது உண்டு என்று கூறும் வாயினாலேயே இதை மருக்கிறீர்கள் என்றால் எப்படி அது சாத்தியம்.

” மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.”

இந்த பாடலில் இருப்பது இதை செய்ய வேண்டாம் என்று மட்டுமல்ல, இதில் ஒன்றை மறைத்தே பாடியிருக்கிறார் அகத்தியர். இங்கு மனது என்பது பொய் என்ற அர்த்தம் உள்ளது காரணம் அப்படி ஒன்று உடலில் இல்லவே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி என்றால் இல்லாத ஒன்றை எப்படி செம்மை செய்வது என்ற கேள்வி வரவேண்டும் அல்லவா... ஏன் வரவில்லை.. நமக்கு பகுத்தறிவு இருப்பதாக நாம் கூறுவதே பணம் சம்பாதிக்க மட்டும் தானே...

இந்த ஆய்வை உங்களிடம் விடுகிறேன்.. விடயத்துக்கு வருவோம்..

காயத்திரி என்பது என்ன என்ற ஓர் புரிதல் வந்திருக்கும் என நினைக்கிறேன். சித்தர் என்ற சொல்லை சரியாக பயன்படுத்த தெரியாதவன் எப்படி சித்தர்களை பற்றி பேச முடியும் என சிந்தித்து உங்கள் ஆன்மீக குருமாரை சேருங்கள். பட்டங்களும் பதக்கங்களும் ஞானம் அல்ல. எது உண்மை என்பதே ஞானம்.

கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்க முடியும் என்பதுவே இறைவன் தந்திருக்கும் சாட்சி.. அதனால் தான் நாவை நடுவில் வைத்திருக்கிறான்,.

” ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே”

காட்டுவது இரண்டாக இருக்கலாம் ஆனால் காண்பது ஒன்றாகவே இருக்க முடியும்.

ஐந்து நிறங்களுடைய பெண் யார் என்று பார்க்கலாம்... காயத்திரி என்ற பொய் எது என்று பார்க்கலாம்,,

” நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
” மறைந்திருந்தாய் ” எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய ” மாய இருளை” “

இங்கு நிறங்கள் என்பது எது என்று சிந்திப்பதே அறிவு அதுவே ஞானம்.. அது இல்லாதவன் எப்படி ஞானி எனப்படுவது..

சிந்தியுங்கள் பகுத்தறிவை உபயோகியுங்கள்...

திரு வாசகத்தை மட்டும் ஆதாரமாக எடுத்தே இவ்வளவு ஆதாரங்களை காட்ட முடிகிறது என்றால் சித்தர் பாடல்கள் தொல்காப்பியம், என உங்களுக்கு சாட்சிகள் காட்டினால் உங்கள் நிலை உங்கள் நம்பிக்கை எங்கு செல்லும் என்று நினையுங்கள்..

” சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. “

காயத்திரி என்பது பாட்டு இனியாவது அது தீட்சை என்று உபதேசம் என்றும் நம்பி ஏமாறாமல் எது சரியானது என்பதை ஆய்வு செய்து ஞானத்தை பெருங்கள்.. 








நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

தீட்சை/உபதேசம் என்பது என்ன..

வணக்கம் தோழர்களே,

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

தீட்சை என்பது சுத்தமாக்குவது என்று பொருட்படுவது. எதை சுத்தமாக்குவது ஆத்மாவையா !, இல்லவே இல்லை.... உடலை சுத்தமாக்குவது...

ஒரு விடயத்தை ஆராயும் போது அது எங்கிருந்து வந்தது என்ற தெளிவான பார்வை வேண்டும், அதாவது கால அளவு தென்படவேண்டும். மனித சமூகத்தின் ஆரம்பம் வரை சிந்திக்க வேண்டும், குறிப்பிட்ட விடயம் எந்த சமூகத்தின் அடையாளம் என்பது மிக அவசியம். இந்த கண்ணோட்டத்தை விட்டு தற்போதைய உலக வாழ்க்கையை வைத்து சிந்திப்பதால் தான் உண்மை மறுக்கப்படுகிறது. காலத்தால் முந்திய விடயத்தை ஆய்வு செய்வது இலகுவானது அல்ல என்ற தெளிவு வேண்டும்.

ஆதி மனிதன் தனது நம்பிக்கையை இறைவன் மீது செலுத்த ஆரம்பித்த காலம் எது என்ற ஆய்வு வேண்டும் அப்போது தான் இந்த தீட்சையின் காரணம் சரியாக புரியும்.

வேதங்கள் ஆகமங்கள் தோன்றிய கால அட்டவணையை சரியாக ஆராய வேண்டும்.

மனிதனின் அன்றாட வாழ்கையை மாற்றியமைக்கும் விடயமாக சமயம் ஆரம்பித்த போது தீட்சை என்பது உறுவானது. அப்போது அவனுக்கு தேவையானது எதுவாக இருக்க முடியும் என்ற ஆய்வை தொடங்கினால் இதன் உண்மை புரிய ஆரம்பிக்கும்.

இன்று நாம் கூறும் தீட்சை என்பது நிச்சயமாக அன்று கூறப்பட்ட விடயம் அல்ல என்ற தெளிவு கிடைக்கும்.

பசியாகா இருக்கும் ஒருவனுக்கு எந்த மந்திரமும் திருப்தி கொடுக்கப்போவதில்லை என்ற உண்மை புரியவேண்டும். ஒரு வேலையாவது பசிக்கு உணவுகிடைக்க அவன் படும் பாட்டில் அவனுக்கு என்ன தீட்சை கொடுப்பது,, உணவைத்தவிர எந்த ஒரு விடயமும் அவனுக்கு இறைவன் மேல் நம்பிக்கையை கொடுக்கப்போவதில்லை. அவனின் ஆத்மா எதில் திருப்தியடைகிறது என்ற தெளிவான சிந்தனை வேண்டும் நமக்கு.

அப்படி இருக்கும் இருவன் முக்தி அடைய முடியாதா என்ற தெளிவும் வேண்டும் நமக்கு.

ஆகவே தீட்சை என்பது முக்திக்கு நிச்சயம் வழி இல்லை என்பது புரியும். அப்படி என்றால் எதற்கு தீட்சை என்ற கேள்வி எழுகிறது அல்லவா... அதை வைத்து சிந்திக்க வேண்டும்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்ற வாக்கை பாருங்கள்... தீட்சை எதற்கு தேவை என்ற தெளிவு ஓரளவுக்கு புரியும்.

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

இதை ஆழமாக பாருங்கள்.... தீட்சை எதற்கென்ற தெளிவு புரியும்.

நாம் இன்று எடுக்கும் தீட்சைகள்,,, தீட்சைகள் அல்ல... அவை சமய சடங்குகள்...

விபூதி திரிபுண்டரமாக அனிதல் வர்மத்தின் புள்ளிகளை நாம் இயக்குவதற்கு கொடுக்கப்படும் மருத்துவ குறிப்புகள்...

பொட்டு அல்லது திலர்த்தம் ஏன் நெற்றியில் வைக்க வேண்டும்,, மூக்கில் வைத்தால் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டானா என்ன...!

ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலே தீட்சை என்ற பெயர் பெற்றது..

காட்டுமிராண்டியாக திரிந்த சமூகத்தை ஆரோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல தேவைப்பட்டது மருத்துவம், அதை செயற்படுத்த கண்டிப்புக்கள் அதிகமாக தேவை காரணம், காட்டுமிராண்டி என்றால் பயம் அற்றவன் என்று தானே அர்த்தம்... அவனுக்கு இருந்த பயம் எதுவோ,,, அதுவே சமயமாக்கப்பட்டது (கடவுள்) பெயர் சூட்டப்பட்டது.

அதிகாலையில் எழுந்து காலை கடன்கள் எனும் மல சலம் போக்கி, உடலை தூய்மையாக்கி குறிப்பிட்ட உடல் அசைவுகளை செய்யும் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் தான் இங்கு முக்கியத்துவம் பெருகிறது. இதை இப்படியே சொல்ல முடியாத காரணத்தால் அவனுக்கு எதில் பயம் இருந்ததோ, அதையே காரணமாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது...

சித்த மருத்துவத்தில் எந்த ஒரு மூலிகைச் சரக்குகளை மருந்தாக பயன்படுத்தும் முன்னர் அதை தீட்சை செய்வது என்ற சுத்திமுறை கையாலப்படுவது இதை இந்த தீட்சை என்ற சொல்லுக்கு சான்றாக எடுக்கமுடியும்.

இறைவனை இந்த தீட்சைகள் அனுட்டானங்கள் செய்வதன் மூலமே கான இயலுமாயின், இந்த ஆத்மா புன்னியம் பெருமாயின், இவ்வாறு பின்பற்றாதவர்கள் நிலை என்ன... அவர்கள் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவதில்லையா... அல்லது தண்டிக்கப்படுகிறார்களா...! அப்படி எந்த ஒரு உதாரணங்களும் இங்கு இல்லையே... மாறாக தீட்சை அணுட்டானங்கள் செய்து இறைவழி நடப்பதாக கூறும் அனைவரும் பிரச்சினைகளை சந்தித்து தானே வாழ்கிறார்கள்..

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற வாக்கு குறிப்பதை அவதானிக்கலாம். இறைவனிடம் அனைவரும் கேட்பது இதை தானே.. இதை வைத்தே தேவைகள் ஆரம்பிக்கிறது, இதை வைத்தே தேவைகளும் முடிகிறது.

