Monday, April 20, 2015

மாணவர்கள் கற்கிறார்கள்..

வணக்கம் தோழர்களே மாணவர்களே..,

எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளதாலும் விரைவாக முடிவடைந்திருக்கிறது., எழுத்து மூலமான விடயங்கள் அதன் விளக்கங்கள் தெளிவடைய கூறப்பட்டிருக்கிறது. அதனை முறையாக மாணவர்கள் அறிவில் சேர்த்துவிட்டால் சித்த மருத்துவம் மட்டும் அல்ல, ஏனைய மருத்துவ முறைமைகளையும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

அவர்களுக்கு செயற்த்திட்ட வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, குழிக்கல் வாங்குதல், அதை சுத்தி செய்யுதல், திரிகடுகு திரிபலாதி குளிகை செய்தல் அதற்காக அவற்றை பொதுவியல் முறையில் சுத்தி செய்தல், காடி நீர் தயாரித்தல் போன்றவைகள் முதல் கட்ட பாடநெறியில் சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டிருக்கிறது.,

மருத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சித்த மருத்துவமே இன்றைய அனைத்து மருத்துவ முறைக்கும் ஆதாரமானது என்பதற்கான சான்றுகள், மற்றும் சித்த மருத்துவம் என்பது 10000 வருடம் பழமையானது அல்ல அது 10000 வருடம் முன்னோக்கி இருக்கும் நவீன உயர் விஞ்ஞான மருத்துவம் என்பதற்கான ஆய்வுகள், சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது., சித்தர்கள் என்ற பேரில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் அதன் உண்மை நிலை என்பன ஆய்வுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

இவை மிக தெளிவாக கற்றிரிக்கிறார்கள் எமது மருத்துவ மாணவர்கள் என நினைக்கிறேன்., அவர்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி இங்கு பதிவார்கள் என நினைக்கிறேன்.

பாடநெறியின் காலத்தை நாம் கருத்தில் எடுப்பதில்லை என்ற நிலையில் இருக்கிறோம், காரணம் இன்று இங்கு கற்பவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல, தினசரி வாழ்விற்கான ஓட்டத்தில் இருக்கும் மனிதர்கள், அவர்கள் விரைவாக கற்றால் தான் அவர்கள் தங்கள் நிலையை உயர்த்த முடியும் என்ற நிலை இருப்பதால் வேகமாகவும் முடிந்தவரை தெளிவாகமும் இந்த கற்றல் தொடரும்.

மாணவர்கள் தனியாக இயங்காமல் உங்களுக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி நேரத்தை சற்று இதற்காக செலவு செய்தால் நீங்கள் மிக வேகமாக எம்முடம் சேர்ந்து பயனிக்க முடியும்.

குறிப்பு., சில மாணவர்கள் வகுப்புக்களை தவறவிட்டிருந்தால், அதை மற்ற மாணவர்களிடம் கேட்டு தெளிவடையுங்கள்., அப்படியே இனி வரும் வகுப்புக்களுக்கு தவறாமல் வாருங்கள்.
நீங்கள் எப்போது வருவீர்கள் என்று நாம் காத்திருக்க முடியாது, தனித்தனியே உங்களுக்கு பதிவுகள் எழுதவும் அழைக்கவும் முடியாது., முடிந்தவரை எமது முகநூலை படித்து தகவல் தெரிந்து செயற்படுங்கள்..,

முதல் பாடநெறி முடிந்து விட்டது நாம் எப்படி இதில் இணைவது என்ற தயக்கம் வேண்டாம் நீங்கள் தாறாலமாக இணையலாம், உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு கற்றல் ஆரம்பமாகும்.

எமது வேலைப்பழுவுக்கு இடையில் நாம் மாணவர்களுக்கான கற்பித்தலையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் சில சமயங்களில் பதிவுகள் தாமதமாகலாம்.

வாசி யோகம் என்ற பேரில் மூச்சை அடக்கி பயிற்சி செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தற்போது மாணவர்களுக்கு தெளிவாக தெரியும், சித்தர்கள் மருத்துவத்தையும் தந்திருக்கிறார்கள், யோகத்தையும் தந்திருக்கிறார்கள் இரண்டிலும் இருக்கும் உண்மையை தெளிவாக கற்றால் மட்டுமே உண்மை புலப்படும் என்பது முதல் கட்ட வகுப்புக்கள் மூலம் தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.,.

மாணவ மணிகளே.. உங்கள் சிந்தனையில் அறிவின் தெளிவை தயக்கமின்றி பதியுங்கள் இங்கு.., இந்த பாடநெறி உங்களுக்கு எப்படியாக அறிவு மாற்றத்தை தந்திருக்கிறது மற்றும் உங்கள் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களை பார்த்து தெளிவடையட்டும்.

” கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே..”

” அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே...”

எமது மாணவர்கள் சிலரின் செயற்திட்டம் இங்கு காணலாம்..




















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment