Monday, December 2, 2013

அடிப்படை - ஓர் விளக்கம்

வணக்கம் தோழர்க்ளே,

எனது மின்னஞ்சலில் அனேகரின் வேண்டுகோள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் பதில் போட்ட வாரு இருப்பது மிகவும் கடினம் இருப்பினும் முடிந்த வரை முயற்சி செய்கிறேன். வாசகர்கள் சற்று பொருமையாக இருந்தாள் நிச்சயம் பதில் கிடைக்கும். ஐயா உடனடியாக பதி தர வேண்டும் என்று நினைக்க வேண்டாம். காலமும் நேரமும் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும்.

நமது சமயத்தின் (சைவம்) சரியான அடிப்படை தத்துவத்தை புரிந்து அதன் பின்னரே மந்திர தந்திர பிரயோகங்களை கற்க வேண்டும். இல்லாவிடில் உண்மையை உணர பல ஜென்மம் எடுத்தாளும் முடியாது.

இதனால் தான் சரியான குரு கிடைக்காவிட்டால் அனைத்துமே பாழ் அடைந்து விடும் என்று முன்னோர்கள் கூறினர்.

மந்திர பிரயோகம் எதுவாக இருந்தாளும் அதன் சரியான தன்மையை உணராவிட்டால் அதன் பலன் பலம் முளுமையாக கிடைக்காது. முன்னோர்களின் புத்தகண்க்களையோ அல்லது ஏடுகளையோ எடுத்து படித்து விட்டு நானும் மந்திர தந்திர வித்தைக்காரன் என்று மார் தட்டுவதில் பலன் இல்லை.

முதலில் சிவம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிய வேண்டும். பின்னர் தான் அனைத்தும். 

படைத்த்ல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என இவ் ஐந்து செயற்பாடுகளுமே சிவம் என்பதன் விளக்கம். அதனால் தான் “ இல்லானே உள்ளானே” என்று பாடினர் நாயன்மார்.

இவ் ஐந்து செயற்பாடுகளும் அனைத்து இறை வடிவுக்கும் சரி உயிருக்கும் சரி பொதுவானதே. இதில் இத் தெய்வம் சிறந்தது அல்லது நல்லது கெட்டது என்று எதுவும் கிடையாது. அதன் அதன் பிறதான செயற்பாடை வைத்தே நாம் இது நல்லது என்றும் அது கெட்டது என்றும் கூருகிறோம்.

உதாரணமாக காளியை வழிபடுபவருக்கு அது உயர் தெய்வமாகவும் மற்றவருக்கு அது துர் தேவதையாகவும் தோன்றும். இப்படி பல தேவதைகளையும் பிரித்து கூற முடியும்.

பெயர்கள் வேறுபட்டாலும் சக்தி ஒன்றே என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சக்தியை வெல்வதற்கு அதற்கு நிகரான தன்மையுடைய சக்தியை கண்டரிவதற்கே பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதுவும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். ஐந்தொழில்களும் அனைத்து சக்திகளுக்கும் பொதுவாக இருப்பதால் அவற்றின் குறிபிட்ட ஓர் சக்தியை அதிகரித்து நமது தேவையை நிவர்த்தி செய்வதற்கே இந்த மந்திர தந்திர யந்திர பிரயோகங்கள் செய்கிறோம் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

ஒரு சக்திக்கு அதிக பெயர்கள் கூறப்படுவதும் இதனால் தான். உதாரணமாக மகாலட்சுமி என்று கூறி விட்டு பின்னர் அஷ்ட லட்சுமியாக எட்டு வகை பெயர்களால் அழைக்கப்படுவதும் இதனால் தான். இதில் அனைவருமே ஒன்று என்பது தெளிவாக இருக்க வேண்டும். அதை விட்டு தனி தனியாக வழிபடுதல் அல்லது மந்திர பிரயோகம் செய்தல் அரியாமையே. ஆனால் உங்களது தேவை அந்த குறிப்பிட்ட சக்தியாக இருந்தால் அதற்கு தடை இல்லை.

கண்டிப்பாக இந்த மந்திர பிரயோகம் செய்து தான் ஒன்றை வெல்ல முடியும் என்று ஒன்றும் இல்லை.  அதனால் தான் மனமது ”செம்மையானால் மந்திரம் தேவையில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது. கல்லை கட்டி கடலில் போட்டாலும் நாதன் நாமம் நமசிவாயமே என்று அப்பர் கூறியது ஞாபகம் இருக்கட்டும், அவர் தண்ணீரை தம்பனம் செய்து மிதக்கவில்லை. மந்திரம் செய்தே மிதந்தார், அவருக்கு தெரிந்தது பஞ்சாட்சரம் மட்டுமே அப்போது.

உங்களை நீங்கள் முதலில் உணர்ந்து செயல் பட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும். 

பலர் எனது குடும்ப கஷ்டங்களை பார்த்து கேட்பது “ ஏன் மந்திரத்தால் இதை தீர்க்க முடியாதா” கூறிய பின்னர் அவர்களே சிரித்த கதையும் உண்டு. அவர்களின் அரியாமைக்கு நான் இறைவனை வணங்கியதும் உண்டு. அவதாரங்களே பூமியில் பட்ட கஷ்டங்களை ஒப்பிட்டு பார்த்தாள், நான் யார்? மிகவும் சாதாரனமான ஓர் மனித பிறவி மட்டுமே. அன்று அவர்களால் செய்ய முடியாது போன மந்திர தந்திர பிரயோகம் எனக்கு மட்டு எப்படி சாத்தியம். ராமருக்கே அந்த நிலை என்றால் நமக்கு இது ஒன்றும் பெரிதில்லையே.

பணம் உழைப்பது என்றால் அதற்கு பல வழிகள் இருக்கிறது, ஆனால் அது சரியானதா என்பது மிகவும் அவசியம் என்பது எனது கருத்து. 

எனது தள வாசகர்கள் பலர் என்னை குருவாக நினைத்து செயல் படுவதாக மின்னஞ்சல் செய்கிறீர்கள் ஆனால் அதற்கு நான் தகுதியானவரா என்பது எனக்கே தெரியாது. 

உங்கள் தாய் தந்தையின் ஆசி முதலில் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று ஞாபகத்தில் வையுங்கள்.

மீண்டும் ஓர் முறை ஞாபக படுத்துகிறேன், சைவ சமயத்தை தெளிவாக கற்ற பின்னரே மந்திர முயற்சியை எடுக்கவும்.

வேதங்கள் கூறுவது வேரு மத வாதிகள் கூறுவது வேரு. ஆலயங்கள் அவற்றின் வழிபாடுகள் யாவும் இன்று மாறுபட்டே கானப்படுகிறது. அனைத்தும் பணம் சம்பாதிக்கும் தொழில் தாபனங்கலாகி விட்டது.

சரியை கிரியை யோகம் ஞானம் என்றது இப்போது எங்கு போய் விட்டது.

எது எப்படியோ, குறிப்பிட்ட தேவதைகளின் மந்திரத்தை எதிர்பார்கும் தோழர்களே, அதனால் மட்டுமே அது முடியும் என்று நினைத்து அலையாதீர்கள். இருப்பதை கொண்டு செயல்பட முயற்சியுங்கள்.

” எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதரிது” 

அர கர மகா தேவா
தென்னாடுடைய சிவனே போற்றி. 

நன்றி.

5 comments:

  1. அருமையான விளக்கம்

    நன்றி

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்

    எனக்கு கை விரல்கள் அளைத்திலும், கால் விரல் அனைத்தில்லும், உதடு ஆகிய இடங்கலில் வென் புல்லிகள் வளர்து வருகிரது
    இதர்க்கு மருந்து
    நன்றி
    சிவ சிவா

    ReplyDelete
  3. ஐயா, மிகவும் அற்புதமான விளக்கம்.

    ReplyDelete
  4. குருவே பாதள மை செய்ய பல வழிகள் உண்டு அதோட கருவை பற்றி குரு மூலமே தெரிந்து கொள்ள முடியும் அதைப் பற்றி சொல்லி தாருங்கள் இதுதானே தந்திரம்

    ReplyDelete