கோடியில் சம்பாதிக்கும் நபர்கள் கூட சக்கரை வியாதியால் விரும்பிய இனிப்பை சாப்பிட முடியாத போது,, இறைவனின் அருள் பணத்தில் இருந்து என்ன,, இல்லாவிடால என்ன,,,,..!

பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது உலக நியதி.. அது இறைவனாக இருந்தாலும் சரி, இறைவனின் அம்சமாக இருந்தாலும் சரி.. இதற்கிடையில் ஆத்மா என்பது எப்படி புனிதம் அசுத்தம் அடைகிறது.

எல்லா குருவுக்கும் மாணவர்கள் இருப்பதில்லை.. அது தெரியுமா இங்கு பலருக்கு...

”பரைக்குமே குருமார்கள் பணமுங்கேட்பார்
பதிவாக பொருள்பிடுங்கி யுண்பார்பாரு
திரைக்குள்ளே உள்ளிருத்தி மனிதருக்கு
தீட்சைதா னஞ்செழுத்தை சொல்வாரப்பா
மரைத்துமே நம்பவே வேண்டாமப்பா”

கண்ணைத் திறப்பது காதை திறப்பது இதெல்லாம் வியாபார உத்திகள்.... இதில் எந்த பலனும் இல்லை.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. அதைத்தான் தீட்சை என்றார்கள் சான்றோர்கள்..

அதில் மந்திர தீட்சை என்ற விடயம் எல்லாம் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது..

இந்த சாமியார்கள் ஆன்மீக சொற்பொலிவாளர்கள் எப்படி செவிடனுக்கும் குருடனுக்கும் ஊமைக்கும் தீட்சை கொடுப்பார்கள் என்று தான் சிந்திக்கிறேன்...

குடுமி கட்டினால் காவி உடுத்தால் சாமியார் என்ற பார்வை நமது மக்களிடையே வந்துவிட்டது... ஆனால் அவன் ஏன் முடி வெட்ட வில்லை என்ற சிந்தனை வருவதில்லை..

இறைவனை நோக்கிய பயனத்துக்கு எதற்கு பணம் என்ற விளக்கமும் நமது மக்களுக்கு இல்லை... ஓ பல நாடுகளும் சுற்றி கடவுளை தரிசிப்பதற்கு தேவியல்லவா... அப்படியானால் அவன் இன்னும் கடவுளை காணவில்லை என்பதை அவனே சொல்லுகிறான், அப்படி இருக்க அவனிடம் நமக்கு என்ன வேலை என்ற சிந்தனையும் இல்லை.

” மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.”

இந்த சாமியார்கள் அனைவரும் இதை செய்யச் சொல்லுகிறார்களே.. அவர்களும் உங்களுடன் சேர்ந்து செய்கிறார்களே.. இதற்கு மேல் என்ன ஆதாரம் நாம் தறுவது...

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப "

இப்போது தீட்சை என்பது எதற்கு என்பது ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.. மந்திர உபதேசம் என்ற ஒரு விடயமும் இல்லை என்று புரிந்திருக்கும்.

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

இதுவே பட்டினத்தாருக்கு இறைவன் கொடுத்த உபதேசம், தீட்சை, மந்திரம்,, காரணம்

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப "

இதன் தொடர்சியாக... தோழர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் மூலம் ஆராயலாம்.. 

































குறிப்பு...

நாமும் தீட்சை கொடுப்பதாக பல இடங்களில் தெரியப்படுத்தியிருக்கிறோம், அதற்கான படங்கள் பதிவிட்டிருக்கிறோம்.. அதை வைத்து பேச ஆரம்பிக்கும் முன்னர்.. சமய சடங்குகள் என்ற வார்த்தை இங்கு பதிவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்,, எமது மானவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் என்ன என்ற தெளிவில்லாமல் பேசி இங்கு வாங்கிக் கட்டிக்கொண்டு போகவேண்டாம் என மிக தாழ்மையுடம் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்.
சித்த மருத்துவர்

எமது மலேசிய பயனம்

வணக்கம் தோழர்களே,

எமது மலேசிய பயனம் சிறப்பக அமைய எமக்கு உதவி செய்த அனைத்து நல் இதயங்களுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ச்சியான பல விடயங்கள் ஆக்கங்கள் கட்டுரைகள் விரைவில் பதிவில் வர இருக்கிறது இன்று ஓர் நாள் ஓய்வெடுத்த பின்னர் எழுத ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். 

















 











நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்

Tuesday, July 8, 2014

வணக்கம் தோழர்களே....

வணக்கம் தோழர்களே,

எமது புதிய பதிவுகள் பெரும்பாலானவை முக நூலில் பதிவாக வருவதனால்... கீழ் வரும் முகவரிக்கு சென்று எமது பதிவுகளை படிக்கவும்..

https://www.facebook.com/siththarvaakadam

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, June 5, 2014

புதிய வகுப்புகள் ஆரம்பம்

வணக்கம் தோழர்களே,

நமது பயனத்துக்கு ஆயத்தமாகும் வேலைகள் அதிகமாக இருப்பதால் புதிய விடயங்கள் எதையும் பதிவிட முடியவில்லை.

எம்மை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றிய விடயங்கள் வெள்ளிக்கிழமை முக நூலில் தரப்படும். மேலும் பலரும் பயன்படும் வகையில் சென்னையில் மாந்திரீக வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என நினைக்கிறேன். பலரிடமும் சென்று பணத்தை செலவு செய்து ஒன்றும் பலன் கிடைக்கவில்லை என்ற கவலையில் இருக்கும் அனைவரும் இதில் பங்கேட்கலாம்.

இது ஓர் அறிமுக வகுப்பாக அமைக்கலாம் என இருக்கிறேன், பலரிடமும் சென்று எதுவும் நடக்கவில்லை என்பதற்கான காரணம் என்ன, வெறுமனே மந்திரங்களை உபாசனை செய்தால் நீங்கள் நினைப்பது நடக்குமா போன்ற அடிப்படை விளக்கத்துடன் சில ஆரம்பகட்ட உபாசனைகள் இயந்திர விளக்கம், மை முதல் அஞ்சனம் வரை இருக்கும் ரகசியம் என்ன, போன்ற விடயங்களை தெளிவுபடுத்தி முறையான வெற்றிக்கான பாதை எது என்பதை நீங்களே அறிவைக் கொண்டு தெளியும் உண்மைகளை வகுப்பாக அமக்கலாம் என இருக்கிறேன்.

இதில் நிச்சயமாக பல பாரம்பரிய இரகசியங்கள் விளக்கப்படும், மேலும் அஷ்டகர்ம வினை பற்றிய சரியான பாதைகள் தெளிவுபடுத்தப்படும். இயந்திர விதிமுறைகள் மற்றும் முத்திரைகள் பயன்படும் முறைகள் அதன் பரிபாஷையாக வந்த விடயங்கள் பேசப்படும்.

இது நிச்சயமாக இலவசமாக இருக்காது அத்துடன் அதிகமாகவும் இருக்காது.. பலரும் பங்கேட்கும் அளவு இடம் ஏற்பாடு செய்வதற்கு தேவையான செலவுகள் மற்றும் உணவு உபசாரங்களுக்கு தேவையான பணமும் கட்டணமாக அறவிடப்படும்.

எமக்கு மின்னஞ்சல் மூலம் வரும் கோரிக்கைகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனைகள் செய்வதற்கு நேரம் போதாத காரணமும் எங்களுக்கு கூறவில்லை என்ற பிரச்சனையும் வரக்கூடாது என்பத்ற்காக இந்த ஏற்பாடுகள் செய்யலாம் என இருக்கிறேன்.

உங்கள் மின்னஞ்சல்களுக்கு தனித்தனியே பதிவுகள் இட்டுக்கொண்டிருந்தால் எமது வேலைகள் தாமதமாகின்றது, ஆகவே எம்மை சந்தித்து பேசவும் தீர்வுகள் தேவப்படும் தோழர்கள் இந்த வகுப்புக்கு வருவதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.,

மேலும் எமது பாட நெறிகள் மலேசியாவில் அடுத்த மாதம் இடம்பெற இருப்பதால் எமக்கான சென்னைப் பயனத்தின் நாட்கள் மிக குறைவாக இருக்கின்றது, அதனால் தனித்துவமாக பேசவேண்டும் என்ற ஆசை இருப்பவகள் கூட இந்த வகுப்புக்கு வருவதன் மூலமே எமது தொடர்பை பெறக்கூடியவாறு அமையும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இந்த வகுப்பில் என்ன கற்றுத்தரப் போரார் என்ற கேள்வி வேண்டாம், எமது வலைத் தளத்தை பார்த்து படித்து அதன் உண்மையை புரிந்தவர்கள், எது உண்மை என ஆய்வில் இருப்பவர்கள் யாரும் பங்கேட்கலாம். வாதம் விவாதம் பேசுபவர்களும் அன்புடன் பங்கேட்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிரவும், ஞாபகத்தில் வையுங்கள் விதண்டாவாதம் செய்பவருக்கு நாம் கொடுக்கும் பதில்கள் சற்று காரசாரமாக (சிவசக்தி) இருக்கும்.


எமது முக நூல். https://www.facebook.com/siththarvaakadam

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்